கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 4,117 
 

நிர்மலா அவசர அவசரமாக ஆபிஸ்க்கு கிளம்பினாள்,சரியான நேரத்திற்கு போகாவிட்டால் மெனேஜர் முறைப்புக்கு ஆளாகவேண்டிவரும் அது அவளுக்கு எப்போதும் பிடிக்காது,எப்படியும் சரியான நேரத்திற்கு போய்விடுவாள்.அதனால் தான் காலையில் இவ்வளவு பரபரப்பு,பதட்டம். ஐந்து மணிக்கு எழும்பும் அவள்,அவசரமாக பல் தேய்ச்சி காலை கடன்களை முடித்தப் பிறகு,சமைக்கத் தொடங்குவாள்.சாதம்,சாம்பார்,கூட்டு,பொறியல் செய்து, காலை டிபனையும் செய்து முடிப்பாள்,அருணுக்கு பெட் காப்பி கொடுத்து விட்டு, கவின், கவிதாவை எழுப்புவாள்.அவர்களைப் பல் தேய்க்கவைத்து குளிக்கவைத்து,பால் காய்ச்சி இருவருக்கும் குடிக்கவைப்பதுவே,பெரும்பாடாக இருக்கும் அவளுக்கு காலையில்.

கவிக்கு ஏழு வயது,கவனுக்கு ஐந்து வயது.இருவரும் ஒரே பாடசாலையில் படிக்கிறார்கள். அவர்களின் பாடசாலை வேன் சரியாக எட்டு மணிக்கு வந்துவிடும்.பாடசாலை முடிந்தப்பிறகு அப்பாடசாலையில் மாலை நேரம் மட்டும் தங்கும் வசதி இருப்பதால்,அதே பாடசாலையில் கவினையும்,கவிதாவையும் சேர்த்து விட்டார்கள்.அருண் ஆபிஸ் முடிந்த கையோடு, பிள்ளைகளை பைக்கில் அழைத்துக்கொண்டு வந்துவிடுவான்.அவன் செய்யும் ஒரே வேலை அது மட்டும் தான். அதுவும் நிர்மலா போன் பன்னி ஞாபகம் படுத்தவேண்டும்.

பிள்ளைகளுக்கு காலை உணவை கொடுத்து,அவர்களின் உடைகளை அயன் பன்னி உடுத்தி,சொக்ஸ்,ஷூ மாட்டி, கட்டி அணைத்து முத்தம் கொடுத்து,இருவரின் புத்தகப் பைகளையும்,சுமந்துக்கொண்டுப் போய் பாடசாலை வேனில் ஏற்றிவிட்டு,அவர்களுக்கு கை காட்டி,அனுப்பி வைத்தகையுடன் வரும் நிர்மலா, விடுப்பட்ட மிகுதி வேலைகளை செய்து முடிப்பாள். அவள் உடையை அயன் செய்து வைத்துவிட்டு, டவலை எடுத்துக் கொண்டு பாத்ரூம் ஓடும் நிர்மலா,காக்கா குளியலுடன் வந்து புடவையை கட்டிக்கொண்டு,சிறிய அலங்காரத்துடன் விளக்கேற்றி சாமி கும்பிட்டும் அவள், அவசரமாக காலை உணவை விழுங்கிவிட்டு, மதிய உணவை எடுத்துக்கொண்டு,கைப்பையுடன் கிளம்பிவிடுவாள் நிர்மலா.

அவசரமாக பேருந்து நிறுத்தத்திற்கு நடைப்போடும் அவள், கூட்டநெரிசலுடன் வரும் பேருந்தில் ஏறி,அயன் செய்த புடவையெல்லாம் கசங்கி,அவள் வேலை செய்யும் ஆபிஸ் அருகில் போய் இறங்கும் போது,வேர்த்துவிடும்.ஓட்டமும் நடையுமாக சரியான நேரத்திற்குப் போய்விடுவாள்.அவள் அங்கு கணக்காளராகப் பணிப்புரிகிறாள்.மாலை மட்டும் வேலை சரியாக இருக்கும்.

அருண் பெட் காப்பி குடித்து மறுப்படியும் சிறிது நேரம் தூங்கி, ஆறுதலாக எழும்புவான்,போனில் மெசேஜ் பார்த்து விட்டு, வாட்சப்பில் நண்பர்களுக்கு குட்மார்னிங் அனுப்பி வைத்தப் பிறகே குளிக்கப்போவான்.ஆறுதலாக குளித்து,ஆடியசைந்து வரும் அவன், அயன் செய்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் உடையில் ஒன்றை எடுத்து மாட்டிக்கொள்வான்,கண்ணாடி முன் நின்று தலை முடியை பல முறை வாருவான்.மேஜை மீது நிர்மலா செய்து வைத்திருக்கும் காலை உணவை அமைதியாக சாப்பிடுவான்.பிறகு லஞ்ச் பாக்சில் போட்டிருக்கும் பகல் உணவையும் கையோடு எடுத்துக்கொண்டு,கதவை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு,தன் பைக்கில் ஏறி அமர்ந்தான் என்றால், தான் வேலை செய்யும் ஐடி கம்பனிக்கு,முப்பது நிமிடத்தில் போய்விடுவான்.பைக்கை நிறுத்திவிட்டு சாவியை கையில் சுற்றிக்கொண்டே,ஆபிஸ் நுழையும் அவன்,வேலை செய்யும் நேரத்தை தவிர்த்து, மற்றைய நேரங்களில் தன் பக்கத்தில் இருக்கும் நண்பர்களிடம் அரட்டை அடிப்பான்.

மாலை நேரம் நிர்மலா வீடு திரும்பும் முன்னதாகவே,அருண் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வந்துவிடுவான். பிள்ளைகளை சோபாவில் உட்காரவைத்து,காட்டுன் போட்டுவிட்டு,அமைதியாக பார்க்க வேண்டும் என்ற கண்டிப்புடன்,இவன்கையில் போனோடு உட்கார்ந்திருப்பான். அவள் வந்து பிள்ளைகளை மேல் கழுவ வைத்து,உடை மாற்றி,பால்காய்ச்சி கொடுத்துவிட்டு, தானும் உடம்பில் கொஞ்சம் தண்ணியை ஊற்றிக்கொண்டு உடையை மாற்றிக்கொள்வாள்,அவளுக்கும்,அருணுக்கும் காப்பி கலந்து எடுத்துக்கொண்டு வந்து, சோபாவில் சாயும் அவள் காப்பியை குடித்து முடித்தவுடன்,பிள்ளைகளுக்கு பாடம் படித்துக்கொடுப்பாள்.

இரவு உணவு செய்து அருணுக்கும்,பிள்ளைகளுக்கும் சாப்பிட கொடுத்துவிட்டு,தானும் சாப்பிட்டு,பாத்திரங்களை கழுவி அடுக்கிவிட்டு,அடுப்பு மேடையை துடைத்து முடிப்பாள் நிர்மலா.பிள்ளைகளை பல் தேய்க்க வைத்து, அவளும் பல் தேய்த்து,வாயை கொப்பளித்து முடித்து லைட்டை அணைக்கும் அவள்,பிள்ளைகளுக்கு நைட்டியை மாற்றி தூங்கவைக்கும் போதே அவளும் ஒரு நொடியில் தூங்கிப்போவாள்.வாரம் ஐந்து நாட்களும் வேலைக்கு ஓடும் அவள்,சனி,ஞாயிறு ஓய்வு எடுக்கவே முடியாத அளவிற்கு வேலை இருக்கும். வீட்டை சுத்தம் செய்து,பெருக்கி, துடைத்து,பாத்ரூம் கழுவி,உடைகளை துவைக்கப் போட்டு,காயவைத்து, அருணின் உடையை மட்டும் அயன் செய்து, எல்லாவற்றையும் மடித்து வைப்பாள் நிர்மலா.

அன்று தான் கொஞ்சம் ஆறுதலாக குளிக்கலாம் என்று அவள் பாத்ரூம் நுழையும் போது தான்,கவினும்,கவியும் சண்டை போட்டுக் கொண்டு அழுகையுடன் வந்து கதவை தட்டுவார்கள். அழாமல் இருங்கள், அம்மா அப்போது தான் விளையாட கூட்டுக்கொண்டு போவேன் என்று கூறியப்படி,அவசரமாக குளித்து முடித்து,கதவை திறக்கும் அவளுக்கு, அருண் மீது கோபமாக வரும்.எந்த உதவியும் செய்து கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை,வீட்டில் இருக்களாம் தானே! காலையில் சாப்பிட்டவுடன் ஊர் சுத்தவேண்டியது, அப்பா என்ற நினைப்பு இல்லாமல் என்று மனதில் திட்டிக்கொள்வாள்.பின்நேரம் பிள்ளைகளை விளையாட அழைத்துப் போகும் அவள், அப்படியே கடைக்குச் சென்று வீட்டுக்கு தேவையானவற்றையும் வாங்கிகொண்டு வந்து விடுவார்கள்.

அருண் நிர்மலாவை திருமணம் முடித்தப் புதிதில் ஏன் வீட்டில் இருக்க, படித்தப்படிப்பு வீணாகுது ஏதாவது வேலைக்கு போ என்றான். நீ வேலைக்குப்போனால், லோன்போட்டு கார் வாங்கலாம்,கொஞ்சம் ஆடம்பரமாக வாழலாம், ஊர்சுற்றலாம்,என்று ஆசைக்காட்டினான்.அதை நம்பி அவளும் வேலைக்குப் போக ஆரம்பித்தாள்.ஆனால் அது எதுவும் நடக்கவில்லை இது நாள் மட்டும்,அருண் திருமணத்திற்கு கடன் வாங்கியிருப்பதுவும் பிறகு தான் தெரிய வந்தது அவளுக்கு,போதா குறைக்கு குடிப்பழக்கம் வேறு,நண்பர்களோடு அடிக்கடி வெளியில் பார்ட்டி என்று போய்விடுவான்.அதனால் அவனுக்கு எந்த பணமும் சேமிக்க முடியவில்லை.இரண்டு பிள்ளைகள் என்றானப்பின்,செலவுகள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. தற்போது கட்டாயமாக வேலைக்கும் போகும் சூழ்நிலைக்கு தள்ளப்படாள் நிர்மலா. ஓடி ஓடி ஓடாய் தேய்ந்து கொண்டிருந்தாள் அவள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *