முனியனும் அவனுக்கு மனைவியான மலைசாதிப்பெண்ணும் சந்தித்த கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 26, 2017
பார்வையிட்டோர்: 7,039 
 

பாலக்காட்டிலிருந்து ஒரு கார் வால்பாறையை நோக்கி வந்து கொண்டிருந்தது, சிறிது நேரம் ஓய்வு எடுக்க அட்டகட்டி என்னும் இடத்தில் வண்டி நின்றது, வண்டியில் இருந்து ஒரு அறுபது வயதுக்கு மேல் மதிக்கத்தகுந்த ஒரு பெரியவர் இறங்கினார், நல்ல க்ருத்த உருவம், பார்த்த உடனே சொல்லிவிடலாம் நல்ல வசதியுடையவர் என்று, அவருக்கு பின்னால் அவர் மனைவி இறங்கினாள், அவளுக்கும் ஏறக்குறைய நாற்ப்பத்தைந்து வயதுக்கு மேல் இருக்கும், நீங்கள் அந்த பெண்ணை பார்த்தவுடன் வித்தியாசத்தை கண்டுகொண்டிருப்பீர்கள், அந்தப்பெண் ஒரு மலை சாதிப்பெண் என்று. நீங்கள் நினைப்பது புரிகிறது இது ஒரு சாதாரண காதல் கதையாக இருக்குமென்று, ஆனால் இது ஒரு வீரத்தில் ஏற்பட்ட காதல் திருமணம். அதுவும் இப்போது கார் நிற்கிறதே இதே இடத்தில்தான் இவர்கள் வாழ்க்கை நிச்சயமாயிற்று.

முனியனுக்கு பாலக்காட்டிலிருந்து பொள்ளாச்சி வந்து சேர்ந்த பொழுது இரவு பத்து மணிக்கு மேல் ஆகி விட்டது, இதற்கு மேல் மலைக்கு பஸ் கிடைப்பது சிரமம்.அப்படியே கிடைத்தாலும் வழியில் இறங்கி காட்டுக்குள் நடந்து செல்வது மிகுந்த சிரமம்.முனியன் நடந்து விடுவான், ஏனெனில் அவன் காட்டிலேயே பிறந்து வளர்ந்தவன், அந்த காட்டுக்குள் இருளர், காடர், முதுவர் என்று பிரிவுகள் கொண்ட மலை வாழ் மக்கள் அங்கு வசிக்கின்றனர், அவர்களோடு தமிழ்நாடு மற்றும் கேரளா மக்கள் சிலர் வசிக்கின்றனர். இவர்கள் பொதுவாக கூப்பு வேலை செய்பவர்கள், கட்டுக்குள் இருந்து மரங்களை லாரிகளில் ஏற்றி அனுப்புவது இவர்கள் வேலை. மரங்களை ஏற்ற யானைகளையும் பயன்படுத்துவர், இவர்கள் காட்டுக்குள்ளே
குடியிருப்பவர்கள், இவர்களுக்கு மரத்தை வெட்டும் காண்ட் ராக்டர்கள் தான் பொறுப்பு.

முதலில் வனத்துறையிடமிருந்து இவர்களுக்கு அனுமதி, தங்கும் வசதி, சாப்பிட மளிகை வசதிகள் இவைகளை இந்த காண்ட் ராக்டர்கள்தான் கவனித்துக்கொள்ள்வேண்டும்.

காலையில் வேலை ஆரம்பித்து பொழுது இருட்டும் வரை வேலை இருக்கும். கூப்பு காண்ட் ராக்ட் முடிந்தவுடன் காட்டை விட்டு வெளியே வருவர், சீசன் ஆரம்பித்தவுடன் மீண்டும் காட்டுக்குள் வேலை, ஆக மொத்தம் காடாறு மாதம் நாடாறு மாதம் என்ற பழமொழி இவர்களுக்கு பொருந்தும். முனியனுக்கு இந்த வாழ்க்கை சலித்து விட்டதால் காண்ட் ராக்டா¢டம் சொல்லி பாலக்காட்டில் ஒரு தோட்ட வேலைக்கு சேர்ந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. அவன் கல்யாண்ம் செய்துகொள்ள் வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவனுக்கு சொந்தம் என்று யாருமில்லை, உறவு முறைகள் இல்லாத அவன் அதுக்காக நாட்டுப்புற பெண்ணை ஏற்க அவன் மனம் முன்வரவில்லை, காட்டுப்புறத்திலிருந்துதான் பெண் வரவேண்டும் என்று விரும்பினான். வருபவளும் தன்னுடன் தோட்ட வேலை செய்பவளாக வந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினான். அதற்காக தன்னுடய ஊரிலேயே பெண் கிடைக்கும் என்று யோசித்து யோசித்து ஒரு வழியாக பாலக்காட்டிலிருந்து தோட்ட அதிபா¢டம் சொல்லி கிளம்பும்போது இரவு ஏழு மணி ஆகிவிட்டது. பொள்ளாச்சி வந்து சேரும்பொழுது இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது.

அந்த நேரத்தில் பஸ் ஸ்டாண்ட்டில் நிற்க பயந்தான், இவனுக்கு போலீஸ்சை கண்டால் பயம். இவனுடைய தோற்றத்தை பார்த்து அவர்கள் சந்தேகப்பட்டு கூட்டிப்போய்விடவார்களோ என்று பயந்தான். ஏனென்றால் அவன் தோற்றம் அப்படி, காட்டிலேயே வாழ்ந்ததால் தோற்றத்தை பற்றி கவலைப்படாமலே இருந்தான், தோட்டத்திற்கு வந்தவுடந்தான் தோட்ட முதலாளி அவனை குளிக்க வைத்தார், ஆளும் கொஞ்சம் மாறி இருந்தான், இருந்தாலும் மக்களுடன் பழகுவதில் இன்னும் அவனுக்கு பயம் விட்டு போகவில்லை.

இவனைப்போல வால்பாறை செல்ல காத்திருந்த ஒரு சில பிரயாணிகள் தட தட வென வெளியே ஓடுவதை பார்த்தான், இவனும் அவர்களுடனே வெளியே வந்தான், அங்கு சந்தைக்கு வந்த லாரி ஒன்றிலிருந்து வால்பாறைக்கு வருபவர்கள் வரலாம் என கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள், கூட்டத்துடன் இவனும் முண்டியடித்து ஏறினான். எப்படியோ டவுனை விட்டு போனால் போதும் என்றுதான் நினைத்தான். நல்ல பனி..குளிரும் கடுமையாக் இருந்தது, லாரி செல்ல செல்ல பனிக்க்காற்று அதிகமாக வீசியது, லாரிக்குள் மக்கள் கூட்டம் இருந்ததால்
குளிர் அதிகம் தெரியவில்லை, இவனும் லாரிக்குள் குறுகி உட்கார்ந்துகொண்டான்.

வால்பாறைக்கும் பொள்ளாச்சிக்கும் இடைப்பட்ட இடம் அட்டகட்டி அதுவும் ஒரு அடர்ந்த காட்டுப்பிரதேசம்தான், இருந்தாலும் அடிக்கடி பஸ் அங்கு நின்று செல்வதால் கொஞ்சம் மக்கள் நடமாட்டம் பகலில் அதிகம் காணப்படும், ஆனால் இரவில் அனத்தும் அடங்கி நிசப்தமாக காணப்படும். முனியன் லாரியிலிருந்து அட்டகட்டி வந்தவுடன் சொல்லி இறங்கிக்கொண்டபொழுது மணி பண்ணிரெண்டுக்கு மேல் ஆகிவிட்டது.

அங்கிருந்து அவன் குறுக்கு வழியாக காட்டுக்குள் மூன்று பர்லாங்க் நடந்துதான் அவன் ஆட்கள் இருப்பிடத்துக்குள் செல்லமுடியும், விலங்குகள் அதிகமாக் இருக்கும் இந்த இரவு வேளையில் நடப்பது அவ்வளவு உசிதமல்ல என்பது தொ¢ந்ததால், முனியன் பிரயாணிகள் பஸ் வரும்வரை தங்குவதற்கு ஒரு சிறிய அறை கட்டப்பட்டிருந்தது, அதில் போய் கீழே உட்கார்ந்துகொண்டவன் சிறிது நேரத்தில் தூக்கத்தில் தன்னையும் அறியாமல் உறங்கிவிட்டான்.

மலை வாழ் மக்கள் கொண்ட கிராமம்,சிங்கியின் தலைமுடியை பிடித்து தர தர வென இழுத்துச்சென்று தருமன் முன்னால் நிறுத்துகிறான் கௌடப்பன். இங்க பாரு உன் பொண்ணு என்னை ஏன் கட்டிக்கமாட்டேங்கறான்னு சொல்லச்சொல்லு, மிரட்டும் தோரணையில் கேட்கிறான், முடியாது,முடியாது..என்று கூப்பாடு போடுகிறாள் சிங்கி..கெளடப்பனுக்கு ஆத்திரமாக வருகிறது இந்த சிறுக்கி மக ஏன் இப்படி அழிச்சாட்டியம் பண்றா, இங்க பாரு தருமா மரியாதையா சொல்லிட்டேன் நாளைக்கு காலையில அவளை நான் தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிக்குவேன், நீ என்னை மருமகனா ஏத்துத்தான் தீரனும் சொல்லிவிட்டு விர்ரென்று கிளம்பிச்சென்றான்.தருமன் சிங்கியை பார்க்க அவள் என்ன நினைத்தாலோ எழுந்து முடியை சுருட்டி முடிச்சு போட்டவள் நான் இந்த ஊரை விட்டு கிளம்புறேன் நீ எங்கூட வர்றதா இருந்தா வா..நில் சிங்கி இப்ப நீ போனா உன்னை விட மாட்டாங்க ஊர் அடங்கனுப்பறம் போலாம்,நானும் உன் கூட் வாறேன் என்றான் தருமன், ஏற்கனவே ஒரு பெண்ணை கெளடப்பனுக்கு கட்டிக்கொடுத்து இவன் கொடுமை தாங்காமல் அவள் அற்பாயுசிலேயே போனதால் இவள் இவனிடம் தப்பித்தால் போதும் என்று நினைத்தான் தருமன்.நடு இரவுக்கு மேல் அப்பனும் பெண்ணும் மெதுவாக குடிசையைவிட்டு ஒத்தையடிப்பாதை வழியாக நடக்க ஆரம்பித்தனர்.

திடீரென்று அலறும் ஒரு பெண் குரலும், அதைத்தொடர்ந்து ஒரு ஆண் குரலும் கேட்டவுடன் படக்கென கண்விழித்த முனியன் இந்நேரத்தில் சத்தம் கேட்டதால் பேயோ,பிசாசோ என பயந்து போய் நின்றான், மேலும் மேலும் சத்தம் அதிகா¢க்கவே என்னவேன்று பார்த்துவிடுவது என முடிவு செய்து சத்தம் வந்த பாதை வழியே அந்த இருட்டிலும் வேகமாக நடந்தான்.

அங்கே அவன் கண்ட காட்சி…

ஒரு வயதான மலைவாசி ஆணையும் மலைவாசி இளம் பெண்ணையும் சுற்றி மூன்று செந்நாய்கள் கோரப்பல்லை காட்டி மிரட்டிக்கொண்டிருந்தன. அவர்கள் மலை சாதிமக்களாய் இருந்ததால் தைரியமாக கையில் உள்ள கம்பைக்கொண்டு சமாள்¢த்துக்கொண்டு இருந்தனர், இருந்தாலும் இந்த வகை நாய்கள் நேரம் ஆக ஆக கூட்டமாக ஆகிவிடும் வயதானவர் ஏற்கனவே ஓய்ந்து போக ஆரம்பித்துவிட்டார், இந்த பெண்ணும் சமாளித்துக்கொண்டுதான் இருந்தாள், முனியனுக்கு காட்டில் இருந்ததால் இந்த மாதிரி ஆபத்துக்களை சந்தித்து பழக்கம் இருக்கிறது, உடனே ஒரு மாதிரி சத்தமிட்டுக்கொண்டே கையில் கிடைத்த ஒரு கழியை லாவகமாக சுழற்றிக்கொண்டே அந்த பெண்ணிடம் முன்னேறி நடந்து கொண்டே இருக்கும்படி சைகையில் காண்பித்துக்கொண்டேஅவர்களை முன்னே நடக்க தான் அவர்கள் பின்னால் ஊளை போன்று சத்தமிட்டவாறு அந்த நாய்களை நகரவிடாமல் மிரட்டி நிறுத்தி வைத்தான், பின் சட்டை பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியை எடுத்து ஒரு குச்சியை உரசி அதன் மீது வீசுவது போல் பாவன செய்தான். திடீரென்று இவனின பிரவேசம் நாய்களுக்கு பெருத்த பின்னடவை தர ஆரம்பிக்க இவன் இவர்கள் இருவரையும் விறு விறுவென நடக்க இவன் ஒரு ஒரு குச்சியாக தீப்பெட்டியிலிருந்து எடுத்து உரசி அதன் மீது வீசினான். இதற்குள் இவர்கள் முனியன் உடகார்ந்துருந்த இடத்துக்கு வந்து விட்டிருந்தனர். நாயகள் அதன் பின் அவர்களை தொடரவில்லை, காரண்ம் மனித எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீட்டு நாய்கள் ஆதிக்கம் இருக்கும், அதனால் அவை காட்டுக்குள்ளே சென்றுவிட்டன.

இரவு முழுக்க அவர்கள் நடந்த கதையை சொல்ல இவன் இனப்பெண் இல்லாவிட்டாலும் காட்டில் வாழும் பெண்தானே இவள் இவளே நமக்கு போதும் என்ற முடிவுடன் மறு நாள் காலை மூவரும் பொள்ளாச்சி செல்லும் பஸ்ஸில் ஏறி பாலக்காட்டுக்கு பயணமாயினர்.

அதன் பின் அவர்களின் உழைப்பு இன்று முனியனை ஒரு கூப்பு காண்ட்ராக்ராக்கி தன் மகனுக்கு ஒரு மலை சாதிப்பெண்ணைத்தான் பெண் எடுக்க வேண்டும் என்று இப்பொழுது அட்டகட்டியிலிருந்து டிரைவரை காரில் காத்திருக்கசொல்லிவிட்டு சிங்கி அன்று வந்த பாதை வழியே கணவனும் மனைவியும் நடக்க ஆரம்பித்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *