நான் துரோகம் பண்ணலே…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 5,647 
 

“அத்யா நோ தேவ சவித: ப்ரஜாவத் ஸாவீ:
ஸௌபகம் பரா துஷ்வப்னியம் ஸுவ
விஸ்வானி தேவ சவித:
துரிதானி ப்ராஸுவ யத் பத்ரம் தன்மே ஆஸுவா”

என்று மந்திரத்தைச் சொல்லி பஞ்ச பாத்திர பாத்திரத்தில் மீதி இருந்து ஜலத்தை கையில் விட்டு,தான் உட்கார்ந்திருந்த இடத்தில் தெளித்து விட்டு, பறகு தன் மோதிர விரலை அந்த ஜலத்தைத் தொட்டு எடுத்து,தன் சிரஸில் இட்டுக் கொண்டார் சாம்பசிவ ஐயர்.

மீதி ஜலத்தை காவோ¢யில் விட்டு விட்டு,படித்துறையை விட்டு மெல்ல ஒவ்வொறு படிக் கட்டாக எறி மேலே வந்தார்.

வரும் வழியில் கடையில் நாளைக்கு வீட்டுக்கு வேண்டிய காய் கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தார் சாம்பசிவ ஐயர்.

இது தான் சாம்பசிவ ஐயரின் சாயங்கால நித்திய வழக்கம்.

திருச்சியில் வசித்து வந்த ஐயருக்கு இரண்டு பையன்கள்.

பெரியவன் ராமு பரம சாது. அதிகம் படிக்கவில்லை அவன்.வெறுமே B.A.தான் பாஸ் பண்ணிவிட்டு வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டு இருந்தான்.

ஐயர் தான் வேலை செய்து வந்த பள்ளிகூட நிர்வாகிகளிடம் மெல்ல சொல்லி, அவர் வேலையை ராமுவுக்கு வாங்கிக் கொடுத்து,விட்டு அவர் ‘ரிடையர்’ ஆகி விட்டார்.

பக்கத்து கிராமத்தில் இருந்த தன் உறவுக்கார பெண் கமலாவை ராமுவுக்கு கல்யாணம் பண்ணி வைத்தார்.

ராமுவுக்கு சீக்கிரமே அடுத்து,அடுத்து மூன்று பெண் குழந்தைகள் பிறந்து விட்டது.

ஐயரும் அவர் மணைவியும் அவர்கள் கூட இருந்து வந்தார்கள்.

ஐயருக்கும் அவர் மணைவிக்கும் திருச்சியில் நாற்பது வருஷங்களுக்கு மேல் இருந்து வந்ததால் அவர்களுக்கு வேறு எங்கேயும் போய் இருக்கப் பிடிக்கவில்லை.

ஐயரின் சின்ன பையன் பேர் ஹரி.

அவன் ரொம்ப புத்திசாலி.அவன் கம்ப்யூட்டர் படிப்பு படித்து விட்டு,ஒரு கம்ப்யூட்டர் கம்பனியில் சென்னையில் வேலைப் பார்த்து வந்தான்.

அவன் வேலை செய்யும் இடத்தில் ரமாவும் வேலை செய்து வந்தாள்.

ஹரி ரமாவை காதலித்து,அப்பா அம்மா சம்மதத்துடன் ரமாவை காதல் கல்யாணம் பண்ணிக் கொண்டு விட்டான்.

ரமா ரொம்ப ‘மார்டர்ன்.கர்வியும் கூட.படித்தவள் வேறே.ஒரு கம்பனியில் நல்ல சம்பளத்தில் வேலை செய்து வந்தாள்.தன் மாமியார்,மாமனார் தன்னுடன் வந்து தங்குவது இவளுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

ஐயரும் அவர் மணைவியும் இது நன்றாகத் தொ¢யும்.அவர்கள் சென்னைக்கு ஏதாவது ஒரு விஷேத்திற்கு வந்தால் இரண்டு நாள் தான் சின்ன பிள்ளை ஹரி வீட்டில் தங்குவார்கள்.

சின்ன மாட்டுப் பெண்ணை நினைத்து ஐயர் மணைவிக்கு ரொம்ப மன வருத்தம்.

’ஏன் இப்படி நம்மைக் கண்டாலே இவளுக்கு பிடிக்கலே.நம்ம பையன் வேணும்,ஆனா நாம வேணாம் இவளுக்கு’ என்று சொல்லி ஐயரிடம் குறை பட்டுக் கொள்வாள்.

அதற்கு ஐயர் ’லக்ஷ்மி,ஏன் அவளை நினைச்சு நீ மனக் கஷடப்பட்டுக்கறே.நமக்கு பெ ரிய மாட்டுப் பெண் நல்ல மாதிரியும்,நல்ல குணவதியாயும் அமைஞ்சு இருக்கா.இதை நினை ச்சு நீ சந்தோஷப் படு.பகவான் நமக்கு ரெண்டையும் பொல்லாததாக படைக்காம ஒருத்தியை யாவது நல்லவளா கொடுத்து இருக்கானே” என்று வேதாந்தமாக பதில் சொல்லுவார்.

ஆனால் அவர் உள் மனதிலும் லக்ஷ்மி சொன்ன நொ¢டல் இருந்து தான் வந்தது.

ஆனால் இதை வெறுமனே சொல்லிக் கொண்டு இருக்காமல்,தன் மணைவி ஆறுதல் பெற வேதாந்தமாக பதில் சொன்னார்.

மூன்று பெண் குழந்தைகளுடன் சொற்ப சம்பளத்தில் குடித்தனம் பண்ணி வந்த மூத்த பையனிடமே தனக்கு வரும் ‘பென்ஷன்’ பணத்தையும் கொடுத்து விட்டு, அவனுக்கு உபகார மாய்,அவர்களால் முடிந்த வீட்டு வேலைகளைப் பண்ணிக் கொண்டு வந்துக் கொண்டு இருந் தார்கள் ஐயரும் அவர் மணைவி லக்ஷ்மியும்.
வீட்டில் வறுமை தான் எப்போதும்.

இருப்பினும் ராமுவும் அவன் மணைவியும்,மூன்று பேத்திகளும் வீட்டில் இருந்த பெரி யவர்களிடம் மிகுந்த அன்பாகவும் மா¢யாதையாகவும் இருந்து வந்தார்கள்.

ஒரு நாள் ஐயர் மணைவி லக்ஷ்மி தன் கணவரைப் பார்த்து “என் மூச்சு நிக்கறுதுகுள் ளே பத்ரிநாத்,கேதார்னாத்,போன்ற க்ஷத்ரங்களே பார்க்கணும்ன்னு நேக்கு ரொம்ப ஆசையா இருக்கு” என்று மெல்ல தன் ஆசையைச் சொன்னாள் லக்ஷ்மி.

உடனே ஐயர் “அதுக்கென்ன லக்ஷ்மி,நான் நம்ப பையங்க ராமுவிடமும், ஹரி இடமும் பணம் கேட்டுப் பார்க்கிறேன்.அவா குடுத்தா நாம தாராளமா போய் வரலாம்” என்று பதில் சொன்னார்.

ஒரு நாள் ஐயர், பையன் ராமுவிடம் அம்மாவின் ஆசையை சொன்ன போது “அதுக்கெ ன்னப்பா.நீங்க ரெண்டு பேரும் பத்ரினாத்,கேதார்னாத்,க்ஷத்ராடனம் போய் வாங்கோ. நான் என் P.F.இல் ‘லோன்’ போட்டு ஒரு ஐயாயிரம் ரூபாய் தரேன்.நீங்க சென்னைக்குப் போய் தம்பி ஹரியிடம் இன்னும் மீதி எவ்வளவு பணம் வேணுமோ அதை வாங்கிண்டு,ஒரு ‘டூர்’ நடந்தற கம்பனிக்காரா கிட்டே ‘புக்’ பண்னிண்டு சௌக்கியமாய் போய் வாங்கோ” என்று பதில் சொன்னன்.இதைக் கேட்டதும் ஐயர் தம்பதிகளுக்கு சந்தோஷமாய் இருந்தது.

”எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு ராமு.அம்மா ரொம்ப ஆசைப் படறா அவ ஆசையே நான் பூர்த்தி பண்ணனும்.நீ சொன்ன படியே நாங்க சென்னைக்குப் போய் ஹரி கிட் டேஅம்மா ஆசையை சொல்லி மீதி பணத்தைக் கேட்டு வாங்கிண்டு ‘க்ஷத்ராடனம்’ போய் வரோம்.நீ சீக்கிரமா பணத்துக்கு ஏற்பாடு பண்ணு” என்று சொன்னார் ஐயர்.

பதினைந்து நாட்களுக்குள் ராமு ஸ்கூலில் ‘லோன்’ போட்டு ஐயாயிரம் ரூபாய் வாங்கி அப்பா கையில் கொடுத்தான்.

ஒரு நல்ல நாள் பார்த்து ஐயரும் அவர் மணைவியும் ராமு கொடுத்த பணத்தை எடுத்து க் கொண்டு சென்னைக்கு புறப்பட்டு போனார்கள்.

சென்னைக்கு வந்து ஐயர் பிள்ளை ஹரியிடம் எல்லா விவரமும் சொல்லி “ஹரி, அண் ணா ராமு தன் PF.இல் இருந்து ‘லோன்’ போட்டு ஐயாயிரம் ரூபாய் எங்க கிட்டே குடுத்து இரு க்கான்.நீயும் எங்களுக்கு ஒரு ஐயாயிரம் ரூபாய் ‘அரேஞ்’ பண்ணிக் கொடு.நாங்க இந்த க்ஷ த்ராடனம் போய் வர எங்க செலவுக்கு பத்தாயிரம் ரூபாய் பிடிக்கும்ன்னு தோன்றது” என்று சொன்னார்.

உடனே ஹரி “அதுகென்னப்பா.நான் இன்னும் ‘டூ டேஸ்லே’ அந்த பணத்தை ‘அரேஞ்’ பண்ணித் தரேன்.அது வரை நீங்க ரெண்டு பேறும் எங்களோடு தங்கி இருங்களேன்.நீங்க ரெண்டு பேரும் திருச்சியை விட்டு இங்கே வருவதே இல்லே.இந்த க்ஷத்தாரடனம் சாக்கிலாவ து எங்க கூட ரெண்டு நாள் தங்குங்கப்பா” என்று கெஞ்சினான் ஹரி.

“சா¢ நீ பணத்திற்கு அரேஞ் பண்ணு.அது வரைக்கும் நாங்க இங்கு தங்கி வறோம். எங்களுக்கு இங்கு வரக் கூடாதுன்னு இல்லே ஹரி.எங்களுக்கு ரொம்பப் பழக்கப் பட்ட இடம் திருச்சி.தினமும் காவோ¢ ஸ்னானம் பண்ணிட்டு,உச்சி பிள்ளையாரே தரிசனம் பண்ணீட்டு வருவேன்.தவிர திருச்சிலே நல்ல காத்து.அக்கம் பக்கம் நன்னா பழகின மனுஷால்லாம் இருக்கா. இதானால் தான் நாங்க திருச்சியிலே இருந்து வரோம்.வேறே ஒரு காரணமும் இல்லேடா” என்று ஒரு பொய் காரணம் சொன்னார் ஐயர்.

அவரால் ‘உன் மணைவிக்கு எங்களை பிடிக்கலேடா.அந்த கர்வியிடம் நாங்க எப்படிடா இருந்து வறது’ என்ற உண்மை காரணத்தைச் சொல்லாமல் மழுப்பி விட்டார் ஐயர்.

ரெண்டு நாள் ஆனதும் ஹரி அப்பா கையில் ஐயாயிரம் ரூபாய் கொடுத்து “நீங்க ரெண்டு பேரும் சௌக்கியமா க்ஷத்ராடனம் போய் வாங்கோப்பா” என்றான் சந்தோஷத்துடன்.

தன் கணவன் அவர் அப்பாவுக்கு பணம் கொடுத்ததே பிடிக்கவில்லை ரமாவுக்கு.

“ஏன் உங்க அப்பா இங்கே நம்மே வந்து பணம் கேக்கணும்.பெரிய பிள்ளையிடமே மொ த்த பணத்தையும் வாங்கி கொள்ளக் கூடாதா.உங்க அப்பா அவருக்கு வரும் ‘பென்ஷன்’லே நமக்கு காலணா கூட தறது இல்லை.மொத்த ‘பென்ஷன்’ பணத்தையும் பெரிய பிள்ளைக்கிட் டேயே தறார்.நீங்களும் அவருக்கு ஒரு பிள்ளை தானே” என்று ரகசியமாகக் கணவனிடம் கேட்டாள் ரமா.

“ரமா,அண்ணா ரொம்ப சொற்ப சம்பளத்லே குடித்தனம் பண்ணிண்டு வறார்.போறாத துக்கு அவனுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கா.அதனால் தான் அப்பா அண்ணாவுக்கு தன் மொத்த ‘பென்ஷன்’ பணத்தையும் குடும்ப செலவுக்குக் குடுத்து வறார்.இதில் என்ன தப்பு ரமா.நம்ம ரெண்டு பேருக்கும் கை நிறைய சம்பளம் வருது.நாம ஒன்னும் இங்கே பண கஷ்டத் திலே இல்லையே சொல்லு.அவர் எதுக்கு அவர் ‘பெண்ஷன்’ பணத்தே நமக்கு தறணும்”என்று சொல்லி அவளை சமாதானப் படுத்தினான்.

ஹரி இப்படி சொன்ன பிறகு ரமா பதில் ஒன்னு சொல்லவில்லை.

க்ஷத்ராடனம் கிளம்புவதற்கு முன் தினம் சாயங்காலம் எல்லோரும் ஹாலில் உட் கார்ந்துக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தார்கள்

ஹரியின் அப்பா அம்மாவை பார்க்க ஹரியின் நண்பர்கள் வந்து இருந்தார்கள்.

பேச்சு வாக்கில் ஒரு நண்பன் “மாமா அங்கெல்லாம் ரொம்ப திருட்டு பயம்ன்னு போன வருஷம் அங்கே போயிட்டு வந்த என் மாமியார், மாமனார் சொன்னா.அதனால் நீங்க இந்த வைரத் தோடு,வைர மூக்குத்தி,தங்க செயின்,எல்லாம் போட்டுண்டு போகாதீங்கோ.சாதாரண ‘கில்ட்’ நகைகளை மட்டும் போட்டுண்டு போங்க” என்று சொன்னான்.

உடனே ஐயர் “ரொம்ப ‘தாங்க்ஸ்ப்பா’ உனக்கு.நல்ல வேளை நீ தெய்வம் போல சமயத்லே வந்து சொன்னே.நீ சொன்ன படியே நாங்க எல்லா நகைகளையும் கழட்டி வச்சுவிட்டு,வெறும னே ‘கில்ட்’ நகைகளை போட்டுண்டு போறோம்.யார் திருடனுக்கு இந்த நகைகளை தத்தம் பண்றது” என்று சொல்லி சிரித்துக் கொண்டே தன் நன்றியைச் சொன்னார்.

நண்பர்கள் கிளம்பிப் போன பிறகு ஹரி அவன் அப்பா அம்மாவை கடைக்கு அழைத் துக் கொண்டு போய், அம்மா மூக்குக்கும் கழுத்துக்கும்,காதுக்கும், ‘கில்ட்’ நகைகளை வாங்கிக் கொடுத்தான்.

‘கில்ட்’ நகைகளை எல்லாம் போட்டுக் கொண்டு ஐயர் மணைவி தன் காதில், மூக்கில், கழுத்தில்,போட்டுக் கொண்டிருந்த எல்லா நல்ல தங்க நகைகளை எல்லாம் கழட்டி ஒரு பையில் போட்டு “ரமா இந்த நல்ல நகைகளை எல்லாம் நீ ஜாக்கிறதையா வச்சுக்கோ.நாங்க க்ஷத்ராட னம் போயிட்டு வந்து வாங்கிக்கறேன்” என்று சொல்லி ரமாவிடம் கொடுத்தாள் லக்ஷ்மி.

ரமாவும் அந்த நகைப் பையை வாங்கி பீரோவில் வைத்தாள்.

அடுத்த நாள் ஐயரும் அவர் மணைவியும் காலையில் காப்பி டிபன் சாப்பிட்டு விட்டு, ஹரி ரமாவிடம் சொல்லிக் கொண்டு க்ஷத்ராடனம் கிளம்பிப் போனார்கள்.
ஐந்து நாட்கள் ஆகி இருக்கும்.

திடீரென்று ஒரு தந்தி வந்தது.

பிரித்துப் படித்தான் ஹரி.

‘கேதார்னாத் போகும் வழியில் ஐயரும் அவர் மணைவியும் போன பஸ் முன்னூறு அடி பள்ளத்தாக்கில் விழுந்து விட்டதாயும்,’ஹெலிகாப்டர்’ வைத்து தேடியும் யார் உடலும் கிடைக்க வில்லை என்றும், இதனால் பஸ்ஸில் போன பயணிகள் எல்லோரும் இறந்து விட்டு இருப்பார் கள் என்று நம்பப் படுகிறது’ என்று குறிப்பிட்டு இருந்தது.

ஹரிக்கு என்ன பண்ணுவது என்றே தொ¢யவில்லை.மனம் கலங்கிப் போனான் அவன்.

உடனே அண்ணாவுக்கு போன் பண்ணி இந்த துக்க விஷயத்தைச் சொன்னான்.

‘அவர் அண்ணா இங்கே வந்தால் எங்கே தன் கணவன் க்ஷத்ராடனம் போவதற்கு முன்னால் மாமியார் கொடுத்த நகையைப் பத்தி சொல்லிடுவாரோ’ என்று பயந்து ரமா தன் கணவரிடம் “இதோ பாருங்கோ.அம்மா கிளம்பறதுக்கு முன்னாடி குடுத்துட்டுப் போன நகைகளைப் பத்தி உங்கள் அண்ணா கிட்டே மூச்சு விடாதீங்கோ.அந்த நகைகளை நானே வச்சுக்கப் போறேன்.நகைகளை கழட்டி என்னிடம் கொடுத்த சமாசாரம் உங்கள் அண்ணவுக்கும் மன்னி க்கும் தொ¢யவே வேண்டாம்.உங்க அப்பா அம்மா என்ன பிழைச்சு வந்தா இந்த விஷயதை அண்ணா கிட்டேயும், மன்னிக்கும் கிட்டேயும் சொல்லப் போறா.நீங்க உங்க அண்னா கிட்டே சொன்னா எனக்கு பொல்லாத கோபம் வரும்” என்று மிரட்டினாள்.

”ரமா நீ பண்ணுவது ரொம்ப சா¢யில்லை.இந்த நகைகளில் ‘பாதி நகை அண்ணவுக்கும்’ ‘பாதி நகை நமக்கும்’ தான்ன்னு பிரிச்சக்கணும்’.நீ நகை முழுவதையும் எடுத்துக் கொள்றது ரொம்ப சா¢யே இல்லை.நான் இதுக்கு ஒத்துக் கொள்ளவே மாட்டேன்” என்று சொன்னான்.

ரமா பிடிவாதமாக நகையை தரவே மறுத்து விட்டாள்.

வேறு வழி இல்லாமல் ஹரி நகை சமாசாரத்தை தன் அண்ணாவிடம் மறைக்க வேண்டியதாய் போயிற்று.

‘தன்னிடமும்,ரமாவிடமும் இவ்வளவு அன்பாய் இருக்கும் அண்ணாவிடம் நகை சமாசா ரத்தை மறைக்கிறோமே’ என்று மனம் புழுங்கினான் ஹரி. வேதனைப் பட்டான் அவன்.குற்ற உணர்வால் தனலில் விழுந்த புழுவைப் போல் துடித்தான்.

பொல்லாத மணைவி ரமாவை மீறி அவனால் ஒன்றும் பண்ண முடியவில்லை.

ஹரி போனில் அப்பா அம்மா இறந்துப் போன விஷயத்தை சொன்னான்.

ஹரி சொன்ன சோக சமாரத்தைக் கேள்விப் பட்டு அலறி அடித்துக் கொண்டு ராமு சென்னைக்கு ஓடி வந்தான்.

ராமுவும் ஹரியும் இரண்டு நாட்கள் காத்துப் பார்த்தார்கள்.

வேறு ஒரு சமாசாரமும் வராது,செய்தி ஒன்றும் தொ¢யாமல் போகவே ராமுவும், ஹரியும் பெற்றோர்களுக்கு எல்லா ‘ஈமக் கடன்களையும்’ பண்ணி முடித்தார்கள்.

எல்லா காரியமும் முடிந்த பிறகு ராமு ஹரி இடமும்,ரமா இடமும் சொல்லிக் கொண்டு திருச்சிக்குக் கிளம்பி வந்தான்.

ஒரு வருஷம் ஓடி விட்டது.

தாய் தந்தையரின் வருடாந்திர காரியங்களைப் பண்ண ஹரி ரமாவை அழைத்துக் கொண்டு திருச்சிக்கு வந்தான்.

வழி நெடுக ரமா ஹரியைப் பார்த்து “திருச்சியில் உங்க அண்ணாவின் ஏழ்மையைப் பாத்து மனம் மாறி நகையைப் பத்தின உண்மையை நீங்க உளறி விடாதீங்கோ.நகைகளை மறைச்ச சமாசாரம் மறைச்சதாகவே இருந்து விடட்டும்.உங்க அம்மா என் கல்யாணத்துக்கு ஒரு நகையும் போடலே. ஆனா மன்னிக்கு கல்யாணத்தின் போது காதுக்கு வைரத் தோடும்,முக்குக்கு வைர மூத்தியும் அம்மா தான் வாங்கிப் போட்டிருக்கான்னு உங்களுக்குத் தொ¢யுமா” என்று “கம்ப்ளேயின்’ பண்ணினாள் ரமா.

உடனே ஹரி “ரமா,நாம் ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிண்டோம்.நம் கல்யாண த்தின் போது அப்பா ‘ரிடையர்’ வேறே ஆகி விட்டு இருந்ததார்.அவர் ‘சர்விஸி’ல் இல்லை.வெறும் ‘பென்ஷன்’ பணம் தான் அவருக்கு வந்துண்டு இருந்தது.தவிர அண்ணாவுக்கும் அடுத்து அடுத்து மூனு பெண் குழந்தைகள் வேறு பிறந்துட்டா.அண்னாவுக்கு வர சம்பளம் குடும்பம் நடத்தப் போறலே. அதனால்லே அப்பா தன் ‘பென்ஷன்’ பணத்தே அண்ணா குடும்பத்துக்கு குடுத்து வந்தா.அப்பா கைலே பண நடமாட்டம் குறைஞ்சுப் போச்சு.அதனால் தான் உனக்கு அவா ரெண்டு பேரும் ஒரு நகையும் போடலே.அம்மாவும் அப்பாவும் இதை என் கிட்டே சொல்லி ரொம்ப வருத்தப் பட்டா தொ¢ யுமா” என்று சமாதானம் சொல்லிப் பார்த்தான்.

ஹரி சொன்ன சமாதானத்தில் ரமா ஒன்றும் மசியவில்லை.

“மன்னிக்குத் தான் வைரத்தோடும்,வைர மூக்குத்தியும் இருக்கே.அதனால் இந்த நகைகளை நானே வச்சுக்கப் போறேன்.அம்மா நகைகளை என் கிட்டே குடுத்து ஒரு வருஷம் ஆயிடுத்து.இப்போ அந்த நகைகளே பத்தி சொன்னா,அவா ரெண்டு பேருக்கும் ஏன் இத்தனை நாளா இவா சொல்லலே ன்னு தோணும்.அதனால்லே இந்த நகையை பத்தின பேச்சே எடுக்காதீங்கோ” என்று சொல்லி ஹரி வாயை கட்டிப் போட்டு விட்டாள் ரமா.

திருச்சியில் அண்ணா விட்டில் ஹரியையும்,ரமாவையும் ரொம்ப நன்றாக கவனித்துக் கொண் டார்கள் ராமுவும் அவன் மணைவி கமலாவும்.

மூன்று குழந்தைகளும் சித்தப்பா சித்தியிடம் அன்பாக பழகி வந்தார்கள்.

அண்னா குடும்பத்தின் ஏழ்மையை கண்கூடாகப் பார்த்தான் ஹரி.

‘கோட்டு ஸ்டாண்டி’ல் தொங்கிக் கொண்டு இருந்த இரண்டு மூன்று கதர் ஷர்ட்டுகளும், கதர் வேஷ்டிகளும்,கொடியில் தொங்கிக் கொண்டு இருந்த மன்னியின் காட்டன் புடவைகள்,ஹரியின் கண்ணில் பட்டது.

போஷாக்கு அதிகம் இல்லாத அந்த குழந்தைகளும் சாயம் போன பாவாடை சட்டையுடன், அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு இருந்தார்கள்.

ஒரே ஒரு ஹால்,ஒரு கிச்சன்,ஒரு ‘பெட் ரூம்’ தான் இருந்தது அந்த வீட்டில்.வறுமை தாண் டவமாடியது அந்த வீட்டில்.

மணி நாலடித்தது.

லக்ஷ்மி ராமுவுக்கும்,ஹரிக்கும்,ரமாவுக்கும் ‘காபீ’யைக் கொண்டு வந்துக் கொடுத்தாள்.

மூவரும் லக்ஷ்மி கொடுத்த ‘காபி’யைக் குடித்து முடித்தார்கள்.

சிறிது நேரம் போனவுடன் “ஹரி, வா மார்கெட்டுக்குப் போய் நாளைய காரியத்திற்கு வேண்டிய பல சரக்கு,காய்கறிகள் எல்லாம் வாங்கிண்டு வரலாம்”என்று சொல்லி தம்பியை அழைத்தான் ராமு.

“சா¢ அண்ணா நாம போய் வரலாம்”என்று சொல்லி விட்டு ஹரி ரெண்டு பைகளை எடுத்து கொண்டு அண்ணாவோட கடை வீதிக்குக் கிளம்பிப் போனான் ஹரி.

போகும் வழியில் ராமு,தன் தம்பியிடம் அவர்கள் அப்பா அம்மாவைப் பற்றி ச்¢ன்ன வயதில் நட ந்த சில சுவாரசியான சமாசாரங்களை பேசிக் கொண்டு வந்தான்.

திடீரென்று “ஹரி, நம்ம அப்பா ஜோஸ்யம் நன்னா பாப்பான்னு உனக்கு தொ¢யுமோ” என்று கேட்டு விட்டு “நானும் அப்பாவும் இப்படித்தான் ஒரு நாள் சாயங்காலம் மார்கெட்டுக்குப் போயிண்டுருந்தப்ப, அவர் என் கிட்டே ‘என் ஜாதகப் படி எனக்கு என்னைக்காவது ஒரு நாள் ஒரு புதையல் கிடைக்கும்ன்னு சொன்னார்.ஆனா இது நாள் வரை ஒன்னும் கிடைக்கலே.பாக்கலாம்.அவர் சொன்னது பொய்யாகாது என்ற நம்பிக்கை எனக்கு ரொம்பவே இருக்கு” என்று சொன்னான்.

ஹரி தன் அண்ணா அப்பா மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை எண்ணி வியந்தான்.

மார்கெட்டில் இருந்த ஒரு லாட்டா¢ கடையில் நுழைந்து “இன்னைக்கு கடைசி நாள் குலுக்கல் எதுப்பா” என்று கடைக்காரா¢டம் கேட்டான் ராமு.

உடனே கடைக்காரர் “சார்,ஹரியானா லாட்டா¢ இன்னைக்கு கடைசி நாள்.முதல் பா¢சு பத்து லக்ஷம் ரூபாய்.நாளைக்கு காலேப் பேப்பர்லே பா¢சு கிடைச்சவங்க நம்பர் வரும்” என்றார்.

“ஹரி,நீ ஒரு ‘டிக்கட்’ வாங்கிகோ.நான் ஒன்னு வாங்கிக்கறேன்.ஒரு வேளை அப்பா சொன்னது நிஜமாகி,நம்ம ரெண்டு பேர்லே யாராவது ஒருத்தருக்கு அந்த முதல் பா¢சு பத்து லக்ஷம் கிடைக்கட் டுமே” என்று சொல்லிக் கொண்டே தனக்கு ஒரு ‘டிக்கட்டும்’ ஹரிக்கு ஒரு ‘டிக்கட்டும்’ கடைகாரா¢டம் வாங்கினான் ராமு.

ஒரு லாட்டா¢ ‘டிக்கட்டை’ ராமு வைத்துக் கொண்டு,இன்னொரு லாட்டரி ‘டிக்கட்டை’ ஹரி இடம் கொடுத்தான் ராமு.

எல்லா மளிகை சாமான்களையும்,காய் கறிகளையும் வாங்கிக் கொண்டு இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள்.

அடுத்த நாள் காலையில் ஹரி சீக்கிரமே எழுந்துக் கொண்டான்.

மன்னி கொடுத்த ‘கா·பி’யைக் குடித்துக் கொண்டு இருந்தான் ஹரி.வாசலில் வந்த பேப்பர் பையன் பேப்பரை வீசி எறிந்து விட்டு போனான்.அதை எடுத்து வந்தான் ஹரி.அவனுக்கு கடைகாரர் சொன்னது ஞாபகம் வந்தது.

‘இன்னேக்கு லாட்டரி முடிவு பேப்பர்லே வந்து இருக்குமே,நாம் பாக்கலாம்’ என்று தோன்றியது ஹரிக்கு.அண்ணாவைத் தேடினான் ஹரி.ராமு அப்போது தான் ‘டாய்லெட்’ கதவை திறந்து கொண்டு ‘டாய்லெட்டி’ற்குள் போனது தெரிந்தது ஹரிக்கு.

தன் சட்டை பையில் வைத்து இருந்த ‘டிக்கட்டின்’ நம்பரை கையில் வைத்துக் கொண்டு முதல் பரிசு நம்பரை அந்த பேப்பரில் தேடினான்.அவன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை.

முதல் பரிசு பத்து லக்ஷம் ரூபாய் தன் ‘டிக்கட்டு’க்கு வந்து இருந்தது.ஒரு நிமிஷம் யோஜனைப் பண்ணினான் ஹரி.

சட்டென்று அண்ணா வருவதற்குள் ‘கோட் ஸ்டாண்டி’ல் தொங்கிக் கொண்டு இருந்த அண்ணாவின் ‘ஷர்ட் பாக்கெட்டி’ல் இருந்த ‘டிக்கட்டை’ எடுத்து தன்னிடம் வைத்துக் கொண்டு,தன் கையில் இருந்த ‘டிக்கட்டை’ அண்ணாப் ‘பாக்கெட்டி’ல் வைத்து விட்டு பேப்பரை வந்த மாதிரியே மடித்து வைத்து வாசலில் இருந்த இடத்திலேயே வைத்து விட்டான் ஹரி.

அண்ணா ‘டாய்லெட்டி’ல் இருந்து வந்ததும்,ஹரி அவசர அவசரமாக ‘டாய்லெட்டு’ க்குப் போய் போய் கதவை சாத்திக் கொண்டான் ஹரி.

ராமு வாசலில் இருந்த பேப்பரைப் பார்த்தவுடன்,அதை கையிலே எடுத்து தன் கண்ணாடிக் கூடைப் திறந்து தன் மூக்கு கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பேப்பரைப் பிரித்தான்.

அவனுக்கு திடீரென்று லாட்டிரி டிக்கட் ஞாபகம் வரவே தன் சட்டைப் பையில் இருந்த லாட்டிரி டிக்கட்டை கையில் வைத்துக் கொண்டு ஹரியானா குலுக்கல் பரிசு நம்பர்கள் இருக்கும் பக்கத்தைப் பிரித்து பார்த்தான்.

அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.தன் கையில் இருந்த ‘லாட்டிரி’ சீட்டில் இருந்த நம்பருக்கு தான் முதல் பரிசு பத்து லக்ஷம் விழுந்து இருந்தது.

சந்தோஷத்தில் “ஹரி,ஹரி,நாம வாங்கின ‘டிக்கட்டு’க்கு தான் முதல் பரிசு பத்து லக்ஷம் விழுந்து இருக்கு. எங்கே ஹரி,எங்கே ஹரி” என்று கத்தினான் ராமு.

ராமு உரக்க கத்துவதைக் கேட்ட லக்ஷ்மி ‘கிச்சனை’ விட்டு ஹாலுக்கு வந்தாள்.

அவளைப் பார்த்த ராமு “லக்ஷ்மி,நம்ம கஷ்ட காலத்துக்கு விடிவு காலம் வந்துட்டது.எனக்கு ஹரியாணா ‘லாட்டரி’லே முதல் பரிசு பத்து லக்ஷம் ரூபாய் பா¢சு விழுந்து இருக்கு” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது ஹரி ‘டாய்லெட்டை’ விட்டு வெளியே வந்தான்.

ஓடிப் போய் ராமு தன் தம்பி ஹரியை கட்டிக் கொண்டு “ஹரி,அப்பா சொன்ன ஜோஸ்யம் பொய் யாகலே.ஜோஸ்யம் பலிச்சுடுத்து. அப்பா சொன்ன ஜோஸ்யம் பலிச்சுடுத்து” என்று சொல்லி ஹரியை கட்டி கொண்டான்.

ராமுவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

உடனே தன் தம்பியை அழைத்துக் கொண்டு ஹாலில் இருந்த ஒரு சின்ன ‘ஷெல்·ப்’பில் வைத்து இருந்த அப்பா அம்மா படத்தின் முன்னால் பரிசு விழுந்த லாட்டரி ‘டிக்கட்டை’ வைத்து விட்டு “நீங்க ஜாதகம் சொன்ன பலிச்சுடுத்துப்பா.என் கஷ்டம் எல்லாம் தீந்துப் போச்சு.உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிப்பா” என்று சொல்லிக் கொண்டு கண்களீல் கண்ணீர் மல்க நின்று கொண்டு இருந்தான் ராமு.

ஆனால் ஹரியோ ”அப்பா,அம்மா பேராசை பிடிச்ச ரமாவின் பிடிவாததாலே, நான் நீங்க குடுத்துட்டுப் போன நகைகளை அண்ணா மன்னி கிட்டே மறைச்சுட்டேன்.’லாட்டரி சீட்லே’ எனக்கு நீங்கோ பத்து லக்ஷம் ரூபாய் விழ வச்சேள்.அந்த பத்து லக்ஷத்தை அண்ணாவுக்குக் குடுத்துட்டு,நான் பண்ண தப்புக்கு பரிகாரம் தேடிண்டுட்டேன். நான் அண்ணா மன்னிக்குத் துரோகம் பண்ணலே.உங்க ரெண்டு பேருக்கும் என் மனமார்ந்த நன்றி” என்று மனதில் சொல்லிக் கொண்டு கண்ணீர் மல்க நின்றுக் கொண்டு இருந்தான்.

ஹரியைப் பார்த்த ராமு தன் தம்பியும் கண்ணீர் விடுவதைப் பார்த்து ‘இவனும் அப்பா ஜோஸ் யம் பலிச்சதுக்குத் தான் அப்பாவுக்கு நன்றி சொல்றான்’ என்று நினைத்தான்.ஆனால் மேல் லோகத்தில் இருக்கும் இவர்கள் அப்பா அம்மாவுக்குத் தான் தெரியும் ‘பிள்ளைகள் ரெண்டு பேரும் வெவ் வேறு காரணங்களுக்காக நன்றி சொல்லி கண்ணீர் விடுகிறர்கள்’ என்று.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *