திருப்பங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 8, 2021
பார்வையிட்டோர்: 3,655 
 

அன்று யாமினி பிறந்த நாள்,அவளின் அப்பா,அம்மா,தங்கை நண்பர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டார்கள். ஆனால் அவளின் கணவன் ஆதவன் இன்னும் வாழ்த்து கூறவில்லை,அவள் எதிர்பார்த்தது அதைமட்டும் தான் திருமணம் முடித்தப் பின்பு அவளின் முதல் பிறந்த நாள் இது,ஆவலுடன் எதிர்பார்த்தாள்.எப்படி மறந்தான் எனக்கு தெரியாமல் ஏதாவது செய்து அசத்தப்போறான் என்று நினைத்தாள்,வழமைப்போல் காலையில் வேலைக்குப் போய்,மாலையில் திரும்பி வந்தான் ஆதவன்,கையில் ஏதாவது இருக்கா?என்று பார்த்தாள் யாமினி,எதுவும் இல்லை முகம் வாடியது,அதை அவன் கவனிக்கவில்லை,இப்போது தான் எது தேவை என்றாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாமே அப்படி ஏதாவது செய்திருப்பான் என்று அவளும் வாசல்கதவைப் பார்த்தப்படி உட்கார்ந்து இருந்தாள்,நேரம் செல்ல செல்ல அந்த நம்பிக்கையும் போனது,அவன் மீது கோபம் வந்தது.இவன் ஏன் இப்படி இருக்கான்,கல்யாணம் பன்னி ஐந்து மாதம் தான் ஆகுது அதற்கிடையில் புது மனைவியின் பிறந்த நாளை மறந்து விடுவானா? மனதில் திட்டிக் கொண்டாள்

யாமினி சாப்பிடுவோம் என்று அழைத்தான் ஆதவன்,அமைதியாக வந்தாள் யாமினி,இருவரும் சாப்பிட்ட தொடங்கினார்கள் அப்போது சரி ஏன் பால் பாயாசம் செய்த என்று கேட்ப்பான் என்று எதிர் பார்த்தாள் அவள்,அவன் எதுவும் கேட்க்கவில்லை,சாப்பிட்டு எழுந்துக் கொண்டார்கள் இருவரும்.ஏதோ தொலைக்காட்ச்சியில் ஓடிய நிகழ்ச்சியை மனம் ஒட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் யாமினி.சற்று நேரத்தில் நான் படுக்கப்போகிறேன் என்று அவள் எழுந்து அறைக்குச் சென்றுவிட்டாள்,ஆதவன் அவன் நண்பனுடன் போனில் பேசிக்கொண்டிருந்தான்,அவனை அவள் எதிர்பார்த்தாள் அவன் வருவதாக இல்லை,அவளும் தூங்கிப்போனாள்.

மறுநாள் அவளின் தங்கை கேசனி போன் பன்னி என்ன அக்கா நேற்று எப்படி இருந்தது? மாமா அசத்தி இருப்பாறே,உன் பிறந்த நாளை,எப்படியும் புடவை வாங்கி கொடுத்திருப்பார் என்றாள் கேசனி,ஆமாடி..வெளியில் போய் சாப்பிட்டு,படம் பார்த்துவிட்டு, மல்லிகைப்பூ,அல்வாவுடன் வீட்டுக்கு வந்தப்பிறகு ஒரே ரொமான்ஸ் தான் என்று கிண்டலாக கூறினாள் யாமினி.அப்ப குரலில் உற்சாகமே இல்லையே,என்று வேறு ஏதோ ஆரம்பிக்கப் போன கேசனியை,இனியும் அந்த வயிறெரிச்சலை கிளப்பாதடி..என்றாள் யாமினி.என்னக்கா இப்படி சொல்ற,என்ன தான் நடந்தது என்றாள் கேசனி,அதை ஏன்டி கேட்க்கிற..எனக்கு வாழ்த்தே சொல்லவில்லை ஆதவன் என்றாள் கவலையுடன்,கேசனிக்கு பாவமாக இருந்தது அதை மறைத்து,சரி விடு அவர் வேலையில் மறந்திருப்பார் இன்னைக்கு சொல்வார் பாரே! என்றாள்.இதை அம்மா,அப்பாவிடம் உளறாதே என்றாள் யாமினி,சரி நான் எதுவும் சொல்லவில்லை என்றாள் கேசனி.சரி அக்கா எனக்கு வேலைக்குப் போக லேட் ஆகுது என்று போனை வைத்துவிட்டாள் கேசனி்.

அன்று மாலை வீடு திரும்பிய ஆதவன்,யாமினியிடம் நேற்று உன் பிறந்த நாளோ! நான் மறந்துவிட்டேன் என்று அவன் அலட்ச்சியமாக கூறியதை அவளாள் தாங்கமுடியவில்லை.அவளின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் ஒரு நொடியில் சுக்கு நூறாக்கிவிட்டான் ஆதவன்,இந்த ஐந்து மாதத்தில் பல தடவைகள் அவளின் எதிர்பார்ப்புகள்,ஆசைகள் இவற்றையெல்லாம் அவன் அவமதித்திருக்கான்.அழகான புடவை கட்டியிருந்தாலும் வாய் திறந்து எதுவும் கூறமாட்டான்,அவள் அழகாய் ஓவியம் தீட்டுவாள் சுவரில் தொங்கும் ஓவியங்களை பார்த்தப்பிறகு கூட எதுவும் கேட்க்கத் தோன்றாது அவனுக்கு.அவனுக்காக அவள் ஏங்கி காத்திருக்கும் நாட்களில் திரும்பி படுத்து தூங்கிவிடுவான்.இவன் என்னை விரும்பி தான் கட்டினான்னா? என்ற சந்தேகம் அவளுக்கு இடைக்கிடையே வரவே செய்தது.ஆதவன் நல்ல பையன்,ஒரு வம்புதும்புக்கும் போகமாட்டான்,பெண்களை நிமிர்ந்துக்கூட பார்க்கமாட்டான்,தங்கமான பையன் என்று பலர் கூறியதை வைத்தே அவளின் பெற்றோர்கள் இந்த சம்மந்தத்தைப் பேசி முடித்தார்கள்.

அடுத்த நாள் கேசனி போன் எடுத்துக் கேட்டாள்? மாமா வாழ்த்து சொன்னாறா? நான் போன் பன்னி சொன்னேன்,மறந்துவிட்டேன் என்று சொன்னார்.அது தானே பார்த்தேன் எப்படி ஞாபகம் வந்தது என்று உன் வேலை தானா..சரி அதைவிடு இன்று மாலை நான் கோயில் போறேன்,வேலை முடிந்தப்பின்பு நீ வரியா?என்று கேட்டாள் யாமினி,இன்னைக்கு முடியாது அக்கா மாமாவை கூப்பிடு என்றாள் கேசனி,அவருக்கும் வேலையாம் நான் தனியாகவே போகிறேன் என்றாள் யாமினி,சரி பார்த்துப் போய்வா,அடுத்த தடவை நான் வருகிறேன் கண்டிப்பாக,இப்ப போனை வைக்கிறேன் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டாள் கேசனி. மாலையில் யாமினி கோயில் சென்று ஓர் இடத்தில் அமைதியாக கண்ணை மூடி உட்கார்ந்தாள் சிறிது நேரம்.பிறகு அர்ச்சணை கொடுத்துவிட்டு மனதார கடவுளை வணங்கிவிட்டு வெளியில் வரும் போது,யாரோ யாமினி..என்று அழைத்தச் சத்தம் கேட்டது,சட்டென்று திரும்பிப் பார்த்தாள் நவீன் நின்றுகொண்டிருந்தான் எப்படி யாமினி இருக்க?எப்போது திருமணம் முடிந்தது?எனக்கு சொல்லவே இல்லை மறந்து போய்விட்டியோ என்றான்.

என்னையும் கொஞ்சம் பேசவிடு என்றாள் யாமானி,காலேஜ் முடித்தவுடன் வெளியூர் ஓடிப்போய்விட்ட,மறக்கவில்லை உன்னை தொடர்ப்புகொள்ள முடியவில்லை,நீ கொடுத்த போன் நம்பர் வேலையே செய்யவில்லை,பிறகு எப்படி உனக்கு திருமணகாட் அனுப்புவது?என்னை குறை சொல்லாதே என்றாள் யாமினி.அது உண்மை தான்,அது பெரிய கதை இன்னொரு நாள் சொல்றேன், இப்ப உன் போன் நம்பரைக் கொடு என்றான்,அவளும் கொடுத்தாள்.வீட்டுக்கா என்றான் சரி என்னுடன் வா வீட்டில் விடுறேன் என்றான் நவின்,உனக்கு ஏன் சிரமம் நான் தனியாகப் போய்விடுவேன் என்றாள் யாமினி,பார்த்தால் அழகாக இருக்க,யாரும் கடத்திக்கிட்டுப் போய்விடாமல் என்று சிரித்தான். அவனின் வாகனத்தில் அவளும் ஏறிக்கொண்டாள் இருவரும் அவர்களின் காலேஜ் நாட்களை நினைவுப்படுத்திக்கொண்டே வந்தார்கள்.அவள் வழி காட்டினாள்,அவன் அவளின் வீட்டின் அருகில் வாகனத்தை நிறுத்தினான்.யாமினி நவினை வீட்டுக்குள் அழைத்தாள் அவனும் வந்தான்.

வீட்டை அழகாக வைத்திருக்க என்றான்,உன் ஓவியங்கள் இவ்வளவு அழகா! என்று அதை இரசித்தான் அவள் காப்பி போட்டுக் கொடுத்தாள்,கொஞ்சம் நேரம் இரு,ஆதவன் இப்ப வந்துவிடுவான் உனக்கு அறிமுகம் படுத்தி வைக்கிறேன் என்றாள் யாமினி.அதற்கு நேரம் இல்லை,அவசர வேலை இருக்கு,இன்னொருத் தடவை சந்திக்கிறேன் என்று கூறிவிட்டுப் சென்றுவிட்டான் நவின்.ஆதவன் வந்தப்பிறகு நவின் வந்துப் போனதைப் பற்றி கூறினாள் யாமினி,அப்படியா! என்று முடித்துக்கொண்டான் அவன்.அடுத்த நாள் நவின் போன் பன்னினான்,நேற்று ஆதவனை பார்க்காமல் வந்ததில் உனக்கு ஏதும் வருத்தமா? என்றான்,கட்டாயம் ஒரு தடவை ஆதவனை சந்திக்கவேண்டு,அழகு தேவதையின் கணவனை என்றான்,நான் ஒன்றும் அவ்வளவு அழகில்லை என்றாள் யாமினி,நீ கண்ணாடி முன் நின்று பார்த்தது இல்லையா? என்றான் நவின்,இதை கூறவா போன் பன்னின என்றாள் யாமினி,உன்னிடம் கதைக்கனும் போல் தோன்றியது,அதனால் தான் எடுத்தேன் ஏன் எடுக்க கூடாதா? என்றான் நவின்,உனக்கு வேலையாக இருக்குமே அதனால் கேட்டேன் என்றாள் யாமினி.

ஒவ்வொரு நாளும் போன் பன்னி கதைக்க ஆரம்பித்தான் நவின், யாமினியும் தனிமையாக இருந்ததால் அவனிடம் பல மணிநேரம் கதைக்க ஆரம்பித்தாள்.நீ இன்னும் ஏன் திருமணம் செய்ய யோசிக்கவில்லை என்றாள் யாமினி,உன் மாதிரி ஒரு பெண் கிடைத்தால் உடனே பன்னிக்குவேன் என்றான்,அப்ப என் தங்கை தான் இருக்காள் என்றாள்,அவள் உன்னைப்போல் அழகாக இருந்தால் பார் என்றான்,அவள் வேலைக்குப் போகிறாள் பரவாயில்லையா? என்றாள் யாமினி அது சரிவறாது என்றான்.நீ எப்போது வெளியூர் போகனும் என்றாள் யாமினி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றான் அவன்,நான் பெண் பார்க்கவா? என்றாள் சரி பார் உன் உயரத்தில்,அளவான உடம்பில்,சிரிக்கும் போது இடது கண்ணத்தில் குழி விழுகின்ற மாதிரி,அழகான கண்களோடு என்றான் அப்ப சிலை தான் செய்யனும் என்றாள் யாமினி, ஆதவனும் அப்படிதானே கட்டியிருக்கான் என்று சிரித்தான் வாட்சப்பில் உனக்கு முகத்தை காட்டுவது தான் தப்பாக போய்விட்டது என்றாள் அவள்.

ஆதவன் சனி,ஞாயிறு வீட்டில் இருப்பான்.யாமினி விதவிதமாக சமைத்து கொடுப்பாள் எனக்கு பிடிக்கவில்லை சாம்பார் சாதம் செய்து இருக்கலாம் என்பான் ஆதவன்.நவின் திங்கள் கிழமை போன் பன்னும்போது கூறி வருத்தப்படுவாள் யாமினி,சமைத்து வை நான் வந்து சாப்பிடுகிறேன் என்பான் நவின்,இரண்டு தடவைகள் அவள் சமைத்து வைத்திருக்கிறாள்,அவனும் வந்து சாப்பிட்டு புகழ்ந்துவிட்டுப் போயிருக்கான்.ஆனால் அதை ஆதவனிடம் கூறவில்லை.நாட்கள் செல்ல செல்ல நவின் பக்கம் யாமினி ஈர்க்கப்படுவதை உணர்ந்தாள்.அவன் ஒரு நாள் போன் பன்னாவிட்டாலும் ஏக்கமாக இருக்கும்,அதை நன்கு அறிந்த நவின் அவளை மேலும் ஏங்கவிடுவான்.ஏன் போன் பன்னவில்லை என்றால் வேலை அதிகம்,நான் முன்பு வேலை செய்த இடத்திலிருந்து போன் பன்னி,புது டிஸைன் வீட்டை படம் வரைந்து அனுப்ப சொன்னார்கள் அதில் நேரம் போய்விட்டது என்பான் நவின். எதிர்பார்த்தியோ என்பான் அவள் இல்லை என்று மறுத்துவிடுவாள்.

அன்று கேசனி வந்தாள்,ஏன் எப்ப போன் எடுத்தாலும் அவசரமாக கதைத்து விட்டு வைத்து விடுகின்றாய்,ஏதோ நீ வேலைக்குப் போகின்ற மாதிரி என்று கடுகடுத்தாள் யாமினியிடம்,அப்படி இல்லை நான் நன்றாகத் தான் கதைக்கிறேன் என்றாள் யாமினி்.ஆமா போ,நல்லா தான் கதைக்கிற,அம்மா,அப்பாவிற்குப் போன் பன்னுவதே இல்லையாம்,அவர்களும் வருத்தப் பட்டார்கள்.அப்படி என்ன தான் செய்ற வீட்டில் இருந்துக் கொண்டு என்றாள் கேசனி.கோபபடாதே ஏதாவது வேலையாக இருந்திருப்பேன் சரி என்ன சாப்பிட வேண்டும்? என்று பேச்சை மாத்தினாள் யாமினி்.இருப்பதை கொடு பசியாக தான் இருக்கு என்றாள்.இருவரும் சமையல் அறைக்குள் நுழைந்தனர்.அப்போது நவின் போன் எடுத்தான் யாமினி கதைக்க தடுமாறியதை கேசனி கவனித்தாள்,சரி நான் வைக்கிறேன் என்று வைத்து விட்டாள் யாரு என்று கேசனி கேட்டாள்,நவின் என்னுடைய காலேஜ் நண்பன் என்றாள் யாமினி,பெயர் என்ன சொன்ன என்று மறப்படியும் கேட்டாள் கேசனி நவின் என்றாள் நீலகலர் கார் வைத்திருக்கானா? என்றாள் கேசனி,ஆமா உனக்கு எப்படி தெரியும் என்றாள் யாமினி,வெளியூர் போய் இப்ப தானே வந்திருக்கான்,அவனாகத்தான்.. இருக்கும் நம்ப ஆபிஸ் பக்கம் தான் அவனுடைய வீடு.அழகானப் பெண்களை மயக்குவதே வேலையாக வைத்திருக்கான் என்றாள் கேசனி.

யாமினி அதிர்ந்துவிட்டாள் உனக்கு எப்படி தெரியும்?என்றாள் கேசனியிடம்,தெரியும் அக்கா உனக்கு என்னுடன் வேலை செய்யும் அஞ்சலி தெரியும் தானே?அவனால் அவள் பாதிக்கப்பட்டவள் என்னடி இப்படி குண்டை தூக்கிப் போடுற என்று பதறினாள் யாமினி,உனக்கு நம்ம முடியாமல் இருக்கும்,காதலிப்பதாக அவளை நம்ப வைத்து,ஆசையை தீர்த்துக்கொண்டு தற்போது வேறு பெண்ணோடு தொடர்பு வைத்திருக்கானாம்,பாவம் அக்கா அஞ்சலி,அவளும் முடிந்தளவு கெஞ்சி பார்த்துவிட்டாளாம், என்னிடம் மட்டும் கூறி அழுதுவிட்டாள் அக்கா.

அந்த அயோக்கியன் உனக்கு எப்படி நண்பன்,வெளியில் சொல்லாதே வெட்க்கம் அவனிடம் இனி போனில் பேசாதே, மாமாவிற்கு தெரியுமா?அவன் உன் நண்பன் என்று,கவனமாக இரு யாரையும் நம்பாதே என்று எச்சரித்து விட்டு சென்று விட்டாள் கேசனி்.அவள் சென்றப் பிறகும் யாமினிக்கு பதட்டம் அடங்கவில்லை,நான் எப்படி இவனை நம்பினேன்,என்று தன்னைதானே கடிந்துக் கொண்டாள்.இப்போதாவது தெரிந்ததே, அவனுடைய பிறந்த நாளைக்கு அவளை அவன் வீட்டுக்கு அழைத்திருந்தான்,இவளும் வருவதாக ஒத்துக்கொண்டு அவனுக்குப் பரிசு கொடுப்பதற்காக ஒரு ஓவியத்தையும் வரைய ஆரம்பித்திருந்தாள்.

இனி இவனுடன் தொடர்ப்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று முடிவு எடுத்தாள்,நவின் போன் எடுக்கும் போது எல்லாம் யாமினி எடுக்கவில்லை,அவன் பல தகவல்கள் அனுப்பினான்,அவள் எதற்கும் பதில் அனுப்பவில்லை,அவன் ஒரு நாள் வீட்டுக்கே தேடிக் கொண்டு வந்துவிட்டான்,கதவின் துவாரத்தில் பார்த்தப் போது நவின் நிற்பதைக் பார்த்த யாமினி கதவை திறக்கவில்லை,வீட்டில் யாரும் இல்லாத்துப்போல் அமைதியாக இருந்தாள்,அவனும் சற்று நேரத்தில் சென்று விட்டான்.அதன் பிறகு அவன் போனில் அனுப்பிய தகவல்கள் வாசிக்க முடியாத அளவிற்கு இருந்தது,உனக்கு ஆதவன் வேண்டாம் என்று என்னிடம் வந்தாய், தற்போது நானும் கசந்துபோய்விட்டேனா உனக்கு? வேறு யாரும் தேவைப்படுதா?இதுப் போன்று தகாத வார்த்தைகளில் பல தகவல்கள் யாமினி ஆடிப்போனாள் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடிப் போனாள்,ஆதவனிடம் கூறிவிடுவோம் என்று முடிவு எடுத்தாள்.

ஆதவன் அன்று வீட்டில் இருந்தான் இவள் மெதுவாக அவன் அருகில் போய் உட்கார்ந்தாள்.அவன் ஆச்சிரியமாகப் பார்த்தான்,சிறிது நாட்களாகவே அவனை அவள் கண்டு கொள்வதில்லை,அது அவனுக்கும் தெரியும்.உங்களிடம் ஒன்று கூறவேண்டும் என்றாள்,நவினைப் பற்றியா!என்றான் அவன்,எப்படி நான் அதை தான் கூறவந்தேன் என்று உங்களுக்கு தெரியும்? என்றாள் யாமினி.எனக்கு தெரியும் சிறிது நாட்களாகவே உன்னைப் பற்றி தகாதமுறையில் எனக்கு தகவல்கள் அனுப்பிகொண்டு தான் இருக்கிறான்,உனக்கும் அனுப்புவான் என்று நினைக்கிறேன் அப்படிதானே?என்றதும் அவள் அழாத குறையாக உட்கார்ந்து இருந்தாள்.நீ நண்பன் என்று நம்பி இருக்காய் அவன் உன்னை வேறு விதமாகப் பார்த்திருக்கான் என்றான் ஆதவன்.

அவனுக்கு எப்படி உங்கள் போன் நம்பர் தெரியும்?என்றாள்..நீ தான் கொடுத்திருப்ப..உன் நண்பனுக்கு என்றான்.அவள் இல்லை நான் கொடுக்கவில்லை என்றாள். வீட்டுக்கு வந்திருக்கும் போது உன் போனை எடுத்துப் பார்த்திருப்பான் என்றதும்,அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது,எப்படிபக்கத்தில் இருந்து பார்த்த மாதிரியே கூறுகிறான் என்று,அப்போது தான் அவளுக்கு ஞாபகம் வந்தது,அவள் வரைந்த ஓவியங்களை அவள் போனில் படம் எடுத்திருந்தாள்.அதை அவனிடம் பார்க்க கொடுத்தாள் அப்போது ஆதவனின் போன் நம்பரை எடுத்திருக்கான்,கடவுளே! இன்னும் யார் நம்பரையெல்லாம் எடுத்தானோ தெரியவில்லை,அவளுக்கு பக் என்று இருந்தது.எப்போதும் யோசித்து நடக்கவேண்டும் யாமினி யாரையும் நம்பி வீட்டுக்குப் கூப்பிடுவதையும்,போன் நம்பர் கொடுப்பதையும் தவிர்த்துவிடு இனி என்றான் ஆதவன்,அவளுக்கு கண்ணத்தில் அறைந்தது போல் இருந்தது.

கவலையுடன் தற்போது என்ன செய்வது என்றாள் யாமினி,நீ கவலைப்படாதே தைரியமாக இரு,அவனை நான் பார்த்துக் கொள்கிறேன்.என் நண்பன் காவல்துறை மேல் அதிகாரி இனி அவன் உனக்கு போனில் எதுவும் அனுப்ப மாட்டான் என்று அவள் தலையை தடவினான் ஆதவன்,அவள் பெருமூச்சி விட்டாள்,அதன் பிறகு நவினிடமிருந்து எந்த தகவல்களும் இல்லை போனில் அவளுக்கு அதுவே நிம்மதியாக இருந்தது.அன்று மாலை ஆதவன் போன் பன்னி படம் பார்க்கப் போவோம் இன்று மாலை என்றான், இல்லை நான் வரவில்லை என்றாள் ஏன் இன்னும் நடந்ததையே நினைத்துக் கொண்டு இருக்காயா?அதை விடு யாமினி,அவனை நம்பி நீ போயிருந்தால்,பல திருப்பங்கள் உன் வாழ்க்கையில் நடந்திருக்கும்,நான் உன்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை புது மனைவி,நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்திருப்ப,நான் அதை புரிந்துக்காமல் இருந்துவிட்டேன்,அவன் உன்னிடம் நன்றாக கதைத்திருப்பான் நீ அதற்கு மயங்கிவிட்ட,பெண்களே இப்படிதானே!என்று சிரித்தான்.. உனக்கு பிடித்தமாதிரி இனி நான் இருப்பேன் எப்போதும் புரியுதா என்றான்,அவள் மௌனமாக மனதில் சிரித்துக் கொண்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *