ஜாக்கிறதே,அந்த தூண்லே இடிக்காம…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 5,323 
 

மேரி ஜானை நாலு வருடங்களாக ‘டேட்’ பண்ணீ கல்யாணம் பண்ணிக் கொண்டாள். இருவ ரும் ஒரு சின்ன ஊ¡¢ல் வசித்து வந்தார்கள்.அந்த ஊ¡¢ல் ஒரு சின்ன சர்ச்சும், ஒரு சின்ன மருத்தவ மணையும் தான் இருந்தது.

முதல் மூணு வருடங்கள் அவரகள் ரெண்டு பேருடைய கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டு இருந்தது.

இரண்டு வருடங்கள் கழித்து அவர்களுக்கு ஒரு பெண் இழந்தை பிறந்தது.அந்த குழந்தை பிறந்ததில் இருந்து ஜான் முன்னே இருந்தது போல இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக சொம்பேறி யாக மாறி வந்தான்.அவன் வேலையில் அதிக கவனம் செலுத்தி வராததால்,அவனுக்கு வேலையில் ‘பிரமோஷன்’ கிடைக்கவில்லை.ஆனால் மேரி மட்டும் நன்றாக வேலை செய்து வந்ததால் அவளுக்கு ‘பிரமோஷன்’ கிடைத்தது.மேரி பல தடவை ஜானைப் பார்த்து ‘ஜான்,நீ ஏன் இப்போ கொஞ்ச நாளா சோம்பேறித்தனமா இருந்து வறே.பழையபடி சுறு சுறுப்பா இருந்து வா” என்று சொல்லிப் பார்த்தாள். ஆனால் ஜான் கொஞ்சம் கூட மாறவில்லை.”நான் நிறைய வேலை செஞ்சும்,எனக்கு ‘பிரமோஷன்’ கிடைக்கலே. அதான் நான் சோமேறியா இருந்து வறேன்”என்று வெறுப்புடன் சொன்னான்.

வெறுப்படைந்த ஜான் தன் சோம்பேறி நண்பர்களுடன் ‘குடிக்க’ ஆரம்பித்தான்.நாளடைவில் அந்த ‘குடிக்கு’ அடிமை ஆகி அதிகமாக குடித்து வந்தான்.அந்த ‘குடி’ மயக்கத்தில் ஜான் குழந்தை யையும்,மேரியையும் துன்புருத்த ஆரம்பித்தான்.நாளாக நாளாக ஜான் துன்புருத்தல் அதிகம் ஆகி வந் தது.மேரியாலேயும்,குழந்தை ஜென்னியாலேயும் தாங்கி வர முடியவில்லை.இருவரும் மிகவும் கஷ்டப் பட்டுக் கொண்டு வந்தார்கள்.

எட்டு வருடங்கள் கழித்து ஜான் ‘லீவர்’ ரொம்ப மோசம் ஆகி,ஒரு நாள் காலையிலே அவன் மயக்கம் ஆகி விட்டான்.மேரி அவனை அந்த சின்ன மருத்தவ மணிக்கு அழைத்து சென்றாள். பரி சோதனை பண்ணின டாகடர் “அவசரப் பட்டு” அவன் மயக்கம் தெளியாம இருந்து வந்ததால் ‘அவன் இறந்து விட்டான்’ என்று சொல்லி விட்டார்.

மனம் உடைந்து போன மேரி அவனை ‘அடக்கம்’ பண்ண ஒரு சவப் பெட்டியை ஆர்டர் பண்ணி,ஜானை அந்த சவப் பெட்டியில் ‘அடக்கம்’ பண்ணி,தனக்கு தெரிந்த நன்பர்கள் உதவியால் அந்த சவப் பெட்டியை புதைக்கும் மயானத்திற்கு கொண்டு போனாள்.மயானத்திற்கு போகும் வழி யில் இருந்த இரு இரும்பு தூண் மீது கவனக் குறைவால் அந்த நண்பர்கள் மோதி விட்டார்கள்.

திடீரென்று அந்த சவப் பெட்டில் இருந்து ஜான்,கண் விழித்து மெல்ல தன் உடலை அசைத் தான்.’அவன் இறக்கவில்லை.ஆழ்ந்த மயகத்தில் இருந்து வந்து இருக்கிறான்.அந்த டாகடர் தான் “தவறான முடிவை” நமக்கு அவசரப் பட்டு சொல்லி இருக்கார் ’எனபதை பு¡¢ந்துக் கொண்டு வேறு வழி இல்லாமல் மேரி ஜானை அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு வந்தாள்.ஜான் நண்பர்கள் சந்தோஷப் பட்டார்கள்.

பிழைத்து வந்த ஜான் கொஞ்ச கொஞ்சமாக உடம்பு தேறி,பழையபடி வேலைக்குப் போய் வந்தான்.அவன் மறுபடியும் தன் நண்பர்கள் கூட குடிக்க ஆரம்பித்தான்.குடி மயக்கத்தில் வீட்டுக்கு வந்து மேரியையும் ஜென்னியையும் மறுபடியும் துன்புறுத்த ஆரம்பித்தான்.ஜான் குடிக்க குடிக்க கொஞ்சம் சுமாராக ஆகி இருந்த அவன் ‘லீவர்’ முழுவதும் கெட்டுப் போய் அவன் இறந்துப் போய் விட்டான்.

மேரி மறுபடியும் தன் நண்பர்களை அழைத்து ஜானை அடக்கம் செய்த சவப் பெட்டியை மயான த்துக்கு எடுத்து வரச் சொன்னாள்.மயானம் வரை அழுதுக் கொண்டு வந்த மேரியும், ஜென்னியும் மயா னத்தை அடைந்த்தும்,முன்னம் தன் நண்பர்கள் ஜான் சவப் பெட்டி இடித்த தூணை நெருங்கிக் கொ ண்டு இருக்கும் போது “ஜாக்கிறதே,ஜாக்கிறதே,முன்னே இடிச்ச இரும்பு தூண் மேலே தயவு செஞ்சி இடிக்காம சவப் பெட்டியே எடுத்து போங்க” என்று கத்தி சொன்னார்கள் இருவரும்.

மேரி நண்பர்கள் எல்லோரும் சிரித்துக் கொண்டே”சரி,நாங்க நிச்சியமா அந்த தூண் மேலே இடிக்காம சவப் பெட்டியே எடுத்துப் போறோம்” என்று சொன்னார்கள்.மேரிக்கும் ஜென்னிக்கும் நிம்மதியாக இருந்தது.

மேரி ஜானை மயானத்தில் புதைத்து விட்டு தன் பெண் ஜென்னியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *