கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 18, 2019
பார்வையிட்டோர்: 6,844 
 

அத்தியாயம் -22 | அத்தியாயம் -23 | அத்தியாயம் -24

அவள் மௌனமாக இருந்தாள்.கொஞ்ச நேரம் கழித்து ”அந்த ராணீ நம் வூட்லே எவ்வளவு வேலைங்க செஞ்சு வந்தா.ஒரு சின்ன பொருளைக் கூட அவள் திருடினது இல்லே.அப்படி பட்ட ராணியின் குழந்தை நாம வளக்காம அனாதை இல்லத்தில் சேப்பது சரி இல்லை கமலா” என்று மறுபடியும் குழந்தையைப் பற்றி பேச ஆரம்பித்தான் நடராஜன்..“நீங்க சொல்றது எல்லாம் ரொம்ப சரிங்க.நான் இல்லேன்னு சொல்லலலே.அவ சாகறப்ப ‘இந்த குழந்தை யை நாங்க வளக்க மாட்டோம்.நாங்க இந்த குழந்தையை ஒரு அனாதை இல்லத்திலே தான் சேப்போம்’ன்னு சொல்லி அவ சாகும் போது அவ மனசை நான் புண் படுத்த விரும்பவில்லேங்க.சாகும் போது அவ நிம்மதியுடன் சாக வேணும் ன்னு ஒரு நல்ல எண்ணத்துடன் தாங்க நான் அப்படிச் சொன்னேன்.அதுக்காவ நாம அவ குழந்தையை ‘நம்ம குழந்தை ன்னு’ சொல்லி எப்படிங்க வாழ் நாள் பூராவும் வளக்க முடியுமாங்க.இந்த குழந்தை ஒரு ‘வேலைக்காரி குழந்தை’ தானுங்களே.இது உங்களுக்கும் தெரியுமேங்க” என்றாள் கமலா.நடராஜனுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.’இவ மறுபடியும், மறுபடியும் இந்த குழந்தை ஒரு ‘வேலைக்காரி குழந்தைதாணுங்களே’ ன்னு சொல்றாளே’ என்று நினைத்து வருந்தினான்.பொறுமையாக இருந்தான்.நடராஜன் யோஜனை பண்ணிக் கொண்டு இருக்கும் போது கமலா ”எனக்கு தூக்கம் வருதுங்க.ரொம்ப நேரமாகி விட்டதுங்க,வாங்க நாம் படுக்கப் போவலாம்” என்று கமலா சொல்லவே நடராஜன் ஒன்றும் பேசாமல் இருந்தான்.சற்று நேரம் கழித்து அவனும் படுக்கப் போனான்.இரவு பூராவும் நடராஜன் தூங்கவில்லை..

இரவு பூராவும் நடராஜன் தூங்காததால் காலையில் எழுந்ததும் அவனுக்கு நல்ல தலை வலி.பல் தேய்த்து விட்டு காப்பி சாப்பிட உட்கர்ந்தான் நடராஜன்.“எனக்கு ரொம்ப தலை வலிக்குது கமலா. காப்பியை கொஞ்சம் ‘ஸ்ட்ராங்கா’ போட்டு சூடா குடு” என்றான் நடராஜன்.“ஏங்க, ராத்திரி நீங்க சரியாத் தூங்கலையா.உங்க கண் ரெண்டும் இப்படி கோவைப் பழம் போல சிவந்து இருக்கேங்க ஏன் தலை வலிக்குது உங்களுக்கு” என்று சொல்லி அவன் தலையை கொஞ்சம் அமுக்கி விட்டாள். நடராஜன் கமலா கொடுத்த காப்பியைக் குடித்துவிட்டு,இரண்டு தலை வலி மாத்திரைகளையும் போட்டுக் கொண்டு,கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு மறுபடியும் போய்ப் படுத்துக் கொண்டான்.

மூன்று மணி நேரம் ஆனதும் நடராஜன் பெட் ரூமை விட்டு வெளியே வந்தான்.ஏங்க இப்போ தலை வலி குறைஞ்சு இருக்குதாங்க.நீங்க இப்போ நார்மலா இருக்கீங்களாங்க” என்று கவலையோடு கேட்டாள் கமலா.“தலை வலி கொஞ்சம் குறைஞ்சிருக்கு கமலா.காலையில் இருந்ததை விட இப்போ ‘பெட்டராகவே’ இருக்கு” என்று சொல்லி எழுந்தான் நடராஜன்.சற்று நேரத்திற்கு இருவரும் ஒன்று பேசவில்லை.நடராஜன் மட்டும் அன்றைய நாளிதழ்களை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தான். நடராஜனுக்கு நாளிதழ்களை படிக்கவே மனம் லயிக்கவில்லை.இந்த குழந்தை விவகாரம் அவன் இஷ்டம் போல் ஆகும் வரை அவன் ‘·பாக்டரிக்கு’லீவு போடுவதாய் முடிவு பண்ணினான் நடராஜன். கமலா குளித்து விட்டு வந்ததும் “கமலா நான் இன்னிக்கு மதியம் ‘டியூட்டிக்கு’ப் போகலே.என் மனசு சரி இல்லே” என்று சொல்லி கமலா என்ன சொல்கிறாள் என்று நோட்டம் பாத்தான் நடராஜன்.

“நீங்க ‘டியூட்டிக்கு’ப் போங்க.நீங்க வரும் வரையிலே நான் குழந்தையை ஜாக்கிறதையாகப் பாத்துக்குகிறேங்க .ஏற்கெனவே நீங்க நிறைய ‘லீவு’ எடுத்து இருக்கீங்களே.இன்னிக்கு லீவு எடுக்க வேண்டாமேங்க” என்று அவனுக்கு ஞாபகப் படுத்தினாள் கமலா.கமலா குழந்தையை ‘நான் ஜாக்கிறதையா பாத்துக்கிறேன்’னு சொன்னது நடராஜன் மனதுக்கு கொஞ்சம் இதமாய் இருந்தது. கமலா மிகவும் வற்புறுத்தவே நடராஜன் மதிய சாப்பாடு சாப்பிட்டான். கமலாவும் சாப்பிட்டு விட்டு வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டாள்.”நமக்கு இந்த ஒரு வருஷமாநெறைய பணம் செலவு ஆகி, நம்ம ‘பாங்க் பாலன்ஸ்’ மிக குறைவா இருக்கேங்க.இந்த குழந்தையை ஒரு நல்ல ‘அனாதை இல்லத்திலே’ நாம சேர்த்து விடலாமுங்க.அப்போது தான் நான் வேலைக்குப் போய் வர சௌகா¢யமாக இருக்கும்” என்று கேட்டாள் கமலா.நடராஜனுக்கு கமலா சொன்னது நாராசமாய் இருந்தது.அவனுக்கு அவ சொன்னதை கேக்கவே பிடிக்கவில்லை.முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு “நான் இந்தக் குழந்தையை நாமே வளக்கலாம் ன்னு சொல்லிக்கிட்டு இருந்தா,நீ என்னடா ன்னா குழந்தையே ‘அனாதை இல்லத்திலே’ விட்டுட்டு வேலைக்கு முயற்சி பண்றேன்னு சொல்றயே கமலா” என்று வெறுப்புடன் சொன்னான் நடராஜன்.“இது என்ன நம்ப குழந்தை யாங்க.நாம வளக்கறத்துக்கு.இது அந்த ‘வேலைகாரி குழந்தை’ தானுங்க” நடராஜனுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.கொஞ்ச நேரம் கழித்து “கமலா நான் சொல்றென்னு தப்பா எடுத்துகாதே.நீ சொல்றாப் போல நீ வேலைக்குப் போய் வந்தால் நமக்கு பணக் கஷடம் நிச்சியம் குறையும். நான் இல்லேன்னு சொல்லலே.உன் உடம்பு இவ்வளவு நல்லா தேறி நீ முதுகு வலி இல்லாம இருந்து வருவதற்கு யார் காரணம் கமலா.அந்த ராணீ தானே கமலா.அவ சாகும் போது நாம அவளுக்குக் குடுத்த வாக்கை, நாம காப்பாத்த வேணாமா கமலா.அது தானே நியாயம்.தர்மமும் கூட.இல்லையா கமலா” என்று வக்கீல் கேட்பதைப் போல் கமலாவைக் கேட்டான் நடராஜன்.கமலா இதற்கு பதில் ஒன்னும் சொல்ல முடியாமல் குழந்தையை வளர்க்க ஒத்துக் கொள்ளுவாள் என்று எதிர் பார்த்தான் நடராஜன்.

கமலா கூலாக“நீங்க சொல்றது சரிங்க.நான் இல்லேன்னு சொல்லலே.நான் எப்படிங்க ஒரு ‘வேலைக்காரி குழந்தையை ‘என் குழந்தைன்னு நினைச்சு காலம் பூராவும் வளக்க முடியும்.இந்த குழந்தையின் ‘பிறப்பு விவரம்’ நமக்கு தெரிஞ்சாலும் பரவாயில்லைங்க.அந்த விவரம் நமக்குத் தெரியாதேங்க.இப்ப ராணீ தான் இந்த குழந்தைக்கு அம்மான்னு அவ சொல்லி நமக்குத் தெரியும். ஆனா இந்த குழந்தைக்கு அப்பா யாரோ நமக்குத் தெரியாதேங்க.அதை அவ சொல்லவே இல்லீங்க. யாரோ கல்யாண ஆன ஒரு ஆம்பி ளைக்கும் இவளுக்கும் ‘கள்ள உறவாலே’ பிறந்த குழந்தைங்க இந்த குழந்தை.நமக்கு இந்த விவரம் எல்லாம் தெரிஞ்ச பிறகு எப்படிங்க நாம இந்த குழந்தையை வளத்து வர முடியும்” என்று சொல்லி நடராஜன் சொன்னதை நிராகா¢த்து விட்டாள் கமலா.

‘இது என்னடா புது குழப்பம்.முதலில் வேலைக்காரி குழந்தைன்னு சொல்லி வந்தா கமலா.இப்போ என்னடா ன்னா இந்த குழந்தைக்கு அப்பா யார் நமக்கு தெரியாதே ன்ன்னு சொல்றா,’கள்ள உறவு’,அது, இது,ன்னு எல்லாம் புதிசா பேசி வரா இவ.இவளை எப்படி நாம் புரிய வச்சு இந்த குழந்தையை வளக்கப் போறோம்’ என்று கவலை வந்து விட்டது நடராஜனுக்கு.அவன் குழம்பினான். மறுபடியும் மெல்ல கமலாவிடம் பேச ஆரம்பித்தான் அவன். “கமலா, இந்தக் குழந்தையை ஒரு வேலைக்காரி குழந்தைன்னு ஏன் பிரிச்சுப் பாக்கறே குழந்தையும் தெய்வமும் ஒன்னு தான் கமலா.அந்த குழந்தைக்கே தான் ஒரு வேலைகாரி குழந்தைன்னு தெரியவே தெரியாதே.இந்த குழந்தை யைப் பாரு கமலா.யாராவது இந்த குழந்தை வேலைக்காரி குழந்தைன்னு சொல்லுவாங்களா. நாம வேணும்ன்னா உடனே இந்த வீட்டை காலி பண்ண ட்டு வேறே வூட்டுக்கு போய் விடலாமே. அங்கு யாருக்கும் இந்த குழந்தை வேலைக்காரி குழந்தைன்னு தெரியாது கமலா.நீ நல்லா யோஜனைப் பண்ணு.நாம இந்த குழந்தையே நாமே வளக்கலாமே கமலா” என்று கெஞ்சினான் நடராஜன் கம்மென்று இருந்தாள்.“வேணாங்க,இந்த வூட்டை எல்லாம் நாம மாத்த வேணா¡ங்க. இங்கே இருக்கிற சாமான்களை எல்லாம் ஒழிச்சுக் கிட்டு போற வேலை எல்லாம் வேணவே வேணாங்க. வேறு வூடு நாம பாக்கப் போனா வாடகையும் அதிகம் கேப்பாங்க.’அட்வான்ஸ¤ம்’ அதிகமா குடுக்க வேண்டியதாய் இருக்குங்க. நல்ல விதமாக பிறந்த ஒரு குழந்தையை நாம் தத்து எடுத்துக்கலாமேங்க” என்று கேட்டு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள் கமலா.இதற்கு கமலாவுக்கு என்னபதில் சொல்வது என்று புரியாமல் மௌனமாக இருந்தான் நடராஜன்.

சற்று நேரம் கழித்து கமலா ‘சரி,இதை மறுபடியும் கேப்போம் என்ன சொல்றார் என்று பாக்கலாம் என்று எண்ணி ”ஏங்க இந்த குழந்தைக்கு அப்பா யார்ன்னு நமக்குத் தெரியாதேங்க.நீங்க நல்லா யோச்சீங்களா.எப்படிங்க நீங்க இதை ஏத்துக்குறீங்க” என்று விடா¡மல் நடராஜனைக் கேட்டாள்.உடனே நடராஜன்” அவ ரொம்ப நல்லவ பாவம். நம்மிடம் அவ உண்மையைச் சொன்னா.நீ சொல்றது போல இந்த குழந்தையை ஒரு அனாதை இல்லத்திலே சேத்து விட்டு நாம வேறு ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கிறோம்ன்னு வச்சுக்க.இந்த குழந்தை யாருக்குப் பிறந்தது. ஒரு வேலைக்காரிக்கா,இல்லை ஒரு பிச்சைக்காரிக்கான்னு நாம எப்படி தெரிஞ்சுக்கப் போறோம் சொல்லு பார்க்கலாம் கமலா.குழந்தை குழந்தை தான் கமலா.நமக்கோ இப்போ ஒரு குழந்தை வேணுமில்லையா கமலா”என்ரு எதிர் கேள்வி யைப் போட்டான்.“நீங்க சொல்றது சரி தானுங்க.நான் இல்லேன்னு சொல்லலே.நாம தத்து எடுத்தா நமக்கு தெரிஞ்ச வங்க குழந்தையைத் தானுங்க நாம் தத்து எடுக்கணுங்க.முன் பின் தெரியாத குழந்தையை நாம தத்து எடுக்கக் கூடாதுங்க.என் உறவிலேயோ,இல்லை, உங்க உறவிலேயோ ஒரு குழந்தையை தானுங்க நாம தத்து எடுத்தக்கணும்” என்று சொல்லி நடராஜன் ‘ஐடியாவுக்கு’த் துளி கூட இடம் கொடுக்காம பேசினாள் கமலா. “உங்களுக்கு வேலை நேரம் ‘டைட்டா’ இருந்திச்சுன்னா ,நான் வூட்லே சும்மா தானேங்க இருக்கேன். நான் சென்னையிலே ஒரு நல்ல அனாதை இல்லமாக விசாரிச்சு வக்கிறேனுங்க.அப்புறமா நாம ரெண்டு பேருமா அந்த அனாதை இல்லத்துக்குப் போய் ராணியின் கதையை நாம் சொல்லி,இந்த குழந்தையை அங்கே விட்டு விட்டு வரலாமுங்க கூடவே நான் என் உறவுக் காரங்க கிட்டே இந்த தத்து எடுக்கிற விஷத்தை சொல்லி ஒரு குழந்தை கிடைக்குமான்னு விசாரிக்கிறேனுங்க. நீங்களும் உங்க உறவுக் காரங்க கிட்ட சொல்லி வையுங்க”என்று சொல்லி நடராஜன் முகத்தை கூர்ந்து கவனித்தாள் கமலா.நடராஜன் ஏதோ அவசரமா தன் நண்பனுக்கு போனில் ஏதோ வேலை விஷயமா பேசினான்.நடராஜன் போனில் பேசிக் கொண்டு இருக்கவே கமலா வேறு ஒன்றும் சொல்லாமல் தன் வேலையை கவனிக்கப் போய் விட்டாள்.‘நமக்கோ கமலா மூலம் இன்னொறு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை.இது கமலாவுக்கும் நல்லாத் தெரியும்.நம் ரெண்டு போ¢ல் ஒருவா¢ன் குழந்தை தான் இது. ஆனா இந்த குழந்தை ஒரு தகாத உறவால் தான் பிறந்தது. இது எனக்கு தெரியும் .ஆனா நான் இதை கமலாவிடம் சொல்ல முடியாதே.அவளுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா விபா£தமாக இல்லே போய் விடும்.இந்த விபா£தமும் நடக்காம இந்த குழந்தையை கமலாவும் நானும் எப்படி வளப்பது’. இதற்கு விடை தெரியாமல் தவித்தான் நடராஜன்.”நான் வேலை ஒரு பண்ணின பழைய ‘ஸ்டா·ப்’ தவிர எங்கப்பா வேலை பண்ணின கம்பனிங்க. எங்கப்பா மேலே அவங்களுக்கு நல்ல மதிப்புங்க. அதனால் லே எனக்கு வேலை கிடைப்பது ரொம்ப சுலபங்க.நான் ‘அப்லிகேஷன்’ உடனே போடட்டுங்களா.எனக்கு ஒரு வாரத்துக்குளாற வேலை கிடைச்சிடுங்க” என்று சந்தோஷத்துடன் சொன்னான் கமலா.“சரி கமலா,நீ அப்படி வேலைக்குப் போனா இந்த குழந்தையை நாம எப்படி கமலா வளக்கறது” என்று பழைய பாட்டையே பாடினான் நடராஜன்.“அதான் நான் சொன்னேனுங்களே.ஒரு அனாதை இல்லத்திலே இந்த குழந்தையை சேக்கறது தாங்க இதுக்கு ஒரே வழி” என்று சொல்லி விட்டு அவன் முகத்தைக் கவனித்தாள் கமலா.நடராஜன் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.

துக்கம் வருகிறது என்று சொல்லி விட்டு எழுந்து படுக்க ‘பெட் ரூமுக்கு’ப் போய் விட்டாள். ’ஒன்னுக்கும் பிடி குடுத்து பேசாம நான் படுக்கப் போறேங்கன்னு சொல்லிட்டு போய் விட்டாளே இந்த கமலா’ என்று நடராஜக்கு கோபம் வந்தது.”நீ படுத்துக்க கமலா.உனக்குத் தூக்கம் வருது.எனக்கு இப்போ தூக்கம் வரலே.என் மனசு சரியில்லே கமலா. நான் இந்த சோபாவிலே உக்காந்துக் கிட்டு இந்த குழந்தை கூட விளையாடிக் கிட்டு இருக்கேன்” என்று சொல்லி நடராஜன் மீண்டும் யோஜனையில் ஆழ்ந்தான்.நாம கமலா சொல்வது போக செஞ்சா இந்த குழந்தையை நிரந்தரமா இழந்து விட வேண்டியது தான்.அப்ப சாகும் போது ராணீக்கு நாம் கொடுத்த வாக்கு என்ன ஆவது.நான் உயிரோடு இருக்கும் போது என் குழந்தை ஒரு அனாதை இல்லத்திலா வளர்ந்து வர வேணும்’ என்று எண்ணும் போதே நடராஜனுக்கு அழுகை அழுகையாக வந்தது.விளையாடும் தன் குழந்தையையே பார்த்துக் கொண்டு இருந்தான் நடராஜன்.ராணீயின் ஜாடை அந்த குழந்தையிடம் முழுக்க முழுக்க இருந்தது.அவனுக்கு இந்த செல்வத்தை,இந்த பொக்கிஷத்தை, இழக்கவே மனம் இல்லை.

ஒரு மணி நேர தூக்கத்திற்குப் பிறகு கமலா ‘பெட் ரூமை’ விட்டு வெளியே வந்து பார்த்தாள். குழந்தை நடராஜன் மடியில் தூங்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்தாள்.உடனே கமலா “ஏங்க உங்க மடியிலேயே குழந்தயை தூங்கப் பண்ணி இருக்கீங்க. அவன் தூங்கினதும் கீழே விட்டு விட்டு நீங்க ‘·பிரீயா’ உக்காந்துக் கிட்டு இருக்கிறது தானேங்க” என்று சொல்லி குழந்தையை அவன் மடியில் இருந்து எடுத்து கீழே விட்டு விட்டு ஒரு போர்வையைப் போர்த்தினாள் கமலா.நடராஜன் உடனே தன்னை சமாளித்துக் கொ¡ண்டு “இல்லே கமலா,நான் ஏதோ யோசிக்கிட்டு இருந்தேன்.குழந்தை என் மடியிலே தூங்கினதையே நான் கவனிக்கலே கமலா” என்று ஒட்டாத ஒரு காரணத்தை சொன்னான் நடராஜன்.அவன் சொன்ன காரணத்தை கமலா ஏத்துக் கொண்டு இருக்க மாட்டா என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்‘இவருக்கு தெரியாமலா குழந்தை தூங்கி இருக்கும்.இவரே அவனை தன் மடியில் விட்டுக் கிட்டு தூங்க வச்சு விட்டு இப்படி ஒரு பொய்யைச் சொல்றாரே’ என்று எண்ணி தன் மனதில் கமலா சிரித்துக் கொண்டே போய் தன் முகத்தை கழுவிக் கொண்டு சமையல் ரூமுக்குப் போனாள். ‘குழந்தை மேல் அவ்வளவு ஆசை இருக்குது அவருக்கு’ என்று மட்டும் புரிந்துக் கொண்டாள் கமலா தனக்கும் நடராஜனுக்கும் சூடா கா·ப்பி போட்டுக் கொண்டு வந்து நடராஜனிடம் கா·ப்பி டவரா டம்ளரைக் கொடுத்தாள் கமலா.நடராஜன் கா·ப்பியை ஆற்றி நிதானமாக ரசித்துக் குடித்தான்கூடவே கமலாவும் அவன் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு கா·ப்பியைக் குடித்துக் கொண்டு இருந்தாள் சற்று நேரத்தில் குழந்தை எழுந்து விடவே கமலா குழந்தைக்குப் பாலும் பிஸ்கெட்டும் கொடுத்தாள்.

காப்பியைக் குடித்து விட்டு ”கமலா,நீ வேலைக்குப் போய் விட்டா உனக்கு இந்த குழந்தையை வளக்கறது கஷ்டமா இருக்கும்ன்னா நான் என் அம்மா அப்பாவை இங்கே வந்து இருந்து இந்த குழந்தையை கவனிச்சுக்கச் சொல்றேன்.என் அப்பாவும், என் அப்பாவும் இந்த குழந்தையை நிச்சியம் கவனிச்சுப்பாங்க.நீ வேலைக்கு நிம்மதியா போய் வரலாம்.என்ன சொல்றே கமலா.என்று மெல்ல சொல்லிப் பார்த்தான் நடராஜன்.உடனே “அவங்க நிச்சியம் வேணாங்க.நீங்க அவங்களை தயவு செஞ்சிக் கூப்பிடாதீங்க. அவங்க வயசானவங்க.உங்க அப்பாவுக்கு கால் வேறு சரியில்லே.தவிர நாம இருக்கிறது ரெண்டாம் மாடி.ஒரு அவசரம்ன்னா அவங்க கீழே போறது ரொம்ப கஷ்டங்க. அவங்க குழந்தையே கவனிச்சுக்க ரொம்ப சிரமப் படுவாங்க.அவங்களேயே கவனிச்சி கிட்ட வர ஒருத்தர் இருக்க வேண்டிய இந்த வயசிலே அவங்களை இங்கே வரச் சொல்றது சரியே இல்லீங்க.சில மாசம் போனதும் அவங்க இந்த குழந்தையை கவனிச்சுக்க முடியலைன்ன்னு சொன்னாங்கன்னா,பிறவு நான் தான் என் வேலையை விட்டு விட்டு இந்த ‘வேலைக்காரி குழந்தையை’ காலம் பூராவும் நான் கவனிச்சுக் கிட்டு வரணும்.இப்பவே நாம சரியான முடிவு எடுக்கணுங்க” என்று சொல்லி நிறுத்தினாள் கமலா.”நீயும் வேலைக்குப் போகணும்.எங்க அம்மா அப்பாவாலேயும் இங்கே வந்து இந்த குழந்தையை வளத்து வர முடியாது.அப்படின்னா இந்த குழந்தையை நாம எப்படி கமலா வளக்கறது.இந்த குழந்தை நம்ம கிட்டேயே வளரனும்ன்னு நான் ரொம்ப ஆசைப் படறேன் கமலா.இதுக்கு ஒரு நல்ல வழியே நீயே சொல்லி கமலா” என்று கெஞ்சாக் குறையா கமலாவைக் கேட்டான் நடராஜன்

“ஏங்க ஒரு வேளை ‘அந்த கல்யாணம் ஆனவருக்கு’ ராணீ செத்துப் போன விஷயம் தெரிய வந்து இந்த குழந்தையை இங்கே வந்து கேட்டா நாம் இந்த குழந்தை யை அவர் கிட்டே குடுக்க வேண்டி இருக்குமே.இல்லீங்களா” என்று கேட்டாள் கமலா.“ஆமா கமலா,நீ சொல்றது நியாயமா இருக்கு.நான் இல்லேன்னு சொல்லலே. ஆனா அந்த கல்யாணம் ஆனவர் ராணீ கர்ப்பம் ஆகி விட்டான்னு தெரிஞ்சதும் அவளை நிராதரவா விட்டுட்டு எங்கோ போய் விட்டாரே.ராணீயும் பாவம் தன் ஊர் திண்டி வனத்துக்குப் போய் இந்த குழந்தையை பெத்துக் கிட்டு இங்கே வந்து ஒரு ஐந்து மாசமா வேலை வேறு செஞ்சி கிட்டு வரா கமலா.இது வரைக்கும் வராத அந்த ஆள் இனிமே இங்கு வரமாட்டாரு ன்னு தோணுது.இங்கே வந்து அவர் இந்த குழந்தையைக் கேப்பார்ன்னு எனக்கு தோணலே கமலா.நீ வீணா கவலைப் படறே” சாவும் போது ராணீக்கு சத்தியம் பண்ணிக் குடுத்தோம். அதை நான் காப்பாத்தணும்ன்னு தான் என் மனசு சொல்லுது.குடுத்த சத்தியத்தை என்னால் பண்ணாமல் இருக்க என் மனம் இடம் குடுக்கலே கமலா அதனால் நீ தான் எனக்கு ஒரு நல்ல வழியைச் சொல்லணும் கமலா ப்ளீஸ்” என்று சொல்லி கெஞ்சினான் நடராஜன்.சற்று நேரம் கழித்து “எனக்கு ஒரு வழியும் தெரியலேங்க.இவனை ஒரு நல்ல அனாதை இல்லத்திலே சேக்கறது தாங்க எனக்கு தெரிஞ்ச ஒரே வழி.நாம ரெண்டு பேரும் அடிக்கடிப் போய் அந்த குழந்தையைப் பாத்துட்டு வரலாம்ங்க.இந்த குழந்தை க்கு நாம நிறைய ‘டிரஸ்’,பா¢சுங்க எல்லாம் வாங்கித் தரலாம்ங்க” நீங்க என்ன சொல்றீங்க” என்று பழைய பாட்டையே பாடினாள் கமலா.”ராத்திரிக்கு நான் என்ன ‘டி·பன்’ நான் பண்ணட்டுங்க.நீங்க சொல்லுங்க. உங்களுக்கு பிடிச்ச ‘டி·பனா’ நான் இன்னைக்குப் பண்றேனுங்க”என்று நடராஜனைக் கேட்டாள் கமலா.“நீ எது பண்ணாலும் சரி கமலா.நீ எது பண்ணாலும் நல்லாவே இருக்கும்.நான் விரும்பி சாப்பிடுவேன்” என்று மொட்டையாக சொன்னான்.

“நான் பூரி மசாலும்,வெஜிடபிள் பிரியாணியும் பண்ணி ,தயிர் சாதமும் செய்யறே ங்க.வூட்லே உருளைகிழங்கு சிப்ஸ் இருக்கு.அது போதுமாங்க.சரியா இருக்குமாங்க. .இல்லே இன்னும் ஏதாச்சும் செய்யட்டுமாங்க” என்று கேட்டாள் கமலா.”வொ¢ குட் கமலா.‘நைட் டயத்துக்கு’ இந்த ‘ஹெவி டி·பன்’ போதும் கமலா.எனக்கு ‘ஓ.கே’” என்று சொல்லி விட்டு மறுபடியும் குழந்தையை பற்றி சொல்லி வந்தான்.சமையல் ரூமில் இருந்து வெளியே வந்தாள் கமலா.அவள் சற்று கோபமாக “என்னங்க நீங்க,நான் முடியாதுன்னு இத்தனை தடவை சொல்லியும்,நீங்க திரும்ப திரும்ப இந்த குழந்தையை ‘நாமே வளக்கலாம்’ ‘நாமே வளக்கலாம்’ன்னு சொல்லி பிடிவாதம் பிடிக்கிறீங்க.அப்படி என்னங்க இந்த குழந்தை மேலே உங்களுக்கு இவ்வளவு அக்கறைங்க.எனக்குப் புரியலைங்க” என்று கேட்டு அவன் முகத்தையே உற்றுப் பார்த்தாள் கமலா.அவன் உள் மனது ‘ஆமாம் நான் உனக்கு உண்மை காரணத்தை சொன்னா மட்டும்,நீ இந்த குழந்தையை வளக்க சம்மதம் தரப் போறயா என்ன.தவிர நான் உண்மை காரணத்தை சொன்னா நீ குழந்தையை வளக்க ஒத்துக் கொள்ளப் போவதும் இல்லே, ராணீயுடன் எனக்கு இருந்த தவறான உறவும் உனக்கு தெரிய வரும். அப்படி உனக்கு இந்த ‘ரகசிய கள்ள உறவு’ தெரிய வந்தா நீ இன்னும் என் மேல் அதிகமாக கோவப் படத்தான் போறே’ என்று மேலே நினைத்து ஒன்றும் சொல்லாமல் சும்மா இருந்து விட்டான் நடராஜன்.கமலா பதில் ஒன்னும் சொல்லாமல் சமையல் வேலையை கவனிக்கப் போய் விட்டாள்.

சற்று கழித்து சமையல் அறையை விட்டு வெளியே வந்த கமலா “உங்க கிட்டே வேறு ஏதோ காரணம் இருக்கும்ன்னு எனக்கு தோணுதுங்க.இல்லீன்னா நீங்க இப்படி பிடிவாதம் பிடிக்கமாட்டீங்க. நான் இவ்வளவு வருஷமா உங்க கிட்டே குடித்தனம் பண்ணி வரேனுங்க.நீங்க பிடிவாதம் பிடிக்கிற ஆம்பிளையே இல்லிங்க.சொல்லுங்க.அது என்ன காரணங்க” என்று விடாமல் கேட்டாள் கமலா. நடராஜன் ஒன்னும் சொல்ல வில்லை.கமலாவுக்கு பொறுமை இல்லை.’இனிமே நான் கேக்க மாட்டேங்க .நீங்க உண்மை காரணத்தை சொன்னா சொல்லுங்க,சொல்லாட்டி போங்க’ என்று மனதில் சொல்லிக் கொண்டு கமலா மறுபடியும் சமையல் ரூமுக்குப் போய் விட்டாள்.

“சமையல் எல்லாம் சூடா இருக்குங்க.இந்த சாப்பாட்டை நல்லா சூடா சாப்பிட் டாத் தாங்க நல்ல சுவையா இருக்கும்.சாப்பிடலாம் வா£ங்களா.இல்லை இன்னும் யோஜனை பண்ண நேரம் வேணுமா உங்களுக்கு” என்று நடராஜனை கிண்டினாள் கமலா.“நான் ரெடி கமலா.நாக்கிலே தண்ணி ஊறுது. நீ எப்போ கூப்பிடுவே ன்னு ன்னு தான் நான் காத்து இருக்கேன் கமலா” என்று சொல்லி வழிந்தான் நடராஜன்.இருவரும் நன்றாக சாப்ப்ட்டார்கள். ”கொஞ்சம் பளிச்சுன்னு பேசுங்க.நானும் பாத்துக்கிட்டு தாங்க இருக்கேன்.இந்த ரெண்டு நாளா எந்த கோட்டையையோ பிடிக்க ‘ப்ளான்’ பண்ற மாதிரி எப்ப பாரு எதையோ யோஜனை பண்ணிகிட்டே இருக்கீங்க.நான் உங்க மணைவிங்க. வேறு யாரோ இல்லைங்க.இந்த குழந்தையே ஏன் நாமே தான் வளக்கணும்.ஏன் இந்த குழந்தயை ‘அனாதை இல்லத்திலே’ விடக் கூடாதுன்னு நீங்க பிடிவாதம் பிடிக்கிறீங்கன்னு எனக்கு நீங்க சரியான காரணத்தை சொல்லுங்க” என்று நடராஜனை விடாமல் கேட்டாள் கமலா.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *