ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 28, 2021
பார்வையிட்டோர்: 3,040 
 

அத்தியாயம்-22 | அத்தியாயம்-23 | அத்தியாயம்-24

வரதன் விடாமல் “ராஜம் அவ படிக்கறது ரொம்ப கஷ்டமான படிப்பு.அவ படிச்சு ஒரு கலெக்டர் ஆனா நம்ம குடும்பத்துக்கு தானே பெருமை.அவ படிச்சுண்டு வரட்டுமே” என்று சொல்லி முடிக்க வில்லை ராஜம் “நீங்க பாட்டுக்கு உங்க வேலேயே கவனிச்சுண்டு வாங்கோ.உங்களாலே எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லே.எல்லாம் பொம்மணாட்டிகள் செஞ்சு வர வேண்டிய வேலே.உங்க ‘ரெகமண் டேஷன்’ ரமாவுக்கு வேணாம்” என்று சொல்லி அவர் வாயை மூட வைத்தாள்.

‘இனிமே நமா படிச்சுண்டு இருக்க முடியாது’ என்று நினைத்து உடனே ரமா “சரிம்மா இதோ நான் வறேன்”என்று சொல்லி விட்டு மாமியார் கொடுத்த வேலையை பண்ண ஆரம்பித்தாள்.அவள் மனசு ‘அவர் படின்னு தான் சொல்றார்,மாமனாரும் படிக்கட்டும்,அந்த படிப்பு ரொம்ப கஷ்டம்ன்னு சொல்றாரு.ஆனா இந்த மாமியார் தான் நான் அவ கூட, மாட ஆத்து வேலையை பண்ணணும் சொல் றாளே’ என்று நினைத்து வருத்தப் பட்டது.

இரவு வீட்டுக்கு வந்ததும் ரமா காலையிலே நடந்த எல்லாவற்ரையும் சுரேஷிடம் இன்று விடா மல் சொன்னாள்.சுரேஷ் மிகவும் வருத்தப் பட்டான்.கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணினான்.

“ரமா,என்னோட அம்மா நீ ‘பாமிலி வே’லே வராம இருந்த உன்னே வேலைக்குப் போக சொல் லி படிக்க ‘அலவ்’ பண்ணீ இருக்க மாட்டா.நீ ஆத்லே சும்மா இருகிறதாலே,அம்மாவுக்கு தான் ஒரு மாமியார் என்கிறதே காட்டிக் கொள்ளணும் ஆசைப் படறா.என்ன பண்றது.நீஅம்மா சொல்ற வேலே யே பண்ணிட்டு நேரம் கிடைக்கும் போது நீ படிச்சு வா.ராத்திரி கொஞ்ச நேரம் படி.இதே தவிர என க்கு ஒரு வழியும் தெரியலேயே” என்று சொன்னான்.

ரமா “நீங்க சொன்னா மாதிரி நான் அம்மாவுக்கு ‘ஹெல்ப்’ பண்ணிண்டு வறேன்.நல்ல வேளே எனக்கு மாசம் ஆயிட்டா என்னாலே காரியம் பண்ண முடியாதுன்னு அம்மா ஒத்துண்டு இருக்கா.அது வரைக்கும் பரவாயில்லே.நான் பாத்துக்கறேன்.நீங்கோ கவலைப்படதீங்கோ” என்று சொல்லி சுரேஷூ க்கு சமாதானம் சொன்னாள்.

ரமா மாமியார் சொன்ன வேலைகளை எல்லாம் பண்ணி விட்டு,பகலில் நேரம் கிடைக்கும் போது ம்,இரவு நேரத்திலேயும் தன் பாடங்களை எல்லாம் படித்து வந்தாள்.
ராமாவுக்கு எட்டு மாசம் ஆனதும் ராஜம் ஆத்து வாத்தியாரை ரமா சீமந்தத்திற்கு ஏற்பாடு பண் ணி ராமநாதனுக்கும் மங்களத்துக்கும் போனில் சொன்னாள்.
உடனே அவர்கள் இருவரும் சந்தோஷப் பட்டு “நாங்க ரமாவுக்கு வளைகாப்புக்கு வேண்டிய புடவைகளையும் வளையல்களையும் வாங்கிக் கொண்டு வருவதாக சொல்லி ‘போனை’க் ‘கட்’ பண்ணீனார்கள்.

உடனே ராஜம் தன் அவள் தம்பிக்கு போன் பண்ணீ அவன் பங்களாவை ஒரு பத்து நாளைக்கு கேட்டாள்.

ராஜம் தம்பி ராமசாமி சந்தோஷப் பட்டு “அக்கா நீ ஒரு சந்தோஷ சமாசாரத்துக்குத் தானே என் பங்களவே கேக்கறே.நான் மாட்டேன்னு சொலுவேனா.நீ தாராளமா என் பங்களாவே அப்போ எடுத் துக்கோ.நானும் நளினியும் வெளியிலே ஒரு ஹோட்டல்லே தங்கி இருந்து,ரமா சீமந்தத்தை ‘அட்டெ ன்ட் பண்ண வறோம்.’அட்வான்ஸ் கங்கிராஜுலஷன்ஸ்’.நீ சீக்கிரமா ஒரு பாட்டி ஆகப் போறே” என்று சொல்லி கலாட்டா பண்ணி விட்டு ‘போனை’ ‘கட்’ பண்ணினான்.

சீமந்தத்திற்கு ரெண்டு நாள் முன்னதாக ராஜம் தம்பியின் பங்களாவுக்கு வந்து செட்டில் ஆனாள்.

ராமநானையும்,மங்களத்தையும் சுரேஷூம், ரமாவும் டெல்லி ஸ்டேஷனுக்குப் போய் அழைத்துக் கொண்டு அந்த பங்களாவுக்கு வந்தார்கள்.

சீமந்த தினத்தன்று காத்தாலே மங்களம் ராஜம் சீம்மந்ததிற்கு அழைத்து இருந்த எல்லா ‘லேடீ ஸ்களுக்கும்’ அவள் வாங்கி வந்த கண்ணாடி வலையல்களை எல்லாம் கொடுத்து போட்டுக் கொள்ளச் சொன்னாள்.ரமாவுக்கு நிறைய கண்ணாடி வளையல்களையும்,அவன் வாங்கி வந்த ரெண்டு ஜதை கருகுமணி வளையல்களையும் போட்டு அழகு பார்த்தாள் மங்களம்.

ராஜம் மங்களத்தைப் பார்த்து “நீ வாங்கி வந்து இருக்கும் கருகுமணி தங்க வளையல்கள் ரமா வுக்கு ரொம்ப நன்னா இருக்கு” என்று புகழ்ந்தாள்.சீமந்ததிற்கு வந்து இருந்த ரெண்டு ‘லேடீஸ்’ ரமா வுக்கு ‘திருஷ்டி’ கழித்தார்கள்.

வாத்தியார் வந்து ‘கிரமமாக’ ரமா சுரேஷூக்கு ‘சீமந்தத்தை’ பண்ணி வைத்து விட்டு,சக வாத்தி யார்களுடன் சமையல்கார மாமா செய்து இருந்த கல்யாண சமையலை ரசித்து சாப்பிட்டு விட்டு,வரத ன் கொடுத்த வெத்திலை,பாக்கு,தக்ஷணையை வாங்கிக் கொண்டு போனார்.பறகு சீமந்ததிற்கு வந்து இருந்த எல்லோரும் சமையல் கார மாமா பண்ணீ இருந்த கல்யாண சாப்பாடை ரசித்து சாப்பிட்டு விட்டு போனார்கள்.

ராமநாதனுக்கும் மங்களத்துக்கும் தங்கள் பெண்ணீன் சீமந்தம் நல்லபடியாக முடிந்ததை நினை த்து சந்தோஷப் பட்டார்கள்.

மங்களம் ராஜத்தைப் பார்த்து “மாமி,ரமாவுக்கு மாசம் ஆயிடுத்து.நாங்க அவளே எங்க கூடவே அழைச்சுண்டு சென்னைக்குப் போறோம்.அவ அப்புறமா தனியா சென்னைக்கு வர கஷ்டப்பட வே ணாமே.நாங்க எங்க துணையோடு அவளே அழைச்சுண்டு போகட்டுமா” என்று தயங்கிக் கொண்டே கேட்டாள்.

ராஜம் கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணினாள்.

’இந்த மாமி கேக்கறா மாதிரி நாம ரமாவை அனுப்பிட்டா நல்லது.அப்புறமா சுரேஷ் தானே லீவு போட்டு ரமாவை அழைச்சுண்டு சென்னைக்குப் போகணும்.இப்ப மங்களம் கேக்கறா மாதிரி ரமாவை அனுப்பிட்டா சுரேஷூம் வீணா லீவு போட வேணாம்.வீண் செலவும் இருக்காது’ என்று முடிவு பண் ணீ ”சரி,மாமி,நீங்கோ ரமாவே உங்க கூடவே அழைச்சுண்டு போங்கோ.அவளுக்கு சுகப் பிரசவம் ஆனவுடனே,எங்களுக்குப் ‘போன்’ பண்ணுங்கோ.நாங்க மூனு பேரும் சென்னைக்கு கிளம்பி வந்து குழந்தைக்கு ‘தொட்டில் போடற ‘பன்ஷனை’யும்,பேர் வக்கிற ‘பன்ஷனை’யும்,‘அடெண்ட்’ பண் ணிட்டு வறோம்” என்று சொன்னாள்.உடனே ராமநாதன் “நான் நிச்சியமா ரமாவுக்கு ‘சுகப் பிரசவம்’ ஆனவுடனே உங்களுக்கு ‘போன்’ பண்ணி அந்த சந்தோஷ சமாசாரத்தே சொல்றேன்” என்று சொன்னார்.

அடுத்த நாளே சுரேஷ் மூனு பேருக்கும் GT.’எக்ஸ்பிரஸ்ஸில் முதல் வகுப்பில் மூனு ‘சீட் புக்’ பண்ணினான்.குறிப்பிட்ட நாளில் எல்லோரும் ரெண்டு காரில் டெல்லி ஸ்டேஷனுக்கு வந்தார்கள். ரெண்டு சம்மந்திகளும் ‘பரஸ்பரம்’ எதோ பேசி கொண்டு இருந்தார்கள்.சுரேஷூம், ரமாவும் கொஞ்சம் தள்ளிப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.’இன்னும் கொஞ்ச நேரத்லே இந்த வண்டி கிளம்பிடுமே.அப்பு றமா நாம தனியா இருந்துண்டு வரணுமே’ என்று இருவரும் நினைத்து வருத்தப் பட்டு கொண்டு இருந்தார்கள்.

சுரேஷ் “ரமா,உன் உடம்பே ஜாக்கிறதையா கவனிச்சுண்டு வா.சாயங்காலத்லே கொஞ்சம் நட ந்துண்டு வா.நன்னா சாப்பிட்டுண்டு வா.உனக்கு ‘பெயின்’ வந்ததும் உன் அம்மா கிட்டே உடனே சொல்லி ‘ஹாஸிடலுக்கு’ போ.அசட்டையா இருந்து வறாதே” என்று ‘அட்வைஸ்’ கொடுத்தான்.ரமா “நீங்கோ கவலைப் படாம இருந்துண்டு வாங்கோ.நான் என்னே ஜாக்கிறதையா கவனிச்சுண்டு வறேன் டெல்லியிலே நீங்கோ ஜாக்கிரதையா இருந்துண்டு வாங்கோ.சதா தான் உங்க ஞாபகமாகவே இருப் பேன்.அடிக்கடி எனக்கு ‘போன்’ பண்ணுங்கோ.உங்க குரலே கேக்க எனக்கு சந்தோஷமா இருக்கும்” என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள்.

சுரேஷ் “நான் நிச்சியமா உனக்கு தினமும் ‘போன்’ பண்றேன் ரமா.நீ எந்த கவலையும் படாம இருந்து வா” என்று சொல்லி கொண்டு இருக்கும் போது வரதன் “சுரேஷ்,வண்டி கிளம்ப இன்னும் ஐஞ்சு நிமிஷம் தான் இருக்கு,ரமா மெல்ல வண்டிலே ஏறிக்கட்டும்.அவ மாசமா இருக்கா” என்று சொ ன்னதும்,ரமா சுரேஷ் கையை விட்டு பிரிய இஷ்டம் இல்லாமல் தன் கையை மெல்ல விடுவித்துக் கொ ண்டு வண்டியில் ஏறிக் கொண்டாள்.

வண்டி கிளம்பினதும் சுரேஷ் தலை மறைகிற வரைக்கும் ரமா தன் கையை ஆட்டிக் கொண்டு இருந்தாள்.ராஜமும்,வரதனும் சுரேஷூம் தங்கள் கையை ஆட்டிக் கொண்டு இருந்து விட்டு வண்டி ரொம்ப தூரம் போனதும் கிளம்பி பங்களாவுக்கு வந்தார்கள்.

அடுத்த நாளே ராஜம் தன் வீட்டுக்கு வந்து விட்டாள்.

சென்னையில் ரமா தன் உடமபை ஜாக்கிறதையாக பார்த்துக் கொண்டு வந்துக் கொண்டு இருந் தாள்.சுரேஷ் தினமும் ரமாவுடன் ‘போனி’ல் பேசிக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தான்.அப்படி பேசும் போது ரமா தான் சௌக்கியமா இருந்துக் கொண்டு வருவதாகவும்,சுரேஷ் சௌக்கியத்தையும் அவருடைய அப்பா, அம்மா சௌக்கியத்தையும் விசாரித்து வந்தாள்.

ரமாவுக்கு பிரசவ வலி வந்ததும் மங்களம் ரமாவை ஒரு பெரிய ‘நர்ஸிங்க் ஹோமில்’ பிரசவததிற் காக சேர்த்தாள்.ஐந்து மணி நேரம் ஆனதும் ‘லேபர் வார்ட்டில்’ இருந்து ஒரு ‘நர்ஸ்’ வெளியே வந்து “அவங்களுக்கு சுகப் பிரசவம் ஆயி,ஒரு ஆண் குழந்தை பொறந்து இருக்கு.நான் மறுபடியும் வந்து சொல்லும் போது,நீங்க அவங்களேயும் குழந்தையையும் பாக்கலாம்” என்று சொல்லி விட்டு போனாள்.

‘நர்ஸ்’ மறுபடியும் வந்து சொன்ன போது மங்களமும் ராமநாதனும் ‘லெபர் வார்டு’க்குப் போய் ரமாவையும் குழந்தையையும் பார்த்தார்கள்.குழந்தை ரொம்ப அழகாக இருந்தது.ராமநாதனும் மங்கள மும் ரமாவைப் பார்த்து “ரமா,உனக்கு ஒரு புருஷக் குழந்தே பொறந்து இருக்கு.குழந்தே ரொம்ப அழகா கலரா பொறந்து இருக்கான்.எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று ‘கோரஸாக’ச் சொன்னார்கள்.அப்பா அம்மா சொன்னதைக் கேட்டு ரமா சந்தோஷப் பட்டாள்.

ரமா ‘தன் மாமியார் இஷ்டப் பட்டது போல தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து இருப்பதை’ நினைத்து மிகவும் சந்தோஷப் பட்டாள்.

மங்களமும் ராமநாதனும் ‘நர்ஸிங்க் ஹோமில்’ இருந்தே டெல்லியிலே இருக்கும் சம்மந்திக்கு ‘போன்’ பண்ணீ “ரமாவுக்கு இன்னிக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு ஒரு ஆண் குழந்தை பொறந்து இருக்கு.குழந்தே நல்ல கலரா அழகா இருக்கான்.ரமாவும் குழந்தையும் சௌக்கியமா இருக்கா.நீங்க மூனு பேரும் தொட்டில் போடற ‘பன்ஷனுக்கும்’ அடுத்த நாள் பேர் வக்கிற ‘பன்ஷனு’க்கும் வந்து போகனும்” என்று மா¢யாதையாக அழைத்தார்.மங்களம் ரகுராமனுக்குப் ‘போன்’ பண்ணி ரமாவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து இருக்கும் சந்தோஷ சமாசாரத்தை சொல்லி,அவனை பத்தாம் நாள் பதி னோறாம் நான் நடக்கும் விழாவுக்கு ரெண்டு பேரையும் வரச் சொன்னாள்.உடனே ரகுராமன் ”அக் கா,அம்மா ரொம்ப தள்ளாமையா இருந்து வறா.அம்மாவை அழைச்சுண்டு சென்னைக்கு வறது ரொம்ப கஷ்டமா இருக்கும்.எனக்கும் லீவு கிடைக்கறது ரொம்ப சிரமமா இருக்கும்.எங்களே மன்னிச்சிடு” என்று சொல்லி ’போனை’க் ‘கட்’ பண்ணினான்.

ராஜம் மிகவும் சந்தோஷப் பட்டு ”எங்களுக்கு பேரன் பொறந்து இருக்கான்னு கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.நாங்க மூனு பேரும் அவசியம் ரெண்டு ‘பன்ஷனுக்கும்’ வந்துட்டுப் போறோம்” என்று சொல்லி ‘போனை’க் ‘கட்’ பண்ணிணாள்.

‘நர்சிங்க் ஹோமில் ரெண்டு நாள் ரமா குழந்தையுடன் இருந்தாள்.பிரசவம் பார்த்த டாக்டர் ‘பர்மி ஷன்’ கொடுத்ததும் மங்களமும் ராமநாதனும் ரமாவையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்து வந் தார்கள்.சுரேஷ் தினமும் காலையிலேயும் மாலையிலேயும் ரமாவிடம் ‘போனி’ல் பேசிக் கொண்டு வந்து ரமா உடம்பு பற்றியும் குழந்தை உடம்பு பற்றியும் விசாரித்துக் கொண்டு இருந்தான்.

ராஜமும்,வரதனும் சுரேஷூம் குழந்தை பிறந்த பத்தாவது நாள் அன்று சென்னைக்கு வந்து, ராமநாதன் வீட்டுக்கு வந்தார்கள்.ராமநாதனும் மங்களமும் அவர்களை வரவேற்று வீட்டுக்கு உள்ளே அழைத்துப் போனார்கள்.மூவரும் குழந்தையைப் பார்த்தார்கள்.ஒரு வாய் வைத்தார் போல் மூன்று பே ரும் ‘குழந்தை ரொம்ப அழகா,கலரா,பொறந்து இருக்கான்’ என்று சொன்னதும் ரமாவும்,மங்களமும், ராமநாதனும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

ராஜம் ரமாவைப் பார்த்து “நான் கேட்டா மாதிரியே நீ எனக்கு ஒரு பேரனைப் பெத்து குடுத்து இருக்கியே.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொன்னதும் வரதன் “ராஜம் உனக்கு மட்டு மா சந்தோஷமா இருக்கு.எனக்கும்,சுரேஷூக்கும் கூட ரொம்ப சந்தோஷமாத் தான் இருக்கு” என்று சொல்லி தன்னையும் சுரேஷையும் ராஜத்தின் சந்தோஷத்தில் சேர்த்துக் கொண்டார்.எல்லோரும் குழந்தைக்கு ‘தொட்டில் போடும் விழாவை’ நன்றாகக் கொண்டாடி விட்டு இரவு சமையல் காரர் சமை த்து இருந்த கல்யாண சாப்பாட்டை சாப்பிட்டார்கள்.

அடுத்த நாள் வாத்தியார் ராமநாதன் வீட்டுக்கு வந்து வீட்டை ‘புண்யாவசனம்’பண்ணீ விட்டு , “குழந்தைக்கு நாம கரணம் பண்ணனுமே என்ன பேர் வைக்கப் போறேள்” என்று கேட்டவுடன், ராஜம் “வாத்தியார் குழந்தைக்கு ’கிரண்’ என்று பேர் வையுங்கோ”என்று சொன்னவுடன் வாத்தியார் குழந் தைக்கு அந்தப் பேரை ‘நாமகரணம்’ பண்ணி வைத்து விட்டு அவருடைய தக்ஷணையை வாங்கிக் கொண்டுப் போனார்.

ரமாவுக்கு ‘கிரண்’ என்கிற பேர் ரொம்ப பிடித்து இருந்தது.அவள் உடனே சுரேஷைப் பார்த்து ரகசியமாக ”குழந்தைக்கு ரொம்ப நல்ல பேரா வச்சு இருக்கா அம்மா.எனக்கு இந்த பேர் ரொம்ப பிடிச்சு இருக்கு” என்று சொன்னாள்.சுரேஷ் சந்தோஷப் பட்டான்.’பன்ஷனு’க்கு வந்து இருந்த அனைவரும் சமையல் காரர் பண்ணி இருந்த கல்யாண சாப்பாட்டை மிகவும் ரசித்து சாப்பிடார்கள்.

ஒரு நாள் இருந்து விட்டு சுரேஷ் ரமாவைப் பார்த்து ரமா “எனக்கு சீக்கிரமா டெல்லிக்குப் போக ணும்.ஆபீஸ்லே ரொம்ப வேலே இருக்கு.நான் அடிக்கடி உன் கூட ‘போனில்’ பேசி உன் உடமபைப் பத்தியும்,குழந்தை உடமபைப் பத்தியும் விசாரிச்சுண்டு வறேன்.நான் இன்னும் நாலு நாள் இல்லையே ன்னு நினைச்சுக்காதே” என்று ரமாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.

அவன் பேச்சில் ஒரு ஏக்கம் தெரிந்தது.

”சரி,நீங்கோ போயிட்டு வாங்கோ.ஆனா என் கிட்டே தினமும் ‘போன்லே’ மறக்காம பேசிண் ண்டு வரணும் சரியா” என்று சொன்னதும் சுரேஷ் “சரி ரமா, நான் தினமும் பேசிண்டு வறேன்.நீ நிம்ம தியா இருந்துண்டு,குழந்தை உடம்பையும்,உன் உடமபையும் ஜாக்கிறதையா கவனிச்சுண்டு வா” என்று சொன்னதும் ரமா ஒத்துக் கொண்டு சுரேஷூக்கு பிரியா விடைக் கொடுத்தாள்.

அடுத்த நாள் ராஜம்,அவள் கணவன்,சுரேஷ் மூன்று பேரும் டெல்லிக்கு வந்து சேர்ந்தார்கள்.

சொன்னது போலவே சுரேஷ் தினமும் ரமாவிடம் ‘போனில்’ பேசி குழந்தை உடம்பையும்,ரமா உடமபையும் விசாரித்துக் கொண்டு இருந்தான்.

மங்களம் ரமாவையும் குழந்தையையும் ஜாக்கிரதையாக கவனித்து வந்து ரமாவுக்கு ‘சின்ன குழ ந்தேயே எப்படி தூங்க வைப்பது,எப்படி குளிப்பாட்டுவது,எப்படி வைத்துக் கொண்டு தூங்கப் பண்ணு வது’ போன்ற எல்லா விஷயங்களையும் கற்றுக் கொடுத்தாள்.குழந்தை பிறந்து நாலு மாசம் ஆனதும்,மங்களமும்,ராமநாதனும் ஒரு நல்ல நாள் பார்த்து,ரமா வையும்,குழந்தையையும்,சுரேஷூடன் டெல்லிக்கு அனுப்பி வைத்தார்கள்.

டெல்லியில் ராஜமும் வரதனும் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு வந்து சந்தோஷமாக இருந்து வந்தார்கள்.ரமா அம்மா சொல்லிக் கொடுத்தப் படி,கிரணை ஜக்கிறதையாக வளர்த்து வந்தாள்

கிரணுக்கு ஒரு வயசு ஆனதும் ராஜம் கிரணுக்கு ‘ஆயுஷ்ஹோமமும்,அப்த பூர்த்தியும்’பண்ண நினைத்து ஆத்து வாத்தியாருக்கு ‘போன்’ பண்ணிச் சொன்னாள்.அவர் ஒத்துக் கொண்டு செய்து தருவதாக சொன்னார்.ராஜம் சென்னைக்குப் ‘போன்’ பண்ணி ‘ஆயுஷ்ஹோமமும்,அப்த பூர்த்தியும்’ நடக்கும் தேதியை சொன்னாள்.அவர்கள் இருவரும் அந்த விழாவுக்கு நிச்சியமாமக் வருவதாகச் சொ ன்னார்கள்.

குறிப்பிட்ட தினத்தில் ராமநாதனும்,மங்களமும் டெல்லிக்கு வந்தார்கள்.கிரணுக்கு ‘ஆயுஷ் ஹோமமும்,அப்த பூர்த்தியும்’ மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. ரமாவுடனும்,கிரணுடனும் ரெண்டு நாள் சந்தோஷமாக இருந்து விட்டு சென்னைக்குத் திரும்பினார்கள் ராமநாதனும், மங்களமும்.
மூன்று மாதம் ஆயிற்று.

அன்று ஞாயிற்றுக் கிழமை.

ராஜம் ரமாவைப் பார்த்து “ரமா,கிரணுக்கு ‘ஆயுஷ்ஹோமமும்,அப்த பூர்த்தியும்’ பகவான் புண் ணீயத்தாலே நல்லபடி நடந்து இருக்கு.நானும் அவரும் குழந்தையை பாத்துக்கறோம்.நீ ஒரு நல்ல வேலைக்கு ‘அப்ளை’ பண்ணீ,அது கிடைச்சதும் அந்த வேலைக்குப் போய் வா” என்று சொன்னதும் அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
‘என்னடா இந்த மாமியார் வேலைக்குப் போய் வா என்கிற பாட்டை மறுபடியும் பாட ஆரம்பிச்சு இருக்காளே.நாம எப்படி இந்த ‘சிவில் சர்விஸஸ்’ பரிக்ஷ எழுதப் போறோம்’என்று கவலைப் பட்டாள்.

அன்று இரவே ரமா அம்மா சொன்னதை சொல்லி ”அம்மா சொல்லும் போது நீங்களும் அங்கே தானே இருந்தேள்.நான் ‘சிவில் சர்விஸஸ்’ பரிக்ஷ எழுதணும்ன்னு உங்க கிட்டே எத்தனை நாளா சொல்லிண்டு இருக்கேன்.நீங்க உடனே ‘அம்மா அவ வேலைக்குப் போக வேணாம்மா.அவ நன்னா படிச்சி ‘சிவில் சர்விஸஸ்’ பரிக்ஷ எழுதட்டும்ன்னு சொல்லக் கூடாதா.வெறுமனே சும்மா நிண்டுண் டு தானே இருந்தேள்.உங்களுக்கும் நான் ‘சிவில் சர்விஸஸ்’ பரிக்ஷ எழுதறதுலே இஷ்டம் இல்லை யா.நான் வேலைக்குப் போய் சம்பதிக்கணும்ன்னு நீங்களும் ஆசைப் படறேளா.என் ஆசை எல்லாம் நிராசையா தான் போகப் போறதா.இந்த ஆத்லே நான் படிக்கவே முடியாதா” என்று சொல்லி சுரேஷின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.

உடனே சுரேஷ் ”ரமா,உன் படிப்புக்கு ‘சப்போர்ட்’ பண்ணி வந்த அப்பாவும் இப்போ ஒன்னும் சொல்லாம சும்மா இருந்துண்டு வறா.நான் ஒருத்தன் மட்டும் சொல்லி என் அம்மா மனசே எப்படி மாத்தப் போறேன்ன்னு எனக்கு தெரியாம திண்டாடறேன்.என்ன சொன்னாலும் என் அம்மா கேக்க மாட்டாளே ரமா.நீ கேக்கறதுக்கு நான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம முழிக்கறேன்.என்னை என்ன பண்ண சொல்றே ரமா.உனக்குக் குழந்தை இவ்வளவு சீக்கிரமா பொறந்து இருக்க வேணாம். பொறந்துடுத்து.பகவான் உன் பங்க்லே இல்லையே.நான் என்ன பண்ணட்டும் சொல்லு.என்னை மன் னிச்சிடு ரமா.நான் என்ன சொல்லியும் என் அம்மாவை மாத்தவே முடியாது” என்று சொல்லி ரமாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதான்.

உடனே ரமா ”எனக்கு வயசாயிடுத்து.எனக்கு இன்னும் ஒரு ‘அடெம்ட்’ தான் பாக்கி இருக்கு. நான் இந்த ‘அடெம்ட்லே’ ‘சிவில் சர்விசஸ்’ பரிக்ஷ எழுதி ‘பாஸ்’ பண்ணாட்டா,அப்புறமா நான் ‘சிவில் சர்விசஸ்’ பரிக்ஷ ஏழுதவே முடியாதே.நான் உங்க கிட்ட இதே பல தடவை சொல்லி இருக் கேனே.உங்க அம்மாவே மாத்த முடியாதுன்கிற காரணத்தாலே,நான் என் ஆசைகளை எல்லாம் நன் னா பொசுக்கிண்டு இந்த ஆத்லே இருந்துண்டு வரணுமா.என் ஆசையை இந்த ஆத்லே யாரும் புரிஞ் சுக்க மாட்டேங்கிறாளே.நான் என்ன பண்ணட்டும் சொல்லுங்கோ” என்று கேட்டு அழுதாள்.

ரமா கேட்டதற்கு பதில் ஒன்னும் சொல்லாமல் ரமாவின் கைகளை பிடித்துக் கொண்டு இருந் தான் சுரேஷ்.அவன் கண்களில் கண்ணீர் வந்துக் கொண்டு இருந்தது.
சுரேஷ் ஒன்றும் சொல்லாமல் சும்மா அழுதுக் கொண்டு இருந்ததை பார்த்த ரமாவுக்கு இப்போ து எல்லாம் நன்றாகப் புரிந்து விட்டது.

உடனே அவள் “நீங்கோ அழாதேள்.எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”என்று சொல்லி விட்டு யோஜனைப் பண்ணீக் கொண்டு இருந்தாள்.

அவளுக்கு ‘நாம ஆசை பட்ட கனவு பலிக்காம போய் விடுமோ’ என்ற பயம் வந்து விட்டது.

ராஜம் சொல்லி ஒரு வாரம் தான் ஆகி இருக்கும்.

ரமா ஒரு கடிதம் எழுத ஆரம்பித்தாள்.அந்த கடிதத்தில்:

“நான் கல்யாணம் பண்ணீண்டு வந்த நாள்ளே இருந்து உங்க மூனு பேர் கிட் டேயும் ரொம்ப மா¢யாதையா,அமொ¢க்கையா யார் மனசும் கோணாம நடந்துண்டு வந்து இருக்கேன்.’இவர்’ என்னை ‘சிவில் சர்விஸஸ்’ பரிக்ஷயை எழுத ‘அலவ்’ பண்றேன்னு சொன்னதை வச்சுண்டு,நான் என் அம்மா அப்பா கிட்டே இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்.அவாளும் என்னே ‘இவருக்கு’ கல்யா ணம் பண்ணி வச்சா.நானும் இந்த ஆத்லே ரெண்டு வருஷமா இருந்துண்டு வறேன்.நீங்கோ ஆசைப் பட்டா மாதிரி அந்த பகவான் அனுக்கிஹத்தாலே ஒரு பேரனைப் பெத்துக் குடுத்து இருக்கேன். அவனுக்கும் ஒன்னேகால் வயசு ஆகப் போறது.அவனாலே இனிமே நன்னா நடந்துண்டு,சாப்பி ட்டுண்டு வர முடியும்.நான் இருக்கணும் என்கிற அவசியம் கிரணுக்கு இல்லே.எனக்கு இனிமே இந்த குடும்பத்லே இருக்க பிடிக்கலே.நான் ஆசைப் பட்டதை இந்த ஆத்லே இருந்துண்டு பண்ண முடியா துன்னு எனக்கு நன்னா தெரிஞ்சு போச்சு.’இவரும்’ ‘எனக்கு உதவி பண்ண முடியலையே’ன்னு நினைச்சு ரொம்ப கஷ்டப் படறாரு.அதனாலே நான் என் வழியே பாத்துக்க முடிவு பண்ணி இருக் கேன்.நான் இந்த ஆத்தே விட்டு போறேன்.என்னை யாரும் தயவு செஞ்சி தேட வேணாம்” என்று எழுதி முடித்து நன்றாக மடித்து,ஒட்டி,அவள் ‘பெட் ரூமில் இருந்த ‘டேபிள்’ மேலே வைத்தாள்.

பிறகு தன் ‘டிரஸ்கள்’,நகைகள் எல்லாவற்றையும் ஒரு சின்ன பெட்டியிலே போட்டுக் கொண்டு, கட்டிக் கொண்டு இருந்த புடவையுடன்,தன் பெட்டியுடன்,யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல்,மத்தி யானம் மாமியாரும்,மாமனாரும் தூங்கி கொண்டு இருக்கும் போது வீட்டை கிளம்பி ‘ஏர் போர்ட்டு’க்கு வந்து,அப்போது கிளம்பின ‘ப்லேனி’ல் ஏறி ரமா சென்னைக்கு வந்து சேர்ந்தாள்.

நாலு மணிக்கு எழுந்துக் கொண்ட ராஜம் ரமாவை குரல் கொடுத்து கூப்பிட்டாள்.ரமா ரூமில் இருந்து பதிலே வரவில்லை.மூன்று தடவை கூப்பிட்டும் பதிலே வராததால் ராஜம் ரமாவின் திறந்து இருந்த ‘பெட் ரூமில்’ வந்து பார்த்தாள்.அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
குழந்தை மட்டும் கட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்தான்.அவன் பக்கத்திலே படுத்துக் கொ ண்டு இருந்த ரமாவை காணோம்.பயந்துப் போன ராஜம் ‘ரூமு’க்குள் வந்து ‘பாத் ரூமை’ பார்த்தாள். அது நன்றாக திறந்து இருந்தது.’டேபிள்’ மேலே ரமா நன்றாக ஒட்டி வைத்து இருந்த ஒரு ‘லெட்டரை’ ப் பார்த்தாள்.பயந்துக் கொண்டே ராஜம் அந்த ‘லெட்ட¨’ரக் கிழித்து,முழுக்க மூனு தடவைப் படித்தாள்.

பிறகு,”ரமா இந்த ஆத்தே விட்டு ஓடிப் போய் இருக்கா.சீக்கிரமா ஓடி வாங்கோ.தூங்கிண்டு இரு க்கேளே” என்று உரக்கக் கத்தி சொன்னதைக் கேட்டு வரதன் “என்னடா இது,ராஜம் ஏதோ கத்தறாளே ரமா ஆத்தே விட்டு ஓடிப் போய்ட்டான்னு வேறே கத்தறாளே.என்ன விபா£தம் இது” என்று நினைத்துக் கொண்டே,தூக்கத்தில் இருந்து மெல்ல தன் கண்களை திறந்து கொண்டு “நீ எங்கே இருக்கே ராஜம்” என்று கேட்டார்.

“நான் சுரேஷ் ‘பெட் ரூமி’ல் இருந்து தான் கத்திண்டு இருக்கேன்.சீக்கிரமா இங்கே வாங்கோ” என்று பதில் கொடுக்கவே வரதன் ரமா ‘பெட் ரூமுக்கு’ போனார்.
தன் கணவனைப் பார்த்து ராஜம் “குடி முழுகி போயிடுத்து.ரமா ’நான் ஆசைப் பட்டதை இந்த ஆத்லே இருந்துண்டு பண்ண முடியாதுன்னு எனக்கு நன்னா தெரிஞ்சு போச்சு.என் ஆத்துக்காரரும் எனக்கு உதவி பண்ண முடியலையேன்னு நினைச்சு ரொம்ப கஷ்டப் படறாரு.அதனால்லே நான் என் வழியே பாத்துக்கப் போறேன்.நான் இந்த ஆத்தே விட்டு போறேன்.என்னை யாரும் தயவு செஞ்சி தேட வேணாம்’ன்னு எழுதி இருக்கா.இந்தாங்கோ இந்த ‘லெட்டரை’ப் படியுங்கோ.உங்களுக்கு நான் சொல்றது நன்னா புரியும்” என்று சொல்லி ரமா எழுதி வைத்து விட்டுப் போன ‘லெட்டரை’ தன் கணவ ன் கையிலே திணித்தாள்.

ராஜம் கொடுத்த ‘லெட்டரை’ வாங்கிப் படித்தார் வரதன்.அவருக்கு தலையை சுற்றியது.

”என்ன ராஜம் இது.ஒரு வருஷ குழந்தையை தனியா விட்டுட்டு எதுக்கு ரமா இந்த ஆத்தே விட்டு ஓடிப் போய் இருக்கா.அவ ‘ஆசைப் பட்டதை’ இந்த ஆத்லே இருந்துண்டு,குழந்தே கொஞ்சம் பெரியவான ஆனப்புறமா, அவ நிதானமா பண்ணிண்டு இருக்கலாமே.அவ படிக்க கூடாதுன்னு நாம சொல்லப் போறோமா என்ன.இப்படி அவசரப் பட்டு எதுக்கு ரமா ஆத்தே விட்டு ஓடிப் போகணும்.என க்கு ஒன்னும் புரியலையே” என்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டார்.

கொஞ்ச நேரமானதும் வரதன் சுரேஷ் ஆபீஸ்க்கு ‘போன்’ பண்ணீ எல்லா விஷயத்தையும் விவரமாக சொன்னார்.உடனே சுரேஷ் ”என்னப்பா சொல்றேள் நீங்கோ.ரமா ஆத்தே விட்டு போயிட்டா ளா”என்று கலவரத்துடன் கேட்டு விட்டு கொஞ்ச நேரம் ஆனதும்”அப்பா,நான் என் ‘பாஸ்’ கிட்டே சொல்லிட்டு உடனே ஆத்துக்கு வறேன்.நான் ஆத்துக்கு வந்து மத்ததேப் பாக்கலாம்” என்று சொல்லி விட்டு ‘போனை’க் ‘கட்’ பண்ணீனான்.சுரேஷ் ‘ரமா,தான் ஆசைப் பட்டதே எந்த ஆத்லே பண்ண முடியலயேன்னு தான்,அவ ஆத்தே விட்டு போயிருக்கணும்” என்று முடிவு பண்ணினான்.

சுரேஷ் தன் ‘பாஸ்’ கிட்டே பர்மிஷன் கேட்டு விட்டு, ஆபீஸ்க்கு விட்டு வெளியே வந்து தன் ‘ஸ்கூட்டரை’ ஸ்டார்ட் பண்ணிக் கொண்டு தன் வீட்டுக்கு வந்தான்.சுரேஷ் வீட்டுக்கு உள்ளே வந்ததும் வரதன் ரமா எழுதி வைத்து விட்டுப் போன ‘லெட்டரை’ அவன் கையில் கொடுத்தாள்.

சுரேஷ் அப்பா கொடுத்த லெட்டரை வாங்கி மூன்று தடவை மறுபடியும்,மறுபடியும் படித்தான். சுரேஷூக்கு தலையை சுற்றியது.’சோபா’விலே உட்கார்ந்துக் கொண்டு யோஜனைப் பண்ணினான்.

பிறகு எழுது ‘லெட்டரை’ கிழித்து தூரப் போட்டான்.கட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்த குழந் தையை பார்த்தான்.அவனுக்கு எல்லா விஷயமும் நன்றாகப் புரிந்து விட்டது.
பிறகு நிதானமாக “அம்மா,நீங்க இன்னும் கொஞ்ச மாசம் ரமாவை ‘வேலைக்குப் போ’ ‘வேலை க்குப் போ’ன்னு சொல்லாம இருந்தா,அவ படிச்சுட்டு இந்த ‘சிவில் சர்விஸஸ்’ பரிக்ஷயை எழுதி முடிச்சு இருப்பா.ஆனா நீங்கோ ரமாவை விடாம ‘கம்பெல்’ பண்ணீ வந்தேள்.அதனால்லே வேறே வழி இல்லாம,ரமா அவ மனசிலே இருந்த ஆசையை பூர்த்தி பண்ண,இந்த ஆத்தே விட்டு ஓடிப் போயிட்டு இருக்கா.என்னாலேயும்,அப்பாவாலேயும் உங்களே மீறி ஒன்னும் சொல்ல முடியலயே.நீங்க பண்ன தப்புக்கு நாம இந்த கஷ்டத்தே அனுபவிச்சுண்டு தான் வரணும்” என்று சொன்னான்.

உடனே ராஜம் ”என்னடா உளற்றே சுரேஷ். ரமாவுக்குத் தான் இப்போ ஒரு குழந்தை பொறந்து ஒரு வருஷத்துக்கு மேலே ஆறதே.’என் படிப்பு தான் எனக்கு முக்கியம்ன்னு சொல்லிண்டு’, இந்த ஒரு வருஷக் குழந்தையை இப்படி தனியாக தவிக்க விட்டுட்டு இந்த ஆத்தே விட்டு ஓடிப் போய் இருக்கா ளே.ரமா பண்ணது கொஞ்சம் கூடா நன்னாவே இல்லேடா.நான் சொன்னதிலே எனக்கு ஒரு தப்பும் தெரியலே.நீ உடனே அவ அப்பா அம்மாவை ‘போன்லே’ கூப்பிட்டு, ரமா அங்கே வந்து இருந்தாள்னா,அவளே உடனே டெல்லிக்குத் திருப்பி அனுப்பி வக்கச் சொல்லு” என்று கத்தினாள்.எல்லாவற் றையும் பார்த்துக் கொண்டு சும்மா நின்றுக் கொண்டு இருந்தாள் வரதன்.

ராஜம் சொன்னதுக்கு ‘சுரேஷ் என்ன பண்ணப் போறான் பாக்கலாமே’ என்று சுரேஷ் வாயையே பார்த்துக் கொண்டு இருந்தான் வரதன்.

தைரியத்தை வர வவழைத்துக் கொண்டு முதல் தடவையாக சுரேஷ் தன் அம்மாவிடம் ”அம்மா, நீங்கோ இந்த மாதிரி பணக்கார பந்தா பண்ணி,என்னை ஒரு‘எம்.பீ.’யே படிச்சவன்,பெரிய கம்பனிலே வேலைலே இருக்கான்னு எல்லாம் பொய்யை சொன்னேள்.என் மாமனார் மாமியாரை மாமா பங்களா லே இருக்க வச்சு அவா ரெண்டு பேரையும் ஏமாத்தி இருக்கேள்.அப்படி எல்லாம் பண்ணதை அந்த பகவான் பாத்துண்டு தானே இருந்துண்டு இருக்கார்.அம்மா,நீங்கோ பண்ண எல்லா தப்புக்கும் அந்த பகவான் எனக்கும்,கிரணுக்கும் இந்த தண்டணையை குடுத்து இருக்கார்.என் வாழ்க்கை இப்படி தான் கேவலமான நிலையில் முடியும்.இதுக்கு நீங்கத் தான் முழுக்க முழுக்கக் காரணம்.இனிமே யாரும் என் னை ரமாவை பத்தி அவ அம்மா அப்பா கிட்டே எல்லாம் ஒன்னும் கேக்கச் சொல்லாதீங்கோ.ரமா மூல மா இந்த ஆத்து வண்டவாளம் எல்லாம் இப்போ என் மாமனார் மாமியாருக்கு நன்னா தெரிஞ்சு இருக் கும்.நீங்க சொல்றா மாதிரி நான் கேட்டா,அவா என்னேப் பாத்து நம்ப ஆத்து வண்டவாளத்தே பத்தி கேட்டா நான் என் மூஞ்சியே எங்கே வச்சுக்கறது.நான் அவா ஆத்து மாப்பிள்ளையை இல்லையா. நாம எதையும் நன்னா யோஜனை பண்ணித் தான் பண்ணனும்.நாம இப்போ அவசரப் பட்டு ஒன்னும் பண்ணக் கூடாது.ரமா அப்பா அம்மா ஏதாவது ‘போன்’ பண்ணி நமக்கு சொல்றாளான்னு பாப்போ ம்.நாம பொறுத்துப் பாக்கலாம்” என்று சொல்லி விட்டு ‘சோபா’வில் ‘ உட்கார்ந்துக் கொண்டான்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *