ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2021
பார்வையிட்டோர்: 3,106 
 

அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 | அத்தியாயம்-17

உடனே ஜான் “நீங்க எல்லாம் ரொம்ப படிச்சவங்க.அவங்க ரெண்டு பேரும் உயிருக்கு உயிரா காதலிக்கறாங்க.உங்க பொண்ணு சொன்னதே நீங்க கேட்டீங்களே.அவங்களே தயவு செஞ்சி பிரிச்சி விடாதீங்க” என்று மறுபடியும் ராமநாதனை கெஞ்சினார்.

ராமநாதன் பிடிவாதமாக ”நீங்க மூனு பேரும் எங்க ஆத்தே விட்டு கிளம்புங்க.இனிமே நீங்க இங்கே இருந்தா நான் போலிஸைக் கூப்பிட வேண்டி இருக்கும்” என்று கத்தினார்.
ஜான் நிதானமாக”சார்,போலீஸை எல்லாம் தயவு செஞ்சி கூப்பிடாதீங்க.நான் கடைசியாக ஒன்னே சொல்றேன்.எனக்கு ‘வாழ்க்கை’ன்னு ஒன்னும் இல்லே.நான் ‘சர்ச்சில்’ ‘கர்த்தருக்கு’ சேவை செஞ்சி கிட்டு வறேன்.என் அம்மாவுக்கு வயசு எழுபத்தி எட்டு ஆவுது.எந்த நேரமும் அவங்க இந்த உலகத்தை விட்டு ‘கர்த்தருக்கு’ கிட்டே போயிடலாம்.இப்போ எங்க ரெண்டு பேருக்கும் என் பையன் பீட்டர் சந்தோஷம் ஒன்னு தான் முக்கியம்.நீங்க பீட்டரை உங்க ‘ஜாதி பையனா’ மாத்திக் கிடுங்க. இதிலே எங்க ரெண்டு பேருக்கும் எந்த ஆ§க்ஷபனையும் இல்லே.எங்களுக்கு அப்படி பண்றதிலே முழு சம்மதம்.நீங்க அவனை உங்க ‘ஜாதிலே’ மாத்தி கிட்டு,அவனுக்கு நீங்க ஆசைப் படற பேரை வச்சி,அப்புறமா உங்க பொண்ணே அவனுக்கு உங்க ஜாதிலே பண்றா மாதிரி ஒரு கல்யாணத்தே பண்ணீ வச்சி அவங்க ரெண்டு பேரையும் சந்தோஷமா வாழ வையுங்க.அது போதும் எங்க ரெண்டு பேருக்கும்” என்று தன் கையை கூப்பி சொன்னார்.

ரோஸியும் ஜான் பக்கத்தில் நின்றுக் கொண்டு தன் கையைக் கூப்பிக் கொண்டு இருந்தாள்.
“என்னால் அப்படி எல்லாம் செஞ்சு,உங்க பையனுக்கு என் பொண்ணெ கல்யாணம் பண்ணீ வக்க முடியாது.நீங்க மூனு பேரும் கிளம்புங்க” என்று மறுபடியும் கத்தினார் ராமநாதன்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு இருந்த சுதா “இவா மாறவே மாட்டா.இவா ஜாதிக்கு தான் முக்கியத்துவம் தர மனுஷா. இவாளுக்கு நம்ம தூய்மையான காதலுக்கு அர்த்தமே தெரியாது.நீங்க மூனு பேரும் இப்போ கிளம்பிப் போங்க.ஆனா அவசப் பட்டு தற்கொலை என்னால் பண்ணீண்டுடாதேள்.எனக்கு கொஞ்சம் ‘டயம்’ குடுங்கோ.கொஞ்ச நாள் பொறுமையா இருந்துண்டு வாங்கோ” என்று சொல்லும் போது சுதா மறுபடியும் ஒரு ஒரமாக சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டாள்.

பீட்டர் மறுபடியும் வந்து சுதாவைப் பிடித்துக் கொள்வதற்கு முன்னால் மங்களம் சுதா பக்கத்தி லே போய் உட்காந்துக் கொண்டு சுதாவுக்கு ‘நல்ல தனம்’ சொல்லி வந்தாள்.
உடனே பீட்டர் “சா¢ சுதா,நீ சொன்னா நான் தற்கொலை எல்லாம் பண்ணிக்காம உனக்காக காத்துக் கிட்டு இருப்பேன்.நான் வேறே யாரையும் கல்யாணம் கட்டிக்க மாட்டேன்” என்று சொன்ன தும் சுதா “ரொம்ப தாங்ஸ் உங்களுக்கு” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் பீட்டர் அப்பாவையும்,ஆயாவையும் அழைத்துக் கொண்டு சுதா வீட் டை விட்டுக் கிளம்பினான்.சுதா பீட்டருக்கு ‘பை’ ‘பை’ காட்டினாள்.பதிலுக்கு பீட்டரும் சுதாவுக்கு ‘பை’ ‘பை’ காட்டினான்.

அவர்கள் போனதும் ராமநாதன் கோவமாக வாசல் கதவைச் சாத்தி விட்டு வீட்டுக்குள்ளே வந்து சுதா பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டார்.

அவர்கள் போனதும் ராமநாதன் “சுதா,உன் வாலிப மனசு எனக்கு நன்னா புரியறதும்மா.இந்த வயசிலே ஒரு அழகான பையனைப் பாத்தா,இந்த மாதிரி கல்யாணம் பண்ணிக் கொள்ளும் ஆசை நிச்சியமா வரும்.நான் இல்லேன்னு சொல்லலே.நீ எனக்காகவும்,அம்மாவுக்காகவும்,இந்த குடும்ப கௌரவுத்துக்காகவும் உன் மனசை கொஞ்சம் மாத்திக்கோம்மா.நாங்க கூடிய சீக்கிரமா உனக்கு ஒரு நல்ல படிச்ச பிராமனப் பையனாப் பாத்து கல்யாணம் பண்ணி வக்கிறோம்.நாங்க பாக்கற அந்த பிராம ணப் பையனை கல்யாணம் பண்ணீண்டு சந்தோஷமா வாழ்ந்து வாம்மா” என்று தன் கண்களில் மல்க சொன்னார்.

உடனே சுதா அப்பா மடியிலே படுத்துக் கொண்டு “அப்பா, எனக்கு அவரை மறக்க முடியாது, நான் அவரை உயிருக்கு உயிரா காதலிக்கறேம்ப்பா.எனக்கு அவரை கல்யாணம் பண்ணி வையுங்கப் பா” என்று அழுதுக் கொண்டே சொன்னாள்.

ராமநாதனுக்கும், மங்களத்துக்கும் என்ன பண்ணுவது என்று புரியவில்லை.

சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார் ராமசாமி.

கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணின ராமசாமி “ராமா,நாம இப்படி சுதாவை ரொம்ப நாள் ஆத்லே பிடிச்சு வச்சுண்டு இருந்தா,அந்த பையன் ‘இத்தனை நாள் ஆகியும் சுதா வரலயேன்னு ஏங்கி தற்கொலை பண்ணிண்டான்னா,அது ஒரு போலீஸ்’ கேஸா’ ஆயிட்டா ரொம்ப கஷ்டம்.’தலை வலி போயி,திருகு வலி வந்ததாம்’ன்னு ஆயிடப் போறது.எனக்கு என்னவோ ரொம்ப பயமா இருக்கு”என்று சொல்லி விட்டு அவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தார்.

உடனே ராமநாதன் “என்னப்பா,நீங்க உங்க நெஞ்சை பிடிச்சுண்டு உக்காந்துட்டேள்.உங்களுக் கு நெஞ்சை ரொம்ப வலிக்கறதா” என்று சொல்லிக் கொண்டு அப்பா பக்கத்திலே உட்கார்ந்துக் கொண்டு அவர் கையைப் பிடித்து கேட்டான்.

அவரும் “ஆமாம் ராமா.எனக்கு நெஞ்சை ரொம்ப வலிக்கறது.இந்த ஆத்லே ‘இந்த மாதிரி’ எல் லாம் நடந்தா என்னே போல இருக்கிற பெரியவாளுக்கு நெஞ்சே நிச்சயமா வலிக்கத் தான் வலிக்கும்” என்று கத்திச் சொன்னார்.

உடனே ராமநாதன் “அப்பா,கத்தி எல்லாம் சொல்லாதீங்கோ.உங்களுக்கு ஏற்கெனவே B.P இருக்கு.நீங்க இந்த சுதா சமாசாரத்தே நினைச்சு ரொம்ப கவலைப் பட்டுண்டு வராதீங்கோ.அது உங்க B.P ஜாஸ்தியாக்கும்.அப்புறமா ‘ஹெவி டோஸ்’ B.P மாத்திரை சாப்பிட வேண்டி இருக்கும்” என்று சொல்லி அப்பாவைக் கவலைப் படாம இருந்து வரச் சொன்னான்.

கொஞ்ச நேரம் ஆனதும் ராமநாதன் சுதாவைப் பார்த்து “சுதா,நீ இந்த ஆத்லே ஒரு வேளை சாதம் சாப்பிட்டு நாலு நாள் ஆகப் போறது.நீ இந்த மாதிரியே பிடிவாதம் பிடிச்சு வந்து சாதம் சாப்பிடாம இருந்தா உன் உடம்பு என்ன ஆறது.நீ ஒரு வயசு பொண்ணு இல்லையா.வா என்னோடு உக்கா ந்துண்டு சாப்பிடு” என்று சுதாவை மெல்ல அழைத்துக் கொண்டு சாப்பிட சொன்னார்.

நான்கு நாட்களாக சாப்பிடால் இருந்த சுதாவுக்கு பசி அடி வயிற்றைக் கிள்ளீக் கொண்டு இருந் தது.அவ பசி அவளுக்குத் தானே தெரியும்!.அப்பா சொன்னதை ஒத்துக் கொண்டு அப்பாவுடன் சாப்பிட உட்கார்ந்தாள்.உடனே மங்களம் சுதாவுக்கும் தன் கணவருக்கும் தட்டைப் போட்டு சாதம் பறிமாறினாள்.

ஆனால் சுதா சாப்பிடாமல் “அப்பா,நீங்கோ பீட்டரை எனக்குக் கல்யாணம் பண்ணி வக்கிறதா சொன்னாத தான் நான் சாப்பிடுவேன்” என்று பிடிவாதம் பிடிச்சாள்.ராமநாதனுக்கு என்ன பண்ணுவ து என்று புரியவில்லை.’சுதா இப்படி விடாம பிடிவாதம் பிடிச்சு வறாளே’ என்று நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தார்.

“என்ன சுதா.நாங்க எப்படி உன்னே அந்த கிருஸ்தவ பையனுக்குக் கல்யாணம் பண்ணிக் குடு க்கறது.அந்த மாதிரி நீ ஒரு கிருஸ்தவ பையனை கல்யாணம் பண்ணிண்டா. அப்புறமா ரமாவை நம்ம ஜாதிக்காரா யாரும் கல்யாணமே பண்ணிக்க மாட்டாளேம்மா.நீ பீட்டரோடு சந்தோஷமா போயிடுவே. நாங்க தானே ரமாவை வச்சுண்டு அவ கல்யாணத்தே எப்படி பண்றது, யாருக்கு பண்றதுன்னு என்று திண்டாடிண்டு வந்து,கஷ்டப் பட்டுண்டுக் கொண்டு தானே வரணும்” என்று கவலையுடன் கேட்டார்.

உடனே சுதா “பீட்டர் பாட்டியும்,அப்பாவும் சொன்னா மாதிரி பீட்டரை நம்ம ஜாதியிலே சேத்து ண்டு,அவர் பேரை ஒரு பிராமணப் பையன் பேரா மாத்திட்டு,அப்புறமா,நம்ம ஆத்து வழக்கப்படி பீட்ட ரை எனக்குக் கல்யாணம் பண்ணி வையுங்களேன் அப்பா.அப்போ ஒரு ‘ப்ராப்லெம்மும்’ இருக்காதேப் பா” என்று கெஞ்சினாள்.

ராமநாதனுக்கு ‘இந்த சுதா கேக்கறதை எப்படி பண்றது. இத்தனை வயசுக்கு அப்புறமா எப்படி ஒரு கிருஸ்தவ பையனுக்கு ஒரு பிராமண பேரை வக்கிறது.எந்த வாத்தியார் இதே நமக்கு பண்ணுவார்’ என்று கவலைப் பட்டுக் கொண்டு அவரும் சாப்பிடாமல் உட்கார்ந்துக் கொண்டார்.

மங்களத்துக்கும்,விமலாவுக்கும்,ராமசாமிக்கும் ராமநாதனும் சுதாவோட சாப்பிடாம இருந்ததை ப் பார்த்து கவலைப் பட்டார்கள்.கொஞ்ச நேரம் ஆனதும் மங்களம் சுதாவைப் பார்த்து “சுதா நீ இப்போ சாப்பிடு. நீ சொன்னதை நாங்க யோசிக்கறோம்” என்று சொன்னதும் சுதா ‘கட’‘கட’ என்று சாப்பிட ஆரம்பித்தாள்.சுதா சாப்பிட ஆரம்பித்ததும், ராமநாதன் சாப்பிட்ட ஆரம்பித்தார்.

‘என்னடா மங்களம் இப்படி சுதா கிட்டே இப்படி சொல்லி அவளை சாப்பிட வச்சு இருக்காளே. நமப ஆத்து எந்த வாத்தியார் இந்த மாதிரி நமக்கு பண்ணுவாரா.அவர் இது சாத்தியம் இல்லேன்னு சொல்லிட்டார்ன்னா,நாம என்ன பண்றது.எப்படி மங்களம் ‘நாங்க யோசிக்கறோம்’ன்னு சொன்னா” என்று யோஜனை ப் பண்ணிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டு இருந்தார் ராமநாதன்.

அன்று பூராவும் மங்களம் ‘சுதாவுக்கு நாம சொன்னதே எப்படி பண்ணப் போறோம்.வெறுமனே அவ கிட்ட ‘நாங்க யோசிக்கறோம்’ன்னு சொன்னோம்.அதே நம்பிண்டு அவளும் சாதம் சாப்பிடாளே. அவரையும் சேத்துண்டு வேறே சொன்னோம்.பாவம் அவர் என்ன பண்ணுவார்’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.

அன்று இரவு ராமநாதன் மங்களத்திடம் “என்ன மங்களம்,நீ சுதா கிட்டே இப்படி சொல்லி சாப் பிட வச்சு இருக்கே.அவளும் நீ சொன்னதே நமபிண்டு சந்தோஷமா ‘ரெண்டு கை’ சாதத்தை ஜாஸ்தி யா வாங்கி சாப்பிட்டுட்டு இருக்கா.இந்த சுதா கேக்கறதை எப்படி பண்றது. இத்தனை வயசுக்கு அப்பு றமா எப்படி ஒரு கிருஸ்தவ பையனுக்கு ஒரு பிராமண பேரை வக்கிறது.எந்த வாத்தியார் இதே நமக்கு பண்ணுவார்” என்று கவலைப் பட்டுக் கொண்டு கேட்டார்.

“அது ஒன்னும் இல்லேன்னா.நான் அப்படி சொன்னாலாவது சுதா ஒரு வாய் சாதமாவது சாப் பிடட்டும் அவ சாப்பிட்டு நாலு நாள் ஆறது.எத்தனை நாள் அவ சாப்பிடாம இருக்கிறதுன்னு நினை ச்சு தான் நான் அப்படி சொன்னேன்.அவ சாப்பிட்ட அப்புறமா,நாம நிதானமா நீங்க சொன்ன ‘ப்ராப் லெத்தை’ அவ கிட்ட சொல்லி அவளே மாத்த ‘ட்ரை’ பண்ணலாம்ன்னு நினைசேன்” என்று சொன்ன தும் ராமநாதன் “எனக்கு என்னவோ சுதா நான் சொன்ன ‘ப்ராப்லெத்தை’க் கேட்டுட்டு அவ மனசே மாத்திப்பான்னு தோணலே.அவ அந்த கிருஸ்தவ பையனை கல்யாணம் பண்ணிக்கனும் என்கிறதிலே ரொம்ப பிடிவாதமா இருந்துண்டு வறாளே” என்று விரக்தியுடன் சொன்னார்.

அடுத்த நாள் காத்தாலே எழுந்ததும் சுதா எல்லோரையும் பாத்து “நீங்கோ யோஜனைப் பண் ணேளா.பீட்டரை இந்த ஆத்துக்கு கூப்பிட்டு அவ அப்பா,பாட்டி,சொன்னதே போல செய்ய ஆரம்பிக் கறேளா” என்று கேட்டதும் ராமநாதன் ஆடிப் போய் விட்டார்.

அவர் நிதானமாக சுதா “இத்தனை வயசுக்கு அப்புறமா எப்படி ஒரு கிருஸ்தவ பையனுக்கு ஒரு பிராமண பேரை வக்கிறது.எந்த வாத்தியார் இதே நமக்கு பண்ணுவார்” என்று கவலைப் பட்டுக் கொ ண்டு கேட்டார்.ராமசமியும், விமலாவும் மங்களமும் கவலையுடன் சுதாவைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

ஒரு நிமிஷம் கூட ஆகி இருக்காது சுதா வீட்டு ‘போனை’ எடுத்து பீட்டருக்கு ‘போன்’ பண்ணி “நீங்கோ சந்தோஷமா இருந்துண்டு வாங்கோ.உங்க அப்பா பாட்டி சொன்னதேப் பத்தி எங்கா த்லே யோஜனை பண்றேன்னு எனக்கு சொல்லி இருக்கா” என்று சந்தோஷமா சொன்னாள்.

உடனே பீட்டர் “நீ சொன்னதுக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’சுதா.இந்த நமபர் உங்க வீட்டு ‘போனா’. நான் அடிக்கடி இந்த நமபருக்கு போன் பண்ணி உன் கூட பேசறேன்” என்று சொல்லி போனைக் ‘கட்’ பண்ணினான்.சுதா பீட்டர் சொன்னதைக் கேட்டு சந்தோஷப் பட்டு “நீங்க அடிக்கடி எனக்கு இந்த ‘போன்லே’ போன் பண்ணி பேசுங்கோ.நானும் உங்களுக்கு இங்கே என்ன நடகிறதுன்னு சொல்றேன்”என்று சந்தோஷமாகச் சொன்னாள்.

நான்கு நாட்கள் சாப்பிடாம இருந்த சுதா ரெண்டு வேளையும் நன்றாக சாப்பிட்டுக் கொண்டு வந்ததாலும், பீட்டர் ‘போன்லே’ பேசினதாலும் ரொம்ப சந்தோஷமாக வீட்டில் இருந்து வந்தாள். அவள் மங்களத்தைப் பார்த்து “அம்மா, நான் கொஞ்ச நேரம் தூங்கப் போறேன்.நான் ராத்திரி சா¢யாத் தூங்கலே” என்று சொல்லி விட்டு ‘பெட் ரூமு’க்குள் போனாள்.

மங்களமும் ராமநாதனும் யோஜனைப் பண்ணீனார்கள்.

சுதா ‘பெட் ‘ரூமூ’க்குப் போனதும் மங்களமும்,ராமநாதனும் ராமசாமியிடமும் விமலா இடமும் ரகசியமாக “என்ன பண்ணலாம்.உங்களுக்கு ஏதாவது ‘ஐடியா’ இருக்கா” என்று கேட்டார்கள்.

ரெண்டு பேரும்” என்ன பண்ணலாம்ன்னு எங்களுக்கு ஒன்னும் தெரியலையே ராமநாதா” என்று வருத்தப் பட்டுக் கொண்டு சொன்னார்கள்.

கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு ராமநாதன் எல்லோரையும் பார்த்து “எனக்கு என்னவோ சுதா அந்த கிருஸ்தவ பையனை மறந்துட்டு,நாம பாக்கற பிராமணப் பையனை கல்யாண ம் பண்ணிப்பான்னே தோணலே.நாம கஷ்டப் பட்டு ஒரு பிராமணப் பையனை பாத்தபுறம் சுதா ‘நான் அந்த பையனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சு வந்தா என்ன பண்றது” என்று சொல்லும் போது ராமநாதன் கண்கள் குளம் ஆயிற்று.அவர் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

கொஞ்ச நேரம் ஆனதும் ராமநாதன் “எனக்கு ஒன்னு தோண்றது.நான் ஒன்னு பண்றேன். இன்னிக்கு சாயங்காலமா நம்ம ஆத்து வாத்தியாரை நம ஆத்துக்குக் கூப்பிட்டு,அந்த கிருஸ்தவ பையனை நம்ம பிராமண ஜாதிப் பையனா மாத்த முடியுமா.அப்படி மாத்தினா அந்த வாத்தியார் காதும் காதும் வச்ச மாதிரி சுதா கல்யாணத்தை பண்ணி வப்பாரா.அப்படி அவர் கல்யாணத்தே பண்ணி வச்சார்ன்னா,அடுத்த நாளே சுதாவையும் அந்த கிருஸ்தவ பையணையும் தனி குடித்தனம் பண்ணீ வர அனுப்பி விட்டு,நாமஅப்புறமா சுதாவை மறந்துட்டு ரமாவை நன்னாப் படிக்க வச்சு அவளுக்கு ஒரு நல்ல பிராமணப் பையனாப் பாத்து,சுதா சமாசாரத்தே சொல்லாம ஒரு கல்யாணத்தே பண்ணி வக்கலாமா.இதே சொல்லும் போதே எனக்குப் பயித்தியமே பிடிக்கறாப் போல் இருக்கு” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

உடனே மங்களம் “நாம சுதாவை அந்த மாதிரி கல்யாணத்தே ஒரு கிருஸ்தவ வையனுக்கு பண் ணி வச்சுட்டு சுதாவை மறந்துட்டு இருந்து வரணுமா.இத்தனை வருஷமா இந்தாத்லே வளந்த பொண் ணு அவ.எனக்குக் கிரமமா வளைக் காப்பு,சீமந்தம் எல்லாம் பண்ணீண்டு,சுதா எனக்கு சீமந்த புத்ரியா பொறந்து இருக்கா.நான் எப்படி சுதாவை மறந்துட்டு இந்தாத்லே இருந்து வர முடியும்…” என்று சொல்லும் போதே அவள் அழுது விட்டாள்.

ராமநாதன் மங்களத்துக்கு தேத்தறவு சொல்லி அவள் அழுவதை நிறுத்தச் சொன்னார்.

கொஞ்ச நேரம் போன பிற்பாடு ராமநாதன் “உங்க யாருக்கும் ஒரு வழியும் தெரியலே.நான் சொ ல்றதும் உங்க யாருக்கும் பிடிக்கலே.நான் என்ன பண்ணட்டும்”என்று கேட்டு விட்டு சும்மா இருந்தார்.

எல்லோரும் நிறைய நேரம் யோஜனைப் பண்ணி விட்டு ‘ராமநாதன் சொன்ன வழியைத் தான் பண்ணிப் பார்க்கணும்’ என்கிற முடிவுக்கு வந்தார்கள்.

ராமநாதன் ஆத்து வாத்தியாருக்குப் ‘போன்’ பண்ணீ அவா¢டம் “வாத்தியார்,நான் ராமநாதன் பேசறேன்.நீங்கோ சித்தே ‘ப்ரீயா’ இருந்தா,எங்காத்துக்கு கொஞ்சம் வந்துட்டு போக முடியுமா.நான் ஒரு சிக்கல்லே இருக்கேன்” என்று சொன்னதும் ஆத்து வாத்தியார் “என்ன சிக்கல் ராமநாதன் சார்.என் கிட்டே ‘போன்லே’ சொல்லுங்கோ.நான் எனக்கு தெரிஞ்ச வழியே சொல்றேன்” என்று கேட்டதும் ராமநாதன் “வாத்தியார் ‘போன்லே’ சொல்லக் கூடிய சிக்கல் இல்லே அது.நீங்கோ தயவு செஞ்சி ஒரு ஐஞ்சு நிஷம் எங்காத்துக்கு வந்துட்டுப் போங்க” என்று கெஞ்சி கேக்கவே ஆத்து வாத்தியாரும் ஒத்துக் கொண்டார்.

கொஞ்ச நேரம் ஆனதும் “சா¢,நீங்கோ ‘போன்லே’ சொல்ல இஷடப் படலே.எனக்கு இப்போ ஒரு ஜோலி இருக்கு.அதே முடிச்சுண்டு நான் ஒரு ஆறு மணிக்கு உங்க ஆத்துக்கு வறேன்”என்று சொல்லி ‘போனை’க் கட் பண்ணினார்.உடனே ராமநாதன் “ரொம்ப சந்தோஷம் வாத்தியார்.நாங்க ஆறு மணிக்கு உங்களுக்காக காத்துண்டு இருக்கோம்”என்று சொல்லி ‘போனை’ ‘கட்’ பண்ணீனார்.

ராமநாதன் சொன்னதைக் கேட்டதும் எல்லோருக்கும் நிம்மதியாக இருந்தது.

மணி சா¢யாக ஆறடித்ததும் ஆத்து வாத்தியார் ராமநாதன் வீட்டுக்கு வந்து ‘காலிங்க் பெல்லை’ அழுத்தினார்.ராமநாதன் சந்தோஷமாக வாசல் கதவைத் திறந்து வாத்தியாரைப் பார்த்து “வாங்கோ வாத்தியார்” என்று சொல்லி வாத்தியாரை உள்ளே அழைத்து அவருக்கு உட்கார ஒரு சேரைப் போட்டார்.

மங்களம் வாத்தியாருக்கு சூடா காபி போட்டுக் கொண்டு வந்து அவா¢டம் கொடுத்தாள்.

மங்களம் கொடுத்த காபியை குடித்துக் கொண்டே” என்ன சிக்கல் ராமநாதன் சார், சொல்லுங் கோ” என்று கேட்டு ராமநாதனைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.ராமநாதன் தன் ‘எண் ஜான் உடம் பை ஒரு ஜான்’ உடம்பாகக் குறுக்கிக் கொண்டு “வாத்தியார்,நான் ஒரு பெரிய சிக்கல்லே மாட்டிண்டு இருக்கேன்.நீங்கோ தான் எனக்கு ஒரு நல்ல வழியே சொல்லணும்” என்று சொல்லும் போது அவர் கண்களில் நீர் துளித்தது.

உடனே வாத்தியார் “நீங்கோ உங்களுக்கு வந்து இருக்கிற சிக்கலை சொல்லாம வெறுமனே கண்லே நீர் வீட்டுண்டு இருக்கேளே.முதல்லே உங்க சிக்கலே என் கிட்டே சொல்லுங்கோ” என்று கேட்டதும் மங்களம் ¨தா¢யத்தை வர வழைத்துக் கொண்டு “வாத்தியார்,நான் விஷயத்தே நோ¢டை யாவே சொல்றேன்.என் பெரிய பொண்ணு சுதா அவ வேலை செஞ்சு வர இடத்லே அவ கூட வேலை செஞ்சு வர ஒரு கிருஸ்தவப் பையனை காதகிக்கறா…” என்று சொல்லி முடிக்கவில்லை உடனே வாத்தியார் “சிவ, சிவா,நீங்கோ என்ன சொல்றேள்.உங்க ஆத்து பொண்ணு ஒரு கிருஸ்தவ பையனை காதலிக்கறாளா.இது என்ன கொடுமை,கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கே.உங்க பொண்ணுக்கு ஏன் இப்படி புத்தி கெட்டுப் போச்சு.சா¢,நான் என்ன பண்ணனும்ன்னு என்னே கூப்பிட்டேள்.அதெ கொஞ்சம் சொல்லுங்கோ மாமி” என்று கேட்டார்.

தன்னை சுதாரித்துக் கொண்ட ராமநாதன் “என் பொண்ணு சுதா கல்யாணம் பண்ணீண்டா அந்த பையனைத் தான் கல்யாணம் பண்ணிப் பேன்னு பிடிவாதம் பிடிச்சி வறா.நாங்க என்ன சொன் னாலும் கேக்க மாட்டேங்கறா.அந்த கிருஸ்தவ பையனும் சுதாவைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன் னு அவ அப்பா கிட்டேயும் பாட்டி கிட்டேயும் பிடிவாதம் பிடிச்சி வறான்.ரெண்டு நாள் முன்னாடி காத் தாலே அந்த கிருஸ்தவ பையன் அப்பாவும், பாட்டியும் எங்காத்துக்கு வந்து ‘என் பையன் பீட்டர் உங்க பொண்ணு சுதாவை மனசார காதலிக்கிறான்.உங்க பொண்ணு சுதாவும் என் பையன் பீட்டரை மனசார காதலிக்கறா.இந்த சின்ன காதலர்களை தயவு செஞ்சி பிரிச்சி வச்சிடாதீங்க.கொஞ்சம் தயவு செஞ்சி அவங்க கல்யாணம் பண்ணிக் கொள்ள சம்மதம் குடுங்க.என் பையன் வாழ்க்கையாவது நல்லா அமைஞ்சு, அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்து கிட்டு வரட்டும்.இப்போ எங்க ரெண்டு பேருக்கும் என் பையன் பீட்டர் சந்தோஷம் ஒன்னு தான் முக்கியம்.நாங்க வேணா ஒன்னு செய்ய ஒத்துக்கறோம்.பீட்டரை உங்க ‘ஜாதி பையனா’ மாத்திக்கிடுங்க.இதிலே எங்க ரெண்டு பேருக்கும் எந்த ஆ§க்ஷபனையும் இல்லே. எங்களுக்கு அப்படி பண்றதிலே முழு சம்மதம்.நீங்க அவனை உங்க ‘ஜாதியிலே’ மாத்திக் கிட்டு,அவனுக்கு நீங்க ஆசைப் படற பேரை வச்சி,அப்புறமா உங்க பொண்ணே அவனுக்கு உங்க ஜாதிலே பண்றா மாதிரி ஒரு கல்யாணத்தே பண்ணீ வச்சி அவங்க ரெண்டு பேரை யும் சந்தோஷமா வாழ வையுங்க’ ன்னு சொல்லிட்டு போனா.அதனால்லே,நீங்க கொஞ்சம் அவா சொன்ன மாதிரி….”என்று சொல்லி முடிக்கவில்லை வாத்தியார் கோவமாக ராமநாதனைப் பார்த்தார்.

அவர் தான் கொண்டு வந்து இருந்த பையை கையிலே எடுத்துக் கொண்டார்.

”நான் பேசாம எழுந்துப் போய் இருக்கலாம்.ஆனா இந்தாத்லே நான் இத்தனை வருஷமா ‘உபா த்யாயம்’ பண்ணிண்டு வந்து இருக்கேன்.நீங்களும் என்னை கௌரவிச்சு,நிறைய தக்ஷணை எல்லாம் குடுத்துண்டு வந்து இருக்கேள்.நான் உங்களுக்கு பதில் சொல்ல கடமைப் பட்டு இருக்கேன்.ராமநாத ன் சார்,உங்க அப்பா உங்களுக்கு எந்த வயசிலே உபநயனம் போட்டார்” என்று கேட்டு விட்டு ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே ராமநாதனைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

உடனே ராமநாதன் “என் அப்பா எனக்கு பதினோறாவது வயசிலே ‘உபநயனம்’ போட்டார்” என்று சொல்லும் போதே அவருக்கு வாத்தியார் என்ன சொல்லப் போகிறார் என்று புரிந்து விட்டது.

“நீங்க நன்னா யோஜனைப் பண்ணுங்க.எல்லா பிராமண குழந்தைகளுக்கும் ஒத்தப் படை வய சான பதினோறாவது வயசிலே ‘உபனயனம்’ போடணும்.நீங்க சொல்ற இந்த கிருஸ்தவ பையனுக்கு இப்போ வயசு இருபதுக்கும் மேலே தான் நிச்சியமா இருக்கும்.இந்த வயசுக்கு மேலே நான் அவனுக்கு ‘உபநயனம்’ போட முடியுமா சொல்லுங்கோ.அவனுக்கு நான் ‘உபநயனம்’ போட்ட பிறகு சந்தியாவந் தன மந்திரங்களே சொல்லிக் குடுக்க முடியுமா.அப்படியே நான் சொல்லிக் குடுத்தா,அந்த கிருஸ்தவ பையனால்,அந்த மந்திரங்களை எல்லாம் நன்னா உச்சா¢ச்சு சொல்லத் தான் முடியுமா.ஒரு கிருஸ்தவ பையனை பிராமண ஜாதிக்கு மாத்தறதுன்னா என்னன்னு நினைச்சுண்டு இருக்கேள்.வெறுமனே ‘ராமன்’ ‘சுப்பன்’ ‘கோவித்தன்’ன்னு மாத்தினாப் போறுமா..”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது அவருடைய செல் ‘போன்’ மணி அடிக்கவே,வாத்தியார் ‘போனை’ ‘ஆன்’ பண்ணி பேசினார்.

பேசி முடிந்ததும் வாத்தியார் ‘போனை’ ‘ஆப்’ பண்ணி விட்டு “அப்படியே அவன் பேரை மா த்தி அவனுக்கு நான் உங்க குடும்பத்து பிராமண பொண்ணான சுதாவுக்கு ‘அக்னி சாடசியா’ மந்தி ரங்கள் எல்லாம் சொல்லி கல்யாணம் தான் பண்ணி வக்க முடியுமான்னு கொஞ்சம் யோஜனைப் பண் ணேளா.என்னை நீ மன்னிச்சுடுங்கோ.நான் அந்த மாதிரி ‘பாவ காரியங்கள்’ எல்லாம் பண்ணவே மாட்டேன்.ஒன்னு வேணா பண்ணுங்கோ.நீங்க ரொம்ப பிரியப் பட்டா,அவா ரெண்டு பேரும் ஒருத்த ரை ஒருத்தர் ரொம்ப விரும்பறதாலே,அவா ரெண்டு பேருக்கும் ‘ரெஜிஸ்தர்’ கல்யாணம் பண்ணி வச்சி டுங்கோ.இது தான் அவா ரெண்டு பேருக்கும்,உங்களுக்கும் நல்லது”என்று சொல்லி விட்டு எழுந்தார்.

“நான் உங்க ஆத்து வாத்தியார்.உங்க சிக்கலைத் தீக்க எனக்கு ஒரு ‘தார்மீக’வழியும் தெரியலே. நீங்க உங்க சிக்கலே ’லௌகீகமா’ பண்றது தான் சா¢.எனக்கு வேறே வழி ஒன்னும் தெரியலே.நான் போய் வரட்டுமா” என்று சொல்லி தன் பையை எடுத்துக் கொண்டு வாசலுக்குப் போனார்.

ராமநாதன் வாத்தியார் பின்னாலேயே போய் அவரைப் பார்த்து “ரொம்ப ‘தாங்ஸ்’ வாத்தியார்” என்று சொல்லி அவரை அனுப்பி விட்டு வீட்டுக்குள்ளே வந்தார்.

அப்பா கேட்டதையும்,அதற்கு வாத்தியார் சொன்ன பதிலையும் கேட்டுக் கொண்டு இருந்தாள் சுதா.

வாத்தியார் கிளம்பிப் போனதும் ராமசாமி “நான் சொல்றேன்னு என்னை தப்பா எடுத்துகாதே ராமநாதா.அவர் சொல்றது நுத்துக்கு நுறு நிஜம்.அவர் ஒரு வேதம் படிச்ச வாத்தியார்.அந்த மாதிரி தப்பெல்லாம் அந்த வாத்தியார் நிச்சியமா பண்ணவே மாட்டார்.நான் உன்னே வாத்தியாரே கேக்க சொன்னதே ரொம்ப தப்பு” என்று சொல்லி வருத்தப் பட்டார்.
சுதா தன் மனதுக்குள் ‘சா¢,வாத்தியார் இப்படி சொல்லி விட்டுப் போன அப்புறம், இந்தாத்லே நமக்கு பீட்டரை கல்யாணம் பண்ணி வக்க மாட்டா.நாம தான் ஏதாவது ஒரு வழி பண்ணிண்டு ஆக ணும்’ சொல்லிக் கொண்டாள்.சுதா ஹாலுக்கு வந்து நின்றுக் கொண்டு இருந்தாள்.

“சுதா,நான் ஆத்து வாதியாரைக் கூப்பிட்டு கேட்டதை,நீயும் தானே கேட்டுண்டு இருந்தே. அவர் அப்படி எல்லாம் அந்த கிருஸ்தவ பையன் பேரை மாத்தி கல்யாணம் பண்ணி வைக்க மாட்டே ன்னு சொல்லிட்டாரே,நான் என்ன பண்ணட்டும்” என்று ராமநாதன் அழ மாட்டாத குரலில் கேட்டார்.

அப்பா கேட்டதற்கு சுதா அதற்கு “அப்பா,எனக்கு நன்னா தெரியும்.நம்மாத்து வாத்தியார் அப் படி எல்லாம் பண்ண மாட்டார்ன்னு.நீங்கோ என்னவோ அவரேப் போய் கேட்டேள்.உங்களுக்கும் எங்க ரெண்டு பேருக்கும் ஒரு ‘ரெஜிஸ்தர் கல்யாணம்’ பண்ணி வைக்க இஷடமே இல்லே.எனக்கும் பீட்டரே மறக்க முடியலே…” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது சுதாவுக்கு அழுகை பொத் துக் கொண்டு வரவே அவள் ‘பெட் ரூமு’க்குள் ஓடிப் போய் கதவைச் சாத்திக் கொண்டாள்.

இதை கவனித்த மங்களம் சுதா கூட ‘பெட் ரூமு’க்குப் போய் அவளுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

ராமநாதன் தன் அப்பா அம்மாவைப் பார்த்து,”அம்மா,அப்பா எனக்கு என்ன பணறதுன்னே தெரியலையே.இந்த மாதிரி ஒரு குழப்பம நம்மாத்லே ஏன் வரணும்.நாம் எல்லாம் என்ன பாவம் பண் ணோம்.பகவானே,எனக்கு ஒரு நல்ல வழியே காட்டேன்” என்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டார்.

பிள்ளை வருத்தப் படுவதைப் பார்த்த ராமசாமிக்கும் விமலாவுக்கு மிகவும் வருத்தமாய் இருந்தா ர்கள்.இருவரும் ’நாம் என்ன சொன்னா இந்த ‘ப்ராப்லெம்’ சுலபமாக சா¢யாப் போய் எல்லோருக்கும் பிடிச்சதா இருக்கும்’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு வந்தார்கள்.

ஒரு வாரம் ஆகி இருக்கும்.

சுதா ‘ப்ராப்லெத்தையே’ யோஜனை பண்ணிக் கொண்டு வந்த விமலாவுக்கு ஜுரம் வந்து விட் டது.அவள் மெதுவாக தன் கணவர் இடம் “எனக்கு ரெண்டு நாளா ஜுரம் அடிக்கறது.அது குறைஞ் சிடும்ன்னு நினைச்சிண்டு இருந்தேன்.ஆனா இன்னிக்கு அந்த ஜுரம் கொஞ்ச ஜாஸ்தியா இருக்கு” என்று சொன்னதும் அவர் உடனே விமலா சொன்ன விஷயத்தை ராமநாதன் இடம் சொன்னார்.

உடனே “அப்பா,அம்மா ஜுரத்தே இப்படியே வச்சுண்டு வரக்கூடாது.உடனே ஒரு டாக்டர் கிட்டே காட்டி மாத்திரை வாங்கி சாப்பிடணும்.அம்மாவுக்கு வயசாகிறது.நாம ‘அசால்ட்டா’ இருந்து வரக் கூடாது” என்று சொல்லி விட்டு மங்களத்தைக் கூப்பிட்டு “மங்களம்,எனக்கு ‘ஆபீஸி’லே வேலை அதிகமா இருக்கு.என்னால் ‘லீவு’ போட முடியாது.அதனால்,நீ சித்தே அம்மாவை டாக்டருக் கு கிட்டே அழைச்சுண்டு போய் காட்டி மாத்திரை வாங்கிண்டு வா”என்று சொன்னார்.

உடனே மங்களம் “சா¢,நான் அம்மாவை டாகடர் கிட்டே அழைச்சுண்டு போய் மாத்திரை எழுதி வாங்கிண்டு வறேன்.நீங்கோ நிம்மதியா ‘ஆபீஸ்’க்குக் கிளம்புங்கோ” என்று சொல்லி தன் கணவரை ‘ஆபீஸ்’க்கு அனுப்பினாள்.

ரமா பள்ளிகூடம் போன பிறகு மங்களம் ஒரு ஆட்டோவை வந்துக் கொண்டு தன் மாமியாரை அழைத்துக் கொண்டு மாமனாரிடம் சொல்லிக் கொண்டு பக்கத்தில் இருந்த ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’க் கிளம்பினாள்.

பாதி ‘ஹிண்டு’ பேப்பரைப் படித்துக் கொண்டு இருந்த ராமசாமி எழுந்து ‘பாத் ரூம்’ போனார். அவர் ‘பாத் ரூம்’ போனால் வர கொஞ்சம் நேரம் ஆகும் என்று சுதாவுக்கு நன்றாகத் தெரியும்.

சுதா இது தான் நல்ல சமயம் என்று நினைத்து பீட்டருக்கு ‘போனில்’ மிக மெதுவாக “எங்காத் லே,உங்க அப்பா,பாட்டி சொன்ன மாதிரி,உங்க பேரே எங்க ஜாதிப் பேரா மாத்தி கல்யாணம் எல்லாம் பண்ணீ வக்க மாட்டான்னு தோன்றது.அதனாலே நான் ஆத்தே விட்டு கிளம்பி,ஒரு பையில் என் துணிமணிகளுடன் ‘சூப்பர் மார்கெட்டுக்கு’ வறேன்” என்று சொன்னாள்.

உடனே பீட்டர் “சுதா,நீ என்ன சொல்றே.அப்படி நீ உன் துணிமணிகளுடன் ‘சூப்பர் மார்கெட் ட்டுக்கு’ வந்து இருக்கேனு உங்க அம்மா அப்பாவுக்குத் தெரிஞ்சா,அவங்க ரெண்டு பேரும் உடனே இங்கே வந்து கலாட்டா பண்ணா,அப்புறமா அது ஒரு போலீஸ் ‘கேஸா’ ஆயிடும்.அப்புறமா நாம் ரெண்டு பேரும் கல்யாணமே பண்ணிக்க முடியாது.இதே நீ யோஜனைப் பண்ணீயா சுதா.அவசரப் படாதே சுதா.நல்லா யோஜனைப் பண்ணு” என்று கவலையுடன் சொன்னான்.

உடனே சுதா “நீங்கோ கவலைப் படாம இருந்து வாங்கோ.அது மாதிரி எல்லாம் ஆகாம நான் பாத்துக்கறேன்.நான் என் அப்பா,அம்மா,பாட்டி தாத்தா நாலு பேருக்கும் ஒரு ‘லெட்டர்’ எழுதி வக்கப் போறேன்.அந்த ‘லெட்டர்’லே ‘உங்களாலே பிராமண வழக்கப்படி எனக்கும் பீட்டருக்கும் இந்த ஜென் மத்லே கல்யாணம் பண்ணி வக்க முடியாது.அதனாலே ‘நான் ஆத்தே வீட்டு ‘ஓடிப் போகப் போறேன். என்னை நீங்க யாரும் தேட வேணாம்’ன்னு எழுதி வச்சுட்டு,என் துணிமணிகளை எல்லாம் எடுத்து ண்டு சூப்பர் மார்கெட்டுக்கு வந்துடறேன்.ஆத்தே விட்டு ‘ஓடிப் போன’ என்னே அவா நீச்சியமா தேட வ மாட்டா.நீங்கோ ¨தா¢யமா இருந்துண்டு வாங்கோ” என்று சொல்லி ‘போனை கட்’ பண்ணினாள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *