அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 24, 2021
பார்வையிட்டோர்: 3,915 
 

அத்தியாயம்-29 | அத்தியாயம்-30

கொஞ்ச நேரமானதும் “என் அக்காவும்,அத்திம்பேரும் என் கல்யாண செலவே முழுக்க ஏத்துண்டு பண்னதாலே தான் எனககு ஒரு கல்யாணம் ஆச்சு.இல்லாட்டா,சுந்தரம் மாமா மாதிரி, நானும் ஒரு கட்டே பிரம்மசாரியாத் தான் இருந்துண்டு வந்து இருக்கணும்” என்று சொல்லி வருத்தப் பட்டான்.

“பொண்ணே பெத்தவா கல்யாணத்துக்கு அவா சக்திக்கு என்ன முடியுமோ அதே பண்ணச் சொல்லி,அவா பொண்ணெ பிடிச்சு இருந்தா கல்யணம் பண்ணீக்கணும்.வெறுமனே அவாளே ‘இதே பண்ணுங்கோ’ ‘அதே பண்ணுங்கோ’ ‘இதேப் போடுங்கோ’ அதேப் போடுங்கோ’ன்னு எல்லாம் ‘கம்பெல்’ பண்ணக் கூடாது.அப்படி பண்றது ரொம்ப தப்பு.அதனால்லே பாவம் நிறைய பொண்ணுங்க கல்யாணம் ஆகாமலே சுந்தரம் தங்கே பண்ணா மாதிரி ‘தப்பான காரியத்லே’ தான் இறங்கிடறா.அவா ளாலே பாவம் கல்யாண ஆசையே அடக்கிக் கொள்ள முடியறதில்லே.நாம அந்த பொண்களே குத்தம் சொல்றதே அர்த்தமே இல்லே.பிள்ளேயே பெத்தவா மாறணும்” என்று சொல்லி வருத்தப் பட்டார் பரமசிவம்.

மறுபடியும் ‘காலிங்க் பெல்’ அடித்தது.

பரமசிவம்” நம்மாத்துக்கு வர வேண்டிய நீங்கோ ரெண்டு பேரும் வந்தாச்சே.யார் இப்போ இந்த ‘காலிங்க்’ பெல்லை அழுத்தறா.வரதா,அந்த வாசல் கதவே தொறந்து யாருன்னு பாருடா வரதா” என்று சொல்லி அலுத்துக் கொண்டார்.

வரதன் வாசல் கதவைத் திறந்ததும் ரமேஷ் வேஷ்டி சட்டையுடன், நெற்றியிலே விபூதியை இட்டுக் கொண்டு நின்றுக் கொண்டு இருப்பதைப் பார்த்து “அப்பா, நீங்களா.உள்ளே வாங்கோப்பா” என்று சந்தோஷமாக அழைத்தான் சதாசிவம்.

இத்தனை வருடங்களுக்கு பிறகு ரமேஷைப் பார்த்த வரதனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

ரமேஷ் அழுதுக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தான்.

சதாசிவம் ‘அப்பா, நீங்களா’ என்று சொன்னதைக் கேட்ட பரமசிவம்,அப்போது தான் அன் றைய ‘ஹிந்து’ பேப்பரைப் படிக்க,‘டைனிங்க் டேபிளுக்கு’ தன் மூக்கு கண்னாடியை எடுத்துக் கொண்டு வந்தவர்,தன் கண்களில் அந்த மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு வாசலைப் பார்த்தார்.

பதிநான்கு வருடங்களுக்கு முன்னாலே சந்தோஷமாக தன்னை விட்டு அமெரிக்காப் போன ஒரே பையன் அவர் வீட்டு வாசல்லே அழுதுக் கொண்டு நின்றுக் கொண்டு இருப்பதைப் பார்த்த அவருக்கு தூக்கி வாரிப் போட்டது.

அமெரிக்கா போகும் போது வாளிப்பாக இருந்த ரமேஷ்,இப்போது பாதியாக மெலிந்துப் போய் இருந்தான்.

பரமசிவத்திற்கே ரமேஷை அடையாளம் சரியாகத் தெரியவில்லை.

“சதா,யார் உங்க அப்பாவா நம்மாத்து வாசல்லே நின்னுண்டு இருக்கான்.எனக்கு அவனே சரியா அடையாளமே தெரியலை.அவன் இப்படி மெலிஞ்சுப் போய் இருக்கானே.அவன் அமெரிக்கா போனப்ப நன்னா வாளிப்பா இருந்தானே “என்று கேட்டதும் சதாசிவம் ”ஆமாம் தாத்தா.அப்பா தான் வந்து நின்னுண்டு இருக்கா.அவர் மெலிஞ்சுத் தான் இருக்கார்.அப்பா அழுதுண்டு இருக்கார்” என்று சொன்னான்.

உடனே சுந்தரம் சமையல் ரூமை விட்டு வெளியே வந்து,வாசலைப் பார்த்து “ஆமாம் மாமா, உங்க பிள்ளை தான் வந்து இருக்கார்.அவர் அழுதுண்டு நின்னுண்டு இருக்கார்” என்று சொன்னார்.

ரமேஷ் வாசலில் இருந்தே “அப்பா,நான் உள்ளே வரலாமா.நீங்கோ இந்த ‘பாவி’யே மறுபடியும் இந்த ஆத்துக்குள்ளே வர சம்மதிப்பேளா.உங்களுக்கு சம்மதம் இல்லேன்னா என் கிட்டே ¨தா¢யமா சொல்லுங்கோ.நான் உங்களுக்குப் பொறந்த பையன்.நீங்கோ என்ன சொன்னாலும்,நான் கேக்க கடமைப் பட்டு இருக்கேன்.அது வரைக்கும் நீங்கோ என்னுடைய பையனை,உங்க பேரனை, சதாசிவனை ‘இந்த ஆத்துக்குள்ளே வறாதேடா’ன்னு சொல்லி விரட்டாம,அவனை ஏத்துண்டு இருக் கேளே.அது போதும் எனக்கு.நீங்கோ என்னே இந்த ஆத்துக்குள்ளே வரச் சொல்லாட்டா,நான் பக்கத் லே ஒரு ‘ப்லாட்டே’வாடகைக்கு எடுத்துண்டு,உங்க கிட்டேயும்,சதாசிவத்துக்கு கிட்டேயும் ‘போன் லே’ தினமும் பேசிண்டு வந்துண்டு இருக்கேன்” என்று சொல்லி விட்டு,அழுதுக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தான்.

சுந்தரம் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.

சுந்தரம் அழுவதைப் பார்த்த பரமசிவம் பாசம் பொங்க “நீ ஏண்டா அழறே சுந்தரம்.நான் ஒன்னும் அவ்வளவு ‘கல் நெஞ்சுக்காரன்’ இல்லேடா.ரமேஷே மனசு திருந்தி,அமெரிக்காவை விட்டு ட்டு மறுபடியும் என் கிட்டே வந்து இருக்கான்.போறாததுக்கு அவன் பையனையும் என் கிட்டே அனுப்பி இருக்கான்.நான் அவனை இந்தாத்துக்குள்ளே ‘வறாதே’ன்னு சொல்ல எனக்கு ¨தா¢யம் இல்லேடா.நான் ஆடாட்டாலும் என் சதை ஆடறதேடா சுந்தரம்.நான் என்ன பண்ணட்டும் சொல்லு” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

“அத்திம்பேர்,ரமேஷை ஆத்துக்கு உள்ளே வரச் சொல்லுங்கோ.நீங்கோ ஒன்னும் சொல்லாம இருந்தா அவர் போயிடப் போறார்” என்று ஒரு வித பயத்துடன் சொன்னான் வரதன்.

கொஞ்ச நேரம் ஆனதும்” உள்ளே வாடா ரமேஷா.உள்ளே வாடா.நீ அமெரிக்காவே விட்டுட்டு என் ‘பிராணன்’ போறதுக்கு முன்னாடி மறுபடியும் என்னேப் பாக்க வருனேன்னு நான் கனவிலும் நினைக்கலேடா.நான் பாக்கறது கனவா,இல்லே நிஜமா” என்று சொல்லி மெல்ல எழுந்து வாசலுக்கு நடக்க ஆரம்பித்தார்.

அவர் நடையிலே ஒரு தள்ளாட்டம் தெரிந்தது.

சதாசிவமும் அழுதுக் கொண்டு இருந்தான்.

ரமேஷ் தான் கொண்டு வந்த ‘இழுத்துக் கொண்டு வரும்’ பெட்டியை வாசலிலேயே விட்டு விட்டு உள்ளே ஓடி வந்து தன் அப்பாவை தாங்கிப் பிடித்துக் கொண்டு,அவரை ‘சோபா’வில் உட்கார வைத்தான்.
சதாசிவம் அப்பா கொண்டு வந்த பெட்டியை இழுத்துக் கொண்டு வந்து ‘ஹாலில்’ வைத்தான்.

தன் பாக்கெட்டில் வைத்து இருந்த கைக் குட்டையை எடுத்து அப்பாவின் கண்களைத் துடைத்துக் கொண்டே” அப்பா,நீங்கோ இந்த ‘பாவி’யே மன்னிச்சு இந்த ஆத்துக்குள்ளே வரச் சொல் வேள்ன்னு,நான் நினைக்கலேப்பா.உண்மையிலே நீங்கோ ரொம்ப ‘க்ரேட்’.ஆனா இந்த ‘க்ரேட்’ அப்பா

வுக்குப் பொறந்த நான் தான் ‘சரியே இல்லாத ஒரு பையன்.ஒரு ‘யூஸ் லெஸ்’ பையன்” என்று சொல்லி விட்டு விக்கி, விக்கி அழுதுக் கொண்டு இருந்தான்.

பரமசிவத்திற்கு தன் ஒரே பையன் தன் பக்கத்தில் உட்காந்துக் கொண்டு தன் கண்களைத் துடைத்து விட்டது தாங்க முடியாத சந்தோஷத்தை கொடுத்தது.

அவர் ரமேஷைப் பார்த்து “ரமேஷா, என்னே உன் மடியிலே கொஞ்ச நேரம் படுத்துக்க வை. எனக்கு உன் மடியிலே படுத்தக்கணும் ரொம்ப ஆசையா இருக்கு.உன்னே எத்தனை வருஷம் நான் ஆசை ஆசையா என் மடியிலே வச்சுண்டு கொஞ்சி இருக்கேன் தெரியுமா” என்று ஒரு சின்ன குழந் தையைப் போல கேட்டார்.

உடனே ரமேஷ் அப்பாவை தன் மடியிலே படுக்க வைத்துக் கொண்டு,அவர் கைகளைத் தடவிக் கொடுத்துக் கொண்டு இருந்தான்.

கொஞ்ச நேரமானதும் ரமேஷ் “அப்பா,நான் என் வேலையை ராஜினாமா பண்ணிட்டு,என் கிட்டே இருந்த கார்களையும்,என் பொ¢ய வீட்டையும்,எல்லா சாமான்களையும் வித்துட்டு, என்னோட பழைய துணிமணிகளையும்,சதாசிவத்துக்கு சின்னதா போன துணீமனிகளையும் ஒரு ‘Old age Home’லே குடுத்துட்டு,அமெரிக்காவை விட்டுட்டு,நிரந்தரமா உங்க கூடவே இருக்கலாம்ன்னு நினைச்சு வந்துட்டேன்பா.இனிமே நான் உங்க கூடவே இருந்து வறப் போறேன்ப்பா. நீங்கோ சொல்வதை எல்லாம் நான் தினமும் பண்றேன்ப்பா” என்று சொல்லி அழுதான்.

உடனே சதாசிவம் “அப்பா,நீங்கோ எங்க கூடவே இருந்து வறப் போறேளா.அமெரிக்காவை விட்டுட்டு சென்னைக்கு ‘பார் குட்’ வந்துட்டேளா.நீங்கோ இப்படி ‘திடு திப்’புன்னு வருவேள்ன்னு நான் நினைக்கவே இல்லேப்பா.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா” என்று இழுத்து,இழுத்துச் சொல்லி விட்டு அப்பாவை கட்டிக் கொண்டான்.

“ஆமாம் சதாசிவா,நீ எனக்கு ‘போன்லே’ சொன்ன ரெண்டு ‘சாட் நியூஸே’க் கேட்டப்புறமா, நான் ரொம்ப நேரம் யோஜனைப் பண்ணேன்.எனக்கு தனியா ‘டல்லஸ்லே’இருந்து வர பிடிக்கலே. அதனால் நான் என் வேலையை ராஜினாமா பண்ணிட்டு,நம்ம கிட்டே இருந்த கார்களையும்,நம்ம பொ¢ய வீட்டையும் வித்துட்டு,அமெரிக்காவை விட்டுட்டு,நிரந்தரமா சென்னைக்கு வந்துட்டேன். நான் மறுபடியும் அமெரிக்கா போக மாட்டேன்” என்று சொன்னான் ரமேஷ்.

கொஞ்ச நேரமானதும் பையனிடம் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு,ரமேஷ் ஆசையாக தன் அப்பாவின் கைகளத் தடவிக் கொண்டு இருந்தான்.

இரண்டு நிமிஷம் ஆனதும் சுந்தரத்தை தன் அருகில் கூப்பிட்டு “எனக்கு இப்ப என்னடா குறை இருக்கு சுந்தரம்.எனக்குக் ‘கொள்ளீ’ப் போட என் பையன் என் கிட்டேயே வந்துட்டான். எனக்கு ‘நெய் பந்தம்’ பிடிக்க என் பேரனும் வந்துட்டான்.இப்போ என் ஆத்மா சாந்தியா ‘பரலோலம்’ போகும்டா.பாவம் அந்த பாக்கியம் சரோஜாவுக்குத் தான் கிடைக்கலே.பாவம் ரமேஷ் பண்ன ‘தப்பான காரியத்தே’ கேட்டவுடனே அவ பிராணனே விட்டுட்டாள்.ரொம்ப பாவம்.இதே நினைச்சாத் தான் என் மனசு ரொம்ப வேதனைப் படறது” என்று சொல்லி வருத்தப் பட்டார் பரமசிவம்.

உடனே சுந்தரம் “மாமா,நீங்கோ இப்படி ‘அபசகுனமா’ எல்லாம் பேசவே கூடாது.நான் சின்ன வன் தான்.ஆனா இதே சொல்ல எனக்கு எல்லா உரிமையும் இருக்கு.நான் இந்த ஆத்து ‘உப்பே’ இத்தனை வருஷமா தின்னுண்டு வந்து இருக்கேன்.உங்க அருந்த பையன் உங்க கிட்டே வந்து பத்து நிமிஷம் கூட ஆகலே.நீங்கோ உங்க பையன் கூடவும்,பேரன் கூடவும் இன்னும் ரொம்ப வருஷம் சந் தோஷமா இந்த ஆத்லே வாழ்ந்துண்டு வரணும்.நான் இனிமே தினமும் உங்க மூனு பேருக்கும் வடை பாயசத்தோடு,அப்பளமும் பொரிச்சு சாப்பாடு பண்ணிப் போடணும்” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீர்ரைத் துடைத்துக் கொண்டார்.

உடனே வரதன் “அத்திம்பேர்,சுந்தரம் மாமா சொல்றது ரொம்ப நியாயமான பேச்சு. அமெரிக்கா வை விட்டு ரமேஷ் நிரந்தரமா உங்க கூட இருக்க சென்னைக்கே வந்துட்டார்.நீங்கோ உங்க பிள்ளை ரமேஷோடவும்,பேரன் சதாசிவத்துடனும் உங்க நூறு வயசு வரைக்கும்,நீங்கோ சந்தோஷமா வாழ்ந்து ண்டு வரணும்.நீங்கோ இனிமே அப்படி எல்லாம் பேசவே கூடாது அத்திம்பேர்.நீங்கோ தானே எல்லார் கிட்டேயும் ‘நல்லதே பேசுங்கோ. நல்லதே சொல்லுங்கோ’ன்னு அடிக்கடி சொல்லுவேள்.இப்ப நீங்க ளே இப்படி ‘அபசகுனமா’ பேசலமா.இனிமே அப்படி எல்லாம் பேசாதீங்கோ.எங்க எல்லாருக்கும் அது தான் வேணும்.இனிமே நீங்கோ சந்தோஷமா இருந்துண்டு வரணும்” என்று அழுதுக் கொண்டே சொன்னான்.

“நான் அமெரிக்கா போறதுக்கு முன்னாடி அம்மா ஒரு ‘தீர்க்கதா¢சியே’ போல சொன்னா.அம்மா என்னேப் பாத்து ‘அமெரிக்கா எல்லாம் வேறே காலாச்சாரம் இருக்கிற நாடு.நீ அங்கே போய் ரெண்டு வருஷம் படிச்சு, MS டிகி¡£ வாங்கறதுக்குள்ளே,உனக்கு நம்ம நாட்டோட கலாச்சாரம் மறந்துப் போய், நீமாறி விட ரொம்ப ‘சான்ஸ்’ இருக்கு.நீ இப்போ ஒரு இள வயசுப் பையன்.நீ அங்கே போய் படிச்சு வரும் போது உன் புத்தி பேதலிக்க வாய்ப்பு இருக்கு.பேசாம இங்கே எந்த ‘யூனிவர்சிட்டிலே’ சேந்து ஒரு M.Tech.பண்ணேன்’ன்னு சொன்னாளேப்பா.ஆனா நான் தான் அம்மா சொன்னதே கேக்காம அமெரிக்கப் போனேன்.ஒரு குருக்கள் பரம்பரைலே பொறந்த நான் அப்படி ஒரு ‘காரியத்தே’ பண்ணீ யே இருக்க கூடாதுப்பா.அப்படி பண்ணதாலே தானே நான் என் அம்மாவை இப்போ இழத்து தவிக்க றேன்.எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குப்பா.இந்த மாதிரி நடக்கும்ன்னு எனக்கு தெரிஞ்சு இருந்தா நான் அந்த பாழும் அமெரிக்காவுக்கே போய் இருக்க மாட்டேன்ப்பா” என்று சொல்லி விட்டு விக்கி விக்கி அழுதான் ரமேஷ்.

சுந்தரம் எல்லோருக்கும் ‘டவரா டம்ளா¢ல்’ சூடாக ‘ஸ்ட்ராங்கான’ ‘காபி’யைப் போட்டுக் கொண்டு ‘டைனிங்க் டேபிளின்’ மேலே வைத்தார்.

பரமசிவம் மெல்ல எழுத்து பிள்ளையோடும்,பேரனோடும் சுந்தரம் வைத்து விட்டுப் போன ‘காபியை ரசித்துக் குடுத்தார்.‘காபி’யே குடித்து முடித்த பிறகு பரமசிவத்திற்கு என்ன தோன்றி யதோ தெரியவில்லை.

அவர் ரமேஷைப் பார்த்து ”ரமேஷா,எனக்கு என்னவோ போல இருக்கு.நான் இன்னும் சித்தே நேரம் உன் மடியிலே படுத்தக்கறேன்” என்று சொன்னதும் ரமேஷ் அப்பாவை மெல்ல தன் மடியிலே படுக்க வைத்துக் கொண்டான்.

வரதனும்,சுந்தரும் ‘பொ¢யவர் ஏன் அப்படி சொன்னார்’ என்று ஆச்சரியப் பட்டு சோபாவின் பக்கத்திலே வந்து நின்றுக் கொண்டு இருந்தார்கள்.சதாசிவமும் நின்றுக் கொண்டு இருந்தான்.

அவர் வாய் முணு முணுத்துக் கொண்டு இருந்தது.

‘சரோஜா,நான் ரமேஷை மன்னிச்சு இந்த ஆத்துக்குள்ளே வரச் சொன்னேன்.நான் பண்ணது தப்பா.எனக்கு என்னவோ அவன் மனம் மாறி மறுபடியும் இந்த ஆத்து வாசல்லே வந்து நின்னுண்டு ‘அப்பா,நான் உள்ளே வரலாமா.நீங்கோ இந்த ‘பாவி’யே மறுபடியும் இந்த ஆத்துக்குள்ளே வர சம்மதி ப்பேளா’ன்னுக் கேட்டப்ப,என்னே அறியாமலே என் உடம்பு சதெ எல்லாம் ஆட ஆரம்பிச்சுடுத்து.

நான் ரமேஷை இந்த ஆத்துக்குள்ளே வரச் சொல்லிட்டேன்.நான பண்ணது தப்பா.நீ சொல்லு சரோஜா. நீயே சொல்லு சரோஜா’ என்று மெல்ல முணு முணுத்துக் கொண்டு இருந்தார்.
“மாமா,நான் சின்னவன் தான்.நான் சொல்றேன்னு நீங்கோ தப்பா மட்டும் எடுத்துகாதீங்கோ. மாமி இந்த ஆத்லே இருந்து இருந்தா,நீங்கோ பண்ணதே தான் பண்ணி இருப்பா. நீங்கோ பண்னது தப்பே இல்லே” என்று அழுதுக் கொண்டே சொன்னார் சுந்தரம்.

“ஆமாம் அத்திம்பேர் சுந்தரம் மாமா சொல்றது நூத்துக்கு நூறு நிஜமான வார்த்தை. ரமேஷ் இந்த ஆத்துக்கு தன் பையனே அனுப்பிட்டு,அப்புறமா அவர் நம்மாத்து வாசல்லே நின்னுண்டு ‘அப்பா,நான் உள்ளே வரலாமா.நீங்கோ இந்த ‘பாவி’யே மறுபடியும் இந்த ஆத்துக்குள்ளே வர சம்மதிப்பேளா’ன்னு கேட்டு அழறதேப் பாத்தா, அக்கா ஓடிப் போய் அவரே கட்டிண்டு ஆத்துக்கு உள்ளே அழைச்சுண்டு வந்து இருப்பா” என்று சொன்னான் வரதன்.

அந்த நேரம் பார்த்து சரோஜாவின் படத்தில் மேல் நேற்று வைத்து இருந்த ரோஜாப்பூ கீழே விழுந்தது.

உடனே வரதன் “பாத்தேளா அத்திம்பேர்.நாம நேத்துக் காத்தாலே அக்காவின் படத்து மேலே வச்சு இருந்த ரோஜாப்பூ,இது வரைக்கும் கீழே விழாம,நீங்கோ இப்போ அக்காவே கேட்டப்ப சரின்னு சொல்லி தன் தலையிலே இருந்த ரோஜாப் பூவே கீழே தள்ளி இருக்கா.அக்கா நீங்கோ,ரமேஷை இந்த ஆத்துக்குள்ளே வர சொன்னதுக்கு தன் சம்மதத்தே சொல்லி இருக்கான்னு தான் அர்த்தம்” என்று சந்தோஷத்தில் சொன்னான்.

“அப்போ நீங்கோ மூனு பேரும் நான் பண்ணது ‘சரி’ன்னு சொல்றேளா” என்று கேட்டதும் இருவரும் ‘கோரா¡க’ ”ஆமாம்,ஆமாம்” என்று சொன்னதும் பரமசிவம் சந்தோஷப் பட்டார்.

கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டு இருந்த பரமசிவம் மெல்ல எழுந்தார்.

தன் ‘வாக்கரை’ வைத்து மெல்ல நடந்து ‘பாத் ரூமு’க்குப் போய்க் குளித்து விட்டு கொடியிலே இருந்த வேஷ்டியைக் கட்டிக் கொண்டு,நெற்றியிலே விபூதியை இட்டுக் கொண்டு பஞ்ச பாத்திரத்தில் ஜலத்தைப் பிடித்துக் கொண்டு,’டைனிங்க் டேபிளில்’ உட்கார்ந்துக் கொண்டு சந்தியாவந்தனம் பண்ண ஆரம்பித்தார்.

ரமேஷ் குளித்து விட்டு வந்து அம்மா படத்துக்கு முன்னால் நின்றுக் கொண்டு,கண்களில் கண்ணீருடன் “அம்மா என்னே கொஞ்சம் மன்னிச்சிடுங்கோ.நான் நீங்கோ சொல்லியும் கேக்காம, அந்த பாழும் அமெரிக்காவுக்குப் போய்,இந்த குடும்பத்துக்கே ஒரு ‘கேவலத்தை’ப் பண்ணிட்டேன். உங்க ஆசீர்வாதம் தான் என்னை திரும்ப இந்த ஆத்துக்கு அழைச்சிண்டு வந்து இருக்கு.இனிமே நானும்,சதாசிவமும் அப்பாவே சந்தோஷமா வச்சிண்டு வருவோம்ம்மா” என்று சொல்லி ஒரு நமஸ்கார ரத்தை பண்ணினான்.

ரமேஷ் சொல்லவே,சதாசிவமும் சரோஜா படத்துக்கு ஒரு நமஸ்காரம் பண்ணினான்.

கொஞ்ச நேரம் ஆனதும் சுந்தரம் ‘டைனிங்க் டேபிளில்’ சூடாக இட்லியையும்,உளுந்து வடை யும்,வெங்காய சாம்பாரும்,தேங்காய் சட்னியையும் கொண்டு வந்து வைத்தார்.
பரமசிவமும்,ரமேஷூம்,சதாசிவமும் ‘டைனிங்க் டேபிளில்’ வந்து உட்கார்ந்துக் கொண்டதும், “மாமா,என்னே தப்பா எடுத்துக்காதீங்கோ.நான் உங்களுக்கு தினமும் வெறும் இட்லியே தான் பண்ணுவேன்.உங்க உடம்புக்கு இந்த எண்ணே பண்டங்கள் எல்லாம் ஆகாதுன்னு எனக்கு நன்னாத் தெரியும்.ஆனா ரமேஷூம் சதாசிவமும் இப்போ சின்னவா.அவ சாப்பிடத்தான் தான் உளுந்து வடை யையும்,வெங்காய சாம்பாரும் பண்ணீ இருக்கேன்” என்று சொன்னான்.வரதன் மாத்திரை டப்பாவை எடுத்துக் கொண்டு வந்தான்.

”மாமா,நீங்கோ அப்பாவுக்கு என்ன,என்ன மாத்திரே எப்போ,எப்போ தறேள் ன்னு எனக்கு சொல்லுங்கோ.நான் இன்னிலே இருந்து அப்பாவுக்கு அந்த மாத்திரைகளை எல்லாம் குடுத்துண்டு வறேன்” என்று ரமேஷ் கேட்டதும்,வரதன் பரமசிவத்திற்கு அவன் தினமும் கொடுக்கும் மாத்திரை விவரத்தை ரமேஷிடம் சொன்னான்.

ரமேஷ் அப்பாவுக்கு வரதன் சொன்னா மாதிரி மாத்திரைகளை கொடுத்து வந்தான்.

“சுந்தரம்,நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்,நீ அவா ரெண்டு பேரும் என்ன என்ன கேக்கறா ளோ அதே எல்லாம் பண்ணீக் குடுத்துண்டு வா” என்று சொன்னதும் சுந்தரம் சந்தோஷப் பட்டார்.

‘டிபனை’ சாப்பிட்டு முடிந்ததும் ரமேஷ் “அப்பா,ராத்திரியிலே நான் உங்க கூடவே அம்மா படுத்துண்டு இருந்த ‘பெட்’டில் படுத்துண்டு வறேன்.நீங்கோ இன்னிலே இருந்து தனியாவே படுத்து ண்டு வர வேணாம்.இத்தனை வருஷமா படுத்துண்டு வந்தது போறும்” என்று அப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டு,கண்களில் கண்ணீர் மல்கச் சொன்னான்.

“படுத்துண்டு வாடா.நீ சொன்னதே கேக்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொன்ன பரமசிவமும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தார்.சொன்னது போலவே ரமேஷ் அப்பா கூட,அவன் அம்மா படுத்துக் கொண்டு இருந்த ‘பெட்’டில் படுத்துக் கொண்டு வந்தான்.

சதாசிவம் தினமும் பரமசிவத்தின் காரில் பள்ளிக் கூடம் போய் வந்து நன்றாகப் படித்துக் கொண்டு வந்தான்.

பரமசிவம் தன்னுடைய ஜூனியர் ஒருவரை வீட்டுக்கு வரச் சொல்லி,அந்த ‘பலாட்டின்’ பத்திரத்தைக் அவா¢டம் கொடுத்து ரமேஷ் பேர்லே மாற்றச் சொன்னார்.ஒரு வாரம் ஆனதும் அந்த ஜூனியர் ‘ப்லாட்டை’ ரமேஷ் பேர்லே மாற்றி விட்டு,அந்த பத்திரத்தை பரமசிவத்திடம் கொடுத்து விட்டு,அதற்கு அவர் செலவு பண்ண பணத்தை வாங்கிக் கொண்டு போனார்.
பரமசிவம் அந்த ஜூனியருக்கு தன் ‘தாங்க்ஸை’ சொன்னார்.

அடுத்த நாள் பரமசிவம் ரமேஷை கூட அழைத்துக் கொண்டு,‘பாங்கு’க்கு போய்,அவர் ‘அக்கவு ண்டில்’ ரமேஷ் பேரை ‘ஜாயிண்டாக’ போட்டுக் கொண்டு வந்தார்.

ரமேஷ் ஒரு வாரம் ‘ரெஸ்ட்’ எடுத்துக் கொண்டு சென்னையிலே இருந்த Texas Instruments Companyக்கு போய் அங்கே இருந்த ‘டைரக்டரை’ப் பார்த்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ’டல்லஸ்ஸிலே’ இருந்த போது தன் கதை பூராவையும் சொல்லி விட்டு,இப்போது சென்னையிலே வேலே செய்து வர ஆசைப் படுவதாய் சொன்னார்.

சென்னையிலே ‘டைரக்டராக’ வேலை செய்து வந்த ஒரு அமெரிக்கன்.

அவர் ரமேஷ்க்கு ரொம்ப ‘ஜூனியர்’.அவர் உடனே ‘டல்லஸ் ஹெட் ஆபீஸ்’க்கு’ ‘போன்,தன் இடத்தில் ரமேஷை டைரக்டரா க வேலை செய்து வரும்படி சொல்லி விட்டு,தான் மறுபடியும் ‘டல்லஸ்’ வர விரும்புவதாக சொன்னதும்,‘ஹெட் ஆபீஸ்’ ஒத்துக் கொண்டு,உடனே அதற்கு ஒரு ‘ஆர்டரை’
யும் அனுப்பியது,
ரமேஷ் வீட்டுக்கு வந்து அப்பாவிடமும் சதாசிவத்திடமும் இந்த சந்தோஷ சமாசாரத்தை சொன் னான். எல்லோரும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

அடுத்த நாளே ரமேஷ் ஒரு கார் கடைக்குப் போய் ஒரு ‘இன்னோவா’காரை வாங்கிக் கொண்டு வந்தான்.அன்று சாயந்திரமே ரமேஷ் வரதன் உதவியுடன்,அப்பாவையும்,சதாசிவத்தையும், சுந்தரத் தையும் அழைத்துக் கொண்டு ராஜ ராஜேஸ்வா¢ அம்மன் கோவிலுக்குப் போய் ‘காரு’க்கு ஒரு பூஜை யைப் பண்ணிக் கொண்டு,அப்பாவின் கையை மெல்ல பிடித்துக் கொண்டு அம்மனுக்கு ஒரு அர்ச்ச னையையும் பண்ணிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

வீட்டுக்கு வந்ததும் ”ரமேஷ்,நீ என் கையேப் பிடிச்சுண்டு ராஜ ராஜேஸ்வா¢ கோவில்லே அழைச் சுண்டுப் போனப்ப,எனக்கு நானும்,அம்மாவும் ஒவ்வொரு வெள்ளி கிழமையும்,அந்த கோவிலுக்கு உன் கையேப் பிடிச்சு அழைச்சிண்டு போனது தான் என் ஞாபகத்துக்கு வந்தது” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீர்ரைத் துடைத்துக் கொண்டார்.
பரமசிவம் சொன்னதைக் கேட்ட வரதனும்,சுந்தரமும் பரமசிவத்தின் ஞாபக சக்தியை நினைத்து ஆச்சரியப் பட்டார்கள்.

உடனே ரமேஷ்”நீங்கோ அழாதீங்கோப்பா.இனிமே நான் எல்லா வெள்ளீகிழமையும் தவறாம உங்களே ராஜ ராஜேஸ்வா¢ கோவிலுக்கு அழைச்சுண்டு போறேன்ப்பா” என்று சொன்னார்.

அடுத்த வாரம் திங்கட் கிழமை ரமேஷ் ‘ஆபிஸ்’ போவதற்கு முன் அப்பாவுக்கு ஒரு நமஸ் காரத்தை பண்ணி விட்டு,”அப்பா,நான் இன்னிலே இருந்து சென்னை Texas Instruments Companyலே ஒரு ‘டைரக்டராக’ வேலே பண்ணீண்டு வறப் போறேன்.என்னே ஆசீர்வாதம் பண்ணு ங்கோ” என்று சொல்லி தன் தலையை குனிந்துக் கொண்டு இருந்தான்.

பரமசிவம் சதோஷப் பட்டு “ரமேஷ்,நீ ரொம்ப வருஷம் நன்னா இருக்கணும்” என்று சொல்லி ஆசீர்வாதம் பண்ணீனார்.

ரமேஷ் ஆபீஸ்க்கு வந்ததும்,அந்த அமெரிக்கன் தன் வேலையை ரமேஷ்க்கு ‘ஹாண்ட் ஓவர்’ பண்ணி விட்டு,அவர் ‘டல்லஸ்’ கிளம்பிப் போய் விட்டார்.அன்று முதல் ரமேஷ் சென்னை ‘கம்பெனியி லே டைரக்டராக’ வேலை செய்து வர ஆரம்பித்தான்.

அந்த வார வெள்ளீ கிழமை ரமேஷ் தன் அப்பாவிடம் சொன்னது போல ‘ஆபீஸை’ விட்டு, சீக்கிரமாக ‘ப்லாட்டு’க்கு வந்து,அப்பாவையும்,மற்ற மூவரையும் தன் ‘இன்னோவா’ காரில் அழைத் துக் கொண்டு ராஜ ராஜேஸ்வா¢ அம்மன் கோவிலுக்குப் போய்,அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு போய் அம்மனுக்கு ஒரு அர்ச்சனையை பண்ணி விட்டு ‘ப்லாட்டு’க்கு அழைத்து வந்தார்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.

காலையிலே பரமசிவம் பல்லைத் தேய்த்துக் கொண்டு,நெற்றீயிலே விபூதியை இட்டுக் கொண்டு சந்தியாவந்தனதைப் பண்ணினார்.சந்தியாவந்தனம் முடிந்ததும், அவர் மெல்ல எழுந்து வந்து ரமேஷைப் பார்த்து” ரமேஷ் என்னே கொஞ்சம் உன் மடிலே விட்டுக்கோ.எனக்கு என்னவோ உன் மடிலே படுத்தக்கணும் ரொம்ப ஆசையா இருக்கு” என்று சொன்னார்.
உடனே ரமேஷ் அப்பாவை தன் மடியிலே விட்டுக் கொண்டு “ஏம்ப்பா அப்படி சொன்னேள்.

எனக்கு ரொம்ப பயமா இருக்கு”என்று கேட்டார்.

சுந்தரமும்,வரதனும் உடனே வந்து பரமசிவத்தின் பக்கத்தில் நின்றுக் கொண்டார்கள்.

பரமசிவம் தன் கண்களை மூடிக் கொண்டு இருந்தார்.உடனே ரமேஷ் “அப்பா,உங்களுக்கு என்ன பண்றது.வாங்கோ ஒரு டாக்டர் கிட்டே போய் காட்டிண்டு வரலாம்” என்று அழுதுக் கொண்டே கேட்டான்.அவர் வாய் ஏதோ முணு முணுத்துக் கொண்டு இருந்தது.

“சரோஜா,எனக்கு என் ‘காலம்’ முடிஞ்சுடுத்துன்னு நன்னா தெரிஞ்சுப் போச்சு.நான் சீக்கிரமா உன் கிட்டே வந்துடறேன்.உனக்கு நான் எல்லா காரியமும் ‘கிரமமா’ பதி மூனு நாளைக்கு பண்ணீ னேன்.என் காரியங்களே எல்லாம் அந்த மாதிரி ‘கிரமா’ பண்ண,அந்த பகவான் தான் ரமேஷையும் சதாசிவத்தையும்…..” ன்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது,அவர் முணு முணுப்பு நின்று போய் அவர் தலை சாய்ந்து விட்டது.

ரமேஷ்க்கு தூக்கி வாரிப் போட்டது.“அப்பா,அப்பா” என்று கத்தி அப்பாவை உலுக்கினார். சிறிது நேரத்தில் அவர் உடம்பு ‘ஜில்’ என்று ஆகி விட்டது.
“ரமேஷ்,அப்பா நான் உங்க கிட்டே வந்து இன்னும் ஒரு மாசம் கூட ஆகலேயே.உங்க கூட இன்னும் சில வருஷம் இருக்கலாம்ன்னு தானே,நான் ‘டல்லசை’விட்டு வந்தேன்.ஆனா இப்போ நீங்கோ என்னே விட்டுட்டுப் போயிட்டேளே.எனக்கு உங்க கூட இருந்து வர பாக்கியத்தே தராம, நீங்கோ என்னே விட்டுப் போயிட்டேளே.இனிமே நான் என்ன பண்ணப் போறேன்.நான் இனிமே யாரை ‘அப்பா’ ‘அப்பா’ ன்னு ஆசையா கூப்பிடப் போறேன்” என்று தலையிலே அடித்துக் கொண்டு அழுதார்.சுந்தரமும்,வரதனும்,சதாசிவமும் அழுதுக் கொண்டு இருந்தார்கள்.

ஒரு மணி நேரம் ஆனதும் வரதன் ஒரு ‘ஐஸ் பெட்டிக்கு’ ஆர்டர் பண்ணீ அந்தப் பெட்டி வந்த தும்,அவனும், சுந்தரமும் பரமசிவத்தின் ‘பூத உடலை’ அந்த ‘ஐஸ் பெட்டி’யிலே படுக்க வைத்தார்கள். வரதன் ஓடிப் போய் நாலு ரோஜாப் பூ மாலைகளை வாங்கி வந்து வந்தான்.

ரமேஷூம்,சதாசிவமும் ஆளுக்கு ஒரு ரோஜாப் பூ மலையை ‘ஐஸ் பெட்டி’ மேலே போட்டு விட்டு அழுதுக் கொண்டு இருந்தார்கள்.வரதனும் சுந்தரமும் ஆளுக்கு ஒரு ரோஜாப் பூ மலையை ‘ஐஸ் பெட்டி’ மேலே போட்டு விட்டு அழுதுக் கொண்டு இருந்தார்கள்.வரதன் ஆத்து வாத்தியாருக்கு ‘போன்’ பண்ணி “வாத்தியார்,என் அத்திம்பேர் இன்னேக்கு காத்தாலே ‘திடீர்’ன்னு காலமாயிட்டார். நீங்கோ உடனே எங்க ஆத்துக்கு வாங்கோ” என்று அழுதுக் கொண்டெ சொன்னான்.

வாத்தியார் வந்ததும் ரமேஷ்,சதாசிவத்தை ’நெய் பந்தம்’ பிடிக்கச் சொல்லி விட்டு,அப்பாவின் பூத உடலை ‘தகனம்’ பண்ணினார் ரமேஷ்.அடுத்த பன்னிரண்டு நாட்களுக்கு அப்பாவுக்கு எல்லா ‘காரியங்களையும்’ கிரமமாக அழுதுக் கொண்டே பண்ணி முடித்தார்.பன்னண்டு நாள் ‘காரியங்கள்’ முடிந்ததும்,பதி மூன்றாவது நாள் வாத்தியார் ‘ப்லாட்டுக்கு’ புண்யாவசனம்’ பண்ணீனார்.வாத்தியார் எல்லோருக்கும் மூன்று உத்தரணீ ‘புண்யாவசன ஜலத்தை’க் கொடுத்து விட்டு,’புண்யாவசன ஜலத்தை’ வீட்டு பூராவும் தெளித்தார்.
அப்பாவின் ‘போட்டோ’வை,அம்மாவின் ‘போட்டோ’வுக்கு பக்கத்திலே மாட்டி,தினமும் ரெண்டு படத்துக்கும் ஒரு ரோஜாப் பூ மாலையைப் போட்டு விட்டு,வேலேக்கு போகும் முன் ‘சிரத்தை யாக’ ஒரு நமஸ்காரத்தைப் பண்ணிவிட்டு வேலைக்குப் போய்க் கொண்டு இருந்தான் ரமேஷ்.‘நாம இப்போதாவது சரியான ‘டிஸிஷனே’ எடுத்து ‘டல்லஸை’ விட்டு நிரந்தரமா சென்னைக்கு வந்தோமே. அப்படி வந்ததால் தான் அப்பாவுக்காவது ‘காரியங்களே’ எல்லாம் நல்ல விதமா நம்மாலே பண்ணமுடிஞ்சது’ என்று நினைத்து ரமேஷ் மனம் சந்தோஷப் பட்டது.

சுந்தரத்தையும், வரதனையும் அவர்கள் செய்துக் கொண்டு இருந்த வேலையை செய்து வரச் சொல்லி விட்டு,அப்பா,அம்மா வாழ்ந்து வந்த ‘ப்லாட்டி’லே வாழ்ந்து வந்து,Texas Instruments Companyயில் ஒரு’டைரக்டராக’ வேலை செய்து வந்து,மறுபடியும் கல்யாணமே பண்ணிக்காமல், மீதி காலத்தை ஒரு ‘தனி மரமாக’ இருட்டில் கழித்து வந்து வந்தார் ரமேஷ்.

பிள்ளையின் ‘நல் வாழ்க்கைக்காக’,தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வந்து, ஒரு ‘மெழுகு வர்த்தியை’ப் போல வாழ்ந்து வந்து சதாசிவனுக்கு ‘வெளிச்சம்’ கொடுத்து வந்தார் ரமேஷ்.

-முற்றும்-

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *