கொசு செய்த கொலை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: February 10, 2020
பார்வையிட்டோர்: 34,952 
 

சென்னையில் புலன் ஆய்வுத் துறைக்கு பொறுப்பான போலீஸ் அதிகாரியான சீனியர் அத்தியட்சகர் (Senior Superintendent) சாம்பசிவம் பலரால் கண்டுபிடிக்க முடியாத மர்மம் நிறைந்த கொலை கேசுகளை தனது தொழில் நுட்ப அறிவை பாவித்து உதவியாளன் இன்ஸ்பெக்டர் ராஜனின் உதவியோடு கண்டு பிடித்தவர். துப்பறியும் சாம்பு என்ற பட்டப் பெயரால் பலரால் அழைக்கப்படும் அவர் மென் போருள் துறையில் பட்டம் பெற்றும், ஆர்வம் காரணமாக போலீசில் சேர்ந்தார். அவரின் தொழில் நுட்ப அறிவை போலீஸ் பாவித்தது. பல கேசுகளை தன் மென் பொருள் அறிவைப் பாவித்து கண்டு பிடித்தவர் சாம்பு. அதில் ஓன்று தகவல் திருடன் தாமஸின் கேஸ் .தாமஸ் பல வங்கிகளில் கொள்ளையடித்தவன் ஆனால் சில நாட்களாக தகவல் தேடல் என்ற Data Search பிரபல நிறுவத்தின் பிரதான பரிபாலான அதிகாரி சுந்தரின் மரணம் சாம்புவுக்கு புதிராக இருந்தது.

தன் மேசையில் இருந்த லப் டாப் கம்பூட்டருக்கு முன் அமர்ந்து சுந்தர் கொலை கேசின் விபரத்தையும் அதோடு தொடர்பு உள்ள படங்களையும் பார்த்தார் சாம்பு. .என்ன அழகிய சுந்தரின் ஆபிஸ். பல தொழில் நுட்ப கருவிகளோடு.காட்சி கொடுத்தது ஆபிஸ் அறையின ஒரத்தில் விசிறி போன்ற இலைகளோடு மரம் ஓன்று இருந்தது. அவரின் மேசையில் மூன்று குரங்குகளின் சிலை அறையின் சுவரில் அழகிய இயற்கை காட்சியின் படம். அறையின் ஜன்னலைத் திறந்தால் வீசும் கடல் காற்றின் சுகம், நல்ல இடத்தில் தனது நிறுவனத்தின் மூன்று மாடி கட்டிடத்தைக் கட்டி இருக்கிறார் .அவரின் நிறுவனத்தில் சுமார் இரு நூறு பேர் வேலை செய்தார்கள் அவரின் பாது காப்பு உள்ள பிரத்தியேக அறையில் எப்படி அவர் கொலை செய்யப்பட்டார்?அவரின் அறைக்குள் வருவோர் போவோரை கவனிக்க ஒரு சிசிடிவி கமரா. . துப்பாக்கி குண்டு காயங்கலோ, வெட்டு காயங்களோ அவர் உடலில் இல்லை . இருதய பாதிப்பினால் சுந்தர் மரணிக்கவில்லை, டாக்டரின் பரிசோதனை அறிக்கை சொன்னது

உடலில் சயனைட் விஷம் இருந்ததற்கான அறிகுறிகள் உண்டு என்று அறிக்கை சொன்னது. அப்போ அவர் விஷம் குடித்து இறந்தாரா? இருக்கவே இருக்காது. அது தற்கொலை அல்ல. ஒரு மணிக்கு முன் தனது செக்கரட்டரி ராதாவுக்கு முக்கியமான கடிதம் ஒன்றை தன் வாயால் சொல்லி, அதை தயாரித்து கொண்டு வரும்படி தனக்கு சொன்னதாக ராதா சாம்புவுக்கு சொன்னாள். ராதா கடிதத்தொடு சுந்தரின் அறைக்குள் வந்த போது அவர் மேசையில் தலையை வைத்த படியே இறந்து கிடந்ததைக் கண்டதாக சொன்னாள். அவருக்கு முன் அவர குடித்து முடிக்காத கோப்பி கப்பில் மேசையில் இருந்தது

சுந்தரின் மரணத்தை பற்றி செய்தி போலீசுக்கு கிடைத்தவுடன் போலீஸ் கொமிசனர் உடனே சாம்புவை இன்ஸ்பெக்டர் ராஜனுடன் போய் விசாரிக்க அனுப்பினார்.

சுந்தரின்அறைக்குள் போன சாம்புவின் கழுகுக் கண்கள் எல்லாப் பொருட்களயும் ஊடுருவி பார்த்து. மேசையில் மிகுதி இருந்த கப் கோப்பியை பரிசோதனைக்கு அனுப்பினார். பரிசோதனை முடிவின் படி அந்தக் கோப்பியில் சயனைட் விஷம் கலந்து இருந்தாக ரிப்போர்ட் வந்தது.

சுந்தருக்கு கோப்பி கொண்டு வந்து கொடுத்த பியோன் முத்துசாமி சுந்தரிடம் பல ஆண்டுகளாக வேலை செய்பவன் அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவன். அவன் தினமும் நான்கு தடவை கோப்பி குடிக்கும் பழக்கம் உண்டு. கோப்பியை தானே தயாரித்து கொண்டு வந்து சுந்தருக்கு முத்துசாமி கொடுப்பான்

அன்று காலை சுந்தரிரை பிஸ்னஸ் விசயமாக சந்தித்த நால்வரிடமும் சாம்பு குறுக்கு விசாரணை செய்தார்

அதில் இருவரில் ஒருவர் அமெரிக்கர் ஆத்தர். மற்றவர் கனேடியன் ஹட்சன் . அவர்கள் இருவரும் பிஸ்னஸ் விசயமாக இரு தடவைகள் சுந்தரை வந்து சந்தித்தாக ராதா சாம்புவுக்கு சொன்னாள் மற்றவர்கள் இருவரில் ஒருவர் பெங்களூரை சேர்ந்த மின் பொருள் நிறுவனம் ஒன்றின் உதவி தலைவர், சுந்தரின் நண்பன் காந்தன் . நான்காவது மனிதர் புது டெல்கி பாதுகாப்பு அமைச்சின் தொழில் நுட்ப பகுதியின் அதிகாரி மோகன் ராவ் .

இவர்களை குறுக்கு விசாரணையின் பின் அவர்கள் சுந்தரை சந்திக்க வந்தது பிஸ்னஸ் விசயமாக் என்பதைஅறிந்தார் அவர்களை சுந்தருக்கு ஏற்கனவே தெரியும் என்று ராதா சொன்னாள் அவர்களோடு சுந்தருக்கு எது வித பகையும் இல்லை. என்பது விசாரணையின் போது சாம்புவுக்கு தெரியவந்தது

சுந்தரின் செக்கரட்டரி ரதாபல காலம் அவரிடம் செய்பவள்.அதோடு அவரின் மனைவியின் சினேகிதி. நம்பிகையானவள் . சுந்தருக்கு பண விசயத்திலோ குடும்பத்திலோ பிரச்சனைகள் இருக்கவில்லை . அவர் தற்கொலை செய்ய போதிய காரணம் இருக்கவில்லை அதனால் சுந்தர் நிட்சயம் சொற்ப நேரத்தில் கொலை செய்யப் பட்டார். அவரை சந்தித்தவர்கள் குறைந்து பதினைந்து நிமிடங்கள் அவரோடு பேசி இருப்பார்கள் என்று ராதா சொன்னாள்

****

சூடான ஆட்டுப் பால் கலந்த கோப்பியைக் கொன்டுவந்து மேசையில் வைத்தான் சாம்புவின் பியோன் மாரி. அதை எடுத்து ஒரு தடவை சுவைத்துவிட்டு தன் சிந்ததனையை ஓடவிட்டார் . அந்த சமயம் எங்கிருந்தோ ரீங்காரம் இட்டவாரே, சாம்புவின் தலையை சில தடவைகள் சுற்றி அவருக்கு எரிச்சலைக் கொடுத்தபின் அவரது காப்பியில் அவரோடு பங்கு கொள்ளும் நோக்கத்தோடு கோப்பையின் விளிம்பில் போய் அமர்ந்தது ஒரு கொசு.

சாம்புவுக்கு சொசுவைக் கண்டாலே வெறுப்பு அதனால் அந்த கொசு தன் முன் கப்பில் இருந்த கோப்பியை சுவைக்க முன் அதை அடித்து கொன்று ஒரு திசு பேப்பரில் சுற்றி பக்கத்தில் இருந்த குப்பைத் தொட்டிக்குள் போட்டார்.

கொலைகளை கண்டுபிடிக்கும் தானே கோப்பியை பசியால் சுவைக்க வந்த அந்த கொசுவைக் கொலை செய்து விட்டோமே என்று அவர் மனம் சஞ்சலப்பட்டது. .திடீர் என்று அவர மனதில் ஓன்று தோன்றியது. ஏன் ஒரு கொசு சுந்தரை கொலை செய்திருக்க கூடாது? அதன் கூரிய ஊசி போன்ற அழகிய வாயால் விஷத்தை அவர் குடிக்க வைத்த கோப்பியில் கலந்து இருக்கக் கூடாது.? அவரின் மூளையில் பல தரப்பட்ட சிந்தனைகள். தோன்றின உடனே திரும்பவும் சுந்தரின் ஆபிஸ் அறைக்கு ராஜனுடன் போய் இருவரும் மேசைக்கு பக்கத்தில் இருந்த குப்பைத் தொட்டியை ஆராய்ந்தார்கள் ., அரை வாசி கடித்த அப்பிலும். சில சிகரெட் துண்டுகளும் கிழிந்த பேப்பர்களோடு மடித்த திசு காகிதம் ஓன்று இருந்தது அந்த காகிதத்தை எடுத்து பிரித்து பார்த்த போது அதுக்குள் ஒரு கொசு கிடந்தது. அது உண்மை கொசு போல் சாம்புவுக்கு தெரியவில்லை. கையில் எடுத் பார்த்தார் அந்த கொசு உருவத்தில் சற்று பெரிதாக மிகவும் கூரிய ஊசி போன்ற வாயைக் கொண்டதாக இருந்தது . இது நிட்சயம் மனிதனால் உருவக்கப்பட்ட ரோபர்ட் கொசு என்ற முடிவுக்கு சாம்பு வர அதிக நேரம் எடுக்கவில்லை அறையில் இருந்த கமராவில் பதிவாகி இருந்த படத்தை பாத்தபோது அதிலொரு கை ஒரு சிறு போருளை மேசையில் இருந்த சுந்தரின் குடும்ப படத்துக்குப் பின்னால் வைப்பது மட்டும் தெரிந்து அந்த கைகளை மட்டுமே காண முடிந்தது, அக் கை வெள்ளை நிறக் கைகள் இல்லை அந்த பொருளை வைத்தவர் முகம் படத்தில் தெரியவில்லை

சாம்பு திசுபேப்பரில் இருந்து எடுத்த ரோபர்ட் கொசுவை பரிசோதித்தார் . தனக்குள் சிரித்தார்

“ஏன் சேர் சிரிகிறீர்கள்”?

“ராஜன் சுந்தரை கொலை செய்தவன் சரியான புத்திசாலி “.

“எதைக் கொண்டு சொல்லுகிறீர்கள்”?

“இந்த கொசு போன்ற உருவத்தை பார் இது ஒரு மின் பொருளின் மூலம் இயங்கும் ரோபர்ட் கொசு . இதை ரிமோட்டில் இயக்கலாம் இந்த கொசுவை உருவாக்கியவன் தொழில் நுட்பம் தெரிந்த நவீன மின் பொருள் அறிவு உள்ள ஒருவன் “

“இந்த கொசு போன்ற பொருளை வைத்து எப்படி கொலை செய்து இருக்க முடியும் சேர்”?

“இது தான் சூத்திரம் . இந்த ரிமோட் கொன்றோல் கோசுக்குள் ஒரு மின் பொருள் ப்ரோகிராமே உண்டு கொசுவை வெளியில் இரு இயக்கி நினைத்ததை செய்வவிக்க முடியும் இந்த கொசுகுள் சயனைட் விஷம் இருகிறது இந்த கொசு, இட்ட கட்டளை படி கோப்பியில் விஷத்தை கக்கி இருக்கிறது, சுந்தர் இது நிஜ கொசு என்று நினனைந்து தன் கையால் அடித்து கொன்று விட்டதாக எண்ணி திசு பேப்பரில் மடித்து குப்பைத் தொட்டிக்குள் போட்டிருக்கிறார் .அதற்கு முன் கொசு கண்சிமிட்டும் நேரத்தில் கோப்பியில் சுந்தருக்கு தெரியமல் விஷத்தை கலந்து விட்டது அதன் பின்னரே சுந்தர் அதை அடித்து எறிந்து இருக்குறார். கொசு விஷத்தை கக்கும் போது அவர் காணாமல் இருந்திருக்கலாம் . அதன் பின் நடந்த முடிவு தெரிந்தே” சாம்பு சொன்னார்

”சேர் இந்த கொசுவுக்குள் என்ன இருகிறது என்று பார்ப்போம்மா”?

“அதை தொடாதே ராஜன் அதுக்குள் இன்னும் கொஞ்சம் சயனைட் விஷம் இருக்லாம். இதை போலீஸ் பரிசோதனை சாலைக்கு எடுத்து சென்று உள்ளே இருக்கும் மின் பொருள் ப்ரோகிராமை கண்டு பிடிக்கிறேன்”

“சேர் கொலையை செய்தவன் படு கில்லாடி”

“ சிசிடிவி படத்தின் படி கொலை செய்தவன் கைகள் ஒரு வெளிநாடு வெள்ளளையன் கைகள் இல்லை இது நம் நாட்டு ஒருவனின் கை. அந்த கையில் ஆறு விரல்கள் இருப்பதை பார்த்தியா ராஜன் “

“ஒம் சேர். ஆறு விரல்கள் கொண்ட மென்பொருள் ப்ரோகிராமிங் தெரிந்த ஒருவன் தான் கொலைகாரன்

அதுவே என் முடிவும் ராஜன். அதுவும் மென் பொருள் அறிவில் திறமை உள்ள ஒருவன் இது பிஸ்னஸ் போட்டி காரணமாக பொறாமையினால் நடந்தகொலை “ சாம்பு சொன்னார்.

அந்த சமயம் ராதா அரறைக்குள் வந்தாள்:

ராதா கொலை நடந்த அன்று சுந்தரை சந்திக்க வத் இரு ஆசியரக்ளில் எவருக்காவது ஒரு கையில் ஆறு விரல்கள் உண்டா ? : சற்று சிந்தித்து சொல்லு “

தெரியும் சார் சுந்தர் சாரின் நண்பர் காந்தன். அவரின் ஒரு கையில் ஆறு விரல்கள . அவருக்கும் சுந்தருக்கும் படிப்பில் எபோதும் பொடி என்று சுந்தர் எனக்கு சொன்னது நினைவு இருக்கு . அவரும் சுந்தரைப் போல் மென் பொருள் துறையில் மிகவும் திறமைசாலி பெங்களூரில் உள்ள இன்போ சொப்ட் ( Info Soft)தொழில் நுட்ப நிரவன்த்தின் உதவி தலைவர். அவர் பெயர் காந்தன். அவரின் ஒரு கையில் ஆறு விரல்கள் இருப்பததை நான் கண்டேன் அவர் சுந்தரோடு ஒன்றாக படித்தவர் . நண்பர் வேறு எனக்கு தெரியு அந்த கொம்பனியும் எங்கள் கொம்பனியோடு கனடவில் ஒரு பெரிய கொம்பனிக்கு மென்பொருள் ஓன்று தயாரிக்க போட்டி இட்டுவெற்றி பெறவில்லை எங்களுக்கு அந்த புரோஜ்க்ட் கிடைத்ததுக்கு சுந்தருக்கு வாழ்த்து தெரிவிக்க அன்று வந்தார்” என்றாள் ராதா,

“ராதா தகவலுக்கு நன்றி. நான் சுந்தரை கொலை செய்தவரை கண்டு பிடித்து விட்டேன் இந்த கொலைக்கு முக்கிய காரணம் பிசினஸ்சில் ஏற்றபட்ட போட்டியும், பொறாமை , தனது மென் பொருள் அறிவைப் பாவித்து இந்த கொலையை செய்திருக்கிறார் காந்தன்:” என்றார் சாம்பு

“என்னால் நம்பமுடியவில்லை சேர்” என்றாள் ராதா

Print Friendly, PDF & Email

1 thought on “கொசு செய்த கொலை

  1. My favorite writer is sujata I love his science fiction stories nowadays even short stories are very rare in time travel story sujata is been projected even now he is not alive now this kind of stories brings me the waves of sujata thanks to sirukathaigal.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *