படைப்புக் கடவுளோடு ஒரு பலப் பரீட்சை

படைப்புக் கடவுளென்ன பரமசத்தியமே அவர் தான் இதை அறிந்தவர்க்கே வேதமும் வரும் பூதம் விட்டொழிந்த நிலையிலும் சிலசமயம் மாறாக அவர்களும் மாயையில் விழுவதுண்டு, அதை நேராகவே சாட்சி பூர்வமாகவே கண்டு தேறியதெய்வநாயகிக்கு பூதம் தான் நேரில் வந்தது போல் உணர்வு.
விளிம்பு நிலை மனிதர்களோடு தான் அவளுடைய நடை முறை வாழ்க்கை அனுபவங்கள். மாறாக ஓர் அபூர்வ நிகழ்ச்சி ஒன்றுக்கு திடீரென்று அவள் முகம் கொடுக்க நேர்ந்தது.
அப்படியொரு சித்தப்பாவை நினைக்க இன்னும் மனம் சிலிர்க்கிறது மனம் நிஷ்டை கூட மறுத்து, எங்கேயோ போய் நிற்கிறது.
உண்மையை சொல்லப் போனால், சித்தப்பா போல், அவளில்லை என்பதே நிஜம். அவர் அவள் அப்பாவின் உடன் பிறப்பு மட்டுமல்ல அருமைத் தம்பியும் கூட. பிஏ பிஎஸ் ஸி படித்த பட்டதாரி. ஆசிரியர் திலகம் யாழ் பரமேஸ்வராக் கல்லுரியின் அதிபராக ஒளிந்தவர். இதற்குப் பின்னாலும் கசப்பான அன்பவங்கள் என்று சொல்லப் போனால் ஒன்றே ஒன்று தான் அவள் நினைவுச் சிப்பிக்குள் வீற்றிருந்து அடை காத்து வருகிறது. இதை வைத்து கொண்டு, அவள் என்ன செய்ய முடியும் ? முட்டை இடவா முடியும் இல்லை அவள் ஞானத்தில் ஊர்வலம் போக இது தான் வழி.
ஆம் அவள் வாழ்ந்தவிதம் அவ்வாறானதே.
அப்போது இராமநாதன் கல்லூரியில் தான் அவள் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள், அதுவும் காலை மாலை இரு வேளைகளிலும் கார் சவாரி செய்து கொண்டு. தினமும் அவள் கல்லூரி போக நேர்ந்தது, கார் கொண்டு வருவது கந்தையா தான். ஓங்கி அடிக்கத் தெரியாத அப்பாவி மனிசன். சித்தப்பாவும் பரமேஸ்வராக் கல்லூரி போக அதில் தான் வருவார், இந்த கல்லூரிகளுமே மகா புருஷனான சேர் பொன் இராமநாதன் அவர்களால்நாட்டுக்குக் கிடைத்த பெரும் பொக்கிஷங்கள். அவற்றில் ஒன்றான பரமேஸ்வராக் கல்லூரிதான் அமைச்சராக இருந்த நடேசபிள்ளை அவர்களின் பெரு முயற்சியால், பின்னாளில் பல்கலைக் கழகமாக தோற்றம் பெற்று பலரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது, அவர் தமிழையும் சைவத்தையும் நேசிக்கத் தெரிந்த ஆளுமை கொண்ட ஒரு மகான். அரசியலில் அவர் மகிமையை அறிந்தவர் எவரும் இல்லையென்பதே மனவருத்தமான விடயம்.
சித்தப்பா அவரையே குருவாக வழிப்பட்டு வந்தவர். அப்பழுக்கற்ற ஆன்மீக ஞானத்தினால், பல சித்தர்களின் தொடர்பு ஏற்பட்டு ஒரு மகானாக வாழ்ந்து கொண்டிருப்பவர். இருப்பினும் அவர் மகானல்ல மனிதன் தான் என்பதை, ஒரு சமயம் தெய்வநாயகி அறிய நேர்ந்து மனம் நொறுங்கிப் போனாள் அவளுடன் காரில் வருகிற சில மாணவிகளும் இருந்தார்கள். சித்தப்பா டிரைவரோடு முன் சீட்டில் தான் அமர்வார் பின்னால் அவளுடன் கூட பயணம் செய்ய மூன்று, மாணவிகள் இருந்தார்கள், அவர்களில் சித்தப்பா காங்கேயன் மகள் உமாவும் ஒருத்தி.
சித்தப்பா வீட்டிற்கும் போய் சுவாமி அறையை தரிசிக்கிம் போதே மனம் சிலிர்க்கும் அவரின் ஆன்மீக குருவின் உருவப்படம் மட்டுமல்ல அவரின் பாதுகை அதாவது மிதிவடியையும் சுவாமி படங்களுக்கு முன்னால் வைத்து அவர் பூப்போடு வணங்குவது சாலச் சிறந்த ஒன்றாய் அவளுக்குப்படும்.
அந்தப்படுதலில் உச்சி குளிர்ந்து போய் அவள் இருந்த வேளையில் தான், எதிர்பாராமல் அவரின் சித்த விகாரத்துக்கு, அவள் முகம் கொடுக்க நேர்ந்தது. சித்த விகாரமென்பது விழிப்புணர்வு அற்ற நிலையில், மனிதன் ஆற்றும் விபரீத நடத்தைக் கோளாறுகள் அவ்வாறே தோன்றும். இது சாமானியனைப் பொறுத்தவரை, இயல்பானதே. ஆனால் சித்தப்பா அப்ப்டியில்லை. பளிங்கு வானமென்ன? பக்தியால் மட்டுமல்ல ஆன்மீக ஞானத்திலும் தேறி, கடவுளாகவே மாறி விட்டவர். ஊரிலுள்ள பிள்ளையார் கோவிலின் ஸ்தாபகர் வேறு, இதற்கேற்பவே, அன்றாடம் கோவிலுக்கு சென்று இறை பணி ஆற்றி வருபவர். அதற்கேற்ற்பவே, தெய்வீகக் களை கொண்ட அமானுஷ்ய ஒளியோடு அவரைப் பார்த்தால் கையெடுத்து கும்பிடத் தோன்றும் , அப்பேர்ப்பட்டவர் மீது நாயகி அதீத அன்பு கொண்டிருந்தாள்.
இது இப்படியிருக்க, கல்லூரிக்கு ஒரு முறை அவர்களை ஏற்றிச் செல்லும் கார் வரத் தாமதமாகி விட்டது. கல்லூரி வாசலில் கால்களைக்க நின்று காத்திருந்தும், சித்தப்பாவை ஏற்றிக் கொண்டு, அது மாலை கருக்கலில் தான் வந்து சேர்ந்தது. சித்தப்பாவும் களைத்துப் போய்த்தான் வந்திருந்தார் எனினும் அவர் ஒரு பிரகாச ஒளிப்பிழம்பு போலவே அமர்ந்திருந்தார், இது அவரின் முன் இருக்கை. நாயகி கொஞ்சம் வாடிப் போய்த்தான் உமாவுடன் இணை பிரியாமல் பின் சீட்டில் அமர்ந்த போது, எந்த சலனனுல்லை. காற்று வெளியில் பறக்கிற மாதிரி தோன்றியது.
அதோ! ஊர் எல்லை வந்து விட்டது. கரடுமுரடாக கிளை பிரிந்து செல்லும் க்ச்சொழங்க வழியாக அக் கார் நாயகிவீட்டை வந்தடைந்த போது, அவள் சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நடந்தது. கார் கதவைத் திறந்து, அவள் கீழே கால் வைத்து, இறங்க, முற்படுகையில் ஒரு கர்ச்சனை கேட்டது. காட்டு வெளியில் ஒரு சிங்கம் தான் வந்து நிற்கிறதோ என்று அவள் மிகவும் பயந்து போனாள்.
இல்லை அப்படிக் கர்ச்சித்தது வேறு யாருமில்லை. சித்தப்பாவேதான் கதவைப் பிடித்தபடி மலைத்துப் போய் அவள் நின்று கொண்டிருக்க காரின் முன்னாலிருந்து அவரின் குரல் ஆவேசமாக, அன்பு மறந்து ஓங்கி ஒலித்தது, அவள் நிம்ர்ந்து பார்த்தாள், எதிரே முன் சீட்டில் கோபத்தில் முகம் சிவந்து உறுமியது உரக்கக் குரல் எழுப்பி ஆவேசமாக கர்ச்சித்தது உண்மையில் சிங்கமல்ல மனிதன் தான் என்று அறிய அவளுக்கு வெகு நேரம் பிடித்தது, அதுவும் சாதுவான அவளைப் பார்த்து, அன்று நிலையழிந்த நிலையில், சித்தப்பா சொன்னாரே ஒரு வார்த்தை குட்டிபோடுவன்.
பாவம் அவர். ஒரு சாதாரண மனிதனை விட அவர் கீழ் இறங்கிப் போன அந்த ஒரு தருணம்! அதைக் கேட்டு அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது கண்கள் நிரம்பி வழிந்தன.
எதிர்த்திசையில் அம்பு ஏந்தி நிற்கிற அவர், உண்மையில் அவர் தானா? அதுவும் சமநிலையில் வாழ நேர்ந்த அவரின் புனிதம் போய் சேற்றில் புதைந்து போன , அவரை அப்படிக் காணவே, அவள் முற்றாக எரிந்து போனாள்.
அவரின் இந்த நிதானம் குலைந்த தப்புத் தாளமும் அபஸ்வர வார்த்தைகளும் கண்டு கேட்டு அவள் உண்மையில் பஸ்பமாகி விட்டிருந்தாள். அவரின் அந்த உச்சகட்ட கோபத்திற்குக் காரணம் வேறொன்றுமில்லை இறங்கு போது அவள் காரின் கதவில் கை போட்டதன் விளைவே இது.
எப் பொருளாயினும் மெய்ப் பொருள் காண்பது அரிது என்ற வள்ளுவரின் திருக்குறளுக்கு மாறாக உண்மையில் அன்று அவள் கண்டது ஒரு மனிதனையல்ல மகா மேதையையுமல்ல அப்ப எதைக் கண்டாள்?
சிங்க முகம் போர்த்துக் கொண்டு, ஆவேசம் கொண்டு அலறித் துடித்த ஓர் அற்ப மனிதனையே அப்போது அவள் அவரைக் காண நேர்ந்தது.
இது பிழையான ஒரு கணக்கல்ல கணிப்பு எனக்குக் கோபம் வந்ததாக நினைச்சுக் கொண்டு ஒரு நொடியில் இப்படி என்னைஅடித்து வீழ்த்தியதுஒரு கணித மேதையாகவும் மகா ஞானியாகவும் இருந்து வருகிற என்ரை சித்தப்பாவுக்கா இப்படிஒருசித்த விகாரம்? சிதைந்த மனப் போக்கு!
கார் அங்கிருந்து போன பின் சாலை வெறிச்சோடிக் கிடந்தது அவள் வெகு நேரமாய் அங்கேயே நிலை குலைந்து நின்று கொண்டிருந்தாள். சுட்டெரிக்கும் இந்த நெருப்பை அணைக்க வழியின்றி அவள் குழம்பினாள் வாழ்க்கையைத் தேடி ஓடினாள்.
அவள் தேடி வந்த இடம் நிசப்தம் சூழ்ந்த வீடு. ஆனால் வீடு வெறித்த காட்டிலே இப்போது அவள் உறுமி உருக்குலைந்து போன ஒரு சிங்கம், நல்ல வேளை அவளை விழுங்காமால் விட்ட தற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் . அந்தக் கடவுள் கூட மறை பொருள் தான் இப்படிப்பட்ட மனிதர்களிடமே அவர் பலப் பரீட்சை செய்யத் தோன்றின மாதிரி இன்றைய சித்தப்பாவின் இந்த புது அவதாரம் அவதாரமல்ல. அழுக்காறு கொண்ட மனமே அவர் பக்தியும் மேலான அன்பும் பாழ்பட்டுப் போன கதைதான் அவளுக்கு அதை நினைக்க மூச்சு முட்டிற்று. வாசல் தாண்டி முற்றத்தில் இறங்கும் போது, தூணோடு சாய்ந்து அம்மா வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் மண்ணைக் கிளறி வானத்தைப் பார்க்கிற மாதிரி அவள் நிலைமை
நாயகி அவள் முன்னால், இருள் விழுங்கிய ஒரு கரும் பூதமாய் தோன்றினாள் கண்களில் நீர் வெள்ளம் பெருக அவளை இவ்வாறு பார்க்க வந்த துன்பத்துடன் நலிந்து போய் அம்மா கேட்டாள்.
ஏன் பிள்ளை அழுகிறாய்?
அம்மா! நான் ஏன் அழுகிறன் என்று சொன்னால் நீங்கள் தாங்கமாட்டியள்.
இல்லை அப்படி எதுவும் நடக்காது பயப்படாமல் நீ சொல்லு.
பயப்படுறது என்ன நடந்ததை அறிஞ்சால், உங்களுக்கு உயிரே போய் விடும்.
என்ன சொல்கிறாய்?
நீங்கள் தலையிலை தூக்கி வைச்சுக்கொண்டாடுவியளே. நானும் தான் போச்சு அப்படிக் கிரீடம் முளைத்த என்ரை சித்தப்பா செத்தே போனார் இப்ப நான் அவரைப் பார்த்தது இந்தப் பிணம் தின்னும் காட்டிலே தான் காடு வெறிச்சுக் கொண்டு நிற்க நேர்ந்த அவர் நிழலைத் தான் கடவுளுக்கே பலப் பரீட்சை வைத்த மாதிரி இது நடந்திருக்கு, இதிலை தோற்றது நானல்ல அவர் தான்.
வேண்டாம். எனக்கு எதையுமே சொல்ல வேண்டாம் தேரேறி வந்த அவரை வீணாய் சந்திசிரிக்க வைத்த அந்தக் கதையையல்ல ஒரு கெட்ட கனவாகவே நீ மறந்து விடு இதை உன்ரை வாயாலை சொல்லி, நீஒன்றும் அசிங்கப்ப்ட வேண்டாம் எனக்கும் கேட்க விருப்பமில்லை.
காதாலை அந்தச்செய்தியே கேட்க விரும்பாமல் மனதில் புனிதம் காக்கிற அம்மா எங்கே? நான் எங்கே? சித்தப்பா தான் எங்கே? இதைத் தோண்ட நினைத்தால் பூதம் தான் வரும் என்று முழு மனதோடு அவள் நினைவு கூர்ந்தாள்.
![]() |
என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: December 6, 2025
பார்வையிட்டோர்: 658
