’அட்டெண்டர்’ ஆறுமுகம்

attender_aarumugam
 

“என்ன உத்தியோகம் சார், இது? பத்து வருசமா நானும் அட்டெண்டராத்தான் இருக்கேன்; நீங்களும் ஹெட்கிளார்க்காகவே இருக்கீங்க. சலிச்சுப் போகல்லே? உத்தியோகத்தை ஒசத்திப் போடச் சொல்லுங்க, சார்!” என்பான் அட்டெண்டர் ஆறுமுகம்.

“போடா, தூங்குமூஞ்சி! நீ செய்யற வேலைக்குப் பிரமோஷன் வேறே ஒரு கேடா?” என்பார் ஹெட்கிளார்க்.

“அட, நீங்க ஒண்ணு. எனக்குச் சொல்லலே, சார்! உங்களுக்குத்தான் சொன்னேன்; ஏதோ குழந்தை குட்டிங்களை வெச்சிகிட்டுப் பத்து வருசமா இப்படியே கஷ்டப்பட்டுக்கிட்டிருக் கீங்களேன்னு சொன்னா…”

“ஆமாம், நீ பெரிய குபேரன்; உனக்கு இந்த அட்டெண்டர் வேலையே போதும்.”

“எனக்கெதுக்கு சார்? ஓட்டலுக்குப் பால் சப்ளை பண்றேன். விடியக்காலம் மூணு மணிக்கே எழுந்து போய் மாட்டைக் கறக்கணும். அதான் கொஞ்சம் தொந்தரவு. சரியாத் தூங்க முடியலே. தூக்கம் கெட்டுப் போவுது.”

“அதான் ஆபீசுலே வந்து நிம்மதியாத் தூங்கறயேடா சோம்பேறி!”

“சரி சார், இப்ப எதுக்குக் கூப்பிட்டீங்க?”

“திருவல்லிக்கேணியிலே ஒரு வீடு காலியாயிருக்காம். கொஞ்சம் போய் அதை விசாரிச்சுட்டு வறயா?”

“அந்த வீட்டுக்காரர் இல்லாட்டி…?”

“திரும்பி வந்துடு.”

“அதுக்கு ஏன் சார், போவணும்?”

அந்த ஆபீசில் மானேஜர் முதல், சின்ன குமாஸ்தா வரை எல்லோருக்கும் ஆறுமுகம்தான் அட்டெண்டர். காலையில் பத்தரை மணிக்கு ஆபீசுக்கு வருவான். அவனுக்கென்று ஓர் இருட்டறை உண்டு. அங்கே ஆபீஸ் பைல்களெல்லாம் கட்டுக்கட்டாக அடுக்கப்பட்டிருக்கும். அந்த பைல் கட்டுகளுக்கிடையில் ஒரு ஸ்டூலைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து விடுவான். யார் மணி அடித்தாலும் வரமாட்டான்.

“ஆறுமுகம், உன்னை எத்தனை தடவை கூப்பிடறது?”

“எதுக்கு சார், கூப்பிட்டீங்க?”

“உடனே போய் திருச்சிக்கு ஒரு பஸ்ட் கிளாஸ் டிக்கெட் வாங்கிட்டு வா, போ!” என்பார் ஹெட்கிளார்க்.

“ஆபிஸ் விஷயமாப் போறீங்களா, சார்?”

“உனக்கெதுக்குடா இந்த அக்கப்போரெல்லாம்? நீ போய் டிக்கெட் வாங்கிட்டு வாயேன்.”

“அதுக்குக் கேக்கலே, சார்! உங்க நன்மைக்குத்தான் கேட்டேன். சொந்த டிரிப்பாயிருந்தால் எதுக்கு அவ்வளவு பணம் செலவழிக்கிறீங்க? குழந்தை குட்டிக்காரராச்சே!”

“உன் ‘அட்வைஸ்’ எனக்கு வேண்டாம். முதல்லே நீ போய் டிக்கெட்டை வாங்கிட்டு வரப் போறயா, இல்லையா?”

“அதான் சொல்லிட்டீங்களே, செஞ்சுடப் போறேனே?”

“பின்னே ஏன் நிக்கறே?”

“இல்லே, பயணத்தை அடுத்த மாசம் தள்ளிப் போடக் கூடாதான்னு தெரிஞ்சுக்கத்தான்!”

“ஏன் அடுத்த மாசம் போறதிலே உனக்கென்ன லாபம்?”

“அடுத்த மாசம் நான் பதினைஞ்சு நாள் லீவு எடுத்துக்கப் போறேன். அந்தச் சமயத்திலே நீங்களும் லீவு எடுத்துக்கலாமேன்னு சொன்னேன். ஆபீசிலே நான் இல்லாட்டா உங்களுக்குக் கை ஒடிஞ்ச மாதிரி இருக்குமே…!”

“இவர் பெரிய இவரு! கூப்பிட்ட குரலுக்கு வந்துடுவாரு பாரு. சரித்தான் போடா!”

“ஏன் சார், இன்னைக்கே போகப் போறீங்களா?”

“ஆமாம்; எதுக்குடா?”

“எனக்குத் தெரிந்த லாரி ஒண்ணு நாளைக்கு ராத்திரி புறப்படுது. தாம்பரம் டேசனாண்டே வந்து நில்லு, சார்! நான் அந்த லாரியிலேயே வந்து உங்களை ஏத்தி விட்டுடறேன். லாரி டிரைவர்கிட்டே அஞ்சு ரூபா கொடுத்தாப் போதும் சார்! ஏதோ குழந்தை குட்டிக்காரராச்சேன்னு சொன்னேன். கேட்டாக் கேளுங்க; விட்டா விடுங்க!”

“போடா, உன் அட்வைஸும் நீயும், அதிகப் பிரசங்கி!”

“ஏன் சார், திருப்பி வரப்போ தஞ்சாவூர் வழியாத்தானே வருவீங்க?”

“எதுக்குடா?”

“தஞ்சாவூர்லே குடமுளகா சீப்பு, சார்! ஒரு மணங்கு புடிச்சிகிட்டு வாங்களேன். மோர் முளகாய் போட்டு வெச்சா ஒரு வருசத்துக்கு ஒதைச்சுக்கிட்டிருக்கும். ஏதோ குழந்தை குட்டிக்காரராச்சேன்னு சொன்னேன்!”

யார் எந்த வேலை சொன்னாலும் ஆறுமுகம் உடனே புறப்பட்டுவிட மாட்டான். ‘அது அவசியந்தானா? அவசரந்தானா?’ என்று குறுக்குக் கேள்விகளெல்லாம் கேட்டு வேலை சொல்பவர்களைத் திணற அடிப்பான். காலையில் தண்டையார்ப்பேட்டைக்குப் போய் வர வேண்டும் என்று யாராவது சொன்னால் மாலையில்தான் கிளம்புவான். ஆபீசில் உள்ள அத்தனை பேர்களிடமும் போய், “அக்கெளண்டண்ட் ஒரு வேலையா என்னைத் தண்டையார்ப்பேட்டைக்கு அனுப்பறாரு. இன்னும் யாருக்காவது தண்டையார்ப்பேட்டையில் வேலை இருந்தால் சொல்லுங்கள்; ஒரே அடியா முடிச்சுக்கிட்டு வந்துடறேன்” என்று தண்டோரா போடுவான்.

கடைசியில் மாலையிலும் போகமாட்டான். கேட்டால் ‘சைக்கிள் பஞ்ச்சர்; பஸ் ஸ்டிரைக்’ என்று ஏதாவது சாக்குச் சொல்லிவிட்டு, பைல் அறையில் போய் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருப்பான்.

“ஏண்டா, ஆறுமுகம்! உன்னை எங்கேடா நாலு நாளாய்க் காணோம்?” என்பார் அக்கெளண்டண்ட்.

“லீவு போட்டிருந்தேனே, சார்! தெரியாது உங்களுக்கு?”

“உங்களை வந்து பார்த்தேன். சார்! நீங்க மேஜை மேலே சாஞ்சபடியே லேசாத் தூங்கிகிட்டிருந்தீங்க. சரிதான் அப்படின்னுட்டு, ‘பெல்’லை மட்டும் எடுத்துப் பூட்டி வச்சுட்டுப் போயிட்டேன். சார்! நான் இல்லாதப்போ அது எதுக்கு சார், இங்கே? பெல் இல்லாததுலேருந்தே நான் லீவிலே இருக்கேன்னு தெரிஞ்சுக்கிட்டிருக்கலாமே. நீங்க!”

[ நன்றி : சாவியின் 'கேரக்டர்' நூல் ; சித்திரம் : நடனம் ] 

தொடர்புடைய சிறுகதைகள்
வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 கொடியேற்று விழா நிகழ்ச்சிக்கு காலை . ஒன்பது மணிக்கு நேரம் குறிப்பிட்டிருந்ததால் விழாவேந்தன் இரவெல்லாம் கண்விழித்து அரண்மனை கிழக்கு வாசலில் பெரிய மாநாடுபோல் ஷாமியானா போட்டு, 'இகபானா' அலங்காரங்களுடன் மேடை அமைத்திருந்தார். சக்ரவர்த்தி குடும்பத்தார், ஜப்பான் நாட்டுப் ...
மேலும் கதையை படிக்க...
வாஷிங்டனில் திருமணம்
(1999ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 5 | அத்தியாயம் 6 | அத்தியாயம் 7 மெயில் வரப் போகிற நேரத்தில் ஜங்ஷனில் ஒருவித பரபரப்பு உண்டாகுமே, அத்தகைய சூழ்நிலை சம்மர் ஹவுஸுக்குள் நிலவியது. பாட்டிகள் எல்லோருமாகச் ...
மேலும் கதையை படிக்க...
‘நான்தான்’ நாகசாமி
கையிலே ரிஸ்ட் வாட்ச், விரலிலே வைர மோதிரம், குரலிலே ஒரு கம்பீரம். இந்த லட்சணங்களைக் கொண்டவர்தான் நாகசாமி. அவருக்குத் தெரியாத பெரிய மனிதர்கள் கிடையாது. அவரால் சாதிக்க முடியாத காரியங்களும் கிடையாது. யாருக்கும், எந்த நேரத்திலும், எம்மாதிரி உதவி தேவையானாலும் நாகசாமியைத் ...
மேலும் கதையை படிக்க...
மாணிக்க முதலியார், ரத்னசாமிப் பிள்ளை இரண்டு பேரும் டயரி போட் டார்கள். இரண்டு பேர் போட்ட டயரி களும் லக்ஷக்கணக்கில் செலவழிந்தன. ஆனால், ஒவ்வொரு வருஷமும் முதலியா ருக்கு மட்டும் அதிக லாபம் கிடைத்தது. அதன் ரகசியம் பிள்ளைக்கு விளங்க வில்லை. ஒரு ...
மேலும் கதையை படிக்க...
வாஷிங்டனில் திருமணம்
(1999ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம் 5 லோரிட்டாவுக்கு வாஷிங்டனில் 'போர்' அடித்தது. காரணம், அவளுடைய சிநேகிதி வசண்டா அருகில் இல்லாததுதான். கார்டனுக்குள் சென்று ஒவ்வொரு பூஞ்செடியாகப் ...
மேலும் கதையை படிக்க...
வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 கலைஞர் வரப்போகிற தேதி நிச்சயமாயிட்டதாம்" என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார் விழா வேந்தள். ஒரே குஷி அவருக்கு! "எப்போ, எப்போ?" என்று ஆர்வத்தோடு கேட்டார்கள் மற்றவர்கள். “டிசம்பர் 19ம் தேதி வருகிறார். 20ம் தேதி காலை 'வடம் பிடித்து' ...
மேலும் கதையை படிக்க...
அஜகீதம்
(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாசகர்களுக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுத் துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில மெளனப் பிள்ளையார் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதையே திரு.கோபுலுவின் அற்புதமான சித்திரங்களுடன் ...
மேலும் கதையை படிக்க...
‘எதிர்வாதம்’ ஏகாம்பரம்
''ஏகாம்பரம், பேப்பரில் பார்த்தாயா! சினிமா ஸ்டார் கங்காதேவி கல்யாணத்திலே பத்தாயிரம் பேருக்குச் சாப்பாடாம். காலையிலே ஆரம்பித்த பந்தி ராத்திரி பன்னிரண்டுமணி வரைக்கும் நடந்ததாம். தெரியுமா உனக்கு?'' ''சரிதாண்டா, இதைப் போய் ஒரு பெரிய அதிசயமாகச் சொல்ல வந்துட்டே! சினிமா ஸ்டார்தானேடா? செலவழிக்கட்டுமே; நானும்கூட ...
மேலும் கதையை படிக்க...
வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 "அஞ்சு மணிக்கு ஏர் இண்டியா விமானம் வருதாம். கலைஞரை வரவேற்க 'நரிடா' போகணுமே! எல்லாரும் புறப்படுங்க" என்று இரண்டு மணிக்கே அவசரப்படுத்தினார் விழாவேந்தன். "கோபாலகிருஷ்ணனும், அரசு உயர் அதிகாரிகளும், சக்ரவர்த்தியின் அந்தரங்கச் செயலர் யோஷினாரியும் இப்பவே புறப்பட்டுப் ...
மேலும் கதையை படிக்க...
வாஷிங்டனில் திருமணம்
(1999ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1 | அத்தியாயம் 2 | அத்தியாயம் 3 "பிள்ளைக்கு ஒரு கார், பெண்ணுக்கு ஒரு கார். தவிர, கல்யாணச் செலவுக்கென்று பத்து லட்சம் டாலரைத் தனியாக ஒதுக்கி ...
மேலும் கதையை படிக்க...
வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
வாஷிங்டனில் திருமணம்
‘நான்தான்’ நாகசாமி
டயரி ரகசியம்!
வாஷிங்டனில் திருமணம்
வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
அஜகீதம்
‘எதிர்வாதம்’ ஏகாம்பரம்
வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!
வாஷிங்டனில் திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)