ராஜா ராமனும் ப்ளே பாய் சித்தப்பாவும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 23, 2016
பார்வையிட்டோர்: 25,797 
 

அவ்வளவு வேகமாக ஒருத்தன் கடலைப் பார்த்து ஓடுகிறான் என்றால் அவன் தற்கொலைக்குத் துணிந்து விட்டான் என்றுதான் அர்த்தம் என்று ராஜாராமனுக்கு உறதியாய்த் தெரிந்து போனது..தன் சுய எடையைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் ஒரு பந்தயக் குதிரைமாதிரி ஓடி இருவருக்கும் நடுவில் ஒரு ஐந்தே அடி இடைவெளி இருந்தபோது கடலில் விழ இருந்தவனை காப்பாற்றியே தீருவது என்று ராஜாராமன் ‘ரிஸ்க்’ எடுத்து ஒரு பெரிய’ ஜிமனாஸ்டிக் வீரன் மாதிரி ஜம்ப்ப் ‘ செய்த போது அது நடந்தது..

கடலில் விழ யத்தனித்த அந்த மனுஷன்’ தடக்’கென்று ஒரு’ சடன் ப்ரேக்’ போட்டு நின்று விடுவான் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவே முடியாது…அதுவும் ராஜாராமன் இதை எதிர் பார்க்கவேயில்லை… இலக்கை இழந்த ஆண் சிங்கம் மாதிரி ஆறடி உயரம் மேலேபோய் அலங்கோலமாக சப்பென்று குப்புறக் கீழே விழுந்தான்.ராஜாராமன்….படாத இடத்தில் அடி பட்டு கீழே பையில் இருந்த சமாச்சாரங்கள் தெறித்திருக்கலாமோ என்ற சந்தேகம் வர கவனமாக அடி வயிற்றுக்கும் கீழே அடியில் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.அதது அந்தந்த இடத்தில் இருக்க சமாதானமாகி விட்டாலும் வேற இடத்தில் பட்ட அடிகள் ஜாஸ்த்தி..எழவே முடியவில்லை…கடலில் விழுந்து சாவான் என எதிர்பார்க்கப்பட்ட அந்த ஆள் ரொம்ப சாவதானமாக்க்கேட்டது…இதுதான்….

‘ ஏன் தம்பி அப்பிடி முட்டாத்தனமா எகிரிக்குதிச்சே…ஏதாவது ப்ராக்டீஸ் பண்றியா என்ன….கொஞ்சம் நிதானமா எகிறலாமில்லே…..படாத இடத்திலே பட்டா என்ன ஆகறது அதிலேயும் கல்யாணமாகாத பையன் மாதிரி தெரியறே..முதலுக்கே மோசம் வந்துடுமே…..’

‘ஏன்யா…நீ கடல்லே குதிக்கத்தானே ஓடினே.. குதிக்கவேண்டியதுதானே..அப்புறம் ஏன்யா திடீர்னு நின்னே…உன்னைக்காப்பாத்தான்யா நான் ‘ஜம்ப் ‘பண்ணி இப்படி ஆனேன்…கீழே மேலே நடுவிலேன்னு எல்லா இடத்திலேயும் அடி பட்டில்லே கெடக்கிறேன்…’

‘ இது என்னடா அநியாயமா இருக்கு…ஓடறதும் நிக்கறதும் என் இஷ்டம்…ஓடற naan  நிக்கறதுக்கு சென்னை மா நகரம் பூரா நோட்டீஸா கொடுக்க முடியும்… சரி ..விடு நான் அதே வேகத்திலே வந்து, முன்னூறு கிலோ இருக்கற நீ என் மேல விழுந்திருந்தா என்ன ஆயிருக்கும் ….எனக்கு எல்லாமே பிதுங்கி இருக்குமே..அத யோசி..இப்ப நான் தப்பிச்சேன்..அடி ஒருத்தரோட போச்சி….சரிதானே….அப்புறம் இவ்வளவு பரந்த பீச்லே ரெண்டு பேர் கட்டிப்பிடிச்சுக் கெடந்தாஅசிங்கமா இருக்காது….’

‘ நான் முன்னூறு கிலோவா இது உனக்கு கொஞ்சம் ஜாஸ்தியா தெரியலை…’

‘ தம்பி ..எடை கொஞ்சம் கூடக் கொறச்சலா சொல்லிட்டேன் ..நீ நல்ல மனசுக்காரன் என்னகாப்பாத்த வந்தே அட..உன்னை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கு அடிக்கடி டாஸ்மாக் வருவியோ….’

இனிமேல் கடலில் விழுகிறவன் எவனானாலும் சாக விட்டே பார்க்கனும் என்று அந்த வினாடி ராஜாராமன் முடிவு செய்து விட்டா ன்.’.என்யா என்னைப்பாத்தா டாஸ்மாக் போற மூஞ்சி மாதிரியா தெரியுது….நல்லாப் பாத்து சொல்லுய்யா …’

‘ஆமாம் ..நீ அமுல் பேபி மாதிரி இருக்கே..அத விடு உன்னை எங்க பாத்தேன்…பாத்தா எங்க ராஜாப்பயல் மாதிரி இருக்கே..அவன் இன்னும் தடியா இல்லே இருப்பான்…’

‘அடே சித்தப்பா… நீ சித்தப்பா தானே… நீயா சாக வந்தே…உனக்கு என்ன ஆச்சு….எவ்வளவு அழகான பொண்டாட்டி…சம்பாத்தியம்…உனக்கா விரக்தி..நம்பவே முடியலை சித்தப்பா நான் சின்னப்பயலா இருந்தப்போ சித்தி மடியிலேதான் பால் குடிப்பனாம்… அப்புறம் சித்தி என் ஜட்டியைக் கழட்டி உம்மா கொடுப்பாளாம்…கேக்க சந்தோஷமா இல்லே…’

‘ பொறாமையா இருக்குடா….’

‘அப்புறம் மூச்சு விட முடியாம கசக்குவாளாம் ..எப்பிடி’ இப்போது அந்தமனுஷன் இவனைத் தெரிந்து கொண்டு சரளமாக ஆரம்பித்தான்…..

‘டேய்…குடுத்து வச்சவன்டா நீ..உனக்கு அந்த பாக்கியம் கெடச்சுது… நல்ல வேளை உன்னைப்பாத்தேன்… தெரிஞ்ச யாரையாவது பாத்து அவங்க கண் முன்னடி சாக நெனைச்சேன்..தெய்வ சங்கல்ப்பம் நீ வந்தே…உன்கிட்ட…நீ சின்னப்பையன்தான் ..பரவாயில்லே என் பாரத்தைக் கொட்டிடறேன்..உட்காரு கண்ணா வலிக்கறதா ..பொறுத்துக்கோ …சித்தப்பா வலியைக் கேட்டியானா உன் வலி பறந்து போகும் என்ன… உன் கிட்ட கொட்டிட்டண்ணாஅப்புறம் நிம்மதியா சாவேன்..என்னசொல்றது… பார்ரா கல்யாணமானபோது உன் சித்திக்கு இருபது வயசு..அடுத்த வருஷம் அவ புள்ள பெத்தா அது என் தப்பாடா …’

ராஜாராமனுக்கு அழுகை வந்தது…உன்னைகாப்பாத்தப்போய் எனக்கு பட்டிருக்கிற அடியிலே நான் தப்பே பண்ண முடியாம போயிடும் போல தெரியதே..என்று முணகிக்கொண்டான்….நண்டு மாதிரி ஒரு ஜீவன் தப்பான இடத்தில் பிடுங்க ஐயோ என்று அலறினான்..

‘என்னடா ஐயோ…’

‘ஐயோ சித்தப்பா நீ தப்பு பன்னாம சித்தி புள்ள பெத்தாளா…இத என்னாலே நம்பவே முடியல்லியே…சித்தி நல்லவ சித்தப்பா..ஒரே ஆபிஸ்லே இருக்கோம்…’

‘அட அது அப்பிடி இல்லைடா..உடனே புள்ள பொறந்ததுன்னு சொல்லவந்தேன்…அப்புறம் கேளுடா…குழந்தை பொறந்ததும் ‘அது’ இப்ப கூடாது … தப்புன்னு ஒரு வருஷம் வெளியே தள்ளி வச்சா …’

‘எது தப்புன்னு…’

‘அதுன்னா இதுதான்…’என்று உலகம் பூரா தெரிந்த ஒரு சமிக்கையில் தெரிவக்க,நம்ம பையன் நெளிந்தான்…

‘ஓ…அதுவா சரி….’

‘அது சரிங்கறியா…’

‘இல்லல்லே …தப்புங்கறேன்..

‘அவ சொன்னது தப்பா ..நான் கேட்டது தப்பா …நீ..குழப்பறேடா…’

‘இல்லே..சித்தப்பா..உங்களுக்கு தேவையானதை நீங்க கேட்டீங்க….அவங்களுக்கு தெரிஞ்சதை அவங்க சொன்னாங்க…சரியா…ரெண்டு பேர் மேலேயும் தப்பில்லே…’ காஷ்மீர் பிரச்சினை தீர்த்த சந்தோஷம் நம்ம ஆளுக்கு ..ஆனால் அது நிலைக்கவில்லை…

‘சரிடா நமக்கு மூடு வரும் அப்ப என்னடா செய்வே நீ…’

‘எனக்கு மூடு வந்தா அத்தை அக்கா அம்மா …ஏன் வீட்டு வேலக்காரி சுமதி அவளைக்கூட விட மாட்டேன் ..போட்டு பொரட்டி எடுத்துவேன்…அவங்க அலருவாங்க…..நமக்கு மூடு வந்தான்னு கேக்கறீங்க..அதெப்பிடி சித்தப்பா ரெண்டு பேருக்கும் சேர்ந்தாப்பிலே மூடு வரும்…ரெண்டு பேர் ஜாதகமும் ஒன்னா சித்தப்பா…..என்றான் ராஜா…

‘ஈஸ்வரா இப்பிடி ஆள் தெரியாம சிக்க வச்சியே நியாயமா…டேய் மூடுன்னா இது வேற மூடு..சரியா…’

‘ஓ….சரி…அந்த மூடா…ஸாரி…ஸாரி …நான் ஒருத்தன்….புரியாத ஜடம்…..’

புரிஞ்சா சரி.. உன்னை விடு..அவளைப் பத்தி பேசு…அம்மாவாசை அன்னிக்கு பக்கத்திலே நல்ல மூடுலே போனா இன்னிக்கு அம்மாவாசை… வேண்டாம்னு சொல்லுவா…வெளியிலே படுக்க வச்சிருவா…’

‘இருட்டா இருக்குமில்லே அதான் ….போல…’

‘முட்டாப்பயலே நான் கடல்லே மீன் பிடிக்கவா போறேன்…கட்டில்லே படுத்து எடம் கண்டு பிடிக்க இருட்டு என்ன பகல் என்ன..இருட்டு சௌகர்யமில்லே…’

‘ஓ..சரி…’

‘அப்புறம் ஒரு நாள் சூப்பர் மூட்லே வருவேன்..இன்னிக்கு சஸ்டிம்பா.. வேளியே துரத்துவா..அப்புறம் ஒருநாள் அஷ்டமிம்பா.. நவமிம்பா.. வெளியே படுக்கை….’

‘அப்புறம் உனக்கு மேல் நோக்கு நாள் …கீழ் நோக்கு நாள் தெரியுமோ…தெரியாது….மேல் நோக்கு நாள்ளே மேல பாக்க முடியாது …கீழ் நோக்கு நாள்ளே கீழே பார்க்க முடியாது..மாசத்துக்கு முப்பது நாளும் வெளியேதான் படுக்கை…’

‘நடுவிலே பார்க்கறது…’என்றான் நம்ம ஆள் வெள்ளந்தியாக…..

‘அதுதான் முக்கியமா முடியல்லேங்கறேன்…புரியுதா உனக்கு…இதுக்கு மேலேயும் .உனக்கு ஒன்னும் புரியல்லேன்னா நான் ஓடிப்போய் கடல்லே குதிச்சிடுவன்….’

‘புரியுது..புரியுது..ஆனா …சித்தப்பா உன் கணக்கிலே சின்ன ஒரு தப்பு….இருக்கு…மாசத்துக்கு முப்பது நாள் வெளியே இருப்பேன்னு நீ சொன்னது தப்பு இருபத்தி அஞ்சு நாள் நீ வெளியே …அஞ்சு நாள் சித்தி வெளியே . இப்பிடி வச்சுக்கலாமா….’

‘ஆமாடா ..ஆமாம் ..ஆமாம்…பாவி ..ஒன்னும் புரியாத மாதிரி இருந்தே…இவ்வளவு துல்லியமா பேசறே…. ‘

‘ உன் பிரச்சினை என்ன உனக்கு இப்ப உனக்கு ஒரு பொம்பிளை வேணும்…அதானே சித்தப்பா…’

‘எனக்கு பொம்பிளை வாண்டாம் என் பொண்டாட்டி வேணும்…..’

‘அவ்வளவு காதல்…?

‘காதல் …காமம் ..கண்றாவி ..எல்லாம் இருக்கு….’

‘சரி ..சித்தப்பா…அடுத்த வாரம் பெங்களூர்லே எங்க அபார்ட்மெண்டு ஒன்னிலே தங்கி நீ பத்து நாள் ஹனி மூன் கொண்டாடுரே…ஓகேவா…..இந்த உள்ளே வெளியே மங்காத்தா விளையாட்டு எதுவும் வேண்டாம்…..தயவு பண்ணி சாகப்போகாதே…

சரி உனக்காக நான என் முடிவை மாத்திக்கறேன் சித்தியோட நான் ஹனிரூன் …..நான் அவ கூட தங்க முடியம்கறே..அதும் பத்துநாள்….டேய் ஆசை காட்டி மோசம் பன்னிடாதேடா…தவறினே இந்த சாந்தோம்லே விழுந்து சர்ச்கிட்ட பொணம் மிதக்கும்… சரியா…’

‘தப்பு சித்தப்பா…நம்புங்க…நீங்க உங்க பெண்டாட்டியோட பத்து நாள் ஹனி மூன் போறீங்க…அதான் சரி….’
.
‘நடக்குமாடா…’

நம்பினா நடக்கும் …நான் ஆஞ்சநேயன் சொல்றேன்….நடந்தே தீரும்….’

‘ஆஞ்சநேயனா…அதான் இடிக்குது…’

‘என்ன இடிக்குது…சீதைக்கு யாரு கணையாழி கொடுத்தது…’

‘ராமன்தான….இல்லே..மொறக்காதே… ஆஞ்சநேயன்… ஆமாண்டா….கரெக்டு …இந்த உதவிக்கு…அடுத்த… ஜன்மத்திலே நீ எனக்கு மகனா பொறக்கனும்…இல்லே ..நீ அழகா இருக்கே…பொண்டாட்டியா பொறந்திடேன்….’

‘சித்தப்பா …உன்னை சித்தி வெளியே ஏன் படுக்க வச்சான்னு இப்பல்லே எனக்கு புரியுது…’

***

‘ஏண்டா என் கேபினுக்கு உள்ள வர்ரே….’என்றாள் மலர்.”எதுவானாலும் வெளியே இருந்து சொல்லு…’

‘ஹலோ இது ஒன்னும் உன் பெட்ரும் இல்லே…ஆபிஸ் கேபின்…ஒரு பத்து நிமிஷம் ஒத்துழை மலரு….’

‘பாவி இவ்வளவு தைரியமா பேசறே ..உனக்கு வெக்கமே இல்லியாடா….வேற எவனாவது இப்பிடி கேட்டிருந்தா நடக்கிறதே வேற….’

‘ஆமா நான் கூட அவனைப்போட்டுத்தள்ளிடுவேன்…ஒரு அஞ்சு நிமிஷம் அந்த கையைக்குடேன்…இப்பிடி வச்சிக்ககோ மலரு…..’

‘எதுக்குடா….என்னவோ வம்பு ஆரம்பிக்கறே. கையத் தொடாதே..ப்ளானைச்சோல்லிடு…’

‘ச்ச்சூ..சும்மாயிரு….அலறாதே…என்று கண்ணை மூடிக்கொண்டான் ராஜா…

‘அக்கா ராஜா உன் கையப் புடிச்சுட்டுத் தூங்கறான்…என்றாள் சிவகாமி…’

‘அடே …அவன் தியானம் பண்ணி குறி பாக்கறான்ம்மா ..என்றாள் வசு..’
.
‘ஏய்…கொஞ்சநேரம் வாயாடம இருங்க….’அவன் போடற சீனைப்பாப்போம்…முண்டப்பயல் என்றாள் மலர்

‘தியானம் பன்னினா குறி தெரியுமா..எனக்கு பயம்மா …இருக்கு…என் குறியெல்லாம் கூடத்தெரியமா…ரெண்டு நாள் கழிச்சு இவன் குறி பார்க்ககூடாது…?

‘எல்லாருக்கும் குறி பாக்கப்போறானா என்ன..எல்லார் குறியும் தெரியுமா…’

‘பப்ளிக்லே எப்பிடி குறி பாக்கறது ….தனியாப்போய்…. ‘

‘யார் குறி பாக்கறது…இவனா..யார் குறியை பாக்கப்போறானாம்..’

‘ஆரம்பிச்சாச்சா…கொஞ்ச நேரம் போதும்டி உங்களுக்கு…பேசியே முடிச்சிடுவீங்க…’

‘கொஞ்ச நெரத்திலே பேசாம கூட முடிக்கலாம்…’

விலுக்கென தலையை உதறி கண்ணைத்திறந்து.’..ஷ்ஷ்ஷ்ஷ்’ என்றான் ராஜா

‘அவனுக்கு வலுப்பு வந்துடிச்சி ‘

‘இல்லடி அவன் மேல சாமி வந்துடிச்சி…..’

ராஜாரான் ஆரம்பித்தான்…’மலருங்கரவளுக்கு ரெண்டு மாசத்திலே மாலை வரும்னு குறி வருது…’

‘அய்…ராஜா எனக்கு சொல்லேன்..’
.
‘எனக்கும் சொல்லு….

‘ எனக்கு…’

‘ராஜா எனக்கு மொதல்லே…’

‘ எனக்கும் ராஜா….ப்ளீஸ்…’

‘இப்பொழுது ராஜா கண்ணைத்திறந்தான்…ஹ….ஹ….ஹ…என்ன…நடக்குது இங்க.. உனக்கு குறி வேணுமா…பெருக்கல் குறியா..வகுத்தல் குறியா…எது……’

‘டேய் சூரண்ட்டா…நல்லா விடுரே…அவங்க உன்னைக்குறி கேக்கறாங்க அவுத்து உடு…’

‘இருங்க…இருங்க நானா குறி சொன்னேன்… ஆச்சரியமா இருக்கு…அப்பிடிக்குறி வராது….நான் கண்ணை மூடி கையைச்சுத்தி யாரத்தொடரனோ அவங்களுக்கு குறி வரலாம்ன்னு நெனைக்கறேன் இப்ப அப்பிடித்தானே வந்தது சரியா..ஓம்….ஓம்…ஓம்….கையைச்சுற்றி விரலால் தொட்டான் ராஜா…’இவங்களுக்கு..குறி வருது…’

‘நீ தொட்ட இடத்திலேதான் குறியே இருக்குது…இல்லே சித்தி…’

‘சும்மாயிருங்கம்மா…அவன் இங்கயே படுத்துக்கிடந்தவன்…அவன் எங்க தொட்டா என்ன…புள்ள குறி சொல்றான் கேக்கனும்…மலரு உனக்கு ரெண்டு மாசத்திலே மாலை வரும்னு சொல்றானில்லே நல்ல வாக்கு கும்பிட்டுக்கோ…அவன் ஆஞ்சநேயன்ம்மா….’

‘தொட்டுக்கும்பிட்டுக்கோ மலரு ‘என்று எல்லோரும் கோரஸாகச்சொல்ல விதியே என்று கும்பிட்டாள் மலர்…’நேரம்டா உனக்கு….’

‘சாமி எனக்கு என்ன குறி வருது சாமி….’என்றாள் சித்தி….

‘ம்ம்……..ம்ம்……..ம்ம்…….என்று உறுமி தலையைச்சிலுப்பினான் ராஜா…..

‘அடியேய்…ம்..ம்…. ..ரேணுகா ..உனக்கு மூனு சனி பிடிச்சிருக்கு…சனியன்னா கருப்பு விடாது கருப்பு..சனியனே நீ கெட்டதை தேடிக்கிட்டே……’

‘ஐயோ..சாமி…விவரமா சொல்லு …சாமி..’

‘சனியிலே மூனு…மண்ட சனி…அடுத்தது கண்ட சனி…முக்கியமாணது ..பண்ட சனி…’

‘வசு குறுக்கே விழுந்தாள்…மூனாவது சனி எது சாமி….’

‘ப…ண்….ட…..சனி….பண்ட சனி….’

‘அப்பா….நான் வேற மாதிரி நெனைச்சேன்…..’என்னறாள் வசு…

‘சாமி …மேல சொல்லுங்க….’

‘முடியாது…சுத்தமில்லாத ஒரு சுந்தரி இங்கே இருக்கா….குறி தவறுது..’

‘ஏய் யாரு நாப்கின்….யாருமில்லையா..சாமி .எல்லாம் சுத்தம்…’

‘சுத்தம்ன்னா என்ன நம்பாம மனசால அசுத்தப்பட்ட ஒரு ஜீவன்…அதாலே குறி தவறுது….ஷ்..ஷ்…ஷ்….சாமி குறி எறங்குது…கழுத்து முறிந்த கொக்கு மாதிரி சடக்கென்று லாவகமாகக் கழுத்தைத் தொங்கப்போட்டான்….நம்ம ஆள்..வெகுவாய்க் களைத்துப்போய் ஈனமாய்க் கண்களைத்திறந்தான்…’என்ன நடக்குது …ஏன் இத்தினி பேர் நிக்கிறீங்க…என்ன சமாச்சாரம்….’

‘ராஜா …உம் மேல சாமி வந்தது …எறங்கிடுச்சி…’

‘அட..அதானா தலை பாரமா இருக்கு….யாருக்கு குறி கெடச்சது…மலரு உனக்கு புள்ள பொறக்குமான்னு குறி கேக்கலாமில்லே….’என்றான் ராஜா’ வேணாம் வெட்டிருவேன்…’

‘அவளை விட்ரா எதையும் நம்ப மாட்டா..ஏண்டா கண்ணா.சனியிலே.மூனு சனி இருக்காமே..அதுபத்தி உனக்கு தெரியமா…’

‘கண்டீப்பா.இருக்கு..மண்டை சனி..இதுக்கு உதாரணம் பஸ்மாசுரன் தன் தலையிலே தானே கை வச்சி செத்தான்…கண்ட சனி…ஈஸ்வரனே இதுக்கு தப்பலை…கண்டம்னா
கழுத்து அவனைச்சனி விடலை …ஈஸ்வரன் கழுத்துலே எப்பிடி விஷம் ஏறுனது.சனிம்மா..சனி..அதாலே அவனுக்கு நீல கண்டண்ணு கூ பேர் வந்தது…பொம்பிளைகளுக்கு இந்த கண்டம் வரவே கூடாது…கழுத்துலே இருக்கறது… தாலி ..அப்புறம்…அதுக்கு பங்கம் வந்துடும்…பண்ட சனின்னா அது தெலுங்கு வாரத்தை… கெட்ட சனின்னு அர்த்தம்…அது கால்லே வரும் நளனைப் புடிச்சது…சரியா…புரியுதா…’

மலருக்கு அவன் இவ்வளவு நாடகமாட காரணம்ஏதாவது இருக்க வேண்டும் எனப்புபுரிய சற்று நிதானித்தாள்…..கவனிக்கனும்…டேய் என்னையா ஏமாத்தறே…சாவேடா நீ என்று
முணகினாள்…

‘பாரு சித்தி..இங்கே வச்சி விலாவரியா பேசமுடியாது அந்த ரூமுக்ககு வா ..அந்த கண்ட சனி ..பண்ட சனி எல்லாம் பத்தி பேசலாம்…சரியா…’

‘எனக்கு காதே கொய்ங்குது ..ராஜா பண்ட சனின்னு தானே சொல்றான்…?

‘வாடா உள்ள போகலாம் எல்லா சனியும் இங்கேயே இருக்கு….’

யாருக்கும் தெரியாமல் ராஜா மலரைப்பாரத்துக்கண்ணடித்தான்…

***

‘உன் குறியிலே என்ன வருதுன்னு சொல்லிடறேன் சின்னம்மா…’

‘இதுலே ஒன்னுமே வராதுடா.. வெளிப்படையா …என் பிரச்சினை சொல்லிடறேண்டா…நீ என் புள்ளை மாதிரி..உன் கிட்ட என்ன வெட்கம்…அதுலே நீ அப்பாவி வேற….

‘எல்லாம் இத ஒன்னு சொல்லிடுங்க என்று முணகினான் நம்ம ஆள்’…சொல்லு சித்தி ..’

‘டேய் ..உங்க சித்தப்பா புத்தி கெட்டுக்கிடக்கறாருடா ….அம்பது வயசு ஆள் மாதிரி நடக்கறதில்லே…வயசுப் பையனா நெனைச்சுக்கறார்டா..அராஜகம் பன்றார்…பாரு உடம்பே சிலிர்க்கறது பாரு பேரனுக்கு ஆறு மாசம் ..பெத்த புள்ள வவீட்லே இருக்கா மாப்பிள்ளை பொசுக்குன்னு உள்ளே வந்துடறார்இவருஎப்ப பார்த்தாலும் நாய் மாதிரி மேல விழுந்து பிடுங்கறார்…மனுஷன்னா அடக்கம் வேணுமில்லே…அங்க தொடறார்..இங்க தொடறார்…டேய் சொல்ல வெக்கமா வருது …கெட்ட வாரத்தையிலே ‘அதுக்கு’ கேக்கறாருடா…அன்னிக்கு குனியவச்சி குத்தினாரா…

‘ ஐயோ …..என்றான் ராஜா…’

‘ஆமா ..அவ்வளவு பெரிய சண்டை…அடி குத்து எதுக்குமே நான் மசியிலை நான் யாரு …பாரு கெழவா நீ குனிய வச்சி குத்தினாலும் நிக்க வச்சே அடிச்சாலும் என் கிட்ட பருப்பு வேகாதுன்னு அடிச்சிட்டேன்…எப்பிடி..’

பருப்பு…?

‘லஞ்சை யில்லாத மனுஷண்டா…இந்த வெளங்காத ஆள் பாட்டுப்பாடறார்டா …தொட்டால் பூ மலருமம்ன்னு பாடறார்…அப்புறம் உன்னைக்கண் தேடுதே அப்படின்னு பாடறார் பொண்ணு கேட்டு சிரிக்கறா…மாப்பிள்ள மின்னாடி நடக்க கூச்சமா இருக்கு….டேய் ராஜா உன் சித்தப்பா கம்ப்யூட்டர் பாக்கறாருடா ..கம்ப்யூட்டர்…பார்க்கறாரு…

‘அதுலே என்ன தப்பு….’சித்தி…’

அடேய்…அதுலே என்ன தப்பா…எல்லாம் அதுலேதான் இருக்கு…ராத்திரி..பன்னண்டு மணிக்கு கம்ப்யூட்டர் பார்த்தா என்ன அர்த்தம்…அந்த ஆளோட பாஸ்வேர்டு பில் கேட்ஸுக்கே தெரியாது..அதான் விஷயம். விஷமக்கார மனுஷன்…இடுப்பக் கிள்றார்…தொடக்குப் பக்கத்திலே தொடறார்…டேய் என்ரூம்லே பாத் ரூம் தாள்ப்பாளை கழட்டிட்டார்னா பாத்துக்கோயேன்….’

அப்ப நீ எப்பிடி…..?.. என்று நம்ம ஆள் வினவ சித்தி ‘ நான் அங்க குளிப்பனா…எனக்கு பைத்தியமா…உலகத்திலேயே பாத்ரும்தாண்டா ஆபத்தான இடம்…உள் பாத்ரூம் எந்த வீ்ட்லே இருக்கோ அந்த வீட் லே வருஷத்துக்கு ஒரு குழந்தை பிறக்கும்..எப்பிடி நான் சொல்றது…..’

சிகப்பு முக்கோணத்துக்கு எழுதனும் என்று முடிவு செய்தான் ‘அட.. அப்பிடியா சித்தி.. என்றான் நம்ம பயல்.’.ஆமா அவரு அந்த பாத்ரூம்லே குளிப்பாரு’ இல்லையா சித்தி…’

‘கரெக்ட்ரா கண்ணா அவரு விஷமம் புரிஞ்சா சரி..அவரு துண்டு. துண்டுன்னு ‘ அதுவே’ துண்டாகறமா மாதிரி கத்துவாரு உள்ள போவேன்ன்கறே…விறைச்சா கூட போகமாட்டேன்..

‘விறைச்சான்னா…’

‘குளுரு வந்தா விறைக்குமில்லே…’

‘ஓ…அதுவா…சர்தான்…சித்தி…’

‘பார்றா..கல்யாணமாண புதுசிலே..காலமே தலைக்கு குளிக்கனும்…அப்புறர் சாயரட்சை தலைக்கு குளிக்கனும்…மானமே போகும்…’

‘குளிச்சா அழுக்கு போகும்… மானம் எப்பிடி போகும் சித்தி…’

‘அட போடா ..ஜோக்கடிக்கிறே…நான் ரெண்டு வேளை சாமி கும்பிடறவ…சுத்த பத்தமா இருக்கனும்…இந்தப்பக்கம் வீட்லே மாமனார் அடுத்த வீட்லே நாத்தனார்…எதிர் வீட்லே மச்சாண்டார்…தினம் ரெண்டு தடவை தலை குளிச்சா என்னடா ஆகும்…’

‘தெரியல்லியே சித்தி…’

‘இதெல்லாம் தெரிஞ்சுக்காதே ..ஒரு வருஷத்திலே புள்ளையாகும்…..’

‘அதும் பொட்டப்புள்ளே…’

‘சரியா சொன்னடா கண்ணா..பொறந்தாளா…பாரேன்…. பன்னண்டுலே… அகல்யா வயசுசு்கு வர்ரா..அப்புறம் ஆறே வருஷத்திலே அகல்யாவுக்கு கல்யாணம்…. அவளும் பெத்துட்டா..பேத்தி வந்தும் இந்த ஆள் அடங்கலைடா நேத்து வரம்பு மீறிட்டார் வீட்லே யாருமில்லே… நம்ம கிட்ட நடக்குமா ஓங்கி விட்டேன் …போய் கடல்லே விழுந்து சாவுய்யான்னு கழுத்தப் பிடிச்சு தள்ளி கதவச்சாத்திட்டேன்..எப்பிடி…அடக்கனும்டா இவனை…ஒரு நல்ல வழி சொல்லு….’

‘அடக்கிடுவோம்….சித்தி வீட்லே பஞ்சாங்கம் வச்சிருப்பே..’

‘ஆஹா.அது இல்லாமலா..வாசன் திருக்கணித பஞ்சாங்கம் அப்புறம் …’

‘இருக்கட்டும் இருக்கட்டும் காலண்டர் இருக்குமே…’

‘அது இல்லாமலா ..மூனு காலண்டர் அப்புறம் நொடி தப்பாத ரேடார் வாட்ச்சு…நாள் நட்க்ஷத்திரம் திதி வாரசூலை எல்லாம் பாப்பண்டா …நானே ஒரு பஞ்சாங்ண்டா கண்ணா..செறுப்பு போடக்கூட நான் பஞ்சாங்கம் பார்ப்பேன்..தெரியுமில்லே…

‘ஆனா ரொம்ப பழய பஞ்சாங்கம்..சித்தி..’

‘அடே..பஞ்சாங்கம்னாவே பழசாத்தான எல்லாம் நெனைக்கறாங்க….அது சரி பஞ்சாங்கத்துக்கும் அவரை அடக்கறதுக்கும்என்னடா கனெக்க்ஷன்…’

இருக்கே என் கிட்டஇந்த கம்ப்யூட்டர்லே ஒரு பஞ்சாங்கம் இருக்கு சித்தி தெளிவான பஞ்சாங்கம்…அத நீ படிச்சு அப்புறம் அதுலே சோல்லி இருக்கறதைப் புரிஞ்சி அது படி நடந்தா அப்புறம் அவரு செங்கோல் உங் கையிலே…அடக்கிடலாமில்லே..

‘அப்பிடிங்கறே அவரு செங்கோல் என கைக்கு வரும்கறே…பிடிச்சா விடுவனா..’

‘விடக்கூடாதுசித்தி… விடவே கூடாது…நீ விடலன்னா அவனும் விட மாட்டான்ஆம்பளை செங்கோல் எந்த பொம்பிளை கைக்கு வருதோ அந்த வீட்லே பொம்பிளைக்கு ஒரு பிரச்சினையும் வராது….கால்லே கெடப்பான்…ரேசன் கடைக்குக்கூட போவான்….ஒரு குறையும் இருக்காது…நீ சொன்னாத்தான் பல்லு கூட விளக்குவான்னா பாத்துக்கோயேன்….முக்கியம் செங்கோல் உன் கையிலே இருக்கனும்….

‘ஆஹா இத முன்னாடி யாருமே சொல்லலைடா.. சொல்லலை… பிடிச்சிடரேண்டா அவரு செங்கோலை..அப்புறம் இருக்கு மாப்பிள்ளைக்கு…’

‘ஐயோ சித்தி மாப்பிள்ளைது வேண்டாம் …நீ கதையை மாத்திறாதே….’

‘இல்லடா இவரைத்தான் மாப்பிள்ளன்னேன்…அகல்யாவுக்கும் சொல்லித்தர்ரேன் அவ மாப்பிள்ளை செங்கோலை அ பிடிச்சிகட்டும்…எப்பிடி நான் சொல்றது…ஆமா செங்கோல்ன்னா என்னடா அது.. மொதல்லே அதுவே.. புரியலை….’

‘ஆஹா..திவ்யமான கேள்வி கேட்டே… பாரு சித்தி..இந்தக் கம்ப்யூட்டர் பஞ்சாங்கம் எழுதின ஆளுங்க ரொம்ப பெரிய ஆளுங்க..விவரமானவங்க டாக்ட்ரேட் எல்லாம் வாங்கினவங்க…ஒரு எழுத்து விடாம படி மார்க்கெல்லாம் கெடக்கும்…நீ நூறுமார்க் வாங்கிட்டயானா சித்தப்பா உன் கால்லே…அப்புறம் நீ ராஜாத்திதான். செங்கோல் உன் கைக்குத்தானா வரும்..எப்பிடி…’

‘விட்ரா .. கெழவனைச் சாக அடிச்சிடறேன்…ரேணுகாவா ..கொக்கா நீ அத ஓப்பன் பண்ணிக்குடு அப்புறம் கிழவன் கதியைப்பாரு…’நூத்துக்கு நூத்துமுப்பது வாங்கிட்ரேன்..அப்ப தெரிங்சுக்குவே சித்தி யாருன்னு என்ன…நான் ஸ்கூல் பஸ்ட் இல்லே..’

‘சித்திஒரு கால் மணி நேரம் ஆகும் பொறுமையா கரெக்ட்டா பதில் டிக் ‘அடி’..தப்பா பதில் சொன்ன மார்க் கொறஞ்சிடும்..முக்கியம்..அப்புறம் செங்கோல் கை மாறினா ஆபத்து..நான் மலர் கிட்ட ஒரு கணக்கு முடிச்சிட்டு வந்திடறேன்..என்ன…’

சித்தி கம்ப்யூட்டரில் ஆழமாய் முழுகி விட ராஜா வெளியே மலரிடம் வந்தான்…

‘இன்னிக்கு என்னடா ட்ராமா ..உன் ப்ளான் என்ன…உட்காரு ‘

‘இப்ப மாத்திரம் பக்கத்திலே உட்காருன்னு கொஞ்சுவையே..’

‘ச்சீ…தள்ளி உட்கார்ரா.. விட்டா மடியிலே உட்கார்ந்திடுவே…விஷயத்தைச்சொல்லுடா..’

‘ஒரு லைன்லே சொல்றேன்..புரிஞ்சிக்கோ…சித்தி ஆசாரம்…இதுவே சித்தப்பாவுக்கு விசாரம்….சரியா…புரியதா….’

‘புரியலை…’

அடேய் மண்டு..சித்தி பஞ்சாங்கம்…சித்தப்பா ப்ளே பாய் என்ன நடந்ததுன்னா…ராஜா முதல்நாள் பீச் விஷயம் விவரமாகச்சொன்னான்…..

‘அட..அப்பிடியா நடந்தது…சித்தப்பா பாவண்டா…எல்லாம் சரியாகுமா….’

‘ஆகாம…விடுவனா…ராத்திரி பூரா உட்கார்ந்து ஐம்பத்து அஞ்சு கேள்வி ..அதுக்கு மார்க் எல்லாம் போட்டிருக்கேன்…சித்தி முப்பது கூடத்தேறமாட்டா..அப்புறம் இருக்கு கூத்து…

‘ஜெயிப்பேங்கற..’

‘கண்டீப்பா ஜெயிப்பேன்…ஜெயிச்சா என்ன தர்ரே..’

‘கட்டிப்பிடிச்சு முத்தமே தர்ரேன் ..திருப்பதியா…’

‘குணா’ கமலஹாசன் மாதிரி சிவகாமி ..சிவகாமி என்று குழறிக்கொண்டு சித்தியைப்பார்க்கப்போனான் ராஜா…

‘திருட்டுப்பயல் என்னென்ன ட்ராமா போடறான்…’

***

‘டேய்..ராஜா… பெயிலாயிட்டேண்டா கண்ணா..பெயிலாயிட்டேன்..’

‘ஐயோ சித்தி உனக்கா இந்த கதி என்னலே தாங்க முடியல்லியேரொம்பக் குறச்சா மார்க்
வாங்கினா புருஷனுக்கு என்ன ஆகும்னு போட்டிருக்கா …’

போட்டிருக்கான்டா போட்டிருக்கான்..ஆயிரத்துக்கு பதினஞ்சுதான் வால்கி இருக்கேன்..அப்பிடி வாங்கறவ புருஷன் தற்கொலை பன்னிக்குவானாம் ..இல்லே கொலை பண்ணிஜெயிலுக்கு போவானாம்… யாரைடா கண்ணா…

‘என்னைத்தான்….இன்னும் என்னதான் போட்டு இருக்கு……’

‘நெறைய போட்டு இருக்கே..இரு…அவன்…..டாஸ்மாக் போயி சிந்து பைரவி சிவகுமார் மாதிரி பட்டா பட்டி அண்டர் வேர் போட்டு..குத்தாட்டம் ஆடுவானாம்..டேய் …கண்ணா..
டேய் …அதுலே முக்கிய பிரச்சனை ஒன்னு இருக்குடா…’

‘ஐயோ என்னன்னமோ சொல்றியே சித்தி…’

‘இவரு கொஞ்ச காலமா அண்டர் வேர் போடறதில்லேடா…என்னடா ஆகும்…’

‘பெண்டுலம் ஆடலாம் சித்தி..கடியாரமேஆடினா எப்பிடி சித்தி உம் மனசு தாங்கும்…அப்புறம் நம்ம கதி ..நான் டாஸ்மாக் போக மாட்டேன் சித்தி…

‘ஈஸ்வரா…ஐயோ..ராஜா..இதுதான் பண்டசனியாடா…

‘இல்ல சித்தி..அண்டர் வேர் இல்லாம ஆடினா அது அண்ட சனி…’

‘பகவானே என் புருஷனை விட்ரு ..என்னை வேணா புடிச்சுக்கோ…’

‘ஐயோ..பகவானே வேண்டாம்..என் சித்தி கூட அண்டர் வேர் போட மாட்டா”…….

‘ஆமா இல்ல ..கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்…பகவானே..என்னை விட்டுரு.. இந்த அண்டர் சனி என்னப் புடிக்கவேணாம்…சரியா ராஜா..இப்ப என்னடா நான் செய்யட்டும்…டேய் என்னாலே கல்பனை கூட செய்ய முடியல்லே ..பயம்மா இருக்குடா…’

‘பயப்படாதே…கவலைப்படாதே..நான் எதுக்கு இருக்கேன் …நம்ம பரகாலனுக்கு சொல்லி எல்லா டாஸ்மாக்குலேயும் ரெண்டு ரெண்டு அண்டர் வேர் வச்சிடுவோம்…’

‘ஒன்னு பத்தாதாடா..எதுக்குரெட்டை செலவு…’

‘அப்பிடீங்கறே சரி விடு..கெடக்கு கழுதைது….’

‘ஐயே..அவருது….அப்பிடி இருக்காதுடா…’

‘சித்தி..இதுக்கு..இந்த கண்ட சனியால வந்த பிரச்சினைக்கு பரிகார சாந்தி சொல்லி இருப்பானே….அதப்பாத்தியா…

‘சொல்றானே..சொல்றானே..இது ஒரு பொம்மநாட்டிக்கு பிடிச்சா புருஷங்காரன் மட்ட பொம்பிளை கூட கெட்ட சாவகாசம் வச்சிக்குவானாம்..முண்டாசு கட்டி ‘ஈன்னு’ பல்லைக்காட்டி பெங்களூர்லே சாமியாரா போவானாம்…டேய் இதுக்கு சாந்திசெய்ய சித்தப்பாவுக்கு ஒரு … ஒரு சாந்தி முகுர்த்தமே வைக்கனுமாமே….’

‘ஐயோ பொண்ணு கெட்க்காதே …அவருக்கு வயசு ஜாஸ்தியாச்சே…’

‘ச்சும்மாயிருடா …அவருக்கா வயசு ஜாஸ்த்தி அப்பிடி வயசுப்பையன் மாதிரி ஜமாயச்சுடமாட்டார் ….ஆமாம் பொண்ணு எதுக்கு நான் இல்லே…ஏண்டா நான் அவருக்கு ஃபிட்டாக மாட்டேன்…’

‘ஃபிட்டாவே..நீ ஃபிட்தான்…உனக்கன்ன நீ ஐஸ்மாதிரி’ அம்ஸமா’ வாகா இருக்கே…’

‘போடா நீ ரொம்ப சொல்றே எனக்கே வெக்கமா இருக்கு. அவரு கூட அப்பிடித்தான் சொல்லுவாரு ..ஐயோ அதிலே ஒரு பிரச்சினை…’

‘இன்னம் என்ன சித்தி…மனுஷங்களைப் படுத்தறியே…’

‘பார்ரா இந்தப்பக்கம் கொளுந்தன்…அந்தப்பக்கம் மச்சாண்டார்..எதிர்ல மாமனார் என் மேல மாப்பிள்ளை…’

‘ஐயோ சித்தி….’

‘தப்பா சொல்லிட்டேன் ..மேல் வீட்லே மாப்பிள்ளை…அதத்தான் அப்பிடி சொல்லிட்டேன்.. அப்புறம்டா… எனக்கு புருஷ ஹத்தி தோஷம் வருமாம் ..என்னடா ஆகும்…

‘அடுத்த ஏழு ஜன்மத்திலே உனக்கு புருஷன் இருப்பான் ..ஆனா இருக்க மாட்டான்…’

‘இல்லைடா ..நான் இல்லாம அவரு இருக்கமாட்டாருடா…செத்திருவாரு…’

அவளை உற்றுப்பார்த்தான் ராஜா.

ஏண்டா அப்பிடிப்பாக்கறே..நெஜம்டா ..நான் இல்லாம அவரு இருக்கமாட்டாரு…

‘அப்ப நீ இல்லைன்னுதான் நேத்து அவரு கடல்லே குதிச்சு சாக வந்தாரா..சித்தி..

அடி பட்ட மாதிரி அதிர்ந்தாள்’ சித்தி…என்னடா சொல்றே ..கடல்லே குதிச்சு சாக வந்தாரா …விவரமா சொல்லுடா..’

முதல்நாள் நடந்ததை விவரித்தான் ராஜா’ஒரு ஸெகண்டுஎல்லாம் முடிஞ்சிருக்கும் சித்தி திடீர்னு மனசு மாறி நின்னுட்டார்….ஏன் சித்தி..ஆமா அவரு என்ன தப்பா எதிர்பார்த்தாரு திடீர்னு அடிச்சு வெளியே தள்ளிட்டே..அதிர்ச்சி அடைஞ்சுட்டார்.. அவர் உன்னை விட்டா எங்க போவாரு ..அந்த மாதிரி மனுஷனா அவரு…அவனவன் எழுபது வயசிலே ஆட்டம் போடறான்… உன் மேல உசிர வச்சிருக்கார் ..போய்க்கடல்லே விழுந்து சாவுன்னு வேற திட்டியிருக்கே கோவம் தாங்கலை ..கடல்லே விழறதுன்னு வந்துட்டார் ..இன்னொருத்தனை பிரியப்படறது துரோகம்னா ..இப்பிடி புருஷனை வதைக்கறதும் ஒரு வகை துரோகம்தான்..ஏன் சித்தி அவரு மனசு வெறுத்து நாளக்கே ஒரு ரயில்லே விழ மாட்டார்ன்னு என்ன நிச்சயம்…..’

‘ஐயோ அப்பிடியெல்லாம் சொல்லாதடா நான் செத்தே போவேன்…தப்பு பன்னிட்டண்டா தப்பு பண்ணிட்டேன்… இப்ப புத்தி வந்திரிச்சு…அவரு என்ன கேட்டாலும் செய்வேன் அவரு மனசு மாதிரி நடப்பேன் இத்தினி வருஷமா அவரை நான் ஏமாத்திட்டேன் தப்பு தப்பு .நீ சாமி என் கண்ணைத்திறந்தே….அவருகிட்டமன்னிப்பு கேட்டுக்கறேன்…கேட்டு கால்லே விழறேன்…சரியா..என உடைந்து அழுது தாங்க முடியாது அவன் மேல் சாய்ந்தாள்…

***

ராஜா வெளியே வந்தான்…’சித்தி பதினைஞ்சு நாள் லீவ்…சனீஸ்வரனுக்கு சாந்தி பண்ண வெளியூர் போறா..என்று அவன் அறிவிப்பு செய்தபோது மலர் ஓடியே போய் விட்டாள்..

‘நாயிக்கு கட்டிப்பிடிச்சில்ல முத்தம் கொடுக்கனும் சரியாச்சொன்னான்டா…. இதாண்டா பண்ட சனிங்கறது…’ என்ற மலர் தெறித்து ஓடியே போனாள்…

***

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *