ராஜாராமன் செலவில்லாமல் சூனியம் வைத்த கதை (பாகம் 2)

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 7, 2016
பார்வையிட்டோர்: 26,934 
 

பட்டாளமாய் எட்டுப் பெண்கள் சூழ்ந்திருக்க ராஜா அட்டகாசமாய் ஆரம்பித்தான்..

‘ இப்ப எப்படி சத்தியம் பண்றதுன்னு சொல்றேன் …இப்பிடி ஒரு கையை நடு வயத்திலே வச்சுக்கனும்…இன்னொரு கையை அவங்கவங்க தலை மேலே வச்சி ….இரு ஷீலா நீ வச்சிருக்கறது நடு வயிறு இல்லே…’

‘சனியனே …அது நடு வயிறு இல்லடி…நடு வயிறுன்னா தொப்புள்…தொ..ப்..பு..ள்… தொப்புள் இல்லேனண்ணா…’ என்றது வசுமதி..’

‘கரெக்ட்…’

‘டேய்… நீ ரொம்பத்தான் ஜாஸ்தியா….அளவில்லாம எல்லாத்தையம் பன்றே….. …வேண்டாம்…அடிபடுவே…’என்றாள் மலர்..

‘பாரு மலரு …சத்தியம்னா சரியா பண்ணணும்…சத்தியத்துலே ஏமாத்த நெனைச்சா ..ம்..ஒரு நாளைக்கு பதிமூனு தடவை பீச்சா போகும்..அப்புறம்..
என்று ஆரம்பித்தான் நம்ம ஆள்…அதற்குள் குறுக்கிட்டது வசுமதி..

‘ இரு மலரு…எதையும் சரியா செய்யனும்….நீ.. சொல்லு ராஜா…கரெக்டா செய்துடறோம்…..என்று திருத்தமாகச்சொன்னாள் வசுமதி..

‘பாரு வசு..வயறுன்னா சும்மா இல்லே..மேல் வயிறு, நடு வயிறு, மடி வயிறு..துடி வயிறு, பிடி வயிறு, சப்பை வயிறு, தொப்பை வயிறு…….’

‘டேயப்பா…டேய்…வயித்தலே இத்தனை இருக்கறது ஐம்பது ஆகிற எனக்கே தெரியில்லேடா…அற்புதமான ஆராய்ச்சியாளன்டா நீ..மலரு..பையன் எங்கேயோ போயிட்டான்…’ இது மாமா…

‘திமிர் மாமா… திமிர்….வருவாடா எவளாவது..வயத்துக்கு மேலே கீழே ஆராய்ச்சி பண்ணு.அவ ரொம்ப..சந்தோஷப்படுவா…’

‘அப்பிடி ஆராய்ச்சி பன்னாம விட்டா அதுக்கப்புறம் எவ்வளவு துக்கம் வரும் தெரியுமா மலரு..’

‘அக்கா.. விடு..நாங்க சத்தியம்னா பயப்படுவோம்.ஆந்திராக்காரங்க கரெக்டா.. நடந்துக்குவோம்…சத்தியம் பண்ணிணா சரியா பண்ணணும்னு
நாய்னா அடிக்கடிசொல்லுவாரு ஏங்க்கா..தொப்புள்ங்கறது எது…கீழே இருக்கறதா..இல்லே..

‘சபாஷ்…சரியான கேள்வி… அனுசூயா… நீ தமிழ்..சினிமா பாரத்ததில்லே..

பம்பரம் விடற இடம் தொப்புள்..அது விட முடியாதுன்னா அது..அது தொப்புள் இல்லே. அது பேரு வேறே.. என்னவோ சரியா மலரு..’.என்று நடுவில் வந்தான் சிவராமன்…

‘வா சிவராமா..காணமேன்னு பாத்தேன்..வந்துட்டே….நீ வீட்லே நெறைய பம்பரம் விட்டு விளையாடரியாம்…எங்கே விட்டு விளையாடிட்டு
இருக்கேன்னு உம் பொண்டாட்டி கிட்டக கேட்ருவமா.. அது சரி உனக்கு நிறைய நேரமிருக்கு..பொண்டாட்டிக்கு நாப்கின்ஸ் எல்லாம் வாங்கறே..
அது பத்திஎல்லாம் கூட தெரிஞ்சிருக்கும் உனக்கு..அதிர்ஷ்டக்காரி….

‘எம் ஒய்ப்புக்கு எக்ஸ்ட்ரா லார்ஜ் ……’

‘ஆஹா.. புண்ணியம் பண்ணியிருக்கே..மாமா…கேட்டேளா…சிவராம் ஒய்ப்புக்கு எக்ஸ்(ஸ)ட்ரா லார்ஜாம்..’ஏன் எல்லோரும் சிரிக்கிறார்கள் என்று
சிவராமனுக்குப்புரியவிலை..என்ன தப்பா சொன்னோம்..லார்ஜ்ன்னா..அது எப்பிடித் தப்பாகும்…..

‘டேய் சனியனே வாடா இப்பிடி….ஏன்டா அங்க போய் கலந்துகிறே..ராஜாப்பயல் வள்ளல் உனக்கு வராது ..அவனானா எம்டன்..அந்த கோபிகைகளுக்கு அவ
கண்ணன்…எவளாவது அவனுக்கு எதிர்ப்பு சொல்றாளா…பாதி பேருக்கு எது வயிறுன்னு தெரியாம மேலே கீழே எடம் மாத்தி கை வச்சிருகாங்க.அவன்
உத்தரவு போடவேண்யதுதான் ..அவ அவ கை அடி வயத்துக்கும் கீழே கூட போயிடறது…எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்டா பாரு எல்லாம் காட்டிடறதுன்னு சங்கல்பம் பன்னின மாதிரி தூக்கிப்பிடிச்சிகிட்டு காமிக்க பெரிய கூட்டமே நிக்குது…நடுவிலே ஜோக்கர் மாதிரி இவன்..வாடா.

‘ பொறாமப்படாதீங்க மாமா எனக்கு எல்லாம் ஒன்னுதான் என்றான் ராஜா.. ‘

‘ அப்படத்தான் எல்லா ஹை டெக் சாமி யான்களும் பேசறாங்க கண்ணா…’

‘அப்ப நீங்க பேயி பிசாசு சாமி பூதம் எதுவும் நம்பல்லியா மாமா…’

‘மலரு கலகத்தை ஆரம்பிக்கறான்..இப்ப இங்க நம்பல்லியான்னு கேக்கறான் நாளைக்கு என் பொண்டாட்டி கிட்ட வந்து மாமா சாமியை நம்பாம நாத்திகம்
பேசறார்ன்னு வச்சி உட்ருவான்..அவளா..இவன் பேச்சை தெய்வ வாக்கா எடுத்துட்டு எனக்கு கருப்பு சாயம் கட்டி கஞ்சி ஊத்திடுவா..பத்தாத்துக்கு
மலைக்குப்போனாத்தான் கெழவனுக்கு புத்தி வரும்னு தலையிலே மூட்டையை வச்சிருவா… அட. அப்பும் ..பாரு மலரு…உன்னைப்பாத்தா சாமிங்கனும் ..இந்த நாயைப்பாத்தா சாமிங்கனும்..அது கூட பரவாயில்லே அவளைபார்த்தும் …..அதான் என்னோட அழகான பொண்டாட்டியைப்பாத்தும்
சாமிங்கனும்..அதக்கூட பொருத்துக்கலாம்…ஆபிஸ் கூட்டற அம்மாளுவைப்பார்த்தும் சாமிங்கனும்மாம்…அவளானா கேலி பன்றா…ஏம்பா
நான் உனக்கு சாமியா…ராத்திரி சாமி சாமின்னே ..சரி..இப்ப ஏன் இப்படி சாமின்னு கூப்பிறேங்கறா…டேய்..பாபிஷ்டி குடும்பத்திலே குஸ்தி போட விடாதேடா.. ‘

‘சாமி துணியைக் கழட்டினா அப்புறம் நான் மாமி……..’ என்று லஜ்ஜையின்றி ஆபிஸ் கூட்டுகிற அம்மாளுசொல்லுவது பெருங்குடியில் படு பிரசித்தம்..

அம்ஸா குறுக்கே வந்தாள்.அவள் பீகாரி..பெரிய உடம்பு. அதே மாதிரி வயிறு ‘அக்கா எனக்கு நெஜம்மாவே ஒரு சந்தேகம்..என் தொப்புள் கீழேதான்…அது
நடு வயிறா அடி வயிறா..புரியறதில்லே ..சமயத்திலே எம் புருஷனுக்கும் குழப்பமாயி….’

‘எந்த சமயத்திலே அந்த மாதிரி குழப்பம் வரும் அம்ஸா…’என்றாள் வசுமதி…

‘ச்சீ..அடங்குடி..அவ பத்தி நீ..கவலைப்படாதே … உனக்கும் உனக்கு வரப்போறவனுக்கும் அவளோடபிரச்சினை மாதிரி வரவே வராது..உனது எல்லாம்..சரியா.இருக்கு.சரியா.. என்று பின்னாள் திரும்பினாள் மலர்..

‘ஏம்மா ..உன்னோட புருஷனுக்கு இத்தனை வருஷமாகியுமாகியுமா குழப்பம் தீரல்லியா..அதான் ரெண்டு வருஷமாகியும் ஒன்னுமில்லையா..அடையாளம் காட்டுடி அவனுக்கு.. பாவண்டி..அவன்…’

அதற்குள் வனஜாட்சி ராஜாராமனிடம் தஞ்சமடைந்தாள்…’ ராஜா இது நடு வயிறா பாரு….கரெக்டா சத்தியம் பண்ண வேண்டாம்…?

‘இரு..அவசரமாப்பாக்கவெல்லாம் முடியாது….நிதானாப்பாத்துதான் சொல்ல முடியும்…..ஒவ்வொருத்தராய்ப்பாத்து சொல்றேன்….க்யூவிலே வாங்க…’

‘ ஏம்மா புடவையை விலக்கி நல்லா காமிங்ம்மா..எல்லாம் வரிசையா நின்னு காமிங்க…பாவம் அவனும் நல்லாப் பாத்து ஆராய்ச்சி எல்லாம் பண்ணி ஒரு
முடிவுக்கு வரவேண்டாம்…ஆபிஸ் லே எல்லாம் வாங்கப்பா…போனா வராது..புடவை மூடினாத் தெரியாது..டேய். ராஜா..பார்க்கறதுன்னா புடவைக்கு மேலே
காமிச்சு ஏமாத்த விடாதே…புடவைக்கு அடியிலே காமிங்கம்மா..’என்றாள் மலர்….’டேய்..ராஜா ..ஸெல்பி வச்சி எடுத்துக்கோடா…உதவும்…ஈனப்பயலே..’

‘ இல்லேக்கா சத்தியம்கறதாலே….’ என்றாள் ஆந்திரா…

‘ச்சீ…வாயை மூடுங்க..இழுத்துப்போத்துடி..டேய் எருமை… இதான் உன் லிமிட்….நீ..சூனியமம்வைக்கிறவனை விட பெரிய சூனியக்காரன்..
அடி வாங்கி நாளாச்சில்லே..அதான் ..ஓடிப்போயிடு…கொன்னேப்புடுவேன்..’

ராஜாராமன் முனகிக் கொண்டே புறப்பட்டான் ராஜா’..எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கறேன்னு உனக்கெங்கே தெரியப்போகுது..ம்..ஒரு பாராட்டு
இல்லாத உலகம்..பத்து நிமிஷம் மனுஷனை நிம்மதியா இருக்க விடாதீங்க..’

‘ ப்போடா…பெரிய இவன்…வந்துட்டான்…உலகத்தைக்காப்பாத்த……’

‘அக்கா அவன் மனசொடிஞ்சு போறான்…உனக்குத்தான் பாவம்…..’

‘அடிங்கொ….எல்லாத்தையும் அடிச்சே கொன்னுடுவேன்..ஓடிடுங்க….’

வந்துட்டாளுங்க…வர்ரவனுக்கும் கொஞ்சம் பாக்கி வைங்கடி…’

‘ ம்….இது பொக்கிஷம் அள்ளஅள்ளக் கொறையாது….’ என்றது வசுமதி

‘அம்மா தாயே வள்ளலே …எல்லாத்தயும் காட்டி எல்லாத்தயும் உட்டு தாராளமா..அள்ளிக்கச்சொல்லு…போங்கம்மா நீங்க வேடிக்கை பாருங்க..’
ச்சீ…’

——————–

ராஜாவுக்கு அந்த ஆளைக்கண்டு பிடிக்க நேரமாகவில்லை…’ பெரிசு எங்க பொன்னுக்கா சூனியம் வைக்கறே..ராத்திரி நான் வைக்கிறேன்யா
உனக்கு சூனயம்…..’

அந்த ஆள் காமராஜர் சட்டை போட்டுக் கையில் தங்கக்காப்பு கட்டி நான் வெளியூர் என்று அப்பட்டமாய்த் தெரிவத்துக்கொண்டிருக்க நம்ம
ஆள் அவனிடம் வந்து ஆரம்பித்தான்… ‘ பெரிசு…ஒருத்தர் இங்க வந்தாரா..தாயத்து கட்டியிருப்பான்…உங்க மாதிரி திடமா..காவி வேஷ்டி ..சட்டை.. ‘

‘ உங்க மாதிரி திடமா..’என்கிறதில் பெரிசாகப்பட்டது அகம் குளிர்ந்து மகிழ்ந்து’ இல்லையே ‘தம்பி…நானும் அரை மணி நேரமா நிக்கேன்’..என்றது’
‘ ரொம்ப முக்கியமான சமாச்சாரம்… சொன்னா சொன்ன நேரத்துக்கு வந்தாத்தானே ஆச்சு…’

‘அதானே நேரம் முக்கியமில்லே…’ என்று ஆரம்பித்தது பெரிசு..’

‘கெடக்குது.அதை விட சமாச்சாரம் முக்கியம்..பெரிசு..கிராத்ததுலே இருந்து வர்ரீங்க ஒரு மருந்து மூலிகை வேணும்…’என்றான் நம்மாள்…

‘சொல்லுங்க தம்பி நமக்குத் தெரியாத வேரா மூலிகையா…’

‘சிக்குனே முருகா.சாவடிக்கறேன்.சூனியமாய்யா.’கருவிக்கொண்டான் ராஜா

‘…அதில்லே அது பேரு வெளியே ஜாஸ்தி சொல்லக்கூடாது…அதான் யோசனை..’

‘என்ன மூலிகை தம்பி ..தைரியமா சொல்லுங்க ..நான் என்ன வெளியவா சொல்லப் போறேன் ..எல்லாம் நமக்குள்ளேதான்….’

‘சரி சொல்லிடரேனே..பெரிசு…உங்களுக்கு பாதாள மூலி தெரியுமா…அது கெடக்குமா..அதான் அந்த ஆள் கொண்டு வரவேண்டியது….
அப்புறம்…..வேற திட்டமும் இருக்கு…அவன் கூட…’

‘ஐயோதம்பி.தம்பி. .இருங்க..கிட்டக்க வாங்க.. பாதாள மூலி மருந்துக்கு உபயோகம் பண்ற சமாச்சாரம் இல்லே…மாயம் மாந்திரீகம்…பண்ணத்
தான் உபயோகப்படுத்துவாங்க..உங்களுக்கு எதுக்கு…போலிசுக்குத்தெரிஞ்சா வம்பு…’.சன்னமாய்ப்பேசினது பெரிசு..

‘தெரியும் பெரிசு..பாருங்க பெரிசு..விவரமா சொல்லிடரேனே…ரொம்ப ரகசியம் நமக்குத் தெரிஞ்ச கிழவி ..பலே சூனியக்காரி…சூனியம் வச்சே இருவது
முப்பது வூடு சம்பாரிச்சிருச்சி…எவனோ கட்சிக்காரன் கேட்டான்னு கெழவி அன்னம் தண்ணி துணியில்லாம ஒரு மண்டலம்..ராத்திரி பூஜை பன்னிட்டிருக்கு…’

‘நாப்பத்திஎட்டு ராவா …’.என்றது பெரிசு…

‘ஆமாம்’ என்றான் ராஜா….

‘அன்னம் தண்ணி.. துணியில்லாமகூட…ஆச்சரியப்பட்டது பெரிசு.

‘ஆமாம் …துணிக்கூட இல்லாம ..ஆனா ராத்திரி பூஜைதானே…யாருக்கும் இது தெரியாது….. என்னைத்தவிர…..’

‘ஆனா எதுக்கு தம்பி இந்த கடுமையான பூஜை…..’

‘காஷ்மோரான்னு ஒரு அதி பயங்கர பூதம் இருக்குதாமே…அதை உச்சாடனம் பண்ணி எழுப்பிட்டா நாம எது சொன்னாலும் அது செய்யுமாம் ஆங்கார சொரூபினி..அண்ட பகிரண்ட பாதாள பூதாள வேதாள லோகங்களைக் கட்டுப்படுத்துமாம்…..பூகம்பம்..நெருப்பு..சுநாமி காற்று எதுவானாலும் இதன் உத்தரவுபடிதான் நடக்குமாம்….இப்ப சென்னை வெள்ளம் எப்பிடி வந்ததாம்..இது மாதிரி ஒன்னோட சேஷ்டைன்னு கிழவி
சொன்னா…நீங்க நம்பறீங்களா….’

‘கண்டீப்பா நம்பறேன் சாமி….தம்பி..தம்பி..அந்த அம்மாவை தயவு பண்ணி காட்ட முடியுங்களா…ஐம்பதாயிரம் செலவு பண்ணி சூனியம் வக்க வந்தேன்
பாவிப்பய தேடிவந்தவன் காணாம ஏமாத்தறான்…சின்ன குட்டிச்சாத்தனை ஏவினா போதும்னு நெனைச்சேன்…இப்ப காஷ்மோராவே கெடைக்கும் போலத்
தெரியுதே..மளயாள பகவதி…உனக்கு பட்டாலே புடவை சாத்தறேன்..தம்பி..நான் இப்ப மலை போல நம்பறது உங்களத்தான்..கை விட்ராதீங்க…ஒரு
பொண்ணுக்கு நான் சூனியம் வச்சே ஆகனும்…..தாங்க முடியாத தொந்தரவு..சூனியம் வச்சிட்டு வீட்டுக்குள்ளே’ வா’ ங்கறா பொண்டாட்டி’

‘பெரிசு… ஒரு அமைப்பு பாருங்களேன்..இன்னிக்கு ராத்திரி காஷ்மோரா எழுந்திரிச்சுரும்..உடனே ஒரு கன்னிப்பொண்ணை காவு கேக்கும்..கொடுக்
கலைன்னா கிழவியை காவு வாங்கிடும்…இது கிழவி பிரச்சினை…தலைவலி இப்பவே கொண்டாடா ஒரு கன்னிப்பொண்ணைன்னு கிழவி என்னை சாகடிக்கிறா…நானா கிழவிக்கு செய்யவேண்டிய சூழ்நிலை.. கடவுளே கன்னிக்பொண்ணுக்கு எங்கடாபோறதுன்னு திகிலடிச்சுக்க கிடந்தேன்..’

‘ரொம்ப சௌகரியமாப்போச்சு…..எங்கிட்ட இருக்கறது சுத்தமான அக் மார்க் கன்னிப்பொண்ணு தம்பி…சந்தேகமே வாண்டாம்….நான் காரண்டி அதுக்கு
கிராமத்திலே எங்களுக்கு வேற என்னவேலை……அதோட இவ என் சொந்த அண்ணண் பொண்ணு…அப்புறம் என்ன ..சந்தோஷம்தானே..’

‘ ஆஹா நல்ல வேளை..கெழவி தப்பிச்சா..நமக்கும் நாலு சமாச்சாரத்துக்கு கெழவி வேணுமில்லே…நானும் தப்பிச்சேன்…’

‘வாஸ்தவமான பேச்சு…இப்பவே அந்தம்மாவைப்பாக்க முடியுங்களா..ஐம்பது ரூபா கை வசம் ரெடி ..அப்புறம் சூன்யத்துக்கான எல்லா சாமானும்ரெடி..’

‘மனுஷ ரத்தம் தலைச்சன் புள்ள மண்ட ஓடு..கருப்புக்கோழி..பாதாள மூலி..எல்லாம் இருக்கா பெரிசு…..’

ஆஹா..நீங்க விவரம் தம்பி ..எல்லாம் ரெடி..சொன்னதும் அரை மணி நேரத்திலே வந்துடும்…தம்பி ..இந்த ரத்தம் எந்த குரூப்புனு கேட்டான்…’

‘டி.வி.எஸ் குரூப்புன்னு சொல்லுங்க…’

பெரிசு உடனே போன் செய்து கேட்டது.’…ஓ..அது கெடக்காதா..அப்ப சரி..தம்பி ..எக்ஸ் குரூப் தரலாமான்னு க்ககறாங்க தம்பி…போதுமாம்..நீங்க
அதே ரெடி பண்ணிடுங்க…’

‘எக்ஸ் குருப்தான்.. சரி ..சினிமாவுலே பேய் படத்துக்குன்னா எக்ஸ்தானே போடுவான்.. அப்புறம் …தலைச்சன் பிள்ளை மண்டை ஓடு..’

‘விடுவனா ரெடி பண்ணிட்டனில்லே..அவன் நம்ம கட்சிக்காரன்..பெரிய மண்டை ஓட்டு வியாபாரம்…இப்ப மண்டையோடு மாத்து ஆபரேஷன் கூட
பன்றாங்களாமில்லே….உலகம் முன்னேறிப்போச்சி தம்பி……அவன் ஆட்சி சுடுகாட்லேன்னா பாத்துக்கங்களேன்…’

‘அத விடுங்க…அந்தப்பொண்ணோட தலை முடி போட்டோ வேணுமில்லே..’

‘அதான் தம்பி கெடக்கலை..தம்பி சரியா இல்லாத்தை கேக்கறீங்க…’

இதாங்க போட்டோ…தலை முடியும் காலடி மண்ணும் தானே ஏமாந்துட்டேன் ‘

படத்தைப்பார்த்ததும் வியப்பு காட்டினான் ராஜா….

‘அட..இந்த மூக்கரச்சியா ..கவலை விடுங்க ….ஒரு ஸெகண்ட்லே கொண்டாறேன்…ஒரு புண்ணாக்கும் தெரியாது..சந்தேகம் கேட்டே என்னை
சாகடிப்பா….ஒரு சவுரிக்கு மயிரு தர்ரேன்…போதுமில்லே….’

‘அப்பா ..இப்பத்தான் உசிரே வந்தது …நீங்க தெய்வம் தம்பி..’

——-

ராஜாராமன் அதற்குள் ஆபிஸ் வந்திருந்தான் ‘….மலரு..மலர்..இப்பிடி திரும்பேன்………’

‘ஏய்…என்னடா செய்யறே…..போன வேலையை விட்டு இங்க ஏன் வந்தே..’

‘உனக்கு பேன் பாக்க வந்தேன்…ஒரு ஸெகண்ட் இரு… ரெண்டே ரண்டு முடி எடுத்திடறேன்…ப்ளீஸ்….நகறாதே…’

‘டேய் என்ன செய்யறே..அதை வச்சி என்னடா செய்யப்போற…’

அதற்குள் அவன் சின்ன மயிர்க் கற்றையைப் பறித்திருந்தான்….

‘ டேய் மயிர் புடுங்கி… இதைப்புடுங்கி என்னடா செய்யப்போற…..’

‘ரிஸர்வ் பாங்குலே வச்சி நாலு லட்சம் கடன் வாங்கப்போறேன்சரியா..முடி நரைச்சிருச்சின்னு பிடுங்கினேன்..நாலு கருப்பும் சேர்ந்து வந்துட்டது..
வேணா நீயேவச்சுக்க..இந்தா…நீ கத்தினதுலே எனக்கு வந்த வேலை கூடமறந்து போச்சி…மலரு..ஒரு ஆயிரம் கடன் கொடேன்..’

‘டேய்…என்னவோ ஏமாத்து வேலை செய்யப்பாக்கறே…பொறுக்கி…என்னவோ..நாடகமாடறேடா…போன வேலை என்னாச்சு…’

‘அதானே… அவனுக்கு அங்க அவசரம்…இரு ..வந்து சொல்றேன்..நான் பொட்டுக்கடலை வாங்கவா போனேன்..இந்தா பிடின்னு குடுக்க..
வந்துட்டாங்க…தாலி கட்டினதும் புள்ள வந்திருமா…பொறுக்கனும்மா..இன்னமும் எவ்வளவு வேலை பாக்கியிருக்கு….அவசரப்பட்டா எப்பிடி….

——-

ராஜாராமன் பெரிசுக்கு விவரம் சொல்லி முடித்திருந்தான்….

‘பெரிசு ..கேட்லே வாட்சுமேன் இருப்பான்..பயப்படாதே…சின்னத்தம்பி அனுப்பினார்ன்னு சொல்லு…’

‘சின்னத்தம்பி யாரு தம்பி…..’

‘அட..சின்னத்தம்பி…தெரியாதா உனக்ககு..நீ சினிமாவே பாரக்கமாட்டியா..’

‘என்ன தம்பிஇப்பிடி சொல்லிட்டீங்க..சின்னத்தம்பி படத்தை நூத்து ஒம்பது தடவைபார்த்தவன் நான்..அது மட்டுமா குஷ்புவுக்கு கோயில்
கட்ட ஏழு லட்சம் வசூல் செஞ்சு….’

‘நீங்களே தின்னுட்டீங்களா…பாவிகளா…’

‘அப்பிடி குஷ்புக்குக்கு துரோகம் பன்னுவமா..உள்ளூர்லே கேட்பாரத்துக் குப்பையிலே கிடந் ஒரு சிலையை எடுத்துச்சிஅதுக்கு குஷ்பு மாரியம்மன்னு பேரும் வச்சி பெரிசா விழாவெல்லாம் எடுத்து…ஊரைக் கூட்டி பெரிசா கும்பாபிஷேகம் வச்சி அசத்திட்டோம்ல..இப்ப கூட்டம்… கூட்டமா வருது
ஊருக்கு என்ன சந்தோஷம் தெரியமா இதிலே….அந்த சின்னத்தம்பி வீடா இது…குஷ்புவைப்பாக்க முடியுமா தம்பி..எனக்கு அவங்கன்னா கொள்ளை
ஆசை……இப்ப பாக்க முன்னே மாதிரி அழகா இருப்பாங்களா….’

‘அதே மாதிரிதான் இருக்காங்க பெரிசு.. மாறவேயில்லே….பெரிய எடம் என்னா அழகு ..என்னா சமாச்சாரம்.. சூதானமா நடந்துக்க..பயப்படாதே…
நான் சொல்லிக் கொடுத்த மாதிரி கச்சிதமா காரியத்தை முடி..சரியா..கோட்டைவிட்டே அப்புறம் பன்னண்டு வருஷமாகும்..ஜாக்கிறதை…எது
சொன்னாலும் சின்னத்தம்பின்னு சொல்லிடு..குஷ்பு இளைச்சிட்டாங்க ..ஒரு நூல் மாறினதா தெரியும்…சினிமா வேற..நெஜம் வேற இல்லையா..
எல்லாம் சரியா செய்வியா பெரிசு….குஷ்புவை விட அங்க நீ பாக்கப்போற அவங்க அக்கா ரோம்ப அழகா இருப்பாங்க பெரிசு…..’

‘இனிமே நான் பாத்துக்கறேன் தம்பி…நான் சின்னப்புள்ளையா என்ன..என் கனவும் லட்சியமும் இன்னிக்குத்தான் நிறைவேறப்போவுது..விடுவனா..
அதிர்ஷ்ட்டம் பாருங்களேன்…குஷ்புவையுமில்லே பாக்கப்போறேன்…..கூடவே அவங்க அக்காவையம்…உனக்கு மச்சம்டா மொக்கச்சாமி…’

——-

‘ ஜட்ஜ் வீடு இதானா வாட்சுமேன்….’

‘ என்னது… வாட்சுமேனா….’ கொஞ்சம் பொறு குணாளா என்று அடங்கினான் போலிஸ்காரன்..’இருய்யா உனக்கு இருக்கு இன்னைக்கு…நான் வாட்சுமேனாடா கிழட்டுப்பயலே…..அப்புறம் வச்சிகிறேன்..சிக்குவே..’

‘ஐயா யாரைப்பாக்கனுங்க….சின்னம்மாவையா..பெரியம்மாவையா..இல்லே சின்னத் தம்பியையா….’

‘அனுப்பிச்சதே சின்னத்தம்பிதான்..நீ என்ன… நான் குஷ்புவை பார்க்கப் போறேனா அப்பிடின்னு கூட கேள்வி கேட்பே போலிருக்கே…’

‘ குஷ்புவா….அதற்குள் அந்த காக்கிச்சட்டை ராஜாவுக்கே போன் செய்து விட்டான் ‘..விடலாமா தம்பி…..’

‘சரி தம்பி விட்டுடறேன் தம்பி…..நீங்க சொன்னா சரி…ஐயா பெரிசு உள்ளே போங்க ..சட்னு போங்க..’

‘மனுஷனை நம்புங்கய்யா…நாங்கள்ளாம் பொய் சொல்ல மாட்டோமில்லே..’

மாளிகை மாதிரி வீட்டு முகப்பு இருக்க பெரிசு மிரண்டே போனது….’பேசாம சூனியம் வக்கிற தொழில் கத்துகிட்டிருக்கலாம்..ம்..எதுக்கும்
கொடுப்பினை இருக்கனும்…ஒரு சூனியத்துக்கு பத்து லட்சணத்தோட ரூபாயாமே..ம்.. சினிமாக்காரன் கொடுப்பான்…நம்மளைச்சொல்லு…

‘யாருய்யா நீ எப்பிடி உள்ளே வந்தே…உன்னை யாரு உள்ள விட்டது..’

பிரியா நம்ம பெரிசைப்பாரத்து சந்தேகப்பட்டு போலிஸைக்கேட்டாள்

‘சின்னத்தம்பி அனுப்பின ஆளாம் …தம்பியே சொல்லிடுச்சிங்ம்மா…’

‘சரி..சரி..நீ..போ..என்று அதிகாரமாய்ப் பேசின பிரியாவைப் பார்த்து கும்பிடு போட்டது பெரிசு. குஷ்புக்கு’ அக்காவா…தங்கையா தெரியல்லே
ஆனா அழகுலே இந்த வீட்டு பொம்பளைகளை அடிச்சுக்க முடியாது போலத்தெரியுதே…இது குஷ்புவுக்கும் மேல அழகா இருக்கே….’

‘என்னம்மா அங்கே..யார் இது…’என்று வெளியே வந்த கிழவிதான் சூனியம் வைக்கப்போகிறது என்பதில் நம்ம பெரிசுக்கு சந்தேகமே வரவில்லை….

குஷ்புவுக்கும் மேலே அழகா இருந்த அந்தப்பெண் இளக்காரமாக ஆரம்பித்தாள்…..

‘சின்னத்தம்பி அனுப்பிச்சாங்களாம்..’என்று கேலிச் சிரிப்புடன் சொல்லியதை புரிந்து கொள்கிற மன நிலையில் நம்ம பெரிசு இல்லை..’அட சாதாரணநாளில்
ஒரு பொம்பிளை.. அதுவும் இந்தவயசுலே… இப்படிக்கூ ஒசத்தியான பட்டுப் புடவை கட்டுவாங்களா என் என்ற சந்தேகம் தீரவே ஒரு நாளிகைப்பொழுது
தேவைப்பட்டது நம்ம பெருசுக்கு..ஒரு முப்பதாயிரமாவது விலை இருக்காது..அது சரி துக்கடா துணி இல்லாம பூஜை செய்வாங்களாம்..அப்புறமா ஆலிலை
கிருஷ்ணண் வச்ச ஜரிகைப்பட்டு கட்டுவாங்களாம்..குடுத்து வச்சவங்க..ம்.’

‘யோவ்…யாருய்யா நீ..சட்டுனு என்ன சங்கதி சொல்லிட்டு நகரு…’என்ற கிழவியின் கம்பீமான அதட்டலில் யதார்த்த உலகுக்கு வந்தது பெரிசு…
‘ஐயோ …கும்பிடாம பேசறமே.. எவ்வளவு தப்பு..அம்மா வணக்கமுங்க…அம்மா தம்பி அனுப்பிச்சதுங்க ..அம்மாஎனக்கு நம்மால ஒரு காரியம் ஆகனுங்க..அம்மாவைத்தானே எல்லாரும் ஜட்ஜுங்கறது…நாமதானே இந்த கோர்ட்டு பக்கமா எல்லாம்போயி பஞ்சாத்து. …பைசல்..அது..இது
எல்லாம் பண்ணுறது….அம்மா…’

‘அடப்பாவி பணம் தூக்கின சமாச்சாரமே முழங்குது..அதுக்குள்ள அடுத்த பிரச்சினை ஆரம்பிச்சிட்டானா….’என்றாள் பிரியா..

‘யோவ் யாருய்யா சொன்னது நான் கட்டப் பஞ்சாயத்து பன்றவன்னு…’

‘பயப்படாதே ..கிழவி மிரட்டுவா சும்மா அனாவசியமாப்பேசு’ என்று அந்தக் கம்ப்யூட்டர் பையன் சொன்னதை நினைவு கூர்ந்தது நம்மபெரிசு…

‘தம்பி சொல்லிச்சுங்ளே..அம்மா சொன்னா சொன்னதுதானாம்…அப்புறம் அப்பீலே கெடையாதாமில்லே…எதுத்துப்பேசினா சூனியம் வச்சிருவீங்களாம்
அப்பிடின்னு தம்பி சொல்லிச்சே…அம்மா…உலகமே உங்களை பாத்தா நடுங்குமாமே..அம்மாமுப்பது பங்களா வீடு வாங்கியிருக்கீவ்களாம்…
அம்மாவைப் பார்த்துட்டா ராஜ தரிசணம்தா ன்னு அந்த தம்பி சொல்லிச்சே..’

‘அப்படியா சொன்னான் அவன்.. யோவ் ….உன் வேல எதானாலும் சரி செஞ்சு தர்ரேன்..ஆனா அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் தெரியனும்..கரெக்டா
அவன் சொன்ன எல்லாம் சொல்லனும்..இஷ்டமிருந்தா சொல்லு …இல்லே போயிட்டே இரு ..எப்பிடி சௌகரியம்…..’

பெரிசு யோசித்து ஒரு வினாடியில் கட்சி மாறியது.நமக்குக்காரியம்முக்கியம் எவனைப்பத்தி என்ன சொன்னா என்ன..சுளையா ஐம்பதாயிரமில்லே தரப் போறோம்…..சும்மாவா..காரியம் செய்யப்போறோம்…சொல்லிட்டுப்போறது..

‘சொல்றதுக்கு என்ன ஆத்தா..எல்லாம் தெளிவாக்கிகிறது தானே நியாயம்.. ரூபா அம்பது சொளையா..தரப்போறனே…உங்க ரேட் ஜாஸ்திதான்..நம்மாளே
அவ்வளவு தர முடியாது…எப்பிடிங்க்கம்மா நான் சொல்றது..’என்றது பெரிசு..அதுவும் பிரியாவைப்பார்த்து…

‘யோவ் என்னய்யா ரேட்டுங்கறே ..அதுவும் அவளைப்பார்த்து..என்ன பேசறே.’

‘அம்மா…நீங்க ஆளுக்குப் பத்து லட்சம் வாங்கறீங்க.. அது உங்க சௌகரியம் ஆனா நமக்குக் கட்டாது..ஐம்பதாயிரம் தந்துடறேன்…ராவோட ராவா விஷயம்
முடிஞ்சது… அப்புறம் இந்தப்பக்கமே வரலை போதுமா…குஷ்புவைக்கூட அடுத்த தடவை பாத்துக்கறேன்…இப்ப இது முடிஞ்சாவே சந்தோஷம்…’

‘இது முடிஞ்சாவே போதுமாம்..என்ன பேசறான் இவன்….அத்தே….’

அத்தைக்கு முகம் சிவந்து போனது..பிரியாவுக்கே ஒன்றும் புரியவல்லை..அத்தைக்கு பொறுமை என்று ஜாடை காட்டி அமர்த்தினாள்…

‘ஐயா..விளக்கமா சொல்லுங்க..எதுக்கு அம்பதாயிரம் தர்ரீங்..’என்றாள் பிரியா..’தம்பி சொல்லியிருக்குமே அம்மா..அதான் ஆத்தா ராத்திரி காஷ்மோரோவை
எழுப்பப்போறாங்களாமே..அதுக்கு காவு கொடுக்க கன்னிப்பொண்ணு ஒன்னு வேணுமில்லே..அதுக்காவத்தான் ஆத்தா அண்ணம் தண்ணி துணி இல்லாம
நாப்பத்தி எட்டு நாளா ராப்பூஜை நடத்தறாங்களாமில்லே…..’

‘என்ன துணி இல்லாமையா….நாற்பத்தி எட்டு நாளாவா ..நானா என்றாள் அத்தை…’என்னடி இது..என்னநடக்குது இங்கே….’

‘தம்பி அப்பவே சொல்லிச்சுங்களே…அங்க ஒன்னும் தெரியாத மாதிரிதான் எல்லாம் பேசுவாங்க ..நீ அதையெல்லாம் நம்பாதய்யா அப்படின்னுதே..
எதுலேயும் ப்பில்லேம்மா….உங்களை மாதிரி வயசானவங்க எப்பிடி இருந்தா என்னம்மா. ..விரதம் இருக்கறபோது துணியா முக்கியம்..விரதம் முக்கியமில்லே..விரசம் என்னம்மா இதுலே… விடுங்க..வெளியே இது எதுவும்..தெரியக்கூடாதுன்னு தம்பி சொன்னதுங்க..நான் வெள்ளந்தி..
பட்டுனு வெளியே சொல்லிட்டேன்…என்னைத் தப்பா நெனைக்காதீங்க…தம்பி விஷயத்தைச்சொல்லிடுச்சேன்னு நீங்க சங்கோஜப்படாதீங்க…எனக்கு
இதுலே ரொம்ப சந்தோஷம்..’

‘எதுலே..நான் துணியில்லம இருக்கதுலயா உனக்கு சந்தோஷம்…..’

‘நீங்க அத்தினி கஷ்டப்படாம காஷ்மோரா வந்துடுமாம்மா…உங்களைப்பாத்தா எங்க ஊர் செங் காளியம்மனைப்பாரத்த மாதிரி இருக்குமா….’

‘செங்காளியம்மனைப் பார்த்தா மாதிரி…ம்…இருக்கட்டும்…பார்த்துடலாம்….செங்காளியம்மனா….’

‘அப்புறம்மா ..கன்னிப் பொண்ணு கேட்டீங்களாம்…விசனப்படாதீங்க..என் அண்ணண் பொண்ணு ..நீங்க கேக்கற சகல லட்சணத்தோட இருக்கா..காவு
கொடுத்திடலாம்…வேலை முடிஞ்சது..குஷ்புவை அடுத்த தடவை வர்ரபோது பார்த்துட்டா போகுது…’என்றது பெரிசு….

‘அதென்னெய்யா நடு நடுவே குஷ்பு…’என்றது அத்தை….

‘தம்பி இங்க குஷ்புவை பாக்கலாம்னு சொல்லிச்சே…இதா நிக்கற குஷ்புவோ அக்காவைப்பார்த்தாச்சு…அடுத்த தடவை குஷ்புவைப்பார்த்து..பேசிடறது..

‘நான் குஷ்புவோட அக்காவா…வெளையாடறியாய்யா….குஷ்பு வயசு என்ன தெரியமா உனக்கு…’

‘வயசைப்பத்தி என்னம்மா……நீங்க குஷ்புவுக்கு அக்கா ….அப்பிடி இருந்தாலும்இவ்வளவு அழகா இருக்கீங்களே…அப்ப குஷ்பு எவ்வளவு அழகா
இருப்பாங்க…எனக்குக்குடுத்து வைக்கலை..சமாதானம் பண்ணிக்கிறேன்..

‘ஐயோ…இதுக்கு மேல தாங்க முடியாது அத்தே….. ‘என்றாள் பிரியா….

‘பொறுடி…அவசரப்படாதே …முழுசா தெரிஞ்சுக்கலாம்..அப்புறமா இருக்கில்லே…சாமிக்கு ஒரு போன் பண்ணி விவரம் சொல்லிடு….’

‘ அம்மா.. ரொம்ப பெரிய ஏற்பாட்டோட வந்திருக்கேம்மா..பணத்த பத்தி என்ன விடுங்கம்மா ..என்னனென்னமோ பேசறேன்..தப்பு..சூனியத்துக்கு சாமான்
தந்துடறது என் கடமையில்லே..பாருங்க..அசல் மனுஷ ரத்தம் ..மண்டை ஓடு…கருப்புக்கோழி..பாதாளமூலி…தலை முடி… காலடி மண்ணு..தட்சணை
பணம்…அப்புறர் பூஜைசாமான்…பூஜை சுடுகாட்லேதானே…நான் பார்க்கலாம் இல்லேம்மா…காஷ்மோரா என் கண்ணுக்கும் தெரியுமாம்மா….’

‘யோவ்… யோவ்… யோவ்….எல்லாம் எடுத்து உள்ளே வையிய்யா…கண்காட்சி வைக்கிறமா என்ன…எடுய்யா…எடுய்யாமுதல்லே..பூஜை எல்லாம் உனக்கு சரியா நடக்கும்…அங்க இருட்டி ஏழு மணிக்கு பூஜை ஆரம்பிச்சிடும்……சாமின்னு ஒருத்தர் …அவருதான் நமக்கு எல்லாம்…சுடுகாட்லே ஆங்காரமா
எழுந்திரிக்கிற காஷ்மோரா எல்லாம் பார்கலாம்…சாமியைக் கூப்புட்ரும்மா..சட்னு வரச்சொல்லு….காம்பவுண்டுக்கு வெளியே இதையெல்லாம் வச்சி நீ
அப்பிடி ஓரமா நில்லு…வண்டி வந்ததும் நீ போயிடலாம்…பிரியா ஏற்பாடு பண்ணு…ஐயா சீக்கிரம் போய்ச் சேரட்டும்…காக்க வைக்காதே…’

‘இதோத்தே…சாமிக்கும் வண்டிக்கும் சொல்லியாச்சு இப்ப வந்திடும்…’

பத்து நிமிஷத்தில் ஒரு வேன் நிறைய போலிஸ் வந்து……கொத்தாய்ப் பெரிசைத்தூக்கிப் போட்டுப்போனார்கள்…பூஜை அப்போதே ஆரம்பித்து
விட்டது…..பெரிசு( இ)டுப்பில் சூடு பட்ட நாய் மாதிரி ஊளையிட்ட போது ‘அவன்’ கேட்டான் ‘நான் வாட்சுமேனா..அடிங்கொ….உன் மூஞ்சிக்கெல்லாம்
குஷ்பு….எங்க மேடம் குஷ்பவுக்கு அக்கா….ம்….சாமிகிட்ட போனவன் அரைவாசி தேறினதா போலிஸ் ரெகார்டே இல்லே..கொலை அது இதுன்னு எல்லாம் பண்ணமாட்டாங்க….கொத்து புரோட்டாதான்….நீ…

—–

‘வீடு முழுசா சுத்தம் பண்ணு….பிரம்பு..பெல்ட் எல்லாம் ரெடியா வை…என்ன திமிர் அவனுக்கு…சின்னப்புள்ளைக இருக்கற எடத்துலே இதுகளை பாத்தா
அதுங்க பயந்து காய்ச்சல் வந்திருக்கும்…வில்லண்டி அவன்…உடக்கூடாது..வரட்டும்….முடிச்சுக்கட்டாம விடரதில்லே…அயோக்கியப்பயல் ..என்னென்ன
வேலை பன்றான்….டீ தாயாரு..உம் புள்ளை செஞ்சதைப்பாத்தேயில்லே…இருக்குடி அவனுக்கு….இருபத்து அஞ்சி வருஷம் வாங்காததை இப்ப
வாங்கப்போறாண்டி…..

‘ஏன் பிரியா …காஷ்மோராவைப்பத்தி அவனுக்கு சொன்னது யாரு….என்றாள் தாயாரு…

‘அம்மா ..ஓடிரு..ரொம்பக் கோவமா இருக்கோம்.. குறுக்கே வந்துடாதே..’

தாயாரு ‘ப்ச’ என்று சப்புக்கொட்டியவாறு நகர்ந்தாள்…..

—–

‘ குடீர்..’ என்று விழுந்தது மாத்திரமே தெரிந்த்து ராஜாராமனுக்கு..அப்புறம் பெல்ட்டா..லத்தியா..எதனால் அடி விழுகிறது என்றே புரியவல்லை…ஆனால்
கொலை வெறித்தாக்குதல் இப்படித்தான் இருக்கும் என்பது மட்டும் புரிந்தது நாய் மாதிரி ரெண்டு முட்டிக்கால்கள் மத்தியில் தலையப்புதைத்து முடிந்த வரை தப்பிக்கவே பிரயத்தனமாகிப்போனது…வசவு …அடி..இடி..உதை.குத்து மாத்து..மொத்து..சாத்து..பூஜை..பட்டை…மட்டை..எல்லாவற்றுக்கும் இலக்கண சுத்தமாக அர்த்தம் புரிந்தது…மொக்கை அடி ..விளாசறது..இதில் ஏதாவது சந்தேகம் யாருக்கேனும் இருந்தால் விளக்க ராஜாராமனால் இப்ப முடியும்..நல்ல வேளை (குறி) வைத்து அவர்கள் அடிக்கவில்லை…சகட்டுக்கு அடி விழுந்த்து….

‘ராத்திரி பட்டினி கிட…நாயே காலைலே இருக்குடி உனக்கு…..’அத்தை..

‘காலைலே வேறயா ..உசிரோட இருந்தா பாத்துக்கலாம்…..’என்றான் ராஜா

‘அடங்க மாட்டேங்கறான்.. போட்றி இன்னும் ரெண்டு…..’ என்றாள் அத்தை.

‘இன்னமும் ரெண்டு பெல்ட் அடி விழுந்த்து’…விட்டா குஷ்புக்கு நான்தான் பாட்டின்னு கூட இவன் கதை உடுவான் அத்தே…கதவைப்பூட்டப்போறேன்
சோறுமட்டும் இல்லே தண்ணி கூட கெடையாது ..சாவு….’

—–

‘ வசு…தொடாதேம்மா….புண்ணாயிருக்கில்லலே ஒடம்பு….’

‘ராஜாண்ணா..தெரியமா …என் பெரியப்பன் குடும்பம் ஊரையேக்காலி பண்ணிட்டு ஓடிருச்சாம்..பெரியப்பன் காசிக்கே ஓடிட்டானாம்…அங்கயே
செத்துப்போகப்போறானாம்…’

‘இன்னும் சாகல்லியா அவன்…நேத்தே முடிஞ்சிருக்கனுமே அவன்…ஐயோ..வலிக்குதே….

‘டேய்…ராஜா நேத்து உனக்கும் பூஜையாமே..பெரட்டி எடுத்துட்டாங்களாமே…’

‘பாரு மலரு…அரைகுறையா கேட்டுட்டுப்பேசாதே…நீ இன்னும் கிளைமாக்ஸுகே..வரலை…என்னை ரூம்லே போட்டுப்பூட்டனதோட சீன்
முடியல்லே..தெரிஞ்சுக்கோ…’

‘இன்னமும் வேற இருக்கா…அது என்னடா….’

‘மணி பத்தாச்சு..பசியான பசி..வலி வேற கொல்லுது…என் ரூம்லே தண்ணி வேற இல்லை..கோவம் வேற..ரோஷத்தோட தூங்கிட்டேன்…ராத்திரி கனவு
அடி உழுவுது…ஐயோ நான் பழ.கருப்பய்யா இல்லே..ராஜாராம்ங்கறேன்…விடறானா..அடிக்கறான் அடிக்கறான்..அடிச்சிட்டே இருக்கறான் அப்புறம்
மணிபண்ணண்டு இருக்கும்…யாரோ எழுப்பறாங்க…இன்னம் அடி இருக்குன்னு பயத்தோமுழிச்சா எதிர்லே அம்மா…சனியனே சாப்புடாம எப்படி ஆகறது..அவங்க சொன்னா நீ சாப்புடாம பட்டினி கெடப்பியா..விடரா கெடக்கறாங்க..நாலு வாய் ரசம் சாதமாவது தின்னுட்டுப்படு…வெளியே
அந்த சண்டாளி இருக்கா…நானே..ஊட்டிடறேன்… வாயத்ததொற இந்தான்னு…’கையிலே சோறு வச்சிட்டு சொல்றாங்க…

‘ அய்….’

‘என்ன அய்…அம்மா ஒரு வாய் குடுக்கறாங்ன்னா அது சரவணபவன் சாம்பார் சாதம் ஒன்னுக்கு சமம்…நாலு வாய்ன்னா யோசிச்சிக்கோ…நாலு
வாய்ன்னா… நாலு சாம்பார் சாதம்…சாப்ட்டா தண்ணி குடி கண்ணா அப்பிடி சொல்லி ஒருசொம்பு தண்ணி..சோறு நெஞ்சுக்கு ஏறிடுச்சா…..’

‘ அய்..’

‘அட…இன்னும் இருக்கே…கேளு…ஒருமணி நேரம்தான் தூங்கியிருப்பேன்..மறுபடிஎழுப்பறாங்க….. எழுந்தா… அக்கா…நாசமாப்போனவனே…ஏன்டா என் உசிரை எடுக்கறே….உன்னாலே நான் சாப்பிடலே.. ..வீட்லே யாரும் சாப்பிடலே..எல்லாரோட பாவத்தை ஏண்டா இப்பிடிக்கொட்டிக்கிறே.. தின்னுத்
தொலைன்னு தலையிலே அடிச்சு ஊட்டறாங்க.. இவ்வளவு தயிர் சோறு….போட்டு அமுக்கறாங்க.. ஊள்ளே போகமாட்டேங்குது…மறுபடி ஒரு சொம்பு
தண்ணி…மூச்சு வாங்குது…..விட்டா போதும்னு துங்கினா… ஒரு மணி நேரம் கழிச்சு மறுபடி யாரோ சுரண்டி எழுப்பறாங்க…கனவு..நான் கத்தரேன் ஐயோ நான் பழ.கருப்பய்யாதான் .. இனமே ராக்கட்டைப் பார்த்தாக்கூட கீழே விழுந்து கும்புட்ரேன் விட்ருங்கய்யான்னு கதற்றேன்…விடுவானா..முழிச்சா
எதிர்லே…..’

‘யாரு…காஷ்மோராவா..’

‘எங்க அத்தை.. ‘ நீ பட்டினி கெடந்தா எனக்கு தூக்கம் எப்பிடிடா தூக்கம் வரும்..இதை முழுஙு்கிட்டுப்படுன்னு ஒரு லோட்டா பால்..ரெண்டு பழம்..’திக்’
குன்னது..எங்க வீட்டு லோட்டான்னா ஒரு படி….பழம்ன்னா ஒவ்வொண்ணும் ஒரு மொழம்….. .வேண்டாம்னு சொல்ல வாய் திறந்தனா…..ஐயோ எம் புள்ளைக்கிப் பசின்னு உள்ளே விட்டு அமுக்கறாங்க….பாலை வாயிலே வச்சி கொட கொடன்னு கமுக்கறாங்க..பால் வாயிலே போய் மூக்கிலே வர்ரதா எனக்குப்பிரமை…அடியைக்கூடப்பொறுத்தக்கலாம் .. இந்த அரவணைப்பு இருக்கே..அதுக்கு வலு ஜாஸ்தி…. இல்லயா மலரு…

‘வாஸ்தவம்தான்..ஆனா உனக்கு எத்தனை அம்மாடா…குடுத்து வச்சவன் நீ…எங்க யாருக்கும் இப்படி வாய்க்கலை….’

‘ மலரு.பாரேன்…இந்த விசாலம் இருக்காளே அவ கண்ணுபெரிசு..மூக்கு எடுப்பு.. வாயைப்பாரு…அழகு அவ மாத்திரம் கொஞ்ச சிவப்பாப் பொறந்திருந்தா…கொஞ்சம் உசரமா இருந்திருந்தா எங்க அம்மாதான்…எங்கம்மாவை வயசுலே பார்த்த மாதிரி இருந்திருக்கும்….அவளைப்பாக்கற போதெல்லாம் எனக்கு அம்மாதான் ஞாபகம் வருது…என்னங்கறே….’

சுளீரென்ற ஒரு அடியை எல்லோரும் உணர்ந்தபோது மலர் அழுதே விட்டாள்…எல்லாப்பெண்களின் கண்களிலும் நீர்த்திவலை கோர்த்திருந்த்து…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *