ராஜாராமன் செலவில்லாமல் சூனியம் வைத்தகதை…(பாகம்- 1)

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 23,329 
 

‘ என்னடி கொடுமை…. பையிலெ இருந்த பத்தாயிரம் காணல்லை….’

‘ என் அஞ்சாயிரம் கூட காணல்லே..திருடன் உள்ளேதான் நிம்மதியா இருக்கான்… அவனுக்கு பெரிய இடத்து ஆதரவும் இருக்கு அத்தே….’

‘ ஓ உங்கம்மா அந்த நாய் கூட சேர்ந்து திருடராளா….கூப்பிடு அவங்களை.. ‘

‘ விட்ருங்க அத்தை…அவன் என் கார்டைக் குடுன்னு ஆரம்பபிப்பான் உங்க பிள்ளைகிட்ட சிபாரிசுக்குப்போவான்…கலவரம் பன்னிடுவான்..திருடன்…தாங்கமுடியாது..பிராண்டித்தள்ளிடுவான்…பத்தாயிரத்தோட போகட்டும்..

‘சரி…உன் புருஷனுக்கு போன் போடு…இவனை இப்படியே விட முடியாது…’

‘சுத்தம் …மொதல்லே ….அவன் சம்பாரிக்கறதை நீ எப்படி வாங்லாம்னு உங்க புள்ளை எகிருவார் …அவனா ஜகஜாலக்கில்லாடி..நம்மளை ஏய்க்கறான்..எல்லாம் புரிஞ்சே செய்யறவன்…..திமிர் ஏறித்திரியரான் …சப்போர்ட்டுக்கு அம்மா…சத்ராவதி ஏரோப்பிளேன் ஏறி வருதா…வீட்டுக்குள்ளே இருக்கு..’

டக்கென்று தாயாரு வந்தாள்….

‘அக்கா…நேத்து உங்க செல்லத்தம்பி , என் புருஷன்,யாருக்கோ இருபதாயிரம் தாரை வார்த்துட்டு வந்திருக்கார்…..அதுவும் கணக்குலே சேர்த்துக்குங்க…’

‘ ஐயோ…ஐயோ…என் சொத்தையெல்லாம் தொலைக்கறாங்களே….டேய்…கோவிந்தா…என்னடா நடக்குது இங்க….’என்றாள் அத்தை….

‘அக்கா….உன்னைக்கேட்டுத்தானே கோடுத்தேன்……நீயே திட்டினா எப்பிடி..’

தாயாரு ஒரு சண்டைக்கு தயாரானாள்….

‘அப்பிடிப்போடு அருவாளை…அடேயப்பா சினிமாக்காரன்குடும்பமாச்சே…என்னமா ஆக்ட் குடுக்கறீங்க…’என்றாள் தாயார்….

‘போதும்டி…யாரோ கஷ்டம்னு கேட்டாங்களாம்…கொடுக்கச்சொன்னேன்…எனக்கே யார்னு தெரியாது… கொடுக்ககறது ஒரு தப்பா…’ என்றாள் அத்தை……

கொடுக்கறது தப்பில்லேயாருக்கு கஷ்டமாம் அத மொதல்லே கேளுங்க’என்றாள் தாயாரு. அவள் அந்த விஷயத்தை விடத்தயாரில்லை என்பது புரிந்தது…

‘இருடி நானே பத்தாயிரம் போன கஷ்டத்திலே இருக்கேன்…நடுவிலே நீ வேற….அம்மா தாயி..நீ பிரச்சினையைக்கொண்டு வராதே..கொஞ்சம் உள்ள போ…ஏண்டா..யாருக்குன்னு சொல்லாம ஏன்டா பணம் வாங்கினே..இப்ப மானம் போகுது…உடுவாளா உன் பொண்டாட்டி..சாகடிப்பா ….ஏ..பிரியா உங்கப்பனுக்கு அறிவே இல்லடி.. ‘டேய் ராஜா உனக்கு ..சொல்லிட்டேன். பணம் எடுத்தவன் ரத்தம் கக்கி சாவான்..’

‘ரத்தம் கக்கினா எவனும் செத்துத்தான் போவான்…’என்றான் ராஜாராமன் சாவதானமாக…இட்லியை உள்ளே தள்ளிக்கொண்டே….

‘டேய்..வேண்டாண்டா …நான் கோவத்திலே இருக்கேன்…பேசாதே..’

‘நீ கோவத்திலே இரு..கோமாவிலே கூட இரு..ஆமா.. பையிலே பணம் எடுத்தா வாயிலே ரத்தம் வரும்கறியே ..அது என்ன மேஜிக் அத்தே..’

‘அதான் ப்ளாக் மேஜிக்ங்றது….சூன்யம்டா. பில்லிசூன்யம்… வச்சிட மாட்டேன்..எண்டமூரிகிட்ட ஏழு வருஷம் சூனியம் ஏவல்.எல்லாம். கத்துகிட்டேனில்லே..குட்டிச்சாத்தானை ஏவி விட்டா வாயிலே ரத்தமா பீச்சியடிச்சிரும்….அஞ்சன மை வச்சி ஆளைக்கண்டு பிடிப்பேன்..என் சூன்யத்தோட பலம் யாருக்கும் தெரியாது…..நாளைக்கு வருது பாரு..பாதாள மூலி..பச்சை ரத்தம்…மண்டை ஓடு…அப்புறம் குட்டிசாத்தான்…

‘கேவலம் பத்தாயிர ரூபாயக்கே குட்டிச்சாத்தான்னா லட்ச ரூபாயா இருந்தா என்ன செய்வே அத்தே…’.இன்னும் அவன் விழுங்குவதை நிறுத்தவில்லை..

‘காஷ்மோரா தெரியுமா…காஷ்மோராதான் பூத பைசாசம் வேதாளம் குட்டிச் சாத்தான்இதுகளின் பெரிய சக்கரவர்த்தி…மிகப்பெரிசான எல்லாத்துக்கும் தலைவன்…நாளைக்கு முழு அம்மாவாசை ….அது.இல்லாம நாளைக்கு வர்ரது மாசாணக்கொள்ளை..சரியான நாள்.. காஷ்மோராவைக் கூப்பிட்டவுடன் வருமில்லே…விட்டுருவனா. பணம் எடுத்தவன் மேலே ஏவி விடுவேன்…..நூறு ப்ளேக் வந்தவன் மாதிரி நாத்தமடிச்சேசாவான் நாளைக்கு நடு ராத்திரி காஷ்மோராவை எழுப்பினா எவ்வளவு ஆங்காரமா எழுந்திரிக்கும்..தெரியுமா….

‘பயமா இருக்கு அத்தே…வாயிலே .மூக்குலே ரத்தம்வரும்….காதுலே சீழ் வரும்கறே ‘

‘முட்டாள்பையா.மாத்தி சொல்றேமூக்கிலே மூச்சா வரும்.வாயிலே பீச்சா வரும் நீ எக்ஸார்ஸிஸ்ட் படம் பார்க்கல்லே…’

‘ஆமா..ஆமா..அப்ப காதிலே என்ன வரும் அத்தே…..’என்று அப்பாவியாய் க்கேட்டான் ராஜாராமன்

‘மூச்சா ….பீச்சா… சீழ்… எல்லாமுமா சேர்ந்து வரும்…இல்லேத்தே…என்று வரிசையாக விரல் விட்டாள் பிரியா…..

‘ஆமாண்டி ..சகிக்கமுடியாம சாவனும்…. ‘

‘இத்தனை சேர்ந்து வந்தா பார்க்கரவங்க கூட செத்துருவாங்க..இல்லேத்தே…என்றான் ராஜா….

‘ஆமா…இல்லையா பின்ன…ஹார்ட் அட்டாக் வந்தே அவனைச்சேர்ந்தவங்க எல்லாம் செத்துடமாட்டாங்க…’

‘ அத்தே….என் மேலே உனக்குப்பிரியம்தானே…என்றான் ராஜா…

‘அதிலென்னடா சந்தேகம்…..நான்தாண்டா உங்களை வளத்தேன்…நீயும் இவளும் என்னோட செல்லமில்லே….’

‘அத்தே..அப்ப நீ சாகக்கூடாது அத்தே..அத்தே ..நீ என் செல்ல அத்தயில்லே..தடாலென்று காலில் விழுந்தான் ராஜாராமன்..’.என்னை
மன்னிச்சுடு சூன்யம் கீன்யம் வச்சிடாதே. என்னாலே..எல்லாருமா சாகனும்..?

ஐயோ..அத என்னலே தாங்க முடியாது அத்தே … நான்தான் உன் பணத்தை எடுத்தேன்…என்னாலே ஒரு குடும்பம் சாகக்கூடாது….அதும் என் குடும்பம்..

‘காலை விட்ரா…சனியன் புடிச்சவனே….உனக்குன்னா பத்துலட்சம் கூடக்கொடுப்பனே..எதுக்குடா திருடுனே…எல்லாமே உன் பணம்டா
எவனாவது தன் ஜேபிலேர்ந்து கூடத் திருடுவானா…..மடப்பயலே…எந்திரிடா’

ராஜாராமன் பவ்யமாக எழுந்தான்..’.நான் தப்பு பண்ணிட்டேன்…இந்தப் பத்தாயிரத்தை எடுத்த எடத்திலே வச்சிடறேன்தே…சரியாத்தே…’

‘நல்ல பையன்…இதுக்கெல்லாம் கண்ணுலே தண்ணி விடலாமா…பிரியா நீயும் அவனை மன்னிச்சிட்டே சரியா.அவனை நீ ஒன்னும் அடிக்கக்கூடாது.. செய்யக்கூடாது…பணத்தை என் கைப்பையிலே வச்சிடு கண்ணா..போ சாமி’

அவன் அத்தையின் அறைக்குள் போனதும் பிரியா ஆரம்பித்தாள்….’அத்தே எங்கயோ தப்பா தெரியுது…இவன் மன்னிப்பு கேட்கிற ஆசாமியில்லே….சில்லரைப்பயல்…நாடகம் மாதிரி தெரியுது அத்தே….கவனிக்கனும்…

‘சும்மா… இருடி…சொந்த தம்பி கிட்ட போலிஸ் புத்தியைக் காண்பிக்கறே.. .நான் ஜட்ஜ் ..எனக்குத்தெரியாததா….சூன்யம் அது
இதுன்னதும் புள்ள பயந்துட்டான்..அவன் மூஞ்சைப்பார்த்தேயில்ல அப்படியே வெளிரிப்போச்சு…’

‘இவன்யா…. புள்ள… பயந்துட்டான்..அப்பிடிங்கறீங்க…..சரி.. அதையும்பார்ப்போமே…..ம்ஹூம்..கள்ளன்..ஏமாத்தறான்…புரிஞ்சிப்பீங்க…

மழையில் நனைந் பூனை மாதிரி வந்தான் ராஜா….’.அக்கா..நீயும் என்னை மன்னிச்சுடு…இல்லே மத்து தர்ரேன்…நாலு சாத்து சாத்திடு…இனிமே உன் மேல அத்தை மேலே சத்தியமா பணம் எடுத்தா கண்டீப்பா சொல்லிடுவேன்…..அத்தே இந் அப்பாதான் ‘ஏண்டா பணம் வேணுமானா அத்தைகிட்ட எடுத்துக்கோ…நீதான் செல்லபுள்ளையாச்சே…உங்க அக்கா காசும் தரமாட்டா…கார்டும் தரமாட்டா…நான் பணம் கேட்டா ஆயிரம் கணக்கு கணக்கு.கேட்பாங்க….உனக்கென்னடா…ராஜா..என்ஜாய்ன்னாரு…அத்தே இனி மேல எது செஞ்சாலும் உங்க கிட்ட சொல்லீடுவேன்….ஸாரி அத்தே…

‘அடப்பாவி ..டேய் கோவிந்தா..நீ கெட்டதில்லாம..இவனையுமா கெடுக்கறே.. பாரு..பத்து நாள் வீட்டுக்குள்ளே வந்தே…அவ்வளவுதான்…ஓடிரு…’என்று கோவிந்தனிடம் திரும்பி கத்தினாள்… ….

‘அக்கா…நான் எங்க போவேன்…நேக்கு..யாரத்தெரியும்…’என்றான் கோவிந்தன்….

‘பெரிய சிவாஜி..வசனம் பேசறே.. கொன்னுடுவேன்…போய் காம்ப்ளக்ஸுலே தங்கு… பிரியா..உங்ம்மாளைக்கூப்பிடு….. ..பாரு..தாயாரு…சொல்லிட்டேன்…..உம் புருஷனுக்கு சோறு தண்ணி எதுவும் தராதே.அவ்வவளவுதான்….’

விட்டால் போதும் என்று சமயம் பார்த்து பாம்பு மாதிரி சத்தமின்றி கோவிந்தனும் ராஜா ராமனும் நைசாக நழுவி இருந்தார்கள்…..

தாயாரு ஆரம்பித்தாள்..’.நீங்க சொன்னா சரிக்கா. தாழ்ந்த குரலில் முனகினாள்…..’நாளைக்கு தம்பியைத்தேடி ஓடப்போறாங்க….இதுலே வெத்து சவடால் ..வேஷம் கட்டறதுக்கு அளவே கெடையாது..விடுமா சகோதர பாசம்…. துள்ற வயசுலே தும்பை விட்டாச்சு…துவண்டு போன பின்னாடி தூள் பறக்குது…’

‘என்னடி மொணகறே…’

‘இல்லேக்கா மூச்சு விட்டேன்….விடலாமில்லே…அடுப்பு கூப்புடுது…போறேன் பிரியா…அந்த இருபதாயிரம் யாருக்குப் போச்சின்னு மாத்திரம் கேட்டு சொல்லிடு…ராத்திரி உங்கப்பா வந்துடுவார்..பணம் வராது….’

‘மொதல்லே இவ அடங்கனும்டி……சரியான திருடி…இவ திமிர்லே அவனுங்க ரெண்டு பேரும் ஆடராங்க….அப்பா நல்ல வேளை….பத்தாயிரம்…..

அப்பா…பத்தாயிரம் காப்பாத்திட்டேன்….வில்லன்டி உன் தம்பி….

‘ நானும் அதேதான் சொல்றேன்.என்ன சொன்னான் கவனிச்சீங்களா பணம் எடுத்துக்குவானாம்….கவனிங்க அத்தே..அவரு…எடுத்துக்குவாரம்… ஆனா சொல்லிடுவாராம்..எப்ப சொல்லுவாரு…அது..தெரியாது… அத்தே
சூதாப் பேசி உங்களை ஏமாத்திட்டான்…எதுக்கும் உங்க பீரோவைப்பாக்கலாம் வாங்கத்தே….’

பீரோவைத்திறந்த அத்தை அதிர்ந்தே போனாள்…….’பிரியா ஒரு லட்சம் எடுத்துட்டாண்டி ஒரு ஆயிரம் ரூபா கட்டே காணம் ..டீ..தாயாரு…..’

‘என்னக்கா…..’ தாயாரு பிரசன்னமானாள்…

‘என்னடி நொன்னக்கா…உம் புள்ள என்ன செஞ்சிருக்கான் பாரு….லட்ச ரூபாய் எடுத்திட்டான்…இல்லே திருடிட்டான்….’

‘அப்பிடியா…கொஞ்நேரம் முன்னே எல்லாப்பணமும் உனதுடான்னீங்க..என் செல்லம் நீன்னு கட்டிப்பிடிச்சு குலவினீங்க…..’

‘பாருடி நக்கல் வேண்டாம்…என் பணம் வரல்லே …நான் நெஜம்மாவே அவனுக்கு சூனியம் வச்சிடுவேன்….நீ குறுக்கே வா.. அப்ப இருக்குடி உனக்கு…சண்டாளனுங்களா…கேட்டு வாங்கித்தொலைங்கடான்னா திருடியே சாகடிக்கிறாங்களே.நாயிங்க..இந்த வீட்டஆம்பளைகளே இப்பிடித்தானா தம்பிதான் கெட்டான்னா இவனும் கெடறானே..பெருமாளே’

போனை எடுத்துபுலம்பினாள்..போனில் பிரசன்னா வந்தான் நடந்ததை மகனிடம் சொல்லி புலம்பினாள்….’ பிரசன்னா என்னடா நியாயம் இது…’

‘ நீ சொல்றதைக்கேட்டாச்சு…அவன் எனக்கு மெயில் அனுப்பியிருக்கான் ‘அய்யா சாமி ரெண்டு லட்சம் பிச்சை போடுங்க..அதும் அத்தை அக்கவுண்டுக்கு அனுப்புங்க…நான் அத்தைக்கு ஒரு லட்சம் கடனாளி… அது அத்தைக்கும்..அக்காவுக்ககும் கூடத்தெரியாது…மாசா மாசம் லட்ச ரூபா பிச்சை போட்டா உங்க புள்ள குட்டிங்க நல்லா இருக்கும்னு மெயில் வந்திருக்கு உன் அழகு மருமககிட்ட போனைக்கொடு..நான் சொல்லியும் அவன் பாங்கு கார்டை நீங்க கொடுக்கலை..இப்ப புலம்புங்க ஆமா..உன் மருமக எங்கே..பேசமாட்டாளே…பெரிய திருடி..சரி விடு.. ரெண்டு லட்சம் அனுப்பியிருக்கேன்…உன் பணம் வந்துடும்…சரியா…’

‘இந்த வீட்லே எவனும் உருப்படமாட்டான்…நீயும் உருப்படமாட்டே’ சாபமிட்டாள் கிழவி ‘எவன் சொன்னாலும் என்ன அந்தப்பயலை விடறதில்லை…..பெல்ட் எடுத்து வையிடி பேசிக்கிறேன்….என்ன தைரியம்….

நாலுபெண்கள் திமு திமுவென்று வந்தார்கள்..

‘ராஜா….ராஜா….’..இத கவனியேன்……..’

ராஜாராமன் ரொம்ப தீவிரமாக வேலையில் ஈடு பட்டிருந்தான்…

‘ராஜா ஒரு முக்கியமான சங்கதி…என்று மூன்று பேர் சேர்ந்துஆரம்பிக்க ராஜாராமன்கையமர்த்தினான்..இரு..இது யாரு புதுக்குட்டி…நம்ம தமிழ் மகளா…வேற மாதிரி தெரியுது….

‘இல்லே ஞான் மளையாள மோளே…..’

‘மளையாள….’

‘மோ..ள்ளே…..’என்று சத்தமாகச்சொன்னாள்….புதுப்பெண்….

‘சரி..சரி. சரி. புரியுது… போதும்..பேரு….’

‘விசாலம்…’

‘என்னது…’

‘விசாலம்…..விசா….. லம்….’

‘விசாலம்….சரியான பேருதான்.. ஆக நீ மளையாளக்குட்டி..உன் கண்ணு ரொம்…ப விசாலம்…’

‘ …..ஐய்….’

‘மூக்கு கூட பாரேன்…வி .. சாலம்தான்

‘வாய் இந்த மாதிரி விசாலமா இருந்தா கீழேகூட….அட அத விடு உனக்கு மோகினி ஆட்டம்தெரியுமா விசாலம்…..’ராஜாராமன் எழுந்து நின்று பதம் பிடித்தான்..’இப்பிடி’ விசாலமே அவனுக்கு திருத்தம் காண்பித்தாள்…..

‘ஐய…அது அப்பிடியில்லே…இப்பிடி….காலை வச்சி கையை இப்பிடி விரிச்சி நின்னு கண்ணை இப்பிடி திருப்பி….சரியா….’

‘ஆஹா …. ….கொன்னுட்டே விசாலம்…அப்பிடியே ஒரு காலை பின்னாலே தூக்கி….முன்னாலே இப்பிடி நிமிர்த்தி..காலைப்பின்னாலே தூக்கி….’

‘ஏய் ..ஏய் ..என்ன நடக்குது இங்க…இது..ஆபிஸா இல்லே ரெகார்டு டான்ஸ் மேடையா…..’

‘வந்துடுவியே…எப்பிடியோ கரெக்டா நுழைஞ்சிரு மலரு..கரடி மாதிரி….’

‘இது மோகினி ஆட்டம் அக்கா….’

‘அது சரி..இந்த விஸ்வாமித்திரன் இங்க உன்னை ஆடச்சொன்னானா..டேய் உனக்கு விவஸ்த்தையே கெடையாதுடா…சரி இவன்கிட்ட ஏன் வந்தீங்க..சரியான வில்லங்கமாச்சே இவன்…..’

‘எனக்கு ஒரு வில்லங்கம் அக்கா…இவரு தீர்ப்பாருன்னு சொன்னாங்க….’

‘இவனா..சுத்த சோதாப்பய…என்னடா உதார் விட்டே அவகிட்ட’

‘அக்கா என் கண்ணு மூக்கு வாய் எல்லாம் அகலமா அழகா இருக்காம் அதே மாதிரி கீழே….’

‘டீ.. கர்மண்டீ …போயும் இந்த கூமட்டைகிட்ட வாயைக்கொடுக்கறீங்களே. இவன் ஆராய்ச்சியே எப்பவும் இடுப்புக்குக்கீழேதான…….இடிச்சன்னா…’..

‘சரி மலரு இனிமே எப்பவும் இடுப்புக்கு மேலேயே ஆராய்ச்சி பன்னிக்கறேன்…உனக்குசந்தோஷமா…விசாலம் உனக்கு இடுப்புக்கு மேலே வி….சாலம் வைரமுத்து ஜீனஸ்லே ஐஸ்வர்யாவை…வர்ணிப்பான்..பிரம்மன் கர்ணனாம்….எதுக்கு சொன்னான்னா…

‘ ஐ…நான் ஐஸ்வர்யா….என்றாள் விசாலம்…சந்தோஷமாக….

‘இல்லே குட்டி…நீ..ஷகீலா….ஷகீலா மோளே..என்றான் ராஜாராமன்.

‘டேய்..உன்னைக் கோயமுத்தூர் போலிஸ்லே புடிச்சிக்குடுக்கனும்டா’ என்று சொல்லிக்கொண்டே ‘நங்’ கென்று கொட்டினாள் மலர்….’என்னம்மா உங்க பிரச்சினை…இவன் கிட்டே ஏன் வந்தீங்க…’

‘அக்கா இவளோட பெரியப்பன் ரோட்லே இருக்கான் ..இவளுக்கு சூன்யம் வைக்க வந்திருக்கானாம்…’

‘என்னது..சூன்யமா…ஏம்மா ..என்னத்தம்மா படிச்சீங்க நீங்க…இந்த கம்ப்யூட்டர் காலத்திலே போய்….கழுதை மேய்க்கறவ மாதிரி பேசிட்டு…..

‘சும்மா இரு அக்கா அந்த ஆள் ஏற்கனவே மூனு பேருக்கு சூனியம் வச்சி அதுல ரெண்டுபேருக்கு தல கழுத்திலேயே நிக்ககலையாம்….
ஒருத்தனுக்கு நிக்குதாம் …ஆனா..அடங்கவே மாட்டேங்குதாம்..’

‘எதுடி அடங்கமாட்டேங்குதாம்…’

‘அதான்.அக்கா….அது….’ ஒத்தை விரலை க்காண்பித்தாள் சுதா…

‘ச்சீ…உங்களுக்கு அறிவே இல்லைடி…’

‘சும்மா இருக்கா..இப்ப இவளுக்கு அந்த ஆள் சூனியம் வச்சா…. இவ எல்லா ஆம்பளைகளோடதயும் தேடித்தேடிக்…கடிச்சுடுவாளாம்…தகவல் வத்திருக்கு’

‘ எதடி தேடிக் கடிப்பாளாம்…….’

‘இதத்தான் அக்கா…என்றாள் சுதா மறுபடி ஒரு விரலைக்காட்டி..’பாவம் இல்லக்கா…..’

‘யாரு பாவம்கறே….’

‘எல்லா ஆம்புளயும்…’அது இல்லாட்டி ஆம்பளை என்ன செய்வாங்கக்கா..’

‘அது இல்லாம அவனுங்க போட்ற ஆட்டமே தாங்க முடியல்லே…ஏண்டி ராக்கெட் விடற ஆராய்ச்சியா இது..இவன் கிட்ட வேற வந்துட்டீங்க..இவனுக்கு ஆம்பளை பொம்பளை வித்தியாசமே தெரியாது…இவன் பட்டணத்துக்காரன்..சூன்யம் பத்திஒரு எழவும்தெரியாது….

‘ஹலோ….ஏழு வருஷம் எங்க அத்தை எண்ட மூரி கிட்ட சூன்யம் படிச்சாங்க…பில்லி சூன்யம் காத்து கருப்பு மருந்து வைக்கிறது எடுக்கறது..இடு மருந்து….கொடு மருந்து…..வர்ம்ம்…கர்ம்ம்…மர்மம்…..ஏவல் ..கேவல்..தாவல் பேய் எறக்கரது…குட்டிச்சாத்தானைக்கூப்பிடறது…சனி புடிக்கறது..முனி அடிக்கறது…..வாயைக்கட்டறது..வயத்தைக்கட்டறது…அஞ்சன மை முட்டையிலே சூன்யம் கொட்டையிலே சூன்யம்….வாலிப வசியம் ‘

‘ஊத்துடா….ஊத்து ..எதிர்லே எட்டு ஏமாளிப்புள்ளைக வேற..அளக்காம ஊத்த என்னடா கஷ்டம்….சூரன்டா மூச்சு விடாம பேசறே…..’

‘நீ நம்பறியா மோளே…பாரு..என்னை நம்பு….மலர் பின்னலே சுத்தின நாலு பேர் சாமியார் ஆயிட்டாங்க நீங்களும் அப்புறம் காவி சூடிதார்… நெத்தியிலே பட்டை ….. கையிலே கமண்டலம்……கட்டை…. கொட்டைன்னு திரியவேண்டி வரும்….மலர் பேச்சைக் கேக்காதீங்க’

‘கொட்டைன்னா என்ன ராஜான்னா….’

‘நல்ல கேள்வி கேட்டே வெரி குட்….’

‘இப்ப…..பொலிக்காளை பாத்திருக்கீங்களா…

‘அப்பிடியே நிறுத்துடா…ரொம்ப போறியே….’என்றாள் மலர்..

‘இந்த ஒன்னுக்கு அர்த்தம் சொல்லிடறேனே மலரு ..சுமதி… கிராமத்துலே’

‘அடங்குடா….’என்று மலர் நம்மாளை அடக்கிய போது ஒருத்தி குறுக்கே வந்தாள்..’அட அத விடு மலரு……இப்ப இந்த ஆள் எதை எப்பிடி எப்போ என்ன மாதிரி செய்ய வந்திருக்கான்..அந்த சூனியம் பேயா இல்லே..வேறயா

அது நெறைய இருக்குப்பா….பேய்.. பிசாசு… குட்டிச்சாத்தான் கொள்ளிவாய்ப்பிசாசு..பிரம்ம ராட்சஸ்… முனி… காட்டேரி.. கருப்பராயன்
நீலி ..புடவைகாரி.. காளி.. பாவாடைக்காரி..மோகினி..ரத்தக்காட்டேரி சொத்தக்காட்டேரி..வீரன்.. மாரன்..மயிர் பிடுங்கி…

‘தாங்க முடியல்லேடா …. நீ நிறுத்தமாட்டியா..என்றாள் மலர்….

‘சரிப்பா நான் சொல்றது தப்பு…உன் குல சாமி பேரைக்கொஞ்சம் சொல்லேன்..’

‘ டேய்…வேண்டாம்…என் வம்புக்கு வராதே..சேறுப்படி கருப்புசாமி என் குல தெய்வம்……அத மாத்திரம் கேலி செய்யாதே..செத்துருவே…

‘கேளுங்க தங்கம்…இவங்க குல சாமி பேரு..செறுப்படி கருப்பசாமியாம் பாருங்க..இந்த கருப்புக் கயத்தைக்கட்டிகிட்டா இந்தம்மாவை எவனும் வசியம் பன்ன முடியாதாம்..சூனியம் வைக்க முடியாதாம்…வெடுக்கென்று மலரின் கையை இழுத்து எல்லோருக்கும் காட்டினான் நம்மாள்..பாத்தீங்களா நான் சொலறதை இல்லேன்னு சொல்லச்சொல்லு…நீ சொன்னா நெஜம்.. நான் சொன்னா பொய்…சரியான கள்ளி நீ…….’

‘மரியாத இல்லாம பேசினே செறுப்படி தான்விழும்……கையைத்தொட்டே சரி…இதச்சொல்ல வேற எங்கல்லாம் தொடுவேடா…ஏண்டா…. இதச்சொல்ல இங்க கூ தொடனுமா…’என்றாள் மலர்…

‘உணர்ச்சி வசப்பட்டுட்டேன்..உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை நீ என்னென்ன சொன்னாலும் இனிமை ஆனாலும் என்ன நீ அக்காதானே..’

‘டேய்…உன்னை…ஒரு நாள் வரும்…அப்ப வச்சிக்கிறேன்டா..’

ரேகா எனப்பட்டவள் குறுக்கிட்டாள்’ அத உடு. மலரு… அது பெரிய விஷயமா.. மலரு அவனவன் அதும் எவன்னே தெரியாது….எங்கங்க தொடறான்..தெரியுமா.. நேத்து ஒருத்தன் என்னை..’

‘ஐயோ கெட்டே போயிட்டயா ரேகா..’என்றுஅலறினாள் சுமதி…

‘அடச்சீ.. வாயை மூடு….ராஜாண்ணா இதச்சொல்லு மொதல்லே….. இப்ப . இவ பெரியப்பன்காரன் இவ மேலே யாரை ஏவி எப்பிடி சூனியம் வச்சா என்னென்ன ஆகும் அதச்சொல்லு மொதல்லே..’

‘நல்ல கேள்வீ…சரியாக்கேட்டே…

‘ கேளுங்கடி… இவன் பெரிய பாண்டே டி.வி. இனடர்வ்யூ எடுக்கறான் இவனையும் நம்பறாங்களே…ஈஸ்வரா…’

‘நீ மொதல்லே உனதை அவுரு…..தப்பா தப்பா யோசிக்காதே..அவுருன்னா …..கயத்தை ..அதாவது..கருப்புக்கயத்தை….அப்புறமா பேசு..முடியாதில்லே அப்ப நான் சொல்றதை மாத்திரம் கேளு…சரியா…

‘டேய்….’

‘பாருங்கம்மா…கரெக்டா சூனியம் வச்சா விசாலத்துக்கு மாடு மாதிரி காதுலே ரெண்டு கொம்பு.. மொளைக்கும்…மேலே கீழே நீளமா
முடி வளர்ந்திடும்…’

‘கீழேன்னா காலுக்கு கீழயா காலுக்கு நடுவிலயா…ஏன் கேக்கறன்னா..’

‘பொத்துடி…’

‘இல்லக்கா…எனக்கு இந்த முடித்தொல்லை ஜாஸ்தியாகி…எருவாமுட்டை போட்டனா இப்ப முடியே இல்ல…’

‘அப்படியா…சந்தோஷம்….அந்த அழகைப்பாக்க அழகிப்போட்டி நடக்கப் போகுதாம்..அவசியம்….அதக்காட்டிட்டு வந்துடு….சரியா…

‘ஒவ்வொரு மயிர்க்காலிலேயும் ரத்தமா வருமாம்….என்றான் ராஜாராமன்..

‘ப்ச’ என்று சப்புக்கொட்டினாள் ஒருத்தி

‘இதுஎங்களுக்கு எப்பவும் வர்ரதுதானே’

‘அடிடீ அவளை…வாயத்தொறந்தே…கீழே மூட வச்சிருவேன்…எங்கேயிருந்து வர்ரீங்கடி….’

‘விசாலம்…உனக்கு தாடி மீசை மொளைச்சு கோரப்பல்லோட ஒவ்வொரு மயிர்க கால்லே ரத்தம் வந்தா எப்பிடி இருக்கும்…..அப்புறம்..ரெண்டு கொம்பு….’

‘எண்ட பகவதியே….’

‘அப்புறம் கண்ணு முழி ஒரு ரெண்டு இன்ச் முன்னாலே வந்துடும்…’

‘குருவாயூரப்பா..’

‘நல்லா மெரட்டரேடா….’என்றாள் மலர்…

‘ஆனா நான் சுலபமா இத முடச்சு அவனை ஓட ஓட விரட்ட முடியும்’

‘சரி ராஜாண்ணா….நீ விசாலத்தைக் காப்பாத்தினா நீ என்ன கேட்டாலும் செய்வோம்…’

‘என்ன கேட்டாலும்…செய்விங்களா…..

செய்வோம்…செயவோம் …செய்வோம்…..

‘மலரை ஒத்துக்கச்சொல்லு….’

‘மொதல்ல அவனைத்தொரத்திட்டுப்பேசுடா..சவடாலு…

சரி…நான் சொல்ற மாதிரி சத்தியம் பண்ணுங்க…ரெடியா….எல்லாம் ரெடி….எப்பிடி சத்தியம் பண்ணனும்…

(கதை பாகம் 2ல் முடியும்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *