கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 34,097 
 
 

ஆளுயரக் கண்ணாடி முன் நின்றான் மருதநாயகம். வழுக்கைத் தலையில், அறை விளக்கு வெளிச்சம் பட்டு, டாலடித்தது. பின்னந்தலை கேசத்தையும், இரு கிருதாக்களையும், பென்சில் மீசையையும் டை அடித்திருந்தான்.
பவர் கிளாஸ் கண்ணாடிக்குள்ளிருந்த இரு கண்கள், மனதில் நிறைவேறாத ஆசைகளை பிரதிபலித்தன. குண்டு மூக்கு. சற்றே தெற்றிய மேல்வரிசை பற்கள்.
மீன் அங்காடி!“டக் இன்’ செய்த முழுக்கை சட்டை; ரெடிமேட் பேன்ட். அக்குளில், டியோடரன்ட் பீய்ச்சி கொண்டான். சட்டைப் பையில், இருநூறு ரூபாய் எடுத்து வைத்துக் கொண்டான். மஞ்சள் துணிப்பையை, மடித்து பத்திரப் படுத்தினான்.
மன்னர் எங்கு செல்வார் என்று, அரசிக்கு தெரியாதா? மருதநாயகத்தின் மனைவி, பைக் சாவி எடுத்துக் கொடுத்து, ஒருமுறை முறைத்தாள். அதன் அர்த்தம், “வழுக்கை கிழவா… வயசு ஐம்பத்தி நாலாகியும், ஏன் இப்படி அலையுற?’ என்பதே.
மருதநாயகத்துக்கு, “வழுக்கையன், சொட்டையன், கிழவன்…’ என, கொஞ்சப்படுவது, பிடித்தமான விஷயம். அப்படி விளிக்கப்படும் போது, மருதநாயகத்தின் முகத்தில் அசடு வழியும்.
பைக் சீறிப் பறந்தது. இரு சிக்னல்களைக் கடந்து, மீன் அங்காடி வந்து சேர்ந்தது. இறங்கி ஸ்டாண்டிட்டான். வாகனக் கண்ணாடியில், முகத்தை, “டச்-அப்’ செய்து கொண்டான்.
உள்ளே நடந்தான். மீன் அங்காடிக்கென்று, பிரத்யேகமாய் ஒரு நடை வைத்திருந்தான் மருது. முகமது பின் துக்ளக்கில், சோ நடக்கும் நடை. மருது, அங்காடிக்குள் கால் வைத்ததுமே, கறுப்பு வெள்ளையாய் இருந்த அங்காடி, வண்ணமயம் ஆயிற்று. மீன்காரிகளின் இதயங்களை, சாக்லேட் மின்சாரம் தாக்கியது.
அங்காடிக்குள், மொத்தம், நாற்பது மீன் கடைகள். மீன் அரிந்து கொடுக்கும் பெண்கள் பத்து பேர். இரு சிக்கன் கடைகள். இரு காய்கறிக் கடைகள். இரு மட்டன் ஷாப். கருவாடு விற்கும் பெண்கள்
ஆறு பேர்.
மீன் விற்கும், பெண்களின் பெயர், வயது, கல்வித் தகுதி, திருமணத் தகுதி, என அனைவரின் ஜாதகமும், மருதநாயகத்திற்கு அத்துப்படி. அங்காடிக்குள் பிரவேசித்ததும், மருது செய்யும் முதல் வேலை, அங்காடியின் முதல் கடையிலிருந்து, கடைசி கடை வரை, இடமிருந்து வலமாக, ஒருமுறை சுற்றி பார்ப்பதுதான். நகர்வலம் வரும் போதே, ஒரு கண்ணால் மீன்காரிகளையும், மறுகண்ணால், அவர்கள் முன் குவிக்கப்பட்டிருக்கும் மீன்களையும், குசலம் விசாரிப்பான்.
வலம் முடிந்த உடன், வெவ்வேறு கோணங்களில் நின்று, லாங்ஷாட்டில் மீன் கடைகளை ரசிப்பான். மீன் அங்காடிக்கென்றே, ஒரு தனித்துவ நாற்றம். தப்பு தப்பு, மருது அகராதியில் நறுமணம், அங்காடிக்குள் சுழன்றடிக்கும்.
அந்த நாற்ற நறுமணத்தை, இரு நாசிகளால் உறி<ஞ்சி, நுரையீரல்கள் நிறைப்பான். மருதுவின் சொந்த ஊர் பழையாறு. வாழ வந்த ஊர் இது. இளம்பிராயத்திலிருந்து, மீனவ சமுதாயத்தோடு சேர்ந்தே வளர்ந்தவன். எந்தெந்த கடல் மீன்கள், எந்தெந்த மாதத்தில் கிடைக்கும். ஐசில் வைத்த மீன், எந்த பதத்தில் இருந்தால் வாங்கலாம். எந்த மீன், குழம்புக்கு பொருத்தமானது. எந்த மீன், பொரிக்க பொருத்தமானது. எந்த மீன், குழம்புக்கும், பொரிப்புக்கும் பொருத்தமானது என்பதெல்லாம், அவனுக்கு அத்துப்படி. முதல் மீன் கடையின், முன் போய் நின்றான் மருது. வெளிர் சிவப்பு நிறத்தில், வெடவெடப்பாய் காட்சியளித்தாள் மீன்காரி. நெற்றியில் குங்குமப் பொட்டு, வாயில் தாம்பூலம், இடுப்பில் சுருக்குப்பை. ""அஞ்சலை... இந்த வஞ்சிரம் என்ன விலை?'' ""வைய்யா வழுக்கை மீனை... அந்த மீன் மூணு கிலோ எடை இருக்கும். ஆயிரம் ரூபா கொடுத்து, மீன் திங்ற மூஞ்சியப்பாரு!'' ""அப்@பா என் மூஞ்சி, எத்னி ரூபா மீன் திங்ற மூஞ்சி?'' கொஞ்சலாய் வினாவி, முகத்தை முன்னுக்கு நீட்டினான் மருது. அவ<ளும் தன் முகத்தை முன் நீட்டி, ""ரூபாய்க்கு மூணு, கவலை மீன் வாங்கி, திங்ற மூஞ்சிய்யா, உன் மூஞ்சி!'' ""இந்த சங்கரா மீன்?'' ""கிலோ நூறு ரூபா; ஒரு கிலோ வாங்கித் தின்னுட்டு, மூணு நாள் பட்டினி கிடக்காதே!'' "" எறா?'' ""பெரிசு கிலோ முன்னூறு ரூபா; சிறிசு கிலோ இருநூறு ரூபா... எதுக்கு அதென்ன விலை, இதென்ன விலைன்னு கேட்டு, உன் நேரத்தையும், என் நேரத்தையும் வீணாக்குற. இந்த வவ்வா மீன், 600 கிராம் எடை இருக்கும். செவுளப்பாரை, செக்கச் செவேல்ன்னு, ஐஸ்ல வைக்காதது. நூறு ரூபாய்க்கு தர்@றன். வாங்கி, என் பேரைச் சொல்லி தின்னு,'' என்று நக்கலாக சொன்னாள். ""சங்கரா மீன் வாங்க தகுதி இல்லாதவன், வவ்வா மீன் வாங்க நினைக்கலாமா அஞ்சலை?'' ""நான் தொட்டு குடுத்தா, உன் தகுதி உசந்திடும் பிளேட்டு,'' வழுக்கைத் தலைக்கு சங்கேத வார்த்தை, "பிளேட்டு!' ""பாபின்டோ... நாற்பது லட்ச ரூபாய்க்கு சொந்தமா வீடு கட்டியிருக்கேன். கருப்பாயிருந் தா<<லும், களையாயிருக்ற பொண்டாட்டி, சிங்கக்குட்டிகளாய் இரு மகன்கள், தினம் நூறு பேரின் நோய்களை, ரத்தம் பகுத்து கண்டறிந்து காக்கிற வேலை. நா<லு மருத்துவர்களுக்கு போதுமான மருத்துவ அறிவு, ஏற்கனவே அஞ்சு ஸ்டார் தகுதியில் இருக்ற எனக்கு, உன் "டச்சிங் டச்சிங்' தகுதி வேணாம் தாயீ.'' "" மீன்காரிக்கு, உன் வீண் பெருமை எதுக்கு... உன் கிட்ட வாயாடி, மீன் விக்காம போனா, நான் உன் வீட்டுலதான் வந்து உக்கார வேண்டி வரும்; சோறு போடுவியா?'' ""ஏன்... உன் புருஷன் என்னை வெட்டி கூறு போடவா?'' ஆரஞ்சு நிற ஐஸ்பெட்டியை இறக்கி வைத்துக் கொண்டிருந்த ஆசாமி, ""எனக்கு ஆட்சேபனை இல்லை; வேணும்ன்னா கூட்டிட்டு போ... ஒரே ஒரு கண்டிஷன்... திருப்பிக்கொண்டு வந்து விட்றாதே!'' ""வேணாங்க... என் பொண்டாட்டி வையும்.'' அடுத்த மீன்கடைக்கு நகர்ந்தான் மருது. ""வாய்யா கில்லாடி கில்ட்டன்... கொடுவா மீன், கூறு நூறு ரூபாய்ன்னு எடுத்துட்டு போ. பன்னன்டு துண்டிருக்கு. ஆறை குழம்புக்கு போடு; ஆறை பொரிச்சு தின்னு.'' ""முப்பது ரூபாய்க்கு தரியா?'' ""போய்யா... போ போ...'' ""முப்பத் தஞ்சு ரூபா?'' ""உதைப்பேன்...'' ""நாற்பது ரூபாய்க்கு தரியா?'' ""போறியா... திருக்கை மீன் வச்சு சாத்தவா?'' மூன்றாவது கடைக்கு நகர்ந்தான். கடைக்காரிக்கு, 65 வயதிருக்கும்; ஆனா<லும், லட்சணமாய் இருந்தாள். ""இளம் வயசுகாரிக்கிட்டதான் போய், கொஞ்சி, மீன் வாங்குவியா... உன் வயசு ஒத்த கிழவிக்கிட்ட மீன் வாங்க மாட்டியா... அவள்களும் அரைச்சு, அரைச்சு ஊத்தறாள்க; நீயும், கடக்கடக்குன்னு குடிக்ற.'' ""நீயும் வேணா அரைச்சு ஊத்து, கடக்கடக்குன்னு குடிச்சிட்டு போறேன்.'' ஐந்து, கடல் கெளுத்தி மீன்கள் இருக்கும் கூறைக் காட்டி, ""நாற்பது ரூபாய்க்கு எடுத்துட்டு போ.'' ""கடல் கெளுத்தி, சல சலன்னு இருக்கும். பத்து ரூபாய்க்கு குடுத்தா<<லும் எனக்கு வேண்டாம்.'' ""ஆற்று கெளுத்தி, உயிரோட இருக்கு. கிலோ முப்பது ரூபாய்க்கு எடுத்துட்டு போங்க,'' என்றார் ஒரு மீன்காரர். ""விரால் மீன், கிலோ இருநூத்தம்பது ரூபா தான்; ஒரு கிலோ எடை வர்ற மாதிரி மீன் தர்றேன், எடுத்துட்டு போங்க...'' என்றார் இன்னொரு ஆள். ""அணைக்கட்டு கெண்டை, கிலோ எண்பது ரூபா... அள்ளிட்டு போ சாரே...'' மூன்றாவது மீன்காரர். "நான் ஆம்பிளைங்ககிட்ட, மீன் வாங்கறதில்லை...' வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு நகர்ந்தான் மருதநாயகம். ஒரு மீன்காரி, நெத்திலி மீன்களை கூறு போட்டு வைத்திருந்தாள். இவனை பார்த்ததுமே, அவள், ""மீன் மார்க்கெட்டை வாடை பிடிச்சிட்டு போய், நினைப்பை தொட்டுக்கிட்டு பழையசோறு திங்கலாம்ன்னு பாத்தியா?'' ""ஆமா நீ கண்ட... கூறு என்ன விலை செல்லம்?'' ""கூறு இருபது ரூபாய்.'' ""மூணு கூறு, இருபது ரூபாய்க்கு கொடு.'' கூறுகளை அளவளாவி கலைத்தான். பட்டென்று அவனது கையில் செல்லமாக அடித்தாள். ""எடுய்யா கையை... அதென்ன உன் பொண்டாட்டி கன்னம்ன்னு நினைச்சியா?'' ""உன் கன்னம்ன்னு நினைச்சேன்!'' ""தொடு, உன்னை கூறுபோட்டு வித்திர்றேன்.'' ""என்னைக் கூறு போட்டா, எவன் வாங்குவான். மூணுக் கூறு இருபத்தஞ்சு ரூபாய்க்கு தருவியா, மாட்டியா?'' ""புது சுனாமிக்கு மறு நா வா; தர்றேன்!'' நான்காவது கடைக்கு நகர்ந்தான். ""அதென்ன விலை?'' ""என்னய்யா... உடம்பு எப்டி இருக்கு... என் கழுத்துக்கு கீழ காட்டி, அதென்ன விலைன்னு கேக்ற?'' ""கண்ணாடி போடு... நான் கைய காமிச்சது, ஊழி மீன் பக்கம்.'' ""உன் பேரென்ன?'' ""மருதநாயகம்!'' ""மருதநாயகத்துக்கு ஊழி மீன் விக்க மாட்டேன்!'' சில கடைகள் நகர்ந்தான். கத்தாழை மீன் பார்த்தான். கடல் நண்டு, ஆற்று நண்டு விலை விசாரித்தான். பன்னா, ஆரா, மடவை, சுறா, தேளீ, ஜெல்லி மீன்களை விலை விசாரித்து, மீன்காரிகளுடன் வம்பு செய்தான். கடைசியாக ஒரு மீன்காரியிடம் போய் சேர்ந்தான் மருத நாயகம். ""இந்த பலப்பொடி மீன், கூறு என்ன விலை?'' ""உன்கிட்ட விலை சொல்லி எங்க விக்றது... எடுத்துக்கிட்டு, உன் இஷ்டம் போல காசை கொடு!'' ""இந்த குட்டி மீன்கள், இதயத்துக்கு மிக மிக நல்லது,'' மூன்று கூறுகளை அள்ளிக் கொண்டு, நாற்பது ரூபாய் கொடுத்தான். மீன் அரிந்து கொடுக்கும் பெண்களிடம் போனான். ஒருத்தியிடம் கொடுத்தான்; கொட்டினாள். ""இந்த மீனை அரிய, பைனாக்குலரில வேணும்!'' அரிவாள் மனையைத் தீட்டிக் கொண்டாள். மீன்களை சாம்பலில் புரட்டியெடுத்து அரிந்தாள். குடல் பகுதியையும், தலைப்பகுதி பாதியையும் நீக்கி, கறுப்பு பாலிதீன் பையில் போட்டுக் கொடுத்தாள். ஐந்து ரூபாய் கொடுத்தான்; வாங்கிக் கொண்டாள். புறப்பட்டான். மீன் குழம்பு சாப்பிடுவதற்கு, அவனது மனமும், உட<லும் பரபரத்தன. நான்கு நாட்களாக, மருதநாயகத்திற்கு காய்ச்சல். தொடர்ந்து மருத்துவம் பார்த்தும், காய்ச்சல், வந்து வந்து போகிறது. தலையில் மப்ளர் கட்டியிருந்தான், காலர் பகுதி பட்டனை போட்டு, கழுத்தை இறுக்கியிருந்தான். சாயம் அகன்று, கன்னப்பகுதி ரோமங்கள், நரைத்திருந்தான். மனைவியுடன் ஆட்டோவில் வந்து, மருத்துவரை பார்த்துவிட்டு, மருத்துவமனை வாசலில் நின்றிருந்தான். மனைவி மருந்து சீட்டை தூக்கிக் கொண்டு, மருந்துக்கடைக்கு போயிருந்தாள். ""பிளேட்டு...'' கொஞ்சலாய் வியக்கும் குரல். குரல் கேட்டு திரும்பினான்; புதியவள், கவர்ச்சிகரமாக ஆடை அணிந்து நின்றிருந்தாள். ""யாரம்மா நீ?'' ""என்னை அடையாளம் தெரியல... நான் தான் மீன்காரி அஞ்சலை!'' ""காஸ்ட்யூம் மாறியிருக்கு; அதான் தெரியல,'' வழிந்தான். ""என்னய்யா... மீன் மார்க்கெட் பக்கம் நா<லுநாளா காணோம்?'' ""காய்ச்சல் இன்னும் பூரணமா குணமாகல,'' இருமிக் காட்டினான். ""உன்னை காணாம, மீன்காரிக நாங்க மொத்தமும், துடிதுடிச்சு போய்ட்டம் தெரியுமா... எங்களோட பொழுதுபோக்கே நீதாய்யா... நீ நூறு வடிவேலுகளுக்கு சமம். எங்க குடும்ப பிரச்னை, வியாபார பிரச்னைகளுக்கான கிளுகிளுப்பு வடிகால், உன்னோட பேச்சும், எங்க எதிர் பேச்சும்தான். ""நம்ம பேச்சுல, ஆபாசம் வழியுறமாதிரி தெரியும். ஆனா, அது உள்நோக்கம் இல்லாத, மச்சான் - மச்சினிச்சி வகை, ஆபத்தில்லாத கேலி, கிண்டல் நையாண்டிகள். ""மனுசன், ஆதிகாலத்ல மொதமொத தின்னது மீனைத்தானே... மீன்கள், ஆம்பிளை, பொம்பிளைகளின் உறவு தொடர்ச்சியின் அடையாளம். என்ன ஆன்னு பாக்ற... நான், ப்ளஸ்டூ பாஸ் பண்ணினவ... சயின்ஸ் குரூப்! ""நான் கோவிலுக்கு வந்தேன்; உனக்காகவும் வேண்டுறேன்... சீக்கிரம் மீன் வாங்க வந்து சேரு.'' தலையாட்டினான் மருதநாயகம். அங்காடிக்குள் நுழைந்தவனை, அஞ்சலையின் குரல் அதிரடித்தது. ""நாலு நா ஆசுபத்திரி நர்சுகிட்ட வழிஞ்சிட்டு, பருப்பு வேகாம, ஆரம்பிச்ச எடத்துக்கே வந்து சேந்திட்டியா... வா வா மகனே... சோடா புட்டி மகனே!'' - ஜனவரி 2012

2 thoughts on “மீன் அங்காடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *