விளையாட்டின்போது காலில் அடிபட்டு புசுபுசு வென்று வீங்கி விட, டாக்டரிடம் சென்று காட்டினேன். அமுக்கி பார்த்து விட்டு ஒரு பெரிய மாத்திரையை எடுத்து தந்தார்.
இருங்க, தண்ணி கொண்டு வரேன், என்று போனவர் போனவர் தான். எங்கள் ஊர் சிறிய டவுன் ஆனதால் இங்கே டாக்டர், கம்பவுண்டர், பியூன் எல்லாமே இவர்
ஒருவர் தான்.
கைவசமிருந்த பாட்டில் தண்ணீரை வைத்து, பிரயாசையுடன் அந்த மாத்திரை விழுங்கினேன். இத்தனை பெரிய மாத்திரை இதுவரை பார்த்ததே இல்லை.
ஒரு வழியாக சிரமத்துடன் தொண்டையிலிருந்து அது கீழே இறங்கவும், ஒரு பிளாஷ்டிக் குவளையில் தண்ணீருடன் வந்தார் டாக்டர்.
இதிலேய அந்த மாத்திரை போட்டு நல்லாக் கரைஞ்சதுக்கபுறம் அந்த சொல்யூஷனை வச்சு காலிலே ஒத்தடம் கொடுங்க என்றார்.
– ஷேக் சிந்தா மதார் (22-8-12)