பொதுஜன சேவை – ஒரு பக்க கதை

 

அரிசி, சர்க்கரை போன்ற ரேஷன் பண்டங்களை ‘பிளாக் மார்க்கெட்’டில் விற்கிறவர்களைக் கண்டால் உடனே அவர்களைப் போலீஸாரிடம் ஒப்புவித்துத் தண்டனை அடையச் செய்யவேண்டும் என்றும், அது ஒரு பெரிய பொதுஜன சேவையாகும் என்றும் பத்திரிகைகளில் அடிக்கடி படித்திருந்த எனக்கு, அன்று அந்த ஆசாமியிடம் அளவு கடந்த கோபம் வந்ததில் என்ன ஆச்சரியம்?

துணிச்சல் என்றால், சாதாரண துணிச்சலா அவனுக்கு! பட்டப்பகலில், பலர் நடமாடும் ஒரு பொது இடத்தில் நின்றவாறு, அந்தப் பேர்வழி சிறிய மூட்டை ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு “வெள்ளை மணல், எத்தனை வீசை வேணும்? வீசை 2 ரூபாய்” என்று கொஞ்சங்கூட பயப்படாமல், பக்கத்திலிருந்த ஒரு மனிதரிடம் விலை கூறிக்கொண்டு இருந்தான். அப்போது அந்த மனிதர் ஒரு நீண்ட பெருமூச்சுடன், “சர்க்கரைப் பஞ்சம் என்றுதான் ஒழியுமோ! இந்த பிளாக் மார்க்கெட்காரர்கள் என்று தான் ஒழிவார்களோ!” என்று முணுமுணுக்கவே, பிளாக் மார்க்கெட் ஆசாமி கோபத்துடன், “ஏன் ஐயா எங்களை ஒழியச் சொல்லுகிறீர்? உங்களைப் போன்ற ஆசாமிகள், எவ்வளவு அதிக விலை கொடுத்தும் சர்க்கரையை வாங்க முன் வருவதால் தானே ஐயா, நாங்கள் செழிக்கிறோம்! முதலில் நீர் தான் ஒழிய வேண்டும்!” என்று இரைச்சல் போட ஆரம்பித்தான்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த எனக்கு ஆத்திரம் பொங்கி எழுந்தது. ‘வெள்ளை மணல்’ என்று சொல்லி, சர்க்கரையை பிளாக் மார்க்கெட் விலைக்கு விற்கும் அந்தப் பேர்வழியை எப்படியாவது போலீஸாரிடம் அப்போதே ஒப்புவித்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

ஆனால், அவனுடைய குற்றத்தை எப்படிப் போலீஸார் முன்னிலையில் ருசுப்படுத்துவது? “நான் யாருக்கும் விற்கவில்லை!” என்று அவன் சொல்லி விட்டால்?

அதற்கு ஒரு நல்ல யோசனை தோன்றிற்று எனக்கு. அவனிடமிருந்து ‘வெள்ளை மணலை’ அப்படியே நாம் விலைக்கு வாங்கிக்கொண்டுவிட்டு, பக்கத்திலிருந்த மனிதரை சாட்சி சொல்லச் சொன்னால், சட்டப்படி அந்த ஆசாமியின் குற்றத்தை ருசுப்படுத்திவிடலாமல்லவா?

இந்த யோசனையின்படி, அவனிடமிருந்து ‘வெள்ளை மணல்’ மூட்டையை விலைக்கு வாங்கி விட்டேன். அவன், “இன்னும் உங்களுக்கு வேணுமானால், நம்ம வீட்டுக்கு நாளைக்குக் காலையிலே வாங்க, தரேன்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டபோது, “தம்பி! சித்தே என்னோடு போலீஸ் ஸ்டேஷன்வரை வந்துவிட்டுப் போயேன்” என்றேன்.

“எதுக்காக?” என்றான் அவன் முறைப்பாக.

“பிளாக் மார்க்கெட்டிலே சர்க்கரை விற்ற குற்றத்துக்காக!”

“உங்களாலே அதை ருசுப்படுத்த முடியுங்களா?”

“ஏன் முடியாது? இதோ, இந்த நண்பர் எனக்கு சாட்சி சொல்லுவார்.”

“சொன்னா அவருக்குத்தான் ஆபத்து. பைத்தியம்னு சொல்லி, பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோவாங்க.”

“ஏன்?”

“இந்த மூட்டையில் இருக்கிற மணலைப் பார்த்து, சர்க்கரைன்னு சொன்னா பின்னே எங்கே கொண்டு போவாங்களாம்?”

“இதுலே மணலா இருக்குது?”

“வேற என்ன இருக்கு? நான்தான் ஆரம்பத்திலேர்ந்து சொல்லிண்டு வந்தேனே, வெள்ளை மணல்னு!”

- ஆனந்த விகடனில் 40, 50 -களில் பல ஒரு பக்கக் கதைகளை எழுதியவர் ‘சசி’. ( இயற்பெயர்: எஸ்.ஆர்.வெங்கடராமன்). ‘ரமணி’ என்ற பெயரிலும் ‘திண்ணைப் பேச்சு’ கட்டுரைகளை எழுதினார். 14 வருடங்கள் விகடனில் உதவி ஆசிரியராய்ப் பணி புரிந்த ‘சசி’ 25 ஏப்ரல் 1956 இல் காலமானார். 

தொடர்புடைய சிறுகதைகள்
பெயர் மாற்றம்! – ஒரு பக்க கதை
"யாரோ உங்களைப் பார்க்க வந்திருக்காங்க, ஸார்! மிஸ் இந்திராவாம்; வேலை வேணுமாம், நம்ம ஆபீஸில்" என்று பியூன் வந்து தெரிவித்ததும், மானேஜர் குண்டுராவ், "ஐயையோ! ஒரு தடவை அனுபவப்பட்டது போதும்! இனிமேல் நம்ம ஆபீஸில் எந்த ஸ்திரீயையும் வேலைக்கு வைத்துக் கொள்ள ...
மேலும் கதையை படிக்க...
அவன் தனக்கு முற்றிலும் பழக்கமில்லாத பாதையில் நடந்துகொண்டிருந்தான். இந்தப் பாதை முன்பு சாதாரணமாகப் புழங்கிக்கொண்டிருந்த சாலையாக இருந்திருக்கும் என்றே அவனுக்குத் தோன்றியது. செடி கொடிகள் முழங்காலுக்குக் கொஞ்சம் கீழான உயரத்தில் நெருக்கமாக வளர்ந்து நடப்பதற்குச் சிரமமாக இருந்தது. வேறு ஏதேனும் நல்ல ...
மேலும் கதையை படிக்க...
புல்லிலிருந்து பால்! – ஒரு பக்க கதை
அந்த ஆசாமியிடம் எனக்கென்னவோ சந்தேகம்தான் முதலில் உண்டாயிற்று. 'சர்வ சாதாரணமாக எங்கே கண்டாலும் மண்டிக்கிடக்கும் புல்லிலிருந்து நல்ல பாலைத் தயாரிக்க முடியும்' என்று அந்த ஆசாமி சொல்லும்போது, எப்படிச் சந்தேகம் உண்டாகாமல் இருக்கும்? "அப்படி உங்களால் புல்லிலிருந்து பால் தயாரிக்கமுடியுமானால், இப்பொழுதே உணவு ...
மேலும் கதையை படிக்க...
"ஏண்டி மங்களம், பக்கத்து வீட்டிலே ஒரே குதூகலமா இருக்காப்போலே இருக்கே! திருட்டுப் போன நகைகள் எல்லாம் ஒரு வேளை அகப்பட்டிருக்குமோ?" என்று என் சம்சாரத்தைக் கேட்டேன். அதற்கு அவள், "அப்படித்தான் தோண்றது. எதுக்கும், போய் விசாரிச்சுட்டு வாருங்களேன்!" என்று சொல்லவே, நான் உடனேயே ...
மேலும் கதையை படிக்க...
தந்திரம் பலித்தது! – ஒரு பக்க கதை
திவான் பகதூர் குண்டப்பா அவர்களுக்கு, அகில இந்திய ஜோதிடப் புகழ் வேலுசாமி எழுதியது: என்னைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். ஒருவருக்கு வரப்போகும் கஷ்ட நஷ்டங்களை அவருடைய ஜாதகத்தைப் பார்த்து விவரமாக என்னால் தெரிவிக்கக் கூடும். அநேக பெரிய மனிதர்களிடமிருந்து நற்சாட்சிப் பத்திரங்கள் பெற்றிருக்கிறேன். தாங்கள் ...
மேலும் கதையை படிக்க...
அன்புள்ள தங்கவேலு, பத்து வருஷங்களுக்குப் பிறகு உனக்கு லெட்டர் எழுதுகிறேன். இவ்வளவு காலமாக என்னிட மிருந்து ஒரு சேதியும் வராததைப் பற்றி நீ ஆச்சரியப்பட்டிருக்கலாம். சென்ற பத்து வருஷங்களாக நான் இந்தியாவிலேயே இல்லை. போலீஸ§க்குப் பயந்து, தலைமறை வாக ரங்கூனில் இருந்தேன். நேற்றுதான் ...
மேலும் கதையை படிக்க...
குடியிருக்க ஓர் இடம் – ஒரு பக்க கதை
நான் குடியிருந்த வீட்டைக் காலி செய்யும்படி வீட்டுக்காரன் வெகு கண்டிப்பாகச் சொல்லி மூன்று மாதங்களுக்கு மேலாகியும், நான் வீட்டைக் காலி செய்யக்கூடவில்லை. வேறு வீடு கிடைத்தால் அல்லவா காலி செய்வதற்கு? நானும் எங்கெல்லாமோ தேடிப் பார்த்துவிட்டேன்; எங்கேயும் வீடு காலியாவதாகத் தெரியவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
அதிர்ஷ்டசாலி! – ஒரு பக்க கதை
"அத்திம்பேரே!" என்று உரக்கக் கூப்பிட்டுக்கொண்டே மிகுந்த குதூகலத்துடன் ஓடி வந்தான், என் மைத்துனன் வைத்தி. "போன காரியம் என்னடா ஆயிற்று? காயா, பழமா?" என்று நான் ஆவலோடு கேட்டேன். "பழம்தான், அத்திம்பேரே! ராமாமிர்தம் கொடுத்த சிபாரிசுக் கடிதத்தைப் பார்த்ததும் செட்டியாருக்கு ரொம்பத் திருப்தி! நாளைக்கே ...
மேலும் கதையை படிக்க...
பொங்கல் இனாம் !
"என்ன! பொங்கல் இனாமா? பொங்கல் இனாமும் இல்லே, மண்ணாங்கட்டியும் இல்லே... போ! வேற வேலையே கிடையாதுபோல இருக்கு உங்களுக்கெல்லாம்! ஒரு தம்பிடி கூடக் கொடுக்க மாட்டேன்! ஆமா! ஏன் நிற்கிறே இன்னம்? போக மாட்டே?" என்று நடேசய்யர் தம் பற்களை நறநறவென்று ...
மேலும் கதையை படிக்க...
ஜனவரி முதல் தேதியன்று என் புது டைரியில் நான் இரண்டொரு குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்த சமயம், "ஸார்" என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். கணேசய்யர்! வருஷ ஆரம்பத்தில் நண் பர்கள் ஒருவருக்கொருவர் ஆசி கூறும் சம்பிரதாயப் படி, "புது வருஷம் ...
மேலும் கதையை படிக்க...
பெயர் மாற்றம்! – ஒரு பக்க கதை
வனம்
புல்லிலிருந்து பால்! – ஒரு பக்க கதை
திருட்டுப்போன நகை – ஒரு பக்க கதை
தந்திரம் பலித்தது! – ஒரு பக்க கதை
எதிர்பாராதது ! – ஒரு பக்க கதை
குடியிருக்க ஓர் இடம் – ஒரு பக்க கதை
அதிர்ஷ்டசாலி! – ஒரு பக்க கதை
பொங்கல் இனாம் !
புது வருஷத் தீர்மானம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)