பி.சுசீலாவும் அன்புச்செல்வன் IPSம்

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை  
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 19,522 
 

வரும்போதே கோவமாக வந்தாள் கவிதா . சண்டே என்பதால் சந்துருவும் சீனியும் அப்பொழுது தான் எழுந்திருந்தார்கள்.

இன்னைக்கு அவ்ளோ தான் என்று நினைத்து கொண்டே , “என்னாச்சு ?” கொட்டாவியுடன் கேட்டான் சந்துரு.

கவிதா,”எனக்கு புடிக்கல அவன ”

“எவன?”

“போன வாரம் வந்து பொண்ணு பாத்துட்டு போனானே”

“ஏன்?”

“புடிக்கல”

சீனி,”ஏன், இந்த வெய்யில்லயும் நீயா நானா ல வர கோபிநாத் மாதிரி கோட் சூட் லாம் போட்டிட்டு தான வந்தான்”

“அதனால புடிக்கணுமா?”

“அப்படி இல்ல, பாக்க நல்லா தான இருந்தான்.என்ன கொஞ்சம் தொப்ப தான் தூக்கலா இருந்துது , அது பிரச்சின இல்ல”

“என்ன பிரச்சினை இல்ல?”

“சோனா magnetic belt வாங்கி பேன்ட்ல கட்டி விட்டுடனா சரி ஆகிடும், சிக்ஸ் பேக்ஸ் லெவலுக்கு கொண்டு வந்துடலாம், நீ பயப்படாத, டே சந்துரு நீ என்ன சொல்ற?”

சந்துரு,”நிஜமா குறையும்னு நெனைக்ற?”

“போடா, நம்ம ஆபீஸ்ல இதுக்கு முன்னாடி ஒரு accounts manager இருந்தாரே, ஞாபகம் இருக்கா?”

“யாரு, நம்ம கோவிந்தசாமி சாரா? அவரு யானை pregnant ஆனா எப்படி இருக்குமோ அப்படி இருப்பாரே”

“அவரேதான், அவர இப்ப பாத்தியா, அந்த யானைக்கு delivery ஆன மாதிரி இருக்காரு, ஒரு நாள் வழியில பாத்து கேட்டப்போ சொன்னாரு”

“எங்க delivery ஆச்சாம் ?”

“ம் ,விழுப்புரம் by pass road ல, எரும, sona belt யூஸ் பண்ணத பத்தி சொன்னாரு”

சந்துரு,”அவ்ளோ effectiveஆ அது, பேசாம நாம ஒரு நாலு வாங்கி வச்சுக்குவோம், எப்படியும் இன்னும் நாலு பேரு வருவாங்க கவிய பொண்ணு பாக்க, அவங்களுக்கு கொடுப்போம், இப்ப வந்தானே அவனுக்கும் கொடுக்கலாம், கவி உனக்கு வேணுமா?”

“முதல்ல நீங்க ரெண்டு பேரும் யூஸ் பண்ணுங்க, அப்புறம் பிசினஸ் பண்றத பத்தி யோசிக்கலாம், நா எதோ உங்க ரெண்டு பேர்ட பொலம்ப வந்தா இப்டி மொக்க போடறிங்களேடா”

“சொல்லு என்ன பிரச்சின?”

“அவன எனக்கு சுத்தமா புடிக்கலடா,வீட்ல என்னமோ இப்பவே கல்யாணம் ஆன மாதிரி, வாங்க மாப்ள, உக்காருங்க மாப்ள னு ஓவரா சீன் போடறாங்க, அதுக்கு அவன் வேற, இட்ஸ் ஓகே மாம்ஸ், பரவால ஆன்ட்டி அப்டின்னு அரைகுறை இங்கிலீஷ் ல பிராண்டுறான், எனக்கு அங்க இருக்கவே புடிக்கல, அதான் வந்துட்டேன்.”

“உன் அப்பா அம்மாக்கு யாரையும் அவ்ளோ சீக்கிரம் புடிக்காதே, அவன எப்டி புடிச்சது, ஒரு வேளை பையன் உண்மையாவே நல்ல பையனோ , நாம தான் அவனோட மறு பக்கத்த பாக்கலியோ?”

சந்துரு,”அவன் சிலிண்டற்கு டிரஸ் போட்ட மாதிரி இருப்பான், நீ அவனோட மறு பக்கத்த பாக்றது வேஸ்ட்.

“நல்ல educated family’ஒ ?”

“ஆமா பயங்கர educated, அப்பா பாரதியார் கவிதைகள் புக் பாத்திட்டு எவ்ளோ வெய்ட் இருக்கும்னு கேட்டாரு, அம்மா பால் வாடி தாண்டல , இவன் மட்டும் என்ன BITSல bit அடிச்சா பாஸ் பண்ணி இருக்க போறான், எதோ engineering collegeல சீட் நிறைய vacant இருந்திருக்கும் , இவனுக்கும் ஒரு பெஞ்சோ பாயோ குடுத்திருபாங்க” இது கவி.

சந்துரு,”பாஸ் ஆயிட்டானா இல்லையா, அத கேட்டியா ?”

“அந்த கொடுமைய ஏன் கேக்ற , convocationல எடுத்த போட்டோலாம் எடுத்துட்டு வந்திருந்தான், ஒரு பெரிய டெண்டயே மேல போத்துன மாதிரி இருந்துது, அத என்ன பெத்ததுங்க பாத்துட்டு, ஆஹா ஓஹானு சொல்லி, அவனுக்கு கையெல்லாம் குடுத்து, அன்னைக்கு ஒரே கலவரம் போ”

“ஒரு வேளை, எதுவும் வேணாம்னு சொல்லிடாங்களோ ?”

“யாரு அந்த மூஞ்சிங்களா,நீ வேற, வாங்கிட்டு வந்த அரை டசன் வாழ பழம், ஒரு சூம்பி போன ஆரஞ்சு, காய விட குடுமி பெருசா இருக்கிற தேங்கா, இத வாங்கிட்டு வந்துடு, அமெரிகாவாலதான் நம்ம எகானமி கெட்டு போச்சுன்னு மன்மஹோன் சிங் ரேஞ்சுக்கு எகனாமிக்ஸ் பேசிட்டு, போறப்ப அதையே திருப்பி தூக்கிட்டு போய்டாங்க, இதுங்களா ஒன்னும் வேணாம்னு சொல்லும், 200 pages நோட்ல micro Xerox sizeக்கு எழுதி பெரிய லிஸ்ட் குடுத்திட்டு போயிருக்காங்க”

“ஒரு வேளை அவனோட அழகுல மயங்கி…….”

கவி,” நா கிளம்புறேன்”

சீனி,”இரு கோச்சிகாத, சரி அவன் பேரு என்ன சொன்ன?”

“அன்புசெல்வன் BE PGDCA”

சந்துரு,”ஆமா, பெரிய அன்புசெல்வன் IPS, ஏன் LKG, UKG விட்டுட?”

“அது அப்டி தான் சொல்லிச்சு ஒவ்வொரு தடவ பேரு சொல்லும் போதும், நீயே யோசிச்சு பாரு, ஐயோ கல்யாணம் ஆனப்புறம் என் பேரு என்ன ஆகும்னு, கவிதா அன்புசெல்வன் BE PGDCA, ஐயோ, இந்த லேகியம் விக்றவன் போடிருபானே , அந்த மாதிரி இருக்கு”

“அப்டி எத காட்டி மயக்குனான்னு தெரியலயே?”

“டே , அன்னைக்கு என்ன நடந்துதுன்னு தெரியுமா?”

“உன்ன வந்து பொண்ணு பாத்திட்டு போனாங்க, அவ்ளோ தான் எங்களுக்கு சொன்ன”

“உனக்கு என் அப்பாவோட சமையல் ஆர்வத்த பத்தி தெரியும்ல?”

“இப்ப, நாங்க கிளம்பறோம், எங்களுக்கு நிறைய வேலை இருக்கு”

“டே, இருங்கடா சொல்றத முழுசா கேளுங்கடா”

“எதுக்கு, அன்னைக்கு உன் அப்பா பீம புஷ்டி லேகியம்னு ஒன்னு குடுத்து, அத நா சாப்டு எனக்கு வயத்த கலக்கி, டீசென்ட் familyஆ இருந்த எங்க family decentry family ஆச்சே, அதுக்கு யார் காரணம்?”

“அதுக்கு நான் எப்படிடா பொறுப்பாக முடியும், உன்னோடது பிஞ்சு உடம்பு, சின்ன பீஸ்கே ஒத்துக்கல, நான் அன்னைக்கு மட்டும் எட்டு பீஸ் சாப்டேன் தெரியுமா”

“தாயே, உனக்கு இருக்கிறது வயிரா இல்ல கோடவுனா தெர்ல. இப்ப அந்த கதை எதுக்கு, நீ சொல்ல வந்தத சொல்லு”

“நீ சொல்றது கரெக்ட் தான், வர வர அப்பாவோட ஆர்வம இருக்கே, பவர் கட் மாதிரி அளவே இல்லாம போச்சு, என்ன பொண்ணு பாக்க வரதுக்கு முந்துன நாள் ஒரு டிஷ் பண்ணாரு”

“என்ன டிஷ்”

“பிரண்டை அல்வாவும் கோங்குரா காராபூந்தியும்”

“ஏன்டா சீனி, இராக்ல தான ரசாயன ஆயுதம் இருக்குனு அங்க அமெரிக்க சண்டைக்கு போச்சு?”

“விளையாடத டா”

“சரி சொல்லு”

“எனக்கு அறிவே இல்ல, நான் அன்னைக்கு பேசாம இருந்திருக்கணும், அந்த டிஷ்ஷ சாப்டு நாலு தடவ வாந்தி எடுத்த கோவத்துல இதெல்லாம் மனுஷன் சாப்டுவானா நாய் கூட சாப்பிடாது அப்டின்னு சொல்லி இருக்க கூடாது”

“அதையே உங்க அப்பா challengeஆ எடுத்திக்கிட்டு சாப்பிட்டாரா?”

“இல்ல”

“ஒ, உன் நாய்க்கு வயிறு சரி இல்லன்னு சொன்னியே, இதனால தானா, பாவி பாவி, அது என்ன பாவம் பண்ணுச்சு உனக்கு”

“இல்லடா, அத தான் மாப்பிள்ளை வீட்ல வந்தப்ப குடுத்தாரு”

“என்னது, அத கொடுத்தாரா, சரி விடு எப்டியோ, அது வேஸ்ட் ஆகல இல்ல , விடு, உன் நாய்க்கு வந்தது அந்த நாயோட போச்சு”

“போகல, வந்துடிச்சு”

“வந்தவங்கள பிரண்ட அல்வா ஒன்னும் பண்ணலையா?”

“இல்ல”

“பின்ன?”

“அங்க தாண்டா வினையே ஸ்டார்ட் ஆச்சு. என் வாய அந்த பிரண்டயாலயே அடிச்சிகணும், நான் சும்மா இல்லாம பிரண்ட சாப்டுங்க காரா பூந்தி சாப்டுங்கனு சொன்னேனா, அதுங்களும், என்னமோ நான் தான் சமச்சேனு நெனச்சிக்கிட்டு எக்ஸ்ட்ரா ரெண்டு ப்லேட்லாம் வாங்கி சாப்டாங்க”

“எக்ஸ்ட்ரா ரெண்டு ப்லேட்டா, அடேங்கப்பா.இந்த நுக்லியர் பாம் போட்டா கூட கரப்பான்பூசிலாம் சாகாதாமே, அந்த வழித்தோன்றல்களா இருப்பாங்களோ?”

“இனிமேல் தான கூத்தே, கேளுங்க. என் அப்பா முந்திரி கொட்ட மாதிரி, அது அவர் பண்ணார்னு சொன்ன உடனே,ஆளாளுக்கு ஆஹா ஓஹோனு ஒரே புகழ் மாலை. சாதரணமா பேசிட்டு இருக்கறவங்க மேடை ஏறின உடனே தூய தமிழ்ல பேசுவாங்களே அந்த மாதிர் எங்கப்பா என்னமோ chef தாணு மாதிரி, அதுல உள்ள nutrition calories minerals பத்திலாம் லெக்சர் குடுக்க ஆரம்பிச்சிட்டார். ப்ளேட் நிறைய கிடைச்ச உடனே, என்ன எதுன்னு கூட கேக்காத நம்ம IPS, எனக்கு அப்பவே தெரியும், இது உங்கள மாதிரி ஒரு அனுபவஸ்தர் தான் பண்ணி இருக்கணும், என்ன ஒரு கை பக்குவம், அப்டின்னு வாய்ல ஜொள்ளு ஊத்தறது கூட தெரியாம ஒரே உளறல்”

“இப்ப புரியுது, உங்க வீட்ல ஏன் அவன புடிச்சிருக்குன்னு. ஆனா எப்டி உன் அம்மாக்கு புடிச்சுது அவன?”

“அது இன்னொரு கதை”

“இன்னொரு கதையா, ஹே ப்ளீஸ், நீ எதோ feel பண்றனு தான் காலைல 8 30ல இருந்து சாப்டாம கூட கேட்டிட்டு இருந்தோம், இப்ப டைம் பாத்தியா, 2 30. எனக்கு பசிக்குது பா, நான் போய்ட்டு சமைச்சு சாப்டு நைட்க்கும் பேக் பண்ணிட்டு வந்துடறேன், அப்புறம் நைட் fulla விடிய விடிய நீ கதை சொல்வியாம், நாங்க ரெண்டு பேரும் அத கேட்டுட்டே தூங்குவோமாம். சரியா?”

“நீங்க அந்த கஷ்டம்லாம் பட கூடாதுன்னு தான், நான் வீட்ல இருந்தே கொண்டு வந்திருக்கேன், எப்டி என்னோட அறிவுத்திறன்.”

“உன் அறிவுத்திறன் நல்லா தான் இருக்கு, அத சாப்டு எங்க உடல் திறன் குறஞ்சிடாதே?”

“இது நா சமச்சதுடா, பயப்படாம சாப்டுங்க”

“ஏன் அம்மா சமைக்கலியா?”

“அம்மா தான் பாட்டு கிளாஸ் போயிருகாங்களே”

“என்னது, பாட்டு கிளாஸா, இந்த வயசுலையா?”

“அது தாண்டா நெக்ஸ்ட் கதையோட லீட். அன்னைக்கு இவங்கெல்லாம் சாப்டு, கொஞ்ச நேரம் பேசிட்டு கிளம்பிட்டு இருந்தாங்களா, அப்ப அம்மா உள்ள கிட்சன்ல எதோ வேலை செஞ்சிட்டே எதோ பாட்டு ஹம் பண்ணிட்டு இருந்தாங்க. அங்க உள்ள எதுக்கோ போன நம்ம IPS அத கேட்டிட்டு உங்க குரல் அப்டியே பி சுசீலா மாதிரியே இருக்கே, நீங்க ஏன் பாட்டு கிளாஸ் போக கூடாது, நமக்கு இருக்கிற திறமைய நாம தான் வளத்துகனும், இந்த உலகம் ஏன் இன்னொரு சுசீலாவ இழக்கனும், வாழ்க்கைல ஒவ்வொரு சந்தர்பத்தையும் பயன் படுத்திகனும் அப்டின்னு, 23ம் புலிகேசில வடிவேல் போருக்கு போகும்போது ஒரு “வீர” உரையாற்றுவானே அந்த மாதிரி பேசின உடனே என் அம்மா முகத்த பாக்கணுமே நீ”

“அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்”

“அதே தான் டா”

“சரி இன்விடேஷன் அடிச்சாச்சா?”

“ஹே, என்ன விளையாட்ரிங்களா நான் எப்டியாவது இந்த கல்யாணத்த நிருத்தனும்னு பாக்றேன், நீங்க வேற”

“பின்ன, என்ன கவி,உன் வாழ்க்கைல சுசீலா ஒரு கைல பிரண்டயையும் இன்னொரு கைல கோங்குராவையும் வச்சிட்டு டான்ஸ் ஆடறாங்க நீ தனியா என்ன பண்ண முடியும்? ஒண்ணு பண்ணலாம், உன் அப்பா திரும்பி ஏதாவது டிஷ் பண்ணுவார்ல அதை எடுத்திட்டு போய் அவங்க கிட்ட குடு, ஒரு நாள் இல்ல ஒரு நாள், ஏதாவது நல்லது நடக்காதா?

“இன்னைக்கு கூட ஒரு டிஷ் பண்ணாரு”

“அடி அறிவு கெட்டவளே, அத கொண்டு போய் அங்க குடுக்காம இங்க உக்காந்து கதை பேசிக்கிட்டு இருக்க. மொதல்ல அந்த வேலைய செய் போ“

“இல்லடா, அன்னைக்கே அவங்களுக்கு ஒண்ணும் ஆகல, அதான் என்ன பண்றதுனு தெரியல”

“இதெலாம் ஒரு விஷயமா, நீ என்ன பண்ற, முதல்ல வேற யாருக்காவது குடுத்து டெஸ்ட் பண்ணு, அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா மேட்டர் க்ளோஸ்.சரி, கொஞ்சம் இரு, எனக்கு என்னமோ வயிறு ஒரு மாதிரி இருக்கு, நான் பாத்ரூம் போயிட்டு வந்து உன்ன ட்ராப் பண்றேன்”

“தேங்க்ஸ் டா சந்துரு”

“ஹே சே, இதுக்கெல்லாமா தேங்க்ஸ் சொல்லுவாங்க, நான் உன் friend”

“நான் போய் ஆம்புலன்ஸ் கூட்டிட்டு வரேன்”

“இவ்ளோ சீக்ரம் எதுக்கு ஆம்புலன்ஸ்?”

“ஆம்புலன்ஸ் உனக்கு டா. உன்ன வச்சி தான டெஸ்ட் பண்ணேன்.டெஸ்ட்ல நான் பாஸ் ஆய்டேன் டா சந்துரு நான் பாஸ் ஆய்டேன்.

– 26 ஆகஸ்ட் 2012

Print Friendly, PDF & Email

3 thoughts on “பி.சுசீலாவும் அன்புச்செல்வன் IPSம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *