நடையா இது நடையா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 2, 2022
பார்வையிட்டோர்: 3,349 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனது வீட்டு மேசையில் கிடந்த வானொலியை நீண்ட நாட்களின் பின்பு ஒரு பாட்டாவது கேட்போம் என்ற எண்ணத்தில் திருகுகிறேன்.

அந்த நேரம் பார்த்தாற்போல் வெளியில் இருந்து “அழகாம் கொடி சிறிது அதிலும் உந்தன் இடை சிறிது…” என்ற பாடல் ஒலித்தது.

நான் திரும்பிப் பார்த்தேன். எங்கள் முன் மதிலில் ஏறி அமர்ந்தவாறு என் நண்பன் தில்லை அப்பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

நான் திரும்பிப் பார்த்ததைக் கடைக்கண்ணால் கண்டானோ என்னவோ, மீண்டும் அவன் வைரமுத்து, முத்துலிங்கம், கண்ணதாசன் ஆகியோரின் சுளிதைகளைக் கலந்து சாம்பாராக்கி எதுகை, மோனை இல்லாமல் கவிதை ஒன்றைப் பாட ஆரம்பித்தான்.

“செக்கச் சிவந்த இதழ்கள், மாம்பழம் போல் அவள் கன்னம், முத்துப் போலது அவள் பற்கள்…”

பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சொல்வார்களே. அதே போல் எனது நண்பனின் பாடலின் சாரத்திலிருந்து தெருவால் ஒரு அழகான இளம் பெண் போகிறாள் என்று ஊகித்தவனாக பொம்பளைக்கினி பிடித்த என் நண்பனை நோக்கிப் போனோர்.

என்னைக் கண்டதும் அவன், ‘மச்சான் அங்க பார்டா, என்ன வடிவு என்ன வடிவு’ என்றான்.

நானும் பெரியதொரு கற்பனையை செய்து கொண்டு ஆவலுடன் எட்டிப் பார்த்தேன்.

அங்கே என் ஆசையில் மண்ணை வாரிப் போடுவதுபோல் குழி விழுந்த கன்னம், முழுக்க நரைத்த தலை, பற்கள் யாவும் விழுந்து வாய் பொக்குவாயாகக் காட்சியளிக்க. கன்னத்தின் தோல்கள் சுருங்கிய ஒரு கிழவி தெருவால் போய்க்கொண்டிருந்தாள்.

அதைக் கண்டதும் என் நண்பன் மீது எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அதனால் நண்பனைப் பார்த்து ‘வடிவான குமர் என்று சொன்னாய்…’ என்றேன்.

உடனே அவன் என்னைப் பார்த்து ‘ஆர் மச்சான் இல்லை யெண்டு சொன்னது இருபத்தைந்து வருஷத்திற்கு முன்னால நல்ல வடிவான குமர் மச்சான்’ என்றான்.

அந்த வார்த்தையைக் கேட்டதும் எனக்குச் சிரிப்புத் தாங்கவே முடியவில்லை. இருவரும் சேர்ந்து சிரித்துக்கொண்டோம்.

அப்பொழுது அவ்வீதியால் ஊதிப் பருத்த கோயில் யானையின் தோற்றத்தையொத்த , எதிர் வீட்டுக்கார மொட்டைத் தலையர் மௌனகுருவின் பொண்டில் நடையலங்காரம் சொர்ணலெட்சுமி ஆடியசைந்து வந்து கொண்டிருந்தாள்.

வீதி வழியால் வந்த அந்தக் கிழவியும் நடையலங்காரம் சொர்ணலெட்சுமியும் எங்கள் வீட்டு வாசலில் சந்தித்துக்கொண்டார்கள்.

கள்ளப் பெட்டிசன் போடுவது, ஓட்டுக் கேட்பது கதை கட்டுவது இவையெல்லாம் எமக்குக் கைவந்த கலையாச்சே!

எனவே நானும் எனது நண்பனும், இரு பெண்களும் என்ன கதைக்கிறார்கள் என்று கேட்போம் என்ற நோக்கில் மெதுவாக மதிலின் பின்னால் ஒளிந்து கொண்டோம்.

ஆனாலும் ஓட்டுக் கதை கேட்பவர்கள் மறுபிறவியில் பாம்பாகப் பிறப்பார்கள் என்ற பழைய கதையை நினைக்க மனம் சற்றுத் தடுமாறியது.

அப்பொழுது அவர்களின் சம்பாஷனை மிகத் தெளிவாகக் கேட்டது .

‘அடியே சொர்ணம்! என்ன கனநாளைக்குப் பிறகு. எப்படி சுகமாக இருக்கிறாயே? ஒவ்வொரு நாளும் பின்னல் பின்னி, பின்னலில் கனகாம்பரம் வைத்துக் கலகலப்பாக இருக்கிற நீ என்ன இண்டைக்கு ஒருமாதிரியான டிஸ்கோக் கொண்டை கட்டியிருக்கிறாய்!’ என்றாள் கிழவி.

இதைக் கேட்ட நடையலங்காரம் சொர்ணலெட்சுமி தொடர்ந்தாள்.

‘அதை ஏன் கேட்பான் கனகம்! இரவு முழுக்க அவரோட சரியான சண்டை ! அந்தக் கோபத்தில் அவர் காலை கணவரின் சட்டைப்பைக்குள் இருந்த சில்லறைகள் எல்லாவற்றையும் வறுகி எடுத்தாள்.

அவளது செய்கையைக் கண்ட மெளனகுரு தெருவென்றும் பாராமல் ‘எண்ட சொர்ணம்’ என்று கூறி மனைவியைக் கட்டியணைத்துக் கொண்டார்.

சொர்ணத்திற்கோ தலை பின்னுவதற்கு, சமைப்பதற்கு இலகுவாகப் போய்விட்டது என்ற மகிழ்ச்சியில் கணவனின் மொட்டையை மெதுவாக தடவி விட்டாள்.

சிறிது நேரத்தின் பின்னர் இருவரும் புதுமணத் தம்பதிகளாக அவர்களது வளவிற்குள் நடந்து சென்றனர்.

இவை எல்லாவற்றையும் கண் இமை வெட்டாமல் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த எனக்கு அகலம் 4 அடி அழகுக் கூந்தல் பேப்பருக்கு கதை எழுதுவதற்கு நல்லதோர் நகைச்சுவை கிடைத்து விட்டது என்ற சந்தோஷத்தில் வீட்டுக்குள் ஓடிச்சென்று மேசை மேலிருந்த வானொலிப் பெட்டியைத் திருகுகிறேன்.

கறகறவென்று கர்நாடக சங்கீதம் பாடிக் கொண்டிருந்த வானொலி வலு ‘கிளியராக’ ‘நடையலங்காரம் நாட்டிய மப்பா’ என்ற பாடலின் ‘ஆள் 7 அடி கன்னிப் பெண்ணே கேளடி…’ என்ற வரிகளை ஒலிபரப்பிக் கொண்டேயிருந்தது.

– ஓ. கே.குணநாதன் நகைச்சுவை கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1993, ப்ரியா பிரசுரம், மட்டக்களப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *