தீராத விளையாட்டு பிள்ளை கண்ணன்…

 

மூனு வருஷம் எட்டாம் வகுப்பில் பெயில் ஆன கண்ணன் இப்போது மறுபடியும் அதே பள்ளி கூடத்தில் சேர்ந்து எட்டாவதே படித்து வந்தான்.

எப்போதும் வகுப்புக்கு வரும் வாத்தியார்களை கிண்டல் செய்வதே அவன் வேலை. அவன் படித்து வந்தது பள்ள்க் கூடத்தில் பெண்களும்,பையன்களும் படித்து வந்தார்கள்.

அன்று சரித்திர பாடம் நடத்தும் விக்கிரம பாண்டியன் வகுப்பில் நுழைந்தார். அவர் பேருக்கு ஏற்றார் போல் ரொம்பவும் கர்ஜனைக் குரலுடன் பாடத்தை நடத்துவார். சரித்திர பாட புத்தகத்தை எடுத்து பிரித்து கஜ்னி முகம்மது படை எடுப்பை பத்தி விவரிக்க ஆரம்பித்தார்.வகுப்பின் கடைசி ‘பென்ச்சில்’ உட்கார்ந்துக் கொண்டு இருந்தான் கண்ணன்.

அந்த ‘பென்ச்சு’ பள்ளிக் கூட விளையாட்டு மைதானத் தை ஒட்டி இருந்தது. ஜன்னல் ஓரத் தில் நிறைய நாய்கள் குரைத்துக் கொண்டு இருந்தது.வாத்தியார் நடத்திய பாடம் கண்ணன் காதில் சுத்தமாக விழவே இல்லை.உடனே அவன் எழுந்து நின்றுக் கொண்டு “சார், இங்கே நிறைய நாய்ங்க குரைச்சுக் கிட்டு இருக்கு. நீங்க நடத்தற பாடம் என் காதிலெ விழலே.கொஞ்ச நேரம் கழிச்சு பாடம் நடந்துங்க சார்”என்று கத்தி சொன்னான்.

‘பரவாயிலையே.மூனு வருஷம் பெயில் ஆகி இருந்தும் சரித்திர பாடத்திலெ இவ்வளவு அக்க றை காட்டறானே இந்த கண்னன் ’என்று நினைத்து சரித்திர வாத்தியார் ரொம்ப ரொம்ப சந்தோஷப் பட்டார். அவர் பாடம் நடத்துவதை நிறுத்தினார்.

ஐஞ்சு நிமிஷம் கழித்து கண்ணன் மறுபடியும் எழுந்து நின்றுக் கொண்டு “சார்,அந்த நாய்ங்க குரைக்கிறது நின்னுப் போச்சு.நீங்க ஆரம்பியுங்க”என்று சொன்னதும் வகுப்பில் இருந்த எல்லா மாணவர்களும்,மாணவிகளும் ‘கொல்’ என்று சிரித்தார்கள்.

சரித்திர வாத்தியார் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

அடுத்த வகுப்பு ஆரம்பிப்பதற்குள் கண்ணன் முதல் ‘பென்ச்சி’ல் உட்கார்ந்துக் கொண்டு இரு ந்த ஒரு சின்ன பையனை கடைசி ‘பென்ச்சு’க்குப் போக சொல்லி விட்டு அவன் முன் ‘பென்ச்சி’ல் வந்து உட்கார்ந்துக் கொண்டான்.

தமிழ் வாத்தியார் தமிழ்மணி வகுப்பில் நுழைத்தார்.அவர் நுழைந்ததும் கண்ணன் உரக்க சிரிக்க ஆரம்பித்தான்.விடாமல் சிரித்துக் கொண்டு இருந்த கண்ணனைப் பார்த்து தன் பொறுமையை இழந்த தமிழ்மணி “என்ன கண்ணன், நீ இப்படி விடாம சிரிச்சுக் கிட்டு இருக்கே,உனக்கு என்ன பயித்தியமா பிடிச்சி இருக்கு”என்று கத்தினார்.

உடனே கண்ணன் எழுந்து நின்றுக் கொண்டு “ஐயா,நீங்க தானே போன வகுப்பிலே “இடுக்கண் வருங்கால் நகுக”ன்னு சொன்னீங்க.அதான் நான் சிரிச்சுக் கிட்டு இருக்கேன்”என்று பதில் சொன்னதும் வகுப்பு மாணவர்களும் மாணவிகளும் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

தமிழ வாத்தியார் முகத்தில் ஒரூ கிலோ எண்ணெய் வழிந்தது.

மத்தியான வகுப்பு நடத்த வந்த ஆங்கில வாத்தியார் டேவிட் வகுப்பில் நுழைந்து அவர் தன் ஆங்கில புத்தகத்தை எடுத்து பாடம் நடத்த ஆரம்பித்தார்.உடனே கண்ணன் எழுந்து நின்றுக் கொண்டு “சார்,எனக்கு ஒரு சந்தேகம்.இந்த K sound வர நாம K வை use பண்றோம்.உதாரணமா Kettle,Keep,Kite, Kennel, Kick,போன்ற வார்த்தைகள்.

ஆனால் Cat, Catch, Couple, Canteen, Caught,போன்ற வார்த்தைகளும் அந்த K சத்தத்தை தானே தருது சார்.C சத்தம் தானே தரனும். அது ஏன் சார்?என்று கேட்டதும் அந்த இங்கிலிஷ் வாத்தியார் “உக்காருடா அதிகப் பிரசங்கி நீ ஒரு ‘இடியட்’’” என்று கோவத்தில் கத்தினார்.

மத்தியானம் ‘நீதி போதனை’ வகுப்பு வந்தது.

அந்த ‘நீதி போதனை’ வாத்தியார் நிறைய நல்ல பண்புகளை சொல்லிக் கொண்டு வரும் போது அவர் சொல்வதைக் கவனிக்காமல் சில் மாணவர்கள் பக்கத்தில் இருந்த சில மாணவிகளைக் கிண்டல் பண்ணிக் கொண்டு இருந்தார்கள்.இதை அந்த ‘நீதி போதனை’ வாத்தியார் கவனித்தார்.

அவர் உடனே “மாணவர்களே நீங்க உங்க கூட படிக்கற மாணவிகளை கலாட்டா பண்ணாம ஒரு ‘சிஸ்டரை’ போல பாவிக்கணும்.அப்போது தான் உங்க மனசிலே எந்த வித கெட்ட எண்ணமும் வராது” என்று சொன்னதும் கலாட்டா பண்ணிக் கொண்டு இருந்த மாணவர்கள் கலாட்டா பண்ணு வதை நிறுத்தி விட்டு பாடத்தை கவனிக்க அரம்பித்தார்கள்.
வாத்தியார் சொல்லி ஒரு நிமிஷம் கூட ஆகி இருக்காது,கண்னன் உடனே எழுந்து “சார்,எங்க மாமா ஒரு டாக்டர்.ஆனா அவர் கூட வேலை செஞ்சி வந்த ‘சிஸ்டரை’ தான் காதலிச்சு கல்யாணம் கட்டி கிட்டு இருக்கார்.அது சரியா சார்“ என்று கேட்டதும் “உக்காருடா,அதிகப் பிசங்கி பயலே” என்று கத்தினார் அந்த ‘நீ போதனை’ வாத்தியார்.

அடுத்த வகுப்பு கணக்கு வாத்தியாருடையது, அவர் வந்தவுடன் லாப நஷ்ட கணக்கில் சில கணக்குகளை போட ஆரம்பிச்சார்.”ஒரு வியபாரி ஐந்து கிலோ நல்ல அரிசியை ஐனுரு ரூபாய்க்கு வாங்கினார்.கூடவே பத்து கிலோ மட்ட அரிசி நூறு ரூபய்க்கு வாங்கினர்.ரெண்டு அரிசியையும் ஒன்றாக கலந்து விட்டார்.இப்போது அவர் கிட்டே மொத் தம் இருபது கிலோ அரிசி இருந்தது.அவருக்கு நூறு ரூபாய் லாபம் வரணும்ன்னா,அவர் ஒரு கிலோ அரிசியை என விலைக்கு விக்கணும்” என்று சொன்னதும் எல்லா மாணவர்களும், மாணவிகளும் கணக்கு போட ஆரம்பித்தார்கள்.

ஆனால் மணி மட்டும் கணக்கு போடாமல் எழுந்து நின்றுக் கொண்டு “சார்,அவருக்கு லாபம் வருதோ,இல்லையோ.நிச்சியமா போலீஸ் வந்து ‘நீங்க கலப்பு வியாபாரம் பண்றீங்க’ன்னு சொல்லி அவரைப் பிடிச்சு கிட்டு போய்,கம்பி எண்ண வச்சுடுவாங்க” என்று சொன்னதும் வகுப்பில் இருந்த எல்லா மாணவர்களும்,மாணவிகளும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.கணக்கு வாத்தியாருக்கு கோவம் வந்து “உக்காருடா முட்டாப் பயலே” என்று கத்தினார்.

அடுத்த வகுப்பு பூகோளம்.

அவர் வகுப்பில் நுழைந்ததும் தன் அலமாரியைத் திறந்து பூமியின் உருண்டை வடிவம் கொண் ட ஒரு ‘ஸ்டாண்டை’எடுத்து மேஜை மேல் வைத்து விட்டு,தன் பூகோள புத்தகத்தைத் திறந்து பாடத் தை நடத்த ஆரம்பித்தார்.

உடனே மணி எழுந்து நின்றுக் கொண்டு “சார்.எனக்கு ஒரு சந்தேகம்” என்று கேட்டதும் “நீ இந்த எட்டாம் வகுப்பிலே மூனு வருஷமா படிச்சுக் கிட்டு வறே.உனக்கு இப்ப என்ன புது சந்தேகம்” என்று கோவமாகக் கேட்டார்.

உடனே மணி “சார்,நீங்க இந்த பூமி உருண்டையானதுன்னு காட்ட அந்த பூமியின் ‘ஸ்டாண்டை’ வச்சு இருக்கீங்க.ஆனா ‘அட்லஸ்’லே பாத்தா,பூமி தட்டை போல காட்டுதே.உங்க’ஸ்டாண்ட்’ சரியா,இல்லே ‘அட்லஸ்’ சரியா”என்று கேட்டதும் எல்லா மாணவர்களும் மாணவிகளும் சிரிக்க ஆரம் பித்து விட்டார்கள்.அந்த பூகோள வாத்தியார் கோவப் பட்டு “ரெண்டும் சரி தாண்டா மணி,நீ தான் சரி இல்லை.நீ உருப்படவே மாட்டேடா” என்று கத்தி விட்டு தன் பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.

கடைசி வகுப்பு ‘சயன்ஸ்’வகுப்பு.

‘சயன்ஸ்’ வாத்தியார் வகுப்பில் நுழைத்தார்.தன் சீட்டில் ரெண்டு நிமிஷம் உட்கார்ந்துக் கொண்டு இருந்து விட்டு ‘சயன்ஸ்’ புத்தகத்தை திறந்து வைத்துக் கொண்டு பாடம் நடத்த ஆரம் பித்தார்.அவர் நேற்று பாடம் நடத்தும் போது தண்ணீரின் குணாதியத்தை விளக்கும் போது ”தண்ணீருக்கு நல்ல அடர்த்தி உண்டு.அடர்த்தி குறைவான ‘கட்டையை’ மூழ்க விடாமல் மிதக்க வைக்கும்.அதுவே இரும்பு போன்ற அடர்த்தி அதிகமான பொருள்களை மிதக்க விடாமல் மூழ்க வைத்து விடும்”என்று சொல்லி இருந்தார்.

அவர் அடுத்த பாடத்தின் ஒரு வரியைக் கூட சொல்லி இருக்க மாட்டார் கண்ணன் எழுந்து நின்றுக் கொண்டு “சார்,நீ போன வகுப்பிலே ‘தண்ணீருக்கு நல்ல அடர்த்தி உண்டு. அதனால் அடர்த்தி குறைவான ‘கட்டையை’ மூழ்க விடாமல் மிதக்க வைக்கும்.அதுவே இரும்பு போன்ற உலோகங்ளுக்கு அடர்த்தி அதிகமாக இருப்பதால் அந்த பொறுள்களை மிதக்க விடாமல் மூழ்க வைத்து விடும்’ ன்னு சொன்னீங்க.பொ¢ய பொ¢ய கப்பல்கள எல்லாம் இரும்பிலே தானே செஞ்சு இருக்காங்க.அந்த கப்பல்கள் எல்லாம் மூழ்கி விடாம மிதக்குதே.அது எப்படி சார்” என்று கேட்டதும் எல்லா மாணவர்களும் மாணவிகளும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

“நீ ஒரு மூட்டாப் பயல்டா கண்ணன்.நான் சொல்லிக் குடுத்ததை நீ சரியா புரிஞ்சிக்கலே.மத்த 39 பெரும் சரியா புரிஞ்சுக் கிட்டு இருக்காங்க.அவங்களுக்கு நீ கேட்ட மாதிரி சந்தேகமே வறாது. இனிமே என் வகுப்பிலே நீ ஒரு சந்தேகமும் கேக்காதே.உக்காருடா” என்று கத்திச் சொல்லி விட்டு பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.
கண்ணன் என்கிற பேரை வைத்தால் விளையாட்டுத் தனம் தானா?

“தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன்,தெருவில் பெண்களுக்கு ஓயாத தொல்லை” என்கிற பாடல் ஏற்ப “”இந்த எட்டாம் வகுப்பில் மூனு தடவை பெயில் ஆன கண்ணன்”” எல்லா வகுப்பு வாத்தியார்களுக்கும் ஓயாத தொல்லை கொடுத்து வருகிறானோ! 

தொடர்புடைய சிறுகதைகள்
1947 வருஷம் ஆகஸ்ட் 15 ம் தேதி வெள்ளையர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்தார்கள்.இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்ததும் நிறைய வெள்ளையர்கள் இந்தியாவை விட்டுக் கிளம்பி இங்கிலந்து சென்று விட்டார்கள். சில வெள்ளையர்கள் கொஞ்ச காலம் இந்தியாவில் இருந்து வந்தார்கள். அப்போது என்னுடைய அப்பா ஒரு தலைமை ...
மேலும் கதையை படிக்க...
கோபால் ரயில்வேயில் நடு நிலை குமாஸ்தாவாக வேலை செய்து வந்தார்.அதே ‘செக்ஷனில்’ அவரைப் போலவே குமாஸ்தாவாக வேலை செய்து வந்த சந்திரன். சந்திரனும்,கோபாலும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். கோபாலின் மணைவி மாலா மின்சார வாரியத்தில் வேலை செய்து வந்தாள்.அதே வாரியத்தில் வேலை செய்து வந்தாள் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம் - 1 | அத்தியாயம் - 2 | அத்தியாயம் - 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 ”நீங்க ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 டாக்டர் கூப்பிட்டதும் காயத்திரி கனேசனை அழைத்துக் கொண்டு டாக்டர் ரூமுக்குள் போய் எல்லா ‘ரிசல்ட்டுகளை’ டாக்டா¢டம் கொடுத்தாள். டாக்டர் எல்லா ‘ரிசல்ட்டுக¨ளையும்’ வாங்கிப் பார்த்தார்.’ரிசல்ட்டுக¨ளை’ப் பார்க்கும் போது அவர் தன் நெற்றியை சுருக்கினார்.பிறகு டாக்டர் கணேசனை ...
மேலும் கதையை படிக்க...
நான் என் மணைவியுடனும், மருமகளுடனும் குமரன் சில்க் ‘·பேலஸ்க்கு’ புடவைகள் வாங்க மத்தியானம் மூணு மணிக்குக் கிளம்பி சுமார் மூனரை மணிக்கு கடைக்குப் போய் சேர்ந்தேன். என் மனைவியும் மருமகளும் அந்தக் கடையில் இருந்த எல்லா வித புடவைகளையும் பார்க்க ஆரம்பித்தார்கள். இவர்களுடன் கால் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-24 | அத்தியாயம்-25 | அத்தியாயம்-26 உடனே சாந்தா “செந்தாமரை எங்க வீட்டுக்கு வந்த வேளை ரெண்டு வருஷத்துக்குள்ளாற எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பொறந்துங்க.எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்ததுங்க” என்று சொன்னாள்.செந்தாமரை “நான் பத்தாவது வகுப்பு படிக்கிற பிள்ளைங்களை இட்டு கிட்டு ...
மேலும் கதையை படிக்க...
பீ. ஈ படிப்பு முடித்து விட்டு ‘இன்போஸிஸ்’ கம்பனியில் வேலை செய்து வந்தாள் வனஜா. அன்று தன் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது ரொம்ப ‘டயர்ட்டா’ இருந்த தால் ‘காபி டேயில்’ ஒரு காபி குடிக்க வந்து உட்கார்ந்தாள் வனஜா.எதிரே ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-19 | அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமை செந்தாமரை தன் வீட்டில் எல்லோரையும்,தாத்தாவையும், அழைத்துக் கொண்டு வடபழனி கோவிலுக்குப் போய் எல்லோர் முன்னிலையிலும் குருக்கள் மந்திரம் சொல்ல டேவிட் ராணிக்கு தாலி கட்டினான்.பிறகு செந்தாமரை எல்லோரையும் அழைத்துக் கொண்டு போய் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 ராமநாதனுக்கு பதினோரு வயது ஆனதும் ராமசாமியும் விமலாவும் அவனுக்கு ‘உபநயனம் போட முடிவு பண்ணினார்கள்.வாத்தியாரைக் கூப்பிட்டு ‘உபநயனத்துக்கு’ வேண்டிய எல்லா வைதீக சாமான்களையும் வாங்கிக் கொண்டு வரச் சொல்லி,கூடவே காலை ‘டிபனு’க்கும் மத்தியானம் ஒரு கல்யாண ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-13 | அத்தியாயம்-14 | அத்தியாயம்-15 ராதா ‘போன்’ பண்ண விஷயத்தை சாம்பசிவனிடம் ராமசாமி சொன்னதும்,சாம்பசிவன் தன் சக குருக்கள் இடமும்,கோவில் நிர்வாக மானேஜர் இடமும் சொல்லி விட்டு அப்பாவுடன் வீட்டுக்கு வந்தான். எல்லோரும் சாப்பிட்டு விட்டு ‘பஸ் ஸ்டாண்டு’க்கு வந்து ஒரு ‘மினி ...
மேலும் கதையை படிக்க...
What is Purat…Sanik…
நான் வாங்கிண்டு வந்த வரம்…
குழந்தை
தீர்ப்பு உங்கள் கையில்…
ஆண்டவன் படைப்பிலே….
சேற்றில் மலர்ந்த செந்தாமரை
அம்பை ஏய்தவன் எங்கோ…
சேற்றில் மலர்ந்த செந்தாமரை
ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…
அப்பா, நான் உள்ளே வரலாமா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)