திருட்டுப்போன நகை – ஒரு பக்க கதை

 

“ஏண்டி மங்களம், பக்கத்து வீட்டிலே ஒரே குதூகலமா இருக்காப்போலே இருக்கே! திருட்டுப் போன நகைகள் எல்லாம் ஒரு வேளை அகப்பட்டிருக்குமோ?” என்று என் சம்சாரத்தைக் கேட்டேன்.

அதற்கு அவள், “அப்படித்தான் தோண்றது. எதுக்கும், போய் விசாரிச்சுட்டு வாருங்களேன்!” என்று சொல்லவே, நான் உடனேயே பக்கத்து வீட்டுக்குச் சென்று நண்பர் ஐயாசாமியை விசாரித்தேன்.

அவர் என்னைத் தனியே மாடி அறைக்கு அழைத்துச் சென்று தாழ்ந்த குரலில், “திருட்டுப் போன நகைகள் ஒண்ணும் அகப்படவே இல்லை, சார்! போனது போனதுதான்!” என்று தெரிவித்துவிட்டு, “உங்களைச் சாப்பிடக் கூப்பிட நானே உங்க வீட்டுக்கு வரணும்னு நினைச்சிண்டிருந்தேன். நீங்களே வந்துட்டேள்! இன்னிக்கு என் பிறந்த நாள்! அதைக் கொண்டாடணும்னு என் சம்சாரம் ரொம்பவும் வற்புறுத்தினாள்” என்று தெரிவித்தார்.

எனக்குச் சிரிப்பு வந்தது. ஏனென்றால், நண்பருக்கும் அவர் சம்சாரத்துக்கும் அவ்வளவாக அந்நியோன்னிய பாவம் வெகு நாளாகவே இருந்து வரவில்லை என்பது எனக்குத் தெரியும் அப்படியிருக்க, அவருடைய பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று அவர் சம்சாரம் வற்புறுத்தினாள் என்று கேள்விப்படும் போது சிரிப்புத்தானே வரும்?

என் சிரிப்பைக் கவனித்த நண்பர், “நான் சொல்றது உண்மைதான் சார்! அவள் இப்போது அடியோடு மாறிவிட்டாள்!” என்றார்.

“எதனால்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“முன்பு அவளுக்கு என்மீது அவ்வளவு மதிப்போ அக்கறையோ இல்லாததற்கு, நகை நட்டுகள் முதலிய சகல பொருள்களும் அவளுக்கு நிறைய இருந்ததுதான் காரணம். ஏதாவது தேவையாக இருந்தாலல்லவா அதை வாங்கிக் கொடுத்துத் திருப்திப்படுத்தி, மேலும் மேலும் அவள் அன்பைப் பெறமுடியும்!”

“வாஸ்தவந்தான்!”

“ஆனா, இப்போ நிலைமை மாறிப்போயிடுத்து. மறுபடியும் நகை நட்டுகளை நான் வாங்கிக் கொடுக்கணுமோல்லியோ? அதற்காக, அவள் எங்கிட்டே ரொம்ப அன்பு செலுத்துகிறாள்! பாருங்களேன். என் பிறந்த நாளைக் கொண்டாடித்தான் ஆகணும்னு ஒரே பிடிவாதம் பிடிக்கிறாள்!”

“கேட்கிறதுக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு, சார்! ஆனால், ரொம்ப நஷ்டத்துக்கப்புறந்தான் இந்த மாதிரி சந்தோஷம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கு, இல்லையா?”

“நகைகள் திருட்டுப் போனதைத்தானே சொல்றேள்?”]

“ஆமாம்!”

“உங்களிடத்திலே உண்மையைச் சொல்றதிலே ஒண்ணும் தப்பு இல்லே. நகைகளை யாரும் வெளியிலேயிருந்து வந்து திருடிண்டு போகல்லே!”

“அப்படின்னா..?”

“நானேதான் ஒரு இடத்திலே மறைத்து வைத்திருக்கேன்! மனைவியினுடைய அன்பை மறு படியும் பெறுவதற்காக அதுமாதிரி செய்தேன்! எப்படி என் சூட்சுமம்?”

- ஆனந்த விகடனில் 40, 50 -களில் பல ஒரு பக்கக் கதைகளை எழுதியவர் ‘சசி’. ( இயற்பெயர்: எஸ்.ஆர்.வெங்கடராமன்). ‘ரமணி’ என்ற பெயரிலும் ‘திண்ணைப் பேச்சு’ கட்டுரைகளை எழுதினார். 14 வருடங்கள் விகடனில் உதவி ஆசிரியராய்ப் பணி புரிந்த ‘சசி’ 25 ஏப்ரல் 1956 இல் காலமானார். 

தொடர்புடைய சிறுகதைகள்
அன்புள்ள தங்கவேலு, பத்து வருஷங்களுக்குப் பிறகு உனக்கு லெட்டர் எழுதுகிறேன். இவ்வளவு காலமாக என்னிட மிருந்து ஒரு சேதியும் வராததைப் பற்றி நீ ஆச்சரியப்பட்டிருக்கலாம். சென்ற பத்து வருஷங்களாக நான் இந்தியாவிலேயே இல்லை. போலீஸ§க்குப் பயந்து, தலைமறை வாக ரங்கூனில் இருந்தேன். நேற்றுதான் ...
மேலும் கதையை படிக்க...
இப்படியும் நடக்குமா? –  ஒரு பக்க கதை
"யார் அது?" என்று அதட்டிய ஒரு குரலைக் கேட்டு நடராஜன் அப்படியே திடுக்கிட்டு நின்றான். சில விநாடிகளில், புதர்களுக்குப் பின் ஒளிந்திருந்த பத்து முரடர்கள் திடீர் என்று வெளியே வந்து, நடராஜனைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒவ்வொருத்தன் கையிலும் ஒரு பெரிய குண்டாந்தடி ...
மேலும் கதையை படிக்க...
பொங்கல் இனாம் !
"என்ன! பொங்கல் இனாமா? பொங்கல் இனாமும் இல்லே, மண்ணாங்கட்டியும் இல்லே... போ! வேற வேலையே கிடையாதுபோல இருக்கு உங்களுக்கெல்லாம்! ஒரு தம்பிடி கூடக் கொடுக்க மாட்டேன்! ஆமா! ஏன் நிற்கிறே இன்னம்? போக மாட்டே?" என்று நடேசய்யர் தம் பற்களை நறநறவென்று ...
மேலும் கதையை படிக்க...
குடியிருக்க ஓர் இடம் – ஒரு பக்க கதை
நான் குடியிருந்த வீட்டைக் காலி செய்யும்படி வீட்டுக்காரன் வெகு கண்டிப்பாகச் சொல்லி மூன்று மாதங்களுக்கு மேலாகியும், நான் வீட்டைக் காலி செய்யக்கூடவில்லை. வேறு வீடு கிடைத்தால் அல்லவா காலி செய்வதற்கு? நானும் எங்கெல்லாமோ தேடிப் பார்த்துவிட்டேன்; எங்கேயும் வீடு காலியாவதாகத் தெரியவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
தந்திரம் பலித்தது! – ஒரு பக்க கதை
திவான் பகதூர் குண்டப்பா அவர்களுக்கு, அகில இந்திய ஜோதிடப் புகழ் வேலுசாமி எழுதியது: என்னைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். ஒருவருக்கு வரப்போகும் கஷ்ட நஷ்டங்களை அவருடைய ஜாதகத்தைப் பார்த்து விவரமாக என்னால் தெரிவிக்கக் கூடும். அநேக பெரிய மனிதர்களிடமிருந்து நற்சாட்சிப் பத்திரங்கள் பெற்றிருக்கிறேன். தாங்கள் ...
மேலும் கதையை படிக்க...
பெயர் மாற்றம்! – ஒரு பக்க கதை
"யாரோ உங்களைப் பார்க்க வந்திருக்காங்க, ஸார்! மிஸ் இந்திராவாம்; வேலை வேணுமாம், நம்ம ஆபீஸில்" என்று பியூன் வந்து தெரிவித்ததும், மானேஜர் குண்டுராவ், "ஐயையோ! ஒரு தடவை அனுபவப்பட்டது போதும்! இனிமேல் நம்ம ஆபீஸில் எந்த ஸ்திரீயையும் வேலைக்கு வைத்துக் கொள்ள ...
மேலும் கதையை படிக்க...
குழந்தைக்கு நாமம் !
"கணேசய்யர்வாள், எனக்கென்னவோ உங்களிடத்திலே ஒரு அலாதியான மதிப்பு ஏற்பட்டுடுத்து, சார்!" இப்படி என்னிடம் வந்து சொன்னவர், எங்கள் ஆபீஸில் வேலை பார்த்து வந்த குமாஸ்தா குருசாமி. அவரோடு நான் பழகி யதே இல்லை என்றாலும், அவருக் குப் பணக் கஷ்டம் இருந்தது என்று ...
மேலும் கதையை படிக்க...
பயங்கர மனிதன்! – ஒரு பக்க கதை
"இந்தாருங்கோ, உங்களைத் தானே! இந்த க்ஷணமே பக்கத்து வீட்டுக்காரர் கிட்டே போய், அவர் சம்சாரம் பண்ற அக்கிரமத்தைப் பற்றிச் சொல்லிச் சண்டை போட்டுட்டு வாங்கோ! இல்லாத போனா இந்த வீட்டிலே என்னாலே அரை நிமிஷம்கூடக் குடித்தனம் பண்ண முடியாது!" என்று மங்களம் ...
மேலும் கதையை படிக்க...
புல்லிலிருந்து பால்! – ஒரு பக்க கதை
அந்த ஆசாமியிடம் எனக்கென்னவோ சந்தேகம்தான் முதலில் உண்டாயிற்று. 'சர்வ சாதாரணமாக எங்கே கண்டாலும் மண்டிக்கிடக்கும் புல்லிலிருந்து நல்ல பாலைத் தயாரிக்க முடியும்' என்று அந்த ஆசாமி சொல்லும்போது, எப்படிச் சந்தேகம் உண்டாகாமல் இருக்கும்? "அப்படி உங்களால் புல்லிலிருந்து பால் தயாரிக்கமுடியுமானால், இப்பொழுதே உணவு ...
மேலும் கதையை படிக்க...
ஜனவரி முதல் தேதியன்று என் புது டைரியில் நான் இரண்டொரு குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்த சமயம், "ஸார்" என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். கணேசய்யர்! வருஷ ஆரம்பத்தில் நண் பர்கள் ஒருவருக்கொருவர் ஆசி கூறும் சம்பிரதாயப் படி, "புது வருஷம் ...
மேலும் கதையை படிக்க...
எதிர்பாராதது ! – ஒரு பக்க கதை
இப்படியும் நடக்குமா? – ஒரு பக்க கதை
பொங்கல் இனாம் !
குடியிருக்க ஓர் இடம் – ஒரு பக்க கதை
தந்திரம் பலித்தது! – ஒரு பக்க கதை
பெயர் மாற்றம்! – ஒரு பக்க கதை
குழந்தைக்கு நாமம் !
பயங்கர மனிதன்! – ஒரு பக்க கதை
புல்லிலிருந்து பால்! – ஒரு பக்க கதை
புது வருஷத் தீர்மானம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)