நானும், ரகுவும் டெல்லியில் ஒரு ‘இன்டர்வியூ’வை முடித்துக் கொண்டு புது டில்லிக்குத் திரும்பிக் கொண்டு இருந்தோம்.’இன்டர்வியூ ஆசீஸை’ விட்டு வெளியே வந்து ஒரு ‘டாக்ஸி’யை கூபிட்டோம்.ஒரு வயசான ‘சர்தாஜி’ டிரைவர் எங்க எதிரில் வந்து நின்று நாங்க போக வேண்டிய இடத்தைக் கேட்டார்.நாங்க போக வேண்டிய இடத்தை சொன்னதும் அவர் ஒத்துக் கொண்டு மீட்ட ரைப் போட்டு விட்டு எங்களை ஏறச் சொன்னார்.
நாங்கள் எங்க பெட்டியை ‘டிக்கியில்’ வைத்து விட்டு டாக்ஸியில் ஏறிக் கொண்டோம்.
அந்த சர்தார்ஜி டாக்ஸியை ஓட்ட ஆரம்பித்தார்.
ரகு நிறைய ‘ஜோக் ‘சொல்லும் பேர்வழி.எப்போதும் ஏதாவது ஒரு ‘ஜோக்கை’ சொல்லிக் கொண்டு இருப்பான்.ரகு என்னைப் பார்த்து “சேகர், இந்த டிரைவர் சர்தாஜியைப் பாத்ததும் எனக்கு இந்த ‘சர்தார்ஜி’கள் பத்தின ஜோக்குகள் ஞாபகத்துக்கு வருது.நான் அந்த ‘ஜோக்குகளை’ உனக்கு தமிழில் சொல்றேன். அப்போது தான் டாக்சி ஓட்டும் ‘சர்தார்ஜி’க்கு நான் சொல்றது புரியாது” என்று சொல்லி முதல் ஜோக்கை சொன்னான்.
ஒரு ‘சர்தாஜி’ பெரியவர் ‘ட்ரெய்னில்’போய்க் கொண்டு இருந்தார்.அவருக்கு அவசரமாக ‘பாத் ரூம்’ போக வேண்டி இருந்தது.அவர் கொஞ்சம் வயசானவராக இருந்ததால், ஒரு ‘வெஸ்டர்ன் டாய்லெ ட்டை’த் தேடிப் போய் அதன் ‘டாய்லெட்’ கதவைத் திறந்தார்.உள்ளே ஒரு சர்தார்ஜி முகம் தெரியவே சட்டென்று ‘டாய்லெட்’ கதவை மூடி விட்டு தன் சீட்டுக்கு வந்து கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டு இருந்தார். மூணு நிமிஷம் ஆனதும் அந்த ‘சர்தாஜி’ பெரியவர் மறுபடியும் ‘பாத்ரூம்’ போய் ‘டாய்லெட்’ கதவை லேசாக திறந்துப் பார்த்தார்.மறுபடியும் ஒரு ‘சர்தார்ஜி’ முகம் தெரியவே வெறுப்புடன் தன் சீட்டுக்கு வந்து உட்கார்ந்துக் கொண்டார்.
கொஞ்ச நேரம் ஆனதும் அவருக்கு ‘பாத்ரூம்’ போக வேண்டிய அவசரம் இன்னும் அதிகமாகி வரவே,அவர் TTE சீட்டில் உட்கார்ந்துக் கொண்டு இருந்த TTE யிடம் “சார்,எனக்கு அவசரமா ‘பாத்ரூம்’ போக வேண்டி இருக்கு.ஆனா அந்த ‘வெஸ்டர்ன்’ டாய்லெட்டில் ஒரு ‘சர்தார்ஜி’ ரொம்ப நேரமா வெளியே வராம இருக்கார்.என்னால் ‘வெஸ்டர்ன் டாய்லெட்லை’ தான் உபயோகப் படுத்த முடியும். நீங்க அவரை கொஞ்சம் சீக்கிரமா வெளியே வரச் சொல்ல முடியுமா” என்று கேட்டதும் அந்த TTE “இதோ, நான் போய் அவரை சீக்கிரமா ‘டாய்லெட்டை’ விட்டு வெளியே வரச் சொல்றேன்” என்று சொல்லி விட்டு ‘வெஸ்டர்ன்’ டாய்லெட்டை’ லேசாக திறந்தார்.
அவருக்கு ஒரு TTE முகம் தெரிந்தது. போன TTE உடனே கதவை மூடி விட்டு ”கொஞ்சம் சீக்கிரமா வெளீயே வாங்க TTE. ஒரு ‘பாசஞ்சர்’ பாத்ரூம் போகணுமாம்.அவர் ஒரு பெரியவர். அவர் ‘வெஸ்டர்ன்’ பாத்ரூம் தான் வேண்டி இருக்கு. இந்த வண்டியிலே ஒரு ‘வெஸ்டர்ன் டாய்லெட்’ ரூம் தான் இருக்குன்னு உங்களுக்கு தெரியாதா” என்று சத்தம் போட்டு சொல்லி விட்டு,புகார் கொடுத்த ‘சர்தார்ஜி’ பாசஞ்சர் கிட்டே, ”நான் சத்தம் போ ட்டு சொல்லி இருக்கேன்.அந்த TTE சீக்கிரமா வெளியே வந்திடுவார்” என்று சொன்னதும் அந்த ‘சர்தாஜி’ பெரியவர் “நீங்க சத்தம் போட்டு சொன்னதே நான் கேட்டேன் சார்.ரொம்ப ‘தாங்க்ஸ்’ உங்களுக்கு”என்று சொல்லி விட்டு தன் சீட்டில் வந்து உட்கார்ந்துக் கொண்டார்.
சர்தாஜி அந்த ‘வெஸ்டரன் டாய்லெட்டை’ வச்ச கண் வாங்காம பார்த்துக் கொண்டு இருந்தார்.
TTE வேறே பெட்டிக்குப் போய் விட்டார்.
இதை எல்லாம் கவனித்துக் கொண்டு இருந்த வேறே ஒரு சாதாரண பாசஞ்சர் ‘வெஸ்டர்ன் டாய்லெட்டை’ திறந்தார்.உள்ளே யாரும் இல்லே.
உடனே அந்த பாசஞ்சர் ‘வெஸ்டர்ன் டாய்லெட்டை’ நன்றாக திறந்து வைத்துக் கொண்டு அந்த ‘சர்தாஜி’ பெரியவரை கூப்பிட்டு “நீங்க ‘டாய்லெட்டுக்கு’ போங்க. உள்ளே யாரும் இல்லையே” என்று சொன்னதும் அந்த ‘சர்தார்ஜி’ பெரியவர் வேகமாக ‘டாய் லெட்’டுக்குள் போய்,அவர் ‘வேலை யை’ முடித்துக் கொண்டு “அப்பாடா” என்று சொல்லிக் கொண்டே தன் சீட்டில் வந்து உட்கார்ந்துக் கொண்டு, தன்னை கூப்பிட்டு சொன்ன பாசஞ்சர் கிட்டே ”உங்களுக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’. நான் அந்த ‘டாய்லெட்டை’யே பாத்து கிட்டே இருந்தேனே.அந்த TTE வெளியே வரவே இல்லையே.எப்படி அந்த TTE ‘டாய்லெட்டை’ விட்டு வெளியே போய் இருப்பார்.மாயமா இருக்கு இல்லை” என்று ஒரு சின்ன குழந்தையைப் போல கேட்டார்.
அந்த சாதாரண பாசஞ்சர் அந்த ‘சர்தாஜி’ பெரியவரை பார்த்து “பெரியவரே, இதிலே ஒரு மாயமும் இல்லே.மந்திரமும் இல்லே. நீங்க ‘டாய்லெட்’ போனப்ப, உங்க மூஞ்சியே ‘டாய்லெட் கண்ணாடிலே பாத்துட்டு, ஒரு சர்தார்ஜி இருக்கார்ன்னு நினைச்சு வந்து உக்காந்துட்டீங்க. அதே போல அந்த TTE யும் ‘டாய்லெட்’ கண்ணாடிலே அவர் மூஞ்சியே பாத்துட்டு, ஒரு TTE இருக்கார்ன்னு சொன்னாரு. ஆனா உண்மையிலே ‘டாய்லெட்லே’ யாரும் இல்லே” என்று சொன்னதும் அந்த ‘சர்தாஜி’ பெரியவர் அவரும், TTE யும் செய்த தவறை எண்ணி வெட்கப் பட்டுக் கொண்டு இருந்தார்.
ஜோக்கை சொல்லி விட்டு ரகு டிரைவர் ‘சர்தார்ஜி’யை டாக்ஸி கண்ணாடிலே பார்த்தான்.
அந்த டிரைவர் முகத்திலே எந்த வித சலனமும் இல்லே.”நல்ல வேளே,இந்த டிரைவர் ‘சர்தார்ஜி’ க்கு தமிழ் தெரியலே” என்று ரகு சொல்லி விட்டு “நான் இன்னும் ஒரு ஜோக்கை சொல்றேன்” என்று சொல்லி விட்டு அடுத்த ஜோக்கை சொல்ல ஆரம்பித்தான்.
“ஒரு தடவை பிரதமர் ஜவஹர்லால் நேரு,அவருடைய வெளி நாட்டு உறவு மந்திரி சர்தார் ஸ்வ ரண் சிங்கை அழைச்சு கிட்டுப் கொண்டு இங்கிலாந்து நாட்டுக்குப் போனார். அங்கே அவங்க ரெண்டு பேருக்கும் ‘பக்கிகாம் மாளிகையில்’ ரெண்டு நாள் ‘மீட்டிங்க்’ இருந்திச்சு. காலை பத்து மணிக்கு ரெண்டு பேரும் ‘ப்ரேக் பாஸ்ட்டை’ முடிச்சுக் கிட்டு ‘மீட்டிங்க்’ ஹாலுக்குப் போனாங்க. நேருவுக்கு ஏதோ ஒரு ‘துர்நாத்தம்’ வந்தது. ’இது பக்கிகாம் மாளிகையாச்சே’, இங்கே இந்த மாதிரி ‘துர்நாத்தம்’ எல்லாம் வராதே’ என்று சந்தேகப் பட்டுக் கிட்டு இருக்கும் போது, மீட்டிங்குக்கு வந்து இருந்த எல்லோரும் நேருவையும் ஸ்வரண் சிங்கையும் பார்த்துக் கிட்டு இருந்தாங்களாம். உடனே நேரு ஸ்வரண் சிங்கைப் பாத்து மெதுவாக ‘நீ உன் பழைய சாக்ஸையே போட்டு கிட்டு வந்து இருக்கயா’ன்னு கேட்டாராம். உடனே ஸ்வரண் சிங்க் ‘ஆமாம் சார்’ ன்னு மெதுவா பதில் சொன்னாராம். நேருவுக்கு ‘துர்நாத்தம்’ எப்படி வந்து இருக்குன்னு புரிஞ்சிடுச்சி. அவர் ‘மீட்டிங்க்’ முடிச்சி ரூமுக்கு வந்ததும் ஸ்வரண் சிங்கை ப் பாத்து ‘நாளைக்கு நீங்க ஒரு புது ‘சாக்ஸ்’ போட்டு கிட்டு வாங்க. நீங்க போட்டுக் கிட்டு இருந்த பழைய ‘சாக்ஸ்’ ரொம்ப நாறுது.’மீட்டிங்கு’க்கு வந்து இருந்த எல்லாரும் நம்மையே பாத்துக்கிட்டு இருந்தாங்க’ன்னு சொன்னதும், ஸ்வரண் சிங்க் ‘சரி சார், நான் நாளைக்கு மறக்காம ஒரு புது ‘சாக்ஸ்’ போட்டு கிட்டு வறேன்’ ன்னு பதில் சொன்னாராம்” என்று சொல்லி விட்டு டிரைவர் சர்தார்ஜியைப் பார்த்தான்.
முன்னம் போலவே அவர் முகத்தில் ஒரு சலனமும் இல்லை.
அவர் டாக்ஸியை ஓட்டிக் கொண்டு இருந்தார்.ஒரு நிம்மதி பெரு மூச்சு விட்டு விட்டு ரகு ஜோக்கைத் தொடர்ந்தான்.
“ரெண்டு பேரும் முதல் நாள் போலவே ‘ப்ரேக் பாஸ்ட்டை’ முடிச்சிக் கிட்டு ‘பக்கிகாம் மாளிகை’க்கு ‘மீட்டிங்கு’க்கு போனாங்களாம். இன்னைக்கும் நேருவுக்கு நேத்து வந்த அதே ‘துர்நாத்தம்’ வந்து கிட்டு இருந்ததாம்.அ வர் ஸ்வரண் சிங்கைப் பாத்து மெதுவா ‘நீங்க உங்க ‘சாக்ஸை’ மாத்த லையா. பழைய ‘சாக்ஸை’யே போட்டு கிட்டு இருக்கீங்களா’ ன்னு கேட்டராம். உடனே ஸ்வரண் சிங்க் ‘நான் புது ‘சாக்ஸ்’ தான் போட்டு கிட்டு வந்து இருக்கேன்’ னு பதில் சொன்னாராம். நேருவுக்கு அவர் மேலே சந்தேகம் வந்து மறுபடியும் அவரை கேட்டாராம். அவர் உடனே ஞாபகம் வந்தவறாக ‘நான் புது ‘சாக்ஸ்’ தான் போட்டு கிட்டு வந்து இருக்கேன்.ஆனா அந்த பழைய ‘சாக்ஸை’ ஜாக்கிறதையா என் ‘பாண்ட் பாக்கெட்டி’லே வச்சுக்கிட்டு இருக்கேன்’ என்று சொன்னதும், நேரு எல்லாம் புரிஞ்சிடுச்சி. அவர் தன் மனதில் ‘கர்மம்’’கர்மம்’ ன்னு சொல்லிகிட்டு ‘மீட்டிங்கை’ முடிச்சிக் கிட்டு வருத்தப்பட்டு கிட்டே ரூமுக்கு வந்தாராம்” என்று சொன்னதும் எனக்கு சிரிப்பு தாங்காம நான் சிரிச்சுக் கிட்டு இருந்தேன்.
கொஞ்ச நேரம் ஆனதும் ரகு ”சேகர்,நாக்பூர் ‘ஜன்ஷன்லே’ அனேகமா எல்லா நாளும் சென்னைக்குப் போகும் GT துரித வண்டியும், டில்லிக்குப் போகும் GT துரித வண்டியும், மத்தியானம் மூனறை மணிக்கு எதிர் எதிர் ‘பிளாட்பாரத்திலே’ வந்து நிக்கும்.
ரெண்டு துரித வண்டிக்கும் ஒரே மாதிரி தான் ‘பெயிண்ட்’ அடித்து இருக்கும்.
முதல் வகுப்பிலே டில்லிப் போய்க் கொண்டு இருந்த ஒரு சர்தார்ஜி தன் ‘அப்பர் பர்த்லே’ கீழே இறங்கி எதிரே இருந்த “டீ ஸ்டாலுக்கு” ‘டீ’ குடிக்கப் போனார். அவர் போன பக்கம் ரொம்ப கூட்டம அதிகமா இருக்கவே அவர் உடனே எதிர் பக்கம் போனார். அப்போது தான் அங்கே ‘டீ’ போட்டுக் கிட்டு இருந்தவர்,’ டீ’ தூள் தீந்துப் போகவே உள்ளே போயிட்டார். ’இங்கே ரொம்ப நேரம் ஆகலாம்’ன் னு நினைச்சி அந்த சர்தார்ஜி முன்னே இருந்த பக்கமே வந்தார்.இந்த பக்கமும் இன்னும் கூட்டமாவே இருந்தது. இதற்குள் எதிர் பக்கம் இருந்த ‘டீ’ போடும் ஆள் ‘டீ’ தூளை,எடுத்து கிட்டு வரவே,சர்தார்ஜி மறுபடியும் அந்தப் பக்கம் ‘டீ’ குடிக்க ஓடினாராம். அங்கேயும் கூட்டமாவே இருந்தது. கோவம் வந்து சர்தார்ஜி அந்த ஆளைப் பார்த்து சத்தம் போட்டு,ஒரு வழியாக ஒரு கப் ‘டீ’ வாங்கி கிட்டாராம்.
பாதி ‘டீ’ குடிச்சுக் கிட்டு இருக்கும் போது ரெண்டு வண்டியும் கிளம்பவே சர்தார்ஜி பாதி குடிச்ச ‘டீ’ கப்பை ‘ஸ்டால்லே’ வச்சுட்டு வந்து,இந்த பக்கமும் அந்தப் பக்கமும் பாத்து விட்டு,அவருக்கு எதிரே முதல் வகுப்பில் போய் காலியாயக இருந்த ஒரு ‘அப்பர் பர்திலே’ ஏறிக் கிட்டாராம்.
‘அப்பாடா’ன்னு மூச்சு விட்டுட்டு கொஞ்ச நேரம் கழிச்சு கீழே இருந்த ‘பெர்த்தை’ப் பாத்தாராம். முதல்லே இருந்தவர் இல்லே. உடனே இந்த் சர்தார்ஜி ‘முன்னே இருந்தவர் நாக்பூரிலே இறங்கிட்டார் போல் இருக்கு. புதுசா ஏறி இருக்கிற இவர் நாக்பூர்லே ஏறி இருக்கார்’ன்னு நினைச்சிக் கிட்டு இருக்கும் போது கீழ் ‘பெர்த்தில்’ இருந்தவர் தன் மனைவி இடம் எதோ தமிழில் பேசி கிட்டு இருந்தாராம். ’சரி இவரை விசாரிப்போம்’ன்னு நினைச்சு’ “நீங்க டில்லிக்கு ‘பிஸின்ஸ் விஷயமா போறீங்களா, இல்லே டில்லியை சுத்திப் பாக்க போறீங்களா’ என்று இங்கிலிஷில் கேட்டாராம்.
அவர் உடனே ‘நான் சென்னைக்குப் போய் கிட்டு இருக்கேன்’ன்னு சொன்னதும் இந்த சர்தார்ஜி கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு ‘ரயில்வே இப்போ எவ்வளவு முன்னேறி இருக்கு பாருங்க.’ அப்பர் பெர்த்’லே போற நான் டில்லிக்கு போய் கிட்டு இருக்கேன்.’லோயர் பெர்த்’லெ போய்க் கிட்டு இருக்கிற நீங்க சென்னைக்குப் போய் கிட்டு இருக்கீங்க’ என்று சொல்லி ஆச்சரியப்பட்டாராம்.
கீழே இருந்தவர் ‘இந்த சர்தார்ஜி நாக்பூர்லே கவனிக்காம சென்னைக்குப் போற GTயிலே ஏறி விட்டார் போல இருக்கு’ என்று நினைத்து அந்த சர்தார்ஜியைப் பாத்து “சார், இந்த GT சென்னைக்கு போற வண்டி.நீங்க நாக்பூர்லே தப்பா இந்த வண்டிலே ஏறி விட்டு இருக்கீங்க’ன்னு சொன்னாராம்.
உடனே அந்த சர்தாஜி ‘அப்பர் பெர்த்தை’ விட்டு வேகமாக கீழே இறங்கி அவர் வைத்து இருந்த பெட்டியைத் தேடினாராம்.அவர் பெட்டி அங்கு இல்லை.காலியாக இருந்ததாம். உடனே அந்த சர்தார்ஜி தன் தலையிலே கையை வச்சுகிட்டு ‘இப்போ நான் என்ன பண்றது’ன்னு சொல்லி அழ ஆரம்பிச்சிட்டாராம்” என்று சொல்லி முடித்ததும், நான் விழுந்து விழுந்து சிரித்தேன்.
கொஞ்ச நேரம் ஆனதும் அடுத்த நாள் நாங்கள் டில்லியில் பார்க்க வேண்டிய இடங்களை பற்றி பேசிக் கொண்டு வந்தோம்.
புது டில்லி ’ஸ்டேஷன்’ வந்தவுடனே அந்த ‘சர்தாஜி’ டாகிஸியை நிறுத்தி ‘டிக்கியை’த் திறந் தார்.எங்க பெட்டியை எடுத்துக் கொண்டு, நாங்க மீட்டர் காட்டின பணத்தை அந்த சர்தாஜி டிரைவரிடம் கொடுத்தோம்.
டாக்ஸியை விட்டு இறங்கி வெளியே வந்தோம்.
ரகு “போகலாமா சேகர்” என்று கேட்ட அடுத்த நிமிஷமே மூனு தமிழ் பிச்சைக்காரரகள் எங்க கிட்டே ஓடி வந்து “சார்,கொஞ்சம் பணம் போடுங்க.நாங்க சாப்பிட்டு நாலு நாள் ஆவுது” என்று பிச்சைக் கேட்டார்கள்.
நாங்களும் அவர்களுக்கு கொஞ்சம் பணம் போட்டோம்.
நாங்க கிளம்ப ஆரம்பித்தபோது அந்த ‘சர்தார்ஜி’ டிரைவர் எங்களை கூப்பிட்டு சுத்தமான தமிழிலே “தம்பி நீ சொன்ன ‘சர்தார்ஜி’ ஜோக்குகளை எல்லாம் நான் கேட்டேன். ’சர்தார்ஜிங்க’ முட்டாள்களா இருக்கலாம். நான் இல்லேன்னு சொல்லலே.ஆனா ஒரு ‘சர்தாஜி’ கூட உங்க ஜாதிக் காரங்க போல பிச்சை எடுத்து சாப்பிடவே மாட்டாங்க. ஏதாவது வேலை செஞ்சு வந்து அதில் வர பணத்திலே தான் சாப்பிடுவாங்க. நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு டில்லியே சுத்திப் பாக்க போறீங்க. பூரா நாள்ளே எங்காவது ஒரு சர்தார்ஜி பிச்சைகாரனை நீங்க பாத்தா, உடனே என் ‘செல்போனு’க்கு போன் பண்ணி நீங்க இருக்கிற அந்த இடத்தே சொல்லுங்க. என் ‘செல் போன்’ நம்பர் 8845379255. நான் உடனே நீங்க இருக்கிற இடத்துக்கு என் டாக்ஸியே ஓட்டி கிட்டு வந்து,உங்களுக்கு நீங்க எனக்கு இப்போ குடுத்த மீட்டர் பணம் போல நாலு மடங்கு பணம் உங்களுக்குத் திருப்பித் தரேன்” என்று சொன்னார்.
பிறகு விட்டு டாக்ஸி கதவை திறந்துக் கொண்டு,அதில் ஏறிக் கொண்டு “தம்பி மறக்காம ‘போன்’ பண்ணுங்க.உங்க போனுக்காக நான் காத்துக்கிட்டு இருப்பேன். உங்களுக்கு, நீங்க குடுத்த பணத்தே போல நாலு மடங்கு பணம் திரும்பக் கிடைக்கும்.அதை விட்டுடாதீங்க என்ன” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
அந்த சர்தாஜி ‘தமிழில்’ சொன்னதைக் கேட்டு நாங்கள் இருவரும் அசந்து விட்டோம்.
உடனே நான் “ரகு,நீ சொன்ன ஜோக்குகளை எல்லாம் இந்த சர்தார்ஜி கேட்டு இருப்பார் போல இருக்கே.வா சீக்கிரமா இந்த இடத்தை நாம போகலாம்”என்று சொல்லி ரகுவை அழைத்துக் கொண்டு வேகமாக கிளம்பினேன்.
அடுத்த நாள் பூராவும் நாங்கள் டில்லியை சுற்றிப் பாத்தோம்.என்ன ஆச்சரியம்.எங்க கண்லே ஒரு சர்தாஜி பிச்சைகாரன் கூட படலே.
கண்லே பட்ட சர்தாஜி எல்லாம் ஏதோ கடை வச்சோ,டாக்ஸி ஓட்டியா,லாரி ஓட்டியோ,’பட் பட்’ வண்டியை ஓட்டியோ,‘பஸ்’ டிரைவராகவோ, ‘பஸ்’ கண்டக்டராகவோ தான் இருந்தார்கள்!.
நாங்கள் அன்று இரவே அந்த சர்தார்ஜி “விட்ட” சவாலில் தோற்றுப் போய்,வெட்கப் பட்டுக் கொண்டே அவரை ‘போனில்’ கூப்பிட்டு அவரிடம் பல முறை மன்னிப்பு கேட்டோம்.