கிரஷ்க்கும் மேல லவ்வுக்கும் கீழ…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 30, 2022
பார்வையிட்டோர்: 13,190 
 

“வா வா என் அன்பே
என் வாழ்வின் பேரன்பே
வந்தாய் கண் முன்பே
இது நிஜமா சொல் அன்பே

உன் கண்களும் காதல் பேசும்
என் தருணம் மலரும் வாசம்
உன் தோள்களில் சாயும் நேரம்
உயிர் துளிரும் பேரழகா

மெஹபூபா
மே தேரி மெஹபூபா
மெஹபூபா
மே தேரி மெஹபூபா”

“சங்கீ”

“சங்கீ”

அடியேய் சங்கீதா…

ஹாங்..

என்னடி அபர் எப்ப வந்த??

என்னது எப்ப வந்தேனா வா?? சங்கீ சங்கீனு உன் பேர இவ்வளவு நேரம் ஏலம் விட்டது உனக்கு கேட்கலயா டி?

அப்படியா அபர்ணா? எனக்கு கேட்கல டி….

எப்படி டி கேட்கும்? நீ இந்த உலகத்துல இருந்தா தான? ஃபர்ஸ்ட் ஹெட்செட்டை கழட்டுடி… சரிடி இந்தா இத பிடி..

என்ன மச்சி இது??

என்னவா?? ” இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கீ “….

ஹே தாங்க்ஸ் டி அபர்… லவ் யூ டி…

உன் தாங்க்ஸ் எல்லாம் எனக்கு வேணாம், எங்க டி ட்ரீட் அத குடு அது போதும் எனக்கு…

ட்ரீட் தான குடுத்துட்டா போச்சு…

சரி எப்ப? எங்க ட்ரீட் தர போற? நீயே சொல்லு…

ஹம்ம் அதுவா…. ஈவினிங் நம்ம ஆபீஸ் பக்கத்துல இருக்குற பீட்ஸா ஹட்லயே ட்ரீட் வெச்சிடலாம்…

சரி வா சங்கீ போகலாம், நாம இங்க இருக்குறத அந்த மஷ்ரூம் தலையன் பார்த்தா உன்ன இல்ல என்ன திட்டுவான், அவனுக்கு என்ன கடன் வெச்சிருக்கேன்னு தெரியல என்னையே கரம் வைக்கிறான் அவன்…

கொஞ்சம் இருடி அபர், அர்ஜுன் வரட்டும் அவனையும் ட்ரீட் க்கு கூப்பிடலாம்….

ஏது??

அவன் ஆபீஸ் குள்ள வந்து பிளேஸ்-ல உட்கார்ந்து, கேண்டீன்க்கு போனது கூட தெரியாம கனவுலக்குல இருந்திருக்க நீ லூசு….

என்னது?? அர்ஜுன் கேண்டீன்க்கு போய்டானா? வாடி நாமளும் அங்க போலாம்..

இரு..இரு.. என்னடி இவ்வளவு அவசரம்?

பின்ன வேற யாராவது அவன் கூட பேச போறாங்க… நாம முன்னாடி போய் உட்காரலாம் அபர்…..

சங்கீ என்னவோ நீ அவன் கூட போய் பேசப் போறா மாதிரி சொல்ற?? எப்படி இருந்தாலும் மத்தவங்க பேசப் போறாங்க நீ அவங்க வாய்ய பார்த்துட்டு ஆ னு ….. வேடிக்கைப் பார்க்க போற அதுக்கு மெல்லமாவே போகலாம் நாம…

என்னடி இப்படி சொல்லிட்ட??

உண்மைய தானடி சொல்றேன்…

***

ஹலோ சங்கீ பேசுடி…

போடி நான் சோகமா பீல் பண்றேன்….

கருமம் கருமம் மூஞ்ச மாத்து பார்க்க முடியலடி… இன்னைக்கு உன் பர்த்டே னு சும்மா விடுறேன் இல்லனா வாய்ல நல்லா வந்துர போகுது…

சரி வா, அப்படியே மெதுவடையும், பூஸ்டும் வாங்கித்தா சங்கீ…

அதான பார்த்தேன்!

அபர் எங்கடி இந்த நதியா, கீதா ஆளே காணோம்… ட்ரீட் னு சொன்னா முதல் ஆளா வருங்களே…

அவளுக எப்பயோ கேண்டீன்க்கு போய்டாலுங்க… சரி வா அங்கயும் வந்து கொஞ்சம் மொய் எழுது….

கேண்டீனில்-

அபர் எங்க டி இதுங்கல காணும்…

அங்க பாருடி, உன் ஆள் கூட தான் பேசிட்டு இருக்காளுங்க…

ஹே வாடி, சீக்கிரமா போகலாம் இந்த கீதாக்கு அல்ரெடி அர்ஜு மேல ஒரு கண்ணு இருக்கு.

ஹே விடு மச்சி அட்லீஸ்ட் அவளாவது அவன ட்ரை பண்ணட்டும்… எப்படி இருந்தாலும் நீ அவன பார்த்து ஒரு வார்த்தை கூட பேசப் போறது இல்ல.

என்னடி இப்படி பொசுக்கனு சொல்லிட்ட?

ஹே கீத்துக்கு தெரியும் நீ அவன பாக்குறது, உனக்கு தான் அவ சப்போர்ட்.. உன்ன வெறுப்பேத்த தான் அப்படி பண்றா…அது இல்லாம அவளுக்கு நல்ல டேஸ்ட் இருக்குடி, நீ பாக்குறவன எல்லாம் அவ கண்டிப்பா பார்க்க மாட்டா….

ஓய் பிச்சிடுவேன் பிச்சு…

பின்ன என்னடி நீயும் நாலு மாசமா ட்ரை பண்ற ஆனா ஒன்னும் வேலைக்காவல. சரி சரி இப்போ நீ அர்ஜுன லவ் பண்றியா இல்ல வெறும் கிரஷ் ஆ?

ஹூம்ம் தெரியலயே டி? ஆனா ஒன்னு கிரஷ்க்கும் மேல லவ்வுக்கும் கீழ, போதுமா டி?

என்னடி இப்படி கொழப்புற? ஏதோ ஒன்னு போடி. அப்படியே கும்பலா ட்ரீட்க்கு கூப்பிடு அர்ஜுனையும் சேர்த்து, இப்படியாவது வாய் திறந்து அவன கூப்பிடு, பேசுவல அவன்கிட்ட??

அதெல்லாம் எப்படி கலக்குறேன் பாரு அபர்..

பேச்சு எல்லாம் பயங்கரமா தான் இருக்கு, ஆனா செயல் ‘ ஜீரோ ‘…

ஹே ஹாய் சங்கீதா ” இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்”…

தேங்க்ஸ் நதியா & கீத்.

தேங்க்ஸ் எல்லாம் இருக்கட்டும் எங்க ட்ரீட்?

கண்டிப்பா வைச்சுடலாம்… ஈவினிங் நம்ம ஆபீஸ் பக்கத்துல இருக்குற பீட்ஸா ஹட் ல ஆறு மணிக்கு….

உங்களுக்கு இன்னைக்கு பிறந்தநாள் அஹ்??

ஹூம் ஆமா…

தட்ஸ் குட், விஷ் யு ஹாப்பி பர்த்டே சங்கீதா…

தேங்க்ஸ்…

ஏன் எங்களுக்கெல்லாம் ட்ரீட் இல்லையா??

ஹலோ இருக்கிங்களா??

ஐயோ இந்த சங்கீத வேற இந்த உலகத்துல இல்லையே, அவன் மூஞ்சி பார்த்ததும் வேற உலகத்துக்கு ஷிப்ட் ஆயிருப்பாலே, அப்படி என்னதான் அவன் மூஞ்சில இருக்குனே தெரியல, இப்போ என்ன பண்றது…

டப்…..

ஐயோ அம்மா வலிக்குது…. ஹே அபர் ஏன்டி என்ன அடிச்சா வலிக்குது பாரு….

ஒன்னுமில்ல அர்ஜுன் ட்ரீட் கேட்டாரு, ஆனா நீ அதுக்குள்ள தூங்கிட்ட அதான் உன்ன எழுப்பி விட்டேன் டி…

ஹீ ஹீ ஹீ சாரி டி அபர்…

தூ….

சாரி, எல்லாரும் ஈவினிங் கண்டிப்பா ட்ரீட்க்கு வரணும், நீங்களும் தான் கணேஷ் அண்ணா என்று கூறி அர்ஜுனின் புறம் திரும்பி அர்ஜுனின் கண்களை பார்த்துக் கொண்டே,

அர்ஜூன் அண்ணா நீங்களும் வந்துருங்க….

சுற்றி இருந்த மூன்று பேரும் அவள் சொன்ன வார்த்தையை கேட்ட உடனே, ஒரே நேரத்தில் வாயை மூடிக் கொண்டு மீட்டிங் ஹால்க்கு ஓட்டம் பிடிக்க ….

இவங்க ஏன் இப்படி ஓடுகிறாங்கனு புரியாமல் கணேஷும், அர்ஜுனும் முழிக்க…

கணேஷ், அர்ஜுனை தட்டி மச்சான் இந்த புள்ளைய பாருடா என்று சங்கீதாவை காமிக்க.

சங்கீதா…

சங்கீதா…

ஹாங்…

என்னாச்சு உங்க எல்லாருக்கும்?

ஒன்னும் இல்ல கணேஷ் அண்ணா…

ஒன்னும் இல்லாமையா ஏதோ ஓட்ட பந்தயத்தில் கப் வாங்க போற மாதிரி மீட்டிங் ஹால் குள்ள ஓடுனாங்களா அவங்க எல்லாரும் ?

அங்கு கணேஷ் கேட்டுக் கொண்டு இருக்க, இங்கயோ சங்கீதா,

இப்போ என்னாச்சு?? ஐயையோ இப்போ நாம அர்ஜுவ என்ன சொன்னோம் அண்ணான்னா??? சங்கீ மனதுக்குள் முழிக்க….

திரும்ப கணேஷின் உலுக்கலில் நிகழ்வுக்கு வந்த சங்கீதா, கணேஷிடம் அவங்க எங்க போனாங்கனு சொன்னீங்க?

அவளின் செயலைப் பார்த்து குழம்பி போனவர்கள் மீட்டிங் ஹால் பக்கம் என்று சொல்லி முடிக்கும் முன்பே சங்கீதா வாயை மூடிக் கொண்டு ஓட்டம் பிடித்தாள்.

டேய் அர்ஜூன், நாம பார்க்குற மாதிரி தான இருக்கோம் அப்போ ஏன் இந்த புள்ளைங்க நம்மல பார்த்து வாந்தி எடுக்குறா மாதிரி இந்த ஓட்டம் ஓடுறாங்க?? ஒன்னுமே புரியலயே…..

மச்சி நம்மல பார்த்து ஓடல…

பின்ன?

உன்ன பார்த்து தான்..

ஏன் ஏன் ஏன்டா?

எதுக்கு இத்தன ஏன்?

சரி சொல்லு ஏன் ஓடுறாங்க னு….

பல்ல விலக்குனியா இல்லையா??

ஹீ ஹீ ஹீ, மறந்துட்டன் மச்சான் …

அடச்சா போ போய் பல்ல விலக்கு முதல….

ஹீ ஹீ ஹீ, சரி மச்சான் அவ்வளவா வாசனை அடிக்குது??

அது வாசனை இல்ல நாத்தம் மச்சான் …

சரி சரி விடு மச்சான்… அரசியல இதெல்லாம் சகஜமப்பா….

ஆனா ஊனா இத சொல்லிடுறது… வா நம்ம கேபின்க்கு போகலாம், அவங்க எப்ப வாராங்களோ வரட்டும்…

சரி அர்ஜூன்…

இங்கு முதலில் ஓடி வந்தவர்கள் –

ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டவர்கள் பின்பு சுற்றி முற்றி பார்த்தார்கள், யாராவது இருக்காங்கலா என்று, யாரும் இல்லை என்று தெரிந்து கொண்டவுடன் வெடித்து சிதறினார்கள் சிரிப்பலையில்…..

ஹா ஹா ஹா….

ஹா ஹா ஹா….

ஹா ஹா ஹா….

ஐயோ ஐயோ முடியலயே….

நதியா சத்தியமா இப்படி நடக்கும் எதிர் பார்க்கல டி…. ஹா ஹா ஹா…

ஆமா அபர்ணா… ஹா ஹா ஹா…

என்னால அங்க சிரிப்ப அடக்க முடியலடி, எங்க அங்கயே சிரிச்சிடுவேனோனு இங்க ஓடி வந்துட்டேன்… ஹா ஹா ஹா….

ஆமா கீதா, அதனால தான் பின்னாடியே நானும் ஓடி வந்தேன்…. ஹா ஹா ஹா….

அபர்ணா எங்கடி அவ, அங்கயே இருக்காளா??

ஆமா கீத், இன்னும் ரெண்டு நிமிஷத்தில வந்துருவா பாரு… ஹா ஹா ஹா….

அப்படியா சொல்ற….

கேர்ள்ஸ், வாட்ஸ் ஹாப்பனிங் ஹியர்?? மீட்டிங் ஹால் பக்கம் வரும் போது ஒரே சத்தமா இருக்குது??

ஒன்னுமில்ல சுபாஷினி மேம் ச்சும்மா தான் பேசிட்டு இருந்தோம்….

என்னது பேசறீங்களா? அதுவா இவ்வளவு சத்தமா கேட்குது வெளியே??

ஆமா சுபி மேம்… ஹீ ஹீ ஹீ…

இப்போ எதுக்கு டூத் பேஸ்ட் விளம்பரத்துல வரா மாதிரி பல்ல காமிக்குறீங்க?? உங்க முழியே சரியில்லையே? நீங்க நாலு பேரும் சேர்ந்தா அங்க ஏதோ சம்பவம் நடந்துருக்குனு அர்த்தம், ஆமா எங்க அந்த சங்கீதா ஆள காணோம், அவ இல்லாம இருக்க மாட்டிங்களே?

அவ இப்போ வந்துறுவா மேம்… அப்படியே கொஞ்சம் திரும்பி அந்த வெளிக் கதவ பாருங்க மேம்…

ஹாங்….. அப்படியா அபர்ணா… இரு பார்க்குறேன்…

சுபி மேம் பார்க்கும் போது, சரியாக சங்கீதா உள்ளே நுழைந்தாள்…

ஹே அபர்ணா எப்படி சரியா சொன்ன…

பின்ன ஷாக் ல இருந்து ரிலீஸ் ஆக அந்த ரெண்டு நிமிஷம் முடிஞ்சு போச்சே மேம்.. அதான் நாங்க சொன்னோம்… என்று இவர்கள் முணுமுணுக்க…

என்ன சொன்னீங்க??

ஒன்னும் இல்ல மேம் அவ தான் நீங்க போங்க நான் பின்னாடியே வரேன் சொன்னா அதான் சொன்னோம்….

ஓ சரி… சங்கீதா ஏன் பேய் அறைஞ்சா மாதிரி இருக்க??

அது பேய் அறையலே சுபி மேம் அவளுக்கே அவ ஆப்பு வெச்சுக்கிட்டா வேற ஒன்னும் இல்ல…

என்ன சொல்றீங்க கேர்ள்ஸ்?

ஒன்னும் இல்ல மேம்….

சரி என்னமோ பண்ணிட்டு போங்க, தள்ளுங்க எனக்கு வேலை இருக்கு என்று அவர் சென்ற அடுத்த நிமிடமே ஆயிரம் வாலா வெடித்தால் போல் மறுபடியும் ஒரு சிரிப்பலை மூன்று பேரின் கண்களில் இருந்தும் கண்ணீர் வராத குறை மட்டும் தான்….

அவர்கள் சிரிப்பதை நிறுத்துவார்கள் என்று பார்த்தால் நிறுத்தும் நோக்கம் இல்லாமல் சிரித்துக் கொண்டு இருந்தார்கள்…

அவர்கள் சிரிப்பதை பார்த்த சங்கீதா அவர்களையே வெறிக்க பார்த்துக் கொண்டு இருந்தாள்…

அவள் பார்க்கும் பார்வையை பார்த்த அபர்ணா மற்றவர்களை அமைதி ஆகும் படி கூறினாள்….

ஹே கீத் ஒருவேளை உண்மையா லவ்வு கிவ்வு பண்ணிட்டாளோ என்று நதியா கேட்டாள்….

தெரியலயேடி…

என்ன மச்சி ஒரு மாதிரி இருக்க என்று சங்கீதாவிடம் கேட்டாள் அபர்ணா, ஒருவேளை ரொம்ப பீல் பண்றா போல என்று நினைத்துக் கொண்டாள்…..

சங்கீதா மூன்று பேரையும் பார்த்து மச்சி ப்ளீஸ் ஏதாவது பினாயில் இருந்தா குடுங்க டி வாய்ய வாஷ் பண்ணிக்கிறேன், எப்படி அவனை போய் அண்ணானு கூப்பிட்டேனு தெரிலடி என்று கண்ணில் கண்ணீர் வராத குறையாக கேட்டவளைப் பார்த்து இன்னும் சிரிக்க ஆரம்பித்தார்கள்…

பின்ன என்ன சங்கீ கர்மா இஸ் பூமராங் னு சும்மாவா சொன்னாங்க, அன்னைக்கு சேகர் அவன் லவ்வ சொன்னான் அட்லீஸ்ட் அவன் காதல ஏத்துட்து இருந்திருக்கலாம் அவன் நல்ல பையன் டி, கடைசில அவன போய் அப்படி எதுவும் விருப்பம் இல்ல அண்ணானு சொல்லிட்ட, அவன் லவ்வ ஏத்துக்குளனாலும் பரவால ஆனா அண்ணானு சொல்லி அவன் லிட்டில் ஹார்ட்ட ஹர்ட் பண்ணிட்டடி. இதே மாதிரி ப்ரபோஸ் பண்ண வந்த சஞ்சய யும் அண்ணானு கூப்பிட்ட.. அந்த பாவம் உன்ன சும்மா விடுமா, அதான் பழக்க தோஷத்துல இவனையும் அண்ணானு சொல்லிட்ட…

இருக்கலாம் டி ஆனா அவங்க மேல எனக்கு விருப்பம் இல்லையே நான் என்ன பண்ண முடியும் சொல்லு அபர், ஆனா அர்ஜு என் டார்லிங் …..

சரி விடு மச்சி வேற பையன பார்க்கலாம்… இது ஒரு விஷயமா சொல்லு….

சொல்லுவடி சொல்லுவ, அல்ரெடி அவன ரூட் விட்டுட்டு இருக்க, இப்போ உனக்கு கிளியர் ஆயிடுச்சு அதான கீதா….

ஹீ ஹீ ஹீ ச்சும்மா தான் டி சொன்னேன் வேற ஒன்னும் இல்ல….

ஹா ஹா ஹா…

ஹே அபர் எதுக்குடி இப்படி சிரிக்குற திடிர்னு??

அதுவா நதியா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கேட்டேன் சங்கீ கிட்ட என்னடி இது க்ரஷ் ஹா இல்ல லவ் வா னு, அதுக்கு இவ ஒரு டயலாக் சொன்னா தெரியுமா அத நினைச்சு தான் சிரிச்சேன்…. ஹா ஹா ஹா…

அப்படி என்னடி சொன்னா?

ஹே அபர் சும்மா இருக்க மாட்டியா நீ?

ஹே சங்கீ நீ சும்மா இரு, அபர் நீ சொல்லு டா செல்லம் அவ என்ன சொன்னா??

ஹே அபர் நீ கேட்ட மெதுவடையும், பூஸ்டும் வாங்கித்தரேன் டி…..

அபர் நீ சொல்லு நான் உனக்கு நீ கேட்டத விட எக்ஸ்ட்ராவா சமோசா வாங்கி தரேன்….

ஐஐஐஐ கண்டிப்பாவா கீத்??

சத்தியமா டி பாரு கைல டிக் கூட போட்டுட்டேன்…

அப்போ சொல்றேன், நான் கேட்டதுக்கு இவ என்ன சொன்னானா, “கிரஷ்க்கும் மேல லவ்வுக்கும் கீழ”.

இப்போ தான் தெரியுது அவ அண்ணானு சொல்றதுக்கு தான் இப்படி பில்ட் அப் குடுத்தானு….

ஹா ஹா ஹா…. (மூன்று பேரும் சிரிக்க)

ஒரு கட்டத்தில் சங்கீதாவாள் கட்டு படுத்த முடியாமல் அவர்களுடன் சேர்ந்து இவளும் சிரிக்க ஆரம்பித்தாள்…..

சரிடி சிரிச்சது போதும் பூஸ்ட் வாங்கித்தா….

என்ன கிண்டல் பண்ணல அபர்… அதனால உனக்கு பூஸ்ட் இல்ல வா போகலாம், என்று சங்கீதா முன்னே நடக்க ஆரம்பித்தாள்…

ஹே சங்கீ நில்லு மச்சி… நடந்த சம்பவத்துக்கு உனக்கு நான் ட்ரீட் வைக்கிறேன் டி நீ குடுக்கலனாலும் பரவால…என்று அபர்ணா கூற, மீண்டும் நால்வரும் சிரிக்க தொடங்கினர்….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *