“இதுவரைக்கும் படிச்சதெல்லாம் சும்மா தான். இனிமேல் தான் கவனமா இருக்கணும். எப்படியாவது இங்க சீட் வாங்கிறனும். என்ட்ரன்ஸ் நல்லா பண்ணு. கௌன்ஸிலிங்ல தைரியமா பேசு. எதுவும் தெரியாதுனு சொல்லாதே. என்ன சரியா ?”
அம்மாவும், அப்பாவும், இருபுறம் இருந்து மத்தளம் வாசிக்க, பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் ரேஷ்மா. ‘ஏன் இப்படி போட்டு டார்ச்சர் பண்றீங்க’ என்பது போல இருந்தது அவள் பார்வை.
“பக்கத்து வீட்டு பொண்ணு இங்க படிச்சு தான் எம்.ஐ.டி. சேர்ந்திருக்கா. ஞாபகம் இருக்கில்லங்க உங்களுக்கு” என்று அம்மா, அப்பாவை இடித்தாள்.
இரவெல்லாம் கண் விழித்துத் தயார் செய்ததில், காலையிலேயே சோர்வாய் இருந்தாள் ரேஷ்மா.
லீவு நாட்களில் கூட சும்மா இல்லை. அந்த கோச்சிங், இந்த கோச்சிங் என்று படு பி.ஸி. தான்.
“நீங்க ஹாஸ்டல் எடுத்துக்கிட்டீங்கனா, இங்க சீட் கண்டிப்பா கிடைக்கும்” என்றார்கள்.
“ஹாஸ்டலில் இருந்துவிடுவாளா ? பழக்கமே இல்லையே ! இன்று வரை எங்களை விட்டுப் பிரிந்து இருந்ததில்லை” என்றார் அப்பா.
“அதெல்லாம் பிள்ளைங்களோட பிள்ளைங்களா இருக்கும்போது பழகிடும் சார். சரி, போய் ஆஃபீஸ்ல ஃபீஸ் கட்டி, ரெஸிப்ட் வாங்கிக்கங்க” என்றார் ரேஷ்மாவை நேர்முகம் செய்த ஆசிரியை.
“ஸ்டூடண்ட் பேரு என்னங்க ?” என்றார் ரைட்டர்.
“ரேஷ்மா”
“எந்த க்ளாஸ் ?”
“எல்.கே.ஜி. !”
தொடர்புடைய சிறுகதைகள்
நீண்டு அகன்ற அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு பருத்த ஆலமரம் போல பரந்து விரிந்து காட்சியளித்தது. பல்வகைப் பறவைகள் அதில் வாசம் செய்தன. மன்னிக்கணும், பல்வகை மனிதர்கள் அதில் வசித்து வந்தார்கள்.
முறையே பணி செய்து, போதுமென ஓய்வு பெற்று, அறுபதைக் கடந்த ஜெகந்நாதனும், ...
மேலும் கதையை படிக்க...
"எலே ஏகாம்பரம், இன்னிக்கு ரேஷன்ல சீனி போடுறாக தெரியும்ல. வெள்ளன வந்து கார்டையும், காசையும் வாங்கிட்டு போயி, சீனி வாங்கியாந்து ஆத்தா கையில குடுத்துரு" என்றாள் மெடிக்கல் ஷாப்பிலிருந்து செல்வி.
"என்னப்பூ ஏகாம்பரம், கொஞ்ச நாளா சீமைக்கு போயிட்டு வந்து ஆளே மாறி ...
மேலும் கதையை படிக்க...
"டேய் ரவி அவ விடற லுக்கு நாளுக்கு நாள் தாங்க முடியலடா".
Outlook-ல் pop-ஆன "This evening special Dinner" click செய்து, "எவ அவ" என்று நக்கலுடன் ஆனந்தைப் பார்த்தான் ரவி.
ரவியும், ஆனந்தும் ஒரே அலுவலகத்தில் வேலை (மன்னிக்க) பொட்டி தட்டுபவர்கள். ...
மேலும் கதையை படிக்க...
சிங்கப்பூர் முஸ்தாஃபாவிற்குள் நுழைகையில், ஏதோ ஃப்ரீசருக்குள் நுழைந்தது போலிருந்தது. அந்த அளவிற்கு வெய்யிலின் உக்கிரம் வெளியே. முதுகுத் தண்டில், ஒற்றை நீர்வீழ்ச்சியாய் வழிந்தோடிய வியர்வையில், மேனி சிலிர்த்தது.
வேலை நாட்களில் போனால் சற்று கூட்டம் குறைவாய் இருக்கும் என்று எண்ணியது, மாபெரும் குற்றமாகப் ...
மேலும் கதையை படிக்க...
குருதி வரிகள் கண்களில் கொப்பளித்து ஓட போதையில் தன்னை நெருங்கியவனை, மாதுளம் சிவந்த விழிகளில் சுட்டெறித்து, சுவற்றில் பல்லியென அறைந்து எச்சரித்தாள் ... "யாருகிட்ட மோதற, தண்ணிய போட்டாலும் தடம் மாறாம இருக்கணும் ?! அவன் தான் மனுஷன் !" என்றவளை ...
மேலும் கதையை படிக்க...
அந்தக் குட்டி ஆட்டோவில் சுற்றி எங்கிலும் தட்டி. ஆளுயரத்தில் அரசியல் தலைவர்கள் கையெடுத்துக் கும்பிட்டு நடப்பது போல் படங்கள். பின்சீட்டில் மைக்செட்டுக்கு வேண்டிய சாமான்கள், இருபுறம் தெருபார்த்து உறுமும் குழாய்கள். ஆட்டோவை சேகர் ஓட்ட, பக்கத்தில் தங்கராசு.
"அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே, உங்கள் ...
மேலும் கதையை படிக்க...
எண்ணை வழிந்த முகமும், எடுப்பில்லாத உடையும், வழித்து சீவிய முடியும், கள்ளம் கபடமில்லாத பார்வையுமாய், கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து சில மாதங்களே ஆன செல்லமுத்து வாழ்வில் இப்படி ஒரு ஏகாந்தம் அடிக்கும் என அவனும் எதிர்பார்க்கவில்லை !!!
அவனுடன் வேலை செய்வோருக்கோ, ...
மேலும் கதையை படிக்க...
காலை மணி ஏழு பதினைந்து. 'ஜூரோங் ஈஸ்ட்' நோக்கி செல்லும் துரித ரயில் 'புக்கிட் பாத்தோக்' நிலையத்தை அடைந்து, ஊரும் புழு போல ஊர்ந்து நின்றது.
ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்த கூட்டம் ரயிலை நோக்கித் திரள, பருத்த மேனியரின் வெடித்த சட்டை போல, ...
மேலும் கதையை படிக்க...
அந்த அலுவலக அறையில் ஏழு பேர் இருந்தனர். நம்மூர்க்காரங்க மூனு பேரும், வெள்ளைக்காரங்க நாலு பேரும். இந்த காம்பினேஷன்லேயே புரிந்திருக்கும் அது ஒரு மென்பொருள் சம்பந்தப்பட்ட அலுவலக மீட்டிங்க் என்று. உங்கள் நம்பிக்கையைத் தகர்க்க விரும்பவில்லை :)) அதே தான் !
'இப்ப ...
மேலும் கதையை படிக்க...
வாகாய் வளைந்து நெளிந்து, ஒல்லியாய் உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த அழகிய நெல்லி மரம். தூவானத்திற்கே வெட்கப்பட்டு, இழுத்துப் போர்த்தியிருந்தது கருப்பு ஈர ஆடையை.
வெண்முத்துக்கள் சிந்திய மழைத்துளிப் போர்வையில், அடுக்கடுக்காய் வெளிர்பச்சை இலைகள். இலைகளுக்குப் போட்டியாய் பச்சை ருத்ராட்சங்களென சடை சடையாய் நெல்லிக்கனிகள்.
சில ...
மேலும் கதையை படிக்க...
அடுக்குமாடிக் குடியிருப்பும், அடுத்தடுத்த கட்டிடங்களும்
சொல்லிட்டீங்கள்ல, செஞ்சிருவோம் !
சென்னைப் பெண்ணும் செல்லமுத்துவும்…