கண்டேன் பேயை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 15, 2021
பார்வையிட்டோர்: 14,171 
 
 

பேய் அப்படின்னாலே எல்லாருக்குமே பயம் ஆனா அது எனக்கு பிசினஸ். ஆமா நான் பேயா வச்சுதான் பணம் சம்பதிக்கிறேன் . அதுக்காக நான் பேயை புதுசா உருவாக்கி பயமுறுத்தி அப்டிஎல்லாம் இல்ல அதெல்லாம் பழைய ஸ்டைல். நான் சம்பாதிக்க தேவையான பயத்தை இன்வெஸ்ட் பண்ணி வச்சிருக்க நீங்க ஒவ்வொருத்தரும் என் பாட்னர்தான். இந்த நவீன காலத்திலும் பேயையும் என்னையும் வாழ வைக்குற கஸ்டமர் இருக்குற வரைக்கும் என் காட்ல பணபேய் மழைதான். அதுக்காக பேய்யல்லாம் என் பிரண்டும் இல்ல, பேய் பொய்யுமில்ல. நானும் ரிஸ்க் எடுத்துதான் பொளப்பு நடுத்துறேன்.நானே நிறைய இடத்துல பேயை பார்த்து பயந்திருக்கேன் ஆனா அது ஏன் முகத்துல வெளிபடாது. அதுதான் என்னோட பிளஸ். என் வேலை பேயிடம் பேசி, கஸ்டமருக்கும் பேய்க்கும் இருக்கிற பிரச்சனயை தீர்த்து வைக்கிறது. பேயின் வீரியத்தை பொருத்து கட்டணம் நிர்ணயக்கப்டும்.

வழக்கம்போல் சைட்டுக்கு போய்டேன், அந்த இடத்தில் அமான்ஷியத்திற்கு அடையாளமே இல்லை. பட்ட பகலில் அது எனக்கு பெரும் பயத்தை கொடுத்தது. நான் பொதுவா கஷ்டமரிடம் பேச முயற்சிப்பதில்லை, நான் ஊமை என்பதற்காக மட்டுமல்ல, அதுதான் என் ஸ்டைல். நானே ஆராய்ந்து, பிரச்சனை தீர்ந்தால் மட்டுமே பீஸ் இல்லையேல் எவ்வித தொந்தரவும் இல்லாமல் விலகி விடுவேன். இந்த கேசிலும் எனக்கு ஆரம்பத்திலே ஒரு எச்சரிக்கை வேண்டாமென்றது, யோசித்தேன். தெள்ளதெளிவான தனி வீடு. எந்த ரூமிலும் எந்த இருளுமே இல்லை. அருகிலும் சுடுகாடு அல்லது வேற எவ்வித தீய சக்திக்கு குடியுருப்பும் இல்லை.

நீண்ட நேரமாக இந்த கேசில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. வீட்டில் இருக்கும் அம்மா, அப்பா, ஒரு பெண், மூவரும் ஒருவித மிரட்சியுடன் காணப்பட்டனர். அதுவே எனக்கும் பயம் தந்தது. பேய் நடமாட்ட அறிகுறியே இல்லாமல் இவர்கள் ஏன் இவ்வளவு பயபடுகிறார்கள், ஒரு பக்கம் சந்தேக பேய் என்னை பிடித்து கொண்டது. பொதுவாக இருளுக்கும் பேயிக்கும் சம்மந்தமில்லை என்னை பொருத்தவரை. இருந்தாலும் வீட்டில் உள்ள அனைவரையும் உக்கார வைத்து, என்ன பிரச்சனையாக இருக்கும்மென்று என்று யூகிக்க முயற்சித்தேன். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரின் முகத்திலும் அவ்வளவு பயம், நடுக்கம், எந்த வித முகாந்திரமும் இல்லாமல் இவர்களின் செயல்பாடுகள் என்னை பயமுறுத்தின. இவர்கள் நான் கண்ட பேய்களைவிட பயங்கரமாக உணர வைத்தனர். நான் பேயை கண்டறிய நடத்திய அனைத்து நடவடிக்கையிலும் இவர்கள் பயம் எகிறிக்கொண்டே போனது.

ஒருவேளை எவ்வித தீய சக்தியும் இல்லாத வீட்டுக்கு என்னை வரவழைத்து அந்த ஏஜெண்டும், இந்த குடும்பமும் சேர்ந்து என்னை சோதிக்கிறார்களோ? எனக்கு ரொம்ப கோபம் வந்தது, பிறகு ஏன் ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு இவர்கள் இப்படி நடுங்குகிறார்கள். இல்லையென்றால் இவர்கள் மனம் பாதித்தவர்களாக இருக்ககூடும் என தோன்றியது.

நான் வந்ததற்கு வேலை இல்லாததால், வழக்கம்போல் ஒரு பேப்பரில் எனக்கு தோன்றியதை எழுதி, ஆறுதல் எழுதி விட்டு பிரபல மனநல மருத்துவரிடம் போக பணித்துவிட்டு கிளம்பினேன் . அந்த வீட்டு பெரியவர் அந்த லெட்டரையும் நடுக்கத்தோடு வாங்கிகொண்டு, ஒரு கட்டு பணம் கொடுத்தனர். அதை பெறாமல் நான் புன்னகை சிந்திவிட்டு கிளம்பினேன்.

மறுநாள் என் வீட்டு வாசலில் போலிஸ் என்னை கைது செய்ய காத்திருந்தது. இது சில நேரங்களில் நடக்கும், நான் போலி? ஏமாற்றி விட்டேன்? என யாரேனும் கேஷ் கொடுப்பார்கள் பின் அவர்களே வாபஸ் வாங்குவார்கள். பேயுடன் கேஷ் நடத்துபவனுக்கு இதெல்லாம் சாதாரணம்.

ஸ்டேஷன் சென்ற பிறகுதான் தெரிந்தது, எனக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது, அது என்னவென்றால் அந்த கடைசி கேசில் வீட்டில் உள்ள மூவரும் தற்கொலை செய்யபட்டிருக்கிறார்கள். அதற்கு நான்தான் காரணம் என்று போலிஸ் கொலை கேசில் கைது செய்திருக்கிறது, ஐயோ! எனக்கு அப்பவே தோன்றியது, எதோ தப்பாக அதேபோல் நடந்து விட்டது.

காரணம் கேட்க முயற்சித்தபோது, அந்த ஏட்டு நான் எழுதி கொடுத்த லெட்டரை கொடுத்தார். இதுல என்ன இருக்கு என்பதுபோல் நான் பார்க்க, முழுசா படிக்க பணித்தனர், மேலும் சிலர் என்னை பார்த்து மிரண்டது இப்பொது எனக்கு பிடித்திருந்தது. படித்துக்கொண்டே போனேன் இறுதி பத்தியில், “ஆகவே இந்த திருவீட்டில் எந்த ஒரு பகுதியிலும் ஒரு பொட்டு தீய சக்தி நடமாட்டமோ, பில்லி சூனிய வேலைபாடுகளோ நிச்சயமாக இல்லை. உங்கள் மனதை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள், சந்தேகமிருந்தால் ஒரு மனநல மருத்துவரை அணுகுவது நல்லது. அடுத்தவரிதான் என்னை ஆட்கொண்டது, ஆப்பு வைத்தது, அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அந்த வரி “இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள பேய்”.

“இப்படிக்கு பேய்”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *