கடவுள் எங்கே?

 

ஓர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான்.

“எங்கே இருந்து வருகிறாய்?” என்று கேட்டார்கள்.

“தேவலோகத்திலிருந்து வருகிறேன்” என்றான்.

கேட்டவர்கள் சிரித்தார்கள்.

“உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?”

“கடவுள்தான் அனுப்பி வைத்தார்.”

கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு. புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்துகொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்றார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற கோயில் அது. அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப்போட்டு விட்டார்கள்.

இப்போது அவன் சிரித்தான்.

“ஏன் சிரிக்கிறாய்?”

“என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், உன்னைக் கட்டிப் போடுவார்கள்… கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன நிரூபணம் வேண்டும்?”

மக்கள் யோசித்தார்கள்.

“சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?”

“நம்புங்கள்… நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.”

இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான். அவன்தான் சிரித்தது.

“நீ ஏன் சிரிக்கிறாய்?”

“நீ பொய் சொல்கிறாய்… அதனால் சிரிக்கிறேன்!”

“எது பொய் என்கிறாய்?”

“கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!”

“அது எப்படி உனக்குத் தெரியும்?”

“நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!”

இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் சொன்னான் பரிதாபமாக… “ஆமாம். நான்தான் கடவுள். அப்படிச் சொன்னதற்குத்தான் என்னை இங்கே ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.”

நண்பர்களே! ‘நானே கடவுளின் தூதன்’ என்கிறார்கள் சிலர். ‘நானே கடவுள்’ என்கிறார்கள் சிலர். உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?

ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். “நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்!” என்றான். அவர் ‘பளார்’ என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார். இவன் பயந்து ஓடிப் போனான்.

பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: “அவனை ஏன் அறைந்தீர்கள்?”

“அவன் ஒரு பைத்தியக்காரன்!”

“அப்படியா?”

“ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!” 

தொடர்புடைய சிறுகதைகள்
அரசியல் நாகரிகம்!
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அண்மையில் என் நண்பரான ஓர் அரசியல்வாதியைச் சந்தித்தேன். மிகவும் கவலையோடு காணப்பட்டார். "என்ன காரணம்?" என்று கேட்டேன். "என் சொந்தக்காரன் ஒருத்தன் உடம்பு சுகமில்லாம் ஆஸ்பத்திரியில் இருக்கான்!" "சரி.. போய்ப் பார்த்துட்டு வர ...
மேலும் கதையை படிக்க...
இந்த உலகத்தில் தெளிவாய் பேசிக் குழப்புகிறவர்களும் உண்டு. குழப்பமாய் பேசித் தெளிவுப்படுத்துகிறவர்களும் உண்டு. அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு கொள்வது தான் இந்த கட்டுரையின் நோக்கம். ஒரு பெரிய திடல். அங்கே ஒருவன் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறான். அங்கே இருக்கிற புல்வெளியில் ஏராளமான ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் கருப்பு ...
மேலும் கதையை படிக்க...
ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது. அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் . அந்த வகையில், ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார். கோயில் நிர்வாக அதிகாரி ...
மேலும் கதையை படிக்க...
“என்ன சார்...ரெண்டாவதா ஒரு கல்யாணம் பண்ணீக்கிட்டீங்களாமே..?" “ஹி….! ஆமாம் சார்….!” “ஒருவனுக்கு ஒருத்திங்கறதுதான் நம்ம நாகரிகம்…. பண்பாடு..! “உண்மைதாங்க…. இருந்தாலும் சந்தர்ப்பம்….சூழ்நிலை…. இப்படி ஆயிட்டுது..!" “சரி…. தேன்நிலவு எங்கே?” “அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சார்….தேனாவது….நிலவாவது….!” “அது சரி…. ஹனிமூன்ங்கர்ற பெரு எப்படி வந்தது தெரியுமா உங்களுக்கு?” “தெரியலையே…! “கல்யாணத்துக்குப் பிறகு மணமக்கள் முப்பது ...
மேலும் கதையை படிக்க...
அரசியல் நாகரிகம்!
தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி?
சும்மா இருப்பது சுலபமா?
தேன் நிலவு

கடவுள் எங்கே? மீது ஒரு கருத்து

  1. Thilaka says:

    அருமையான கதை. கண்டவனும் நான் தான் கடவுளின் தூதன் என்று சொல்லிக் கொள்வது இயல்பு. ஆனால் அதை இன்னமும் நம்பும் முட்டாள்களை என்னவென்று சொல்வது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)