ஒரு வாய்மொழிக் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 16,479 
 
 

கதை சொல்லணுமாக்கும். சரி, சொல்றேன்.

எங்க ஊர்லெ எல்லாம், ஒரு கதை சொல்லுண்று கேட்டா.

‘நா வாழ்ந்த கதையைச் சொல்லவா; நா தாழ்த்த கதையைச் சொல்லவா’ண்ணு கேக்கிறதுண்டு, நாம ரெண்டு லெ எதையாவது கேட்டு வைக்கணும். ஆனா, அவங்க வாழ்ந்த கதையும் வராது; தாழ்ந்த கதையும் வராது. ஏதாவது ஒரு கதை வரும்!

பின்னெ என்னத்துக்கு இந்தக் கேள்விண்ணு நினைக்கலாம். ஒருவேளை, கொஞ்சம் யோசிச்சிக்கிட அவகாசம் வேணும்ங்கிறதுக் காக இருக்கலாம். எல்லாம் ஒரு ‘இது’க்காகத்தான்.

திறுக்கைச் சுத்ன உடனே தண்ணி கொட்றமாதிரி கேட்ட உடனே கதை சொல்றதுக்கு மன்னன் பல்ராம் நாயக்கர்தான்.

“யோவ், ஒருகதை சொல்லும்”ண்ணு கேக்க வேண்டியதுதான் உடனே முகத்திலெ ஒரு சந்தோஷம் – ஒருகளை – வந்துரும், எச்சியெக் கூட்டி விழுங்கி தொண்டையைச் சரி செஞ்சிக்கிட்டே அடப்பு லெ சொருகியிருக்கிற சேலம் பொடிப்பட்டையை உருவி ஒரு சிம்ட்டாப் பொடியை எடுத்து வச்சிக்கிட்டு, தொடங்குவாரு.

*ஆனைத் தலைத்தாண்டி பெருங்காயம் போட்டு
கீரை கடையிற ராசா மகளுக்கும்,
அரிசி கழுவின தண்ணி ஆயிரம் ஏக்கர்
பாய்ற ராசா மகனுக்கும் கலியாணம்”

கதை தொடங்குதப்பவே எல்லார்மாதரியும் பொடியைப் போட்டுக்கிட மாட்டாரு. சரியான கட்டம் வரணும் கதையிலெ. அப்பிடி ஒரு இடைவெளி கொடுத்து, சர்ர்ர்ண்ணு பொடியை ழுெத்து பெருவிரலும் நடுவிரலும் ஒட்டுனயிடத்திலே ஆளக்காட்டி விரவாலெ சொடக்கு விழறமாதிரி ஒரு உதறுதட்டுத் தட்டிட்டு, பிதுங்கிய கண்ணீர் விழியாய் நம்மையெல்லாம் ஒரு சுத்து கெத்தான பார்வையால் பார்ப்பார்; எவன்டா எம்மாதரி கதை சொல்லமுடியும்ண்ணு கேக்கும் அந்தப் பார்வை.

ஓரெடுப்பு உழுதுட்டு வந்த சம்சாரிகெ மத்யான வேளையிலெ, அலுப்புத் தீரக் கொஞ்சம் கரைமரத்து நிழல்லெ துண்டை விரிச்சி தலைசாச்சிக் கிடக்கிறப்பொ பல்ராம் நாயக்கரும் வருவாரு.

அறையை மறைக்க வெறும் அறணாக்கயத்திலெ சொருகப்பட்ட கையகலக் கோமணத்துணி. அந்த அறணாக்கயித்துலெ இடது பக்கம் சேலம் பொடிப்பட்டையும், முள்வாங்கியும். வேட்டியை அவுத்து தலையிலெ கட்டிய லேஞ்சி. அதிலே மிச்சமாகத் தொங்குற சுங்குல் – முதுகுத்தண்டை மறைக்கவிடப்பட்ட ஒரு முழத்தொங்கல் – லேஞ்சி கட்னமானைக்கே அந்தத் தொங்கலை மேல் முதுகுக்கு விரிச்சி, மரத் தடியிலெ தலையசாச்சி காலைத் தூக்கி மரத்து மேலே போட்டுக் கிடுவாரு ஒரு யோகாசனம்மாதிரி.

பேச்சுக்கு மத்தியிலெ அண்ணைக்கு பிள்ளையாரப்பன்தான் தொடங்கினான்.

“ஒருத்தன்கிட்டெ கைமாத்து வாங்காமெ பொழுதே ஓட்ட முடியலையே”. வரதப்பன் சொன்னான்.

“அதெப்படிவே முடியும். ஆனானப்பட்ட சல்க்காரே அடுத்த நாட்டுக்காரன்ட்டெ கை நீட்றப்பொ நாம எம்மாத்ரம்?”

“வாங்குறது பெரிசில்லப்பா; திரும்பக் கொடுக்க முடியலையே.”

“திரும்பக் கேக்காத ஆளைப் பாத்து வாங்கணும்!’

அப்போர்க்கொத்த ஆளு எங்கனெ இருக்கு. சொல்லு; அவங் கிட்டெ போய் வாங்குவம்.

இருப்பான், எங்களெயாவது இருப்பான்; தமக்குத் தட்டுப்படணும்.

“அப்படியும் ஒருத்தன் பூமியிலெ இருக்கவா செய்தான்?”

“ஏய், அப்படி ஒருத்தளென்னப்பா அதுக்கு மேலேயும் ஒருத்தன் இருந்திருக்காம்பா”

குரல் வந்த திக்கு பல்ராம் தாயக்கர்தான் அருணாக்கயித்திலெ சொருகியிருந்த பொடிப்பட்டையை உருவி எடுத்துக்கொண்டே சொன்னார். “இப்படித்தான். ஒங்கமாதிரி ரெண்டு பேரு ரோசனை செஞ்சாங்களாம்.. அப்பொ, அவுகளுக்கு ஒரு தகவல் கிடைச்சதாம். நம்ம நாட்டுக்குப் பக்கத்து நாட்லெ ஒருத்தர். வேண்டியமட்டுக்கும் கேக்கிறவர்களுக்கெல்லாம் கடன் கொடுக்காராம். கடனை வாங்கினவுக திருப்பித்தர வேண்டாம். அவங்க வாரீசுக திருப்பித் தந்தாப் போதும்!”

பிள்ளையாரப்பனும் வரதப்பறும் சந்தோஷத்தால் சிரித்தார்கள்.

அது நல்ல விசயந்தான். அலப்பரை இல்லை. ஆனா, தம்ம வாரிசு களெ எவன் சம்பாரிக்கிறது அவள் எப்பப் பணக்காரனாகி அவரோட பாக்கியெத் தீக்கிறது? “அட எப்பச் சம்பாரிச்சு பணக்காரனா கிறானோ அப்பத் தீத்தாப் போதுங்கிறதுதான் கண்டிஷன்ண்ணேன்.”

“ஆங்; சரி, சரி, சொல்லுங்க”

“ஆச்சா; ஒடனே வெங்க ரெண்டுபேரும் கட்டுச்சோத்தைக் கட்டிக்கிட்டு அந்த நாட்டுக்குப் போனாங்க”

“போனா அங்கெ போயி விசாரிக்கிறப்போ இன்னொரு தாக்கல் கெடைச்சது. அங்கொருத்தன் சொன்னான். எப்பா இதென்ன பெரிய காரியம்ண்ணுட்டு இவங்கிட்டெ வந்து கடன் வாங்க வந்துட்டகெ. இந்த நாட்டுக்கு பக்கத்து நாட்டிலே ஒருத்தரு கடங்கொடுக்காரு. அவருக்கு கடன் வாங்கினவனும் கொடுக்கவேண்டாம். வாரிசுகளும் கொடுக்கவேண்டாம். அடுத்த ஜென்மம் எடுத்தா அப்பொ வந்து கொடுத்தாப் போதும்!”

“அடடே இது ரொம்ப அருமையா இருக்கே!!”

“சரி; நாம அங்கே போவோம். இவங்கிட்டெ வாங்கிட்டு தாம கண்ணைமூடீட்டா நம்ம வாரீசுக தம்மை ரசிக்கிட்டே இருக் கும்”ன்னு சொல்லிட்டு அந்த நாட்டுக்குப் புறப்பட்டுப் போனாங்க.

காட்டுவழி, பேசிக்கிட்டே நடந்து போய்க்கிட்டு இருக்காங்க அதிலெ ஒருத்தன் சொன்னான். “அடுத்த ஜென்மத்திலெ நாம என்ன பிறப்பு பிறக்கப் போறமோ, மனுசனாப் பிறந்தாத்தானே, அவரு கடனை நாம அடைக்கணும்”.

“அதுதானே” என்று ஆதரித்தான் மற்றவனும்.

இந்த சமயத்தில் இயங்க பேச்சைக் கேட்ட யாரோ, விழுத்து விழுந்து சிரிக்கிறமாதரி ஒரு சத்தம் கேட்டுது. கெக் கெக் கெக் கெ… ஓ கெக் கெக் கெக் கெக்கெட்

இவங்க எல்லாப் பக்கமும் திரும்பிப் பாத்தாங்க. யாரையுமே காங்கலை. அந்தரத்திலெ இருந்து சிரிப்புச் சத்தம் மாத்திரம் கேட்டுப் பதறிப்போனாங்க. இவங்க பதறுனதையும் திகைக்கிற தெயும் கண்ட அந்த அசரீரி மேலும் மேலும் சிரிச்சி உருண்டது.

இவங்கனோடே திகைப்பும் பதட்டமும் நீங்குறதுக்கு முன்னா லெயே அந்தக்குரல் இவங்களைப் பாத்து ‘ஏ அப்பா கடங்காரங்களா! என்னை பங்களுக்குத் தெரியலையா? இந்தா பாருங்க, நாந்தான் பேசுதேன்!”

சோளக்காட்டு காவலுக்கு அங்கே போட்டிருந்த பரண் உச்சியிலே ஒரு மாட்டுக்கொம்பு, பூண்பிடிச்சமாதரி ஒரு கம்பு துணியலெ நட்டமா சொருகி வச்சிருந்தது. அதுதான் அப்படிச் சிரிச்சதும் பேசினதும்!

‘போன ஜென்மத்திலே தான், இப்பொ நீங்க கடன் வாங்கப் போரிகளே அவருகிட்டத்தான் நானும் கடன் வாங்கிருந்தேன். கடனை வாங்கி வாங்கி ரொம்பப் போடுஸா செலவழிச்சேன்.

“இந்த ஜென்மத்திலெ அவரு தொழுவிலேயே வந்து மாடாப் பிறப் பெடுத்தேன், கன்றுக்குட்டியா இருந்தப்பொ என் தொண்டை நனைஞ்சிருக்காது தாய்ப்பாலு, காளையா வளந்த உடனே “பசுச் சுகம் அறிய முன்னாடி என்னை உடையடிச்சி உழவுலெ சுட்டிட்டாங்க. ஆயுசு பூராவும் குளம்புக தேய முன்னும் பின்னும் நடந்து நடந்து மூக்கணாங்கயிறு மூக்கை அறுத்து ரெத்தம் கசிய அவரு தோட்டத்துக்குக் கமலை இழுத்து தண்ணீர் இரைச்சேன். குப்பை வண்டி இழுத்தேன்.

ஆயுசு முடிஞ்சி செத்துப்போன பிறகும் அவுகளுக்கு என் தோலை உரிக்கக் கொடுத்து கமலைக்குக் கனைவாலாய் தண்ணி இரைக்க உதவுனேன். கூனைவாலாகிக் கிழிஞ்சபிறகும் அவுக வீட்டு ஆண்களுக்கு காலுக்குச் செருப்பாகி உழைச்சேன். அப்பவும் என் பாடு தீரலை. இப்போ, அவரோட தோட்டத்துக்குக் காவல் காத்துக்கிட்டிருக்கேன்…”

இப்படிச் சொல்லிட்டு மாட்டுக் கொம்பு சிரிக்க ஆரம்பிச்சது. சிரிப்புச் சத்தம் மாதரிக் கேட்டாலும் கவனிச்சுக் கேட்டா அது அழுகைச் சத்தம் போல இருந்தது.

ஒண்ணும் ஓடலை இவங்களுக்கு, அப்படியே “மெம்மறந்து நிண்ணுட்டாங்க”.

அப்புறம் அவங்க கடன் வாங்கப் போனாங்களா; வந்த வழியைப் பாத்துத் திரும்பிட்டாங்களா; தெரியலை.

அந்த நேரத்திலெ, பல்ராம் நாயக்கரோட மகள் ஓடியாந்து “அய்யா; மாடு அவுத்துக்கிட்டது; முட்ட வருது ஓடியா”ண்ணு பரபரப்பாக் கூப்பிட்டா.

வேகமா எந்திரிச்ச நாயக்கரு, அவுத்த கோமணத்தெ அறணாக்கயித்லெ சொருகிக்கிட்டே அவசரமாய்ப் போயிட்டாரு.

– தீபம், அக்டோபர் 1979

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *