ஒரு கவிதை பார்த்திபனைக் கிழிக்கிறது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 13, 2022
பார்வையிட்டோர்: 13,272 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிழிக்கப் போறேன் நாள் அவனை. ஆமா! பின்னே!

என்னை எழுதுறதா நினைச்சுக்கிட்டு அவன் மட்டும் கிறுக், கிறுக்குன்னு கிறுக்கி பொஸ்தகம் வேற போடலாமா?

விவரஸ்தர்கள் யாரும் அந்த நூலைக் கிழிச்சி நூல் நூலாத் தொங்கவிட்டுடக் கூடாதுன்னு ‘கிரிமினல் புத்தி’ரன் – கில்லாடியவன் ‘கிறுக்கல்கள்’னு வெச்சான் பாரு டைட்டிலு. அதுக்கே குடுக்கணும் அவனுக்கு பட்டம் ‘டாக்டரு’!

சுத்தமா படிப்பு வாசனையே இல்லாத அந்தக் கழுதைக்கு இலக்கணமெல்லாம் கற்பூர வாசனை!

ப் பக்கூட (தூ…எனக்கும் அவன் ஸ்டைலு ஒட்டிக்குது). இப்பக்கூட அவன் கிட்டே ‘ப், க், ச்’ எங்க போடணும்னு கேட்டுப் பாருங்க. ‘முதல் ரெண்டு தெரியாதுங்க ஆனா, ‘ச்’ மட்டும் உதட்டுலதான் போடனும்’னு நக்கல் நாதஸ்வரம் வாசிப்பான், அந்த ‘சிக்கல்’ சண்முகசுந்தரம்.

இந்த மாதிரி உதிரி ‘உதார்’களை உதாரணமாப் பேசறதுல, அவதார புருஷன் அவன், ஒரு கல்லூரி விழாவுல தரையெல்வாம் பெண்கள். மேடையில் இவன் மைக்கப் புடிச்சி “பொதுவா பூ மரங்களுக்கு கீழதான் உதிரி உதிரியா சிதறிக் கிடக்கும், ஆனா, மரங்களே இல்லாத இந்த ஹாலுக்குள்ள எப்படி இவ்வளவு அழகான பருவப் பூக்கள் தரையெல்லாம் இறைஞ்சி கிடக்கு?” அவ்வளவுதான்…புஸ்வாணம் தீப்புடிச்ச மாதிரி கலர் கலரா சிரிப்பூக்கள். அந்த டீனேஜ் பொண்ணுங்க மனசை டேமேஜ் பண்ணதால அதுங்களும் ‘எவ்வளவு கவிதையா பேசறாண்டி!’

அவன் பேசுனது கவிதையா?

கவிதைதானேன்னு எனக்கே டவுட்டு வர்ற மாதிரி பேசுறதுதான் அவனோட ஸ்பெஷாலிட்டி.

கவிஞர் ரா.பார்த்திபன்

சுவிஞரா? பார்த்திபன்!

அந்த ‘பார்’கவியிடம் போய் இன்ன பொருளில் ஒரு கவிதை எழுதித் தாரு மய்யான்னு கேட்டுப் பாருங்க.

உள்ளுக்குள்ள புளி சுரைக்கிறதை வெளிக்காட்டாம ‘i think’ என் ‘பச்சக்குதிர’ shooting இந்த மாசம் 14-ஆம் தேதி வரைக்கும் போவுதுன்னு நினைக்கிறேன். எதுக்கும் Feb, 30th என் P.A. (Parthepan’s Assistant) கிட்ட பேசுங்க’ன்னு சொல்லி Great escape!

“வேணாம்யா ஒரு ஹைக்கூவாவது..”

“ஓ…அதானே..ஒரு டீ சொல்லுங்க!”ன்னு சொல்லிட்டு ஸ்டைலா NIB உயரமுள்ள ஒரு பேனாவை எடுத்து எழுதத் தொடங்கிருவான்.

IQ
இன்னும் 24…
அதே க்யூவில்!

பாட்டி’ என சில்லறையாய்ச் சிரிப்பான்.

ஒரு ஓட்டை மோட்டார் திடீர்னு ஸ்டார்ட் ஆன மாதிரி பேப்பர்ல பேனாவைக் கீறுவான்.

ஓரிஜினலாய் அழுகிறாள்
அந்த நடிகை
கிளிசரின் குப்பியைக் காணாமல்…!

‘அட’ன்னு அடுத்தவங்க சொல்றதுக்கு முன்னாடி ‘அடடடடா’ன்னு அவளே அதை எடுத்து அடுத்த புக்குக்குன்னு இப்பவே ‘புக்’ பண்ணி வெச்சிருவான்.

ஒரே ஒரு விஷயத்துக்காக மட்டும் நானே அவனை மனசாரப் பாராட்டுவேன். அது…

ஒரு கட்டுரை – ஒரு வாக்கியம் – ஒரு வார்த்தை மட்டுமில்ல, ஒரு ஒத்தை யெழுத்து, அது ஒற்றெழுத்தா இருந்தாக் கூட அதை எழுத ராத்திரியும் பகலுமா, தூங்காம கொள்ளாம் முட்டி மோதி போராடி, ஓ.கேன்னு சொல்ற அளவுக்கு ஒப்பேத்திடுவான்.

என்னோட உருவை வேணும்ளா உருப்படாம செஞ்சுடுவானே தவிர, கருவை மட்டும் கரெக்டா வெச்சிருவான்.

கருவுற்றதால் தாயாகாமல்
சுருணையுற்றதால்
அகில உலகத்துக்கே
‘அன்னை ‘ ஆனவளே!

அன்னை தெரசாவோட அருளாசி அவனுக்கு உண்டு போலயிருக்கு!

டிசம்பர் 20ஆம் தேதியில் பாதிக்கப்பட்டவங்களுக்காக உதவி செய்ய பகலெல்லாம் போராடிட்டு, அர்த்த

ராத்திரியில உக்கார்ந்து எல்லாக் கவிஞர் களையும் மாதிரி, அவனும் ஒரு கவிதை யாவது எழுதணும்னு சுனாமி – பினாமி – கனாமின்னு கடாயில சுடுகு, மிளகு, போட்டுத் தாளிக்கிற மாதிரி செஞ்சு பார்த்தான், குப்பைக் கூடை கர்ப்பமானது தான் மிசசம்.

வைரமுத்துவோட கவிதையைப் படிச்சதும் அவன் முகம் சுமத்ரா தீவு மாதிரி ஆயிடுச்சு. |

‘அதைவிட எழுத நம்மால முடியாது சாமி’ன்னு கற்பனையெல்லாம் கடாசிட்டு கரிசனத்தோட ஒரு உண்டியலை எடுத்து, அதில்

‘கடல் நீரை மிஞ்சிய
கண்ணீரை
இதயம் நனைந்த
மனிதம் கொண்டு
துடைப்போம்’னு

எழுதி, தான் மட்டும் போகாம், இல்லாதவங்களுக்கு உதவுற எண்ணத்தை இளம் வயாலயே விதைக்கனும்னு, தனனோட குழந்தைகளை கூட்டிக்கிட்டு தெருத் தெருவாப் போய், சமூகத்தையும் அதில் ஒரு பங்கா சேர்த்துக்கிட்டு, கரையில் உயிருள்ள சடலங்களா ஒதுங்கியிருக் கிறவங்களுக்கு நேரடியா உதவுன அந்த மனிதநேயம் தான் நான் அவன்கிட்ட மதிக்கிற நல்ல கவிதை மட்டுமில்ல, காவியம்கூட!

அப்படிப் பாராட்டுற அதே தேரத்தில் என் பேரைச் சொல்லி ஒரு திருட்டுத் தனத்தையும் பண்ணியிருக்கான் பாருங்க..!

‘கல்கியில் ‘கவிதைச் சிறப்பிதழ்’ போடறோம். கவிதை எழுதிக் குடுங்க’ன்னு கேட்ட பாவத்துக்கு, தலைப்புல மட்டும் என் பேரைப் போட்டுட்டு, முழுக்க முழுக்க உரை நடையாவே எழுதியிருக்கிற இந்த ‘ஃப்ராடு தியரி’யை எங்க போயி complaint பண்றது?

கேட்டா,

“கவிதை எழுதத்தானே எதுகை மோனையெல்லாம்; கவிதை தானே எழுத எதுக்கந்த மொகரையெல்லாம்”னு கவிதை மாதிரியே ஒரு finishing touch கொடுத்து, படிக்கிறவங்களுக்கும் தப்பான கற்பிதம் பண்ற அவனை எப்படி நான் சீர் செய்ய?

இப்படிக்கு…
கவிதை

(இல்லீங்க! கவிதை பெயரில் ஒளிந்து கொண்டு இதை ஒரே மூச்சில் எழுதிக் கொடுத்தவர் சாட்சாத் பார்த்திபன்தான் – ஆர்)

– 30-01-2005

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *