“என்ன பிரசிடென்ட்ஜி! உங்களுக்கே இது நன்றாக இருக்கிறதா?” என்றாள் அகல்யா தேவி. பா.மு.கழக செயலாளி.
“ஐ டோண்ட் காச் யூ.. என்ன சொல்கிறீர்கள் அகல்யா தேவி…?” என்றாள் சீதாப்பாட்டி.
அகல்யா தேவி இன்னோர் அங்கத்தினரிடம் அதற்குள் காதில் என்னவோ கிசுகிசுத்தாள். அந்த அங்கத்தினர் புன்சிரிப்புடன் இன்னொரு சக கிழவியிடம் கிசுகிசுத்தாள். புறப்பட்ட சீதாப்பாட்டியைச் சுற்றிலும் பா.மு.க அங்கத்தினர்கள் சூழ்ந்துகொண்டு அரைச் சிரிப்புடன் என்னவோ மறியல் செய்யாத குறையாக வழியில் நின்றார்கள்.
“நோ குவெஸ்சன் அப் மை மிஸ்டேகிங் எனிபடி. என்ன சொல்ல வேண்டுமோ இதை ஓபனாகச் சொல்லலாமே?” என்றாள் சீதாப்பாட்டி.
அகல்யா தேவி, “எங்கள் கழக பிரசிடெண்ட் இப்படிக் கால் நடையாகவே போவதும் வருவதும் எங்களுக்கெல்லாம் என்னவோ மாதிரி இருக்கிறது. அதுவும் எங்கள் மதிப்புக்குரிய பிரசிடெண்ட் கணவர் ஒரு லட்சாதிபதியாக திகழும்போது…” என்றாள்.
சீதாப்பாட்டி. “ஓ! மை காட்! அம்மாடி! நான் என்னவோ ஏதோ என்று கலங்கிப் போனேன். எல்லாருமாகச் சேர்ந்து கொண்டு க்ரியேட் செய்த ஸஸ்பென்ஸில்!” என்றவள்.
“நட ந்துபோவது உடம்புக்கு ஆரோக்கியமானதுதானே?” என்று புன்னகை புரிந்தாள்.
“நோ! நோ அவர் பிரசிடெண்ட் ஷ¥ட் ஓன் எ கார்…”
“எங்கள் பிரசிடெண்ட் காரில்தான் வரவேண்டும். காரில் தான் போகவேண்டும்.”
“உங்களுக்கு என்ன குறைச்சல் பிரசிடெண்ட்? யு ஆர் தி லக்கியஸ்ட் அவ் தி லாட்… உங்கள் ஹப்பி நீங்கள் கார் என்பதற்கு முன் கார்வீலாகவே கொண்டுவந்து விடுவார்…”
சீதாப்பாட்டிக்கும் சபலம் தட்டிற்று. வீட்டுக்கு வந்ததும் அப்புசாமியிடம் தன் ஆசையை வெளியிட்டாள்.
“காராவது மோராவது?” என்றார் அப்புசாமி.
“கார் ஒன்றும் நான் வாங்கப் போவதில்லை!”
சீதாப்பாட்டிக்கு அப்புசாமியின் இந்தப் பதில் கொடுத்த ஷாக்கைக் கொண்டு அரை டஜன் ஆயிரம் வாட் பல்புகள் குறைந்தது ஆறு மணி நேரமாவது எரிந்திருக்கும்.
உதட்டை கடித்துக் கொண்டாள். இத்தனை வருட காலத்தில் அவள் வாயைத் திறந்து கணவனை அது வாங்கித்தா, இது வாங்கித்தா என்று கேட்டதோ அப்படிக் கேட்டவுடன் வாங்கித் தந்து விடக்கூடிய ஒரு வசதியான நிலையில் அப்புசாமி இருந்ததோ கிடையாது.
மூக்குப் பொடிக்காக மூன்று பைசா வேண்டுமானால் முன்னந் தலையை நாலு தரமும் பின்னந் தலையை எட்டுத் தரமும் தன்னிடம் சொறிந்து கொண்டிருந்த அந்த அப்பாவி கணவரா இப்படிக் ‘காராவது மோராவது’ என்று அவளது ஆசையை நிராகரிக்கிறார்!
“யு… யு… மீன்?” என்று தடுமாறினால் சீதாப்பாட்டி. அவளுக்கு உதடு உலர்ந்துவிட்டது. மூக்குக் கண்ணாடியைக் கையிலெடுத்துத் துடைத்தாள்.
அட்வான்ஸ¤க்கு விண்ணப்பம் போட்டு விட்டு முதலாளி கையெழுத்துப் போடுவாரா மாட்டாரா என்று படபடக்கும் குமாஸ்தாவின் நெஞ்சுபோல சீதாப்பாட்டியின் உள்ளம் துடித்தது.
‘கார் வாங்கலாம்’ என்ற யோசனை சொன்னதுமே, ‘சீதே! சீதே! பேஷ்! பேஷ்!’ என்று ஆனந்தப் பள்ளுப் பாடுவார் ஆசாமி என்று சீதாப்பாட்டி எதிர் பார்த்திருந்தாள்.
அப்புசாமி, டென்னிஸ் சாம்பியன் எதிர்பாராத இடத்தில் பந்தை ‘ப்ளேஸ்’ செய்வதுபோலப் பதில் கொடுத்துவிட்டார்.
சீதாப்பாட்டிக்குப் பெருத்த வருத்தமும், அவமானமுமாகிவிட்டது. “ஹ¥ம்” என்ற பெருமூச்செறிந்தாள்.
“யு ஆர் வேஸ்டிங் மனி லைக் எனிதிங்… நான் ஓர் உருப்படியான யோசனை சொன்னது உங்களுக்குப் பிடிக்கவில்லை. ரேஸ் மைதானத்திலே பணத்தைக் கீழே இறைத்து, பொறுக்கிக் கொள்ளுங்கயா வேணுமானாலும், என்று சொன்ன ஸ்பெண்ட்த்ரி·ப்ட் நீங்கள்.. ஒரு கார் வாங்கலாம்மென்றதற்குக் கணக்குப் பார்க்கிறீர்கள்?”
அப்சாமி, “சீதே!” என்றார்.
“அயம் நாட் யுவர் சீதே… என்னை ஒன்றும் கூப்பிட வேண்டியதில்லை. உங்களுக்குப் பணத் திமிர் ரொம்ப ஏறிவிட்டது.”
“அட கணணராவியே! நான் கார் வேண்டாம் என்று சொன்னது பணத்துக்குக் கணக்குப் பார்த்து என்றா நினைத்துக் கொண்டாய்?”
“பின்னே? தென் வாட் எல்ஸ்?” என்றாள் சீதாப்பாட்டி.
“ஐயோ ராமா! கார் என்றால் காரோடு ஒழிந்து போகுமா? அதற்கு ஒரு தோலான், துருத்தியான் என்று ஆளை வைக்க வேண்டுமே? ஒரு டிரைவரைப் போட்டுத் தொலைக்க வேண்டும். ஒரு பட்லரை போட்டு அவன் ஹிட்லர் மாதிரி ஆட்டம் ஆடி ஒரு வழியாக ஒழிந்தான். இப்போது சனி இடப் பெயர்ச்சி மாதிரி என் கிரகத்துக்கு ஒரு டிரைவர் இடம் பெயர்ந்து வரவேண்டுமாக்கும்?” என்றார் அப்புசாமி.
சீதாப்பாட்டி, “ரியலி!”. என்றாள்.
“உண்மைலி! உண்மைலி!” என்றார் அப்புசாமி. “எனக்கு மட்டும் கார் ஆசை இல்லையா என்ன, டிரைவர் பிரச்சினைதான் கொல்கிறதே.”
சீதாப்பாட்டி புன்ன¨ பூத்தாள். அவள் முகம் மாலை மஞ்சள் வெயில் பட்டதுபோல் பிரகாசித்தது. அல்லது அப்போதுதான் அப்ஸேவிச் போட்ட டூம் லைட் போல் கும்மென்று அந்த உருண்டை முகத்தில் ஒளி ஏறியது.
அந்த ஒளிக்குக் காரணம் தெரியாம அப்புசாமி திகைத்தார்.
சீதாப்பாட்டி வாயைத் திறந்தாள் “ப்ராப்ளம் இஸ் ஸால்வ்ட்… டிரைவரைப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம் கார் நீங்கள் தாராளமாக வாங்கலாம்.”
அப்புசாமி, “எப்படி! எப்படி! யாரும் ஓட்டாமல்தானே ஓடக்கூடிய மாஜிக் கார் ஏதும் வந்திருக்கிறதா என்ன?” என்றார்.
சீதாப்பாட்டி குரலை மெதுவாக்கி கொண்டு தலையைக் குனிந்தவாறு, “ஐ… நோ… டிரைவிங்…” என்றாள்.
அப்புசாமி அதிர்ச்சியுடனும் ஆனந்தத்துடனும், “என்ன நிஜமாகவா… உனக்குக் கார் ஓட்டத் தெரியுமா?” என்றார்.
“சீதே!” என்றார் அப்புசாமி, அவசரமாகவும் அதிகாரமாகவும்.
கார் வாங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது.
“எஸ்… கமிங்…” என்று குரல் கொடுத்தாள் சீதாப்பாட்டி உள்ளிருந்தவாறு.
“கோ அண்ட் ஓபன் தி ஷெட் டோர் பர்ஸ்ட்…”
அப்புசாமி சாவி எடுத்துக் கொண்டு போய் கார் ஷெட்டின் கதவை திறந்தார்.
கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார்.
“என்ன நீ ரொம்ப ரொம்ப நேரம் செய்கிறாய். அங்கே ஆட்டம் ஆரம்பித்துவிடப் போகிறான்” என்றார்.
சீதாப்பாட்டி கைப்பையுடன் சுறுசுறுப்பா வந்தவள் “நோ பிக்சர் ப்ரோக்ராம் டுடே! யூ ப்ளீஸ் ·பிக்ஸ் அப் சம் அதர் டே. நான் கிளப்புக்குக் காரை எடுத்துப் போகிறேன். உங்களைத் தியேட்டரில் ட்ராப் பண்ண இன்றைக்கு நேரமில்லை” என்றவள் காரில் ஏறி உட்கார்ந்து ஸ்விச் சீயைத் திருகிவிட்டு ஸ்டார்ட் செய்தாள்.
அப்புசாமி மூக்கை திருகியிருந்தால்கூட அவர் அப்படிக் கோபப்பட்டிருக்கமாட்டார். கார் வந்த இந்த ஒரு வார காலமும் இப்படித்தான் சீதாப் பாட்டி தன் கணவனுக்கு அதிகமான சாரத்தியம் செய்யாமல் தன் இஷ்டத்துக்கே காரை உபயோகப் படுத்திக் கொண்டிருந்தாள்.
“ஓகோ” என்றார் அப்புசாமி விறைப்புடன். இன்றைக்குத்தான் அந்தப் ‘போகிறேன் உதை மாஸ்டர்’ கடைசி நாள். “நீ இப்போ சினிமாக் கொட்டகைக்கு என்னைக் கூட்டிப் போகிறாயா இல்லையா?”
“உங்களோடு வம்பாக போய்விட்டது?” என்ற சீதாப்பாட்டி, “அது ஒரு செவன்டீன்த் சென்ச்சுரி ஸீரியல் பிக்சர். அதைப் பார்க்கிறது ரொம்ப அவமானம். அதுவும் அதற்குப் போய் இந்த மாதிரி கார் போட்டுக் கொண்டு போவது சகிக்கமுடியாத அவமானம். எனக்கு இன்றைக்குச் சங்கத்தில் சரியாக ஸிக்ஸ் தர்ட்டிக்கு ஒரு மீட்டிங்.”
அப்புசாமி மூக்கு விடைத்தது. கார் வந்த இந்த ஒரு வாரமாக மனைவி வைத்தது அல்லவா சட்டமாக இருக்கிறது?
அன்றைக்கென்னடா என்றால் ‘மூர்மார்க்கெட் ஒரு பொம்மலாட்டம் நடக்கிறது’ என்று கூப்பிட்டார். அப்போது, இப்படித்தான் தாட்பூட் என்று என்னவோ சொல்லிவிட்டுக் காரைப் புர்ரென்று கிளப்பி போய்விட்டாள். கார் என்றால், திருப்பி திருப்பி இவளுடைய கழகத்துக்கும், இவளாகப் பார்த்து நினைத்துக் கொண்டு கூப்பிடுகிற இடத்துக்கும்தான் போக வேண்டுமா? ஏனோ தெரியவில்லையே. பிரியப்பட்டு ஒரு சினிமா பார்க்க உபயோகப்படாத அப்படிப்பட்ட கார் இருந்தென்ன, போயென்ன? இவள் யார் அப்புசாமியை இங்கே போகாதே அங்கே போகாதே என்று சொல்ல…
சீதாப்பாட்டி அப்புசாமிக்குள் எரிமலை ஒன்று புகைவதை அறியாமல் காரை ஸ்டார்ட் செய்தாள். அவ்வளவுதான், அடுத்தகணம் அப்புசாமி தான் ஏறத்திறந்த கார்க் கதவை டமாலென்று காது செவிடாகும்டி அடித்தார். டிரைவர் ஸீட் கதவை அதே கோபத்தோடு திடீரென்று திறந்தார்.
“முதலில் இறங்கு. உன் கழகமுமாயிற்று கத்திரிக்காயுமாயிற்று” என்று வீறிட்டார்.
“இதோ, இப்போதே, இந்தக் காரை விற்றுத் தலை முழுகிவிடுகிறேன் பார்.”
சீதாப்பாட்டி, அப்புசாமிக்கும் மேலாகக் கார்க்கதவைப் படீரென்று ஓங்கி அறைந்து சாத்தியபடி கீழே இறங்கினாள்.
“வாட் ஹாபண்ட் டு யூ? ஏதானும் ஸன்ஸ்ட்ரோக் கின்ஸ்ட்ரோக்கால் மூளை குழம்பி போய்விட்டதா? கொஞ்சம் கூட மானர்ஸ் இல்லாமல் அக்கம் பக்கம் செவிடாகிற மாதிரி காட்டுக் கத்தலாக ஏன் கத்தினீர்கள்! உங்கள் காரை நீங்களே தலையில் தூக்கிக் கொண்டு சினிமாவோ தெருக்கூத்தோ பார்க்க ஓடுங்கள்… சே! சே! யு ஆர் பிகமிங் ஹாரிபிள். டே பை டே!”
என்றவள்,. “டாக்ஸி…” என்று தெருவில் போன ஒரு டாக்ஸிக்குக் குரல் கொடுத்தவாறு இறங்கிப் போய்விட்டாள்.
கடு கடு என்ற முகத்துடன் காகத்துக்குப் போன சீதாப்பாட்டி. மாலையில் வீட்டுக்குத் திரும்பினாள்.
அப்புசாமி ஈஸிசேரில் படுத்துக் கொண்டிருந்தார். வெள்ளை வெளுக்க ஒரு சலவை வேட்டியை, துணி உலர்ந்தும் கோலில் கட்டி. ஈஸிசேர் அருகே முட்டுக்கொடுத்து நட்டிருந்தார். சீதாப்பாட்டியைக் கண்ட தும் குபுக்கென்று எழுந்து அந்தக் கொடியைக் கையில் எடுத்துக் கொண்டு. “சமாதானம் வாழ்க! வெள்ளைக் கொடி வாழ்க!” என்று சீதாப்பாட்டி முகத்தின் மேல் படுகிற மாதிரி வெள்ளை கொடியை ஆட்டினார்.
சீதாப்பாட்டி, “நோ…நோ…நோ… ஐ டோன்ட் வான்ட் திஸ் ஸில்லி ப்ளே… மனுஷியாக இருக்கிறவள் உங்களோட ‘ட்ரூஸ் டாக்’ பேச முடியுமா?” என்றவள், கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்கிக்கொள்ள வேண்டியிருந்தது.
அப்புசாமி, கொடியாட்டத்தை நிறுத்தினார். “நீ போன பிறகுதான் எனக்கு ஞானோதயம் ஏற்பட்டது. என்னத்துக்கு நமக்கு ரகளை? எலியும் தவளையும் கல்யாணம் செய்துகொண்டு எலி இழுத்த இடத்துக்குத் தவளை வராமல், தவளை இழுத்த தண்ணிப் பக்கம் எலி வராமல் தடுமாறின கதையாக…” என்றார்.
சீதாப்பாட்டி சற்று அதிர்ந்து, “வாட் ஆர் யு ட்ரைவிங் அட்…?” என்றாள்.
“ஆமாம்.ஆமாம். நி சொல்றதேதான்…” என்றார் அப்புசாமி.
“என்ன நான் சொல்றதேதான்?”
“அதாவது… என்ன சொல்கிறேன் என்றால் எனக்கும் ஓட்டக் கற்றுக் கொடுத்துவிடு என்றேன். எப்படி என் யோசனை? கார் ஓட்ட எனக்குத் தெரிந்து விட்டால், உன் பிராணனை நான் எடுக்க வேண்டியதில்லை பார்?”
சீதாப்பாட்டி யோசித்துவிட்டு, “ஊரார் பிராணனையும் எடுக்காமல் ஜாக்கிரதையாக ஓட்ட வேண்டுமே… ஏதோ நல்ல ஐடியவாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள் போலிருக்கிறது” என்றாள்.
“சபாஷ் என்று வாயைத் திறந்து தாராளமாகத்தான் சொல்லேன். கஞ்சி, கஞ்சி!” என்ற அப்புசாமி.
“மோட்டார் குருவே! எப்போது நமது பாடம் ஆரம்பம்?” என்றார்.
“இதோ பார்த்தீர்களா, இதுதான் ஸ்விச்… இதைப் போட்டுவிட்டு இதோ பார்த்தீர்களா, இது ஸ்டார்ட்டர் இதைப் பிடித்து இழுக்கணும்”
சீதாப்பாட்டி அமைதியாக விளக்கினாள்.
“ஓகோ… இதைப் போட்டுவிட்டு அதை இழுக்கணும்… சரிதான் சரிதான்…” என்றார் அப்புசாமி.
“இது, அது என்றால் எப்படி? அது அதனுடைய நேமை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இது ஸ்விச்… யு கான் ரிமம்பர் இட் வெரிவெல்.. திஸ் ஒன் ஸ்டார்ட்டர். யு ஹாவ் டு புல் திஸ்… அன்டர் ஸ்டான்ட்?”
“சரி. புல் பண்ணுகிறேன்…” என்று அப்புசாமி கஷ்டப்பட்டு மாத்திரை விழுங்குவதுபோல் ஒப்புக்கொண்டார்.
“நெள… யு ஷ¤ட் பிரஸ் தி ஆக்ஸிலரேட்டர்…”
“என்னது! ஆக்ஸிடண்டா?” என்று பதறினார் அப்புசாமி.
“ஆக்ஸிலரேடர்… மெதுவாகக் கொடுக்கணும்… இல்லாவிட்டால்… இப்போ பாருங்கள் வேகமாகக் கொடுக்கிறேன்…”
“அப்புசாமி, “ஐயோ அம்மாடி, இரைச்சல்!” என்று காதைப் பொத்திக் கொண்டார்.
“ஓகோ… அதை எப்படி வேணும்னாலும் கொடுக்கலாமாக்கும்!”
“எதை? நான் அப்போதே என்ன சொன்னேன்? அது இது என்று மென்ஷன் பண்ணக்கூடாது. ஈச் அன்ட் எவரி திங் ஹேஸ் காட் இட்ஸ் நேம். காரைக் கண்டு பிடித்தவன் ஓரோரு பார்ட்டுக்கும் பேரையும் கண்டு பிடித்திருக்கிறான். கோபித்துக் கொள்ளாதீர்கள்… இது அது என்று இனி சொல்லக்கூடாது… ப்ளீஸ், கவனியுங்கள்…” என்றாள்.
“ஊம்…” என்றார் அப்புசாமி, வாயைத் திறக்கவே அச்சப்பட்டவர் போல.
“அதற்கென்று சந்தேகம் வந்தால் வாயை இறுக மூடிக்கொண்டு, ஒன்று கிடக்க ஒன்று தப்பாக நினைத்துக் கொண்டு ·பூல்ஸ் பாரடைஸ்லே இருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. தெரியவில்லையானால், ஒரு தரத்துக்கு நாலு தரம் கேளுங்கள். கேட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்… அதுதான் நான் சொல்றது…”
அப்புசாமி. “சரி.. சரி.. அப்படியே கேட்கிறேன். இப்போ என்னவோ… கொடுக்கணும், கொடுக்கணும் என்றாயே அது என்ன? கொஞ்சம் நிதானமாகச் சொல்லு. நீயும் எனக்குக் கொஞ்சம் நன்றாக நிறுத்தி நிதானமாகச் சொல்ல வேண்டும். இப்போ உன்னை ஏரோப்ளேன் ஓட்டுவதற்கு அழைத்துப் போய்க் கூட ஒருத்தர் உட்கார்ந்து கொண்டு ‘படபடபட’ ‘படபடபட…’ என்றால் உனக்குப் புரியுமா! அப்படித்தான் எனக்கும் மெதுவாகச் சொல்லு…”
“ஆல்ரைட்… யு ஆர் கரெக்ட்… இப்போ நான் காலால் அழுத்தினது ஆ…க்…ஸி…ல…ரே…டர்…”
“பார்த்தியா? நீ, நீ சொன்ன அதைக் காலால் அழுத்த வேண்டும் என்று இப்போதுதான் முதல் தடவையாகச் சொல்கிறாய்…” என்றார் அப்புசாமி.
“ஆக்ஸிலரேடர்… இதோ…இதோ பாருங்கள் காலுக்குக் கீழே அந்தக் கோடியில் நான் கால் வைத்திருக்கிறேன் பாருங்கள்… அதுதான்…”
“ஓகோ…” என்றார் அப்புசாமி. “அதை அழுத்தணுமாக்கும்?” என்றார்.
“எதை?” என்றாள் சீதாப்பாட்டி சட்டென்று.
“எலிமெண்ட்டரி ஸ்கூல் வாத்தியார் மாதிரி போட்டுக் கொல்கிறாயே… எதையோ ஓர் இழவை…”
“நோ… நோ… பர்ஸ்ட் ஆ·ப் ஆல் ·பண்டமேன்டலான பெயர்கள் தெரிய வேண்டுமல்லவா?”
“கடவுளே!” என்று அப்புசாமி பல்லைக் கடித்தவர் “சரி, அச்சலேடர்” என்றார்.
“ஆக்ஸிலரேடர்… ரிபீட் திஸ் நேம் ஸிக்ஸ் டைம்ஸ்” என்றாள்.
சீதாப்பாட்டி காரை நகர்த்தியபடி, “எங்கே இப்படி லேசாக ஸ்டியரிங்கைப் பிடியுங்கள் பார்க்கலாம் அங்கிருந்தவாறே” என்றாள்.
“ஐயையோ” என்றார் அப்புசாமி.
“சும்மா தைரியமாக தொடுங்கள்” என்ற சீதாப்பாட்டி அப்புசாமியின் கையை எடுத்து ஸ்டியரிங் வீலின் மீது வைத்தாள்.
“எங்கே லேசாகத் திருப்புங்கள்.”
“ஐயோ நான் மாட்டேன். ஏதாவது ஆகிவிடும்” என்றவர் ஸ்டீயரிங்கை லேசாகச் சுற்றினார். “ஆகா ரொம்ப ஷோக்கா வளைக்க வருதே” என்றார்.
சீதாப்பாட்டி திடுமென்று கடிகாரத்தைப் பார்த்தவள் “அடடா! வி ஷல் ஸ்டாப் வித் திஸ் டுடே” என்றாள்.
“க்ளப்புக்கும் நேரமாயிற்று. தே வில் பி வெய்ட்டிங்…”
அப்புசாமி. “சரியாய்ப் போயிற்று. ஒன்றுமே கற்றுக் கொடுக்கவில்லையே?” என்றார். “அதற்குள்ளே போகிறதாவது?”
“நீங்கள் கார் ஓட்டக் கற்றுக்கொள்கிறதுக்கு அட்லீஸ்ட் டூ மோர் ஜன்மம்ஸ் வேண்டுமென்று தோன்றுகிறது” என்ற சீதாப்பாட்டி.
“இட் இஸ் கெட்டிங் லேட்… வெரி லேட். இன்றைக்குப் பா.மு.கழக புதுக் கட்டடத்தின் கிரகப் பிரவேச ஸெரிமனி. என்னை எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்” என்று காரைத் திருப்பி வளைத்துப் பா.மு.கழகத்தை நோக்கி விரைவாக ஓட்டினாள்.
அப்புசாமி, “ஊஹ¥ம்… ஊஹ¥ம். இன்றைக்கு எனக்குப் பாதியாவது கற்றுத் தந்துவிட்டுத்தான் நீ உன் கழக ஜோலியைக் கவனிக்க வேண்டும். கார் என்னது. தெரிந்துக்கொள் கொஞ்சம்” என்றார்.
“ஷட் அப்! டிரைவிங் செய்யும்போது தொந்தரவு பண்ணாதீர்கள்” என்று ஸ்டியரிங்கைத் தொட்ட அப்புசாமியைப் புறங்கையால் தள்ளினாள். புறங்கையால் தூசி தட்டுவது போலத் தள்ளுவதாவது தன்னை?
ஸ்டியரிங்கைப் பிடித்துத் தன் பக்கமாக இழத்தார். நாற்பது மைல் வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் அவர் ஸ்டியரிங்கை இழுத்த வேகத்தில் திசை தடுமாறியது.
சீதாப்பாட்டி என்ன முயன்றும் சமாளிக்க முடியவில்லை.
‘டமால்’ என்ற பேரொலி அடுத்த நிமிடம் விண்ணுக்கும் மண்ணுக்குமாகக் கேட்டது. அதைத் தொடர்ந்து தேவர்கள் அரைச் செங்கல்லும் முழுச் செங்கலுமாக வானத்திலிருந்து பொல பொலவென்று உதிர்த்தார்கள்.
அப்புசாமி தம்பதியின் அருமைக் கார் மோதிய அந்தக் கட்டடம், சாட்சாத் பா.மு.கழகக் கட்டடமேதான்.
பிரசிடெண்ட்டை வரவேற்பதற்காக மாலையும், தாம்பூலமும் தட்டுமாக இருந்த பா.மூ.கழக அங்கத்தினர்கள் குய்யோ முறையோ என்று கூக்குரலுடன் ஆளுக்கொரு பக்கம் ஓடினர்.
“ரொம்ப அடியா?” என்று சீதாப்பாட்டி தன் கட்டு மிகுந்த தலையுடன் கணவனை விசாரித்தாள்.
அப்புசாமி தன் கட்டு மிகுந்த உடலழகுடன் சீதாப்பாட்டியை. “நமக்கு பட்ட அடியைவிடக் காருக்குப் பட்டதுதான் அதிகம்” என்றார்.
மூன்றாவது குரலாக பா.மு.கழகக் காரியதரிசியின் குரல் கேட்டது. “பா.மு.கழகக் கட்டடததை மறந்து விட்டீர்களே! அதற்குதான் அதிக அடி!”