அந்தக் காலண்டரில் அப்படி என்ன இருக்கிறது?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 28, 2024
பார்வையிட்டோர்: 9,187 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சீதாப் பாட்டிக்குக் கனவா நினைவா என் தெரியவில்லை. காஸ்ட்ரிக் ட்ரபிளினால் சில சமயம் இப்படி இல்யூஷன் ஏற்படுவதுண்டே.. அந்த ரகமாயிருக்குமோ என்று எண்ணி மூக்குக் கண்ணாடியைத் துடைத் விட்டுக்கொண்டு காலண்டரைப் பார்த்தாள். 

சூபர்மான் அப்புசாமி அதில் நின்று கொண்டிருதார். 

கட்டுக் கட்டா உருண்டு திரண்ட மார்புகளும் தோள்களும் – இடுப்ப பெல்ட். தலை மட்டும்தான் பழைய அப்புசாமி தலையா இருந்தது. தாராசிங் மாதிரி ஜம்மென்ற கண்கவர் கட்டுலோடு அந்த முஷ்டியை அவர் வளைத்து உயர்த்திக் காட்டு கையின் திரட்சி. 

“மை குட்னஸ்! உங்கள் மாதிரியே அச்சா இருக்கிறது! வாட் இஸ் திஸ்? ஐ காண்ட் பிலீவ்!” என்றாள் சீதாப்பாட்டி. “ஃபர்ஸ்ட் கிளாஸ் ஹி மேனாக இருக்கிறதுகள்.” 

அப்புசாமி, “ஹி ஹீ,” என்றார். “எல்லாம் வடிவேலு வைத்தியர் ஏற்பாடு, வடிவேலன் மனசு வெச்சா வலரவெச்சான்.. காண்டாமிருகலேகியம் ஒரு மண்டலம் சாப்பிட்டால் இந்த மாதிரி வந்துவிட முடியும் என் என்னைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். ஆயிரத்து தொளாயிரத்து எண்பதாம் வருஷத்துக்கு இப்ப காலண்டர் ரெடி! நான் ஷோக்கா இல்லை?” 

சுவரில் மாட்டியிருந்த காலண்டரைக் கையில் எடுத்து மனைவியிடம் கொடுத்தார். ஒரு பாதியில் பலசாலி யான வாலிப அப்புசாமி படம். இன்னொரு பாதியில் மெலிந்த கிழ அப்புசாமி. வாலிபப் படத்தைக் காட்டி, “ராஜாமாதிரி இருக்கிறேனில்லை, சீய்தே! சத்தியமாக சொல்லு..இந்தக் காலண்டரில் இதோ இந்த என்னை பார்த்ததும் உனக்கு என்மேல் ஆசை வருதா இல்லையா? காதல்… வந்து டிச்சி!” 

‘யு ஆர் த ஸேம் ஆஸ் எவர். .பழைய ப்ரூம்ஸ் காகத்தான் நீங்க சகிக்க முடியாமல் இருக்கீங்க. .ட்ரூட் ஷோல்டர்ஸ். நேரோ நெக்.. தொள தொளக்கை போனி செஸ்ட். ட்ரிக் போட்டோகிராபி?” 

“கரீட்!” என்று மகிழ்ந்தார் அப்புசாமி”ஒரு பாதியிலே யிருக்கிறது காண்டா மிருக லேகியம் சாப்பிடறதுக்கு முன். அது என் அசல் படம், அடுத்த பாதியிலே இருகிற இந்த பலசாலியான உருவம் லேகியம் சாப்பிட்ட பிறகு. ட்ரிக் பண்ணி எடுத்ததும் என்ன அழகாக இருக்க்கே பார்!”

சீதாப்பாட்டி பல்லைக் கடித்தாள். “துரை போஸ் கொடுத்தீங்களாக்கும்? பர்ஸிஸ் கம்பாட்டான்னு நினைப்பு. ஊம்?” 

”என்னது, பர்ஸ் பாட்டனுதான்னா கேட்டே “

“இந்த மாதிரியெல்லாம் போலி விளம்பரத்து. நீங்க போஸ் கொடுக்கறது அவமானம். என் ப்ரெஸ்டீஜும் இதில் இன்வால்வ் ஆகிறது.” காலண்டரைச் சரக்கென்று சுக்கல் நூறாகக் கிழித்து வீசி எறிந்தாள் சீதா பாட்டி. 

அப்புசாமிக்கு மிகவும் ஆத்திரமாக வந்தது. தன்னுடைய ஆணழகப் படத்தை இன்னும் ஆசையாக அவரே பார்க்கவில்லை. அதற்குள் கிழவி கிழித் தெறிவதாவது. 

”சீதேய்!” உறுமினார். 

சீதாப்பாட்டி நகர்ந்தாள்.

“நில்லுடி.” கர்ஜித்தார் அப்புசாமி. “என் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு அந்தண்டை நகர். இல்லாட்டிக் கொலை விழும்…” 

“நான்ஸென்ஸ். உங்க ஆணழகன் ஃப்ராட் போஸ்களை எல்லாம் ஏதாவது சலூனில் மாட்டி வையுங்கள். திஸ் இஸ் நாட் த ப்ளேஸ். அடுத்த வாரம் நம்ம வீட்டிலேதான் பா.மு கழகத்தின் ‘கெட் டு கெதர்’ கூட்டம் நடக்கப் போகிறது. நீங்கள் போஸ் கொடுத்த காலண்டர் யார் கண்ணிலாவது பட்டால் அதுதான். பெஸ்ட் ஜோக் அஃப் த ஸீஸனாக இருக்கும்… யூ காச் மீ'” 

அப்புசாமி லபக்கென்று பாட்டியைப் பிடித்தார். 

“சீ! விடுங்கள்! இடியாடிக் காக நடந்துக்காதீங்க..”. 

”சீதேய்! டியேய் கியவி! நீ காலண்டரைக் கிழிக்கலாம். ஆனால் நான் முழுஅண்டராக வளருவேண்டி. இதே சுவரில் நூறு ஆணியில் நான் தொங்குவேன். ஜெய் காண்டா மிருக லேகியம்! ஜெய் காலண்டரா மிருக லேகியம்!” உணர்ச்சி வசத்தில் உளறினார். 

காலையில் சீதாப் பாட்டி கண விழித்தபோது அப்புசாமி தன் சவாலை நிறை வேற்றியிருந்தார். 

சமையலறை எட்டு ஆணழக அப்புசாமிகள். ஹாலில் ஒரு டஜன் வராந்தாவில் பத்து. வாசலில் ஆறு. கதவில் எட்டு. கக்கூஸில் கூட நாலு. அப்புசாமியின் வஸ்தாத் உருவம். புலித்தோல் கட்டிய கரடு முரடு சதைத் திரள்கள்.

சீதாப்பாட்டி ஒரு கணம் அசந்துவிட்டாள். 


சோழா ஓட்டலில் ஏர்கண்டிஷன் அறை வடிவேலு வைத்தியருக்குப் புழுங்கியது. காரணம் பக்கத்தில் கிடந்த பத்திரிகையில் வெளியாகியிருந்த அரைப் பக்க விளம்பரம்தான். 

“ஏய்யா அப்புசாமி, உனக்கு அறிவு வோணாம்?” 

“நீ ஏய்யா அங்கே மோதறே?”

“தண்டக் கருமய்யா.”

“சவாலை உங்க பாட்டனாய்யா நடத்துவான்?”

“கம்பெனியையே திவால் பண்ணிடுவே போலிருக்கே.” 

“எனக்குத் தெரியாது. உடம்பை நீ எப்படித் தேத்துவியோ!'” 

“கோழி அடிப்பியோ.. ஆட்டைப் பிடிச்சுத் தின்பியோ. முதலையை முழுங்குவியோ..” 

வடிவேலு வைத்தியரின் கரு கருப் பட்டாக் கத்தி மீசையும் சிவ சிவ சிவந்த கண்ணும் – ட்ரிங்க் வேறு- பர்மிட் ஹோல்டர்தான்- அப்புசாமியை அடிக்கடி பார்த்த விதம் அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை. 

“ஏய்யா நிற்குறே! தடிமுண்டம்.” 

அப்புசாமியின் பார்வை டீப்பாயின் மீதிருந்த பத்திரிகை விளம்பரத்தை நடு நடுவே சென்று பார்த்துத் திரும்பி வந்தன. 

“மாபெரும் சவால்! காண்டா மிருக லேகியம் சாப்பிட்ட பலவான் அப்புசாமி அசல் பயில்வான் டில்லி பாபா சிங்கைச் சந்தித்துக் காட்டுகிறார். 

அனுமதி இலவசம். செயின்ட் மாரீஸ் கலை அரங்கு”. 

நேரம், காலம், எல்லாம் கொட்டை எழுத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அப்புசாமி மென்று விழுங்கினார். 

“நிச்சயம் அந்தக் கிழவி வேலைதாங்க. அவளுக்கு எப்பவுமே என்னைக் கண்டா இளக்காரம்…” 

”சீ! நாக்கை அறுப்பேன். ராஸ்கல்!” வடிவேலு வைத்தியர் அப்புசாமியின் மேல் அருகிலிருந்த ஆப்பிளை எடுத்து வீசி அடித்தார். 

அப்புசாமி அவமானத்தைப் பொறுத்துக் கொண்டார். 

வைத்தியர் சீறினார். “சம்சாரத்துக்கிட்டே போய் சவால் விடலாமா? அறிவு கெட்ட முண்டம்! அவள் யாரு? இல்லத்து அரசி! அவள் இல்லத்துலே காலண்டரை மாட்ட வேண்டாம்னு சொல்லிட்டாள்னா நீ உடனே அதைக் கழற்றிட்டு வந்துட வேண்டியதுதானே?” 

“கொஞ்சம் மரியாதையாட் பேசுங்க வைத்தியரே!” 

“சீ! மரியாதையா! என் முப்பது வருஷ வைத்தியத் தொழிலும் உன்னாலே அம்பேலாகிடும் போல ஆடுது. உனக்கு மரியாதியா?” 

டீப்பாயை வைத்தியரின் எஃகு பஸ்ம உடம்பு எட்டி உதைக்க, அது அப்புசாமியின் மேல் வந்து அடித்து அவரை ஓர் இடி இடித்தது. 

அப்புசாமி மோவாயைத் துடைத்துக் கொண்டு, “வைத்தியரய்யா! ஒரு சின்ன யோசனை நான் சொல்லலாமா?” என்றார். 

பிறகு கடகடவென்று தன் யோசனையைச் சொன்னார். சுருக்கமான திட்டம். 

1.பயில்வான் டில்லி பாபா சிங்குக்கு பத்தாயிரமோ இருபதாயிரமோ லஞ்சம் கொடுத்து அவனை அன்று வரமுடியாமல் இருக்கப் பண்ணுவது. 

  1. அந்த இடத்தில் அதே நேரம் மேடையிலிருந்து வேறு யாராவது பயில்வான் வந்து சவாலை ஏற்றாலும் சந்திக்கத் தயார் என்று முழங்குவது.
  2. ‘நான் ஏற்கிறேன்’ என்று அப்புசாமியின் பரம சீடனான ‘அப்புசாமி அடிப்பொடி பீமாராவ்’ மேடை ஏறுவது. முன்னேற்பாட்டின்படி அப்புசாமி பீமாவை வீழ்த்திக் காட்டுவது. 

ஸெயிண்ட் மேரீஸ் ஹாலில் எள் போட ஆள் இல்லை.

(நல்லெண்ணெய் கிலோ பத்து ரூபாய் விற்கும் போது எந்த மடையன் எள்ளைக் கொண்டு வந்து கூட்டத்தில் போட்டு வேஸ்ட் பண்ணுவான்?) மொத்தத்தில் ஏராளமான கூட்டம். 

சீதாப்பாட்டி மந்தகாச வதனியாகக் கால் மேல் கால் போட்டபடி அரங்கத்தில் முன் வரிசை நாற்காலியில் அமர்ந்திருந்தாள். 

பிரம்மாண்டமான ஆப்பிரிக்கக் காண்டா மிருகப் படம் வரைந்திருந்த பெரிய படுதா எப்போது விலகும் என்று சபையினர் ஆவலோடு காத்திருந்தனர். 

வடிவேலு வைத்தியர், மேடையில் தோன்றினார். சிற்றுரை யாற்றினார். 

“என் வயோதிகக் கண் மணிகாள்! வாலிப விருத்தாப்பிய சிகாமணிகாள்! நமது காண்டா மிருக லேகியத்துக்குக் கொடுத்த விளம்பரத்தைத் தவறுதலாகப் புரிந்து கொண்ட நமது எதிரிகள் யாரோ நம்மை மாட்டவிடுவதாக நினைத்து ஒரு இழி செயலை – எமது தகுதியை – எமது கியாரண்டியை – சந்தேகிப்பது போல் ஒரு சவால் விளம்பரம் பத்திரிகையில் கொடுத்திருக்கின்றனர். யாம் பரம்பரை பரம்பரையாக நூற்றாண்டுகளாகக் காண்டாமிருகக் கொழுப்பிலிருந்து லேகியம் தயாரிக்கிறோம். எதிரிகளின் கொழுப்பு எம்மிடம் வேகாது. (கைத்தட்டல்) 

“எமது வாடிக்கையாளர் அப்புசாமி ஒரு அழுகின வாழைப்பழம் போன்ற கிழவராக இருந்தார். அவர் காண்டா மிருக லேகியத்தை ஒன்றரை மண்டலம் சாப்பிட்டதன் விளைவாகக் கலியுக பீமனாக மாறிவிட்டார். உடல் மெலியாகத் தோன்றினாலும் உள்ளே ஆயிரம் யானை பலம் அவருக்கு ஊறியிருக்கிறது. 

“அப்புசாமி டில்லி பாபா சிங் என்ற பயில்வானை இந்த மேடையில் சந்தித்துப் போர் புரிகிறார். கண்டு களியுங்கள். ஹாலுக்கு வெளியே எமது காண்டா மிருக லேகியம் பெரிய சைஸ் டப்பா 24 நாட்களுக்குச் சாப்பிட ஐம்பது ரூபாய். 48 நாட்களுக்கு எழுபது ரூபாய். . . வாங்கிப் பயனடையுங்கள்…” 

திரை விலகியது. கோதா மேடையில் அப்புசாமி, நறுக்கித் தந்த புடலங்காய் மாதிரி நடுவே நின்று அனைவரையும் கும்பிட்டார் 

சீதாப்பாட்டி சிரித்துக் கொண்டாள். அதே சமயம் பொறுப்பு மிகுந்த கவலையும் அவளை ஆட்கொண்டிருந்தது. அடிபட்டு மூக்கு, வாய் உடைந்து கீழே தன் கணவர் விழுந்ததும் அவரை அட்டெண்ட் செய்து கவனிக்கத் தயாராக டாக்டர் ஒருத்தரை ஏற்பாடு செய்து அவர் அவளுக்கு இரண்டு ஸீட் தள்ளி அமர்ந்திருந்தார்.

மணி கணகணவென்று அடித்தது. 

அப்புசாமி ‘கர்ர்ர்க்கும்’ என்று ஒரு வினோத காஜனை செய்து விட்டு அரங்கத்தில் குதித்தார். 

வைத்தியர் வடிவேலு மைக்கில் கூவினார். “எங்கள் காண்டாமிருகம் கர்ஜிக்கத் தொடங்கிவிட் டது எங்கே தன் எதிரி என்று. டில்லி பாபாசிங் அவர்களே! உடனே வாருங்கள், வந்து எங்கள் காண்டா மிருகத்தைச் சந்தியுங்கள்!” 

ஒருவரும் வரவில்லை. சீதாப் பாட்டி முகத்தில் பரவிய ஏமாற்ற தோல்வியுடன் சுற்று முற்றும் பார்த்தாள். 

அப்புசாமி மேடையில் அதைக்  கவனித்துவிட்டார். 

மீண்டும் ஒரு கர்ஜனை விட்டு மைக் அருகே வந்தார். “என் எதிரி, டில்லி பாபாசிங்! நான் நார் நாராகக் கிழிக்கத் சிக்கினு இருக்கேன். அவர் பயந்து ஓடிவிட்டாரா? நான் கேட்க ஆசை படறேன். அவர் ஓடி ஒளிஞ்சி வேறு எந்தப் பயில்வான் வேணுனாலும் வரட்டும்! ஜெய் காண்டா மிருக லேகியம்!” 

அப்புசாமி குதித்து மேடையைச் சுற்றிச் சுற்றி வந்தார். மூச்சு இரைத்தாலும் காட்டிக் கொள்ளாமல். “சவாலா வுடறே சவாலங்கிடி கிரிகிரி! சைதாப்பேட்டை வடைகறிடி நான்!” 

சீதாப்பாட்டிக்கு அவமானமாயிருந்தது. 

சபையில் நிசப்தம். நிமிடத்துக்கு ஒருத்தரும் வர வில்லை.

திடீரென்று சபையில் ஒரு பரபரப்பு. “நானு பர்த்தனே!”

எல்லோரது கண்களும் உடலுடன் திரும்பின. 

பீமாராவ் மேலே போத்திருந்த துண்டை உதறி எறிந்துவிட்டு தன் வஸ்தாத் பாடியை அனைவருக்கும் காட்டிக் கொண்டு மேடை ஏறினான். 

அப்புசாமி அவனைப் பார்த்துக் கண்ணடித்தார் ரகசியமாக 

சபையினர் பீமாவின் உடம்பையும் அப்புசாமியின் உடம்பையும் பார்த்துவிட்டு விசில் அடித்துத்தனர். 

சீதாப் பாட்டிக்கு நெகிழ்ந்துவிட்டது. என்ன இருந்தாலும் பீமா இஸ் பீமா. . அவளுடைய காலத்திய மதர்லி அஃடெக்ஷனை மறக்கவேயில்லை போலிருக்கு. அவருக்கு ஒரு அவமானம் என்றதும் நாவைத் தண்டிக்க மேடை ஏறி விட்டானே.. பீமா. ரியலி யு ஆர் கிரேட்! 

மணி அடித்தது.

முதல் ரவுண்ட். 

அப்புசாமி எகிறிப் பாய்ந்து பீமாவை  ஓர் உதை உதைத்தார்.

அடுத்த கணம் பீமா. சத்தெனே. என்று சுருண்டு வீழ்ந்தான். 

அப்புசாமி ஜிங் ஜிங்கென்று எகிறிக் குதி குதித்தார். 

வடிவேலு வைத்தியர் மைக்கில் கெக்கலித்தார். 

“மகா ஜனங்களே.எமது காண்டா மிருக உதையை ஒரு பயில்வானால் கூடத் தாங்க முடியவில்லை. . இந்த ரவுண்டில் இன்னும் நீங்கள் கண்டு களிக்கப் போகிறீர்கள். பெரிய டப்பா விசேஷ சக்தி வாய்ந்தது. ஐம்பது நாள் சாப்பிடுவது. அறுபது ரூபாய். மறவாதீர்… குறைந்த ஸ்டாக்கு தான் உள்ளது”. 

அடுத்த ரவுண்ட் அப்புசாமிவைக் கீழே தள்ளி மேலே உட்கார்ந்து அவன் வாயைக் கிழிக்கப் பார்த்து நடுவர் வந்து விலக்கிவிட்டார். பீமாராவ் வாயால் மூச்சு விட்டுக் கொண்டு மூலையில் ஸ்டூலில் கிடந்தான். 

சீதாப்பாட்டி கைப் பையிலிருந்த ஒரு சின்னத் துவாலையை எடுத்துக் கொண்டு நடுவரிடம் கேட்டாள். கன் ஐ அட்டெண்ட் டு தட் புவர் பெலோ! அவன் வியர்வையைத் துடைத்து விடலாமா?” 

நடுவர் அனுமதி வழங்கினார். 

“அவ்வா…” சீதாப்பாட்டியப் ப் பார்த்ததும் பீமாவுக்கு நாத்தழுதழுத்தது. 

“டோன்ட் வொர்ரீ ஸன்”, என்ற சீதாப்பாட்டி அவன் வியர்வைத் துடைத்துவிட்டாள். ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தாள். 

பீமாராவ் தண்ணீரைக் குடிக்கப் பார்த்தான். 

சீதாப்பாட்டி, ”நோ. நாட் ஃபர் ட்ரிங்கிங். .அந்த வாட்டரை நல்லாப் பார். .அதற்குள் இருக்கிறது – நீ ஜெயித்தால் உனக்கு! மை டைமண்ட் ரிங்! தட்ஸ் ஆல் ஐ கான் டெல் யூ நௌ…” 

பீமாராவ் தண்ணீர் குடிப்பவன் போல் டம்ளருக்குள் பார்த்தான். பளபளவென்று ஜாஜ்வல்யமாக வைரக் கல் பதித்த மோதிரம். 

மூன்றாவது ரவுண்டுக்கான மணி அடித்தது. 

மணி அடித்ததோ இல்லையோ, அப்புசாமி, ”ஜெய் காண்டாமிருகம்!” என்று பாய்ந்தார். 

பீமாராவ், “ஜெய் அவ்வா!” என்று அவர் மீது பாய்ந்து வினாடி நேரத்தில் அவரை ஒரு ஏரோப்ளேன் சுழற்றுச் சுழற்றி மேடைக்கு வெளியே வீசி எறிந்தான். 

நேரே அப்புசாமி சீதாப்பாட்டியின் காலடியில் வந்து விழுந்தார். 

வடிவேலு வைத்தியருக்குத் திக்கென்றாகிவிட்டது. 

விழுந்தடித்துக்கொண்டு பீமாராவிடம் ஓடினார்– “அடப் பாவி! நூறு ரூபாய் வாங்கிட்டு துரோகம் பண்ணிட்டியே நைனா? அவர் மேலே நீ கை வைக்கலாமா? மடையா!” 

“ஏனு ஹேளுதே? நானா மடையன்! இ ஹுடுவா சாமர்த்தியா நினகெ கொத்தில்ல..” 

அடுத்த கணம் காண்டா மிருக லேகியத் தயாரிப்பாளர் வடிவேலு வைத்தியரும் அப்புசாமி ஏறிய அதே ஏரோப்ளேனில் ஏறிச் சீதாப்பாட்டியின் காலடியில் போய் விழுந்தார். 

சீதாப்பாட்டி அமைதியாகச் சொன்னாள். ”நோ மோர் காலண்டர்ஸ், மைண்ட் யூ! அச்சடித்தது அத்தனையையும் கொண்டு வந்து என் எதிரே கிழித்துப் போடணும். .இல்லாவிட்டால் உங்களுடைய போலி கேஸ் போலீஸ் கேஸாகும். அன்டர்ஸ்டாண்ட்?” 

அரை மயக்கத்திலிருந்த அப்புசாமியின் காதில் கடைசி வார்த்தையின் கடைசி பகுதி விழுந்தது. 

“இதோ! ஸ்டாண்டிட்டேன் சீதேய்!” என்று விருட்டென்று எழுந்து மரியாதையுடன் நின்றார்.

ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ.ரா.சுந்தரேசன் (பி:சூன் 1, 1932) பிரபல தமிழ் எழுத்தாளர் ஆவார். தமது தாயார் மற்றும் தந்தையார் பெயர்களை இணைத்து பாக்கியம் ராமசாமி என்னும் புனைபெயரில் நகைச்சுவைக் கதைகள் மற்றும் தொடர் புதினங்களுக்காக மிகவும் புகழ் பெற்றார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்ற ஜ.ரா.கிருஷ்ணமூர்த்தியின் சகோதரன். சேலத்தைச் சேர்ந்த ஜலகண்டாபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகாசிரியர், கட்டுரையாளர் என்ற அறிமுகத்தைவிட, அப்புசாமி,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *