விடாது பைக்

 

மணி காலை ஒன்பது.வினோத்தை பொறுத்த வகையில் அது அதிகாலை. வீட்டிலிருந்து வெளியே வந்தவனுக்கு காத்திருந்தது ஆச்சர்யம். வாசலருகே நின்றுகொண்டிருந்தது அந்த விலையுயர்ந்த பைக்.

“யாருதா இருக்கும் ? இத இந்த தெருவுல பார்த்ததே இல்லையே. பூட்டாம வெச்சுருக்கான் !” என்றபடி சுற்றும் முற்றும் பார்த்தான். தெருவே நிசப்தமாக இருந்தது.

“யாருதா இருந்த என்ன, இன்னைக்கு இது என் பைக்.” பெரும் சப்தத்துடன் பைக் அங்கிருந்து கிளம்பியது.

வினோத்திற்கு சிறு வயதிலிருந்தே பைக் மீது ஆசை அதிகம். ஒவ்வொரு முறையும் தன் தந்தையிடம் பைக் பற்றி பேச்சு எடுக்கும்போதெல்லாம் “அதெல்லாம் நீ சம்பாதிச்சு வாங்கிக்கோ” என்பதே அவர் கூறும் ஒரே பதில். பைக்கின் மீதிருந்த ஆர்வம் வெறியாக மாறியதன் விளைவு, விலையுயர்ந்த பைக்குகளை திருடி வெகு தூரம் ஓட்டிச் செல்வதை பொழுதுபோக்காக்கிக் கொண்டான். பைக் திருடு போய்விட்டது என்பதை உரிமையாளர் கண்டுகொள்வதற்கு முன் அந்த பைக்கை பாகம் பாகமாக கழற்றி விற்றுவிடுவான்.

இது வரை தொண்ணூற்றொம்பது பைக்குகளை வெற்றிகரமாக திருடிவிட்டான். இது அவன் திருடும் நூறாவது பைக்.

தெருவே வெறுச்சோடி இருந்தது அவனுக்கு மேலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

“இன்னா இன்னைக்கு யாரையும் காணோம் ரோட்ல..எல்லாம் எங்க போனானுங்க..தெருவே காலியா இருக்கு..”

திடிரென எங்கிருந்தோ எழுந்த சிரிப்பொலியைக் கேட்டு திடுக்கிட்டு வண்டியை நிறுத்தினான்.

“தம்பி..என்ன பயந்துட்டியா..”

“யாரு..யாரது சொல்லுங்க”

“நான் தான். பைக்”

“நான் நம்ப மாட்டேன். பைக் எப்படி பேசும் ! “

“நம்பித்தான் ஆகணும். சரி இந்த பைக் யாருது ? “

“ஏன்.. எந்து தான்”

“யார் வாங்கி கொடுத்தா? “

“எங்க அப்பாதான்”

“உங்க அப்பாதான் வாங்கி தர மாட்டாரே”

“உனக்கு..உனக்கு எப்படி தெரியும்”

“எனக்கு எல்லாம் தெரியும்” என்றபடி பைக் மீண்டும் சிரித்தது.

“உண்மைய சொல்லுடா.யாரு பைக் இது “

“அது வந்து..அது வந்து…என் பிரெண்டு கொடுத்தான்”

“இப்ப தான் உங்க அப்பா வாங்கி கொடுத்ததா சொன்ன..பொய் சொல்ற பாத்தியா… இந்த பைக்க திருடினவுடனே உனக்கு நான் தண்டனை கொடுத்துட்டேன்… “

“நீயா! என்ன தண்டனை ?”

“வர வழியில பார்த்திருப்பியே..யாருமே இருந்துருக்க மாட்டாங்களே ..இனிமே நீ யார் கண்ணுக்கும் தெரியமாட்ட. உன் கண்ணுக்கும் யாரும் தெரிய மாட்டாங்க…அதான் நான் உனக்கு கொடுத்த தண்டனை.

“இல்ல நீ பொய் சொல்லுற”

“நான் திருடனா, இல்ல நீ திருடனா..உன்னால எத்தனைப் பேர் பைக்க தொலைச்சிட்டு அழுதிருப்பாங்க..இப்ப நீ அழுவு..பைக்குக்கு தான ஆசைப்பட்ட..இனிமே இந்த பைக் உனக்கு மட்டும் தான். உனக்கு இந்த பைக் மட்டும் தான்.போடா எங்க வேணா போடா. யாரும் இருக்க மாட்டாங்க”

பைக்கின் சிரிப்பொலி விண்ணை பிளந்தது.

வினோத்திற்கு இன்னும் பைக் ஆசை விடவில்லை. பைக்கை எடுத்துக் கொண்டு தெருவெங்கும் சுற்றினான்.தெருவே ஆள் அரவமற்று இருந்தது. நகைக் கடைகளும், ஜவுளிக் கடைகளும் திறந்தே கிடந்தன. ஆனால் ஒருவர் கூட வினோத்திற்கு தென்படவில்லை. தன் தவறை உணர்ந்த அவன் பைக்கை அப்படியே போட்டுவிட்டு ஓடினான். சிறு வயதிலிருந்து ஏதோ ஒன்றை திருடிக் கொண்டிருக்கும் அவனால், இப்போது திறந்து கிடக்கும் கடைகளிலும் எதையும் திருட இயலவில்லை. எதன் மீதும் பற்றற்று ஓடிக் கொண்டே இருந்தான். ஆனால் அவன் செல்லும் இடமெல்லாம் அந்த பைக் அவன் முன் நின்று கொண்டிருந்தது. வேறு வழி இல்லாமல் பைக்கிடம் சரணடைந்தான்.

“ப்ளீஸ் என்ன மன்னிச்சிரு. இனிமே நான் திருடமாட்டேன். அடுத்தவங்க பொருளுக்கு ஆசை படமாட்டேன்.பொய் சொல்ல மாட்டேன்.ப்ளீஸ்..”

“டேய் என்னடா ஆச்சு ?”

“ஏதோ கேட்ட கனவு அப்பா”

“ஒரு வேலையும் செய்யாம ஒன்பது மணி வரைக்கும் தூங்குனா கேட்ட கனவுதான் வரும். அந்த பால்காரன் இன்னும் வரல. நீ போய் பால் வாங்கிட்டுவா”

இப்போது நிஜமாகவே பூட்டப்படாத அந்த பைக் வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்தது.

“நமக்கெதுக்கு அடுத்தவன் பொருள். இனிமே திருட கூடாது. இந்த பைக் நமக்கு வேணாம்”, சலனமின்றி அந்த பைக்கை கடந்து சென்றான் வினோத்.

“பைக் எப்படி பேசும். வெறும் கனவுதானே ! இந்த பைக் எனக்குதான்”, பைக்கை நோக்கி வேகமாக ஓடினான்.

பைக்கின்மீது அவன் கை பட்டவுடனேயே கம்பீரமாக ஒலித்தது அந்த குரல், “தம்பி இன்னும் நீ திருந்தவே இல்லையா…!”

“இல்ல நீ எனக்கு வேணாம்” என்றவாறே ஓடத் தொடங்கினான் வினோத்.

பைக்கின் சிரிப்பொலி வெகு நேரம் காற்றில் ஒலித்துக் கொண்டிருந்தது…

- ஜனவரி 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
இரு கைகளையும் நிலத்திலூன்றி. ஒரு காலால் முட்டியிட்டு, மற்றொரு காலைத் தூக்கி, நாக்கை வெளியே நீட்டி நாயைப் போல் குரைத்துக் காட்டினான் நகுலன். அவனின் பெற்றோர் அதனை ரசித்துக் கொண்டிருந்தனர். ஆண்டே மிஷா தம்பதியரின் ஒரே மகன் நகுலன். கார்ப்பரேட் தம்பதிகள். அவர்கள் ...
மேலும் கதையை படிக்க...
அந்த புத்தகத்தை வாங்கியே ஆகணுமென்று எங்கெங்கோ தேடுனேன். அந்த புத்தகத்திற்க்கு பின்னாடி ஒரு காதல் கதை ஒளிஞ்சிருக்கு. எங்கேயும் கிடைக்காத அந்த புத்தகம் கண்ணிமேரா நூலகத்தில கிடைக்கும் என்கிற நம்பிக்கையில டிரைன் ஏறினேன். நானும் இந்தியா முழுக்க சுத்தியிருக்கேன். பம்பாய் ரையிலில் ...
மேலும் கதையை படிக்க...
வழக்கமாக நடை சாத்துவதற்கு முன்பு செய்யப்படும் கைங்கர்யம் எதுவும் செய்யப்படவில்லை. நங்கையர் குறை தீர்க்கும் நல்லாண்டானுக்கு சந்தேகம், 'தாலாட்டு ஏன் இன்னும் பாடப்படவில்லை'. அசதியின் காரணமாக அதைப் பொருட்படுத்தாமல் உறங்கிப் போனார். வைகுண்டராஜன் தன் துயில் கலையும் போது சுப்ரபாத ஒலி ...
மேலும் கதையை படிக்க...
பள்ளிக்கூட மணி அடிப்பதற்கு முன்பே, தாத்தாவின் வருகையை எதிர்பார்த்து வாசலை பார்க்கத் தொடங்கிவிடுவது வழக்கம். கேட்டை கடந்து வெளியே வரும்போது, இரண்டு பொட்டலங்களுடன் தாத்தா காத்திருப்பார். எப்போது வந்திருப்பார் என்று நாங்கள் கேட்டதே இல்லை. ஆனால் எல்லா நாட்களிலும் தாத்தா எங்களுக்கு ...
மேலும் கதையை படிக்க...
"Transvestism (also called transvestitism) is the practice of cross-dressing, which is wearing clothing traditionally associated with the opposite sex."-விக்கிபீடியா கைக்குட்டை என்பது உங்களுக்கு வேண்டுமென்றால் ஒரு சாதாரண விடயமா இருக்கலாம். எனக்கு அதிமுக்கியமான ஓர் விடயம். ...
மேலும் கதையை படிக்க...
கதவுகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன, ஜன்னல்களும். அவர்கள் முடிவு செய்திருந்தனர், இன்று ஆவியுடன் உரையாடியே தீர வேண்டுமென்று. வீஜா போர்ட் (Ouija Board) பற்றி முதலில் படித்துவிட்டு சொன்னவன் மனிஷ் தான். அவனுக்கு எல்லாவற்றிலும் விளையாட்டு என்பதால் அவன் சொன்னதை முதலில் யாரும் ...
மேலும் கதையை படிக்க...
பாலாவிற்கு முழுவாண்டு தேர்வு முடிந்ததும் என்னுடைய கைபேசியை அன்பளிப்பாக தருவதாக சொல்லியிருந்தேன். ஆனால் என்னுடைய வாக்குறுதியை என்னால் நிறைவேற்ற முடியாமல் போகும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. உண்மையில் அவள் என்னிடம் மொபைல் ஃபோன் கேட்கவில்லை. நானேதான் தருவதாக கூறினேன். இன்று ...
மேலும் கதையை படிக்க...
‘ஆவி எழுத்தாளன்’ என்றதும் அமானுஷ்ய சக்திகளைப் பற்றி எழுதி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவன் என்றுதான் பலரும் நினைக்கின்றனர். பிளாட்பாரக் கடைகளில் கிடைக்கும் ‘அமானுஷ்ய உலகம்’ புத்தகத்தை எழுதுபவன் சத்தியமாக நான் இல்லை. பதினைந்து ரூபாய் கொடுத்து அந்தப் புத்தகத்தை நானும் ...
மேலும் கதையை படிக்க...
ஒன்று வண்டி ஓட்டுவது என்றாலே கப்பல் ஓட்டுவது போல் தான் எனக்கு. கப்பல் ஓட்டுவது கடினமான வேலையா என்று தெரியாது. அவ்வளவு பெரிய கடலில் மிதந்து போவதை நினைக்கும் போது பயமாக தான் இருக்கிறது. அதனால் கப்பல் ஓட்டுவது கடினமான வேலை என்று மனதில் ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு நண்பர்கள் இல்லை என்று சொன்னால் நீங்கள் நம்ப மறுக்கலாம். அப்படியே நம்பினாலும் நண்பர்களின்றி வாழ்பவனின் வாழ்க்கையை தெரிந்துக் கொள்வதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது என்று எண்ணலாம். உண்மையில், உலக வாழ்கையே சுவரஸ்யமற்றது தான். சுவரஸ்யமென்பது வாழ்கையினுள் நாம் வழிய ...
மேலும் கதையை படிக்க...
நகுலனின் நாய்
லேடி போலீஸ்
வரிசையில் நின்ற கடவுள்
தாத்தாவின் கதை
கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும்
வீஜா போர்ட்(Ouija board)
பாலாவிற்காக…
ஆவி எழுத்தாளன் (எ) தமிழ் சினிமா கதாசிரியன்
கொரோனா நாட்கள்
நண்பர்களற்றவனின் கதை

விடாது பைக் மீது 2 கருத்துக்கள்

  1. director karuna says:

    Hai helo sir unga vidathu bike story badichan romba bidichithu atha vachi oru short film make bannirukan sir thangs sir unga mail address or your what’s app send me my mail box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)