கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: January 11, 2019
பார்வையிட்டோர்: 166,390 
 
 

“கண்ணே கலைமானே கன்னிமயிலென கண்டேன் ……………..”என்ற கானம் காலை பொழுதை இதமாக்கி கொண்டிருந்தது. ஆவி என பெயர் தங்கிய புகை காபி குவளையில் கசிந்து கொண்டிருந்தன.

அன்றைய நாளிதழை புரட்டி அதில் தன் சோம்பலை முறித்துக்கொண்டிருந்தான் வசந்த் .

ஒரு முரட்டு அலறலுடன் அலைபேசி அலறத் துவங்கியது.

‘என்னப்பா இன்னைக்கு எந்த ஏரியா ….மார்க்கெட்டிங் ‘ என்றது ஒரு ஆணவ குரல் கொண்ட எதிர்முனை .

‘சார் இன்னைக்கு எனக்கு தலைவலி ………நானே கூப்படலாம்னு நினைத்தேன் , இன்னைக்கு லீவு வேணும்….’

‘ சரிப்பா சீக்கிரம் ஒரு நல்ல கம்பெனியா பாத்துக்கோ ..’ என்று கூறி எதிர் முனை துண்டித்தது.

வாழ்க்கையே வெறுத்து போகுது , இவனுங்களுக்கு எவ்ளோ வேல செஞ்சாலும் பத்தாது….’ புலம்பினான் வசந்த்.

வீட்டை விட்டு வெளியில் வந்து மாடியில் இருந்து எதிரே இருந்த வெட்ட வெளியை புதிதாய் பார்ப்பது போல பார்த்தான்.

அவன் இருக்கும் குடியிருப்பு நகரத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள உள்ள கணேசபுரத்தில் நான்கே வீடு கொண்ட குடியிருப்பில் தன் நண்பன் மூர்த்தியோடு பகிர்ந்து கொண்டு இருந்தான் .

மூர்த்தி அவன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் சேலம் வரை சென்றுள்ளான் .

எதிரே உள்ள இரண்டு வீடுகளிலும் பள்ளிவிடுமுறை காரணமாக சுற்றுலா சென்றிருந்தார்கள் . பக்கத்தில் சற்று தள்ளி இடதுபுறம் இருக்கும் வீட்டில் பொங்கல் திருவிழா காண பசுமாத்தூர் சென்றிருந்தனர். வலது பக்க வீட்டில் வயதான ஒரு கிழவி .கணவனை இழந்த அந்த கிழவி பென்சன் பணத்தில் வாழ்க்கை ஓட்டி வந்தாள். அழகிய காலை வெயில் அவனை சற்று வெப்பமூட்டியது.

சோம்பலை முறிப்பதில் பதஞ்சலி ராம்தேவை மிஞ்சுபவர்களில் வசந்தும் அடங்குவான்.

தண்ணீர் பீச்சி அடிப்பதில் எல்லோரும் ஒரு நிமிடம் குழந்தை ஆகிறார்கள் குளிக்கையில் … வசந்த் தன் குளியலை முடித்துவிட்டு. தன் அறையில் உள்ள மடிக்கணினியில் நேற்று பார்க்க மறந்த ஒரு குறும்படத்தை பார்க்க பொத்தானை இயக்கினான்.

குறும்படம் ஓடிய ஐந்து நிமிடத்தில் , வசந்த் குறும்படத்தில் ஒரு கதாபாத்திரமாக அமர்ந்து கொண்டான்.

அந்த குறும்படத்தில் தனியே இருக்கும் ஒருவன் இரவில் தூங்கிக்கொண்டிருக்கும் பொது ஒரு சலசலப்பு மணி ஒலி கேட்கிறது. அதை அவன் தேடிப்பார்த்துவிட்டு அசதியில் உறங்கி போகிறான். பிறகு எப்போதும் போல விடிகிறது .. அவன் காப்பி குடித்துவிட்டு தனது மடிக்கணினியில் ஒரு குறும்படம் பார்க்கிறான் , அதில் வரும் கதாபாத்திரம் குளித்துவிட்டு வரும்பொழுது ஒரு கொலுசு ஒலி கேட்கிறது. யாரும் இல்லாத வீட்டில் அந்த ஒலி அவனை அச்சுறுத்துவதாக அமைகிறது. இதை படமாக பார்த்திக்குக்கொண்டிருந்த நபரின் வீட்டில் இரவில் கேட்டதுபோலவே ஒரு சலசலப்பு ஒலி கேட்டது…….. அதிர்ந்த போன அந்த நபர் அந்த ஒலியின் வாசனையை தேடி நகருகிறார். அப்போது இந்த குறும் படம் பார்த்துக்கொண்டிருந்த வசந்தின் காதில் நடுங்கியது ஒரு வளையல் ஒலி ….

வசந்த் குறும்பட கதாபாத்திரத்தில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு வளையல் சத்தத்தை கூர்ந்து கவனித்தான்.

அவன் கவனித்த போது அந்த சத்தம் இல்லாமல் இருந்தது .

எல்லாரும் நினைப்பது போல அது ஒரு பிரமை என்று

திரும்பவும் குறும்படத்திற்குள் தன்னை நுழைத்து கொண்டான்.

அங்கு அந்த நபர் குறும்படத்தில் இருந்து திசை திருப்பிய ஒலியை தேடி தோல்வியை சந்தித்துஇருந்தார்.திரும்பவும் குறும்படம் பார்க்க அமர்ந்தார் , அதில் இருந்தவர் புத்தகம் படித்து கொண்டிருக்கும் போது திரும்பவும் சலசலப்பு மணி ஒலி கசிய ஆரம்பிக்க அதே நேரம் குறும் படம் பார்த்தவரை சலங்கை ஒலி திசைதிருப்ப . ..இப்போது வசந்த் உஷாராக காதுகளை கூர்மையாக்கிக்கொண்டான் . ஆனால் இப்போது வளையல் ஒலி அவன் காதுகளில் கேட்கவில்லை என்று அவன் சமாதானம் அடையும் முன்னர் வளையல் ஒலி திரும்பவும் முன்பைவிட சற்று பலமாக கேட்கத் துவங்கியது. . இப்பொது கணிப்பொறியை அடைத்து விட்டு ஒலி கொண்ட திசையை நோக்கி நடந்தான்.

அதற்குள் அவன் அலைபேசி அவனது புலன்விசாரணைக்கு தடையாய் ஒலித்தது. அலைபேசித்திரையில் ‘அம்மா என்றிருந்தது. டேய் அக்கா பாப்பாவுக்கு நாளைக்கு பர்த்டே ,கண்டிப்பா வந்துரு…….மறக்காம கிபிட் வாங்கிட்டு வா…..என்று பிறந்தநாள் அழைப்பை சுருக்கமாக சொல்லி மகனை பார்க்க வேண்டும் என்று தன் ஆவலை வெளிப்படுத்தினாள் அவன் அன்னை.

‘சரி மா’ .. என்றவன் கைபேசியை நிறுத்திவிட்டு … வளையல் ஓசையை தேடி நகர்ந்தான். ஓசை எங்கும் கேட்காமல் இருந்தது. இவன் சற்று குழம்பி போய் இருந்தான்.

திரும்பவும் அவன் மடிக்கணினியை திறந்து அந்த குறும்படம் பார்க்க தொடங்கினான் . அதே போல அங்கும் ஒலி தேடப்படுகிறது .. வசந்தும் இவனுடைய வளையல் ஒலிக்காக காத்திருக்கிறான் இந்தமுறை ஒலி கேட்கிறது … கணினியை மூடாமல் ..ஒலியின் திசையை நோக்கி நகர்கிறான். …

அந்த ஓசையை மேல்மாடியில் ஒரு அறையில் இருந்து வருவதாக தெரிந்தது. மிகுந்த வேகத்துடன் அந்த அறைக்கு விரைகிறான். அந்த அறை தன் நண்பன் தங்கும் அறை … பூட்டப்படாமல் இருப்பதால் அந்த அறையை வசந்த் திறக்க முற்படும் போது …அந்த வளையல் ஒலி அடங்கிபோகிறது. ….வசந்தும் அந்த கணத்தில் தன் வேகத்தை குறைத்துக்கொண்டு கீழ் அறைக்கு திரும்புகிறான். அவன் கீழே வர முற்படும் போது திரும்பவும் வளையல் ஒலி கேட்கிறது ..

இந்த சமயம் அந்த ஒலி சற்று அதிகமான மிரட்டலுடன் இருந்தது.

இப்பொது வசந்த் சற்று மிரண்டு விட்டான்.

பகல் சுமார் பதினொன்றை தொட்டுஇருந்தது .

பகல் நேரம் தனியே இருக்கும் போது வரும் பயம் இரவை காட்டிலும் மிகக்கொடுமையானது . இன்று வசந்த் அதன் பிடியில் இருந்தான்.

வியர்வை அவ்வளவு குளிர் அறையிலும் அவனிடம் கொப்பளித்தது .

நிதான நடையில் சற்று பயம் கலந்த தோரணையில் மேல் மாடிக்கு நடக்க ஆரம்பித்தான். அவனது ஒவ்வொரு அடியிலும் கால்கள் கனத்தன. வளையல் ஓசை புது புது எண்ணஓட்டங்களை அவனுக்குள் திணித்தது. அறையை அடைந்த உடன் கதவின் கைப்புடி மேல் மெதுவாக காய் வைத்தான் … ஒலி நின்றது …

வசந்த் அந்த மௌன தருணத்தில் …தன் நெற்றி வியர்வையை சொரிந்தபடிப் படபடத்திருந்தான்.

அப்போது …..திடீரென

‘டிங் டோங் ………………’ என்ற அழைப்பு மணி சத்தம் கேட்டது.

அந்த சத்தத்தில் அதிர்ந்து போனான் வசந்த்…

கீழே வேகமாக வந்து கதவை திறந்த போது .

‘சார் நீங்க நியூ இயர் கிப்ட்டுக்கு செலக்ட் ஆயிருக்கிங்க ..இந்தாங்க உங்க கிப்ட் பார்சல் …. ஹாப்பி நியூ இயர் சார் ..’ என்று கூறி விட்டு நகர்ந்தான் ‘நெட் கார்ட் ‘ என்ற சேவை மையத்தை சேர்ந்தவன்.

அன்று இரவு முழுவதும் தூக்கத்தை அந்த வளையல் ஓசையில் தொலைத்தவனாய் இருந்தான்.

காலை எட்டு மணி

அவசர அவசரமாய் ..தன் அக்கா குழந்தையின் பர்த்டே பார்ட்டிக்கு கணியூருக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.

பேருந்து பயணமும் ,மெல்லிய காற்றின் சத்தமும் அவனை சோதிக்க வில்லை . அவன் அந்த வளையல் ஒலியில் மூழ்கி இருந்தான்.

விழா மிகவும் பிரமாண்டமாக இருந்தது …

‘வாடா உன்னைத்தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன் ‘ என்றாள் அவன் அக்காள்.

‘பாப்பா எங்கே ‘ என்றான் வசந்த்.

‘அசதில தூங்கற போய் பாரு’ என்றாள்

இவனுக்கு வந்த நியூ இயர் கிப்ட்டை தன் அக்காவிடம் கொடுத்து

‘ இதை குழந்தைக்கு கொடு கா…’ நான் ரெப்பிரேஷ் ஆயிட்டு வரேன்’ என்று ரெஸ்ட்ரூமுக்கு கிளம்பினான் .

தன்னை தையாராக்கி கொண்டு மேல சென்றான் .

யாருமில்லாத அறையில் குழந்தை தூங்கிப்போய் இருந்ததது.

குழந்தையின் முகத்தை பார்த்து சற்று புன்னகைத்தான் ..

அருகில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடினான்

நிசப்த அறையில் …..

திடீரென அந்த வளையல் ஒலி கேட்டது ..திடுக்கிட்டான் …

முழித்து ஒலியை தேடினான் ..அது குழந்தையிடம் இருந்து வந்தது .நன்றாக உற்று பார்த்தான் … அது குழந்தையின் கையில் பொருத்தப்பட்ட வளையலில் இருந்து வந்த ஒலி ….அருகில் அவன் கொண்டு வந்த கிபிட் பிரிக்கப்பட்டு இருந்தது …….

Print Friendly, PDF & Email

1 thought on “வளையோசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *