காணாத காலடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: June 26, 2024
பார்வையிட்டோர்: 2,055 
 
 

இரவு 8 மணி அளவில் கோலாலம்பூரில் கனத்த மழை பெய்யப் போவதாகச் செய்தி ஒளிபரப்பப் படுகிறது. வீட்டில் உள்ளபவர்களுக்குக் கேட்ககூடிய அளவுக்குச் சத்தமாக ஒளிபரப்பப்படும் இத்தொலைக்காட்சி செய்தியைப் பார்ப்பதற்கு அந்த வீட்டில் யாரும் வரவில்லை .

தாமான் நூசாவில் என்னதான் அவ்வளவு மக்கள் இருந்தாலும், இந்த லோரோங் உள்ள கடைசி வீட்டில் மட்டும் வெளிச்சம் எதுவும் இல்லாமல், சில வேளைகளில் யார் இந்த வீட்டில் இருக்கிறார்கள் என்பதையே கணிக்கவே முடியாது.

தாமான் நூசாவில் வசிக்கும் மக்களும் எதையும் கண்டு கொள்வதும் இல்லை. பேச்சு வார்த்தைகளும் வைத்து கொல்வதும் இல்லை. இந்த வீட்டில் வாழும் மூவரும் யாரிடமும் பேசுவதற்கும் தயாராகவும் இல்லை.

மழை பெய்ய தொடங்கியது.

“என்னடா இவ்வளவு சத்தமா இருக்கு.”

“மழை அத்தை.”

“ஆமாவா சரி உஷா ஏன் உன் முகம் வாடி இருக்கு சாப்பிட்டியா மா?”

“அதான் கல்யாணத்துக்குப் போறோம் அங்க சாப்புடுற அத்தை.”

“சரி கார்த்திக் எங்க மா? கார்த்திக்! கார்த்திக்!!!”

உடனே கார்த்திக் மேல் மாடியில் இருந்து குரல் கொடுத்தான்.

“என்ன அம்மா?”

“நீ வரலயா கல்யாணத்துக்கு?”

“எனக்கு நிறைய வேலை இருக்கு அம்மா நீங்க உஷாவை கூட்டிட்டு போங்க.” கார்த்திக் கீழே இறங்கி வந்தார்.

மழை எப்போது நிற்கும் என்று காத்துக் கொண்டு இருக்கிறார்கள் உஷாவும் கார்த்தியின் அம்மாவும்.”இன்னிக்கி எல்லாருமே கேட்பாங்க. புதுசா கல்யாணம் பண்ணாங்க எந்த நல்ல விஷயமும் இல்லையானு.

“அப்படி எதுவுமே இல்லைனு சொல்லுங்க அத்தை.”

“சரி! என்னதா இருந்தாலும் நீ இந்த வீட்டுக்கு பெண் குழந்தையும் மட்டும் பெற்றுக் கொடுத்துறாத உஷா. கார்த்திக் தங்கச்சிதான் ஓடி போய்ட்டாலே! பாசமா வளர்த்தோம் நானும் உங்க மாமனாரும். அங்க பஹாங் டாமாய் எஸ்டேட்லே ரொம்ப அவமானமா போச்சு எங்க குடும்பத்துக்கு.

அங்க மரியாதையான குடும்பமா இருந்தோம் அக்கம் பக்கத்துலே பெருமையா பேசிட்டு இருந்த வாய், இப்போ எங்களை ரொம்ப கேவலமா பேசுற மாதிரி வெச்சிட்டா அவள். இவளும் போய்ட்டா அவரும் போய்ட்டாரு.” கண்ணீருடன் சொல்லி வருந்துகிறார் மகேஸ்வரி.

“ஏன் அம்மா அந்த விஷயத்தெல்லாம் பேசுறீங்க! எப்போ அந்த அவமானம் தாங்க முடியாம அப்பா இப்படித் தற்கொலை பண்ணிட்டாரோ நம்ப அதைப் பத்தி பேச கூடாது. விடுங்கமா!”

“டேய் உஷாக்கு இதெல்லாம் தெரியணும். புதுசா கல்யாணம் பண்ணிருக்கிங்கே, இப்போ கல்யாணத்துக்குப் போறோம் எப்படியோ நம்ப சொந்தகாருவுங்க இதெல்லாம் உஷாகிட்டே பேசுவாங்க”

“அப்போ லீலா ?”

“லீலாவே அவே புருஷன் கொடுமை படுத்தறதா கேள்விப்பட்டோம் உஷா. அவன் ஒரு சைக்கோ! காதல் சொல்லி போனாலே இப்போ இப்படி இருக்கணும்னு அவளோட விதி.”

இதைக் கேட்ட உஷா படபடப்புடன் இருந்தாலும் அவள் தன் மாமியாரிடம் “கவலை படாதீங்க அத்தை எல்லா பெண் பிள்ளைகளும் அப்படி இல்லை.” என்று கூறினாள்.

மழை விடுவது போல் தெரியவில்லை. ஆகையால், தாமதமாக ஆகிவிடும் என்று கருதி இவர்கள் கல்யாணத்திற்குச் செல்ல முடிவெடுத்தனர். கார்த்திக் வெளியே அம்மாவையும் உஷாவையும் வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தார். உஷா மேசையில் வைத்த காப்பியில் வரும் ஆவி, அலுவலக வேலையை செய்திருந்த கார்த்தியை விட்டு வர செய்தது.

வீடே இருளில் சூழ்ந்து இருந்தது. மிகுந்த வெளிச்சத்தை விரும்பாத குணம் கொண்டவர்கள் கார்த்தியின் குடும்பத்தினர்கள். மேசையில் இரண்டு மெழுகுவர்த்தி ஏற்றப்பற்று இருந்தது. இரண்டிற்கும் நடுவில் ஒரு புத்தகம் இருந்தது.

புத்தகத்திற்கு பக்கத்தில் உள்ள காப்பியை எடுத்தான். “என்ன புத்தகம் பழைய புத்தகம் போல் இருக்கிறதே” என்று இவருக்குள் ஆர்வம் இருந்தது. உடனே அவர் எடுத்ததும் ‘Whispers of my Heart’ என்று எழுதி இருந்தது.

அதை பார்த்ததும் தெரிந்துக் கொண்டார் உஷாவின் டைரி அது. அவருக்குள் என்ன எழுதிருக்கும் என்று படிக்கும் ஆர்வம் மிகுந்துக் காணப்பட்டது. ஆனாலும் ஒரு தயக்கம். வீடு அமைதியாக இருப்பதால் தாள்களை உரசி கொண்டு திருப்பும் சத்தம், தூங்கி கொண்டு இருந்த நாயின் கவனத்தைக் கூட ஈர்த்தது. படிக்க தொடங்கினார்.

எடுத்தவுடன் நடுப்பக்கத்தை திருப்பினார்.

“எனக்குள் அவ்வளவு பயம். யார் அந்த நபர்? ஏன் என்னைப் பின்தொடர்கிறார்?”அதை படித்தவுடன் கார்த்திக்கு உஷா என்ன சொல்ல வருகிறாள் என்பதை புரிந்து கொள்ள முடிவில்லை.

“இவளை யாரோ பின் தொடர்கிறாரா?” யார் என்பதை தெரிந்துகொள்ள சில முன் பக்கங்களைத் திருப்பிகிறார்.

முதல் பக்கத்தை திருப்பினார்.

“புதிய முகத்தை காட்டி கல்யாணம் செய் சொன்னால் எப்படிப் பண்ணி கொள்ளுறது. நானும் ஒரு பெண் தானே, பார்த்த உடனே எப்படித் தெரியும் மாப்பிள நல்லவரா கெட்டவரானு. ஒரு மூன்று மாத வேணும்ன்னு சொல்லிட்டேன் அம்மாகிட்டே. என்னாலே முடியாது”

பிறகு, சரியாக 30வது பக்கத்தை திருப்பினார்.

“காலம் என்னைக் கடத்தி கொண்டு இவ்ளோ துரத்துலே வந்து விட்டுருச்சி. எதிர்பாக்களே நான். இப்போ நான் கல்யாணம் பண்ண பொண்ணு. என்னால நம்ப முடியலே. என் கணவர இதுவரை நல்ல தெரிஞ்சு புரிந்து நடந்தேனா தெரியல.

ஆனா எனக்கு அவர புரிந்து கொள்ளவே முடியலே. கொஞ்சம் கஷ்டமாத இருக்கு. எப்போதுமே என்கிட்ட ஏதோ மறைக்குற மாதிரி தோணுது. ரொம்ப அமைதியா இருப்பாரு. எதாச்சும் கேட்டா மழுப்புவாறு. ஆனா நல்லவர். எனக்குப் பிடிச்சதே அவுரு எல்லாருக்குமே உதவி பண்ணனும்னு நினைப்பாரு.

20 ஜூன், கல்யாணம் பண்ண பிறகு வேலைக்கு போறேன் . இதுதான் என்னோட முதல் நாள் வேலை. எல்லாருமே ரொம்ப ஆவலுடன் கேட்டாங்க. கல்யாணம் வாழ்கை எப்படி போகுதுனு விசாரிச்சாங்க.

அன்னிக்கி என் எல்லா வேலையையும் முடிச்சுட்டு வார்டுல இருந்த பேஷன்க்கு மருந்து கொடுத்துட்டு, பிறகு என்னோட மெடிக்கல் டிபார்ட்மண்ட் மூடிவிட்டு வருவதற்கு இரவு 9மணி இருக்கும்.

அப்போ கார்த்திக் வேலை முடிஞ்சு வராத நாளே, நான் க்ராப் வண்டிக்கு அங்கேயே காத்திருந்தேன். அந்த மருத்துவமனை முன்னாடி யாருமே இல்லை. இரண்டு நாய் மட்டும் அங்கே விளையாண்டுகிட்டு இருந்தது.

திடிரென்று ஒரு சத்தம். நாய்கள் ஓடின. ஓட தொடிங்கிய நாய்யைப் பார்த்ததும் எனக்குள் ஒன்றும் புரியாத அவ்வளவு பயம் ஏற்பட்டது. யாரையோ அது பார்த்து ஓடியது. அடுத்தது நான்தானோ என்ற நடுக்கம் .

வேகமாக பின்னாடி திரும்பி பார்த்தேன். ஒரு தாடி வைத்த ஆம்பல. முகமே தெரியாத அளவிற்க்கு அவனின் தாடி, முகத்தை மறைத்திருந்தது. காட்டுகாரன் போலதான் இருந்தான்.பார்ப்பதற்க்கு ஒரு 30 வயது போல் தெரிந்தான்.

இந்த மருத்துவமனைக்கும் என் வீட்டிற்கும் நடந்து சென்றால் பத்து நிமிடம் பிடிக்கும் என்பதால் நான் யோசித்து கொண்டே இருந்தேன். என் பயத்தால் கை கால்கள் நடுங்க தொடங்கியது. தற்போதைய நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செய்திகள் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

உடனே , என் க்ராப் வண்டி வந்தது. அப்போது தான் பெரு மூச்சு விட்டேன். அவனை நான் திரும்பி பார்க்காமல், வேகமாக அந்த வண்டியில் உட்கார்ந்தேன். நான் போகும் வரைக்கும் அவன் என்னையே பின்னாடி தொடர்ந்து வந்துப் பார்த்து கொண்டு இருந்தான்.

அந்தக் கிராப் ஓட்டுநர், என்னை வீட்டு முச்சந்தியில் விட்டு சென்றார். அந்த நபரோ காரில் என்னை பின்தொடர்ந்து வந்து வீடு முச்சந்தியில் என்னைப் பார்த்தபடியே இருந்தான். என்னுள் அவ்வளவு பயம். வேகமாக நடந்து வீட்டிற்கு சென்றேன். நான் என் வீட்டு கதவை திறந்ததும், என்னை பின் தொடர்ந்து வந்த கார் காணாமல் போனது.

மறுநாள் கார்த்தியிடம் சொல்லலாம் நினைத்தேன். ஆனா அவர் வேளையில் இருக்கும் கோபத்தையும் ஸ்ட்ரெஸ்யும் எங்கிட்டே காட்டினார். எனக்குள் அவ்வளவு பயம். யார் அந்த நபர்? ஏன் என்னை பின்தொடர்கிறார்?

வேலைக்குப் போயிட்டு வீடு திரும்பும் வேளையிலும் அந்த நபரை பார்த்தேன். வீடு வரை வரும் அவன் கார், நான் வீட்டு கதவை திறந்து வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தால் இருக்காது.

இவனால் எனக்கு ஆபத்து இருக்கிறதானு தெரிந்து கொள்ள நினைத்தேன். கார்த்திக்கிட்ட நான் எப்படிச் சொல்லுவ இதை. இவரை கல்யாணம் பண்ண பிறகுதான் என்னை யாரோ ஒரு நபர் பின்தொடராங்கனு. இந்த தாமான் நுசாவில் உள்ளவரா கூட எனக்கு தெரியல. எவ்வளவுதான் நான் கார்த்தியிடம் சொல்லெல்லாம் என்று நினைத்தாலும் சொல்ல முடியாமலே போய்விடுகிறது.”

“அவனா இருக்கு மா? சே இருக்காது.” புலம்பி கொண்டெ மறு பக்கத்தை திருப்பினார் கார்த்திக்.

“மறக்க முடியாத நாள் இது. இன்னிக்கி தாதியர் தினம் . நான் வேலைக்குப் போகல. வீட்டுலே யாருமே இல்லை மாமியாரும் அவுங்க அண்ணா வீட்டிற்குப் போய்ட்டாங்க. நான் வீட்டை சுத்தம் பண்ணிட்டு இருந்தேன். வீட்டு டிவி கீழே உள்ள அலமாரில சுத்தம் செஞ்சிட்டு இருந்தேன்.

அப்போது அங்க ஒரு பெட்டிக் கிடைச்சது. அந்தப் பெட்டி உள்ளே நிறைய புகைப்படம் இருந்தது. நாங்க மூணு பெரும் சமீபத்தில் வெளி ஊரு போன படங்களை கார்த்திக் அங்க வைத்திருத்தை பார்த்துகிட்டு இருந்தேன். அந்த ஒவ்வொரு படமும் எனக்கு பல நினைவுகளை எழுப்பியது.

திடீரென்று அதிர்ச்சியில் என் முகம் வேர்க்க தொடங்கியது. என்னை அறியாமலே அந்தப் படங்களை கீழே போட்டு விட்டேன். ஒவ்வொரு படங்களிலும் அந்த நபரை பார்த்தேன். பயமாக இருந்தது. ஏன் இந்த நபர் என் குடும்பத்தையே பின் தொடர வேண்டும் என்று எனக்குள்ளே அந்தக் கேள்வியை கேட்டேன்.

யார் இவன்? ஏதோ ஒன்னு புரியல எனக்கு. இந்த விஷயத்தை கார்த்திக்கிட்ட இன்னிக்கி சொல்லிடணும். வீட்டில் வேறு ஏதாவது படம் கிடைக்குமானு தேடினேன்.

அத்தையின் அறைக்குப் போனேன். அங்கே எதாவுது பழைய படம் இருக்குதானு தேடினேன். பழைய படம் இருந்தால் இந்த நபர் எத்தனை நாள் என் குடும்பத்தை பின் தொடர்கிறானு தெரிந்து கொள்ள நினைத்தேன்.

அத்தை அறையை நான் சுத்தம் செய்ததை இல்லை. அவரும் என்னை விட்டதும் இல்லை. எல்லா வேலையையும் அவர்தான் செய்வார். அதனால் இங்கு ஏதாவது புதிதாக கிடைக்கும் என்ற ஆர்வம் இருந்தது.

அந்த அலமாரியே திறந்தேன். பார்தவுடன் அதிர்ச்சியில் தலையே சுற்றியது. அங்கே இருப்பது துணி இல்லை. ஏதோ ஒரு மர்ம அறை. பயம் உச்ச கட்டத்திற்கு கூட்டி சென்றது. இருள் சூழ்ந்து இருந்தது அந்த அறை.

ஏன் இந்த அறை ?

உள்ளே சென்றுப் பார்த்தேன். அந்த அறைக்கு நேராக ஒரு பெரிய படம். அந்த படம் கார்த்தியின் குடும்ப படமாக இருக்க கூடும் என நினைத்தேன். அதில் லீலாவும் இருந்தாள். பிறகு அந்த அறைக்குள் ஒரு பாதைபோல் போனது.

தைரியம் வரவழைத்து உள்ளே சென்றுப் பார்த்தேன். அந்தப் பாதை சிறியதாக இருந்தது. ஒரு சிறு வெளிச்சம் அந்த அறையில் காணப்பட்டது. அந்த வெளிச்சத்தில் அந்த அறை பெரியதாக காணப்பட்டது.

அங்கே யாரோ அழும் குரல் கேட்டது. அந்த அறையின் ஒர் ஓரமாக ஒரு பெண் கட்டிப்போட பட்டிருந்தார். கார்த்தியின் குடும்பத்தில் சிக்கி கொண்டோமா என்ற பயம் கை கால்களை உரைக்க செய்தது. பயம் உச்சத்தை தொட்டது.

அந்தப் பெண் உடல் முழுதும் கீறல்கள் இருந்தது. அவள் உடல் சிவப்பாக, அடித்த அடையாளங்களும் இருந்தது. நான் முழுமையாக இவ்வளவு நாள் நம்புகிற என் புருஷன்தான் இதை எல்லாம் பண்ணாரா!

ஆனால் அந்தப் பெணின் உடல் பல காயங்களுக்கு மத்தியில் சுத்தமாக இருந்தது. அவளின் முடிகள் முகத்தை மறைந்திருந்தது. அந்தக் காயங்களின் மேலே தன்னை தானே கிரீக் கொள்ள தொடங்கினாள். முடிகளை விலக்கினாள்.

அப்போது தெரியவில்லை, எனக்கு இன்னொரு அதிர்ச்சி காத்துகொண்டு இருக்கிறதென்று. முகத்தை பார்த்தவுடன்தான் தெரிந்தது, அது லீலா. கண் கலங்கிவிட்டேன்.

ஏன் லீலா இங்கே?

“எனக்கு அவன் வேணும் அண்ணா, அவன் என்ன கொடுமை படுத்துரா அளவுக்கு கெட்டவன் இல்ல” என்று குழம்பி கொண்டே ஒரு படத்தை வைத்து தன்னைத் தானே அடிக்க முயலுகிறாள்.

அவளின் கையில் வைத்திருந்த படம் அவளின் திருமண படம். மேலும், அதைப் பார்த்தவுடன் என் மனம் ஒரு கணம் நின்று போனது. அந்த படத்தில் இருக்கும் நபர்தான் ‘அவன்’.”

மறுபக்கத்தை திருப்பினார்.

“எப்படியாவது லீலாவுக்கு உதவி செய்வேன்…” அடுத்தப் பக்கங்கள் எழுதப்படவில்லை.

புத்தகத்தை மூடினான் கார்த்திக்.

“இப்போ புரியுது உஷா ஏன் இன்னிக்கு இப்படி இருக்குரானு.” கைத்தொலைபேசியை எடுத்து உடனே அம்மாவிற்கு தொடர்ப்புக் கொண்டார் கிடைக்கேவே இல்லை. “அவளுக்கு மொத எல்லா உண்மையையும் சொல்லனும். குடும்ப மரியாதை மறுபடியும் இழக்க தயாரா இல்லாமதான் நான் மறைவா லீலாவுக்குச் சிகிச்சை பண்ணுறேன்.

லீலாவே மனநிலை சரியா இல்லாமே இருக்காள். அவன் கொடுமையிலதான் இப்படி ஆனாள்ன்னு தெரியாமே இருக்கா உஷா. மறுபடியும் குடும்பம் மானம் போறதுக்கு இடம் கொடுக்க மாட்டே நான். நல்லா வந்தோனே எல்லாருக்கும் சொல்லெல்லாம் நெனைச்சேன். அதுக்குள்ளே இப்படி ஆயிடுச்சி.

அந்த சைக்கோ லீலாவ பார்க்க முயற்சி பண்ணுறேன்னு, இப்போ என் உஷாவுக்கு நான் சொல்லுற முன்னுக்கே தெரிஞ்சுருச்சே” அம்மாவுக்கு மறுபடியும் தொடர்பு கொள்கிறார் கிடைக்கேவே இல்லை. அந்த அறைக்கு சென்று பார்க்கிறார், அங்கு லீலா இல்லை.

“எங்கே லீலா?? அம்மா! எடுங்க போனே, என்னாச்சி! லீலாவுக்கு உதவி பண்ணுறேன்னு உங்கள ஏதாச்சும் செய்ய போறா உஷா “

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *