என்ன சத்தம் இந்த நேரம்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: June 22, 2024
பார்வையிட்டோர்: 2,203 
 
 

தன்னுடைய “ப்ராஜெக்ட்” வேலைக்காக அங்குச் சென்ற சேரனுக்கு இப்படி நடக்கும் என அவன் கனவில் கூட நினைத்துப் பார்திருக்க மாட்டான்.சேரன் பிரபா இருவரும் “ஹவுஸ் ரேநோவேட்ஸ்”, எவ்வளவு பாழடைந்த வீடுகளையும் அழகாக மாற்றி விடுவர். இப்படியே போய் கொண்டிருந்த இவர்களது வாழ்வில் ஒரு லோட்டேரி அடித்தது போல் ஒரு நாள், புக்கிட் லாருட் மலை பகுதியுள்ள பங்களா வீடு ஒன்றை தங்கும் விடுதியாக மாற்ற ஒரு பெரிய நிறுவனம் கேட்டு கொண்டது.

“சேரா இந்த டீல் எ விட கூடாது, நமக்கு கெடச்ச ப்ரோஜெக்ட்லே இதுதான் ரொம்ப பெரிய ப்ராஜெக்ட், இத நல்லபடியா எப்டியாவது முடிச்சி சக்செஸ் ஆயி காட்டனும்”, என்றான் பிரபா.

“ஆமாடா நா அது நாளதான் அவங்க கேட்டோனே ஓக்கே சொல்டேன், அன்னிக்கே அவங்க அஜென்சி சாவிய போஸ் பண்ணிடாங்க , நம்ம மட்டும் தான் மொத போய் பாக்கணும் போல”, என்றான் சேரன்.

“பெரிய நிறுவனம் லெ அதா கொஞ்சம் பிஸி ஆ இருப்பாங்கே, இந்த மாறி எத்தனைப் ப்ராஜெக்ட் செய்ய சொல்லிரிபாங்கலோ,செரி நம்ம போய் அந்த வீட பார்த்துட்டு வரலாம்”, என்று சொல்லி இருவரும் கிளம்பினர்.


பச்சை கம்பளம் போர்திய மலைகள், காடுகள் ,குளிர் காற்று, அந்த இடமே பார்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது. பங்களா சற்று உள்புற பகுதி என்பதால் சிறிது நேரம் காட்டுபாதையில் பயனித்து அங்கு வந்து சென்றனர். மூன்று மாடி பிரமாண்ட பங்களா. அது மிகவும் பாழடைந்து, காட்டு செடிகளால் சூழ்ந்து இருந்தது. அந்தப் பங்களாவே மனித சுவாசம் அற்று கிடந்தது.

“வாவ்! இவ்ளோ பெரிய பங்கள ஹவுஸ் ஆ, போட்டோ லெ பாத்ததவிட நேர்ல ரொம்ப பெருசாதான் இருக்கு”, என்று சொல்லி கொண்டே வாயை பிளந்தான் சேரன்.

“சரி மொத வீட்டுக்கு வெளிய சுத்தி பார்த்துட்டு அப்புறம் உள்ள போலாமா?” என்றான் சேரன்.

“ஒகே டா, நீ அந்தப் பக்கம் போ, நா இந்த பக்கம் பார்கறேன்“, என்று பிரபா சொல்லி கொண்டு இருவரும் இரு திசையில் சென்றனர்.

திடிரென்று கண்ணாடி சில் சிலாக உடையும் சத்தம் கேட்டது. இருவரும் திடுக்கிட்டு போனர். “சேரா என்னாச்சி, என்ன சத்தம் அது, உனக்கு ஒன்னும் இல்லேதானே? சேரா?”, என்று பதறினான் பிரபா. மறுபுறத்தில் இருந்த சேரன், “எனக்கு ஒன்னும் இல்ல! வீடு கொஞ்சம் பழசு லெ. அதான், உள்ள எதாச்சும் உடைஞ்சு உலுந்துருக்கும்”, என்றான்.

“சரி, வீட்டுக்கு முன்னுக்கு சின்ன கார்டன் இல்லனா ஸ்விம்மிங் பூல் எதாச்சும் வெச்சா நல்ல இருக்கும் லெ?”, என்றான் சேரன்.

“வெளியே நின்னுகிட்டு பேசுனா மணி ஆயிடும், வா உள்ள போய் பார்க்கலாம். மலை பகுதியா இருக்கிறதாலே சீக்கிரமாகவே இருட்ட தொடங்கிடும். நம்ப இங்கிருந்து சட்டுன்னு கெளம்பனும், வா”, என்றான் பிரபா .

சரி என்று தலை ஆட்டி இருவரும் வீட்டின் வாசலை நோக்கி செல்கின்றனர். தன் காலை எடுத்து வாசல் படியில் எடுத்த வைத்தான் சேரன். பூச்சாடி ஒரு மேல் மாடியிலிருந்து சேரனின் கால் முன் வந்து விழுந்தது. சேரன் ஒரு நிமிடம் சிலையாகி போனான்.

“சேரா ஜஸ்ட் மிஸ்ட், இல்லேனா உன் தலையிலே வந்து விழுந்திருக்கும்! எனக்கு என்னமோ சரியா படல, ஆரம்பமே இப்படி இருக்கு!”, என்று பதற்றத்துடன் கூறினான்.

“அதெலாம் ஒன்னும் இல்ல. காத்தடிச்சி விழுந்திருக்கும், இதெல்லாம் ஒரு பெரிய விசயம்மா? வா உள்ள போலாம்”, என்று சமாதானப்படுத்தி கதவை திறக்க முற்பட்ட சேரனுக்கு அதிர்ச்சி!

“பிரபா என்ன கதவு லோக் பண்ணவே இல்ல? எப்படி ஓப்பென்ல இருக்கு. அப்போ சாவி எதுக்கு கொடுத்துருக்காங்க?”, என்று குழப்பத்துடன் கூற பிரபா,

“ரொம்ப நாளாச்சி லெ! மேபி லோக் வேளை செய்யாம போயிருகேலாம். ஆனாலும்…” என்று அவன் இன்னும் பேச இழுக்க, சேரன் விரைவாக வீட்டினுள் நுழைந்தான். பிரமாண்ட ஹால், பெரிய சர விளக்குகள், வீடு நல்ல விசாலமாக இருந்தது. கண்ணுக்கு எட்டும் தூரம் எல்லாம் அறைகள்.

“பிரபா, நீ கீழ் பக்கம் பார்த்துகிட்டு இரு நா மேல் மாடிக்கு போய் பார்கறேன் என்ன”, என்று கூறி இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் சென்று வீட்டை சுத்தி பார்த்தனர். மேல் மாடியில் மொத்தம் ஆறு அறைகள். சேரன் ஒவ்வொரு கதவாக திறந்துப் அறைகளை நோட்டமிட்டான். திடிரென்று “சேரா! சேரா!“ என்ற அலறல் சத்தம்.

சேரன் “பிரபா! பிரபா! என்னாச்சி”, என்று பதற்றத்துடன் கீழ் இறங்கி வந்தான். “ஏதோ ஒரு உருவம் வேகமா இப்படி போன மாறி இருக்கு , நா கூட நீதான்னு நினைச்சேன்! ஆனா நம்பள தவிர இந்த வீட்டுலே யாரோ இருக்கிற மாறி இருக்கு!”, என்றான் பிரபா.

“அரண்டவன் கண்ணனுக்கு இருண்டதெல்லாம் பேய், போய் நம்ப வேலையே பாப்போம் வா!” என்று கூறி கொண்டு மேல் மாடிக்கு சென்றான்.

சேரன் மேல் மீதம் உள்ள அறை கதவுகளை திறக்க முற்பட்ட பொது அனல் காற்று ஒன்று தன் பின் உடுருவி சென்றதை உணர்ந்தான். அதே சமயம் தன் நிழலுக்கு நிகராக இன்னொரு நிழல் பின் கடந்து செல்வதை கடை கண்ணால் பார்த்தான். ஒரு நிமிடம் அவன் ரத்தம் உறைந்து போவதை போல் உணர்ந்தான். பிரபா சொல்வது உண்மைதானோ என்று உணர ஆரம்பித்தான். இருந்தாலும் தன்னை தைரியபடுத்திக் கொண்டான்.

“டக்,டக்,டக்”, சத்தம் படியை நோக்கி கேட்கிறது. ஆனால் யாரும் இல்லை. சேரன் கண்கள் விரிந்தது. படி சுவரில் ஒரு நிழல் தெரிய ஆரம்பித்தது, அது மேல் நோக்கி ஏறியது. சேரன் வேர்வையால் நனைந்தான்.

பார்த்தால் அது பிரபா. சேரன் சிரித்தபடி “நீதனா அது! சரி கீழ் மாடி எல்லாம் பார்த்துட்டியா, எதாச்சும் ஐடியா கிடைச்சுதா?” என்றான் சேரன். “ஹ்ம்ம்! இப்போதைக்கு ஒரு ஐடியா இருக்கு! வீட முழுசா பார்த்து சொல்றனே?”, என்றான் பிரபா.

இருவரும் மேல் மாடிக்கு கால் எடுத்து வைக்கும் போது ஒரு அதிர்ச்சி. தலைவிரி கோலமாய், ஒன்று மேல் மாடியில் தலையைக் கோனையாக வைத்து அமர்த்திருந்தது. இருவரின் இதயம் வேகமாக துடிக்க தொடங்கியது. பிரபா, சேரன் கையை இறுகி பிடித்து கொண்டான். அது உண்மையில் என்னது என்று பார்க்க முடியவில்லை.

ஏனென்றால் அந்தி சாய்ந்ததால் வீடு இருட்டில் முழ்கி இருந்தது. சேரன் தன்னுடைய “பிளாஷ்” விளக்கை மேல் மாடியில் காட்ட, அந்த ஒளி அந்த உருவம் மேல் பட்டது. அந்த ஒளி பட்டவுடன், அந்த உருவம் சிரிக்க ஆரம்பித்தது, தட தட வென ஓடி மறைந்தது. சேரனும் பிரபாவும் ஒருவருக்கொருவர் முகத்தை வியப்புடன் பார்த்து கொண்டார்.

“அவ்ளோ சீக்கிரம் எங்கே போய் மறைஞ்சிச்சி? என்னது அது?”, தொடர்து சேரன் பிரபாவைக் நோக்கி அடுக்கு அடுக்காக கேள்வி எழுப்ப, பிரபா தலை மட்டும் தான் ஆட்டுகிறான்.

“இன்னிக்கி அது என்னன்னு பார்க்காம விட மாட்டேன்”, என்று சொல்லி கொண்டு மேல் வேகமாக ஏறி சென்றான்.

பிரபாவும் வேறு வழி இல்லாமல் அவனுடன் செல்கிறான். அங்கு பார்த்தால் யாருமே இல்லை. சேரன் ஒவ்வொரு அறை கதவுகளையும் திறந்து பார்க்கிறான். மீண்டும் அதே சிரிப்பு சத்தம்! சேரனும் பிரபாவும் திரும்பி பார்க்க, அதே உருவம் அந்த அறையின் முன் நின்று கொண்டு இருந்தது. இருவரும் திடுகிட்டு போயினர் .

“டேய்! இது பேயா இல்ல பிள்ளையா? ஏன்டா இப்படி சிரிக்குது?” என்று பிரபா பதற்றதுடன் கேட்க, அதற்கு சேரன் “நல்லா பாரு! அது பிள்ளை தான், ஆனா இங்க என்ன பண்ணுது, ஏன் இப்படி பண்ணுது?”, என்று குழப்பதுடன் கேட்கிறான் .

“ஏம்மா யார் ….” என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த சிறுமி மீண்டும் சிரித்துக் கொண்டே அங்கிருந்து ஓடி செல்கிறாள்.

இருவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. மீண்டும் ஒவ்வொரு கதவுகளாக இருவரும் திறந்துப் பார்கின்றனர். அதில் ஒரு கதவை திறந்துப் பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி. அந்த சிறுமி அந்த இருட்டு அறையில் தனியாக ஜன்னல் பக்கம் நின்று கொண்டிருந்தாள். வாயில் என்னெமோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

சேரனுக்கு ஒரு பக்கம் பயம். ஆனால் வேறு வழி இல்லாமல் அந்த சிறுமியிடம் நெருங்கி செல்கிறான். அவள் தோள்பட்டையில் லேசாகக் கை வைத்து திருப்பினான். அவள் கண்ணாடி துண்டைக் கொண்டு தனது கையைக் கிழித்துக் கொண்டிருந்தாள். ரத்தம் சொட்டு சொட்டுக்காக தறையில் கொட்டியது. அவள் கை முழுவதும் சிகரெட்டு துண்டுகளால் சுட்ட காயம் கூட ஆறவில்லை. சேரன் சற்றும் யோசிக்காமல் அந்த கண்ணாடியை பிடுங்கி எறிந்தான். எடுத்த வேகத்தில் அவன் கையை அது பதம் பார்த்து விட்டது. அவள் கைகளில் முழுக்க கத்தியால் கிழிக்கப்பட்ட காயங்கள். அந்த இடமே துர்நாற்றமாக இருந்தது. அழுகிய உணவுகள் அங்கு முழுக்க நிரம்பி இருந்தது. பிரபா அந்த வாடையால் வாந்தியும் எடுத்து விட்டான் .

“பாப்பா, பாப்பா! நீங்கே இன்ன பண்றீங்க? யார் நீங்க?”, என்று லேசான குரலில் சேரன் கேட்டான். அதற்கு அந்த சிறுமி தன் தலையைக் கோணலாக வைத்துக் கொண்டு கண்ணை சிமிட்டி சிமிட்டி பார்த்துக் கொண்டிருத்தாள்.

அவளின் குழி விழுந்த கண்கள் சேரனின் மனதை கனமாக்கியது. மீண்டும் சேரன் “பாப்பா, பாப்பா! என்னமா ஆச்சி உங்களுக்கு?” என இம்முறை அவள் கையைப் பிடித்து கேட்டான். அந்த சிறுமி உடனே அலற தொடங்கினாள். சேரன் ஒரு அடி பின் தள்ளினான்.

சேரன் புரிந்துக் கொண்டான். “பிரபா எனக்கு என்னமோ சரியாய் படால. இந்தப் பிள்ளையை யாரோ கடத்தி வெச்சி சித்திரவதை செஞ்சிருக்காங்க, பாரு பிஞ்சு குழந்தைய எப்படிக் கெடக்கிறான்னு”, என்றான்.

“சேரா! யாரு இப்டி செஞ்சிருப்பா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாதாவங்க, இவனுங்கெல்லாம்” என்று சொல்லி முடிப்பதற்க்குள் ஏதோ கார் சத்தம் கேட்டது.

அதைக் கேட்ட சிறுமி அங்கேயும் இங்கேயும் ஓடுனாள், அலறினாள். சுவரை வேகமாக குத்தினாள். அழுதாள், பதறினாள். சேரனுக்கும் பிரபுவுக்கும் எதுவுமே புரியவில்லை. ஏன் இந்த சிறுமி இவ்வளவு ஆவேசப்படுகிறாள் என்று.

பிரபா “ஒரு வேளை அவன்தான் வரான் போல, அதான் இந்தப் பிள்ளை இப்படி பயப்படுது”, என்றான்.

“பிரபா! சட்டுன்னு போலீஸ் கால் பண்ணு, சீக்கிரம்!”, என்றான் சேரன்.

“ஐயோ! லைன் வேறே கெடைக்கலே சேரா, என்ன பண்றது! ஐயோ! கடவுளே! சரி இங்கேயே நில்லு, நா கொன்ஜம் வெளியே போய் நின்னு கால் பண்ணி பார்க்கறேன். நீ எங்கேயும் போயிராதே, நா வந்துறேன்”, என்று பதற்றத்துடன் கூறி அங்கிருந்து ஓடினான்.

சேரன் ஜன்னலின் வழி பார்க்கையில் கீழே ஒருவன் கருப்பு ஜாக்கெட் அணிந்து கையில் நெகிழி பையுடன் வேகமாக வீட்டை நோக்கி வருகிறான் என்பதை பார்த்தான்.

“பிரபா! வேணாம். கீழே போகதே பிரபா! பிரபா! அவன் வரான் பிரபா!”, என்று அலறினான். ஆனால் பிரபா முன்னதாகவே கீழ் இறங்கி விட்டான்.

சேரனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கை கால்கள் நடுங்கின. நேரம் ஆகியும் பிரபா திரும்பவில்லை. சேரன் வேறு வழியில்லாமல் கீழ் இறங்கி செல்ல திட்டமிட்டான். பயந்து பயந்து கால்களை மெல்ல படிகட்டில் எடுத்து வைத்தான். விளக்கை காட்டி சுற்றிலும் தேடினான். பிரபா அங்கு இல்லை.

பிரபாவின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டான். எங்கயோ தூரத்தில் அது ஒலித்தது. அவனுக்கு மனதில் ஒரு நிம்மதி வந்தது, ஆனால் பிரபா அந்த அழைப்பை எடுக்க வில்லை. சேரன் மீண்டும் தொடர்பு கொண்டான். அந்தத் தொலைபேசி ஒளியை தேடி சென்றான். பார்தால் அது படிகட்டில் விழுந்து கிடந்தது. சேரன் அதை எடுத்து பார்க்க வந்த போது திடிரென்று ஒரு “அன்நோன்” கால் வந்தது. சேரன் பதற்றத்துடன் எடுத்து “ஹலோ” என்றான். “ஹலோ பிரபா, எங்க ரெஸ்கியு டீம் அங்க வந்துகிட்டு இருக்காங்க. நீங்க எல்லாரும் ஒரு பத்திரமான இடத்தில் மறைஞ்சிருங்க”, என்றார். சேரன் “ஆம்” என்று சொல்வதற்குள் யாரோ வேகமாக மேல் மாடிக்கு ஏறுவதின் சத்தம் கேட்டு அந்தச் சிறுமி இருக்கும் அறைக்கு ஓடுகிறான்.

“ஒன்னும் கவலை படாத மா, நா ஒன்ன கண்டிப்பா காப்பத்திருவேன், அவன் வரதுக்குள்ள, வா மா இங்கிருந்து போயிறலாம்!” என்று அந்த சிறுமியின் கையைப் பிடிக்க சென்ற சேரனை யாரோ பின் புறத்திளிந்து அவன் கழுத்தைச் சங்கிலியால் இறுக்கினார். எவ்வளவு முயற்சி செய்தும் சங்கலி இறுகி கொண்டே தான் இருந்தது. தவிர அதை அவனால் கழட்ட முடியவில்லை. மூச்சு முட்டியது, குரல்வழி நசுங்கியது போல் உணர்ந்தான், மெல்ல மெல்ல கண்கள் இருட்ட தொடங்கியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *