கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் த்ரில்லர்  
கதைப்பதிவு: April 12, 2018
பார்வையிட்டோர்: 82,658 
 
 

இன்று.

சி.எப்.எல் விளக்கு அணைக்கப்பட்டது. நைட் லாம்ப் மட்டும் மின்னி மின்னி எரிய அவள் தன்னவனை எண்ணிக் கொண்டிருக்க அவளை தானாக ஒரு கரம் பற்றியது. அவள் அதை எதிர்பார்த்தாள் போலும். அவள் தானாக சோபாவில் கிடத்தப்பட்டாள். அவளால் நகர முடியவில்லை. அவள் நடுங்கிகொண்டிருந்தாள். நெற்றியில் பூத்த வியர்வை துளி உதட்டை முத்தமிட்டு சென்றது. அவள் கையில் அழுத்தம் தெரிந்தது. ஆனால் யாரும் தீண்டவில்லை. தோலில் அழுத்தும் போது ஏற்படும் பள்ளம் விழுந்தது. ஆனால் அங்கே யார் கையும் இல்லை. அவள் நெஞ்சில் முகம் பதிவதை உணர்ந்தாள்.

அந்த சுவடுகளும் நெஞ்சுக்குழியில் தெரிய பயமும் பீதியும் பல மடங்கு தொற்றிக்கொண்டது.வீல்………… என அழத்தொடங்கினாள். கதறத்தொடங்கினாள். காப்பாற்றுங்கள் என்று கத்த நினைத்தாள். ஒரு வெப்ப மூச்சுக்காற்று தோள்பட்டையில் நழுவ அவள் உதடுகள் கடிக்கப்பட்டது போன்ற உணர்வு. கடிக்கப்பட்டு மேலே இழுத்தது போன்ற மாயத்தோற்றம். ஆனால் அவள் மேல் யாருமில்லை. அழ முயற்சித்தாள், கண்ணீர் தீர்ந்ததோ என்னவோ!. மூர்ச்சையானாள்!!!.

நேற்று.

சாவித்ரி வீட்டிலிருந்து வெளியில் கிளம்பினாள். அவளை அந்த தெருவினர் முறைத்து பார்த்தனர். அது அவளுக்கு பழகிப்போனது. அதனை கண்டுக்கொள்ளாமல் நடந்தாள். மார்கெட்டை அடைந்தாள். கீர்த்தனாவுடன் பேசிக்கொண்டு கூடையில் காய்களை அள்ளிக்கொண்டே கீர்த்தனாவிடம், “எனக்கென்னவோ உன் ஹஸ்பண்ட்டும் என் ஹஸ்பண்ட்டும் ஒன்னுதான்னு தோணுது. கீர்த்தனா ‘ஏ..’ என அதிர்ச்சி கலந்த பார்வை பார்த்தாள்.

சில மாதங்களுக்கு முன்பு.

சாவித்ரி அழகான பட்டதாரிப்பெண். ஆனால் ஹவுஸ் வைஃப். வயது 25. கணவன் சத்தியா பிஸினஸ்மேன். தினமும் இருவரும் கிச்சுக்காமுச்சுக்கா விளையாட்டு கண்டிப்பாக விளையாடிவிடுவர்.

ஏனோ அவளுக்கு தெரியவில்லை, பக்கத்து வீட்டுக்காரர்கள் இவர்களிடம் பேசுவது இல்லை. இவள் வெளியில் சென்றாள் குருகுருவென்று பார்பர். எப்பொழுதும் அருகில் உள்ள மார்கெட் செல்வது வழக்கம். சும்மா ரிலாக்ஸக்குத்தான்.

கீர்த்தனா அவள் ஒரே ப்ரெண்ட். மார்கெட் ப்ரெண்ட். “என்னங்க நேத்து இராத்ரியுமா” என குசும்பாக கேட்டாள் சாவித்ரி “நீ மட்டும் லீவ் விடுறியா” என கண்களை சுழட்டிக்கேட்டாள் கீர்த்தனா.

சாவித்ரி தினமும் 2 மாத்திரை உட்கொள்வாள். கணவனின் கட்டாயத்தின் பேரில் கருத்தடை மாத்திரை மற்றும் விட்டமின் மாத்திரை. இரவு அவள் மெல்லிய பூவுடலில் ஏறியிருந்த எடையை விலக்கும் பொருட்டு கணவனை கீழிறங்க சொல்ல, “ர்ர்ர்ர்ர்ர்…… ர்ர்ர்ர்ர்ர்….. ர்ர்ர்ர்ர்ர்…… மூடிட்டு படுடி” என்ற வேறொரு குரலை கேட்டவுடன் திடுக்கிட்டு நிமிர்ந்துபார்த்தாள்.

சொட்டை தலையுடன் குண்டான ஒரு ஆள் மேலே படுத்திருந்தான். தன்னால் முடிந்த உச்ச குரலில் கத்த, ‘என்னாச்சு, என்னாச்சு…’ என சத்தியா கேட்க கெட்ட கனவு என்றாள் சாவித்ரி வியர்வையை துடைத்துக்கொண்டு.

அன்றிலிருந்து அவள் படுக்கையில் வேறொருவர் இருப்பது போலவே பிம்பம் தெரிந்தது. அவள் நடுநடுங்கி போயிருந்தாள்.

மார்கெட்டில் “ஏ இத எப்படிடீ புருஷன்கிட்ட சொல்றது” என குழப்பத்துடன் கேட்டாள் சாவித்ரி.

“ஆமா சொல்ல முடியாதுதான். எதுக்கும் நீ ஒரு சைக்கார்டிஸ்ட்ட பாரு”, என்றாள் கீர்த்தனா.

“எனக்கென்னவோ இந்த மாத்தர மேலதா டவுட்” என்று பர்ஸ்லிருந்து ஒரு நீல மாத்திரை கவருடன் கை நழுவி அது கீழே விழ, ஒருவர் அதை திருப்பி திருப்பி ஆராய்ந்துவிட்டு சாவித்ரியிடம் கொடுத்தார். இருவரும் பேச்சை தொடர, “எக்ஸ்க்யூஸ்மி! நான் சிட்டியிலேயே பெரிய மெடிக்கல் ஷாப்ல வேலை பாக்கறேன், இந்த மாதிரி மாத்திரையை நான் பாத்ததில்லை, ஆனா இது ஆபத்தானதுன்னு மட்டும் தெரியும். சோ இந்த ‘அப்டமின்’ன யூஸ் பண்ணாதீங்க” என்றார் அவர்.

வீட்டில் யோசித்துக்கொண்டு படுத்துக்கொண்டிருக்க, “ஏன்டீ சோகமா இருக்க” என சத்யா கேட்டான்.

“நத்திங் சும்மா ஹெட்ஏக் தான்” என்றாள்.

“சரி சாப்டியா”

“ம்..”

“மாத்தர சாப்டியா”

“கேக்கலான்னு இருந்தேன். அந்த மாத்திர எங்க வாங்குவீங்க??”

“ஏ கேக்கற” என சந்தேக பார்வையில் கேட்டான்

“அதனாலதான் ஹெட்ஏக் ன்னு நினைக்கறேன் ”

“அதனால எல்லா ஒண்ணுமில்ல, நீ வீட்லயே இருக்கல்ல அதான்” என்றான் சத்யா.

சாவித்ரிக்கு முதல் முறையாக சத்தியா மீது சந்தேகம் எழுந்தது.

மார்கெட்டில் கீர்த்தனா சாவித்ரி கனவை பற்றி பேசிக்கொண்டிருக்க “சொல்ல மறந்துட்டேன். நானும் நீ காமிச்ச மாத்திரரை சாப்படற வீட்டுக்கு போய் நானே பாத்த”. அப்போது கீர்த்தனா போன் ஒலித்தது. டிஸ்பிளேயில் புருஷன் என மின்னியது. “ஹலோ! ஹலோ! இருங்க, ஸ்பீக்கர் போச்சு. லவுட் ஸ்பீக்கர் போடுறேன்“.

“ஏ எப்ப வர”. சாவித்ரி திடுக்கிட்டாள். அது சத்யாவின் குரல்.

வீட்டில் சாவித்ரி அந்த மாத்திரை எடுத்துக்கொள்ளவில்லை. தூங்க முயற்சி செய்தும் தூக்கம் வரவில்லை. காற்றில் மாமிச வாடை அடித்தது. ம்ஹ்ஹ்ஹ் ம்ஹ்ஹ்ஹ் ம்ஹ்ஹ்ஹ் ம்ஹ்ஹ்ஹ் என ஒரு சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி சென்றாள். பக்கத்து அறையிலிருந்து அந்த சத்தம் கேட்டது. ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ர் என்ற கதவு இழுத்து மூடும் சத்தம் கேட்டது. அறையை நோக்கி நடந்தாள். ஆடிக்கொண்டிருந்த கதவை நிறுத்திவிட்டு கதவருகே நின்றாள். தோள்பட்டையில் திடிரென வெப்ப மூச்சுக்காற்று உரச அவள் உடல் குப்பென்று வியர்த்தது. அவள் தோளில் ஒரு கை அமர, கண்ணை மூடிக்கொண்டு ‘ஆ!!! சத்யா! சத்யா!’ என கத்திக்கொண்டு ஒடினாள்.

சத்யா இருந்த அறைக்கு செல்ல அங்கு பலர் குழுமியிருந்ததை பார்த்தாள். அனைவரும் அவள் கற்பனையில் வந்தவர்கள். “இவங்கள எப்படி இங்க, எதோ தப்பு நடக்குது” என கத்த, சத்யா “அங்க யாருமில்ல” என சொல்ல, ‘நீ பொய் சொல்ற’ என சத்யா முதுகில் அடித்தாள் சாவித்ரி.

காலையில் எழுந்தாள். சத்யா கிளம்பிக்கொண்டிருந்த நேரத்தில் சாவித்ரி கையில் கத்தியை எடுத்துக்கொண்டாள்.

சட்டையில் ஸ்லீவில் மறைத்துக்கொண்டாள்.

“சத்யா நல்லா இருக்கியா” என கேட்டாள்

“ஏ இப்படி கேக்கற” என சிரித்துக்கொண்டிருக்க

“நேத்து என்ன தூக்கிட்டு போனல”

“தூக்கிட்டா கனவு கண்டயா”

“ஓவரா பண்ணாத எனக்கு எல்லா தெரியும்” என முறைத்துக்கொண்டு பல்லை கடித்துக்கொண்டு சொன்னாள் சாவித்ரி.

“உடம்பு சரியில்லயா”

சாவித்ரி சத்யாவின் சட்டையை பிடித்தாள் “ஏன்டா எப்படிடா எனக்கே தெரியாம என்ன எப்படி எப்படிடா உனக்கு” என்று ஸ்லீவ்லிருந்த கத்தியை நீட்ட வீட்டில் ஆராவாரம் தொற்ற “யாராவது வாங்க, ஏன்டா இத்தன நாள் என்னை எல்லோரும் குருகுருன்னு பாத்தப்ப புரியல. இப்பதான் எல்லாரும் என்னை பற்றி நினைச்சிருப்பாங்கனு புரியுது!!. யாரவது வாங்க” என மறுபடியும் கத்த சத்யா ஒங்கி அறைய சாவித்ரி கிழே விழுந்தாள். அவளால் எழ முடியவில்லை. “யாராவது வருவாங்களா! ஒரு விபச்சாரி கூப்டா யாராவது வருவாங்களா” என்று சொல்லி சிரித்தான்.

“எனக்குள்ள நீ எப்படி”

“உனக்குள்ள மட்டுமில்ல சிட்டியில 33 பொண்ணுங்கள இப்படித்தான் பண்ணிருக்கேன். நான் கெமிஸ்ட் படிச்ச படிப்பக்கு வேலையில்லை, மூளையில சில கெமிக்கல இன்ஜக்ட் பண்றது மூலமா இறந்தவங்க நினைவ கொண்டு வர ப்ராஜக்ட் பண்ண எல்லா ஃபெயிலியர். சோ பொண்ணுங்கள வச்சு பிஸினஸ் பண்ண ஆரம்பிச்சேன். என் அழக பயன்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். படுக்கறப்ப என்கூட படுக்கற மாதிரி இருக்கும். ஆனா அது நா இல்ல, நான் நம்பி அவங்க இருக்காங்க பாத்தியா?. அதுதா கஸ்டமர்க்கு வேணும்” என சொல்ல படாரென சாவித்ரி எழுந்து அவனை சோபாவில் தள்ளினாள். அவன் இரு கைகளையும் சோபாவோடு சேர்த்து குத்தி கண்ணாடி ப்ளேட்டில், ‘என்ன இப்படி ஏமாத்திட்டயே?’ என்று அடிக்க அவன் மூர்ச்சையானான். கீர்த்தனாவிற்கு போன் செய்து வரவழைத்தாள்.

சத்யா கண்விழித்தான். கை கால்கள் கட்டப்பட்டிருந்தன.

“உடனே, நீ யூஸ் பண்ண பொண்ணுங்க லிஸ்ட்ட தா” என கண்ணீர் வடிந்த முகத்துடன் கோவமாய் கூறினாள் கீர்த்தனா.

“என்ன ப்ளான்” என கீர்த்தனா கேட்க “முதல இவன கோமாக்கு அனுப்பனும்”

“ஏன்டா உனக்கு பொண்ணுங்கன்னா……..|”

“ஏ டயலாக்கல்லாம் வேணாம். நமக்கு பண்ணத இவனுக்கு திருப்பி பண்ணப்போறோம்” என்றாள் சாவித்ரி. சத்யா நடுநடுங்கிப்போனான். அவன் மூளையில் என்ன நிகழ்வை மாற்றப்போகிறாளோ என பயந்தான்.

சத்யா கண்விழித்து பார்க்க, அவனால் நகர முடியவில்லை. அவன் அடியில் பாத்ரூம் போக ட்ரெசின் இருந்தது. சாவித்ரி, ‘என்னங்க லெட்டின் போறதுன்னா சொல்ல வேண்டியதுதானே?’, எனக்கூறி உட்கார வைக்க, அந்த சிறிய காலண்டரை பார்த்தான்.

சாவித்ரியுடன் திருமணமாகி 3 மாதம் கழிந்து இருந்தது.

சத்யாவிற்கு சாவித்ரி பாசமாக சோறுட்டினாள்.

சத்யாவிற்கு புரிந்தது. தனக்கு தண்டனை கொடுக்க, அவள் பாசத்தையும் புரிய வைக்க, தனக்கு ஸ்ட்ரோக் வர வைத்துள்ளாள். ஸ்ட்ரோக் வந்தும், சாவித்ரி அவனை பிரியவில்லை.

அன்பான ஒருத்தியின் பாசத்தை இழந்துவிட்டேனே என வருந்தினான்.

‘சாரி சாவித்ரி’ என்றான் சத்யா.

‘எதுக்கு?’ என கேட்டாள் அந்தா அறியா சாவித்ரி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *