வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

1
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 15, 2021
பார்வையிட்டோர்: 10,490 
 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3

“பாரிஸ் ஜஃபல் டவரைவிட இது உயரமா?”-முத்து கேட்டார்.

“ஆமாம். ஆனா, அது வெய்ட் அதிகம். 7000 டன் கனம். இது 4000 டன்தான்”- புள்ளி சொன்னார்.

“அதாவது-இது கனம், அது மகாகனம்” என்றார் முத்து.

“ஜப்பான்ல அடிக்கடி புயலும் பூகம்பமும் வருமே அதுக்கெல்லாம் தாக்குபிடிச்சு நிக்குதர இது?”-கணபதி ஸ்தபதி கேட்டார்.

“அந்த விஷயத்துல நம்ம கலைஞர் மாதிரிதான் இந்த ட வரும். எந்தப் புயலுக்கும் பூகம்பத்துக்கும் அசைஞ்சு கொடுத்து ஸ்டெடியா நிக்கறார் பாருங்க. அதுபோலத்தான் இந்த டவரும். ‘ புயல் வந்தா 32 இஞ்ச் வரைக்கும் இப்படியும், அப்படியும் ஊசலாடி சமாளிச்சு நின்னுடும். என்ஜினீருங்க அந்த மாதிரி இதை ஒரு ஆச்சரியமா அமைச்சிருக்காங்க” என்றார் புள்ளி.

“ஜப்பான் காரன் மூளையே மூளை” என்று வியந்தார் மனோரமா.

அது மட்டும் இல்லே. புயல் பூகம்பம் வரப் போகுதுன்னா

கருவிகளும் இந்த டவர்ல பொருத்தியிருக்காங்க” என்றார் புள்ளி.

“மேலே’ போய் ஒரு ஏரியல் சர்வே நடத்தலாம் வாங்க” என்று அழைத்தார் முத்து.

ஏழு பேரும் க்யூ வரிசையில் நின்று லிப்டில் ஏறியபோது . லிப்ட் கர்ல் ஒருத்தி பவ்யமா இடுப்பை வளைச்ச குனிந்து, வரவேற்றாள். ஒவ்வொரு தடவையும் “ஹய் ஹய்” என்றாள்.

“போறவங்க வர்ரவங்களுக்கெல்லாம் இப்படி ‘ஹய் ஹய்’னு வணங்கிக்கிட்டிருந்தா ‘இந்தப் பொண்ணுக்கு இடுப்பு வலிக்காதா?” என்று கேட்டார், மனோரமா.

VadamPidikka-pic3

“ஜப்பான்ல இது ரொம்ப சகஜம். லிஃப்ட் கர்ல்ஸ் மட்டும் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் தடவை உடம்பை வளைக்கறதா ஒரு புள்ளி விவரம் சொல்லுது” என்றார் சுப்புடு.

“ஜப்பான்காரங்களுக்கு சப்பை மூக்கும்பாங்க. இந்தப் பெண்ணைப் பார்த்தா அப்படி இல்லையே! மூக்கும் முழியுமா அழகா இருக்காளே!” என மகிழ்ந்தார் மனோரமா.

“அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போச்சு! இப்ப யாருக்குமே சப்பை மூக்கு கிடையாது. குள்ளமும் கிடையாது. எல்லாருமே உயரமாயிட்டாங்க.”

“பாவம்!. செடிங்களைத்தான் வெட்டி வெட்டி வளரவிடாம குள்ளமாக்கிடறாங்க. அது ஒரு கல்ச்சராம்!” என்றார் முத்து.

“செடிகளை இம்சை பண்ணி குட்டையாக்கறது ஒரு கல்ச்சரா? புத்த மதம் இதை ஒப்புக்குதா?” என்று கேட்டார் நன்னன்.

“தெரியலை; திருக்குறள் ஷோஜோவைத்தான் கேட்கணும்” என்றார் புள்ளி.

ஷோஜோ பதில் சொல்ல முடியாமல் அசட்டுச் சிரிப்பாய்ப் பற்களைக் காட்டினார்.

எல்லோரும் ‘ஆப்ஸர் வேடரி’ மாடிவரை லிப்டில் போய் பைனாகுலர் வழியாக டோக்கியோ நகரைக் கண்ணோட்ட மிட்டார்கள்.

டோக்கியோ நகரம் உயிர்த்துடிப்போடு ‘ஜிவ்’வென்று

நெடுச்குமாய்ப் பின்னிக் கிடந்தன. கார்கள் பல்வேறு வண்ணங்களில் பளபளப்பாய்ச் சப்பி எடுத்த பாதாம் பெப்பர்மிண்ட் மாதிரி ஊர்ந்து கொண்டிருந்தன!

“அதோ தெரியுதே, அத்தான் இம்பீரியல் பாலஸ்” என்று சுட்டிக்காட்டினார் ஷோஜோ.

“அதைச் சுற்றித்தான் தேர் ஓடப் போகுதோ” என்று கேட்டார் விழா வேந்தன்.

“ஆமாம், தேரோட்டத்தன்னைக்கு ‘நேஷனல் ஹாலிடே’ டிக்ளேர் பண்ணப் போறாங்களாம். வெளிநாட்டிலிருந்தெல்லாம் ஏகக் கூட்டம் வரும் என்று எதிர்பாக்கறாங்க. இப்பவே எல்லா ஓட்டலும் புக் ஆயிட்டுதாம். ஒலிம்பிக் விழாவைவிடப் பெரிசா நடத்தணும்னு ஜப்பான் சக்கரவர்த்தி ஆர்வமாயிருக் காராம்!”

“அமெரிக்காவிலிருந்து புஷ், ரஷ்யாவிலிருந்து கார்பசேவ், லண்டனிலிருந்து தாச்சர், இந்தியப் பிரதமர் எல்லோரும் தேரோட்டத்துக்கு வரப் போறாங்களாமே!”

மத்தவங்க பேரெல்லாம் சொன்னீங்க. வி.பி.சிங் பேரைச் சொல்லாம இந்தியப் பிரதமர்னு சொல்றீங்களே, அது ஏன்?” என்று கேட்டார் நன்னன்.

“இப்ப இருக்கிற நிலைமையில வி.பி.சிங்தான் பிரதமராயிருப்பார்னு உறுதியாச் சொல்ல முடியலையே! அங்கே அத்வானி ஒரு ரதம் விட்டுக்கிட்டிருக்காரே! அது என்ன ஆகப் போகுதோ!” என்றார் புள்ளி..

“டோக்கியோவே அல்லோலகல்லோலப்படப் போகுது. நம் கலைச் சிறப்பை எல்லா நாட்டு மக்களும் கண்டு களிக்கப் போறாங்க. நம் ஊர் நாதசுரம், பாண்டு வாத்தியம், பரத நாட்டியம், கோயில் குடை, வாழை மரம், தென்னங்குலை, தேர்ச்சீலை, தண்டமாலை, தொம்பை, பொய்க்கால் குதிரை, கரகாட்டம், தாரை தப்பட்டை, சிலம்பம், வாண வேடிக்கை, கொம்பு வாத்தியம், கொம்பு மிட்டாய், பொரி கடலை,பட்டாணி, வளைக்கடை, தண்ணீர்ப்பந்தல், நீர்மோர்…”

“நீர் மோர்னா?”

“More நீர்னு அர்த்தம்!”

“ஆமாம்; வடம் பிடிச்சு இழுக்க ஆயிரக்கணக்கான பேர் தேவைப்படுமே திருவாரூர்த் தேர் மாதிரி ரொம்பப் பெரிசாச்சே! ஜப்பான்காரங்களால முடியுமா? நம்மோடு சேர்ந்து இழுப்பாங்களா?”

“ஒரு பக்கம் வடத்தை ஜப்பான்காரங்க இருப்பாங்க. இன்னொரு பக்கம் நாமெல்லாம் இழுப்போம். நடுநடுவே வெளிநாட்டுக்காரங்களும் சேர்ந்து இழுப்பாங்க.”

“இதுதான் ரியல் கல்ச்சுரல் எக்ஸ்சேஞ்ச்”

“எனக்கு ஒரு சந்தேகம். தேர் ஓடறபோது அதுக்கு முன்னாலும் பின்னாலும் யார் யார் போவாங்க?”

“மாயவரம், கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை பக்கத்திலிருந்து ஏராளமான ஒதுவார்கள் வராங்க. அவங்களெல்லாம் தேவாரம் திருப்புகழ் பாடிக்கிட்டு வரிசை வரிசையா அணி வகுத்துப் போவாங்க. தர்மபுரம் சாமிநாத ஓதுவார் தான் லீடர். அப்புறம் நாதஸ்வரக்காரங்க கோஷ்டி கோஷ்டியா வர்றாங்க. அவங்களுக்கு திருப்பதி ஆஸ்தான வித்வான் காமகிரிப்பேட்டை கிருஷ்ணன் தான் லீடர்”

“வாஷிங்டனுக்கே போய் வந்தவராச்சே! சக்கனிராஜ சக்கைப்போடு போடுவாரே, அப்புறம்? வேற யார் யார் வராங்க?”

“திருவிழா ஜெயசங்கர்.”

“பொருத்தம்தான். இதுவும் ஒரு திருவிழா தானே!”

“அப்ப… தேருக்கு முன்னால் ஓதுவார்கள். அவங்களுக்குப் பின்னால ஊதுவார்களா? பலே, பலே” என்றார் புள்ளி.

“ஜப்பான்காரனுக்கு வடம் பிடிச்சு இழக்கத் தெரியுமோ?” என்று ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார் முத்து.

“ஜப்பான்லேயே இந்த மாதிரி தேர்த் திருவிழா எல்லாம் உண்டு. ஏறத்தாழ நம் ஊர் மாதிரியே இருக்கும்”

“இத்தனையூண்டு மீன்குஞ்சு மாதிரி ஒரு சின்ன நாடு இது! போன யுத்தத்தில ஹிரோஷிமாவை அணுகுண்டு போட்டுத் தரை மட்டமாக்கிட்டாங்க.”

“அணுகுண்டு விழுந்த நேரம் 1945 ஆகஸ்ட் ஆறாம் தேதி காலை எட்டேகால் மணிக்கு” என்று விவரித்தார் புள்ளி சுப்புடு.

“அதுக்கப்புறம் என்னமா வளர்ந்துட்டான் பார்த்தீங்களா!”

“உலகம் பூரா ஜப்பான் சாமான்தான். காமிரா, வாச் டிரான்ஸிஸ்டர், டி.வி. வீடியோன்னு எல்லாமே மேட் இன் ஜப்பான் தான், இப்ப அமெரிக்காவுக்கு காரே பண்ணி அனுப்பறாங்க, இண்டியாவுக்குப் புடவை கரும்பு, இரும்பு இந்த ரெண்டுமே – நாட்டில் கிடையாது. ஆனா, கரும்பு இறக்குமதி பண்ணி சர்க்கரை பண்றான். இரும்பு வரவழைச்சு. எஃகு பண்றான்! இத்தனை வித்தையும் தெரிஞ்சவனுக்குத் தேர் இழுக்கறதா பிரமாதம்! ஜப்பான் , பக்களெல்லாம் ஒண்ணா, ஒற்றுமையா ஒருமுகமா பாடுபட்டு, அந்த தேசத்தையே ஒரு தேர் மாதிரி இழுத்துக்கிட்டுப் போய் முன்னணியிலே நிறுத்திட்டாங்களே!”.

“நல்லாச் சொன்னீங்க. தேர் இழுக்க ஆள் வேணும்னா குண்டு குண்டா ஸுமோ, பயில்வான்களையே அனுப்பி வெச்சுருவாங்க. பயில்வான்களும் போதாதுன்னா ‘ரோபோ’ தயார் பண்ணி தேரை இழுக்கச் சொல்லுவாங்க!” என்றார் நன்னன்.

“மணி நாலு ஆகப் போகுது. நாம் வந்த வேலையை பார்க்காம இப்படி ஊர் சுத்திக்கிட்டிருந்தா எப்படி?” என்று அவசரப்படுத்தினார் கணபதி ஸ்தபதி.

“இவ்வளவு தூரம் வந்துட்டு வாக்ஸ் மியூஸியம் அக்வேரியம் ரெண்டும் பாக்காமலா போறது? எமுநூறு வகை மீன் இருக்காமே, அக்வேரியத்துல” என்றார் மனோரமா. .

“அக்வேரியம் எங்க இருக்கு?” என்று கேட்டார் முத்து.

“இதே டவர்லதான். மூணாவது மாடில ‘மெழுகு பொம்மைங்க இருக்கு. முதல் மாடி அக்வேரியம்.”

“அதெல்லாம் விழா முடிஞ்சப்புறம் பார்த்துக்குவம். இப்ப முதல்ல உயினோ பார்க்குக்குப் போய், அங்கே நிறுத்தி வச்சிருக்கும் தேரைப் பார்த்துட்டு வந்துருவோம் வாங்க” என்று அழைத்தார் கணபதி ஸ்தபதி.

“தேர் அங்கேதான் நிக்குதா?”

“ஆமாம். பதினாலு வருஷத்துக்கு முந்தி இதே ஜப்பான்ல வள்ளுவர் சிலையை வெச்சு தேரோட்டம் விட்டாங்களே, ஞாபகம் இருக்கா? அப்ப கலைஞர் முதலமைச்சரா இருந்தார். இங்க வந்து விழாவைத் தொடங்கிவெச்சார். அந்தத் தேரைத்தான் இப்ப பாக்கப்போறோம்”

“இந்தத் தடவையும் தேரோட்டத்தை கலைஞர்தானே தொடங்கி வைக்கப் போறார்”

“அதில என்ன சந்தேகம்?”

“எப்ப வரார் தெரியுமா!”

“தேதி தெரியலே. ஆனா சக்ரவர்த்தி கஸ்ட்டா வரார்னு மட்டும் தெரியும். இந்தியன் வங்கி சேர்மன் கோபால கிருஷ்ணன் தான் எல்லா ஏற்பாடும் செஞ்சுகிட்டிருக்கார். அவர் அடுத்த வாரமே வந்துடறார்.”

“எப்படியும் ஆரம்ப விழாவுக்கு கலைஞர் வந்துடுவார், இல்லையா?”

“முதல் நாளே வந்துருவார்!”

“அப்ப துரைமுருகனும் வருவார்னு சொல்லுங்க”

“அவர் இல்லாமலா?”

எல்லோரும் ரயிலேறி உயினோ ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தார்கள்.

பார்க்கைச் சுற்றிப் பார்த்துவிட்டுக் கடைசியாகத் தேரடியில் போய் நின்றார்கள்.

“அடேயப்பா தேரைப் பார்த்தீங்களா, எவ்வளவு பெரிசு?” என்று வியந்தார் மனோரமா..

தேரின் கம்பீரத்தையும், அதன் அமைப்பையும் பார்த்துப் பார்த்து அதிசயித்துப் போனார் ஷோஜோ, “சப்பரம் என்று சொல்வார்களே, அது எது?” என்று கேட்டார்.

“இது சப்பரம்-இது சக்கரம்” என்று ஒவ்வொன்றாய் விளக்கினார் நன்னன். உடனே ஒரு சாக்பீஸை எடுத்து,

“ச-ப்-ப-ர-ம்-சப்பரம். தேர்ப்பீ டம்.

ச-க்-க-ர-ம்- சக்கரம்…” என்று எழுத்துக் கூட்டிச் சொல்லிக்கொண்டே சாக்பீஸால் சப்பரத்தின் மீதும், சக்கரத்தின் மீதும் குண்டு குண்டாய் எழுதிக் காட்டினார்.


டாக்ஸி ஒன்றை நிறுத்தி ‘ஷிம்பாஷி’ என்றாள் கிஜிமா. இருவரும் ஷிம்பாஷியில் இறங்கி கேளிக்கைகள் நிறைந்த ஒரு முச்சந்தியில் கைகோத்து நடந்தார்கள்.

நிசிகேக்கி தியேட்டர் வாசலில் பெரிய அளவு போஸ்டரில் டாப்லெஸ், பெண்கள் சிரித்தார்கள். வரிசையாகச் சம உயரத்தில் ஒற்றைக் காலைத் தூக்கி மடக்கியபடி….மார்புகள் விம்ம… த்ரீ. டைமன் ஷன் எஃபெக்ட்!

அவன் அந்தக் கவர்ச்சியை உற்றுப் பார்த்தபோது கிஜிமா கூச்சமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“எங்கேயாவது போய்ச் சாப்பிடுவோமா?” என்று கவனத்தைத் திருப்பினாள்.

“எங்கே ?”

“ஸோனி பில்டிங் எதிரில் ஐஸ்க்ரீம் பார்லரில். Miss Parrot’ என்றாள்.

திரும்பி நடந்தே வந்தார்கள். கின்ஸா போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர் முலையில் தெரிந்தது அந்த பார்லர்!

ஸிக்னலுக்குக் காத்திருந்து, ரோடைக் கடந்து, சுழல் படிகள் ஏறி. மாடிக்குப் போய் இடம் பிடித்தனர். ஒரு மூலையில் கண்ணாடி ஜன்னல் ஓரமாக சின்ன டேபிள்; எதிரும் புதிருமாய் வசதியாக இரண்டே நாற்காலிகள். கண்ணாடி வழியாகப் பார்த்தபோது கின்ஸா ஒளிப்பூச்சிகளாய்க் கோலம் காட்டியது. மெனுகார்டை எடுத்து நிதானமாகப் பார்த்துக் கொண்டிருந்த ஜார்ஜிடம் “இதோ ஒரு நிமிஷம், என் தோழிக்கு டெலிபோன் செய்துவிட்டு வந்து விடுகிறேன்” என்று எழுந்த கிஜிமா கைப்பையை நாற்காலிமீது வைத்துவிட்டுப் போனாள்.

“அந்தப் பைக்குள் சர்க்கார் ரகசியங்கள் ஏதேனும் இருக்கலாம்” என்று யோசித்தான் ஜார்ஜ். மனம் பரபரத்தது. கிஜிமா திரும்பி வருவதற்குள், அவளுக்குத் தெரியாமல் அதை எடுத்துச் சோதித்துவிடத் துணிந்தான். குற்ற உணர்வோடு சுற்றுமுற்றும் பார்த்தான். யாருமே இவனை கவனிக்கவில்லை. சட்டென்று அந்தப் பையை எடுத்து அதிலிருந்த சில கடிதங்களை அவசரமாய்ப் படித்தான். அவன் எதிர்பார்த்த, அவனுக்குத் தேவையான சில ரகசியங்கள் அதில் இருந்தன!

இதயம் படபடக்க, சில விலாசங்களையும் தேதிகளையும் தன் டயரியில் வேகமாய்க் கிறுக்கிக்கொண்டு அந்தக் கடிதங்களைப் பழையபடியே பையில் வைத்துவிட்டான்.

கிஜிமா நிதானமாகத் திரும்பி வந்து எதிரில் உட்கார்ந்து தலையைக் கோதிக்கொண்டாள்.

“ஜார்ஜ்! என்ன சாப்பிடுகிறீர்கள்? இங்கே ‘மிஸ் பேரட்’ ஐஸ்க்ரீம் ரொம்ப பாபுலர். திருமணமாகாத இளம் ஜோடிகள் அதைச் சாப்பிடுவதற்கென்றே இங்கு வருவார்கள்” என்று கூறிச் சிரித்தாள்.

“Miss Parrot” என்றவன் “இங்கே எப்போதும் கூட்டம்தானா?”

“ஆமாம்; காதலர்கள் உல்லாசப் பொழுதுபோக்க இங்கே வருவார்கள் நிதானமாய் உரையாடிக்கொண்டே ஐஸ்க்ரீம் சுவைப்பார்கள்.”

“எனக்கு ‘மிஸ் பாரட்’ ரொம்பப் பிடித்திருக்கிறது.”

“இன்னொன்று சாப்பிடுகிறீர்களா?”.

“வேண்டாம். நாளைக்கும் இங்கே வருவோம்.”

இருவரும் எழுந்தார்கள்.

அவளை ‘ஸப்வே’ வரை கொண்டுவிட்டான். பிறகு டாக்ஸி பிடித்து தன் ஓட்டலுக்குத் திரும்பியபோது மணி பதினொன்று. ஜப்பானியர்கள் குளிக்கிற நேரம். களைப்போடு கட்டிலில் அமர்ந்தான்.

ஷூ கழற்றி, ஸாக்ஸ் உரித்து நைட்கவுன் அணிந்து, க்ரீன் டீ தயாரித்துக்கொண்டிருந்தபோது டெலிபோன் கிணு கிணுத்தது. ரிஸீவரை எடுக்க, அவனுடைய நண்பன் பென்னட்டின் ஆவல் நிறைந்த குரல்:

“ஜார்ஜ். நான்தான் பென்னட். பாரிஸிலிருந்து பேசுகிறேன். ஏதாவது தகவல்…?” என்று இழுத்தான்.

“எஸ். ரொம்ப முக்கியமான தகவல் சிக்கிவிட்டது. ஷாம்பேன் குடித்து வெற்றியைக் கொண்டாடு நண்பனே!” என்றான் ஜார்ஜ்.

“யூ ஆர் கிரேட் இந்தச் செய்தி போதும் நாளை வந்து விடுகிறேன். நேரில் பேசிக்கொள்ளலாம்” என்று பேச்சை வெட்டிக்கொண்டான்.

ஜார்ஜ் ரிஸீவரை வைத்ததும் மீண்டும் டெலிபோன் ஒலித்தது.

‘யாராயிருக்கலாம்?’ என்ற யோசனையுடன் ஜார்ஜ் டெலிபோனை எடுத்துப் பேசியபோது, ஒரு அதிர்ச்சியான செய்தி!

“ஜார்ஜ்! உங்க டயரியை நீங்க ஐஸ்க்ரீம் ஷாப்பில் மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டீர்களா?” என்று கேட்டாள் கிஜிமா.

“மை காட்” என்று தலையில் கை வைத்துக்கொண்டான் ஜார்ஜ்.

– தொடரும்…

– வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு, முதற் பதிப்பு: ஜனவரி 1991, அசோக் உமா பப்ளிகேஷன்ஸ் , சென்னை.

Print Friendly, PDF & Email

1 thought on “வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

  1. அறுவை! வாஷிங்க்டனில் திருமணம் நன்றாக இருந்தது.தனக்குத்தானே போலி எழுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *