கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: May 27, 2023
பார்வையிட்டோர்: 14,352 
 
 

(2019ல் வெளியான சரித்திர மர்ம திகில் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 8 – 14 | அத்தியாயம் 15 – 19 | அத்தியாயம் 20 – 22

அத்தியாயம் 15 

நிலாவைக் காணவில்லை என்று கவலையடைந்த பிரபு, ஜானி, வந்தியத்தேவன், கதிரவன், மாயவன் ஐவரும் அவளைத் தேடி தாங்கள் தங்கியிருந்த ரிசார்ட்டிலிருந்து படப்படப்புடன் வெளியே வந்தனர் . 

“எல்லோரும் ஒன்றாகவே தேடுவோம்… உங்களுக்கு புது இடம். வழி தெரியாமல் விலங்கு நடமாட்டம் பகுதிக்கு சென்று விடக் கூடாது அல்லவா …” கதிரவன் கூற, 

“நல்லது … வாங்க….” 

முக்கியமான இடங்கள் வியூ பாயிண்ட் பகுதி மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி எல்லா இடங்களிலும் தேடி களைத்துப் போனவர்கள் என்ன செய்வது என்று பிரமை பிடித்து ஓர் இடத்தில் அமர்ந்து விட்டனர். 

பிரபு தலை இரண்டும் பிடித்தபடி கண்ணில் நீர் வழிய அமர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்த நண்பர்கள் அவன் அருகில் மெல்ல அமர்ந்து அவன் தலையிலிருந்து கையை எடுத்து விட்டனர் . 

“பாஸ் …. நிலாவுக்கு ஏதாவது ஆகியிருந்தால் நம் எல்லோருக்குமே பிரச்சினைதான் . அதிலும் நீங்கள் தான் அழைத்துச் சென்றதாக அந்த மானேஜர் வேறு கூறுகிறார். இது பிரச்சினையை நம்மை நோக்கி குற்றம் சாட்டுவதற்கு முக்கிய ஆதாரம் ….!” ஜானி கவலையுடன் கூற 

“என்னைத் தூக்கில் கூட போடட்டும்…கவலையில்லை . ஆனால் என் நிலா இல்லாத உலகில் நான் வாழ மாட்டேன் … இது மட்டும் உறுதி ….!” பிரபு கண்களில் வெற்றுப் பார்வை வைத்தபடி பேச, 

“கேப்டன்… கண்டிப்பாக நிலாவுக்கு ஏதும் நடந்திருக்காது . இதை நான் உறுதியாக கூறுகிறேன். என் உள் மனசு சொல்லுது …” 

“பாருங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் நிலா நமக்கு கிடைத்து விடுவார்கள் …” 

வந்தியத்தேவன் ஆறுதல் படுத்த முயன்றான். 

கதிரவனும் மாயவனும் வேறு பக்கம் பார்த்து விட்டு களைப்புடன் இவர்கள் அருகில் வர 

இவர்களை மூவரும் நிமிர்ந்துப் பார்க்க அவர்கள் உதட்டைப் பிதுக்கினார்கள். 

“ஜானி … என்னால முடியலடா …. என் நிலா இல்லாமல் இனிமே நான் வாழ விரும்பவில்லை … நிலா …. நிலா … இதோ நானும் உன் கூடவே வந்துவிடுகிறேன் …. நீ மட்டும் தனியாக போய் விடாதே ….!” பித்துப் பிடித்தவனைப் போல் பிரபு எழுந்து மலையின் ஓரம் வேகமாக நடக்கத் தொடங்கினான் . 

இதைக் கண்ட நண்பர்கள் அதிர்ச்சியடைந்து அவன் பின்னால் ஓடி அவனைத் தடுத்து நிறுத்த முயல, அவர்களை தள்ளி விட்டு மூர்க்கனைப் போல் ஒரே சீரான நடையில் வெற்றுப் பார்வை பார்த்தபடி நடக்க பின்னாலேயே அனைவரும் கத்திக் கொண்ட ஓடி வந்தனர். 

வேகமாக வந்து கொண்டிருந்தவன் சட்டென்று நின்றான் . 

‘நிர்மலேஷ்வரா மனதிற்கிசைந்த மல்லிகை சற்று வடபுறமாக சென்று தேடு …. மனத்தில் மணத்தோடு மாயவனை அகற்றி மலர்ந்திருக்கிறாள் …. 

காதில் குரல் கேட்டவுடன் சட்டென்று நின்றவன் திரும்பி 

“ஜானி….சீக்கிரம் வாங்க…இந்தப் பக்கமா போயி தேடுவோம்….” என்று கூறிக்கொண்டே வேகமாக ஓடினான். 

அவன் ஓடுவதைக் கண்டவர்கள் அவன் பின்னாலேயே பதட்டத்துடன் ஓடினர் . 

மலையின் பள்ளத்தாக்கு ஓரம் இருந்த பாறையின் மேல் அமர்ந்திருந்த உருவத்தைப் பார்த்தவன் ” நிலா … ஆஆஆ என்று கத்திக் கொண்டே அந்த உருவத்தின் அருகில் ஓடிவர 

திரும்பிப் பார்த்த உருவத்தைப் பார்த்ததும் திகைத்து நின்று விட்டான். 

தான் கூப்பிட்டக் குரலுக்கு திரும்பிப் பார்த்த உருவம் நிலா இல்லாமல் வேறொறு பெண்ணாக இருக்க அவள் அருகில் வாலிபன் ஒருவனும் அமர்ந்திருப்பது அப்போதுதான் தெரிந்தது . 

இவர்கள் அனைவரும் தங்கள் அருகில் மூச்சிரைக்க ஓடி வந்து நிற்பதைப் பார்த்ததும் திகைத்து எழுந்த ஜோடி பயத்துடன் ” ஏமி .. ஏமி காவாலி … மீரு எவுரு …?’ நடுங்கிக் கொண்டே கேட்க, 

“ஏமி லேதம்மா … மன செல்லலு தொருகி போயிந்தி… லாங் சைட்ல சூஸ்தேதானிக்கி மன செல்லலு நூவன்னிட்டி சந்தோசமாயி பரீக்க ஓச்சேசிந்தோம் …. வீ ஆர் வெரி சாரி …!” 

வந்தியத்தேவன் கூற 

“சார் … ஒக்க லேடி அக்கட உந்தி . நூவு அக்கட சூடண்டி ..’ என்று தங்களுக்கு நேர்எதிரே இருக்கும் மரத்துப் பக்கம் காட்ட,

அனைவரும் வேகமாக அங்கு செல்ல ,

பெரிய ஆலமரம் இருக்க அது மறைத்தப் பக்கம் கீழே உட்காருவதற்கு ஏற்றாற்போல் சதுரமான பாறை இருக்க, 

அதில் உட்கார்ந்தபடி இலைகள் கீழே நிறைய இருக்க அதை நார் போல் கிழிக்கப்பட்ட மரப்பட்டையினால் நீளமாகக் கோர்த்துக் கொண்டிருந்த நிலா ,

அந்த இலை மாலையை கழுத்தில் போட்டு பார்ப்பது போல் வைத்துப் பார்த்து விட்டு, 

“பிரபு … இப்ப நீங்க வரலாம் … மாலை கட்டி விட்டேன் … நீங்க சொன்ன கால் மணி நேரத்தில் . நீங்க தோத்துட்டீங்க…வாங்க… நூறு தோப்புக்கரணம் போடுங்க…!” மரத்தின் பின்பக்கம் பார்த்துக் குரல் கொடுக்க 

பிரபு அவள் குரலினைக் கேட்டு வெகு வேகமாக மரத்தைச் சுற்றி வந்து மூச்சிரைக்க அவள் எதிரில்வந்து நின்றான் 

“வந்துட்டீங்களா … இந்தாங்க மாலை கழுத்தில் போட்டாள். 

பின்பு “என்ன …. நான் ஜெயிச்சிட்டேனா..” 

“நீங்க தோத்துட்டீங்க…. போடுங்க நூறு” என்று அவன் தோப்புக்கரணத்தை …” சால்ஜாய்ப்பெல்லாம் சொல்லக்கூடாது ….” என்று சொல்லி விட்டு சிரிக்க 

அதுவரை அவளையே இயலாமையால் தோற்றவனைப்போல் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்த பிரபு திடீரென்று அவளை இறுக அணைத்துக் கொண்டு 

‘நிலா … நிலா …. என்று சொல்லிக் கொண்டே மாறி மாறி அவள் கன்னத்தில் ஆவேசமுடன் முத்தமிடத் தொடங்கினான் . 

இதை சற்றும் எதிர்பார்க்காத நிலா அதிர்ச்சியடைந்து அவன் செயல்களை தடுக்காமல் பிரமை பிடித்து நின்று விட்டாள். 

சிறிது நேரங்கழித்தே சுயநிலை அடைந்தனர் இருவரும் 

சட்டென அவன் பிடியில் இருந்து தன்னை விலக்கிக் கொண்ட நிலா 

“பிரபு …. உங்களுக்கு என்ன ஆச்சு… ஏன் இப்பிடி பிஹேவ் பண்றீங்க… என்னமோ ரொம்ப நாள் பிரிஞ்சி ஒண்ணு சேர்ந்தது மாதிரி இருக்கு உங்க ஆக்டிவிட்டீஸ் …. வொய் திஸ் கொலை வெறி …?” 

நாணத்துடன் சற்று அவனை விட்டு விவகி அவள் கேட்க, 

அதுவரை தள்ளி நின்று கவனித்துக் கொண்டிருந்த நண்பர்கள் அருகில் வர, 

அவர்களைப் பார்த்ததும் நிலா 

ஹேய் …. என்னப்பா நீங்களும் இந்த இடத்தை கண்டு பிடிச்சி வந்துட்டீங்களா … இல்லை … உங்க பாஸ் போன்ல இடத்தைச் சொல்லி வரச் சொன்னாரா …?” 

அவள் கேள்வி கேட்க அவளை கேள்வி கேட்க ஜானி முயல் 

சட்டென்று ஜானியின் கையை அவளுக்குத் தெரியாமல் அழுத்திப் பிடித்த பிரபு தலையாட்டி வேண்டாமென்று கூற 

புரிந்து கொண்ட ஜானி 

“இல்ல நிலா … நீங்க இருக்குற இடம் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் இந்தப் பக்கமாக பார்த்துக் கொண்டே வந்தோம். உங்கள் குரல் போல் கேட்கவே நீங்களா இருக்குமோ என்று சந்தேகத்திலேயே வந்துப் பார்த்தோம் …. கரெக்டா நீங்கதான் இருக்கீங்க ….!” என்று கூறியதும்

“காலையில இவரு வந்து கூப்பிடும் போதே நான் சொன்னேன் … எல்லாரையுமே அழைச்சிக்கிட்டே போகலாம்னு . இவுருதான் அவங்க இன்னும் எந்திரிக்கலை … நாம கொஞ்ச நேரம் தனியா சுத்திப் பார்த்துட்டு வருவோம்னு சொன்னாரு ….” 

“ஆமா …. சீக்கிரமே வந்துட்டீங்களே . சாப்பிட்டீங்கிளா …?” 

ஜானி கேட்க, 

“ஆமால்ல … மணி இப்ப என்ன …?” என்று பார்த்தவள், 

“அட …. மணி ஒன்னாயிருக்கு … இதுவரை எனக்கு பசியே தெரியலையே … என்ன ஆச்சரியம் …?” 

வியந்து அவள் கூறிய வார்த்தைகள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தன. 

ஜானி அவளை திசைத் திருப்ப 

‘காதலில் கட்டுண்டால் 

நூறு காலமும் 

ஒரு நொடி தான் …! 

ரெண்டு பேரும் யாருக்கும் தெரியாம சிறகடிச்சி பறந்துகிட்டு இருந்தீங்கள்ள … அதான் உங்க பசி எல்லாம் சேர்த்து எங்ககிட்ட குடுத்திட்டீங்க போலும். 

கொஞ்சம் உங்க காதலுக்கு பிரேக் கொடுத்தா … 

நாங்களும் பசி நீங்கி சற்று இளைப்பாறுவோமல்லவா…?”, 

ஜானியின் கவித்துவ பேச்சில் கலகல வென்று சிரித்த நிலா 

“ஜானி … ரொம்ப அழகா பேசுறீங்க … உங்க பசி நல்லாவே தெரியுது எல்லோர் முகத்திலும். ஆனா எனக்கு ஒரு சந்தேகம்….?” 

என்று அவள் நிறுத்த, 

சட்டென்று ஜானியும் பிரபுவும் ஒருவரையொருவர் பார்க்க, 

கதிரவன் ” ஏங்க மேடம் நீங்க பேசுறது சரியா …. உங்களைக் காணாம நாங்க பட்ட பாடு எங்களுக்குத் தானே தெரியும் …?” 

படபடவென்று பேசியவனை 

“சாரி … உங்க யார் கிட்டயும் சொல்லாம வந்தது தப்புதான் . அப்படியே வந்திருந்தாலும் சீக்கிரமா திரும்பியிருக்கணும் … இயற்கை ரசிப்பில் நேரம் போனதே தெரியவில்லை. 

வாங்க…. போகலாம் …” என்று கூறியபடி நிலா கிளம்ப, வந்தியா ஜானியை பின்னுக்கு இழுத்து, 

“என்ன நடக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை …. குழப்பமாக இருக்கிறது … 

கொஞ்சம் சொல்றீங்களா … பிரதர் …!” என்று கூற, 

“இங்க எதுவும் பேசாதே … நான் சென்னை 

போனப்புறம் விரிவாக உனக்கு கூறுகிறேன் . அதுவரை நீ வேடிக்கை மட்டும் பார் . மற்றவைகளை குறித்து எதுவும் பேசாதே …!” 

அவன் கூறிய விளக்கத்தில் மேலும் குழம்பிப் போனான் வந்தியத்தேவன். 

ரிசார்ட் வந்தவர்கள் சாவியை வாங்கச் செல்ல மேனேஜர் வந்து நிலாவைப் பார்த்தவுடன் சற்று நிம்மதியடைந்தவர் போல் அவளைப் பார்த்து 

என்னங்க மேடம் …. எங்களை ரொம்பவே பயப்பட வச்சிட்டீங்க … இங்க பாதுகாப்பு இல்லாத பகுதிகள் அதிகம் . 

நீங்க யாருக்கிட்டயும் சொல்லாம போனது சரியில்ல மேடம். 

உங்களுக்கு ஏதாவது ஒன்னு நடந்திருந்தா உங்க கூட வந்தவங்க எல்லாருமே கம்பி எண்ணிக்கிட்டு இருக்கணும் . இனிமே இப்பிடி ஏதும் பண்ணிடாதீங்க …?” 

அறிவுரை கூறுவது போல் வார்ண் பண்ணவும் சற்று நிலகுலைந்த நிலா பிரபுவின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவனை கோபப் பார்வைப் பார்த்தாள். 

ஒன்றும் பேசாமல் அறைக்கு வந்தவள் தொப்பென்று படுக்கையில் வீழ்ந்தாள் 

பின்னாலேயே வந்த பிரபு அவள் குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருப்பதைக் கண்டு மெல்ல அவள் தோளை தொட்டு உலுக்க, 

சட்டென்று நிமிர்ந்த நிலா கோபத்துடன் அவனைப் பார்த்து 

” எல்லாம் உங்களால் வந்த வினைதானே இது . காலங்காத்தாலே தூங்கிகிட்டு இருந்தவளை எழுப்பி கிளம்பச் சொன்னீங்களே …. 

அந்த மானேஜர் பேசும் போது நான்தான் அவளை அழைச்சிக்கிட்டு போனேன் … இதில் பயப்பட என்ன இருக்கு என்று கேட்டிருக்கலாமில்லையா … வாயை மூடிக்கிட்டு சும்மா வர்றிங்க ..? பிரண்சுகளும் ஏதோ வித்தியாசமா என்னைப் பாக்குறாங்க…. 

எனக்கு பிடிக்கவே இல்லை … 

உங்களுக்காக உங்க சந்தோசத்துக்காகத் தான் நீங்க கூட்டிக்கிட்டுப் போன மலை உச்சிக்கெல்லாம் வந்தேன் …. 

ஒரு இடத்துல என்னை தள்ளி விடற மாதிரியே நீங்க பிஹேவ் பண்ண நா சட்டுனு உங்க கையைப் பிடிக்க 

நீங்க ஏதோ தேள் கொட்டுன மாதிரி கையை விடுக்கென்று பின்னுக்குத் தள்ளிவிட்டு 

நீங்க எனை விட்டு பின்னால செல்ல முயல, நல்ல வேளை நான் சற்று பாலன்ஸ் பண்ணிக் கொண்டேன் . 

இல்லாவிட்டால் அதள பாதாளத்தில் விழுந்திருப்பேன். சரி போகலாமென்று நான் கூறியும் 

நீங்கள் இங்கே அமர்ந்து இலைகளினால் மாலை கட்டிக் கொடு … கட்டாவிட்டால் எனக்கு எனக்கு முத்தம் நூறு கொடுக்கவேண்டும் என்று கூறினீர்கள் … 

நான் சவாலை ஏற்று கட்டிவிட்டால் நூறு தோப்புக்கரணம் போட வேண்டும் என்று கூறினேன் . நான் மாலை கட்டும் அவசரத்தில் உங்களை 

கவனிக்கவே இல்லை . 

இப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது … 

நீங்கள் அங்கு இருந்தமாதிரியே இல்லை. 

ஒஹோ … இப்போதுதான் புரிகிறது … 

நீங்கள் அவர்களுக்கு போன் போட்டு வரச் சொல்ல 

தூரமாக சென்றிருக்கிறீர்கள் … 

ஆனால் எல்லாவற்றையும் பண்ணிவிட்டு 

பழி என் மேல் போடுவதா …?” 

மீண்டும் அழ ஆரம்பித்தாள் நிலா . 

அவள் இதுவரை கூறியவற்றை பிரபுவும் அவனைத் தேடி பின்னாலேயே வந்த ஜானியும் வந்தியத்தேவனும் திகைப்படைந்து நின்றனர் . 

ஜானி வந்திருப்பதைக் கவனித்த நிலா 

ஜானி …. ஏன் இப்படி எல்லோரும் திகிலடைந்த மாதிரியே இருக்கீங்க … 

ப்ளீஸ் … சொல்லுப்பா …. எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு….” என்று கேட்க, 

பிரபு தலையசைத்து கூறச் சொல்ல 

ஜானி மெல்லமாக 

நிலா … நா சொல்றதைக் கேட்டு நீங்க பயப்படக்கூடாது 

காலையில உங்களை 

கூட்டிக்கிட்டுப் போனது பாஸ் இல்லை … பாஸ் எங்க கூடத்தான் இருந்தாரு. 

காலையில நாங்க லேட்டாத்தான் எந்திருச்சோம்”, நடந்த நிகழ்வுகளை ஜானி விவரிக்க விவரிக்க நிலா திகிலடைந்து மயங்கி சாய பிரபு தாவி அவளை தன் மேல் சாய்த்துக் கொள்ள 

வந்தியா ஓடிச் சென்று பாட்டிலில் இருந்த நீரை குடுக்க அதை வாங்கி முகத்தில் தெளித்தான் ஜானி. 

மயக்கம் தெளிந்த நிலா திக்கித்திணறி “அப்போ இவரு மாதிரி வந்தது யாரு … எப்படி இவரு மாதிரியே வர முடியும் … ஐயோ …. தலை சுத்துதே … 

பிரபு எனக்கு பயமா இருக்கு… 

இல்லை … நீங்கல்லாம் யாரு … மாய உருவங்களா …. எங்க என்னோட பிரண்ட்ஸ் … அவங்களை என்னப் பண்ணீட்டீங்க … பிரபு …. ஜானி … வந்தியா … எங்கப் போயிட்டீங்க… இந்த மாய பிசாசு 

உங்களையெல்லாம் என்னக் கொல்லப் பாத்த மாதிரி கொண்ணுடுச்சா …?” 

அலறிக் கொண்டே மீண்டும் மயங்கி விழுந்தாள். 

இவளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கதிரவனும் மாயனும் அவள் மயங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து திகைத்து நின்றனர். 

டாக்டர் யாரும் பக்கத்துல இருக்காங்களா …?” ஜானி கேட்க, 

” இந்த ரிசார்ட்டுலேயே ஒரு டாக்டர் பேமிலி வந்து தங்கியிருக்காங்க… நா அவரை கூட்டிக்கிட்டு வரேன் …” என்று சொல்லி விரைந்துச் சென்றான் கதிரவன் . 

நடுத்தர வயதுடைய டாக்டர் ஒருவர் கதிரவனுடன் வந்து மயக்கத்தில் இருக்கும் நிலாவை பரிசோதித்து விட்டு 

ஒரு இன்ஜெக்ஷன் போட்டார் . 

பிறகு அங்கிருப்பவர்களைப் பார்த்து ‘நத்திங் டு வொரி அபௌட் திஸ். 

காலையில அவங்க சாப்டாங்களா …?” என்று கேட்க, 

” இல்ல சார் … சாப்பிடாமலே வெளிய வந்துட்டாங்க…” ஜானி கூற 

“அதான்… வேற ஒன்னுமில்லை… அப்பறம் ஏதோ பயந்துருக்கிற மாதிரி நடுக்கம் இருக்குது … 

யானை ஏதாச்சும் பாத்து பயந்துட்டாங்களா …?” டாக்டர் கேட்க, 

ஆமாங்க டாக்டர் … யானைக் கூட்டம் எங்க ஜீப்பை கிராஸ் பண்ணும் போது சன்னலோரமா பிளிறிச்சி … அதப் பாத்து அவங்க கத்திட்டாங்க….” சட்டென்று வந்தியத்தேவன் கூற 

அனைவர் முகத்திலும் ஒரு திருப்தி. 

டாக்டர் சென்ற சிறிது நேரத்தில் நிலா கண்விழிக்க மாயவன் அருகில் சென்று தன் மடியில் இருந்த பொட்டலத்தைப் பிரித்து அவள் நெற்றியில் பூசி விட்டு ” இது எங்க குலதெய்வம் காளியம்மன் பிரசாதம். இதைப் பூசிக்கிட்டா உங்களுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது . பயப்படாம இருங்க … எங்களை மீறி உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது ….” என்று கூறி விட்டு அங்கிருந்துகதிரவனும் மாயனும் அகன்று விட 

“நிலா … ஆர் யூ ஆல்ரைட் … ?” பிரபு கேட்க 

‘ம் … பரவாயில்லே … பிரபு … நாம கிளம்பலாமா இனிமே இங்க வேணாம் …” 

அவன் கையைப் பிடித்துக் கொண்டே கேட்க 

சாப்டுட்டு கிளம்பிடலாம் … ஜானி எங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு இங்கியே கொண்டு வா …” என்று கூறியதும் இருவரும் அங்கிருந்து வெளியே சென்றனர் . 

” நிலா … அந்த எட்ஜில போனதும் டக்குனு நின்னுட்டதா சொன்னியே எப்பிடி …?” 

” நீங்க அது வரைக்கும் என்கூடவே வந்தீங்களே தவிர என்னை தொட்டுகூட பேசலை … 

ஆனா அந்த எட்ஜிக்கு வந்தப்ப என் கையை பிடிச்சீங்க …. என்ன நடந்ததுன்னு தெரியல 

சட்டுனு கொஞ்ச தூரத்துல நின்னுக்கிட்டு இருந்தீங்க … நா தடுமாறி பாலன்ஸ் தவறி விழற மாதிரி இருக்கிறப்ப பிடிச்சி இழுத்த மாதிரி இருந்துச்சி .. நீங்கதான் இழுத்துவிட்டிங்கன்னு நா நினைச்சி திரும்பி பார்த்தா தள்ளி நின்னுக்கிட்டு வா போகலாம்னு கூப்டீங்க ….” 

நிலா கூறவும் அவளை கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டான் பிரபு . 

“பிரபு … எனக்கென்னவோ … அந்த லேடி தான் இதுமாதிரி எல்லாம் பண்றாங்களோன்னு தோணுது ….” ” நீ ஏம்மா … இப்பிடி நினைக்கிறே … 

ஏதோ ஒரு மிஸ்டரீஸ் நம்ம வாழ்க்கையில நடக்குது. எல்லாம் ஏதோ ஒரு நன்மைக்கேன்னு நினைச்சிக்க வேண்டியதுதான். எப்பவும் நமக்கு எதுவும் ஆகாது . தைரியமா இரு . இதையே நினைச்சி உடம்பை கெடுத்துக்காதே …” 

ஆறுதல் கூறிய பிரபு அவளை தன் மேல் சாய்த்துக் கொண்டான். 

ஜுப் மலையின் வளைவுகளில் சென்று கொண்டிருக்க யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக வேடிக்கைப் பார்த்த வண்ணம் வந்தனர் . 

ஒரு வளைவு திரும்பும் போது திடீரென்று பிரேக் பிடிக்காமல் ஜீப் சாலையின் ஓரமாக செல்ல, 

மாயவன் ஸ்டியரிங்கை வளைத்து ஓரமாக செல்லாத வண்ணம் முயற்சிக்க 

ஜீப்பின் தடுமாற்றத்தில் அனைவரும் ஒருவர் மேல் விழ 

“என்னப்பா …. என்ன ஆச்சு… ஏன் ஜீப் தடுமாறுது …. ?” ஜானி கேட்க, 

என்ன மாயவா என்ன ஆச்சு … படபடப்புடன் கதிரவனும் கேட்க, 

‘ சார் … பிரேக் பிடிக்கலை … வண்டி பள்ளத்தாக்க நோக்கி போகப் பாக்குது … நா திருப்ப டிரை பண்றேன் முடியலை ….!” 

மாயவன் கூறி முடிப்பதற்குள் வண்டி பள்ளத்தாக்கை நோக்கி பாய 

” ஐயோ! என்ற அலறல் மலையில் ஒலித்தது . 

அத்தியாயம் 16 

பள்ளத்தாக்கை நோக்கி ஜீப் ரோடை விட்டு இறங்கி சறுக்கிக் கொண்டே செல்ல 

ஜீப்பில் இருந்தவர்கள் மரணபயத்தில் ஒருவரையொருவர் தழுவிக் கொள்ள, 

மாயவனுக்கு உதவியாக கதிரவனும் ஸ்டியரிங்கை திருப்ப முயற்ச்சி செய்ய 

எதற்கும் பலனில்லாமல் கீழ் நோக்கி வேகமாக நகர, அனைவரும் மயக்கநிலை அடைந்தனர். 

‘நிர்மலேஷ்வரா…. ரதத்தின் கடிவாளத்தை திருப்பு…. மாயவனின் கரங்கள் உனை நோக்கி நீள்கிறது…. உன் கரம் மட்டுமே அவன் ஆளுமையை அடக்கிவிடும்…. விரைந்து முடி…. 

மயக்கநிலைக்குச் சென்றுகொண்டிருந்த பிரபு தன் காதில் கேட்கும் குரலினைக் கேட்டு தன் இயல்பை மறந்தவனாய் சட்டென்று ஜீப்பின் முன்புறம் தாவிக் குதித்து 

ஸ்டியரிங்கை பற்றினான் 

ரோட்டின் சரிவில் இறங்கிக் கொண்டிருந்த ஜீப்பின் பின்சக்கரம் இருந்த  இடத்தில் நேராக பள்ளம் ஒன்று தோன்ற 

பின்சக்கரம் அந்த பள்ளத்தில் கீழே சென்று அதில் அழுந்தி நின்றுவிட 

முன் சக்கரம் பள்ளத்தில் நேராக நிற்க தொடங்கியது . 

பிரபு ஸ்டியரிங்கை வளைத்து திருப்ப வண்டி ஸ்பிரிங் போல முன்பறம் சுழன்று ரோட்டின் பக்கமாக திரும்பி நின்றது . 

பின்சக்கரம் பலமாக பள்ளத்தில் தாங்கி நின்றதால் ஜீப் நலமாக ஆபத்திலிருந்து தப்பியது. 

இப்போது ஜீப்பின் பின்சக்கரம் தானாகவே மேலெழும்பி சமநிலத்தில் நிற்க, 

மீண்டும் பிரபு தான் இருந்த பின்சீட்டில் வந்தமர்ந்து மயக்கமானான். 

இந்த நிகழ்வு நடந்த சமயத்தில் அனைவரும் மயக்கநிலையிலேயே இருந்தனர். 

ரோட்டின் ஓரமாக நிழல் இருக்கும் இடத்தில் வண்டி நின்று கொண்டிருக்க அனைவரும் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதாக போகிறவர் வருகிறவர்கள் நினைத்துக் கொண்டனர். 

அரை மணி நேரம் கழித்து ஒவ்வொருவராக மயக்கம் தெளிந்தனர். 

முதலில் தாங்கள் எங்கிருக்கிறோம் என்பதே ஒருவருக்கும் புரியவில்லை. 

பின்புதான் தாங்கள் பத்திரமாக இருக்கிறோம் 

என்பதே அவர்களுக்குப் புரிந்தது 

சட்டென்று அனைவரும் ஜீப்பிலிருந்து கீழே இறங்கினர் 

ஒருவரையொருவர் ஒன்றும் புரியாதவர்கள் போல் குழப்பமாக பார்த்துக் கொண்டனர் . 

” என்ன நடந்தது …. நாம் காப்பாற்றப்பட்டிருக்கிறோம் …. எப்படி…?” 

கதிரவன் கேள்வியில் அனைவருமே தங்களுக்கும் இதே கேள்வி தான் என்பது போல் பார்த்தனர் . 

” பிரபு சார் … நடந்த நிகழ்வில் கண்டிப்பாக நாம் அறுநூறு அடி பள்ளத்தாக்கில் சிதறி சின்னாபின்னமாகி போயிருப்போம். ஆனால் எந்த நிகழ்வுமே நடவாத மாதிரி சேப்டியா ரோட்டாரமா நின்று கொண்டிருக்கிறோம் … நிசமாவே நாம ஆபத்தை நோக்கிச் சென்றது உண்மைதானே …. கனவில்லையே …?” மாயவன் கேட்ட கேள்வியில்,

“எனக்கும் புதிராத்தான் இருக்கு. ஆனா நீங்கதான் எப்படியோ சேப்டி பண்ணிட்டீங்கன்னு நினைச்சேன் …” ” இல்லை … எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை …”

” பாஸ் … எப்பிடியோ நாம காப்பத்தப்பட்டிருக்கிறோம் 

அது மட்டும் உண்மை மாயவன் வண்டியில பிரச்சினை ஏதும் இருக்கான்னு பாருங்க … 

வேற வண்டியை ஏற்பாடு பண்ணி போயிக்கலாம் …”

“இருங்க… இறங்கி செக் பண்ணிக்கிறேன் …” இறங்கி வண்டியை செக் பண்ணிய மாயவன் 

“எல்லாம் சரியா இருக்கு … பிரேக் கூட 

சரியா இருக்கு … திடீர்னு பிரேக் பிடிக்காம போனதுக்கு என்ன காரணமோ … எல்லாம் ஒரே மர்மமா இருக்கு … சரி எல்லாரும் வண்டியில உக்காருங்க … சீக்கிரமா அடிவாரம் போயிடலாம் …” 

மறுநாள் காலை அலுவலகத்தில் நிலா வேலைக்கு வரவில்லை . மற்ற மூவரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருப்பதுபோல் இருந்தாலும் யாரும் நார்மலாக இருப்பது போல் தோன்றவில்லை. … ஜானி தன் மௌனத்தைக் கலைத்தான். 

“பாஸ் …. நடக்கிற நிகழ்வுகளையெல்லாம் பார்த்தால் எனக்கே அச்சமாகத்தான் இருக்கு. 

நாம் மறுபிறவி எடுத்து வந்த மாதிரி இருக்கு … நேத்திக்கி எப்படி ஜீப் கவிழாம மறுபடி சேப்டியா ரோட்ல நின்னுச்சி … 

யாரோ ஒரு நிகழ்வு நம்மை அழிக்க நினைக்கிது … வேறோரு நிகழ்வு காப்பாத்துது… ஏன்… எதற்காக … உங்களுக்கு ஏதாச்சும் புரியுதா …?” 

‘உங்களைப் போல்தான் நானும் . 

எனக்கும் ஏதும் புரிய மாட்டேங்குது … எனக்காக யாரோ இருவர் போராடுறாங்கன்னு தெரியுது … ஆனா 

ஏன் … எதற்குன்னு தான் விளங்கலை … என்னால நிலா ரொம்ப சபர் ஆகிறா .. 

அதான் எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு..” 

” கேப்டன் … எனக்குத் தெரிஞ்ச சாமியார் ஒருவர் இருக்கிறார் . அங்கப் போயி என்ன ஏதுன்னு கேட்டுப் பாக்கலாமா …?” 

“இல்ல வந்தியா … ஏற்கனவே நாங்க ஒரு சித்தரை பாத்துருக்கிறோம் . 

மறுபடி அவரைப் போயி பாக்கணும் … 

இத இப்படியே நீடிக்க விட்டா எல்லாருக்குமே பிரச்சினைதான் 

தொழில்ல சரியா கான்சன்ட்ரேட் கூட பண்ண முடியலை… 

அதுவுமில்லாம எனக்கு உங்களோட சேப்டி முக்கியம்” 

அப்பிடி சொல்லாதீங்க பாஸ்… உங்களுக்கு ஒன்னுன்னா அது எங்களுக்கும் தான். அதனால எது வந்தாலும் நாங்க உங்க பக்கந்தான் . 

நாம நாளைக்கு முதல் வேலையா சித்தரைப் போயிப் பாக்கறோம் …’ 

” வந்தியா… நாளைக்கு ஷியரிங் வர்ற புராஜக்ட் 785 க்கு வாய்தா வாங்கிடு … 

நாங்க ரெண்டு பேரும் நடுமலைக்குப் போயி சித்தரைப் பாத்துட்டு வர்ரோம் … 

நிலாவை நாளைக்கு வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிடலாம் … நீயும் கோர்ட்டுக்குப் போயிட்டா அவ தனியா ஆபிசுல இருக்கவேணாம் …’ 

“சரிங்க கேப்டன் … நீங்க அவரப் பாத்து சரியான விளக்கம் கேட்டுட்டு வாங்க…” 

மறுநாள் பிரபுவும் ஜானியும் 

சித்தரைப் பார்க்க விடியற்காலையிலேயே கிளம்பிவிட்டனர் . 

சித்தர் வசிக்கும் குகையைத் தேடிச் சென்றவர்கள் அங்கே அவரின் சீடர்களை பார்த்து சித்தரைப் பார்க்க வந்திருப்பதாக கூற, 

‘சித்தர் இமயமலை யாத்திரிகைக்குச் 

சென்றிருப்பதாகவும் வருவதற்கு இரண்டு மாதங்கள் ஆகும் எனக் கூறிவிட 

என்ன செய்வது என்று புரியாமல் இருவரும் திகைத்து நின்றனர். 

“இப்ப என்ன செய்யிறது … சித்தர் இருந்தாலாவது ஏதாவது தீர்வு சொல்லியிருப்பாரு … ஒன்னுமே புரிபடலை …” பிரபு கையை காரின் மேல் வைத்து சாய்ந்து நின்று கொண்டிருக்க, 

அப்போது திருஷ்டி பொம்மைகளை விற்றுக் கொண்டிருந்த பெண்மணி ஜானியின் அருகில் வந்து 

“ஐயா … திருஷ்டி பொம்மையை வாங்கி காருல கட்டிவிடு… போற வர்ர இடத்துல எந்த அசம்பாவிதமும் நடக்காது காத்து நிற்கும் . இந்த மந்திரிச்ச கயிறை வாங்கி கட்டிக்கிங்க.. எந்த காத்து கறுப்பும் உங்களை அண்டாது … இந்தாங்க …” 

என்று கூறியவாறு வண்ணக்கயிறுகளை நீட்ட வேண்டாம்மா … எங்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை … நீ போ …” என்று ஜானி கூற 

பிரபு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருக்க சட்டென்று அவன் காதில் 

‘நிர்மலேஷ்வரா….அந்த கயிறு உனக்கானது… நான்தான் அனுப்பியிருக்கிறேன்.. 

உனக்கும் உனைச் சேர்ந்தவர்களுக்கும் பாதுகாப்பான அரண் அந்தக் கயிறுதான். அதை வாங்கி அனைவரும் அணிந்து கொள்ளுங்கள்… 

இனி எந்த கெடுதலும் உங்களை நெருங்காது… மாயவனின் காலம் முடிவுக்கு வரூகிறது… 

சொன்னதை உடனேச் செய்…’ 

காதில் கேட்ட குரலினால் தன் நிலைக்குத் திரும்பிய பிரபு 

அந்தப் பெண்மணியிடம் உள்ள கயிறுகள் அனைத்தையும் காசு கொடுத்து வாங்கிக் கொண்டான் 

இதைப் பார்த்த ஜானி “, என்ன பாஸ் … நீங்களா இதை வாங்குறீங்க .. என்னால நம்பவே முடியலை … இதையெல்லாம் நீங்க நம்பவே மாட்டீங்களே ….?”, என்று கேட்க, 

” இப்ப நடக்கிறசெயல்களையெல்லாம் பார்த்தா நம்பத்தானே செய்யனும் … 

நாம நினைச்சிப் பாத்தோமா … இப்பிடி சித்தரை தேடிக்கிட்டு அலைவோம்னு … 

ப்ப எத்த தின்னா பித்தம் தெளியும்னு நிலை . அதனால் யாரு என்ன சொன்னாலும் நம்பள சுத்தி இருக்கிறவங்க நல்லா இருக்கணும்னு நம்பித்தான் ஆகணும் 

சரி … இந்தா … இந்தக் கயிரை நீ கையிலக் கட்டிக்க. எந்தக் காரணம் கொண்டும் நா சொல்றவரைக்கும் இதை கழட்டிடக்கூடாது. 

அப்புறம் இதை டினாவுக்கும் கட்டிவிட்டுடு . அவ நம்பற மாதிரி ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லு . 

எனக்கு கட்டிவிடு ஒரு கயிரை …” என்று தன் கையை நீட்டினான் . 

புரிந்தும் புரியாதவனாக ஜானி பிரபுவுக்கு கட்டிவிட்டு தானும் கட்டிக் கொண்டான் . 

காரில் முன்புறத்தில் ஒரு கயிரை கட்டிவிட்டப் பிறகு இருவரும் புறப்பட்டனர் . 

“ஜானி … இனிமே நமக்கு எந்த ஆபத்தும் நெருங்காது … இனி பயப்படத் தேவையில்லை ” என்று பிரபு கூற 

வரவர உங்களுடைய ஆக்டிவிட்டீஸ் டிபரண்டா இருக்குது … எங்கிட்டயும் ஏதும் சொல்ல மாட்டேங்கிறீங்க … 

அன்னிக்கி மலையில நிலா காணாமப் போனப்போ நா சாகப் போறேன்னு கத்திக்கிட்டே போன நீங்க திடீர்னு வேற பக்கம் போறீங்க … 

அங்க நிலா இருக்காங்க . 

அவங்க அங்க இருக்காங்கன்னு எப்பிடித் தெரிஞ்சிது உங்களுக்கு …?”, 

” எனக்கு அவ அந்தப் பக்கம் இருப்பான்னு தெரியாது . எதுக்கும் அந்தப் பக்கம் பாக்கணும்னு என் மனசு சொல்லிச்சு … வேற காரணம் ஒண்ணும் இல்லை . இப்பவும் நாம சித்தரை பாக்க வந்தோம். இந்த அம்மா ஏன் நம்மகிட்ட வந்து காத்து கறுப்பு தொந்தரவு வராம இருக்க இதை வாங்கி கட்டிக்கிங்கன்னு சொல்லனும். எனக்கு என்னவோ சித்தர் தான் இத சொல்ல வச்சிருப்பாருன்னு என் மனசுக்கு தோணிச்சி 

” எப்பிடியோ … நீங்களும் சராசரி மனுசருங்க போலத்தான் ஆயிட்டீங்க … இந்த பகுத்தறிவு… பிலாசபி எல்லாம் மத்தவங்ககிட்ட மட்டுந்தான். நமக்குன்னு வந்துட்டா எல்லாம் காத்துல பறந்துபோயிடும் ….”, 

” ரொம்ப பேசாதே … வண்டியை எடு …” 

“உண்மையைச் சொன்னா பொல்லாப்புதான் . எனக்கெதுக்கு வம்பு …” புலம்பிக் கொண்டே காரை ஓட்டினான் ஜானி. 

‘அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது … 

நேற்று வரை எதிலும் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து விட்டு இன்று தங்களுடைய உயிர் பாதுகாப்புக்கு சாதாரண கயிறை வாங்கி கட்டிக் கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பது எவ்வளவு மடத்தனம் … ஆனாலும் இது தேவையென்று நினைக்கத்தானே தோன்றுகிறது …’ பிரபு பல சிந்தனையில் இருக்க வீடு வந்து சேர்ந்தது கூட தெரியவில்லை . 

வீட்டில் அவன் அம்மா எதற்கு இது என்று கேட்க தெரிந்த சித்தர் கொடுத்தார் … இப்ப நமக்கு நேரம் சரியில்லையாம் … அதனால் இதை வீட்டு வாசலில் கட்டி விட்டு நம் கைகளிலும் கட்டிக்கச் சொன்னார் … இதை அவர் சொல்லும் வரையிலும் கழட்டக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறார் … சித்தப்பாவுக்கும் இதைக் கொடுத்து கட்டிக்கச் சொல்லுங்கள் …” என்று கூறவும் அம்மா பயந்து அதை பத்திரமாக வாங்கி கட்டிக் கொண்டார் 

இரவு வெகுநேரம் பிரபுக்கு தூக்கம் வரவில்லை . மனது குழப்பநிலையிலேயே இருந்தது . 

தான் எதற்கு திடிரென்று பல பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டுள்ளோம் … தனக்கும் நிர்மலேஷ்வரன் என்ற மனிதருக்கும் என்ன தொடர்பு. 

ஏன் என்னை அப்பெயர் சொல்லி காதில் கேட்கிறது. மாயவன் என்பவன் யார் …? ஏன் அவன் தன்னை பழிதீர்க்க அலைகிறான். 

உண்மையில் தான் யார் … தனக்கும் அந்த மாளிகைக்கும் என்ன சம்பந்தம் …?’, 

இதெற்கெல்லாம் விடை கிடைத்தாலொழிய தன்னுடைய பிரச்சினைகள் தீராது …. 

இதை எனக்கு கூற கடமைபட்டவர் அந்த குரலுக்கு சொந்தக்காரர் ஒருவரே … 

அம்மணி …. தாங்கள் யார் என்பது எனக்கு புலனாகவில்லை … 

இத்தனை சோதனைகளிலிருந்து என்னைக் காப்பாற்றியவர் நீங்கள் … 

தாங்கள் தான் என்னை இக்கட்டான இச்சூழலில் இருந்து காப்பாற்ற வேண்டும் …’, 

தூக்கத்தில் உளறியபடி பிரபு பேச 

‘நிர்மலேஷ்வரா…. இன்றுதான் நீ என்னை அழைத்திருக்கிறாய்… இதற்காகத்தான் நான் ஆண்டாண்டு தோறும் காத்துக் கொண்டிருந்தேன். உன்னுடைய கேள்விகளுக்கு விடை சேத்துப்பட்டு மாளிகையில் இருக்கிறது. 

நீ அங்கு செல்லும் நேரமும் கூடிவிட்டது. உடனே மாளிகைக்குச் செல்… நான் 

துணை இருப்பேன்….’ 

தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்த பிரபு தான் கனவில் கண்ட நிகழ்வுகளை எண்ணிப் பார்த்தவன் காலையில் தான் எண்ணச் செய்யவேண்டும் என்பதை தீர்மானித்தான் . 

பின்பு நிம்மதியாக தூங்க ஆரம்பிச்சான் . 

காலை எழுந்ததும் ஜானிக்கு போன் போட்டு 

அலுவலகத்திற்கு இரண்டு நாட்கள் விடுப்பு அளித்து விட்டு 

வந்தியனும் நீயும் என்னோடு கிளம்பி வாருங்கள் என்று கூற 

ஏதும் புரியாமல் ஜானியும் வந்தியத்தேவனும் பிரபுவின் வீட்டிற்கு வந்தனர் . 

“ஏம்பா … ஆபிஸ் எதுக்கு லீவு விட்டே… எங்க கிளம்பிறீங்க மறுபடியும் …?”, அம்மாவின் கேள்விக்கு 

கேசு விசயமா தீவிரமா விசாரிக்க வேண்டி இருக்கு … அதுக்காகத்தான் புதுக்கோட்டை வரை போகணும் . சாயங்காலம் வந்துடுவோம் … ” என்று ஏதோ ஒரு காரணத்தைக் கூறிவிட்டு மூவரும் கிளம்பினர் . 

ஜானி “, எங்க பாஸ் போறோம் … சஸ்பென்ஸா இருக்கு 

நீங்க வேற மூட் அவுட்டா இருக்கிறாப்பலேயே இருக்கு 

நிலா வேற ஏன் எதுக்கு லீவுன்னு என்னை கேள்வி மேல கேள்வியா கேட்டாங்க … 

உங்களுக்கு போன் போட்டா நீங்க எடுக்கவே இல்லியாமே …? ஏன் பாஸ் …?” 

ஜானியின் கேள்விகளுக்கு பதில் ஏதும் கூறாது மௌனமாயிருப்பதைப் பார்த்து பயந்த வந்தியத்தேவன் 

‘கேப்டன் … ஏன் எதுவும் சொல்ல மாட்டேங்கிறீங்க … உங்களை இப்பிடி பாக்க பயமா இருக்கு …” 

என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்குல்ல… நம்பினா எதுவும் கேக்காம வாங்க …. 

“பாஸ் … இன்னிக்கி என்னாச்சு உங்களுக்கு …? நாங்க உங்களை நம்பாம யாரை நம்புவோம். உங்களுக்காக உயிரை விடச் சொன்னாக் கூட விடறதுக்கு தயாரா இருக்கேன்…” 

“ஆமாம் கேப்டன் … நீங்க என்ன சொன்னாலும் மறுநிமிசம் என்ன ஏதுன்னு கேள்வி கேக்காம உயிரைக் குடுக்க சித்தமா இருக்கோம்.. ஆனா நீங்க ஏதோ ஒரு வெறியோடு புறப்படுற மாதிரி எங்களுக்குத் தோணுது….. அதனாலத்தான் கேக்கிறோம் … ‘ 

“அப்படியா …. சரி சொல்றேன். நாம இப்ப சேத்துப்பட்டு பங்களாவுக்குள்ள போகப் போறோம்…” 

பிரபு கூறியதைக் கேட்ட இருவரும் திடுக்கிட்டு “என்ன ….!” என்று ஏககாலத்தில் கேட்டனர் . 

அத்தியாயம் 17 

பிரபு, ஜானி, வந்தியத்தேவன் மூவரும் நிலாவுக்கு தாங்கள் எங்குச் செல்கிறோம் என்று சொல்லாமல் சேத்துப்பட்டு பொன்ராயன் மங்கலம் மாளிகையை நோக்கி செல்ல கிளம்பினார்கள் . 

தூரத்தில் ஒரு உருவம் அவர்கள் கிளம்புவதையே சந்தோசமாக பார்த்துக் கொண்டிருந்தது . இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மாயவா இத்தனைக்காலமாய் . நீ நினைத்தது நிறைவேறப் போகிற காலம் கூடிவிட்டது. 

மாளிகையில் மாதங்கியின் தடையை முறியடித்து உன் தேவையை நிறைவேற்றிக் கொள் . இந்த தடவை ஏதும் தடங்களில்லாமல் நிறைவேற்றிக் கொள் . அதற்கு ஏதும் தடை வந்தால் ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையும் அழித்து விடு . இனிமேல் எதற்கும் யாருக்காகவும் உன்னுடைய அபிலாசை நிறைவேற்றுவதை தடை வராமல் கவனித்துக் கொள் ….’, இவர்கள் செல்லும் வாகனத்தை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது அவ்வுருவம். 

காரை ஜானி ஓட்டிக் கொண்டிருக்க வந்தியத்தேவன் முன் இருக்கையிலும் பிரபு பின் இருக்கையிலும் இருக்க 

” பாஸ் … ஏன் திடீர்னு பங்களாவுக்கு போகணும்னு முடிவெடுத்தீங்க … நாம அங்க போகிறதால ஏதாச்சும் பிரச்சினை வந்தா எப்பிடி சமாளிக்கிறது. அதுவுமில்லாம யாருக்கிட்டயும் இங்கதான் போகப்போறோம்னு சொல்லாம வேற வந்திருக்கிறோம் 

சற்குணம் சார் கிட்ட பேசினீங்களா … அவுரு போன வாரமே போகலாம்னு கூப்பிட்டாரே …” 

ஜானியின் கேள்வியை கவனித்து வந்த பிரபு ” சற்குணத்தை நா காண்டாக்ட் பண்ணலே… போகும்போது பாத்துட்டு போகலாம்னு நினைச்சேன். சரி … இப்ப அவர்கிட்ட பேசிப்பாக்கலாம் ..” என்று கூறிவிட்டு அவருக்கு போன் போட சிறிது நேரங்கழித்து லைனுக்கு வந்தார் சற்குணம். 

“சொல்லுங்க பிரபு … காலையிலேயே போன் பண்றீங்க 

ஏதாச்சும் உதவி வேணுமா …?” 

“யா …. இப்ப அங்கதான் வந்துகிட்டு இருக்கோம் . நீங்க மாளிகைக்கு போகலாம்னு சொன்னீங்கல்ல … இன்னிக்கி போக முடியுமா …?” 

‘ஓ … ஐ அம் சாரி பிரபு …!, எனக்கு டெப்டேசனா மதுரைக்கு போட்டுருக்காங்க… 

வாரம் ஒருநாள்தான் அங்கே இருப்பேன் . மீதி நாள் மதுரையில தான் இருக்கணும். 

இன்னும் மூணு மாசத்துக்கு இப்படித்தான் நான் அலையணும். 

கொஞ்ச நாள் பொறுத்துக்குங்க … நா அங்க வந்த பிறகு போயிக்கலாம் …” 

‘இட்ஸ் ஒகே சற்குணம் . யூ கேரி ஆன் . எனக்கு எந்த பிராப்ளமும் இல்லை . இன்னொரு நாள் பாத்துக்கலாம் 

பை …” என்று கூறி விட்டு போனை வைக்க 

‘ என்ன பாஸ் … சற்குணம் என்ன சொல்றார் …?” 

‘அவரு டெப்டேசன்ல மதுரைக்கு போயிருக்காராம் . வாரத்துல ஒருநாள் மட்டுந்தான் இங்க இருப்பாராம் . மூணு மாசம் ஆகுமாம் இங்க ஸ்டடியாக அப்புறம் போயிக்கலாம்னு சொல்றார் …”, 

‘அப்ப இப்ப என்ன செய்யிறது . திரும்பிடலாமா … ?” ‘வேண்டாம் . போட்ட பிளானை மாத்த வேண்டாம் . வருவது வரட்டும் . ஏன் ஜானி … உங்க ரெண்டு பேருக்கும் பயமா இருக்கா .. அப்படின்னா 

சொல்லிடுங்க … நான் மட்டும் போய் வரேன் . உங்களை ஆபிஸ்ல விட்டுட்டு போறேன் . என்ன சொல்றீங்க…?”, 

கேப்டன் … என்ன இப்பிடி கேக்குறீங்க… உங்களை விட்டுட்டு நாங்க மட்டும் எதுக்கு போறது … உங்களுக்கு இருக்கிற தைரியம் எங்களுக்கு இல்லியா உங்களை தனியா விட்டுட்டு எங்களால நிம்மதியா இருக்க முடியுமா …?” 

‘பாஸ் … நீங்க இப்படிக் கேக்குறதுதான் எங்களுக்கு கஸ்டமா இருக்குது . 

உங்களுக்கு ஒன்னன்னா அது எங்களுக்குந்தான். என்ன நடந்திடப் போகுது … இது வரைக்கும் நடந்த அத்தனை ஆபத்துகளிலும் ஏதோ ஒரு சக்தி நம்பளை காப்பாத்திக்கிட்டே வந்துருக்கு இப்பவும் அந்த சக்தி கண்டிப்பா நம்பளை பாலோ பண்ணும் நாங்க தைரியமா வரோம் … என்ன ஆறிலும் சாவு… நூறிலும் சாவு . சாண் போனால் என்ன … முழம் போனால் என்ன ஒரு கை பார்த்திடறது ….” 

“ஆமாம் கேப்டன் … நாங்க எதுக்கும் பயப்பட மாட்டோம். உங்க கூடவே இருந்து உங்களோட வெற்றிக்கு உறுதுணையா இருப்போம் ….” 

‘, நானும் உனக்கு உறுதுணையா இருக்கிறேன் நிர்மலேஸ்வரா … உனக்கு எந்த ஆபத்தும் வராது நான் பாத்துக்கிறேன் … உன்னுடைய தைரியம் தன்னம்பிக்கையை மட்டும் கூட எடுத்து வா… அது போதும்… வெற்றிக்கு …’ காதில் அருகில் கேட்ட குரலால் தன் தைரியம் கூடியதை உணர்ந்துக் கொண்ட பிரபு இனி தனக்கு எந்த கவலையும் இல்லை எல்லாம் என் தேவதை கவனித்துக் கொள்ளும் என்று நிம்மதியடைந்ததால் இதுவரை இறுகிய முகத்துடன் இருந்தவன் சட்டென்று தன் பழைய கலகலப்பை முகத்தில் வரவழைத்துக் கொண்டான். 

அவன் ரியாக்சனை . கவனித்த நண்பர்கள் தாங்கள் குடுத்த ஊக்கமே பிரபு சகஜமாக ஆனதற்கு காரணம் என்று நினைத்துக் கொண்டனர் . 

“வந்தியா … நாம் போற இடத்திலே எதுவுமே கிடைக்காது . அதனால தண்ணிர் பாட்டிலும் பிஸ்கட் பாக்கெட் பழங்கள் அப்புறம் மதியம் சாப்பிடுவதற்கு சாப்பாடு எல்லாம் வாங்கி வா … இரவு திரும்புவதற்கு லேட்டாகும்னு நினைக்கிறேன் …” 

பிரபு கூறியதற்கு தலையாட்டியவந்தியனும் ஜானியும் இறங்கி கடைப்பக்கம் சென்றனர். 

காரில் அமர்ந்து யோசனையில் அமர்ந்து இருந்தவனை தூரத்தில் இருந்த உருவம் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க, 

எதேச்சையாக அந்தப் பக்கம் பார்வையை செலுத்திய பிரபு தன்னையே கறுப்புத் துணி போர்த்திய உருவம் ஒன்று கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டாலும் மனதில் தைரியம் வரவழைத்துக் கொண்டு மீண்டும் அந்தப் பக்கம் பார்வையைச் செலுத்தினான் . 

இப்போது அந்த இடத்தில் அந்த உருவத்தைக் காணவில்லை. சுற்றுமுற்றும் பார்வையை ஓட்டியவன் எங்கேயும் அந்த உருவத்தை பார்க்க முடியாததால் இது தனது பிரமையாகக் கூட இருக்கும் … ‘ அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் ‘ போல தனக்கு இப்போது உள்ள மனநிலையில்யாரைப் பார்த்தாலும் தன்னையே உற்றுப் பார்ப்பதைப் போல் தோன்றுகிறது என்று நினைத்து தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான் . 

இருவரும் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வந்து காரின் டிக்கியில் வைத்து விட்டு மீண்டும் காரை ஓட்ட சிறிது நேரம் கண் அயர்ந்தான் பிரபு. 

” பாஸ் … பாஸ் என்று கூப்பிட்ட குரலுக்கு விழித்த பிரபு ஜானி கூப்பிடுவதைப் பார்த்து ” என்ன ஜானி …?” என்று கேட்க, 

“நாம காட்டு வழி வந்துட்டோம் … ஆனா இப்ப மூணு வழி பிரிஞ்சிருக்கே எந்த வழியில அன்னிக்கு போனோம்னு மறந்துட்டேன் … என்ன செய்யிறது …?” காரை நிறுத்தி விட்டு பின்னால் திரும்பி ஜானி கேட்க, ஒருகணம் வழிகளை ஆராய்ந்த பிரபு மூன்றில் ஒருவழியை காட்டி ” இது வழியாகப் போய் பார் … மாறி இருந்தா திரும்பி வேற பாதையைப் பார்ப்போம் என்று கூற, 

அவன் சொன்ன வழியிலேயே ஜானி காரைச் செலுத்த உள்ளே செல்ல செல்ல அடர்த்தியான மரங்கள் இருபுறமும் சூழ்ந்திருப்பதைக் கண்டார்கள் . ” இந்த வழிதான் பாஸ் … அன்னிக்கி நாம வந்த வழி மாதிரியே இருக்கு …” 

ஆமாம்… அப்படித்தான் தெரியுது . மெல்லமாவே போ … அவசரம் வேண்டாம் …” 

“, சரி ….” என்று கூறிவிட்டு அக்கம் பக்கம் பார்த்தவாறே மெல்ல காரை ஓட்டினான் . 

கொஞ்ச தூரம் போனவுடன் தூரத்தில் இருவர் சைக்கிளில் செல்வது தெரிந்தது. 

பிரபு அவர்களைப் பார்த்ததும் ஜானியைப் பார்த்து அவர்கள் அருகில் சென்று மாளிகையின் வழியைக் கேள் என்று கூற 

சரி என்று காரை வேகமாக ஓட்டி அவர்கள் அருகில் நிறுத்தினான். 

கார் ஒன்று தங்களை உரசினாற் போல வந்து நிற்பதைப் பார்த்ததும் சைக்கிளில் சென்றவர்கள் சட்டென்று நின்றனர். 

” ஏங்க… இந்த காட்டு பங்களாவுக்கு வழி எப்பிடின்னு சொல்ல முடியுங்களா …?” 

என்று ஜானி அவர்களைப் பார்த்து கேட்க, 

ஜானியை வித்தியாசமாக பார்த்தனர் இருவரும் . பிறகு ஜானியைப் பார்த்து 

என்ன கேட்டீங்க … பங்களாவுக்கு வழியா …?” என்று சந்தேகமாக கேட்டனர். 

ஆமாம் … பங்களா வழிதான் கேட்டேன் … ஏன் வித்தியாசமாய் கேட்கிறீர்கள் …?” என்று ஜானி கேட்க, ‘ இல்லை … யாராலுமே அந்த மாளிகைப் பக்கம் போக முடியாதே… நீங்க எப்படி போவீங்கன்னு பார்த்தோம் 

வேற ஒன்னும் இல்லை … ” என்று அவர்கள் கூற, 

என்ன…. பங்களா பக்கம் போக முடியாதா … ஏன் வழி அவ்வளவு மோசமாகவா இருக்கும் …?” 

” மோசமா இருக்குமா … இல்லையான்னு போனாதானே தெரியும். இன்னும் கொஞ்ச தூரம் போனீங்கன்னா பாதை பிரியும். ஆனா அதுக்கு மேல நம்மலால போகவே முடியாது. போகனும்னு நினைச்சி முன்னேறுனா கூட திரும்ப நாம நின்ன அந்த இடத்துலேயே வந்து நின்னுருப்போம் அது எப்படீன்னு யாருக்குமே புரியாத புதிராகத்தான் இருக்கு இன்னமும் … ” 

வந்தவரில் ஒருவர் கூற மற்றவனும் தலையாட்டி உண்மைதான் என்று கூற 

என்ன பாஸ் … இவங்க இப்பிடி சொல்றாங்க … அப்ப எப்பிடி நாம அங்க போக முடியும் ….?”, 

“போயித்தான் பார்ப்போம் … மேற்கொண்டு போக முடியுமா… முடியாதான்னு . சரி நீ வண்டியை எடு …” பிரபு கூற, 

மேற்கொண்டு எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டினான் ஜானி. 

வர வர வெளிச்சம் குறைந்து அடர்ந்த வனம் போல் காட்சியளித்தது போகும் பாதை. 

காரின் ஹெட்லைட்டை போட்டுக் கொண்டு ஜானி காரை ஓட்ட அவர்கள் சொன்ன பாதைப் பிரிவு வந்தது . காரின் வெளிச்சத்தைப் பார்த்து இருவர் தலையில் தொப்பி அணிந்தவர்கள் கையில் டார்ச் லைட்டை அடித்தபடி அருகில் வந்தனர் . 

காரின் கண்ணாடியை இறக்கிய ஜானி வந்தவர்கள் பாரஸ்ட் ரேஞ்சர்ஸ் என்பதை புரிந்துக் கொண்டான் . ” யார் சார் நீங்க … இந்தப் பக்கம் எதுக்கு வந்தீங்க…. இதுக்கு மேல நீங்க போக பாதை கிடையாது … ” என்று கேட்க, 

பின்னால் அமர்ந்திருந்த பிரபு சட்டென்று குரல் கொடுத்தான். 

“இங்க பங்களா ஒன்னு இருக்கே… அதுக்கு எப்படி போகணும்..?” 

“யார் சார் நீங்க … எதுக்கு பங்களாவுக்குப் போகணும்”

“பங்களா பத்தி கேள்விப்பட்டோம். இந்த பக்கமா ஒரு வேலையா வந்தோம். அப்படியே அதையும் பாத்துட்டு போகலாம்னு உங்ககிட்ட வழி கேட்கிறோம் …” “பங்களாபத்தி நாங்களும் கேள்விதான் பட்டிருக்கிறோம் . இதுவரைக்கும் நாங்களும் போனதில்லை . ஏன் … யாராலுமே அங்கே போக முடியாது … நீங்க திரும்பி போங்க சார் … இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க இருட்டாகிடும் . அப்புறம் பாதை கண்டுபிடிக்க கஸ்டமாயிடும் . நாங்களே இதோ கிளம்பிகிட்டே இருக்கிறோம்….” 

“என்னங்க சார் … அதிசயமா இருக்கு நீங்க சொல்றது. இந்த காட்டுக்குள்ளே இருக்கிற நீங்களே அந்த மாளிகையை பாத்தது இல்லியா … நிசமாத்தான் சொல்றீங்களா …?” 

“மாளிகை என்னமோ தூரத்துல தெரியும் ஆனா நம்மால அங்கே போகவே முடியாது ….” 

“பாதை ரொம்ப மோசமா இருக்குங்களா …?” 

“சார் … அதை எப்பிடி உங்களுக்கு புரிய வைக்கிறதுன்னு தெரியலை . அந்த மாளிகை ஒரு மர்ம தேசம். நாம அங்க போகணும்னு நினைச்சி இந்த வழியில போனாக்கூட திரும்பவும் இந்த இடத்துக்கே வந்துருப்போம் ….” 

” எங்களுக்குப் புரியலை …. வழி மறந்துடுவோமா … இல்லை இந்த வழி மீண்டும் இங்கேயே கொண்டுவந்து விடறமாதிரி அமைப்பா …?” 

“அப்படியெல்லாம் இல்லை. வழி என்னவோ போய்கிட்டே இருக்கிறமாதிரி தான் தோணும். பங்களாவும் பக்கத்துல வந்தமாதிரிதான் இருக்கும். நாம கிட்ட போயிட்டோம்னு நினைச்சிருப்போம். ஆனா இப்ப நிக்கிற இடத்துலதான் நின்னுருப்போம். அதுதான் எப்பிடின்னு புரியாத மர்மமா இருக்குது . இதை தெரிஞ்ச நிறைய பேர் இங்க வந்து பிளைட் மூலமா … ஹெலிகாப்டர் மூலமாவும் அங்கே போக டிரை பண்ணிணாங்க. 

ஆனா அவங்களால கூட பங்களாபக்கம் போகமுடியல்ல . 

ஏன் … இப்ப போனமாசம் ஒரு ஆராய்ச்சிகுழுவே வந்து எப்படியெல்லாமோ டிரை பண்ணிப் பார்த்தாங்க. அவங்களாலும் அங்கே போகவே முடியலை . மாந்திரீகம் மந்திரவாதிகள் யாராலும் அங்க நெருங்க முடியலன்னா பாத்துக்கோங்களேன் ….” 

நீங்க இங்க இருக்கீங்களே …. ஏதாச்சும் அசம்பாவிதம் நடக்க சான்ஸ் உண்டா …?” 

“இதுவரைக்கும் இங்க வர்ரவங்க யாருக்குமே எந்த தீங்கும் வந்ததில்லை. 

என்னா … தூரத்துல தெரியற பங்களா 

பக்கமா வர உடறதுஇல்ல . அதுதான் இங்க புரியாத மர்மம். 

எத்தனை காலமா இந்த பங்களா இருக்குதுன்னே யாருக்கும் தெரியாது . அங்க யாராவது 

வசிக்கிறாங்களான்னும் தெரியாது . நிசமாலுமே அங்க பங்களா இருக்குதா … இல்ல மாயையா … என்பதும் தெரியாது ….” 

“நீங்க சொல்றது விசித்திரமா இருக்கு. இந்த காலத்துலேயும் இப்பிடி ஒரு அதிசயம் இருக்குன்னு கேள்விப்படறதே ஆச்சரியமா இருக்கு. உங்ககிட்ட ஒன்னு கேக்கலாமா…? 

ஜானி கேட்க 

“என்ன சார் … கேளுங்க எனக்குத் தெரிஞ்சா சொல்றேன் …” 

‘இது போல ஒரு மர்ம தேசம் நம்ம பகுதியில இருக்குன்றது ஏன் யாருமே வெளி உலகத்துக்குச் சொல்லல … பத்திரிகைகள் கூட இதுவரைக்கும் இதைப்பத்தி எழுதுனதா தெரியலையே …?”, 

” எழுதுனும்னு நினைச்சாலும் தொலைக்காட்சி போன்ற மீடியாக்களும் இதை சொல்றதுக்கு முயற்சி பண்ணிணாங்க . ஆனா அதை அவங்க பப்ளிஷ் பண்ணும்போது எதுவுமே இல்லாம பிளாங்க்காதான் இருக்கும். இது ஆச்சரியத்தை விட பயம் அதிகமாக்கிடுச்சி. 

யாரு இதை வெளி உலகுக்கு கொண்டுவரணும்னு நினைக்கிறாங்களோ அவங்க மரணம் உடனடியா ஏதோ ஒரு ரூபத்துல வந்துடுது . அதுக்காகவே இந்த எக்ஸிபிரிமெண்ட்டுக்கு யாரும் தயாராகவில்லை. 

உங்களுக்கும் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நீங்களும் இதை போயி வெளியில சொல்லிடாதீங்க… நா இதை உங்ககிட்ட சொன்னதுக்கே எனக்கு ஏதாச்சும் ஆயிடுமோன்னு பயமா இருக்கு. 

சீக்கிரம் இங்கிருந்து கிளம்பிடுங்க ..” ரேஞ்சர் கூறிய பேச்சுக்களைக் கேட்டு மூவரும் என்ன செய்வது என்று புரியாமல் பார்த்துக் கொண்டனர் . 

“கேப்டன்… எனக்கென்னவோ இது மிகைப் படுத்தி சொன்னமாதிரி தோணுது . நாம போயித்தான் 

பாப்போமே … என்னதான் நடக்குதுன்னு பாத்துடுவோம் 

“ஆமாம் பாஸ் . எனக்கும் அப்படித்தான் தோணுது . வீணான வதந்தி இது . இப்படி ஒரு அமானுஷ்யமான இடம் இருக்குதுன்னு தெரிஞ்சிருந்தா இந்நேரம் மீடியாக்காரங்க பிரிச்சி மேஞ்சிருப்பாங்க . யாரோ அந்த இடத்துக்கு யாரும் போகக்கூடாதுன்னே இப்பிடி ஒரு செய்தியை பரப்புறாங்க…” 

“இப்ப மணி ஒன்னுதான் ஆகுது . ஆனா இருட்டானமாதிரி இங்க இருக்குது . இவ்வளவு அடர்த்தியான வனத்தில கண்டிப்பா 

ஏதாச்சும்இல்லீகல் சமாச்சாரம் இருக்கும் அதுக்காகத்தான் இந்த ரேஞ்சர்ஸ் கூட இப்பிடி பயமுறுத்தி வைக்கலாம். நாம போய்த்தான் பார்ப்போம் . என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிடுது … ” பிரபு கூற 

கரெக்ட் பாஸ் … ஆத்துல இறங்கிட்டோம் . இனி நீந்தி கரை சேர வழியைத்தான் பாக்கனும் . அதை விட்டு பயந்தா காரியம் நடக்காது .” 

‘அப்ப சரி … காரை இந்த வழியே விடு . பாக்கலாம் …” பிரபு கூறியதும் 

ஜானி ஹெட்லைட்டை போட்டுவிட்டு காரை செலுத்தத் தொடங்கினான் . 

போகப் போக காரை செலுத்துவதற்கே சிரமமாக இருந்தது. இருபுறங்களிலும் முள் செடிகளும் வேறு செடிகளும் வளர்ந்து கார் கண்ணாடியை உரசிக் கொண்டே வந்தது . 

மெல்ல கார் சென்று கொண்டிருக்க மூவரும் வந்த வழியை கவனித்துக் கொண்டே வந்தனர். 

ஒரு பெரிய ஆலமரம் நெருங்கி வர தூரத்தில் பங்களா தெரிவது போல் தெரிந்தது . 

“அங்கப் பாருங்க … பங்களா தெரியுது . “, 

ஜானி கூற 

‘ஆமாம் … தெரியுது . அப்பகிட்ட வந்துட்டோமா …?”, 

“இன்னும் கொஞ்ச தூரம் போனா வந்துடும்னுநினைக்கிறேன். ” 

“சரி … மெல்ல பாத்துப் போ … நாங்களும் வழியைக் கவனிக்கிறோம் ….” 

“கார் ஒரு வளைவில் சென்று திரும்ப இது வரை கண்ணுக்குத் தெரிந்த பங்களா தெரியாமல் போக, “ஜானி … ஏன் காரை திருப்பினே … வழி மாறுது போல. பங்களா தெரியலை பாரு ..” 

“நான் திருப்பல பாஸ் . தானாகவே காரு திரும்பிடுச்சி 

‘என்ன..! அதிர்ச்சியுடன் இருவரும் கேட்க 

‘ஆமாம் பாஸ் … தானாகவே ஸ்டியரிங் திரும்புது. நா எதுவுமே செய்யல … ” அதிர்ச்சியில் ஜானி கூற, 

நீ காரை நிறுத்து . கீழே இறங்கிப் பாக்கலாம் …” 

சட்டென்று ஜானி பிரேக் போட முயல, 

கார் நிற்காமல் சென்று கொண்டே இருந்தது . 

மூவரும் பிரமையுடன் அமர்ந்திருக்க கார் ஒரு இடத்தில் சென்று நின்றது. 

சட்டென்று காரை விட்டு மூவரும் இறங்கி சுற்றுமுற்றும் பார்க்க 

கார் முதலில் தாங்கள் நின்று ரேஞ்சர்ஸிடம் பேசிய இடம் போலவே தெரிந்தது . 

அத்தியாயம் 18 

பங்களா வழி கேட்டு காட்டுக்குள் 

சென்றவர்கள் மீண்டும் தாங்கள் பேசிக் கொண்டிருந்த இடத்திலேயே 

இருப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர் . 

என்ன பிரதர் …. திரும்பவும் இங்கேயே வந்துவிட்டோம் 

அதுதான் அவர்களே சொன்னாங்களே …. 

இப்படித்தான் 

நடக்கும்னு … இப்ப என்ன செய்யிறது …?” ஜானி கேட்க 

கார்ல போனதாலதானே நம்மால ஒண்ணும் செய்ய முடியலை. நடந்துப் பார்த்தா என்ன …?” பிரபு கூற 

“நல்ல ஐடியா பாஸ் . காரை இங்கியே நிறுத்திட்டு நாம நடந்து போய் வரலாம் ….” 

“இப்ப மணி மூணு ஆயிடுச்சி. பசிக்கிதா உங்களுக்கு ……..?!! 

‘லைட்டா … ஆனாலும் சமாளிக்கலாம். உனக்கெப்படி வந்தியா …?” 

“நீங்க என்ன சொல்றீங்களோ அப்பிடியே செய்வோம் . சாப்பிட்டா எல்லோரும் சாப்பிடுவோம் … ” 

“சரி ஜானி … சாப்பிட்டு விட்டே கிளம்பலாம் . அங்க போனா எவ்வளவு நேரமாகுமோ தெரியாது. சரி … சாப்பாட்டை எடுங்க ….” 

டிக்கியைத் திறந்தவர்கள் அதில் எதுவுமே இல்லாமல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிரபுவிடம் இதைக் கூற அவனும் பிரமையடைந்தான். 

“பாஸ் …. இப்ப நடக்கறதெல்லாம் பாக்கிறபோது ஹிட்சாக் ஸ்டோரி படிக்கிறதை லைவ்வா பாக்கிறமாதிரி இருக்கு …” 

“ஆமாம் பிரதர் …. நம்மூரு விட்டலாச்சாரியா படம் போல இருக்கு.  இதையெல்லாம் யாருகிட்டயாவது சொன்னாக்கூட நம்ப மாட்டாங்க …  

“இப்ப என்ன செய்யிறது ஜானி …. குடிக்க கூட தண்ணீர் இல்லை. 

மணியும் ஆயிடுச்சி . ரொம்ப இருட்டா வேற இருக்கு. ஒன்னு செய்யலாம் . 

பக்கத்து டவுன்ல ஏதாவது லாட்ஜ்ல ரூம் போட்டு தங்கிப்போம். 

விடியற்காலை கிளம்பி இங்க வந்திடலாம் … என்ன சொல்றீங்க …?”, 

‘நல்ல ஐடியா … அப்படியே செய்வோம் பாஸ் …!” 

“சரி … ஒரு செட் டிரஸ் எடுத்துக்கச் சொன்னேனே … எடுத்துகிட்டு வந்தீங்களா ….?” 

“கொண்டுவந்திருக்கிறோம் . சரி கிளம்பலாம் …. பக்கத்து டவுன்ல ரூம் கிடைக்கணும் ….” 

மூவரும் அங்கிருந்து கிளம்ப அதுவரை அவர்களையே மரத்தின் 

மீதிருந்த பார்த்துக் கொண்டிருந்த உருவம் கையைத் தட்டி சிரித்தது. 

ஒரு நல்ல லாட்ஜாகப் பார்த்து இரண்டு அறை எடுத்தனர். 

பசி அதிகமானதால் முதலில் சாப்பிட்டு விட்டே அறைக்குச் சென்றனர் . 

சிறிது நேரம் உறங்கி ரெஸ்ட் எடுத்துக் கொண்டு இரவு ஏழு மணியளவில் 

அந்த ஊரைச் சுற்றிப் பார்க்க புறப்பட்டனர் . 

மனதுக்கு இதமாக பல இடங்களைப் பார்த்து விட்டு ஒரு கடையின் முன்பாக நின்று கொண்டிருந்து பேசிக் கொண்டிருக்க, 

அப்போது தங்களை கிராஸ் செய்து இருவர் செல்வது தெரிந்தது. 

பிரபு அவர்களைப் பார்க்க அந்த இருவரும் அவனை திரும்பி பார்த்து புன்னகைக்க அவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனை கவனித்த ஜானி 

பாஸ் …. பாஸ்… என்ன ஆச்சு. ஏன் அங்கியே வெறிச்சிப் பாக்கறீங்க…?” என்று கேட்க, 

” அதோ பாரு ஜானி …. அன்னிக்கி நம்ம ஆபிசுக்கு வந்தாங்களே ஒரு லேடியும் அவங்க சின்ன வயது மகளும்.

என்னைப் பார்த்து சிரிச்சிக்கிட்டே போறாங்க… வா அவங்களைப் பிடிப்போம் ….” என்று கூற 

ஜானியின் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. “, எனக்கு யாருமே தெரியலேயே … ரெண்டு ஆண்கள்தான் போயிக்கிட்டு இருக்காங்க … நா அவங்களை வேணா தடுத்து நிறுத்தவா …”, 

” இல்லை … எனக்குத் தெரியராங்க… நானே போயி கூப்பிடறேன் . நீங்களும் கூட வாங்க…” என்று கூறி விட்டு பிரபு முன்னால் வேகமாக நடக்க 

அவனைத் தொடர்ந்து இருவரும் வேகமாக பின் தொடர்ந்தனர் . 

அதற்குள் வேகமாகச் சென்ற பிரபு சென்று கொண்டிருந்த இருவரை தடுத்து நிறுத்த அவர்களிடம் அவன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து விரைந்து அருகில் சென்றனர் ஜானியும் வந்தியனும் 

அங்கே அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான சீனியர் வக்கீல் லேடி ஒருவரும் அவருடன் அவர் மகள் போல் தோற்றம் கொண்ட ஐந்து வயதுடைய பெண்குழந்தையும் நின்று கொண்டிருக்க திகைப்படைந்தனர் இருவரும் 

இவர்களைப் பார்த்ததும் அந்த லேடி வியப்படைந்து “நான் காண்பது உண்மைதானா … தி பேமஸ் லாயர்ஸ் குரூப் இங்கு இந்த நேரத்துல என் முன்னே நிக்கிறாங்க 

வாட் எ சர்ப்ரைஸ் ….! 

அதுவும் பிரபு சார் என்னை அடையாளம் கண்டு வந்து தடுத்து நிறுத்தி பேசுறது என்பது கனவுப் போல இருக்கு. 

கோர்ட்ல பாத்தாக்கூட ஒரு ஸ்மைலோட போறவரு தானாகவே வந்து பேசுறதுன்னா எவ்வளவு எக்ஸைட்டா இருக்கு. 

அதுவும் மூவேந்தர்களோட தரிசனம் வேற … என்ன ஜானி … பேச்சையேக் காணோம் … வேறு யாரையாவது 

பாக்க வந்து அது நானாக இருந்ததுல ஆச்சரியமா …?” 

சுமார் முப்பது வயதிருக்கும் அந்தப் பெண் பேசிக் கொண்டேயிருக்க 

அதுவரை பேசாமலிருந்த பிரபு 

“உங்களை அங்கிருந்துப் பார்த்துட்டுத்தான் பிரேமா மாதிரி இருக்குதேன்னு தான் பாத்து பேச வந்தேன். ஆமாம்… நீங்க சென்னைதானே … அப்புறம் இங்க எப்பிடி …?” 

என்று இழுக்க, 

இந்த ஊர் என்னோட ஹஸ்பெண்ட் ஊர். என்னோட நாத்தானாருக்கு கல்யாணம் அடுத்த வாரம். 

அதுக்காக பேமிலியோட ரெண்டு நாளுக்கு முந்திதான் இங்க வந்தோம் . கடையில பர்சேஸ் பண்ணலாம்னு பொண்ணோட வந்தேன் . 

ஆமா … நீங்க இந்த ஊருக்கு வந்திருக்கிறதைப் பார்த்தா ஏதோ ஒரு கேசை துப்பு துலக்க வந்த மாதிரி தெரியிதே … என்ன நா சொல்றது சரிதானா …?” சிரிப்போடு பிரேமா கேட்க 

“இல்லீங்க … இங்க என் பிரெண்டு இருக்கிறான். அவங்க வீட்டு கிரகப்பிரவேசம் . அதுக்காகத்தான் வந்து இங்க ஓட்டல்ல தங்கியிருக்கிறோம் . நம்ப கொலீக் ஒருத்தரை நம்ம ஊரை விட்டு வெளியூர்ல பார்த்ததும் ஒரு சந்தோசம் . அதனாலத்தான் உங்களை 

பார்த்து பேசிட்டு போகலாம்னு வந்தோம் ….” ஏதேதோ கூறி சமாளித்து பேசினான் பிரபு. 

” இவ்வளவு தூரம் வந்துட்டு எங்க வீட்டுக்கு வரலேன்னா எப்பிடி … வாங்க வீட்டுக்கு போகலாம் …” 

அவள் அழைக்க 

“இப்ப இரவு நேரத்துல எதுக்குங்க … இன்னொரு முறை ஏன் சென்னையில வரோம் . சரி நாங்க வரோம் …”, 

என்று விடைபெற்று நகர்ந்தனர். 

‘என்ன பாஸ் … நாம இங்க வந்தது யாருக்கும் தெரியக் கூடாதுன்னு நினைச்சோம் . ஆனா இவளுக்குத் தெரிஞ்சிடுச்சே … ஏற்கனவே இவ 

சைலன்ஸ் ஸ்பெர்டர் . நம்ப சமூகத்துல டமாரம் அடிக்காத குறையா சொல்லித் தீர்த்துடுவாளே …?” 

“இது என்ன பெரிய விசயமா …. 

அவங்க சொல்லிடுவாங்களேன்னு பயப்படறதுக்கு …. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்வாங்க… அது போலத்தான் இருக்கு நம்ம 

கதையும் . சரி வாங்க போகலாம். சீக்கிரமா 

தூங்கினாத்தான் விடியற்காலை எழுந்திருக்க முடியும் 

இரவு மூவரும் ஒரே அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். 

பாஸ் … நிலா இதுவரைக்கும் நாலைஞ்சி காலாவது பண்ணியிருப்பாங்க … 

அவங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை எனக்கு … நீங்க ஏன் அவங்க காலை அட்டெண்ட் பண்ண மாட்டேங்கிறீங்க… அவங்களுக்குத் தான் எல்லா விசயமும் தெரியுமே … 

அப்புறமென்ன …?” 

“நாம ஒரு குழப்பத்துல இருக்கிறப்ப 

அவங்களுக்கு என்ன சமாதானம் சொல்றதுன்னே தெரியலை … அவகிட்ட நா பேசினா அவ அழ ஆரம்பிச்சிடறா … சங்கடமா இருக்கு எனக்கு… நாளைக்கி அங்க போயிட்டு வந்து விவரமாவே அவகிட்ட பேசறேன் . சரி … அலாரம் வச்சிட்டு படுங்க … குட்நைட் …” என்று கூறிவிட்டு படுக்கச் சென்றனர் . 

இரவு பிரபுவுக்கு தூக்கமே வரவில்லை . நிலா போனில் அழைக்க 

அவளிடம் பேசியவன் அவளுக்கு தைரியம் சொல்லி எங்களுக்கு எதுவும் ஆகாது … என்று சமாதானப்படுத்தி விட்டு தூங்குவதற்குள் வெகு நேரம் ஆகி விட்டது. 

தூங்கிக் கொண்டிருந்தவனை யாரோ கூப்பிடும் குரல் கேட்க விழித்தவன் 

தன்னிடம் பேசும் குரல்தான் என்று அறிந்தான். 

ஒருவாறு தைரியம் வரவழைத்தவனாய் அந்தக் குரலிடம் எதிரே இருப்பவரிடம் பேசுவது போல் பேசினான் … 

நீங்கள் சொல்லித்தானே நான் மாளிகையை பார்க்க 

வந்தேன் … ஆனால் ஏன் அனுமதிக்கவில்லை .. எனக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை … உங்களுக்காக நான் ஏன் சிரமப்படவேண்டும் …?” 

‘நிர்மலேஷ்வரா… உன்னுடைய கேள்விகளுக்கு நீ மாளிகை சென்றால் பதில் கிடைக்கும்… மாளிகையில் செல்வதற்கு உன் ஒருவனுக்கு மட்டுமே உரிமை உண்டு. 

மற்றவர்களுக்கு அனுமதி கிடைக்காது. நீ தனியே 

செல்லவேண்டிய நேரம்… உன் அருகில் நானிருப்பேன்… பயம் வேண்டாம்… காலை நீ கிளம்பிவிடு… 

மற்றவர் வேண்டாம்… உன்னுடைய 

இந்த பயணம் பல சிக்கல்களை தீர்க்க உதவப் போகிறது… தைரியத்துடன் கிளம்பு… நம் அன்னை பவானி துணையிருப்பாள்…! 

தூக்கத்தில் கண்ட கனவுடனே தூங்கிப் போனவன் காலை நான்கு மணியளவில் தன்னை எழுப்புவதைப் போல் தோன்றவே விழித்துக் கொண்டான். 

மடமடவென்று தன்னை தயார்படுத்திக் கொண்டவன் காரின் இன்னொரு சாவி தன்னிடம் இருப்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான் . 

தன் செல்லிலிருந்து ஜானிக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பினான். 

ஜானி … வந்தியா … நான் உங்களிடம் சொல்லாமல் மாளிகைக்குச் செல்கிறேன் . காரை எடுத்துக் கொண்டு போகிறேன் . முடிந்தவரை மாலைக்குள் வந்துவிடுவேன் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது . நீங்கள் பயப்படவேண்டாம் .. எனக்கு எதுவும் நடக்காது 

நீங்கள் மாலை வரை இங்கேயே இருங்கள் … நான் வந்துவிடுவேன் . 

ஒருக்கால் வரவில்லையென்றால் 

நீங்கள் இங்கிருந்து கிளம்பிவிடுங்கள் . யாரிடமும் 

எதையும் கூறவேண்டாம். 

மறுநாள் கண்டிப்பாக நான் வந்துவிடுவேன் . மாலை கண்டிப்பாக வந்துவிடுவேன் … கவலை வேண்டாம் …’ செய்தியை அனுப்பிவிட்டு 

தைரியத்துடன் கிளம்பினான் . 

தன்னை உலுக்கி எழுப்புவதுபோல் தோன்றவே திடுக்கிட்டு விழித்த ஜானி எதிரே வந்தியா நிற்பதைப் பார்த்து 

என்ன வந்தியா … ஏன் என்னை எழுப்புறே … விடிஞ்சிடுச்சா …?” 

என்று கேட்க, 

“பிரதர் … மணி ஒன்பதாயிருக்கு … 

நல்லா தூங்கிட்டோம் … அலாரம் ஏன் அடிக்கலை… ஆறுமணிக்கு வச்சிட்டுதானே தூங்கினேன் …” 

” டேய் என்னடா சொல்றே … மணி ஒன்பதா… அச்சச்சோ … பாஸ் திட்டுவாரே … அவரு எழுந்தாரா … இல்லியா … எந்திரிச்சிருந்தா வந்து எழுப்பி இருப்பாரே 

சரி … வேகமா கிளம்பு .. பாஸை எழுப்பிட்டு வரேன் கூறி விட்டு ஜானி பிரபுவின் அறையை நோக்கிச் சென்றான் . 

அறைக்கதவைத் தட்டியவன் திறக்காததால் ரூம் சர்வீஸ் பாயிடம் விசாரிக்க ‘ அவுரு காலையிலே வெளிய போன மாதிரி இருந்ததே … நீங்க அவரோடு போகலையா …?” 

என்று கேட்கவும், 

பயந்து போன ஜானி வந்தியனிடம் விசயத்தைக் கூற அவனும் பயந்து வெளியே கார் இருக்கிறதா என்று பார்க்க 

கார் இல்லாததைக் கண்டு பதறியவர்களாய் என்ன செய்வது என்று யோசித்தார்கள். 

போன் போட்டு எங்கிருக்கிறார் என்று கேளுங்கள் பிரதர் … ” 

ஜானி தன்னுடைய போனை எடுக்க அதில் மெசேஜ் வந்திருப்பதைக் கவனித்து அதை படித்தான் . பின்பு அதை வந்தியனிடம் கொடுத்து படிக்கச் சொல்ல அவனும் படித்துவிட்டு 

“இப்ப என்ன செய்யிறது நாம … இங்கேயே இருப்பதா … இல்லை கேப்டனைத் தேடி அங்கே போவதா …?” கலங்கிய குரலில் வந்தியன் கேட்க, 

“எனக்கும் என்ன செய்யிறதுன்னே புரியலை … ஒன்னு செய்வோமா… 

கால்டாக்சி புக் பண்ணி மாளிகை பார்த்த இடம் வரைக்கும் போவோம். 

பாஸ் அதுக்குமேலே போக முடியாம கண்டிப்பா அங்கதான் நிப்பார் . நாம அவரை அழைச்சிக்கிட்டு வந்திடலாம் .. என்ன சொல்றே …?” 

“சரியான யோசனை . கேப்டனை விட்டுட்டு நாம மட்டும் ஊருக்கு போவது என்பது முடியாத காரியம். சரி… டாக்சி புக் பண்றேன் …’ 

அதே நேரம் பிரபு தாங்கள் நின்றிருந்த இடம் வரை சென்றிருக்க இனிமேல் மாளிகை வரை தன்னால் போக முடியுமா என்பதை யோசிக்கத் தொடங்கினான் 

காலை நேரம் அங்கு இன்னமும் விடியாதது போல் இருட்டாக காட்சியளிக்க நிசப்தமான சூழ்நிலை ஒருவித அச்சத்தை அளித்தது. 

பறவைகளின் ஒலியும் பூச்சிகளின் ரீங்காரமும் உடம்பை மயிர்கூச்செரியச் செய்தது. 

காட்டுக்குள் இருந்த தனிமை பிரபுவின் நெஞ்சை படபடக்கச் செய்தது. 

காற்றில் அசைந்த மரங்களின் சலசலப்பும் கிளைகளின் அசைவும் வாவா என்று அழைப்பது போலவே இருந்தது . 

மனதில் ஒரு துணிவை வரவழைத்துக் கொண்ட பிரபு மாளிகை தூரத்தில் தெரியும் வரை காரை மெல்ல ஓட்டிச் சென்றான் 

இனி காரிலேயே செல்லலாமா … இல்லை நடந்து போய் பார்க்கலாமா… என்று யோசித்து காரிலேயே அமர்ந்திருந்தவன் காதில் இறங்கு 

என்று குரல் கேட்கவே காரை விட்டு இறங்கினான் . முன்னோக்கிச் செல் ‘ என்று கட்டளைத் தொடர காரை பூட்டி விட்டு நடக்கத் தொடங்கினான் பிரபு . பாதை கார் செல்ல முடியாத அளவில் ஒற்றையடி பாதையாய் மாறியது.

மாளிகை கண்ணிலிருந்து மறையவில்லை. 

இருபக்கமும் மரங்களின் பூதாகரமான வளர்ச்சியே பார்ப்பதற்கு பயத்தை அளித்தது . பிரபுவின் மனதில் இப்போது ஏந்த சலனமும் இல்லாமல் ஒரே நோக்கு பயணம் செல்பவனைப்போல் நேரான பார்வையுடன் சென்று கொண்டே இருந்தான் மாளிகை மிக அருகில் தென்பட ஆரம்பித்தது. 

இப்போது பிரபு அவனாகவே இல்லாதது போல் இருந்தான். 

இதோ மாளிகை நெருங்கி விட்டது . 

வாசகர்களாகிய நம் மனதில் திக் திக் என்ற சப்தம் கேட்கத் தொடங்கி விட்டது. 

இனி என்ன நடக்குமோ என்று சீட் நுனியில் அமர்ந்து விரலின் நகத்தை கடிக்கத் தொடங்கி விட்டோம் … 

மாளிகையின் முன்னால் பிரபு நின்றிருக்க அண்ணாந்து பார்க்கும் உயரமுடன் மாளிகை இருந்தது. 

மாளிகையைச்சுற்றி மரங்களும் செடி கொடிகளும் படர்ந்து வழியே இல்லாமல் அடைத்து இருந்தன. மிகப்பெரிய இரும்பு கேட் செடிகொடிகளால் படர்ந்து துருவேறி காணப்பட பிரபு மெல்ல அந்த கதவை திறக்க முயன்றான் . 

அவன் தொட்ட உடனேயே அந்தக் கதவு ‘ கீறீச்’, என்ற சத்தத்துடன் மெல்லதிறக்கத் தொடங்கியது. 

பிரபு மெல்லத் தன் கால்களை கேட்டைத் தாண்டி உள்ளே வைக்க எங்கிருந்தோ வந்த ஆந்தைகள் படபடவென்று அடித்தபடி மாளிகையைச் சுற்றத் தொடங்கின . 

திடீரென்று காற்று சுழன்றடிக்க அங்கே காய்ந்து கிடந்த சருகுகளெல்லாம் மேலேபறக்க ஆரம்பித்தது. 

எங்கிருந்தோ நரி ஒன்று ஊளையிட மாளிகையின் சுற்று சுவர்களில் பாம்புகள் ஊர்ந்து செல்லத் தொடங்கின. 

ஒரு அமானுஷ்யமான சூழல் அங்கே நிலவ இது எதுவுமே தன்னை பாதித்த மாதிரி பிரபுவுக்குத் தெரியவில்லை .. 

மாளிகையின் வாசலில் கால் வைக்க 

‘ ராஜாதி ராஜ… ராஜ மார்த்தாண்ட 

கோட்டைபட்டின ஜமீன் திருங்காட்டையூர் வழி வந்த அணங்கலேஷ்வரர் வழியூரார் நிர்மலேஷ்வரர் 

பாக்கியவார் பராக் … பராக் … 

கட்டியங்காரனின் வாழ்த்தொலியில் உள்ளே இருந்த அம்மங்கா விதங்காராணி மடமடவென்று வெளியே வர அவரைத் தொடர்ந்து 

மாவலியூரான் கோட்டை பத்மகோபன் 

பெற்றெடுத்த ஒரே மகள் மாதங்கி கோமகள் அலங்கார தேவதை போல் 

தன் கையில் சிறு சிசுவை ஏந்தியபடி 

வர பின்னால் சேடியர்கள் புடைசூழ வெளியே வந்தவர்கள் 

ராணியின் கைகளில் ஆரத்தி தட்டை அளிக்க அதை வாங்கிய ராணியார் 

புன்சிரிப்புடன் தன் மகனை ஆரத்தி எடுத்து தட்டை சேடியர்களிடம் கொடுத்துவிட்டு தன் இரு 

கைகளினால் கன்னத்தை வழித்து திருஷ்டி எடுத்தார். ” அம்மீ … நான் என்ன போரில்ஜெயித்து விட்டா வந்திருக்கேன் … பாலவராயருடன் பேச்சு வார்த்தை தானே நடத்தி விட்டு வந்திருக்கேன் …” 

‘சாமானியப்பட்டவருடனா பேச்சு வார்த்தை நடத்தி வெற்றிக் கண்டு வந்திருக்கிறாய் … ஒரு தேசத்து மந்திரி … அவர் கேட்ட நிபந்தனைகளுக்குப் பணிந்து போகாமல் அதே நேரம் அவரையும் திருப்திபடுத்தி போர் சூழலில் இருந்து 

நமது ஜமீனை காப்பாற்றி இருக்கிறாய் … இதை விட பெரிய வெற்றி வேண்டுமா …?” 

” அம்மீ … நீங்க உங்க பிள்ளையை அதிகமா புகழிரீங்க 

… பாலவராயர் 

நியாயமானவர் . நாம் கூறிய கோரிக்கையில் எந்த தர்மமும் மீறப்படவில்லை என்பதை புரிந்துக் கொண்டார் . அதனால் நமக்கு விதித்த அதிகப்படி வரிகளை தார்மீக அடிப்படையில் குறைக்க ஒத்துக் கொண்டார் . ” 

” எது எப்படியோ … நம்ம ஜமீனின் அதிகப்படியான பளுவை தைரியமாக எதிர்கொண்டு தீர்த்திருக்கிறாய். கரணம் தப்பினால் மரணம் என்பது போல போர் சூழலை தவிர்த்திருக்கிறாய் … சரி உள்ளே வா.. உனது அழகு புதல்வியின் திருமுகத்தை இதுவரை நீ காணவில்லை. 

அவள் பிறந்த நேரமே தந்தையின் வெற்றிக்கு காரணம் … 

அவளை கண்டு மகிழ விரைந்து சென்று 

புத்துணர்ச்சிப் பெற்று வா …” 

தாயின் கூற்றால் மகிழ்வுற்ற நிர்மலேஷ்வரன் எதிரில் நின்று கொண்டிருந்த தன் தர்மநாயகி மாதங்கி கோமகளை ஓரக்கண்ணால் 

காதலுடன் பார்த்தான். 

தங்களது தனியறையில் அருகருகே 

அமர்ந்திருந்தவர்கள் தங்கள் கைகளை 

ஒன்றோடொன்று பிணைத்தபடி கண்களினால் காதல் மொழி பேசியபடி இருக்க குழந்தையின் அழுகுரல் அவர்களை இவ்வுலகத்திற்கு வரவழைத்தது. 

அமித்தாய்… இங்க பாரு உன்னுடைய அப்பச்சி …. உன்ன பாக்காம இவ்வளவு நாளா எங்கே போயிருந்தீங்கன்னு கேளுடா …. பாத்து பாத்து கண் ரெண்டும் பாப்புக்கு வலிக்கவே செஞ்சிடுச்சின்னு சொல்லிடு … ” 

தன் மகள் குழந்தையிடம் தன் கணவன் இதுநாள் வரை பிரிந்திருந்ததை சூசகமாக கூற, 

சிரித்துக் கொண்டே தன் மகளை கையில் வாங்கியவன் 

கண்ணம்மா … அப்பச்சி உன் ஞாபகமாவே 

இருந்தேண்டா … எப்ப வந்து உன்னைப் பார்ப்பேன் என்றே 

துடிச்சிக்கிட்டு இருந்தேன்னு உன்னோட அம்மீகிட்ட சொல்லுடா …” 

கண்களால் தன் மனைவியிடம் காதலை காட்டியபடி குழந்தையைக் கொஞ்சினான் . 

அப்போது கதவில் இருக்கும் மணி ஆட்டப்பட எழுந்து கதவைத் திறந்தவன் சேவகன் நின்றிருப்பதைப் பார்த்து என்னவென்று கேட்க, 

திவான் உங்களைப் பார்க்கவேண்டுமென்று காத்திருக்கிறார் ” என்று கூற 

“வருகிறேன் என்று கூறு …” என்று கூறி விட்டு தன் மனைவியிடம் வந்து விடுவதாக கூறி விட்டு வெளியேச் சென்றான். 

அப்போது மாளிகையின் மேல்புற 

மாடத்தில் ரகசிய சதியாலோசனை நடைபெற்றுக் கொண்டிருப்பது 

இவர்களுக்குத் தெரியாதது எவ்வளவு விபரீதத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது அவர்கள் அறியவில்லை 

அத்தியாயம் 19 

பிரபு மாளிகையின் கேட்டைத் திறக்க துருப்பிடித்து அங்கங்கே இத்துப் போயிருந்த கேட்டு என்று சொல்லலாம் என்ற அளவில் ஓட்டிக் கொண்டிருந்தது கீறீச் என்ற சத்தத்துடன் திறக்க, காலை உள்ளே வைத்தவன் நிமிர்ந்து 

சற்றுத் தூரத்தில் இருந்த மாளிகையை நிமிர்ந்துப் பார்த்தான். 

வாசலிருந்து ஒரு பர்லாங் தூரத்தில் இருந்த மாளிகை சிதிலமடைந்து முன்புற பகுதியின் மிகப்பெரிய தூண்கள் கீழே விழுந்து செல்லறித்து சிறு பகுதிகள் மட்டுமே மிஞ்சியிருந்தது . 

சுற்றியிருந்த பிரம்மாண்டமான மரங்களிலிருந்த சருகுகள் வழியெங்கும் சிதறி நடக்கையில் சரக் சரக் என ஒலி எழுப்பி ஒரு பயங்கரத்தை ஏற்படுத்தியது. 

மெல்ல சுற்றுமுற்றும் பார்த்தவாறே மெல்ல நடந்தான். 

காலின் கீழே ஏதோ சரசரவென்று சத்தம் கேட்கவே சட்டென்று துள்ளி தள்ளிப்போனவன் பாம்பொன்று வேகமாக செல்வதைப் பார்த்தவன் உடம்பில் வியர்வை வழியத் தொடங்கியது 

அதன் பிறகு கீழே பார்வையை வைத்தவாறே நடந்தான் பிரபு. 

மாளிகையின் அருகில் வந்தவன் முன்பறச் சுவற்றில் இருபக்கமும் வேல் பிடித்த வீரர்களின் ஓவியம் வர்ணம் இழந்து சுண்ணாம்புக்காரை பெயர்ந்து விட்டு விட்டு பகுதிகளாய் காட்சியளித்தது ஓவியம். 

படிக்கட்டுகள் இடிந்து இருந்ததால் தாவி மேலே ஏறினான் பிரபு. 

கதவு எதுவும் இல்லாமல் பங்களா வாயில் ஆவென்று காட்சியளித்தது. 

உள்ளே செடி கொடிகள் படர்ந்து, போக வழியில்லாமல் புதர் போல காட்சியளிக்கவே ‘ இதில் நாம் எப்படிப் போவது ‘ என்று சிந்தித்தவாறு யோசித்து நின்றுக் கொண்டிருந்தான் . 

திவான் அழைப்பதாக காவலாளி கூறவும் தன் மனைவி மாதங்கியிடமிருந்து பிரிந்து வெளியே வந்தவன் மடமடவென்று காரிடாரில் நடக்க ஆரம்பித்தான். 

அப்போது மாளிகையின் மேல் மாடத்தில் அவனின் சிற்றன்னையின் மிகப் பெரியஅறையில்பதும விலாசனி தன் சகோதரன் விராச்சிக்கோட்டை தலைவன் இறும்பூதியான் மற்றும் அவளின் மகன் விஸ்வேஸ்வரா பாக்கியவான் மூவரும் கலந்தாலாசோனையில் ஈடுபட்டிருந்தனர் . 

வேறு மனிதர்கள் அங்கே வந்துவிடாவண்ணம் காவல்காரர்கள் மேல் மாடத்தின் பால்கனியில் உலா வந்த வண்ணம் இருந்தனர். 

“சகோதரா ….! பாக்கியவான் நிர்மலேஷ் பாலவராயரை சந்திக்கவிடாத வண்ணம் ஏற்பாடுகள் மிகப் பிரமாதமாய் செய்யப்பட்டுள்ளதாக கூறினீர்களே…. 

பார்த்தீர்களா … அவன் சேமமாகவும் பேச்சு வார்த்தையில் வெற்றியும் அடைந்து மகாராணியின் அபிமானத்தை மீண்டும் பெற்று வந்து விட்டான். 

ஏற்கனவே பாக்கியவான் விஸ்வா பேச்சுவார்த்தையில் தோல்வி கண்டு வந்த நிலையில் இந்த வெற்றி மக்களிடையே அவனுக்கு மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஏன் நீங்கள் இந்த காரியத்தில் கோட்டை விட்டு விட்டீர்கள் …?” 

சின்ன ராணியின் கேள்விக்கணையால் சங்கடப்பட்ட இறும்பூதியான் தலையைக் கவிழ்ந்த வண்ணம் 

சின்ன ராணி …. உங்களுக்கேத் தெரியும் … 

நான் இந்தப் பயணம் தடைப்பட வேண்டும் 

என்று முயற்சி பண்ணினேன் என்று . 

நிர்மல் கோலக்கல் வழியாகத்தான் 

செல்வான் என்று கொரில்லாத் தாக்குதலுக்கு ஏற்பாடு செய்திருந்தேன். 

ஆனால் கருமலைத்தேசத்திற்கு மலை பக்கம் வராமலேயேநதிக்கரையோரமாகவே 

காண்டியூர் வழியாகச் செல்வான் என்று எதிர்ப்பார்க்கவேயில்லை. 

அப்போது குறுக்கிட்டுப் பேசிய பாக்கியவார் விஸ்வேஸ்வரன் … “, அம்மீ நான் எனது நம்பிக்கைக்குரியவர்களை கருமலைதேசத்திற்கு அருகில் வானவராயன் காட்டுப்பகுதியில் மறைந்து நின்று தாக்குவதற்கு தயாராகத்தான் நின்றிருந்தேன். 

ஆனால் கடைசியில் கிடைத்த சேதியில் பாலவராயர் தலைநகர் கருமலையில் இல்லையென்றும், மன்னருடன் பொதிகை மலைக்குச் சென்றிருப்பதாகவும் அங்கு அவர்களை அங்கே வரச்சொன்னதால் தாமிரபரணிக்கரையோரமாகவே சென்றுள்ளதாகவும் கிடைத்த சேதியில் நான் அங்கு செல்வதற்குள் விசயம் முடிந்து விட்டது . இதற்கெல்லாம் காரணம் அவர்கள் விசயத்தை ரகசியமாக செயல்படுத்தியதால் தான் . நம்முடைய ஒற்றுப் பிரிவு நம்மை ஏமாற்றி விட்டது .” 

” ம் … ஒவ்வொரு முறையும் நாமும் அவனுக்குச் சங்கடங்களைத் தருவிக்க எத்தனையோத் தடைகளை ஏற்படுத்தி தான் வருகிறோம் . ஆனால் அவன் எல்லாவற்றையும் முறியடித்து இந்த ஜமீனின் வாரிசு என்பதை நீருபித்துக் கொண்டே இருக்கிறான். 

இதற்கெல்லாம் காரணம் பர்வதமலை சித்தரின் தகடின் மகிமை என்று நான் நினைக்கிறேன். ” 
அது உனது தந்தையார் அவனிடம் கொடுத்துச் சென்றதால் தான். 

அதை அவரிடமிருந்து கைப்பற்ற நானும் எத்தனையோ வழிகளில் முயற்சி செய்தேன். 

ஆனால் அந்த மனிதர் தன் ஆசை மகனிடம் தன் உயிர் போகும் தருவாயில் கொடுத்து விட்டு ‘ இது உன்னிடம் இருக்கும் வரையில் உனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. 

நமது ஜமீனின் வளமும் குறையாது . இதை எக்காரணம் கொண்டும் உன் கைவிட்டுச் செல்லாமல் பாதுகாக்கவேண்டியது 

உன்னோட கடமை ‘ என கூறிவிட்டே இவ்வுலகை விட்டுச் சென்றார். 

அவருக்கு நானும் நீயும் ஒரு பொருட்டே அல்ல . அதை நினைத்தால் தான் எனது நெஞ்சம் எரிகிறது . 

சிற்றரசன் மகளாகப் பிறந்து என்னப் பயனைக் கண்டேன் . கட்டாயப்படுத்தப்பட்டத் 

திருமணம். தந்தை மட்டும் அன்று எனது பேச்சைக் கேட்டிருந்தால் பேரரசனின் மருமகளாகி இருப்பேன் . தந்தையின் வீண் பிடிவாதத்தால் அரசை பகைத்துக் கொண்டு நாட்டை இழந்து கடைசியில் இங்கே தஞ்சமடைந்து, இரண்டாம்தார நிலைக்குத் தரம் தாழ்ந்து விட்டேன் . 

ஒரு ஜமீனின் மகளானவள் இன்று என்னை அதிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறாள் . 

இதுக்கெல்லாம் எனது மகனின் காலத்திலாவது மாற்றம் வரும் என்று நினைத்தேன். அதுவும் நடவாது போல் உள்ளது .” 

‘ அம்மீ… வருந்தாதீர்கள் . கண்டிப்பாக தங்களது ஆசை நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டது. 

நானும் மாமாவும் ஒரு திட்டம் வைத்திருக்கிறோம். அதை படிப்படியாக 

நிறைவேற்றி விட்டு தங்களிடம் தெரிவிக்கிறோம். துவரை தாங்கள் வேதனைப்படாமல் காத்திருக்கவும் 

இது உறுதியான முடிவாக இருக்கும் .” 

பிரபு மாளிகையின் முன்வாசலில் காலை வைத்தவன் தான் வரும்போது 

எடுத்து வந்திருந்த ஒரு பெரிய குச்சியால் 

முன்னால் இருந்த செடி கொடிகளை விலக்கி விட்டுச் சென்றவண்ணம் 

முன்னோக்கிச் சென்றான் . 

வானமே கூரையாக இருந்த மாளிகை 

ஓரிரு இடங்களில் கூரையுடன் காட்சியளித்தது. முன்பகுதியைக் கடந்து உள்ளேச் செல்ல பிரம்மாண்டமான ஹால் போல் காட்சியளித்தது. 

தூண்கள் மூன்று ஆட்கள் சேர்த்துப் பிடித்தாலும் அடக்க முடியாத நிலையில் 

தன் வண்ணத்தை இழந்து செதில் செதிலாக அந்த மரத்தூண்கள் சாய்ந்த நிலையிலும் சில தூண்கள் கீழே உடைந்த நிலையிலும் காட்சியளித்தது. 

சுவற்றில் என்ன ஓவியங்கள் என்று தெரியாத நிலையில் இருக்க மேலே கூரையின் பல இடங்கள் இடிந்து காணப்பட்டது . 

சுற்றுமுற்றும் பார்த்தபடி மெல்ல அடி எடுத்து வைத்து மனது திக் திக் என அடித்தபடி முன்னோக்கிச் சென்றான். 

தான் எந்த தைரியத்தில் யாரிடமும் சொல்லாமல் மற்றவர் துணையின்றி இங்கு வந்துள்ளோம் . 

மற்றவர்கள் யாரும் இத்தனை காலமாக வராத நிலையில் தனக்கு மட்டும் எப்படி வழி கிடைத்தது. 

புரியாத இந்த மர்மத்தை தெரிந்து கொள்ளாமல் இனி இங்கிருந்து செல்வதில்லை . 

தினம் தினம் பயந்து வாழ்வதைவிட உண்மையை அறிந்துக் கொண்டு உயிர் போனாலும் பரவாயில்லை. 

ஒருகணம் தன்னுடைய தாயின் முகம் வந்து போனது. அம்மா தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள். உங்களிடம் சொல்லாமல் இவ்வளவு பெரிய விபரீதத்தில் நான் சிக்கிக் கொண்டேன். 

நான் வராமல் போய்விட்டால் நீங்கள் உடைந்துப் போய்விடுவீர்களே … 

என்ன செய்வேன் அம்மா . உங்களைத் தனிமையில் சிக்க வைத்துவிடுவேன் போலிருக்கிறதே…. மறுகணம் நிலாவின் முகம் தெரிய கண்களில் நீர் வழிய நிலா …. நாம் காதலை பரிமாறிக் கொண்ட தருணத்திலே இருந்து ஒருநாள் கூட தனிமையில் நம் காதலை வளர்த்துக் கொள்ள முடியவில்லையே …. 

என்னால் நீயும் துன்பப்படுகிறாயே என்றுதான் இக்காரியத்தில் துணிந்து இறங்கிவிட்டேன். 

என் அன்பே… நீ கண்ணீருடன் நிற்கின்ற காட்சி கண்களில் தெரிகின்றதே…! 

இனி உனை எப்பொழுது காண்பேன். இப்படி ஒரு பைத்தியக்காரத்தனமாய் சிக்கலில் மாட்டிக் கொண்டேனே ….! 

அருமை சகோதரர்களே …. எனக்காக உங்கள் உயிரையும் பொருட்படுத்தாது இங்குவரை வந்தீர்களே …. 

உங்களிடம் சொன்னால் எனைத் தனியே அனுப்பமாட்டீர்கள் என்றுதான் உங்களிடம் சொல்லாமல் வந்து விட்டேன். 

என் மெசேஜைக் கண்டிருப்பீர்கள். 

ஆனாலும் நீங்கள் இங்கிருந்து சென்றிருக்க மாட்டீர்கள் . எனைத் தேடி நாம் நின்ற இடம்வரை வந்து காத்திருப்பீர்கள். 

நான் மீண்டும் உங்களை காண்பேனோ மாட்டேனோ நிச்சயமாகச் சொல்கிறேன்… அடுத்தப்பிறவி என்று ஒன்று இருப்பது உண்மையென்றால் நீங்களே என் நட்புகளாக வரவேண்டும் ….’ ஒரிடத்தில் நின்றுவிட்ட பிரபு அங்கிருந்து இன்னும் உள்ளே சென்றான். 

முற்றம்போல் அமைந்த இடத்தில் மேல் 

மாடம் அமைக்கப்பட்ட மற்றொரு ஹால் போன்ற அமைப்பில் கைப்பிடிகள் இல்லாமல் ஆவென்று வாய் பிளந்தாற் போன்றத் தோற்றத்தில் மாடம் காட்சியளிக்க 

‘ இங்கு எதைக்காண வரச் சொன்னது அத்தேவதை. இதுவரை நமது கண்களுக்கு எதுவும் தெரியவில்லையே…..’ 

யோசித்தவாறே நடந்தவனின் காலில் ஏதோ ஒன்று இடிக்கவே ‘ ஆ ‘ வென்று காலைத் தூக்கினான் பிரபு . 

கீழே குனிந்து கைகளால் அங்கிருந்த சருகுகளை விலக்க அங்கே ஏதோ ஒன்று இருப்பது போல் உணர்ந்தான். 

அப்பொருளை எடுத்து தனது கர்சீப்பினால் தூசியைத் தட்டிவிட்டுப் பார்க்க அதிர்ச்சியில் உறைந்து போனான்.

– தொடரும்…

– உள்ளே வராதே (திகில் நாவல்), துப்பறியும் செவென் ஸ்டார் சீரீஸ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *