ராமுவின் பெரும் உதவி

 

சுந்தராபுரம் என்னும் ஒரு ஊரில் மயில்வாணன் என்னும் ஒரு வியாபாரி இருந்தார் அவருக்கு ராமு என்னும் ஒரு மகன் இருந்தான். ராமு அந்த ஊரில் உள்ள நடு நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.

மயில்வாகணன் அருகில் உள்ள ஒரு நகரத்தில் கடை ஒன்று நடத்தி வந்தார். தினமும் காலையில் சைக்கிளில் அந் நகரத்துக்கு சென்று கடையை திறந்து வியாபாரத்தை பார்த்துவிட்டு இரவு ஒன்பது மனிக்கு மேல்தான் வீடு திரும்புவார். அவரது கடையில் விவசாயத்துக்கு தேவையான உரங்கள் பூச்சி மருந்துகள் போன்றவை விற்பனையாகும்.

ராமு நல்ல மாணவனாய் மட்டும் இல்லாமல், அவன் அம்மாவுக்கு வீட்டில் எல்லா உதவியும் செய்வான். அதுமட்டுமல்லாமல் அந்த ஊரில் உள்ள வயதானவர்களுக்கும், மற்றவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகள் செய்வான். ராமுவின் செயல்களினால் அவனின் பெற்றோர்களுக்கும் அந்த ஊரில் நல்ல பெயர் இருந்தது.

ஒரு முறை அவர்கள் ஊரில் ஒரு விவசாயி தன் நிலத்தில் தண்ணீர் தேவைக்காக ஒரு ஆழ்துளைக்கிணறு போட்டார். தண்ணீர் கிடைக்காததால், அதனை அப்படியே விட்டு விட்டு அடுத்த இடத்திற்கு சென்று நிலத்தை துளையிட்டார். முன்னர் துளை போட்ட இடத்தை மூடாமல் விட்டு விட்டார். அந்த இடத்தின் பாதையோரத்தில் மரங்களும் இருந்ததால், நடந்து வருவோர் சற்று அமர்ந்து செல்ல பொ¢ய கற்களும் பதித்து வைத்திருப்பர். இதனால் அந்த விவசாயின் தோட்டத்து வழி எப்பொழுதும் ஆட்கள் நடமாட்டமாகவே இருக்கும்.ராமுவைப்போலவே நிறைய மாணவர்கள் அவருடைய தோட்ட வழியாகத்தான் பள்ளிக்கு செல்வர். அவர்கள் இந்த ஆழ்துளைக் கிணறு திறந்திருப்பதை பார்த்து விட்டு விவசாயிடம் சென்று ஐயா, நீங்கள் தண்ணீருக்காக நிலத்தில் துளையிட்டுவிட்டு அப்படியே திறந்து போட்டுவிட்டு வந்து விட்டீர்கள்.தயவு செய்து அதை மூடிவிடுங்கள் என்று கேட்டனர்.அவர் நல்லவர்தான் என்றாலும், போவோர் வருவோர் சொல்லி நாம் கேட்பதா என்னும் மனப்பான்மையால் அதை காதில் போட்டுக்கொள்ளவில்லை.

இப்படி இருக்கையில் ஒரு நாள் ஒரு அம்மாள் தன் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு அந்த வழியாக வந்து கொண்டிருந்தார். அன்று நல்ல வெயில். வந்தவர் ஒரு மர நிழலில் சிறிது நேரம் களைப்புற்று கைக்குழந்தையையுடன் அருகில் இருந்த ஒரு கல்லின் மேல் உட்கார்ந்து விட்டார். அந்த வெயிலுக்கு, மர நிழல் சுகமாக இருந்தது.தன்னுடைய குழந்தையை அப்படியே தன் உடல் மீது சாய்த்துக்கொண்டு நிழலின் சுகத்தில் கண்ணை மூடியவர் அசந்து விட்டார். அந்த பெண்ணின் மடியில் இருந்த குழந்தை மெல்ல
அம்மாவின் கையை விட்டு இறங்கி அந்த மண்ணின் மீது தவழ்ந்தவாறு நடக்க ஆரம்பித்து விட்டது.

அந்தக்குழந்தை நடந்த பாதை அருகேதான் அந்த விவசாயி போட்டிருந்த ஆழ்துளை கிணறு இருந்தது. அது மூடாமலும் இருந்தது. அந்தக்குழந்தை திறந்திருந்த அந்த துளையில் மெல்ல கை விட்டு பின் கையை எடுத்து விளையாடியது.அதன் பின் என்ன நினைத்ததோ தொ¢யாது மெல்ல திருப்பி ஒரு காலை விட்டு விளையாண்டது.

இதை எதுவும் அறியாத அந்த பெண் நல்ல தூக்கத்துக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள்.

திடீரென ஒரு கூக்குரல் எழுந்தது

திடுக்கிட்டு விழித்த அந்த் பெண் தூரத்தில் ஒரு பையன் கீழே படுத்து கிடப்பதையும் எதையோ கையில் பிடித்தவாறு கத்திக்கொண்டிருப்பதையும் பார்த்தவள், திடீரென நினைவு வந்தவளாய் தன் குழந்தையை தேட அது காணாமல், பதட்டத்துடன் எதையோ கையில் பிடித்துக்கொண்டு கத்திக்கொண்டு படுத்துக்கிடந்த அந்த பையனின் அருகில் ஒடிப்போய் பார்த்தவளுக்கு மூச்சே நின்றுவிட்டது போல் இருந்தது. தன்னுடைய குழந்தையின் முக்கால்வாசி உடல் அந்த குழியில் உள்ளே இருக்க, கழுத்தை மட்டும் அந்தப்பையன் பிடித்து கத்திக்கொண்டிருந்தான்.அந்த பெண்ணும் உதவி உதவி என்று கூச்சலிட்டுக்கொண்டு அந்தப்பையனோடு சேர்ந்து தானும் தன் குழந்தையை பிடித்துக்கொண்டாள்.

அதற்குள் சத்தம் கேட்டு அந்த வழியாக போவோர் வருவோர் அனைவரும் வந்துவிட்டனர்.பின் அங்கிருந்த அனைவரும் சுற்றிலும் உள்ள மண்ணை மெல்ல எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த குழந்தையை வெளியே எடுத்தனர். நெடுநேரம் குழந்தையின் கழுத்தை பிடித்திருந்த்தால் அந்த குழந்தைக்கு மூச்சு திணறல் எடுத்து மயக்க நிலைக்கு போயிருந்த்து. உடனே குழந்தையை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குழந்தை நல்லபடியாக பிழைத்துக்கொண்டது. எல்லோரும் அந்த விவசாயிடம் சென்று உங்களால் ஒரு குழந்தை சாகத்தொ¢ந்தது. இந்த பையனால்தான் பிழைத்தது, என்று சொன்னார்கள் அந்த விவசாயி “தம்பி” அன்று நீங்கள் எல்லாம் சொன்னபோது வழியில போறவங்கதானே, என்று கண்டு கொள்ளாமல் விட்டு விட்டேன். இன்று வீணான பழிச்சொல்லுக்கு ஆகாமல் என்னை காப்பாற்றி விட்டாய் என்னை மன்னித்துக்கொள் என்றார்.

ராமு ஐயா நீங்கள் பொ¢யவர்கள், என்னிடம் மன்னிப்பு எல்லாம் கேட்கவேண்டாம். நான் என் தந்தைக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு அந்த வழியாக வந்து கொண்டிருந்தேன்.
ஒரு குழந்தை தனியாக வருவதை தூரத்தில் இருந்து பார்த்துவிட்டேன். அப்புறம்தான் எனக்கு ஞாபகம் வந்தது இங்கு ஒரு குழி இருக்குமே என்று ஓடி வந்தேன். அதற்குள் குழந்தை அந்த
குழிக்குள் காலை விட்டு விட்டது.

உடனே ஓடி வந்து அதனை பிடிக்க முயல்வதற்குள் உடல் உள்ளே இறங்க ஆரம்பித்துவிட்டது. வேறு வழியில்லாமல் கழுத்தை என் கரத்தோடு இறுகப்பற்றி அப்படியே படுத்துக்கொண்டு சத்தம் போட்டேன். நல்ல வேளை அதற்குள் அந்த குழந்தையின் அம்மாவும் வந்ததால் நல்லதாகப்போயிற்று என்று கூறினான்.

அந்த ஊர் மக்கள் இன்றும் ராமுவின் அந்த பெரும் உதவியைப்பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

தொடர்புடைய சிறுகதைகள்
காட்சி-1 நண்பா தயவு செய்து எனக்கு எதிரா நிக்கறவனுக்கு சப்போர்ட் பண்ணாத ! அதெப்படி, அவனால எனக்கு காரியம் ஆக வேண்டியிருக்கே அப்ப நம்ம நட்புக்கு மரியாதை தரமாட்டே? நட்பு வேறே, பிசினஸ் வேறே, நான் அவன் கூட உறவாடறது என் பிசினசுக்குத்தான் அப்ப நீ அவனுக்கு சப்போர்ட் ...
மேலும் கதையை படிக்க...
டுபாக்கூர் ஸ்டீல் கம்பெனி. வீட்டு எண் 000, காணாமல் போன வீதி, முட்டு சந்து, சின்னூர் மேனேஜர் அவர்களுக்கு தாதா என்று அழைக்கப்படும் ராக்காயி எழுதுவது ! உம்முடைய கடையில் வாங்கிய பீரோ ஒன்று உம்மால் “இது உயர் தரமானது” எளிதில் உடையாது, வளைந்து கொடுக்காது, திறப்பதற்கும், மூடுவதற்கும் சுலபமாய் இருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
ராம் காஞ்சனாவின் கையைப்பிடித்துக்கொண்டு கண்களில் அன்பு மிளிர "காஞ்சனா" நீ ஏன் என்னை புரிந்துகொள்ள மறுக்கிறாய்? அவளின் குனிந்த தலையை நிமிர்த்தி அவள் கண்களை கூர்ந்து பார்த்து என்ன சொல்ல நினைக்கின்றன உன் கண்கள் தயவு செய்து சொல்லிவிடு மயக்கத்துடன் சொன்னான், ...
மேலும் கதையை படிக்க...
நல்ல தூக்கத்தில் இருந்த பத்மா, தூக்கத்திலேயே தன் கையை நீட்டினாள், முரளி தோள் தட்டுப்பட, அவன் தோள் மேலேயே கையை போட்டு ஆழ்ந்த நித்திரைக்குள் நுழையப்போனாள். சட்டென்று ஒரு நினைவு, முரளி வெளியூருக்கு சென்றிருந்தானே, அவ்வளவுதான், இந்த நினைவு வந்ததும், விருக்கென ...
மேலும் கதையை படிக்க...
மேட்டுப்பாளையம் என்னும் சிற்றூரில் கன்னையன் என்பவன் வாழ்ந்து வந்தான் அவனுக்கு சுகுமாரன்,வளர்மதி, என இரு குழந்தைகள். இருவரும் முறையே ஏழாவது வகுப்பும், மூன்றாவது வகுப்பும்,அந்த ஊரில் உள்ள அரசு பள்ளியிலேயே படித்து வந்தார்கள்.அவர்கள் வசித்து வந்த ஊர் பெரிய நகரமும் இல்லாமல் சிறிய ...
மேலும் கதையை படிக்க...
நிசப்தமாய் இருந்த அந்த பெரிய ஹாலில் சுற்றிலும் பிரதம மந்திரி முதல், இராணுவ மந்திரி முதற்கொண்டு, அனைத்து இராணுவ அதிகாரிகளும் உட்கார்ந்திருந்தனர். நடுவில் ஒரு இராட்சச கண்ணாடி தொட்டி அமைக்கப்பட்டு முழுவதும் தண்ணீர் நிரப்ப்பட்டு இருந்தது. அதன் அருகில் ஒரு பெரிய ...
மேலும் கதையை படிக்க...
குட்டீஸ் நீங்கள் பூங்காவிற்கு சென்றிருக்கிறீர்களா? அங்கு விதம் விதமான மலர்களை பார்த்திருப்பீர்கள். அவைகள் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன.நீங்கள் அதை பார்த்து இரசித்திருப்பீர்கள்.அப்பொழுது அங்குள்ளதிலேயே எந்த பூ அழகு என்று பேசிக்கொண்டிருப்பீர்களா?கண்டிப்பாக செய்திருப்பீர்கள். இப்படித்தான் ஒரு நாள் குழந்தைகள் கூட்டம் ஒன்று ...
மேலும் கதையை படிக்க...
உங்க கிட்ட கொஞ்சம் பேசணும், எதிரில் தனது முந்தானையை சரி செய்து கொண்டு நின்று கொண்டிருந்தாள் வசந்தி. டேபிளின் மேல் வைத்திருந்த எல்லா பொருட்களையும் எடுத்து டிராயரில் போட்டு விட்டு கிளம்பலாம் என்று நினைத்திருந்த நேரம். உற்று பார்த்தேன், எட்டு மாத்த்திற்குள் கொஞ்சம் ...
மேலும் கதையை படிக்க...
வேதனையாக இருந்தது எனக்கு சவாரியும் ஒன்றும் கிடைக்கவில்லை. கதை புத்தகங்கள் ஆட்டோவிலேய வைத்திருப்பேன், அதை படிக்க கூட மனம் வரவில்லை, பயம்தான் அதிகமாக இருந்தது. இந்த பிரச்சனை எனக்கு தேவையில்லாதது. ஆனால் நியாயம் என்று ஒன்று இருக்கிறதே, இருந்தாலும் நான் அதிகமாக ...
மேலும் கதையை படிக்க...
வளைந்து வளைந்து செல்லும் அந்த மலைச்சரிவில் அநாயசமாய் காரை ஒட்டி சென்று கொண்டிருந்த மகேசின் திறமை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் பிரமிப்பை தந்து கொண்டிருக்கலாம். ஆனால் காரை ஓட்டிக் கொண்டிருக்கும் அவனின் மனமோ பெளர்ணமி நிலவின் ஈர்ப்பில் கொந்தளித்து கொண்டிருக்கும் கடலின் நிலையில் ...
மேலும் கதையை படிக்க...
இடையில் வந்த குழப்பம்
டுபாக்கூர் ஸ்டீல் கம்பெனி
கல்யாணம்
எண்ணங்களின் குவியல்
கண்டெடுத்த கடிகாரம்
விஞ்ஞானியின் காதல்
பூக்களுக்கும் போட்டி உண்டு
உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்
மனித நேயம்
மகேசும் பாபுவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)