நம்முடைய நேரு

 

எங்கள் பாட்டி எனக்கு அடிக்கடி கதை சொல்லுவாள். ராமன் கதை, கிருஷ்ணன் கதை, எல்லாம் சொல்வாள். “தசரத மகாராஜாவுக்கு மணிமணியாகக் குழந்தைகள் பிறந்தார்கள். ரத்னம் போல் ராமன் பிறந்தான்” என்று கதை சொல்வாள். கிருஷ்ணன் கதையைச் சொன்னாலும், ‘அவன் மணிப்பயல்’ என்று சொல்வாள்.

“அதென்ன பாட்டி, மணிப்பயல், ரத்னம் போலப் பிறந்தவன் என்கிறாயே; ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டேன்.

“ரத்னம் அதிக விலையுள்ளது, சுலபமாகக் கிடைக்காது. அது மாதிரியே ராமனைப் போலவும் கிருஷ்ணனைப் போலவும் குழந்தைகள் பிறப்பது அருமை” என்று பாட்டி சொன்னாள்.

பாட்டி சொன்னது எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. அதுவும், நம்முடைய பாரத தேசத்துக்கே ஒரு ரத்னம் போல ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்தபோது பாட்டி சொன்ன கதையை மறக்க முடியுமா?

ரத்னம் போல இருக்கிறார் என்றேனே, அவர் பெயரே ரத்னந் தான். நாம் ரத்னம் என்று சொல்லுகிறோம்; அதே பேரை ஹிந்தி யில் ஜவாஹர் என்று சொல்வார்கள்.

நான் யாரைப்பற்றிச் சொல்கிறேனென்று நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்களே! ஆம், ஜவாஹர்லால் நேருவைத்தான். நம் முடைய தேசத்துக்கே ரத்னம் போன்றவர் அவர் என்று எல்லோ ரும் சொல்லுகிறார்கள்.

ஜவாஹர்லால் நேருவின் அப்பா மோதிலால் நேரு. மோதி என்றால் முத்து. முத்தின் வயிற்றில் ரத்னம் பிறந்தது போல மோதிலால் நேருவுக்கு ஜவாஹர்லால் நேரு முதல் பிள்ளையாகப் பிறந்தார்.

அலகாபாத் என்ற நகரத்தில் மோதிலால் பெரிய வக்கீல்; நல்ல பணக்காரர். வெள்ளைக்காரரைப்போல உடுப்புப் போடுவார். அவர்களைப் போல இருப்பதுதான் நாகரிகம் என்று அந்தக் காலத் தில் பெரிய மனிதர்கள் நினைத்தார்கள்.

ஜவாஹர்லால் நேரு 1887-ஆம் வருஷம் பிறந்தவர். முதல் பிள்ளை, செல்லப்பிள்ளை. அவருக்கு என்ன குறைவு? விளையாட்டுச் சாமானுக்குக் குறைவா? உடைக்குக் குறைவா? உணவுக்குக் குறைவா? ஒரு குறைவும் இல்லாமல் சந்தோஷமாக வளர்ந்து வந்தார். ஒரு நாள் குழந்தை ஜவாஹர் அப்பாவின் அறைக்குள் போனார். அப்பா எங்கேயோ வெளியிலே போயிருந்தார். மேஜை மேல் இரண்டு பெளண்டன் பேனா இருப்பதைக் குழந்தை ஜவாஹர் பார்த்தார். அதில் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். அப்பா வெளி யிலிருந்து வந்தார். மேஜையைப் பார்த்தார். ஒரு பேனாவைக் காணவில்லை. அந்தக் காலத்தில் பௌண்டன் பேனா . சுலபமாகக் கிடைப்பதில்லை.

மோதிலால் நேரு மகா கோபக்காரர். “என் பேனா எங்கே?” என்று இரைச்சல் போட்டார். ஜவாஹர் ஒன்றும் பேசாமல் பேனாவை ஒளித்து வைத்துவிட்டார். கடைசியில் பேனாவை அப்பா கண்டுபிடித்தார். ஜவாஹர்மேல் கடுமையான கோபம் வந்தது. அவரை இழுத்து வந்து அடித்தார். செல்லப்பிள்ளையாக வளர்ந்தாலும், பாவம், பேனாவை ஒளித்ததற்காக அடிபட்டார் . பிறகு அவருடைய அம்மர் வந்து அவரை அழைத்துப்போய்ச் சமாதானம் செய்தார். இது அவர் ஐந்து வயசுக் குழந்தையாக இருந்தபோது நடந்தது.

குழந்தைக்கு வீட்டிலே வாத்தியாரை வைத்துப் பாடம் சொல்லித் தந்தார்கள். அந்த வாத்தியார் மிகவும் நல்லவர் . நல்ல கதைகளையெல்லாம் சொல்வார். குதிரை வீரர்களின் கதைகளைச் சொல்வார். அந்தக் கதைகளைக் கேட்கும் போதெல்லாம், ‘நாமும் ஒரு குதிரை வீரன் ஆகவேண்டும்’ என்று ஜவாஹருக்கு ஆசை ஏற்படும்.

பெரிய குதிரையின் மேல் டக் டக் டக் டக் , டக் டக் , டக் டக் என்று சவாரி பண்ணுவதாக நினைத்துக் கொள்வார். அவர் நினைத்தது வீண்போகவில்லை. அப்பா ஜவாஹருக்கு ஒரு சின்னக் குதிரையையே வாங்கிக்கொடுத்தார். உண்மையான உயிருள்ள குதிரை. ஜவாஹருக்கு உண்டான ஆனந்தம் சொல்லி முடியாது. அதன்மேல் ஏறி ஓட்டக் கற்றுக்கொண்டார்.

ஊரெல்லாம் பிரமிக்கும்படி குதிரையை வெகு வேகமாக ஓட்ட வேண்டுமென்று ஜவாஹர்லாலுக்கு ஆசை. அடிக்கடி அதை ஓட்டிக்கொண்டு சவாரி செய்து ஆனந்தப்படுவார். ஒரு நாள் அவருக்கு அதிக உற்சாகம் உண்டாகிவிட்டது. குதிரைமேல் ஏறிச் சவாரி செய்ய ஆரம்பித்தார். அதை விரட்டி ஓட்டினார். குதிரை நாலுகால் பாய்ச்சலில் ஓடியது. ஓடுகிற வேகத்தில் ஜவாஹர்லால் தொபுகடீர் என்று கீழே விழுந்தார். நல்ல வேளை ; காயம் ஒன்றும் இல்லை. ஓட்டம் பிடித்த குதிரை வீட்டுக்குப் போய் நின்றது.

வீட்டில் உள்ளவர்கள் குதிரையைப் பார்த்தார்கள். ஜவாஹர்லாலை அதன் மேல் காணவில்லை. அம்மா வந்து பார்த் தாள். அப்பா வந்து பார்த்தார். ”நான் அவரைத் தள்ளிவிட்டு வந்தேன்” என்று குதிரை சொல்லுமா?

குழந்தையைத் தேடிக்கொண்டு போனார்கள். கண்டு பிடித் தார்கள். காயம் ஒன்றும் இல்லாமல் தலையைக் குனிந்து கொண்டு நின்றிருந்தார் ஜவாஹர் . “கீழே விழுந்தும் காயம் படவில்லையே! நீ வீரன் தான்” என்று அப்பா கொண்டாடினார்.

அதுமுதல் குதிரைச் சவாரியை அவர் விட்டுவிட்டார் என்று தானே நீங்கள் எண்ணுகிறீர்கள்? இல்லவே இல்லை. அந்தக் குதிரையிடம் இன்னும் அதிகப் பிரியத்தோடு பழகினார். மேலும் மேலும் குதிரைச் சவாரி செய்தார். அறுபது வயசு நடக்கும் இப்போது கூட நம்முடைய ஜவாஹர்லாலுக்குக் குதிரை ஏறிச் சவாரி பண்ணுவதென்றால் பிரியம் அதிகம்.

ஜவாஹர்லால் மிகவும் குறும்புக்காரர். ஹோளி பண்டிகை என்று ஒரு பண்டிகையை வடதேசத்தில் கொண்டாடுவார்கள். அப்போது பீச்சாங்குழலில் வர்ணத் தண்ணீரை விட்டுச் சிநேகிதர் களின் மேல் பீச்சுவது வழக்கம். ஜவாஹர்லால் சிறு பையனாக இருந்தாலும் பெரியவர்களின் மேல் வர்ண ஜலத்தைப் பீச்சுவார். அவர்களைத் துரத்தி அடித்து முகத்திலும் ஆடைகளிலும் ஒரே வாணமாக ஆக்கிவிடுவார். அலகாபாத்தில் அவர்கள் பெரிய மாளிகையில் வசித்தார்கள். அதற்கு ஆனந்த பவனம் என்று பெயர். அதில் நீச்சம் அடிப்பதற்காக ஒரு குளம் இருக்கிறது. ஜவாஹர்லால் நேரு அதில் நீச்சம் அடிப்பார். அவருடைய தகப்ப னாருக்கு வேண்டியவர்கள் கூட அந்தக் குளத்துக்கு வந்து நீச்ச மடித்துப் பொழுது போக்குவார்கள். ஜவாஹர் அவர்களிடம் குறும்பு பண்ணுவார். அசந்து மறந்து நின்றால் தண்ணீருக்குள் தள்ளிவிடுவார். காலை இழுத்து விட்டுத் தண்ணீருக்குள் மூழ்கி மறைந்து போவார்.

அப்பா மோதிலால் நேரு வுக்குப் பல கனவான்கள் சிநே கம். அவர்களை அடிக்கடி அழைத்து விருந்து நடத்து வார். அப்போதெல்லாம் வெள் ளைக்காரரைப் போல விருந்தில் மதுவை அருந்துவதுண்டு. ஒரு நாள் தகப்பனாரும் அவர் சிநே கிதர்களும் விருந்து உண்டு கொண்டிருந்தார்கள். ஜவாஹர் லால் மறைவாக நின்று பார்த்துக்கொண் டிருந்தார். அவரை மோதிலால் நேரு பார்த்துவிட்டார். உடனே எடுத்துத் தம் மடியில் வைத்துக்கொண் டார். ஜவாஹருக்கு விஷமம் ஒன்றும் செய்ய முடியவில்லை. கண் களைக் கொட்டாமல் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தார். கிண்ணங்களில் மேல் நாட்டு மதுவை ஊற்றி அவர்கள் உண்டார் கள். அந்த மது செக்கச் செவேலென்று இருந்தது.

ஜவாஹர் மெதுவாக நழுவினார். அம்மாவிடம் ஓடிப்போய், அம்மா, அம்மா ! அப்பாவும் அவர் சிநேகிதர்களும் ரத்தத்தைக் குடிக்கிறார்கள்” என்று படபடப்புடன் சொன்னார். அவருக்கு அது மதுவென்று தெரியாது.

ஜவாஹருக்குப் பத்து வயசு நடந்தபோது அவருக்கு ஒரு தங்கை பிறந்தாள். குழந்தை பிறந்த செய்தியை ஜவாஹருக்கு டாக்டர் சொன்னார். “நல்ல வேளை / தங்கையாகப் பிறந்தாள். தம்பியாகப் பிறந்தால் உன் சொத்தில் பங்கு கேட்பான்” என்று அவர் வேடிக்கையாகச் சொன்னார். ஜவாஹர்லாலுக்கு அது வேடிக்கையாகப் படவில்லை. “அதென்ன அப்படிச் சொல்லுகிறார்? என் பொருள்களைத் தம்பிக்குக் கொடுக்க மனசு இல்லாதவனா நான்?” என்று எண்ணி வருத்தப்பட்டார். டாக்டர் மேல் கோபம் கோபமாக வந்தது. உண்மையில் ஜவாஹரைப்போல ஏழைகளுக்கு இரங்கும் பெரியவர்கள் மிகவும் குறைவு. பெரிய அரண்மனையாக விளங்கிய ஆனந்த பவனத்தைப் பிற்காலத்தில் அப்பாவும் பிள்ளை யும் சேர்ந்து காங்கிரஸுக்குக் கொடுத்துவிட்டார்கள். “சுயராஜ்ய பவனம்” என்று அதற்குப் புதிய பேர் உண்டாயிற்று.

தம் குமாரர் ஜவாஹர்லால் நேருவுக்கு ஒரு வெள்ளைக் காரரைக் கொண்டு பாடம் சொல்லிவைத்தார் தகப்பனார். புரூக்ஸ் என்பது அவர் பெயர். அவரிடம் ஜவாஹர் நன்றாகக் கல்வி கற்றார். பிறகு அவரை அவருடைய தகப்பனார் இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்ந்து வாசித்தார் ஜவாஹர் . காலேஜ் படிப்புப் படித்துப் பிறகு வக்கீல் படிப்பும் படித்தார்.

அந்தக் காலம் முதலே இந்தியாவுக்குச் சுதந்தரம் வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. இந்தியா சுதந்தரம் பெற வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் வளர்ந்தது. படிப்பையெல்லாம் முடித்துக்கொண்டு இந்தியா வந்தார். மகாத்மா காந்தியிடம் அன்பு பூண்டார். அவருடைய பிள்ளையைப் போலப் பழகினார். தேசத்துக்காகத் தொண்டு புரிந்து பல வருஷங்கள் சிறைக்குச் சென்றார்.

இந்தியா சுதந்தரம் அடைந்துவிட்டது. மகாத்மா காந்தி இப்போது இல்லை. ஆனாலும் ஜவாஹர்லால் நேரு இருக்கிறார் என்ற தைரியம் நமக்கு இருக்கிறது. குழந்தைகள் என்றால் அவருக்கு மிகவும் பிரியம். இந்தியாவின் பிரதம மந்திரியாக இருக்கும் அவருக்கு எவ்வளவோ வேலை. ஆனாலும் தம் இரண்டு பேரர்களுடன் விளையாடுவதில் அவருக்கு ஆனந்தம். அவர் சொற் படி நாமெல்லாம் செய்தால்தான் நமக்கும் அவரிடத்தில் பிரியம் இருப்பது உண்மையாகும்.

- விளையும் பயிர், கலைமகள் காரியாலயம், சென்னை 

தொடர்புடைய சிறுகதைகள்
கிழவியின் தந்திரம்
(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிவகங்கைச் சம்ஸ்தானத்தில் மருது சேர்வைக் காரர் என்ற ஜமீன்தார் ஆட்சி புரிந்து வந்தார். வீரத்திலும் கொடையிலும் புலவர்களைப் போற்றும் திறத்திலும் அவர் சிறந்து விளங்கி னார். அதனால் அவரை ...
மேலும் கதையை படிக்க...
சேரன் செங்குட்டுவன் கலைவளம் காணுவதற்காகப் போயிருந்தான். அங்கே வாழ்ந்த மலைவாணர்களாகிய வேடர்கள் மான் கொம்பு, கவரிமானின் வால் முதலிய காணிக்கைகளோடு மன்னனை வந்து பார்த்தார்கள். அப்போது அவர்கள் தாம் கண்ட அதிசயம் ஒன்றை அரசனுக்கு எடுத்துச் சொன்னார்கள். "அரசே, ஒரு பெண் ...
மேலும் கதையை படிக்க...
(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "உங்களுக்கு மரப்பாச்சி விற்கும் கடை.. ஏதாவது தெரியுமா?" என்று கேட்டாள் கோமதி. அப்போதுதான் சங்கரன், காரியாலயத்திலிருந்து வந்தவன் சட்டையைக் கழற்றிக் கொண்டிருந்தான். "ஏன்? எதற்காகக் கேட்கிறாய்? நம் வீட்டில் இருக்கிற மரப்பாசிகள் ...
மேலும் கதையை படிக்க...
துறவரசர் இளங்கோவடிகள்
சிங்காதனத்தில் சேரமன்னன் வீற்றிருந்தான். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பது அவன் பெயர். அவனுக்குப் பின் ஒராசனத்தில் அவனுடைய குமரர் இருவரும் அமர்ந்திருந்தனர், மூத்தவன் செங்குட்டுவன். இளையவன் பெயர் இளங்கோ என்று சொல்வார்கள். சின்ன ராஜா என்று அதற்கு அர்த்தம். மந்திரிகளும் வேறு பெரியவர்களும் ...
மேலும் கதையை படிக்க...
(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "நான் கதை சொல்கிறேன்; கேட்கிறாயா?" என்ற சத்தம் கேட்டது. வண்டிக்காரச் செல்லாண்டி, யார் இப்படிக் கேட்கிறதென்று கவனித்தான். அவனுடைய வண்டிக் குதிரைதான் பேசுகிறது! "ஹும்" என்று சொல்லிவிட்டு அந்தக் ...
மேலும் கதையை படிக்க...
வழக்கம்போல அன்று தங்கவேலன் தன் எசமானர் குழந்தைகளைப் பக்கத்துத் தெருவில் இருந்த பள்ளிக் கூடத்துக்கு அழைத்துக் கொண்டுபோய்விட்டான். சரியாகப் பத்து மணிக்கு அவன் நாள்தோறும் சாமிநாத முதலியாருடைய- அவர்தாம் தங்கவேலனுடைய எசமானர் - அவருடைய ஏழு வயசுப் பையனையும் அவன் தங்கையையும் ...
மேலும் கதையை படிக்க...
மதுரையில் திடீரென்று பஞ்சம் வந்துவிட்டது. மழை பல காலமாகப் பெய்யவில்லை. பாண்டிய அரசன் பஞ்ச காலத்தில் உணவுப் பொருளைப் பகிர்ந்து கொடுக்க ஏற்பாடு செய்தான். அக்காலத்தில் அவன் மதுரையில் ஒரு தமிழ்ச் சங்கத்தை நடத்தி வந்தான். அதில் புலவர்கள் இருந்து தழிழாராய்ச்சி ...
மேலும் கதையை படிக்க...
"என்ன பளமை அடிச்சுக்கிட்டே இருக்கியே; நாளைக்கு ஆடிப் பதினெட்டு; கொமரீசுபரரை மறந்துட்தியா, புள்ளே? அரிசி, பருப்பு, காய் எல்லாம் வச்சிருக்கியா?" என்று கேட்டான் மாரப்பக் கவுண்டன். "இன்னிக்குத்தான் புதுமை பேசறியே. எல்லாத்தையும் பாக்குக் கடிக்கிற நேரத்திலே சேத்துடமாட்டேனா?" என்று பெருமிதத்துடன் கூறினாள் பழனியாயி. ...
மேலும் கதையை படிக்க...
"கல்யாணி, உனக்கு இன்னும் பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகவில்லையா? எவ்வளவு நாழிகை அப்படியே உட்கார்ந்திருப்பாய்? எப்போது குளிக்கிறது, எப்போது சாப்பிடுகிறது?" "இன்றைக்குத்தான் பள்ளிக்கூடம் இல்லையென்று சொன்னேனே, அம்மா. எங்கள் பழைய தலைமை ஆசிரியர் இறந்து போனார். அதற்காக விடுமுறை." "மனிதர்கள் தினமுந்தான் இறந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக ...
மேலும் கதையை படிக்க...
(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலை நேரம், பத்து மணி இருக்கும். திருக்கழுக்குன்றத்தில் சில மாதங்கள் தங்கலா மென்று ஒரு வீட்டை வாடகைக்குப் பேசி வந்து ஒரு வாரம் ஆயிற்று, கொஞ்சம் கொஞ்சமாகச் சாமான்களைச் சேர்த்துக்கொண்டிருந்தோம். ...
மேலும் கதையை படிக்க...
கிழவியின் தந்திரம்
சீத்தலைச் சாத்தனர்
ஜோடி மரப்பாச்சி
துறவரசர் இளங்கோவடிகள்
பஞ்ச கல்யாணிக் குதிரை
திருட்டுக் கை
உரை வகுத்த நக்கீரர்
புதிய வீடு
பெண் உரிமை
பாசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)