(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பல நூற்றாண்டுகட்கு முன்பு கருநாடக நாட்டிலே ஓர் அரசன் இருந்தான். அவன் முடிசூட்டப் பெற்ற பிறகு சிலகாலம் அரசாட்சியை நடத்திக்கொண்டிருந் தான். முற் பிறப்பில் செய்த நல்வினையின் மிகுதியி னாலே அவ்வரசனுடைய உள்ளம் அரசாட்சி செய்தலை வெறுத்தது. அவன் தன் மனைவியுடன் பெரியோர் களை அடைந்து அறிவு நூல்களைப் பயின்றான். அதனை நன்கு ஆராய்ந்தான்.
நாளாக நாளாக அரசனுடைய உள்ளம் அர சாட்சி செய்தலை அடியோடு வெறுத்தது. மறுமைக் குப் பயனற்ற இவ்வரசாட்சி வேலையை நாம் ஏன் செய்தல் வேண்டும்? இதனால் நமக்கு யாது பயன்? அரசாட்சியிலே செலவிடும் பொழுது வீண் பொழு தேயாகும். அந்தப் பொழுதை இறைவனை யெண்ணு வதிற் செலவிட்டால், எவ்வளவோ பயன் பெறலாமே, என்று எண்ணினான்.
வீடு, வாசல், மனைவி, தாய்தந்தையர் , அரசாட்சி, பொருட்செல்வம் எல்லாவற்றையும் ஒருங்கு துறந்தான். துறவிக்கோலம் பூண்டு வெளியே சென்றான். நகர மக்களும் அமைச்சர்களும் பிறரும் அரசனைத் தடுத்து நிறுத்தப் பார்த்தார்கள். யாருடைய சொல்லையும் அரசன் கேட்கவில்லை. பெரியோர்களை யடுத்து மேலும் அறிவு நூல்களைப் பயின்று இறுதி யிலே வீடுபேறடைந்தான்.
‘வீடுபெற நில்” (இ – ள்.) வீடு – வீடு பேற்றை , பெற – அடையும்படி, நில் – அதற்குரிய அறிவு வழியிலே நிற்பாயாக.
- கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955
தொடர்புடைய சிறுகதைகள்
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மதுரையிலே தருமசாமி என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். தகுந்தபடி அவனுக்குச் செல்வம் இருந்தது. கல்வி யறிவையும் அவன் நன்கு பெற்றிருந்தான். அவன் சிறுவனாக இருந்தபோது ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மணிபுரம் என்னும் ஊரிலே மாசாத்தன் என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அந்த மாசாத்தனுடைய வீட்டிற்கு அடுத்த வீட்டுக்காரனுடைய பெயர் ஆனையப்பன். ஆனையப்பனுக்கும் மாசாத்தனுக்கும் எப்பொழுது பார்த்தாலும் பகைமை மூண்டுகொண்டேயிருக்கும்.
ஆனையப்பன் ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நம்மை ஒருவர் புகழ்ந்துகொண்டு வருவார்க ளானால், நாமும் அவர்களைப் போற்றி ஆவன செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாமல் நம்மைப் புகழ்ந்து வருபவர்களை நாம் இகழ்ந்திருப்போமானால், அச்செயல் மக்கட்டன்மையுடன் பொருந்தியது ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இராமபிரான் அயோத்தியில் அரசாட்சி செய்து கொண்டிருக்குங் காலத்திலே ஓர் ஊரில் ஒரு பார்ப்பனன் இருந்தான். அவனுடைய மனைவி மிகவுங் கொடியவள். அவள் தான் சொன்னவாறே நடக்குமாறு தன் கணவனை ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சேயூர் என்னும் ஊரிலே இரண்டு சிறுவர்கள் நண்புடையவர்களாக விளங்கினார்கள். அவர்களில் ஒருவன் பெயர் செல்லையா. மற்றவன் பெயர் மாணிக்கவேல். செல்லையா முன் சினமும் மூர்க்கத்தன்மையும் உடையவன். சிலர் மாணிக்க ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முன்னாளிலே பாண்டூர் என்னும் ஊரிலே பல்லவ ராயன் என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அவன் நல்ல உடலாற்றல் அமையப்பெற்றவன். ஓரடி யிலே இரண்டு பேரை அவன் நிலத்திலே வீழ்த்தி ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஊங்கனூர் என்னும் ஊரிலே உலகப்பன் என்னும் பெயருடைய சிறுவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அகவை பதின்மூன்று. அவன் கண்ட உணவுகளை அளவு கடந்து உண்டுகொண்டிருந்தான். அதனால் அவனுடைய உடம்பு ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
துரியோதனனும், அவனுடைய உடன் பிறந்தவர்களும் மிகவும் கொடியவர்கள். எப்பொழுதும் பிற ருக்குத் தீமை புரிவதில் தான் அவர்களுக்கு நோக்கம். அந்தத் தீய குணத்தினால் அவர்கள் பலராலும், 'மிகப் பொல்லாதவர்கள்' ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒருநாள் ஓர் ஊருக்கு ஒரு பெரியவர் வந்தார். அவர் எல்லா ஆற்றல்களும் இனிது அமையப் பெற்றவர். அந்த ஊரிலே அருள் தங்கிய உள்ள முடையவர்கள் எத்தனை பேர் என்று ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கடற்கரை ஒன்றிலே ஒரு குன்று இருந்தது. அந்தக் குன்று கடலின் பக்கத்தில் சரிவாக இல்லாமல் நேர் செங்குத்தாக இருந்தது. அந்தப் பகுதியில் ஒரு பெரிய மரப்பெட்டி யொன்று கடல் ...
மேலும் கதையை படிக்க...
தருமசாமியும் சிறுவர்களும்
சூழ்ச்சி வீழ்ச்சியடைந்தது
இடுக்கணில் சிக்கிய இருவர்