ஆறறிவு கிளி

 

இயற்கை எழில் கொஞ்சும் எளிமையான கிராமம் அது. அதன் பெயர் கூடலூர். அங்கு மிகவும் ஏழ்மையான பலர் வாழ்ந்து வந்தனர்.

மிகவும் பசுமையான அவ்வூரில் எங்கு பார்த்தாலும் பச்சை தான். வயல்வெளிகள் பரந்து விரிந்து கிடந்தன. அருகில் ஒரு ஆறும் ஓடிக்கொண்டிருந்தது.

அந்த கிராமமக்கள் அதிக ஆசையில்லாமல் அமைதியாக கிடைத்தை வைத்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.

அக்கிராமத்தில் வசதி படைத்த ஒருவர் வாழ்ந்து கொண்டிருந்தார். அவருக்கு ராகவன் என்ற எட்டு வயது மகன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் நல்ல சிறுவன்.

ஒரு நாள் அவன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் சிறிய கிளையில் ஒரு கிளி வந்து அமர்வதை பார்த்தான்.

அவனுக்கு கிளி என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே அந்தக்கிளியை
பிடிக்கச்சென்றான். கிளியும் பறக்காமல் அமைதியாக இருந்தது. சிறுவன் ராகவன் கிளியின் மேல் சிறு காயம் இருப்பதால் அது பறக்கவில்லை என்பதை உணர்ந்துகொண்டான்.

ஆகவே அதனை வீட்டிற்கு எடுத்துசென்று காயம் ஆறும்வரை நல்லபடியாக பார்த்துக்கொண்டான். அவன் சொன்னதெல்லாம் அதற்கு புரிந்து அதன்படி நடந்தது.

அவனே நினைத்த போதும் கிளி அவனை விட்டு பிரிய விரும்பவில்லை. அவ்வாறு அந்தக்கிளி வீட்டில் இருப்பது அவன் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. ஆதலால் அவர்கள் ராகவனை மிரட்டினர்.

ராகவனோ அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஒரு நாள் ராகவனின் தந்தை கிளியை அனுப்பிவிடும்படி கூறி அவனை மிகவும் அடித்துவிட்டார். கிளி வீட்டிற்குள் எங்கேயும் செல்லக்கூடாது என்பதற்காக அதனை கூண்டிற்குள் அடைத்து வைத்து விட்டார்.

ராகவன் சிறிது நேரம் அழுது கொண்டிருந்தான். கிளிக்கு மிகவும் வேதனையாக இருந்தது. வெளியே செல்லலாம் என்றாலும் கூண்டில் வேறு அடைபட்டு இருந்தது.

அன்று இரவு கிளி மிகவும் சோகமாக இருந்தது. அப்பொழுது திடீரென திருடன் ஒருவன் வந்தான். அவனைப்பார்த்தாலே பயங்கரமாக இருந்தது. கிளி கீ கீ என மிகவும் சத்தமாக கத்ததுவங்கியது. ராகவனின் தந்தை எழுந்துவிட்டார். திருடனை பாய்ந்து பிடித்தார். அதற்குள் ராகவனும் எழுந்துவிட்டான்.

ராகவனின் தந்தை நடந்ததை கூறி, “இனி இந்த கிளி நம்முடனே இருக்கட்டும், எங்கும் செல்லவேண்டாம்”, என்றவராய் கிளியின் கூண்டை திறந்து விட்டார்.

கிளி, இனி நாம் இங்கிருந்தால் பின்னொரு நாள் மீண்டும் அடைபடுவோம் என்று உணர்ந்ததாய் வீட்டை விட்டு பறந்து சென்றது.

ராகவன் அழுதுகொண்டே சோகமாக நின்றான்.

- இந்து தமிழ்த்திசையின் “மாயா பஜார்” இதழில் வெளியானது, டிசம்பர் 2017 

தொடர்புடைய சிறுகதைகள்
"என்ன சொல்றீங்க? கொடுக்கற பணம் அஞ்சு வருஷத்துல அஞ்சு மடங்காகுமா? நம்பற மாதிரி இல்லையே! பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்தற மாதிரி சொல்லுங்கண்ணா" "சில விஷயங்கள நம்ப முடியாது தான். ஆனா இதுல நான் பணம் போட்டு இப்படி பணம் எடுத்திருக்கேனே தம்பி!" "அண்ணே.. ...
மேலும் கதையை படிக்க...
"ஏதோ.. நினைவுகள்.. கனவுகள்..." அமைதியான அந்த அதிகாலையிலே செல்போன் அழைத்தது.. 'யாரா இருக்கும்'.. என்று நினைத்தவாறே அட்டன் செய்தார் பிரதாபன். "ஹலோ.. நான் சேது பேசறேன்", என்ற குரலைக் கேட்டவருக்கு தூக்கி வாரிப்போட்டது. "டே.. எப்படிடா இருக்க?.. எங்க இருக்க..? எங்களையெல்லாம் மறந்துட்டியா? ஏன்டா.. ஊருக்கே ...
மேலும் கதையை படிக்க...
"அம்மா யாருமா இவங்க? இப்படி இருக்காங்க!" "ஓய்... சத்தம் போட்டுப் பேசாத.. அவங்க அசிங்கம்... அவங்களப்பத்தி பேசறோம்னு தெரிஞ்சா நம்மல அசிங்க அசிங்கமா திட்டுவாங்க.. அவங்க பக்கம் பார்க்காத?" "அப்ப அவங்க மனுஷங்க இல்லையாமா?", என்று கேட்ட விக்னேஷின் கேள்விக்கு, பதில் சொல்லத் திணறி, ...
மேலும் கதையை படிக்க...
"வாங்க சார்.. வாங்க சார்... வாங்க சார்"னு கூப்ட்டு கூப்ட்டு ஓஞ்ச சமயத்துல, "சரி சரி அடுத்த திங்கக்கிழம வரேனு" ஒத்துக்கிட்டாரு எங்க எம்டி.. எதுக்கு எங்க... அப்படீன்னு நான் சொல்றதுக்கு முன்னாடி எங்க எம்டியைப்பத்தி சொல்லீட்றேன்... ஒரே சிடு சிடுன்னு இருப்பாரு... யாருக்கிட்ட எப்ப ...
மேலும் கதையை படிக்க...
"கிருஸ்மஸ் கிருஸ்மஸ் வந்தாச்சு நியூடிரஸ் நியூடிரஸ் தச்சாச்சு பரிசுகள் கிடைக்கும் பட்சணம் கிடைக்கும் மனசுக்குள் சந்தோஷம் வந்தாச்சு நம்ம மனசுக்குள் சந்தோஷம் வந்தாச்சு ஹேப்பி ஹேப்பி கிருஸ்மஸ்! மேர்ரி மேர்ரி கிருஸ்மஸ்! ஹேப்பி ஹேப்பி கிருஸ்மஸ்! மேர்ரி மேர்ரி கிருஸ்மஸ்!" என்ற பாடல் சத்தமாக தனது மகிழ்ச்சியை பீட்டரின் வீட்டிற்குள் ஒலி பரப்பிப்கொண்டிருந்தது. கிருஸ்மஸ்ஸுக்கு இன்னும் ...
மேலும் கதையை படிக்க...
"அப்பா.. நான் கோழிக்கு பேர் வைக்கவா?" "கோழிக்குப் பேரா.. !!சண்டைக்கோழிக்கு வைப்பாங்க... ஆனா சாப்படற கோழிக்கு கூடவா வைப்பாங்க!" "என்னது சாப்படற கோழியா!?" "ம்.. அது ஒன்னும் இல்ல.. நீ எதோ பேர் வைக்கணும்னு சொன்னியே.. வச்சுக்க" "ம்.. சரிப்பா", என்று சொல்லிவிட்டு "சின்ட்ரெல்லா" "சின்ட்ரெல்லா" என ...
மேலும் கதையை படிக்க...
'இருளைக் கிழித்துக்கொண்டு திடீரெனத் தோன்றிய வெளிச்சம் வியப்பை ஏற்படுத்தியது..', இருந்தாலும் கண்டுகொள்ளாமல் எழுதிக் கொண்டே இருந்தான் அந்திவண்ணன். "மானிடா.. என்ன எழுதிக்கொண்டு இருக்கிறாய்...?" "வேறென்ன.. கதை தான்.." "இப்படி இரவு நேரத்தில் எழுதுகிறாயே.. உனக்கெல்லாம் பயமே இல்லையா?" "இப்படி இரவு நேரத்தில் கதை எழுதும் ஒருவனிடம் பேச்சுக் ...
மேலும் கதையை படிக்க...
"ஐயா! கும்புடுறேனுங்கோ!" "என்னய்யா ராமசாமி! என்ன திடீர்னு என்னை பாக்க வந்திருக்க.. ஏதாவது விஷேசமா?", என்றார் மீசையை முறுக்கியவாறே ஊரின் பெரிய மனிதரான ஜம்புலிங்கம். பக்கத்திலேயே அவரது வலதுகை கணேசு நின்று கொண்டிருந்தான். "விஷேசந்தாங்கையா, பொண்ணுக்கு இன்னும் பத்து நாள்ல கல்யாணம் வச்சிருக்கேனுங்க.. நீங்கதாய்யா ...
மேலும் கதையை படிக்க...
ஒரு பாழடைந்த ஓலைக்குடிசை வீடு.... வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு சிறிய வட்ட கிணறு... எட்டிப்பார்த்தால், முகம் கண்ணாடியில் தெரிவது போல தெளிவாக தெரியும்... குடிசையோரம் ஒரு தொத்தலான ஆடு கட்டப்பட்டிருந்தது. ஒரு உருவம் நடுங்கியவாறே குடிசைக்குள் நுழைந்தது. குடிசைக்கு வெளியே ஒரு பூனை, ...
மேலும் கதையை படிக்க...
சற்றுமுன் தான் மழை பெய்து ஓய்ந்திருந்தது. சாலையெங்கும் மேடு பள்ளம் முழுதும் நீர் தேங்கி நின்றது... அப்போது தான் வேலைக்குச் செல்வோர் கையில் குடையுடன் கடிகாரத்தில் நேரம் பார்த்தபடி, சாலையோர விரோதிகளுக்கு பயந்து பயந்து நடக்க ஆரம்பித்தனர். அவர்களது பயப்படுதல் தெரிந்தே, ...
மேலும் கதையை படிக்க...
நம்பிக்கை – ஒரு பக்க கதை
அர்ப்பணிப்பு – ஒரு பக்க கதை
யாருமா இவங்க?
ரசவாதி
வ‌ருவாரா மாட்டாரா?
சின்ட்ரெல்லாவின் முத்தம்
முடிவை மாற்று…
பெரியமனுசத்தனம்
பாழடைந்த கிணறு
உடைந்த வானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)