அறிஞரும் இளம்பூதனும்

 

(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் ஊரிலே இளம்பூதன் என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அவன் சில நூல்களைப் படித் துணர்ந்திருந்தான். ஆயினும் அதற்குத் தகுந்தபடி யாக அவன் ஒழுக்கத்தை மேற்கொள்ளவில்லை. தீய வர்களுடன் சேர்ந்து தீயவனாகி நின்றான். அவனிட மிருந்த சில நல்லியல்புகளும் மறைந்துவிட்டன.

இளம்பூதன் தீயவர்களுடன் சேர்ந்து கொண்டு சீட்டாடுதலையும் புகைப் பிடித்தலையும் மற்றும் பல இழிவான செயல்களைப் புரிதலையும் ஒரு பெரியவர் கண்டார்; அவர் அவனைத் தனியே அழைத்து, ”உன் னுடைய முகத்தைப் பார்த்தால் அருள்வழிகிறது. மிகப் பெரியவனாகக் கூடிய அறிகுறிகள் உன்னிடம் காணப் பெறுகின்றன. அவ்வாறாக நீ சிறியவர்கள் ளுடன் சேர்ந்துகொண்டு இழிதொழிலைப் புரிகிறாயே! இது நினக்குத் தகுமா? நீ தீச்செயல்களை யெல்லாம் விட்டுவிட்டு நல்லவனாக இருப்பாயானால் பிற்காலத்தில் மிகவுஞ் சிறந்து விளங்குவாய்,” என்று அறிவுரைகள் கூறினார்.

பெரியவர் கூறிய அறிவுரையைக் கேட்ட இளம் பூதன் திருந்தினான். அப்பெரியவர் நம்முடைய நன்மையின் பொருட்டே அவ்வாறு சொல்லுகிறார் என்று உணர்ந்தான். பெரியோர்களையே அடுத்துப் பழகத் தொடங்கினான். நாளடைவில் இளம்பூதன் நல்லவனாகி இறுதியிற் சிறந்த மனிதர்களுள் ஒருவனா னான். ஒவ்வொருவரும் நல்லவர்களாக இருத்தற்கு முயல வேண்டியது கட்டாயமாகும்.

“உத்தம னாயிரு” (இ – ள்.) உத்தமனாய் -உயர்ந்த குணமுடையவனாகி, இரு – வாழ்ந்திரு.

- கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955 

தொடர்புடைய சிறுகதைகள்
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குன்றை என்னும் ஊரிலே உண்மையறிவின்ப அடி கள் என்னும் துறவி ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு உறைந்திருந்தார். அவர் துறவிக்கோலத்தை மேற்கொண்டிருந்தாராயினும் மெய் வாய் கண் மூக்குச் செவி ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மாபெரும் புலவராகிய மீனாட்சிசுந்தரம்பிள்ளை. ஒருநாள் தம் மாணவர் பலரோடு வழிநடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ஒரு கிழ மனி தன் மூட்டையோடு வந்து கொண்டிருந்தான். அந்தக் கிழவன் ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருக்குடந்தை என்னும் ஊரிலே செம்மையப்பன் என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அகவை இருபத்திரண்டுக்குமேல் ஆயிற்று. ஆயினும், அவன் எத்தகைய தொழிலிலும் ஊக்கமற்றவனாக இருந்தான். தெருத்தெருவாகச் சுற்றிக் கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு முனிவர் காட்டிலே தவஞ்செய்து கொண் டிருந்தார். அவர் மிகுந்த மன உறுதியுள்ளவர். தவத் தினால் எத்தகைய காரியத்தையும் எளிதாகச் செய்யக் கூடிய ஆற்றலுடையவர். அவர் ஒருமுறை காட்டை ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முன்னாளில் தமிழ்நாட்டிலே ஒரு பெண்ணா அரசாட்சி செய்து கொண்டிருந்தாள். அவள் மிகவு கண்டிப்பானவள். அவள் தன்னுடைய உடன் பி, தான் ஒருவனை உயரிய அதிகாரத்திலே அமர்த் யிருந்தாள். அவன் ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இரண்டு மன்னர்களுக்குள் பகையுண்டாயிற்று. இருவரிடமும் படைப்பலமும், பொருட்பலமும் மிகுதியாக இருந்தன. அவர்கள் போரிட்டு ஒருவரையொரு வர் தொலைத்து விடவேண்டும் என்று உறுதி பூண்டு நின்றார்கள். இருவரும் ஒரே குலத்தைச் ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பெரும்பூதூர் என்னும் ஊரிலே உடையவர் என்று பெயருடையவர் ஒருவர் முன்னாளில் இருந்தார். அவர் பேரறிவும் நல்லொழுக்கமும் அமையப் பெற்றவராக இருந்தார். மறை முதலிய நூல்களை ஓதியுணர்ந்தமையின், அவர் திருந்திய ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பல நூற்றாண்டுகட்கு முன்பு கருநாடக நாட்டிலே ஓர் அரசன் இருந்தான். அவன் முடிசூட்டப் பெற்ற பிறகு சிலகாலம் அரசாட்சியை நடத்திக்கொண்டிருந் தான். முற் பிறப்பில் செய்த நல்வினையின் மிகுதியி ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஓர் உயர்நிலைப் பள்ளியிலே கண்ணபிரான் என் னும் பெயருடைய ஓர் இளைஞன் படித்துக்கொண்டிருந் தான். அவன் தற்புகழ்ச்சியிலே மிகுந்த விருப்பம் உள்ளவன். பள்ளிக்கூடத் தேர்வு நெருங்கியது; மற் றைய ...
மேலும் கதையை படிக்க...
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நம்மை ஒருவர் புகழ்ந்துகொண்டு வருவார்க ளானால், நாமும் அவர்களைப் போற்றி ஆவன செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாமல் நம்மைப் புகழ்ந்து வருபவர்களை நாம் இகழ்ந்திருப்போமானால், அச்செயல் மக்கட்டன்மையுடன் பொருந்தியது ...
மேலும் கதையை படிக்க...
பழங்கறி இன்ப அடிகள்
அறிஞரின் பழமை நட்பு
சோம்பலால் நேர்ந்த துன்பம்
காட்டு முனிவரும் வீட்டு முனிவரும்
அறநெறி தவறாத அரசி
புலவரால் ஒழிந்த போர்
பெரும்பூதூர் உடையவர்
துறவியான மன்னன்
தற்புகழ்ச்சி கொண்ட கண்ணபிரான்
ஒளவையாரும் அறிவிலியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)