வில்பத்து தேசிய பூங்கா (“குளங்களின் நிலம்”) இலங்கையில் உள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இந்த பூங்காவின் தனித்துவமான அம்சம் இயற்கையான்குளங்கள் – இயற்கையான, மணல்-விளிம்பு நீர்ப் படுகைகள் அல்லது மழைநீரால் நிரம்பிய பள்ளங்கள். இலங்கையின் வடமேற்கு கரையோர தாழ்நில உலர் வலயத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா அனுராதபுரத்திற்கு மேற்கே 30 கிமீ ,மற்றும் புத்தளத்திற்கு வடக்கே 26 கிமீ , கொழும்பிற்கு வடக்கே சுமார் 180 கிமீ அமைந்துள்ளது. இந்த பூங்கா131,693 ஹெக்டேர்) பரப்பளவில் உள்ளது மற்றும் கடல் மட்டத்திலிருந்து 0–152 மீ வரை உள்ளது. ஏறக்குறைய நூற்று ஆறு ஏரிகள்) மற்றும் குளங்கள் வில்பத்து முழுவதும் பரவிக் காணப்படுகின்றன. வில்பத்து இலங்கையின் மிகப் பெரிய தேசிய பூங்காக்களில் ஒன்றாகும்.
வ பூங்காவில் தான் குவேனி என்ற இயக்க இனத்தை சேர்ந்த ராணியின் மாளிகை இருந்ததாகவும் அவளை விஜயன் முதலில் திருமணம் செய்ததாக் மகாவம்சம் என்ற வரலாற்று நூல் சொல்கிறது. அது எவ்வளவு உண்மை என்பது தெரியாது
இந்தக் வில்பத்து பூங்காவில்ஆயிரக் கணக்கான மான்கள் இருந்தன அந்த மான்களில் ஒரு வெள்ளை பெண் மான் மட்டுமே இருந்தது .அந்த மானுக்கு தான் வெள்ளை நிறம் என்ற கர்வம் ஏற்பட்டது. அது மற்ற மான்களுடன் புல் மேயப் போவதில்லை, தனியாகச் சென்று குளத்தில் தண்ணீர் குடிக்கும், புல் மேயும்
அதைக் கண்ட நரி யோசித்தது இதுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று. அந்த காட்டில் ஒரு கருமை நிறமுள்ள நீண்ட கூர்மையான கொம்புகளை கொண்ட ஆண் மான் ஓன்று இருந்தது. அந்தமான் எல்லாம் மான்களுடனும் சேர்ந்து பழகியது அவர்களுக்கு ஆபத்து என்று வந்தால் தன்னுடைய கொம்புகளை பாவிக்து எதிரிகளை துரத்தி அந்த மான்களை காப்பாற்றியது, அந்த மானை கார்மான் என்று எல்லா மான்களும் அழைத்தனர்.
கார்மானுக்கு வெள்ளை மான் மீது காதல். அவளுடன் பேசுவதற்கு எத்தனையோ தடவை அந்த தெண்டித்தும் முடியவில்லை. கார்மானைக் கண்டவுடனத வெள்ளச்சி ஓடிவிடும், “எனக்கு என்ன பேச்சு வேண்டி இருக்கு கருமை நிறம் உள்ள மாடன் என்று சிந்தித்தது அந்த வெள்ளை நிற மான்.
கார்மான் என்ற கருமை நிற மான் – வெள்ளச்சி மேல்உள்ள தன் காதலை பற்றி நரி மாமாவுக்கு சொல்லி கவலைப்பட்டது
அதுக்கு நரி மாமா சொல்லிச்சு “இங்கை பார் கார்மான், நானும் வெள்ளச்சியை கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அவள் திமிர் ர்பிடித்தவள் மற்ற மான்களுடன் பேச மாட்டாள், அவளுக்குத் தான் வெளளை நிறம் என்ற ஒரு கர்வம் இருக்கிறது. அதனால் தான் உன்னை அவள் உதாசீனப்படுத்துகிறாள் .”
“அதற்கு நீங்கள்தான் மாமா என் காதலுக்கு உதவ வேண்டும்” என்று கார்மான் சொல்லிற்று.
“நீ நல்லவன். நிட்சயம் உனக்கு உதவுகிறேன் அவளுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும்” என்று சொன்னது நரி மாமா.
இதைப்பற்றி நரி மாமா தன் நண்பன் கஜன் என்ற பெரிய யானையுடன் கலந்து ஆலோசித்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டார்கள்.
“வெள்ளச்சி எங்களுடன் சேர்ந்து வாழ வமாட்டாள், அவளுக்கு ஒரு ஆபத்து என்று வந்தால் ஒருத்தரும் உதவ மாட்டார்கள்” என்று ஒரு மான், நரி மாமாவுக்கு சொல்லிச்சு.
”அதுதான் நானும் யோசிக்கிறேன் இதை அவளுக்கு உணர வைக்க வேண்டும்“ என்று நிறைய மாமா சொல்லிச்சு.
நரி மாமா அங்குள்ள ஒரு கஜன் யானையுடன் கலந்து ஆலோசித்தது.
“யானையாரே யானையாரே உங்களுக்கு ஒன்று தெரியுமா?” என்று கேட்ட நரி மாமா.
“ஏன் தெரியாது அவள் வெள்ளச்சி என்ற கரர்வும் படைத்தவள் இந்த காட்டில் தன மட்டும் தான் வெள்ளை என்ற எண்ணம் அவளுக்கு தெரியாதா.
எத்தனையோ வெள்ளை நிறக் கொக்குகள் அந்த குளத்தில் இருக்கின்றனவே அவை அழகாக இருக்கின்றன. அவைக்கு திமிர் இல்லை.
இவளுக்கு ஏனிந்த புத்தியோ தெரியாது?” என்று கவலைப்பட்டது யானை
ஒருநாள் வெள்ளிச்சி தனித்துப் போய் சேறு நிறைந்த குட்டை ஒன்றில் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தது.
அது தெரியாது குட்டையில் இருந்த முதலை ஓன்று அந்தமானை தன் இரையாக்க சந்தர்ப்பம் வரும்வரை கவனித்துக் கொண்டே இருந்தது.
அப்போது அங்கு வந்த நரி மாமா கஜன் என்ற யானையயின் காதுக்குள் ஒரு ரகசியம் சொல்லிற்று, அதை கேட்டதும் அதுதான் சமயம் வெள்ளிச்சிக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று யானை பெரிய சத்தம் போட்டு இரு தடவைகள் பிளிறியது அந்த சத்தம் கேட்டு பயத்தில் குளத்துக்குள் வெள்ளிச்சி போய் விழுந்தது, அதனால் சேறு முழுவதும் தன் உடல் முழுவதும் பூசிக் கொண்டது.
அந்த சந்தர்ப்பத்தை கண்ட முதலை அந்த மானைப் பிடிக்க முயன்றது.
அதைக் கண்ட நரி மாமமா “ஐயோ பாவம் வெள்ளிச்சி சாகப் போகிறாள், இதுதான் சந்தர்ப்பம். அவளுக்கு ஒரு பாடம் படிப்பிக்க” என்று சொல்லி “யானையாரே உடனே அந்த வெள்ளிச்சியை முதலையின் பிடியில் இருந்து உமது தும்பிக்கையை நீட்டி காப்பாற்றும்” என்றது.
நரி மாமா சொன்னதை கேட்ட யானை தன் தும்பிக்கையை நீட்டி அந்தக் வெள்ளிச்சியை முதலையின் பிடியில் இருந்து காப்பாற்றியது. பார்த்துக் கொண்டிருந்த் கார்மான் முதலையை தன் கூரிய கொம்பினால் குத்தி துரத்தியது
உயிர் தப்பிய வெள்ளிச்சி கார்மான், நரி மாமா, யானை ஆகியோரிடம் நன்றி தெரிவித்தது சொன்னது “நீங்கள் இல்லாவிட்டால் என்னை அந்த முதலை கொன்று இருக்கும்”
“இப்போது உனக்கு புரிகிறதா நீ தனித்து வாழ முடியாது என்று. உனக்கு ஆபத்தில் உதவுவது உன் நண்பர்கள். உன்னுடைய நிறத்தை குட்டையின் நீரில் பார்” என்றது கார்மான்.
தன்னை குட்டையின் நீரில் பார்த்து விட்டு.
“ஐயோ நான் கருப்பு நிறமாய் மாறிவிட்டேனே” என்று கவலை பட்டது வெள்ளிச்சி என்ற வெள்ளை மான்.
“உன் மனம் வெள்ளை நிறமாக இருக்க வேண்டும் என்பதை நீ உணர்ந்து சேர்ந்து வாழ பழகு” என்றது கார்மான்.
அதைக்கேட்டதும் பீரிட்டு சத்தம் போட்டபடி ஆமோதித்தது யானை.
அதன் தவறை உணர்ந்த வெள்ளிச்சி என்ற மான் அதன்பின் கார்மானுடமும் மற்றைய மான்களுடனும் சேர்ந்து பழகத் தொடங்கியது.