விகருணன் நல்லவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2022
பார்வையிட்டோர்: 1,592 
 
 

(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

துரியோதனனும், அவனுடைய உடன் பிறந்தவர்களும் மிகவும் கொடியவர்கள். எப்பொழுதும் பிற ருக்குத் தீமை புரிவதில் தான் அவர்களுக்கு நோக்கம். அந்தத் தீய குணத்தினால் அவர்கள் பலராலும், ‘மிகப் பொல்லாதவர்கள்’ என்று பழித்துரைக்கப்பட்டனர். துரியோதனனுடைய பெயரையும், அவனுடைய தம் பியர்கள் பெயரையும் கேட்ட அளவில் தானே மக்கள் அனைவரும் மிகுந்த வெறுப்படைவார்கள். அந்தப் பொல்லாதவர்களுடைய கூட்டத்திலே நல்லவன் ஒரு வன் இருந்தான். அவனுடைய பெயர் விகருணன்.

விகருணனிடத்திலே மட்டும் எத்தகைய தீய குணங்களும் இல்லை. தன்னுடைய அண்ணன் முதலிய உடன் பிறந்தவர் செய்பவைகளெல்லாம் மிகவும் இழி வானவை என்று நன்கு உணர்ந்திருந்தான். பல சமயங்களில் தன் உடன் பிறந்தார்களுக்கு அறவுரை களும் பல கூறினான். ஆனால், அவைகளை, அவனுடைய உடன்பிறந்தார்கள் சிறிதுங் கேட்காமல், விகருணனையே இகழ்ந்துரைத்தார்கள்.

விகருணனுக்கு அவன் உடன் பிறந்தவர்களால் சிறப்பேற்படவில்லை. எனினும் பிற பெரியோர்கள் அனைவரும் விகருணனுடைய நல்லியல்பைப் பெரிதும் பாராட்டினார்கள். விகருணனுக்கு ‘நல்லவன்’ என்று பெயர் கொடுத்தார்கள். கொடியவர்களுடன் பிறந்திருந்தும் விகருணன் நல்லவனாக விளங்கியதை உலகினர் இன்றும் புகழ்ந்து கொண்டாடுகிறார்கள். ஆதலின் ஒவ்வொருவரும் நல்லவர்களாக இவ்வுலகில் இருக்கவேண்டியது இன்றியமையாததாகும்.

“தக்கோன் எனத்திரி” (இ-ள்) தக்கோன் என – பெரியோர்கள் உன்னை நல்லவா னென்று கூறுமாறு; திரி – நடந்து கொள்வாயாக.

– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *