வானவில்லே கரையாதே…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 28, 2024
பார்வையிட்டோர்: 270 
 
 

அது ஒரு அழகிய ஆற்றங்கரைப் பிரதேசம்;@ அந்த ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரிக்கும் போதெல்லாம் சிறிதும் பெரிதுமாய் வானவில் தோன்றும். அவ்வாறு தோன்றும் வானவில் ஆற்றின் கரை ஓரமாக நடைபயிற்சி மேற்கொள்ளும். நதியா@ எட்டு வயது சிறும்p@ அவளின் வீடும் அந்தப் பிரதேசத்தில்தான் இருந்தது. அவளும் வானவில்லோடு சேர்ந்து நடப்பாள். வானவில்லும் அவளும் நல்ல நண்பர்கள்@ இருவரும் ஊர் கதைகளைப் பேசியபடி நடப்பார்கள். வானவில்லிடம் ஒரு பழக்கம் இருந்தது. எதிரே யாராவது வந்து அதனிடம் நிறத்தைக் கேட்டால் உடனடியாகத் தந்து விடும். இதனால் அது வேகமாகக் கரைந்தும் போய் விடும். நதியாவிற்கு இது பிடிக்காது@ அவள் வானவில்லுடன் நீண்ட தூரம் நடக்க ஆசைப்படுவாள்.

அன்றைக்கும் ஒரு வானவில் வந்தது. நதியா அதனுடன் சேர்ந்து நடந்தாள். அப்போது கிளி ஒன்று எதிர்பட்டது. அதன் மூக்கு பச்சை நிறத்தில் இருந்தது. அது வானவில்லிடம் “என்னோட உடம்பு முழுக்க பச்சை நிறமா இருக்குறப்பம் மூக்கும் பச்சையா இருந்தா நல்லாவா இருக்கும்? எனக்கு சிவப்பு நிறம் கொடேன் வானவில்லே?” – என்றது. வானவில்லும் தன்னிடம் இருந்த சிவப்பு நிறத்தை தந்தது. கோவைப்பழம் போன்ற சிவந்த மூக்கைப் பெற்றுக் கொண்ட கிளி மகிழ்ச்சியுடன் வானவி;ல்லுக்கு நன்றி சொல்லி விட்டுப் போனது. அடுத்ததாக சிறிது தூரத்தில் சாம்பல் வண்ண புறா ஒன்று எதிர்பட்டது. அது வானவில்லிடம் “நான் சாம்பல் நிறத்துல இருக்கேன்! என்னோட சிறகுகளின் நுனிகள்ல்ல பொன்நிற வரிகள் இழையோடுனா நல்லா இருக்கும்!; அதே மாதிரி கழுத்துக்கு மஞ்சள் நிற வளையமும் இருந்தா நல்லா இருக்கும்!” – என்றது. தன்னிடம் இருந்த மஞ்சள் நிறத்தைத் தந்து புறாவை அழகாகியது வானவில்@ அதுவும் வானவில்லுக்கு நன்றி சொல்லி விட்டுப் போனது.

இப்போது வானவில் பாதி கரைந்திருந்தது. நதியா அதனிடம் “இப்படி கேட்டவுடனே நீ நிறத்தைத் தர்றதுனால சீக்கிரமா கரைஞ்சு போயிற! என்னால தர முடியாதுனு சொல்லலாமே? நான் உன்கூட நீண்ட தூரம் நடக்கனும் நிறையப் பேசனும்னு ஆசைப்படுறேன்! ஆனா ஒவ்வொரு முறையும் நம்ம பயணம் பாதிலயே முடிஞ்சிருது!” – என்றாள். வானவில் சிரித்தது. “கொடுக்குறது நல்ல விஷயுந்தான! நம்மகிட்ட இருக்குறதுனாலதான கேக்குறாங்க! நான் கொடுக்குறேன்!” – என்றது. அவர்கள் தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது மேலும் சில பறவைகள் எதிர்பட்டன. அவைகள் கேட்ட நிறத்தையும் வானவில் தந்தது. இப்போது அது கிட்டத்தட்ட முக்கால்வாசி கரைந்து போயிருந்தது.

“கொடுக்குறது நல்ல விஷயந்தான்! அதுகாக முழுசா கரைஞ்சு போற அளவுக்கு கொடுக்கனுமா?” – நதியா கேட்டாள்.

“நான் முழுசா கரைஞ்சு போனா என்ன?; திரும்பி வரத்தானே செய்யுறேன்!” – என்றது வானவில்@ நதியா அமைதியாக இருந்தாள். வானவில் தொடர்ந்து பேசியது.

“பூக்கள் வண்டுகளுக்குத் தேன் கொடுக்குது! பதிலுக்கு வண்டுகள் பூக்களோட மகரந்தச் சேர்க்கைக்கு உதவுது! மரங்கள் பறவைகளுக்கு கனிகள் தருது! பதிலுக்கு அந்தப் பறவைகளோட எச்சம் மரத்துக்கு உரமா பயன்படுது! கடல்நீர் மேகமா மாறி நிலத்துக்கு தண்ணீர் தருது! நிலம் நதிகளை உருவாக்கி கடலுக்குத் தண்ண்pPர் தருது! பிறருக்கு உதவனும்ங்குற நல்ல சிந்தனை இருந்தா போதும்! அப்படி உதவுறதுக்கு தேவையான வலிமையும் வாய்ப்புகளும் நம்மைத் தேடி வரும்! ஓவ்வொரு முறையும் மறைஞ்சாலும் திரும்பத் திரும்ப அதே புத்துணர்ச்சியோட வர்ற நான் அதுக்கு ஒரு உதாரணம்!” – என்றது வானவில்@

இப்போது வானவில்லின் ஒரு சிறுபகுதிதான் எஞ்சியிருந்தது. அது சொன்னது. “அடுத்த முறை வரும்போது நான் பெருசா அடர்த்தியான வானவில்லா வர்றேன்! அப்ப நீ ஆசைப்பட்ட மாதிரி நாம ரொம்ப தூரம் நடக்கலாம்! நிறையா பேசலாம் சரியா?” – என்று நதியாவை சமாதானப்படுத்தியது. அவள் ‘சரி’ என்றாள் நடந்து செல்லும் போது மழை வந்தால் பிடித்துக் கொள்ள வசதியாக அவள் குடை ஒன்று வைத்திருந்தாள்@ கறுப்புநிறக் குடை@ அது இப்போது பச்சை நிறத்திற்கு மாறியது. வானவில்லின் வேலைதான்@ வானவில் இப்போது முற்றிலுமாக மறைந்து போய் விட்டது. நதியா குடையை விரித்தாள். அவள் போட்டிருந்த மஞ்சள்நிற ஃபிராக்கிற்கு பச்சைவண்ணக் குடை நல்ல முரண் பொருத்தமாக இருந்தது. அவள் வீடு நோக்கித் திரும்பி நடக்கத் துவங்கினாள்.

எனது பெயர் மா.பிரபாகரன். மதுரையில் வசித்து வருகிறேன் சித்த மருத்துவத்தில் பி.எஸ்.எம்.எஸ் இளங்கலைப் பட்டம் பெற்றவன்@ அரசு மருத்துவர். கடந்த ஆறு ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தின் மாவட்ட சித்த மருத்துவ அலுவலராகப் பணியாற்றி ஜீலை - 2024 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். பெரியவர்களுக்கான எனது படைப்புகள் தினமணிகதிரில் பல வெளிவந்துள்ளன. சிறுவர்களுக்கான எனது முதல் படைப்பு சிறுவர்மணியில் 2006 ஆம் ஆண்டு வெளியானது. எனது சிறுவர் சிறுகதைகள் குழந்தை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *