ஒரு அடர்த்தியான காட்டில் முன்று மரங்கள் சிறந்த நண்பர்களாக இருந்தன. இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு கனவு இருந்தன.
முதல் மரம் தன் கனவை தன் நண்பர்களிடம் சொன்னது, ” நான் ஒரு மாணிக்க பேழையாக மாறவெண்டும் என்பதே என் கனவு, என்னுள் அரசர்கள் தங்கள் வைரம், முத்து, மாணிக்கம் போன்ற விலைமதிக்கமுடியாத செல்வங்களை வைக்கவேண்டும், நான் அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்”
இரண்டாவது மரம் தன் கனவை சொல்ல ஆரம்பித்தது, ” நான் ஒரு மிக பெரிய போர் கப்பல் ஆக வேண்டும், நான் அரசர்களையும், மாமன்னர்களையும் சுமக்க வேண்டும், பலத்த புயல், கொடும் காற்று போன்ற எதுவாக இருந்தாலும், அவ்ர்கள் என்னில் பத்திரமாக பயணம் செய்ய வேண்டும்”என்ற தன் கனவை முடித்ததும்
மூன்றாவது மரம் சொன்னது “நான் நீண்டு உயர்ந்து வளர்ந்து மிக பெரிய மரமாவேன், அப்போது என்னை காணும் மக்கள் எல்லாம் வானையும், கடவுளையும் பார்த்து, நான் அவர்களுக்கு எவ்வளவு நெருங்கி விட்டேன் என்றும், எக்காலமும் நானே உலகின் சிறந்தமரம் என்றும் கூறவேன்டும்” என்று கூறியது…
பல வருடங்களாக தன் கனவு மேல் கொண்ட தவங்களுக்கு பிறகு, ஒரு நாள் சில மரவெட்டிகள் அந்த காட்டிற்க்கு வந்தனர். அவர்களில் ஒருவன் முதல் மரத்திடம் வந்து, ” நான் இதை வெட்டி ஒரு தச்சனிடம் விலைக்கு கொடுப்பேன்” என்று கூறினான், இதை கேட்ட அந்த முதல் மரம் தான் மாணிக்க பேழையாக போவதாக நினைத்து மகிழ்ந்தது.
இரண்டாவது மரத்திடம் வந்த மரவெட்டி அதன் உறுதியை பார்த்து, “நான் இதை வெட்டி துறைமுகத்தில் விற்பேன்” என்றான். இதை கேட்ட மரம் தான் ஒரு மிக பெரிய போர் கப்பலாக போவதாக எண்ணி மகிழ்ந்தது.
மற்றொரு மரவெட்டி மூன்றாவது மரத்திடம் வந்ததும் அது பயந்தது, அது வெட்டபட்டால் அதன் கனவுகள் அழித்து போகும் என நினைத்தது. அவன் அம்மரத்தை பார்த்து “நான் இம்மரத்திடம் பெரியதாக எதுவும் எதிர் பார்க்கவில்லை, இருப்பினும் இதை நான் வெட்டி கொண்டு செல்லுவேன்” என்றான்.
முதல் மரம் தச்சனிடம் வந்தபோது, அவன் அதை ஒரு வைக்கோல் பெட்டியாக செய்தான், மாணிக்க பேழையாக வேண்டிய தன் கனவு ஒரு வைக்கோல் பெட்டியாக ஆகிபோனதை நினைத்து அது வருந்தியது.
போர் கப்பல் கனவுடன் துறைமுகம் நுழைந்த இரண்டாவது மரம் ஒரு மீன்பிடி படகாக செய்யபட்டது.
மூன்றாவது மரம் பெரிய பாளங்களாக வெட்டி ஒரு இருட்டறையில் இடப்பட்டது.
காலம், அவர்களது கனவுகளை மறக்கவைத்தது.
ஒரு கொடுங்குளிர் இரவில், ஒரு தம்பதியர் ஒரு மாட்டு தொழுவத்திற்க்கு வந்தனர், பெண்மணி ஒரு அழகான குழந்தையை பெற்றெடுத்தார்.. அவர்கள் அந்த குழந்தையை முதல் மரத்தில் இருந்த செய்த வைக்கோல் பெட்டியில் வைத்தனர், அந்த மரம் அப்போது தான் உணர்ந்தது தான் உலகின் விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தை தாங்கி பாதுகாத்திருப்பதை.
சில வருடஙளுக்கு பிறகு சிலர் இரண்டாவது மரத்தில் இருந்து செய்யப்பட்ட மீன்பிடி படகில் எறினர். படகு நடு கடலில் செல்லுகையில், பெரும் புயல் வீச துவங்கியது. அந்த மரம் படகில் உள்ளவர்களை பத்திரமாக கரை சேர்ப்பதை பற்றி கவலை கொண்ட பொழுது , படகில் இருந்தவர்கள் அங்கு அமைதியாக தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை எழுப்பினர்., அவர் எழுந்து “அமைதி” என்றதும் புயல் அடங்கியது.
அந்த நேரத்தில் இரண்டாவது மரம் தான், அரசர்களின் அரசரை சுமந்ததை குறித்து மகிழ்ந்தது.
கடைசியாக, அந்த மூன்றாவது மரம் இருட்டறையில் இருந்த எடுத்து செல்லபட்டது. அது ஒரு மாமனிதரால் சுமந்து செல்லப்பட்டது, மக்கள் அதை சுமந்தவரை நிந்தித்தனர்.
அவரை அம்மரத்தில் ஆணியால் அறைந்து மலை உச்சியில் நட்டு வைத்தனர். ஞாயிறு வந்தபோது வாண்ணளவு உயர்ந்து கடவுளின் அருகில் மிக நெருக்கமாக இருந்ததை நினைத்து மகிழ்ந்தது, எனென்றால் அந்த மரத்தை சுமந்து, பின்னர்அதில் அறையப்பட்டவர் தான் தேவமைந்தன் இயேசு கிறிஸ்து……