(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
செல்வி தன் வீட்டின் பின்புறமாய் இருந்த பழத் தோட்டத்தில் கண்களைப் பதித்து அங்கே இங்கே திரும்பா மல் ஒரே இடத்தைப் பார்த்திருந்தாள். சுமார் ஒரு மணி நேரமாக அவள் அங்கே உட்கார்ந்திருத்கிறாள். முகம் அழுத தால் வீங்கி இருந்தது. கண்கள் கூட சிவந்திருந்தன.
கொஞ்சமாவது அவள் சிரிக்க மாட்டாளா என்று அவ ளது பாட்டி எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
காலைச் சூரியன் இப்போது கொஞ்சம் கடுமையாய் பயணிக்கத் தொடங்கிவிட்டான். கொஞ்சம் கொஞ்சமாய் உஷ்ணம் அதிகமாகியது. அவன் காலடியில் கொஞ்சமாய்த் தெரிந்த வெயில் இப்போது முகத்தைத் தொட ஆரம்பித்தது . சற்று உள்ளே போய் உட்கார்ந்து மறுபடியும் அந்தக் காட்சி யில் கண்கனைப் பதித்தாள்.
அவளின் கண்களில் சிறு மலர்ச்சி; முகத்தில் கொஞ்சம் தெளிவு பாட்டி சன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். ஒரு சிக்குமரத்தின் கீழே சின்னஞ்சிறு பறவை ஒன்று தனது சின்னஞ்சிறு சிறகுகளை விரித்து எழும்பி எழும்பி மணலில் விழந்து தவழ்ந்து கொண்டிருந்தது. அதன் அருகே இரண்டு பெரிய பறவைகள் உட்கார்ந்து, அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன. மணல் சூடுபிடிக்கத் தொடங்கியது. அந்தச் சிறுபறவையின் நடவடிக்கையில் கொஞ்சம் மாறுதல் தெரிந் தது.
பலதடவைகள் விழுந்து எழுந்த நிலைமாறி இப்போது ஓரளவு பறக்க அது தயாரானது. தரையில் கிடந்த அது ஒரே தாவலில் வேலிக் கம்பியில் ஏறி உட்கார்ந்தது. அதன் தாயும் தந்தையும் கூடவே பறந்து அதன் அருகே அமர்ந்தன. சில வினாடிகள் தான். அந்தச் சின்னப் பறவை விருட்டென்று பறந்து மரத்தில் போய் உட்கார்ந்து கொண்டது. மற்ற இரண்டும் அது உட்கார்ந்த இடத்தில் போய் உட்கார்ந்து க்ரீச் க்ரீச் என்று கத்தி ஆர்ப்பாட்டம் ஆரவாரம் செய்தன.
செல்வி நீண்ட பெருமூச்சு விட்டாள். ஏதோ ஒரு பெரிய சுமை தன்னைவிட்டு இறங்கிய உணர்வில் எழுந்து வாச லுக்கு வந்தாள். எதிர்வீட்டு வாசலில் அவள் கண்கள் பதிந்தன.
அந்த வீட்டுக் குழந்தை தர்ஷினி தன் பிஞ்சுக்கால்களால் நடக்க ஆரம்பித்திருந்தது. இரண்டடி நடப்பதும் கீழே விழுவ தும் அப்புறம் எழுந்து நடப்பதும் விழுவதுமாய் நேரம் ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்க்கப் பார்க்க செல்விக்குப் பயம் தோன்ற ஆரம்பித்தது. குழந்தை வராந்தாவில் இருந்து மணல் தரையில் வந்து விழுந்தால் காலில் அடிபட்டு விடுமே என்று அஞ்சினாள்.
சற்று நேரத்தில் அவள் நினைத்தது நடந்தே விட்டது. தர்ஷிணி தடதடவென்று கீழே இறங்கி நடக்க ஆரம்பித்துக் கண்மூடி கண்திறப்பதற்ககுள் தடால் என்று தரையில் விழுந் தது. அதைப் பார்த்து கொண்டிருந்த செல்வி “ பாட்டி’ ” என்று அலறினாள். உள்ளே இருந்த பாட்டி ஓடிவந்தாள். வந்து என்ன வென்று வினவினாள். செல்வி எதிர்திசையில் கையைக் காட்ட கீழ் விழுந்த குழந்தை இப்போது மறுபடி யும் கையில் எதையோ தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித் தாள். சந்தனப் பதுமை போலிருந்த பிஞ்சுக்கால்களின் முட்டியில் ரத்தக் கசிவு தெரிந்தது.
“பாட்டி… அந்தப் பாப்பா கால்ல ரத்தம் வருது பாட்டி… அதை யாரும் கவனிக்காம விட்டுட்டாங்களே”
கவலையுடன் சொன்னாள். பாட்டி அவனளத் தட்டிக் கொடுத்தாள்.
“செல்வி கொஞ்ச நேரத்துக்கு முன்னால நீ தோட்டத்தில பார்த்த பறவையும் இந்தக் குழந்தையும் ஒரே மாதிரி தான். அது எப்படி தானாவே பறக்க ஆசைப்பட்டுச்சோ அப்படித்தான் தர்ஷிணியும்.
அவைகளுக்கு ஆசையும் ஆர்வமும் வந்துடுச்சின்னா, யாரும் அதை தடை செய்ய முடியாது. கீழே விழுந்து கால்ல ரத்தம் வந்தா கூட குழந்தை பார்க்காம… அழாம எழுந்து ருச்சி ஓடுதுன்னா அது அந்தக் குழந்தையோட அடுத்த கட்ட வளர்ச்சின்னு நீ தெரிஞ்சுக்கணும். அது விழுந்துச்சே… அதுக்காக அழுதுச்சா… இல்லையே! கீழே விழறது அழறதுக் கில்லே, எழுந்து நடக்கத்தான்னு உனக்குப் புரியுதா?
செல்வி பாட்டியை ஆழ்ந்து நோக்கினாள். பாட்டி தொடர்ந்தாள்.
“உன்னோட பார்வை எனக்குப் புரியுது செல்வி…. மனசு வெச்சா எல்லாருமே நெனைச்சதை சாதிக்கலாம். ஒரு சின்னக் குருவிக் குஞ்சால தன் விருப்பம் போல பறக்க முடியும்னா நீ ஏன் உன்னோட விருப்பம் போல செயல்பட முடியாது. ஒரு தடவை பரீட்சையில் தோல்வி அடைஞ்சுட் டேங்கிறதுக்காக மூணுமாசமா ஆயுள் கைதியாட்டம் வீட்டி லேயே அடைஞ்சி கெடந்து மங்கிப் போயிட்டியே|
கொஞ்ச நேரத்துக்கு முன்னால எத்தனை தடவை கீழே விழுந்துச்சு அந்தப் பறவை. அதுக்காக அது கூட்லபோய் உட்கார்ந்து இருந்துச்சா… முடிஞ்சவரைக்கும் போராடி ஜெயிச்சிடுச்சில்லே…நீ ஏன் மறுபடியும் முயற்சி பண்ணக்கூ டாது.
“முயற்சி பண்ணினா நான் ஜெயிக்க முடியுமா பாட்டி.? என்னால முடியுமா பாட்டி?”
கவலையும் ஆர்வமுமாய்க் கேட்கிறாள் செல்வி; பாட்டி யின் முகத்தில் மகிழ்ச்சி ரேகை படர்கிறது. பேத்தியை அழைத்துக் கொண்டு தோட்டத்தின் பின்புறமாய் நடக்கி றாள். மலைத் தொடர்களின் அருகாமையில் அவர்கள் வீடு இருந்ததால், இயற்கை எழில் சூழ்ந்த அந்த இடம் மற்றவர் கவனத்தைக் கவரும் இடமாக இருந்தது. ஓய்வாக… பொழுது போக்காக பலர் அங்கே வருவார்கள்.
பாட்டியும் செல்வியை அழைத்துக் கொண்டு நடந்தாள் மலையில் பலவகையான மரங்களின் ஊடே இரண்டு பெரிய பாறைகளின் இடையே சிக்கிப் புகுந்து வெளிவந்து, ஒரு பப்பாளிமரம் வானை நோக்கி நிமிர்ந்து நிறைய காய்களு டன் நின்றிருந்தது. அதை வியப்புடன் பார்த்தாள் செல்வி.
“பாட்டி, இந்த பப்பாளி மரத்தைப் பாருங்கள், எப்படி வளைஞ்சு நெளிஞ்சு நிமிர்ந்து நிற்குதுன்னு. அப்பக்கூட காயெல்லாம் காய்ச்சி பழமும் பழுத்திருக்குப் பாட்டி…”
வியப்புடன் கூறினாள். கூறிக்கொண்டே நடந்தவள் ‘‘ஹோ’’ வென்ற இரைச்சலுடன் ஓடிவந்து விழும் அருவி யைப் பார்த்து உற்சாகமாய் குதித்தாள். மேலிருந்து அழகாய் இறங்கி வந்த அருவி கீழே விழுகையில், பெரிய பாறை வழிமறைத்திருந்ததால் அதில் முட்டி மோதி இரு கூறாகப் பிரிந்து குதித்தோடியது.
பாட்டி அதையும் அவளிடம் சுட்டிக் காட்டினாள்.
இதையும் பார் செல்வி… இயற்கையாகவே ஓடிவந்த அருவி எதிரே கிடந்த இந்தப் பாறையைப் பார்த்துப் பயந்து போயிருந்தா, இவ்வளவு வேகமா அழகா கீழே வந்து விழுமா… நமக்கெல்லாம் தண்ணீர்தான் கெடைக்குமா? அது போலத்தான் அந்தப் பப்பாளியும்.
அது முனளச்சு எழும்பற நேரத்தில அந்த பாறை
இடுக்கிலே மாட்டிக்கிட்டாலும் எவ்வளவு வேகமா வெளியே வந்து நிற்குது பார்த்தியா? இறைவன் படைப்பில் எல்லா உயிர்களும் இப்படித்தான் செல்வி.
போராட்டங்களை சந்திக்கிறதும், சவால்களை எதிர்த்து நின்று போராடி ஜெயிக்கிறதும் தடைகளை மீறி முண்னேறப் பாக்கறதும், தோல்விகளைக் கண்டு துவண்டு போகாமல் அடுத்தடுத்து முயற்சிக்கிறதும்தான், வெற்றிகரமான வாழ்வு அமையறதுக்கு ஆதாரமான தூண்டுகோல்.
நீயும் உன்னை மாத்திக்கணும். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்னு சொல்லுவாங்க இல்லியா. ஒரு விஷ யத்தில் உன்னால முடியலேன்னா, நீ இன்னொரு விஷயத் தில் நிச்சயம் வெற்றி அடையலாம்.
செல்வி பாட்டியை உற்சாகமாய் பார்த்தாள்.
தேங்க்யூ பாட்டி… நிச்சயமாக நான் முயற்சி பண்ணுவேன். ஒரு தடவைக்குப் பல தடவை முயற்சி பண்ணுவேன். அதுமட்டுமில்லே பாட்டி. நாளைக்கே நான் பள்ளிக்கூடம் போய் விட்ட பாடத்தைத் தொடரப் போறேன்.
கொட்டுகின்ற அருவிபோல துள்ளி குதித்து ஓடினாள் செல்வி, பாட்டிக்கு மனதில் களிப்பு… நடையில் வேகம் ஏற்பட்டது. இறைவனை வேண்டிக் கொண்டு வந்தாள். அவள் வருவதற்குள் வீடு சேர்ந்த செல்வி, தனது பாட புத்தகங்களைத் தேடித் தூசு தட்டி அடுக்கிக் கொண்டிருந்தாள்.
தெய்வத்தால் ஆகாது எனினும், முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (குறள்:619)
விளக்கம்: http://www.thirukkural.com/2009/02/blog-post_8831.html#619
– குறள் விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1996, மாஸ்கோ பதிப்பகம், சென்னை