முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 7,650 
 

நேரு மாமா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மாமா, அன்பான மாமா. நம்மமுன்னாள் ஜனாதிபதி மாமாவும் குழந்தைகளுக்கு மிக மிக பிடித்தவர், அவருக்கும் குழந்தைகள் மிகவும் பிடிக்கும். பள்ளி மாணவர்களுக்கு நல்ல நல்ல அறிவுரைகளையும், நம்பிக்கையையும், சாதனை படைக்க வழியும் காட்டுகிறார்.

அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை பார்க்கலாமா?

ராமேஸ்வரம் தீவில் ஜைனுல்லாபுதீன், ஆஷியம்மா என்போருக்கு அருமை புதல்வனாக 1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ந்தேதி அப்துல்கலாம் அவர்கள் பிறந்தார்கள்.

அவரது தந்தையார் அனைவராலும் விரும்பப்பட்டவர், தினமும் பிரார்த்தனை செய்து, நோயாளிகளை குணப்படுத்துவார்.

அவரது குடும்ப நண்பராக இருந்தவர் பஷி லட்சுமண சாஸ்திரி அவர்கள். அவரது புதல்வர் பெயர் ராம்நாத சாஸ்திரி. அப்பாவைப் போலவே அப்துல் கலாம் ராமநாத சாஸ்திரிக்கு நல்ல நண்பர். பள்ளியில் இருவரும் பக்கத்தில் தான் அமர்ந்திருப்பார்கள். சாஸ்திரி நெற்றியில் விபூதியுடன் குடுமி வைத்திருப்பார், அப்துல் கலாம் தலையில் குல்லா வைத்திருப்பார்.

ஒரு நாள் அங்கே வந்த புதிய ஆசிரியர், எப்படி ஒரு இந்துவும், முஸ்லீமும் ஒன்றாக இருக்கலாம் என்று நினைத்து, அப்துல் கலாமை கடைசி பெஞ்சில் உட்கார சொல்லிவிட்டார்.

அப்துல் கலாமும் ஒன்றும் சொல்லாமல் கடைசி பெஞ்சில் போய் அமர்ந்துக் கொண்டார், ராமநாத சாஸ்திரிக்கு அழுமை அழுமையாக வந்தது.

இருவரும் மாலையில் வீட்டிற்கு சென்றதும் தங்கள் அப்பாக்களிடம் சொல்ல, உடனே அவர்கள் இருவரும் புதிய ஆசிரியரை வரவழைத்து, “சின்ன வயது பிள்ளைகள் மனதில் இப்படி பாகுபாடு எல்லாம் ஏற்ப்படுத்தக்கூடாது” என்று அறிவுரை சொல்லி, யார் தடுத்தாலும் எங்க புள்ளைகள் ஒரே பெஞ்சில் தான் அமர்வார்கள். இனிமேல் ஏதாவது இது மாதிரி செய்தால், வேலையே போய் விடும் என்று சொன்னப் பின்பு புதிய ஆசிரியர் மனம் திருந்தினாராம்.

நான்காம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் அப்துல் கலாம் ஏதோ தெரியாத்தனமாக வேறு வகுப்பில் நுழைய, அங்கே பாடம் நடத்திக் கொண்டிருந்த ராம கிருஷ்ண ஐயர் என்ற வாத்தியார், கடும் கோபம் கொண்டு, அப்துல் கலாமின் கழுத்தை பிடித்து குனிய வைத்து, பிரம்ப்பால் அடித்து விட்டார். அப்துல் கலாமோ அழுதுக் கொண்டு, மன்னிப்பு கேட்டு வந்து விட்டார்.

கொஞ்ச நாளிலேயே அப்துல் கலாம் நன்றாக படித்து கணக்கு பாடத்தில் 100க்கு 100 வாங்கினார். அடுத்த் நாள் அசெம்பிளியில் அனைத்து மாணவர்கள் முன்னாலிலும் அப்துல் கலாமைப் பற்றி சொல்லி, அடி கொடுத்ததையும் சொல்லி, இன்றோ 100க்கு 100 மதிப்பெண் வாங்கியிருக்கிறார், எதிர்காலத்தில் மிகப் பெரிய ஆளாக வருவார் , நாட்டுக்கு பெருமை சேர்ப்பார் என்று பாராட்டினார்.

அடி கொடுத்து, திட்டியவரையே பாராட்ட வைத்த அப்துல் கலாமின் முயற்சியும், நம்பிக்கையும் மகத்தானது.

குழந்தைகளா! நாமும் தேர்வில் தோல்வி கண்டாலோ, தெரியாமலோ அல்லது தெரிந்தோ செய்த தவறான நடத்தையால் தண்டிக்கப்பட்டாலோ, நாம் அதனை உடனே சரி செய்யப் பாடுபட வேண்டும், மற்றவர்கள் பாராட்டும் வகையில் நடந்துக் கொள்ள வேண்டும். அப்போ தான் வாழ்க்கையில் சாதிக்க முடியும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *