முட்டாள் கிழட்டு சிங்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: February 2, 2023
பார்வையிட்டோர்: 3,469 
 
 

அடர்ந்த காட்டில் வயதான சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. வயதாகிவிட்டதால் முன்பு போல் சிங்கத்திற்கு வேட்டையாட முடியவில்லை. பசியோடு தன் குகைக்குள்ளயே சிங்கம் அடைந்துக் கிடந்தது. சிங்கத்தின் நிலைமை ஒரு தந்திரக்கார நரியின் காதுக்கு எட்டியது. அந்த தந்தரகார நரி ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டு அந்த வயதான சிங்கத்தின் குகைக்கு சென்றது.

நரி குகைக்குள் அடியெடுத்து வைத்ததும் பசியோடு இருந்த சிங்கம் நரியின் மீது பாய முடியற்சித்தது. அப்போது நரி, ‘சற்றுப் பொறு நண்பா” நான் உனக்கு உணவாக வரவில்லை. உணவளிக்கவே வந்துள்ளேன் என்ற நரி சிங்கத்தின் முன் இறந்துப் போன மானின் உடலை வைத்தது. மான்கறியைக் கண்டதும் சிங்கத்தின் நாவில் உமிழ் நீர் ஊறியது. சிங்கம் வயிறார மான் கறியை தின்று தீர்த்து ஏப்பம் விட்டது.

சிங்கத்திற்கு பசி தீர்ந்ததும் நரியிடம் மன்னிப்புக் கேட்டது. என்னை மன்னித்துவிடு நண்பா. என் பசி தீர்க்க வந்த உன்னையே நான் ருசிப் பார்க்க பார்க்க துணிந்தேன். அதைக்கூட நீ பெரிதுப்படுத்தாமல் எனக்கு சுவையான விருந்துப் படைத்துவிட்டாய். உனக்கு எப்படி நான் கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை என்றது அப்பாவியான கிழட்டுச் சிங்கம்.

கைமாறுதானே அதை எப்படி உன்னிடமிருந்து பெறுவது என்று எனக்கு தெரியும். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சிங்கத்தைப் பார்த்து ஏளனமாக சிரிந்தது அந்த தந்திரக்கார நரி.

இதில் என்ன இருக்கிறது நண்பா. வயதான உனக்கு என்னால் செய்ய முடிந்த ஒரு சிறு உதவி. சுரி நண்பா நான் வருகிறேன். இரவுக்கான உணவையும் நானே உனக்கு கொண்டு வந்து தருகிறேன் என்றது நரி. ‘அடடா உனக்கு எதுக்கு நண்பா சிரமம்’ இப்போது சாப்பிட்டதே நாளை காலை வரைக்கும் பசியெடுக்காது என்றது தந்திரக்கார நரியின் சூழ்ச்சியை அறியாத அந்த கிழட்டு சிங்கம். பரவாயில்லை இருக்கட்டும் நண்பா. உனக்கு இரவுக்கான உணவை நானே கொண்டு வருகிறேன் என்று கூறிய நரி குகையைவிட்டு வெளியேறியது.

சூரியன் மறைந்ததும் காட்டில் இருள் சூழ்ந்துக் கொண்டது. நரியின் வருகைக்காக சிங்கம் காத்துக்கொண்டிருந்தது. நேரம் சென்றதே தவிர நரி வரவே இல்லை. நரி சென்றால் தானே வருவதற்கு. அந்த வயதான சிங்கத்திடம் தான் வேட்டைக்கு செல்வதாக பொய் சொல்லிவிட்டு, சிங்கத்தின் குகைக்கு வெளியில்தான் நரி காத்துக் கொண்டிருக்கிறது. சிங்கத்திற்கு பசி வயிற்றைக் கிள்ளியது. பாவம் பசியோடு அந்த கிழட்டு சிங்கம் தூங்கிப் போனது. அப்போது நரி குகைக்கு வெளியிலிருந்து உள்ளே எட்டிப்பார்த்தது. சிங்கம் அசந்து தூங்கிக் கொண்டிருப்பதை கண்ட தந்திரக்கார நரி தன் திட்டத்தை செயல்ப்படுத்த ஆரம்பித்தது.

தயாராக வைத்திருந்த விறகுக்கட்டைகளைக் கொண்டு வந்து சிங்கத்தைச் சுற்றி அடுக்கிய அந்த தந்திரக்கார நரி கற்களை உரசி விறகில் தீப்பற்ற வைத்தது. நெருப்பு நன்றாக கொளுந்துவிட்டு எரிந்தது. அனலின் தாக்கத்தை உணர்ந்த சிங்கம் கண் விழித்துப் பார்த்தப் போது தன்னை சுற்றி நெருப்பு வளையம் இருப்பதைக் கண்டு செய்வதறியாது தவித்தது. ஜீவாலையின் தாக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த கிழட்டு சிங்கம் மயங்கிப் போய் கீழே சரிந்து விழுந்தது. சிங்கம் மயங்கி விழுந்ததும் தந்திரக்கார நரி சிங்கத்தின் மீது ஒரே பாய்ச்சலில் பாய்ந்து தன் கூரிய நகங்களால் சிங்கத்தின் கழுத்தை பதம் பார்த்தது. சிங்கத்தின் கழுத்திலிருந்து ரத்தம் பீறிட்டுக் கொண்டு வந்தது. தாகம் தீர ரத்தத்தை குடித்ததும் பின்பு சிங்கத்தின் கறியை ரசித்து ருசித்து தின்று ஏப்பம்விட்டது. நரியின் குணம் தெரிந்திருந்தும் கூட அந்த வயதான சிங்கம் இந்த தந்திரக்கார நரியிடம் ஏமாந்தது மட்டுமில்லாமல் அநியாயமாக தன் உயிரையும் பறிக் கொடுத்துவிட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *